Yarl Forum
கலவை பருப்புப் பொடி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சமையல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=40)
+--- Thread: கலவை பருப்புப் பொடி (/showthread.php?tid=3863)



கலவை பருப்புப் பொடி - siruki - 07-23-2005

கலவை பருப்புப் பொடி

துவரம் பருப்பு 100 கிராம்
பாசிப்பருப்பு 100 கிராம்
உளுத்தம் பருப்பு 100 கிராம்
மிளகாய் வற்றல் 6
பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை
உப்பு தேவையான அளவு
எண்ணெய் சிறிதளவு

வாணலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் மிளகாயையும் பெருங்காயத் தூளையும் போட்டு வறுக்கவும்.

இரண்டு நிமிடங்கள் நன்கு வறுத்த பிறகு பருப்புகள் அனைத்தையும் போட்டு பச்சை வாசனை போகும் வரை நன்கு வறுக்கவும்.

வறுத்தபின்பு இறக்கி நன்கு ஆறவிடவும். ஆறிய பிறகு மிக்ஸியில் போட்டு தேவையான உப்பு சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.

இந்த பொடி இருந்தால் ஆத்துக்காரர் மூன்று தோசை அதிகமாகவே சாப்பிடுவார்.


- vasisutha - 07-23-2005

இந்திய உணவா? இதை எப்படி சாப்பிடுவது?
தோசையில் தூவி சாப்பிட வேணுமா?
ஆத்துக்காரர் என்றால் யார்? ஆற்றங்கரையில் குடியிருப்பவரா?
அவருக்கு ஏன் நாங்கள் தோசை கொடுக்க வேண்டும்?


- narathar - 07-23-2005

வசி புதுசா வந்த மாமி எழுதாம விட்டிருவா.
இந்தப் பொடி நானும் சாப்பிட்டிருக்கன்,
யாழில ,சாப்பிட்டது ஒரு சுத்த சைவர் வீட்டில,
மாமி சொன்ன மாதிரி தோசை அந்தமாதிரி இருக்கும்.
தோசையோட தொட்டுச் சாப்பிட வேணும்.


- siruki - 07-24-2005

யார் சொன்னது நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்று நாரதர் என்றால் கலகம் தான்


- narathar - 07-24-2005

மாமி நேக்கு வேணும்,
ஒத்தாசைக்கு வந்தா, இப்படிக் கால வார்றீங்களே.
இந்தப் பொம்மனாட்டீங்க சகவாசம் வேணாம் எண்டு சிவனேன்னு இருக்கெறேன்னோ ,என்னப்போய் வம்புக்குஇளுக்கெறேளே.


- Thala - 07-24-2005

சிறுக்கி Wrote:யார் சொன்னது நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்று நாரதர் என்றால் கலகம் தான்

வந்தது வராததுமா எதுக்கு மாமி நாரதர காலாய்கிறேள், அவர் பாவம் மூஞ்சிய உம் எண்டு வச்சிண்டிருக்கார் பாருங்கோ...


- Mathan - 07-24-2005

பொடி சாப்பிட்டு பார்த்திருக்கின்றேன். நன்றாக தான் இருக்கின்றது ... ஆனால் தனியே பொடி தோசையுடன் சாப்பாட்டை முடிக்க முடியும் என்று தோணலை.

vasisutha Wrote:ஆற்றங்கரையில் குடியிருப்பவரா?
அவருக்கு ஏன் நாங்கள் தோசை கொடுக்க வேண்டும்?

வசி ரொம்பத்தான் லொள்ளு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

தமிழ் சினிமாவை விரும்பி பார்க்கிற உங்களுக்கு இது எல்லாம் தெரியாதா என்ன <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->


- தூயா - 08-06-2005

இது எங்கட "தோசை தூள்" தானே...இது ஈழத்திலயும் இருக்கு...யாருக்கும் எங்கட ஈழத்து தோசை தூள் செய்முறை தெரியுமா?


- sinnappu - 08-06-2005

vasisutha Wrote:இந்திய உணவா? இதை எப்படி சாப்பிடுவது?
தோசையில் தூவி சாப்பிட வேணுமா?
ஆத்துக்காரர் என்றால் யார்? ஆற்றங்கரையில் குடியிருப்பவரா?
அவருக்கு ஏன் நாங்கள் தோசை கொடுக்க வேண்டும்?

ஓய் கிராபிக்கிங் 2 வது கேள்விக்கு பதில் தெரியும்
வாயாலை தான் சரியா

கடைசிக்கேள்விக்கு நல்ல பதில் நீர் தோசை குடுக்கவேண்டாம் நல்ல பூசை குடும் உந்த இம்சை பிடிச்ச மனுசியை இங்கை அனுப்பினதுக்கு
:evil: :evil: :evil: :evil: :evil:


- sinnappu - 08-06-2005

தூயா Wrote:இது எங்கட "தோசை தூள்" தானே...இது ஈழத்திலயும் இருக்கு...யாருக்கும் எங்கட ஈழத்து தோசை தூள் செய்முறை தெரியுமா?


ஓம் தெரியும் எழுதும்
எண்ணெய் சிறிதளவு
உப்பு தேவையான அளவு
பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை
மிளகாய் வற்றல் 6
உளுத்தம் பருப்பு 100 கிராம்
பாசிப்பருப்பு 100 கிராம்
துவரம் பருப்பு 100 கிராம்

செய்முறை
வாணலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் மிளகாயையும் பெருங்காயத் தூளையும் போட்டு வறுக்கவும்.

இரண்டு நிமிடங்கள் நன்கு வறுத்த பிறகு பருப்புகள் அனைத்தையும் போட்டு பச்சை வாசனை போகும் வரை நன்கு வறுக்கவும்.

வறுத்தபின்பு இறக்கி நன்கு ஆறவிடவும். ஆறிய பிறகு மிக்ஸியில் போட்டு தேவையான உப்பு சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.


இதை நம்மட சிறுக்கியின்ர அத்தூ நல்ல கொட்டுவார்

ஓகேயா டுயா
:wink: :wink: :wink: :wink: :wink: :wink:


- கீதா - 08-06-2005

நன்றி அக்கா ?நான் செய்து சப்புட்டும்விட்டேன் என்ன சுவை அக அக அக நன்றாக இருந்தது அக்கா உங்களுக்கு வாழ்த்துக்கள் ? <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:


அன்புடன்
jothika


- Vasampu - 08-06-2005

சும்மா சொல்லக்கூடாது மாமி நன்னாவே பொடி வச்சுப் பேசுறா. மாமா நன்னா பொடி போடுவாரா?? அடச்சீ சாப்பிடுவாரா??

:roll: :roll:


- kavithan - 08-06-2005

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- தூயா - 08-09-2005

சி*5, என்ன கதை கூடுது??!!! தாத்தா என்று பார்த்தால் ரொம்ப தான்!!!!!