Yarl Forum
சிறிலங்கா இராணுவத்துக்கு இந்தியா பயிற்சி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: அரசியல் / பொருளாதாரம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=36)
+--- Thread: சிறிலங்கா இராணுவத்துக்கு இந்தியா பயிற்சி (/showthread.php?tid=3820)



சிறிலங்கா இராணுவத்துக்கு இந்தியா பயிற்சி - வன்னியன் - 07-28-2005

சிறிலங்கா இராணுவத்துக்கு பயிற்சி அளிக்கிறோம்: இந்தியா அறிவிப்பு
[வியாழக்கிழமை, 28 யூலை 2005, 18:39 ஈழம்] [புதினம் நிருபர்]
சிறிலங்கா இராணுவத்துக்கு இந்திய இராணுவ பயிற்சி நிலையங்களில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன என்று இந்திய அரசு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.


இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் இன்று புதன்கிழமை இது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு இந்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி அளித்த பதில்:

சிறிலங்காவுடன் இந்திய பாதுகாப்புத்துறை ஒத்துழைப்பு மேற்கொள்வது தொடர்பாக ஒப்பந்தம் ஒன்றை உருவாக்க சிறிலங்கா அரசு யோசனை தெரிவித்தது.

இது பற்றி இந்தியா ஆராய்ந்து வருகிறது. ஆனால் இறுதி முடிவு எதுவும் எடுக்கவில்லை.

இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையே பாதுகாப்புத்துறை ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தைகளுக்கான நிறுவனக் கட்டமைப்பு ஏதும் செயல்பாட்டில் இல்லை.

எனினும் பாதுகாப்புத்துறை சார்ந்த ஒத்துழைப்பு குறித்த கருத்துப் பரிமாற்றங்கள் கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இரு நாடுகள் இடையில் இருதரப்பு ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக இந்திய இராணுவ பயிற்சி நிறுவனங்களில் சிறிலங்கா இராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

வெள்ளம், ஆழிப்பேரலை போன்ற இயற்கை சீற்றங்களின் போது நிவாரண உதவி, உயர் இராணுவ அதிகாரிகளின் சுற்றுப்பயணம், கடற்படை கப்பல்களின் பயணம், கடல் பகுதிகளில் கூட்டுக் கண்காணிப்பு ஆகியவை சிறிலங்காவுடனான பிற ஒத்துழைப்பு நடவடிக்கைகளில்


:twisted: :evil: :evil: :evil: :evil: :evil: சுட்டது புதினத்திலிருந்து


- வினித் - 07-28-2005

¿¡ö¸ÙìÌ þ¾ Ţ𼡠§ÅÈ §Å¨Ä ±ýÉ


- Thala - 07-28-2005

நன்றி காக்ஸ்..

இந்தியா இலங்கையில தன் பிடியை வைத்திருக்க எல்லாம் செய்யும். ஆனால் ஒப்பந்தம் செய்தா இலங்கைக்கு நேரடி உதவி செய்ய வேண்டி வரலாம் அப்ப இந்திய ராணுவம் இலங்கைக்குள்ள வரவேண்டியும் வரலாம். அப்போது இன்று வரை சமாதானமாய் அமைதியாய் இருக்கும் புலிகளை வலுச்சண்டக்கு இழுத்தமாதிரியாகும்.

வலுச்சண்டை பிடிக்கிறதால இந்தியாவுக்கு லாபம் இல்லை அதால ராணுவச்செலவு தான் அதிகரிக்கும். அதோட இந்தியாவின் வடக்க பாக்கிஸ்த்தான், சீனா வோட பகையும் பங்களாதேசோட முறுகலையும் வச்சிருக்கிறவ தெற்க இன்னொரு பகையை உருவாக்க மாட்டாங்கள். அப்பிடி நம்பித்தான் அணு அராச்சி நிலயம் செயற்கைக்கோள் ஏவுதளம் எண்டு அமைச்சிருக்கினம்.

அதோட இந்தியாவின் தரத்திற்கு இல்லாவிட்டாலும் புலிகளின் ஆற்றல் இந்தியாவுக்கு நண்றாகத்தெரியும். மரபு வளியில் இல்லாவிட்டாலும் உடுருவித்தாக்குவதில் புலிகளின் துல்லியம், துணிவு, எல்லாம் அவர்கள் அறிந்ததுதான்.

அப்ப இந்தியா ஒண்டும் செய்யாதா?... செய்யும் இப்போது செய்யுறதுபோல் புலிகளின் பலத்தைக் குறைத்து நிறய புல்லுருவிகளை உண்டு பண்ணி. ஆதரவைக் குறைக்கச்செய்யும் அதோட தமிழ்மக்களின் வாழ்வு முறையை மாற்றலாம் உதாரணத்துக்கு யாழ்ப்பாணத்தில் VCD மூலம் கிளர்ச்சியூட்டும் படங்கள் பரவலான புளக்கத்தில் விட்டு இளஞர்களின் வாழ்வை திசை திருப்பல்..இன்னும் பல....


- வினித் - 07-28-2005

Thala Ðû§¸¡ÇôÒÈ¢í¸û


- cannon - 07-29-2005

ம்ம்ம்ம்ம்ம்..... 87 முதல் 90 வரை விடுதலைப் புலிகளிடம் பெற்ற பயிற்சிகளை சிங்கள இராணுவத்திற்கு அளிக்கப் போகிறார்களாம்????? துண்டைக் கானோம்! துணியைக் காணோம்!! என்று எப்போது ஓடுவோம் என்று ஓடிய பிராந்திய வல்லரசு? எப்படி ஓடுவதென்பதின் நுணுக்கங்களை சொல்லப் போகிறார்கள் போல????????


- Thala - 07-29-2005

ஆமை புகுந்த வீடு விளங்காது..எண்டது பழமொழி.... இந்தியா புகுந்த நாடும் விளங்காது இது புது மொழி...

உதாரணத்துக்கு வங்காளதேசம், நேபாளம், இலங்கை, பாக்கிஸ்த்தான், மாலதீவு,..... அதோட இந்தியாவும்..