Yarl Forum
பன்றிகள் பறக்கும் மட்டக்களப்பு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: பன்றிகள் பறக்கும் மட்டக்களப்பு (/showthread.php?tid=3801)



பன்றிகள் பறக்கும் மட்டக்களப்பு - kirubans - 07-29-2005

ஊர் அரசியல் நடப்புக்களைப் பற்றி நகைச்சுவைக் கட்டுரைகளைப் படிக்கவேண்டுமென்று தோன்றும்போதெல்லாம் முதலில் நினைவுக்கு வருபவர் கனடாவில் இருந்து ஆங்கிலத்தில் அரசியல் கட்டுரைகள் (கதைகள்) எழுதும் டி.பி.எஸ் ஜெயராஜ்தான். இவர்தான் போன வருடம் கருணா புலிகளோடு ஒரு உடன்படிக்கைக்கு வந்து தனது கிளர்ச்சியைக் கைவிட்டார் என்று சொன்னவர். இவ்வருட ஆரம்பத்தில் கருணா மீண்டும் மட்டக்களப்பை தனது சதிமுயற்சி முடிவுக்கு வந்த ஓராண்டு நிறைவுக்குள் பிடிப்பாரென்று கதையளந்தார். ஏப்பிரலும் போய்விட்டது, டி.பி.எஸ் சொன்னது எதுவும் நடக்கவில்லை. என்றாலும் மனுஷன் சலிக்காமல் கருணா குழுவின் தாக்குதல்களால் புலிகள் கிழக்கை இழந்துவிட்டார்கள் என்று போனவாரம் ஒரு கட்டுரையில் எழுதியிருந்தார். அவரின் பார்வையில் மட்டக்களப்பில் தற்போது தமிழ் அலை மீண்டும் விற்பனையாகின்றது, ஈழநாதம் இணையப் பத்திரிகையாகத்தான் வருகின்றது.

சண்டே ரைம்சில் எழுதும் இக்பால் அத்தாஸ் (இவர் எழுதுவதை வாசித்தால், அவர் கூடவே இருந்து பார்த்தமாதிரி எழுதுவார். ஏன் துப்புக் கொடுக்காமல் எல்லாம் நடந்து முடிந்தபின் எழுதுகிறார் என்று தெரியவில்லை) மட்டக்களப்பில் நடப்பதை ஓரளவு உண்மையாக எழுதியுள்ளார். அவரின் பார்வையில் கிழக்கில் புலனாய்வாளர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துவிட்டதால், சகல புலனாய்வாளர்களும் முகாம்களுக்குள் இருக்குமாறு பணிக்கப்பட்டுளனர்களாம். கருணா குழுவை வழிநடாத்தும் கபில ஹெந்தவிதாரணவுக்கே ஆபத்து என்று அவரை வெளிநாட்டுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாம். மேலும் கிழக்கில் நடைபெற்றுவரும் தாக்குதல்கள் ஜே.வி.பியினருக்கு ஆதரவளிக்கும் கீழ்மட்ட இராணுவத்தின் (மற்றும் அதிரடிப்படையின்) வேலையென்று சந்திரிக்காவே சந்தேகப்படுகின்றாவாம். இது கனடாவில் இருந்து பூதக்கண்ணாடி கொண்டு பார்க்கும் டி.பி.எஸ் இன் கருத்துக்கு முரணாக உள்ளது.


- kirubans - 07-29-2005

உண்மையில் மட்டக்களப்பு நிலைமைகள் எப்படி உள்ளன?

இக்பால் அத்தாஸின் கட்டுரைப்படி கருணா குழுவினரின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டதாகவும், அவர்களின் ஆயுதங்களும் அருகிவிட்டதாகவும் தெரிகின்றது. எனவே அவர்களால் தனியாகத் தாக்குதல்களில் ஈடுபடமுடியுமென்று கருதமுடியாது. ஆகவே தாக்குதல் நட்டத்துபவர்கள் மட்டக்களப்பில் முன்பிருந்தே இருக்கின்ற துணைப்படைகளான ராசிக் குழு, புளட் மோகன் குழு, வரதன் குழு, ஈ.பி.டி.பி, ஈ.என்.டி.எல்.எவ், ஈ.பி.ஆர்.எல்.எவ் போன்றனதான். இவர்களுக்கு உற்சாகம் ஊட்டி வருபவர்கள் வேறு யாருமல்லர். பக்கத்து நாடான இந்தியாவின் புலனாய்வு நிறுவனமான றோ தான். ஆகவே நிழல் யுத்தம் றோவின் வழிகாட்டலில் இயங்கும் கூலிப்படையினருக்கும் இராணுவப் புலனாய்வாளர்களுக்கும் எதிராகத்தான் நடைபெறுகின்றது.


- Thala - 07-29-2005

தொடர்ந்து எழுதுங்கள் கிருபன் வாசிப்பதற்காய் காத்திருக்கின்றொம்...


- kirubans - 07-29-2005

கருணாவின் விவகாரத்தில் ஐ.தே.கட்சியும் சுதந்திரக்கட்சியும் ஒன்றாகத்தான் செயற்படுகின்றன. ஐ.தே.க எம்.பி. அலி சாஹிர் மெளலானாதான் கருணா கொழும்புக்கு தப்பிச்செல்ல உதவி செய்தவர் எனது அனைவருக்கும் தெரிந்த விடயம். தற்போது சந்திரிக்காவின் பொறுப்பிலுள்ள இராணுவப் புலனாய்வுப் பிரிவினரே கருணா குழுவைக் கையாள்கின்றனர். எனினும் இந்த பொம்மலாட்டத்தின் சூத்திரதாரிகள் றோ தான். அவர்களுக்கு ஐ.தே.க, சு.க, ஜே.வி.பி போன்ற சிங்களக் கட்சிகளும், தமிழ் துணைப்படைகளும் (ஆயுதம் தூக்காத ஆனந்தசங்கரி உட்பட) உதவுகின்றனர். தமிழர் தரப்பில் புலிகள் மட்டும்தான் உள்ளனர்.

கருணா இலங்கையில் இருக்கமுடியாது. அவர் ஒரு முகமற்ற, முகவரியற்ற ஒரு பூதமாகத்தான் தமிழர்கள் பார்வையில் உள்ளார். கருணாவை தமிழர்களின் ஒற்றுமையைக் குலைக்க (வடக்கு கிழக்கு பிரிவினை மூலம் தமிழ் தேசியத்தைப் பலவீனமாக்க) றோவும் இனவாத சிங்களவர்களும் முயலுகின்றனர்.


- Thala - 07-29-2005

அண்ணா (RAW)ரோவினுடைய உண்மை நோக்கம் என்ன என்பதுபற்றியும் முடிந்தால் எழுதுங்கள்...

நன்றிகள் பகிர்ந்த தகவல்களுக்காக...


- kirubans - 07-29-2005

கருணா இலங்கையில் இருக்கமுடியாது. அவர் ஒரு முகமற்ற, முகவரியற்ற ஒரு பூதமாகத்தான் தமிழர்கள் பார்வையில் உள்ளார். கருணாவை தமிழர்களின் ஒற்றுமையைக் குலைக்க (வடக்கு கிழக்கு பிரிவினை மூலம் தமிழ் தேசியத்தைப் பலவீனமாக்க) றோவும் இனவாத சிங்களவர்களும் முயலுகின்றனர்.

தமிழர்களின் ஒற்றுமை குலைந்து தமிழ் தேசியம் பலவீனமானால் தமிழ் ஈழப் போராட்டம் தோல்வி கண்டுவிடும். மாறாக வெற்றி பெற்றால் பல மொழிகளையும், சிறுபான்மைத் தேசிய இனங்களையும் கொண்ட இந்த்தியாவுக்கு பிரச்சினையாகிவிடும். ஏனெனில் எமது போராட்டத்தினை உதாரணமாகக் கொண்டு இந்தியாவிலும் போராட்டங்கள் வெடிக்கலாம். அங்குள்ள அடக்கப்படும் இனங்களும் நம்பிக்கை கொண்டு போராட்டங்களை ஆரம்பிக்க முற்படலாம். இப்படியான நிலை இந்தியாவின் ஸ்திரத்தன்மைக்கு ஆபத்தாகமுடியுமென்பதால்தான், றோ எப்பாடுபட்டாவது எமது போராட்டத்தை நசுக்க முற்படுகின்றது. இந்திய இராணுவம் நேரடி யுத்தம் செய்தே அழியாத எமது போராட்டம், இந்த நிழல் யுத்தம் மூலம் அழியும் என்று நினைக்கவில்லை. எனினும் தமிழ் மக்களைப் பிரிப்பதன்மூலம் போராட்டம் தானாகவே நலிந்துவிடும் என்று றோவும், இந்திய வெளியுறவுக் கொள்கையாளர்களும் சிந்திக்கின்றனர் என்பதை நாம் புரிந்து செயற்படவேண்டும்..

போன வருட நடுப்பகுதியில் கருணாவின் மனைவி பல லட்சம் (கோடி?) பணத்துடன் மலேசியா போனதாக சிங்கள ஊடகங்கள் எழுதித்தள்ளின. எனினும் கருணாவின் குடும்பம் அநேகமாக இந்தியாவில்தான் இருக்கமுடியும். சிலவேளை நேரடியாக இந்தியாவுக்குச் செல்லாமல் மலேசியா ஊடாக இந்தியாவுக்குள் சென்றிருக்கலாம். மலேசியாவில் 24 மணிநேர பாதுகாப்பு கொடுக்க முடியுமா என்ன? அத்துடன் மலேசியாவில் கருணா குடும்பத்தினர் இருந்தால் றோவால் கருணா மீது முழுமையான கட்டுப்பாட்டை செலுத்தவும் முடியாமற் போகலாம். ஆகவே வட இந்திய மாநிலமொன்றில் அவர்கள் வரதராஜப் பெருமாள் குடும்பத்தினர் போன்று தங்க வைக்கப்பட்டிருக்கலாம்.


- cannon - 07-29-2005

"டி.பி.எஸ் ஜெயராஜ்" -- ஆரம்ப காலங்களில் சதிக்கும்பல் புளொட் இடமிருந்து பெரும்பணம் பெற்று, புளொட்டை ஒரு பலமான சக்தியாகவும், அதேசமயம் சிங்கள வெறி பிடித்த நாளேடான "த ஐலன்ட்" பத்திரிகையில் விடுதலைப் புலிகளைக் கொச்சைப்படுத்தியும், புலிகள் அழிக்கப்படப் போகும் சக்தியாக தொடர்ச்சியாக எழுதி சிங்கள வெறியர்களின் அன்புக்குரிய ஓர் ஊடகவியளாலரானார்.

பிற்காலங்களில் இந்திய பார்ப்பணிய பத்திரிகையான இந்து ராமின் மூலம் றோவுடன் ஏற்பட்ட தொடர்பின் பின் "Front Line, Sunday Leader" போன்றவற்றில் தமிழ்த்தேசியத்திற்கெதிராக தனது ஊடகவியலாலர் என்ற பெயரில் செயற்பட்டு வருகிறார்.

டி.பி.எஸ்ஸும் கருணாவும் ...

இந்திய றோவின் சதிமூலம் கிளர்ச்சியில் கருணா ஈடுபடத் தொடங்கியபின், சிங்கள மக்கள் மத்தியில் கருணாவை டி.பி.எஸ் எனும் எதிர்கால இராணுவ, அரசியல் நிகழ்வுகளை எதிவு கூறும்? அதிபுத்திசாலியான? ஊடகவியலாளன்? ...

* மட்டு-அம்பாறையில் கருணா ஒரு நெருங்க முடியாத, அசைக்கமுடியாத, பலம் பொருந்திய சக்தியாகவும்!!!!!
* விடுதலைப் புலிகளிலேயே மதிநுட்பம் நிறைந்த, எச்சவாலையும் துணிந்து சமாளிப்பவராகவும்!!!!!
* கருணாவே புலிகளின் பலமென்றும்!!!!!
* கருணாவின் கிளர்ச்சியால் புலிகளின் இராணுவப்பலம் அரைவாசி பாதிக்கப்பட்டுள்ளது!!!!!
.............. என்பது போன்ற பல வாணவேடிக்கைகளை தொடர்ச்சியாக சிங்கள மக்களை இலக்கு வைத்து நடாத்திக் கொண்டு வந்தார். இவரது இவ்வெழுத்துக்கள் சிங்கள மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. பல தடவைகள் கருணாவிற்குப் பக்கத்திலிருந்து கேட்டு எழுதுவது போன்ற மாயைக் கூட ஏற்படுத்தியிருந்தார்.

பின் கருணா துண்டைக் காணோம்! துணியைக் காணோம்!! என எம்பிட்டதைச் சுருட்டிக் கொண்டு உருவியபின், விழுந்தாலும் மீசையில் மண் படாததுபோல, சிறிய இடைவெளியின் பின் மீண்டும் அதே வாணவேடிக்கைகள்!!!!!!!!!!!!!!

அண்மையில் படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் சிவராம், கருணாவின் கையினாலேயே படுகொலை செய்யப்பட்டதாக பெரும் கண்டு பிடிப்பொன்றை அவுட்டு விட்டார். அதுவும் பின் சதிக்கும்பல் புளொட்டின் கைங்கரியம் என்றவுடன், மீண்டும் மண் மீசையில் முட்டவில்லை ....... மீண்டும் தொடர்கிறார்.......


- Thala - 07-29-2005

சரி அண்ணா நேற்றுவரை சிறீலங்காவின் முக்கிய பங்களிக்கட்சிகளாய் இருந்த முஸ்லீம் கட்சிகள் இப்போ முக்கியம் இளந்து வீசியெறியப்பட்டுள்ளன, அவர்கள் அரசியல் நடத்த வெகுஜனப்போராட்டங்கள், நடத்தவேண்டிய நிலமை. அனால் இப்போ அரசால் முன்னிலைப் படுத்தப்பட்டு செல்லப்பிள்ளைகளாய் இருக்கும் தமிழ் ஒட்டுண்ணியளுக்கு அந்த நிலை வராதெண்டில்லை, வந்தால் அவர்கள் நிலை என்ன? இல்லை, அப்பிடி ஒருநிலை வரவே வராதா?


- kirubans - 07-30-2005

கருணா ஒருபோதும் மட்டக்களப்புக்கு வரமுடியாது, முக்கியமாக அவரின் சொந்த ஊரான கிரானுக்குப் போகமுடியாது. புலிகளின் பிரசன்னம் வாழைச்சேனை, கல்குடா, கிரான் பகுதிகளில் மிகவும் அதிகமாக உள்ளது. அத்துடன் கிரான் எப்போதுமே புலிகளில் செல்வாக்கு அதிகமுள்ள பகுதியாகத்தான் இருக்கின்றது. கருணா கிழக்குத் தளபதியாக இருந்த காலத்தில் தமிழீழப் போராட்டத்தில் உயிரையும் கொடுக்கத் துணிந்ததனால்தான் அவருக்கு மதிப்பு இருந்தது. புலிகளிலிருந்து பிரிந்து தனியாக வந்தபின் அவர் ஒரு பூச்சியம்தான். தற்போது கிரானில்கூட ஆதரவு இருப்பதென்பது சந்தேகமே.

மட்டுநகர் இராணுவக் கட்டுப்பாட்டினுள் இருப்பதனால் புலியெதிர்ப்பு துணைப்படைகளும் அவர்களின் குடும்பத்தரும் வாவி சூழ்ந்த புளியந்தீவினுக்குள் தஞ்சம் புகுந்துள்ளனர். அதனால் மட்டுநகரில் மாற்றுக் குழுக்கள் என்று தம்மை அழைத்துக்கொள்ளும் இந்தத் துணைப்ப்டைகளின் பயத்தினால் மக்கள் புலிகளுக்கு ஆதரவென்று வெளியே காட்டிக் கொள்ளமுடியாத நிலை உள்ளது. எனினும் நகருக்கு வெளியே துணைப்படைகளின் நடமாட்டம் இல்லாததனால், மக்கள் வெளிப்படையாகவே புலிகளுக்கு ஆதரவாக உள்ளனர்.

மட்டுநக்ருக்குச் செல்லும் ஒரு வெளியாள் புலியெதிர்ப்பாளர்களை சந்திக்கும் சாத்தியம் அதிகமாக உள்ளதனாலும், தற்போது புலியெதிர்ப்புக்குழுக்களின் தலைவனாக கருணாவை சிங்கள, ஆங்கில, இந்தியப் பிராமணிய ஊடகங்களும், சில கூலிக்கு மாரடிக்கும் புலம்பெயர் இணையத் தளங்களும் (இவற்றில் கிழக்கு மாகாணத்தவர் இல்லையென்றே சொல்லலாம்) தூக்கிப் பிடிப்பதனாலும், கருணாவுக்கு கிழக்கில் அதிகம் ஆதரவு இருக்குமென்று தப்புக்கணக்குப் போடலாம். நகர்ப்புறத்திலிருந்து வெளியே வந்தால் எல்லாம் வெளிச்சமாகிவிடும். அரச உத்தியோகத்தர்கள், சாதாரண வியாபாரிகள், விவசாயிகளிடையே கருணாவிற்கு எதுவித ஆதரவும் இல்லையென்பதை இலகுவில் புரிந்து கொள்ளலாம்.


- kirubans - 07-30-2005

புலிகளிலிருந்து பிரிந்தபின் கிழக்கு மக்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்ள கருணா என்ன செய்தார்? கிழக்கில் 2002 வரை தமிழர்களைக் கொன்று பிள்ளைகளை இழந்த பெற்றோர்களையும், பெற்றோரை இழந்த குழந்தைகளையும், விதவைகளையும் உருவாக்கிய அதிரடிப்படையுடனும், இராணுவத்துடனும் சேர்ந்து கிழக்கில் தமிழர்களின் இருப்பையே கேள்விக்குறியாக்க முயற்சிக்கின்றார். கருணா புலிகளின் முன்னாள் தளபதியாக இருந்த காரணத்தால், அவரால் மட்டக்களப்பிலோ அல்லது பிற நாடொன்றிலோ பொதுமக்களின் முன் தோன்றவே முடியாது. இது அவருக்கு நன்றாகவே புரிந்து இருக்கும். ஆகவே பறக்கும் பன்றிகள் போன்ற கட்டுக்கதைகளை எழுதும் டி.பி.எஸ். ஜெயராஜ் போன்றவர்களின் பேனா மையில்தான் கருணா தனது இருப்பை தமிழ்மக்களுக்கு வெளிப்படுத்தமுடியும்.

<b>குறிப்பு: சச்சி சிறிகாந்தாவால் Tamil Nation இல் எழுதப்பட்ட கட்டுரையின் தழுவல்.</b>


- Thala - 07-30-2005

இந்தப்பகுதியில் தொடர்ந்து எழுதுங்கள் அண்ணா...


- kirubans - 07-30-2005

எழுதுவேன் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- Thala - 07-30-2005

நன்றி அண்ணா..


- kurukaalapoovan - 07-30-2005

ஆழிப்பேரலை அனர்த்தம் நடந்ததோடு நிழல் யுத்த நடவடடிக்கைகள் மந்த நிலையில் இருந்தது. இந்த காலப்பகுதிகளில் பொதுவாக எல்லாருடைய எதிர்பார்ப்பும் இந்த அனர்த்தம் உருவாக்கிய உடனடி சவால்களை இரு தரப்பும் ஒத்துளைப்போடு மேற்கொண்டு; புனர்வாழ்வு புனருத்தாரண திட்டங்களை நடைமுறைப்படுத்தி கொண்டு செல்லும் பொழுது நல்லெண்ணம் நம்பிக்கைகளை கட்டியெளுப்ப ஒரு சந்தர்பமாக இருக்கும். இதுவே பின்நாளில் சமாதானப்பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்க உதவும் என்று நம்பினார்கள்.

அந்த நம்பிக்கை எதிர்பார்ப்பெல்லாத்துக்கும் ஆப்புவைத்தால் போல்தான் அரச புலநாய்வுத்துறை மேற் கொண்ட கோளைத்தனமான கொளசல்யன் குழுவினர் மீதான தாகுதலும்; படுகொலையும். இதைப்பற்றி ஊடகவியலாளன் என தன்னை நினைத்துக் கொள்ளும் பேனா விபச்சாரி எழுதியது என்ன? <i>புலிகளிற்கு இராணுவரீதியில் ஒரு பாரிய சவாலாக கருணா-பரந்தன் ராஜனின் தமிழ் தேசியப்படை உருவாகியிருக்கு</i> என்று கட்டியம் கூறினார். கருணா விரட்டப்பட்டு 1 ஒரு வருட நிறைவிற்கு முன்னர் மீளக்கைப்பற்ற போகிறார் <i>கிழக்கு மாகணத்தில் இரத்த ஆறு ஓடப்போகுது</i> எண்டு போர் முரசு கொட்டினார்.

அரசியல் சர்ச்சைகள் அற்ற ஒரு நியாயமான பெதுக்கட்டமைப்பிற்கு எதிராக இந்த ஆண்டின் ஆரம்பத்திலேயே முதலில் குரல் கொடுத்தவர்களில் இவரும் ஒருவர். புலிகளோடு ஒரு உடன்பாடு எட்டப்பட்டால் புனர்நிர்மான நடவடிக்கள் செயல்வடிவம் பெற்று புலிகள் அரசியல்ரீதியில் பலம் பெற்றுவிடுவார்கள் என்று வயித்தெரிச்சல் பட்டுக் கொண்டவர். சிங்கள இனவாதிகள் இவருடைய இந்த "ஆய்வை" மேற்கோள் செய்து கொண்டனர் தமது இனவாத பிரச்சாரக் கட்டுரைகளில்.

கிழக்கில் அரசாங்கம் கருணா பெயரில் நடத்திய நிழயுத்தம் ஆதார புூர்வமாக வெளிக் கொண்டரப்பட்டு இந்தியாவின் நாசகார பங்குகள் அம்பலமாகி கைக்கூலிகள் தொடர்ச்சியாக இலக்குவைக்கப்பட்ட இவர் முதலைக்கண்ணீர் வடித்தார் <i>கிழக்கு மாகாண மக்கள் அன்று முதல் இன்றுவரை போராலும் இயற்கை அனர்த்தத்தினாலும் வஞ்சிக்கப்பட்டுகிறார்கள்</i> எனற தொனியில்.

ஆறுமாதமாக இழுபறிப்பட்டு கடைசியல் சுய அரசியல் இலாபங்களிற்காக அம்மையார் பொதுக்கட்டமைப்பிற்கு சம்மதித்த நாடகமாட எழுதுகிறார் "புலிகளிற்கு ஜனநாயக சக்தியாக நிர்வாக கட்டமைப்புகளை நடைமுறைப்படுத்தக்கூடியவர்களாக காட்டுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்கிறது" என்று புலம்பினார். இவருடைய ஜனநாயக ஒப்பாரியெல்லாம் அரச இராணுவ துணைப்படைக் கைகூலிகள் இலக்கு வைக்கப்படுவதையிட்டுதான்.

இதே வேளை கிழக்கில் நிலமைகள் புலிகளின் கட்டுப்பாட்டிற்கு வர அதை இக்பால் அத்தாஸ் "as the government watches tigers regain east" என்று எழுதியிருந்தார். இக்பாலின் அரசியல் கருத்துக்கள் தான் ஒரு இலங்கை குடிமகன் என்பதை பிரதிபலிக்கும் வகையில்தான் இருக்கும். அதற்கு ஒரு சிறந்த உதாரணமாக கடற்புலிகளின் தளபதி விசேட உலங்கு வானுர்தியில் கட்டுநாயக்கா சென்று அங்கிருந்து வெளிநாடு சென்ற பொழுது "Criminal returns as a VVIP" என்ற தொனியில் வருணித்திருந்தார். புலிகளின் சில நடவடிக்கைகளை யுத்த நிறுத்த உடன்படிக்கையின் பிரகாரம் மதித்து அங்கீகரிக்கவேண்டிய தேவை இருப்பதை உணர்ந்தவராக எழுதமாட்டார். இலங்கையில் இனப்பிரச்சனை உள்ளதாகவோ அதற்கு அரசியல் தீர்வு ஒன்று தேவை என்றதை உணர்ந்தவராக எழுதுவதில்லை. ஏந்த ஒரு இனவேற்றுமை பாகுபாடு, திட்டமிட்ட மொழியுரிமைப்பறிப்பு, கலவரங்கள், படுகெலைகள் குடியேற்றங்கள் என்ற குற்றச்செயலும் செய்யாத ஜனநாயக குடியரசின் இறைமையின் காவலனாக அதில் அக்கறையுள்ளவராக தான் இக்பால் எழுதுவார். இவரிடம் இருக்கும் சிறந்த கற்பனையோடு கூடிய வருணனை திறனையும் ஆங்கில மொழி வல்லமை மற்றும் Janes Defence சஞ்சிகைக்கான எழுத்தாளன் என்ற நிலையையும் இலங்கை அரசபடைகள் தாராளமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை இவருடைய கட்டுரைகளிலிருந்து அறிந்து கொள்ளலாம்.


- Thala - 07-30-2005

நன்றி குறுக்ஸ்..

அதுசரி இந்த ஆய்வாளர்கள் எல்லம் சில முக்கிய விடயங்களை மறந்து விட்டதாகவே தெரிகிறது.. அதில் முக்கியமானது புலிகளின் இந்த அதீத வளர்ச்சிக்கு காரணம் என்ன? அதிலயும் முக்கியமானது மக்கள் செல்வாக்கு, அதைப்பற்றி அவர்கள் வாய் திறப்பதே கிடையாது. எதோ புலிகள் மக்களின் பணங்களை புடுங்குவது போலும் மிரட்டுவது போலும் அவர்களின் வர்ணனனை அமைந்திருக்கும்.

இதில வேடிக்கையான விடயம் என்ன வென்றால் சண்டைக்காலங்களில் மக்கள் ஆதரவு இல்லா விட்டால் இராணுவக்கட்டுப்பாட்டு பிரதேசங்களில் புலிகளால் நடமாடவே முடியாது காயமடைந்த போரளிகளைப் பாதுகாக்கவோ இல்லை நகர்த்தவோ முடியாது. அவை எல்லாவற்றையும் விட உண்பதற்கு உணவு கிடைக்காது ஆயுத வெடிபொருள் வினியோகம் கிடைக்காது.. அப்படியானால் அவர்களால் சண்டை பிடிக்க முடியாது..இவை எல்லாம் தெரிந்திருக்க வேண்டிய இராணுவ விமசகர்கள் அவை எதுவும் புலிகளுக்கு கிடைக்காதமாதிரி கட்டுரை எழுதுவார்கள்...


- kurukaalapoovan - 07-30-2005

விளங்காமல் இருக்கவும் இல்லை… கவனிக்க தவறவும் இல்லை. அவர்கள் ஒவ்வொருமுறையும் எழுதுவதன் பின்னணி என்ன எந்த நோக்கோடு எழுதுகிறார்கள் என்றதைத்தான் பார்க்கவேணும். உண்மையைய் யதார்த்தத்தை மக்கள் அறியவேண்டும் என்றா எழுதுகிறார்கள்? இல்லை!

சுவார்சயமாக மக்களை கவருந்து ஒரு விறு விறுப்பான பாணியில் எழுத்து இருந்தால் தான் தொடர்ந்து அம்புலிமாமா ஆனந்தவிகடன் வாசிப்பது போல் தவறாமல் வாசிப்பார்கள் என்று தெரியும். உண்மையாக ஆபத்துகளை சந்தித்து நிஜ யுத்தங்களை பற்றி எழுதும் war correspondents மூக்கில் விரல் வைக்கும் அளவிற்கு இக்பால் வீட்டு நாற்காலியின் சுகத்திலிருந்து உருவாக்கும கற்பனைப்; படைப்புக்கள் இருக்கும். தீச்சுவாலையின் வெற்றியை சுடச்சுட எழுதுவதற்கு பலாலியில் விசேட அழைப்பில் போய் காத்திருந்த அளவிற்கு படைகளின் நம்பிக்கை விசுவாசத்தைப் பெற்றவர்.

இந்தளவிற்கு அரச படைகளோடு இரண்டற கலப்பதற்கு பின்னணியில் ஒரு சுவார்சியமான நிகள்வுண்டு. உணர்ச்சிவசப்பட்டு இலங்கைக் குடிமகன் என்றரீதியில் எழுதுவதால் அரசியல்வாதிகளின் சுத்துமாத்துக்கள் ஆயுதக்கொள்வனவுகளில் அரசபடை உயர் அதிகாரிகளின் ஊளல்கள் பற்றி வஞ்சகம் இன்றி எழுதித்தள்ளினார். இதனால் இவரும் இவருடைய படைப்புக்களை தாங்கிவரும் பத்திரிகை நிறுவனமும் அடிக்கடி நெருக்குதல்களிற்கு உள்ளானது. நிலமை முத்தி இறுதியில் இலங்கைக் கடற்படையின் தனித்துவமான "professional" கவனிப்புக்கு உள்ளாகி கடைசியில் நீதிமன்றம் வரை விவகாரம் சென்றது. இத்தோடு இக்பாலின் பிரபல்யம் ஒரு புதிய உச்சியை அடைந்தது. இந்த சந்தர்பத்தில் தான் சில புத்தியுள் இலங்கையின் இறைமையில் அக்கறையுள்ள அரச படை அதிகரிகள் இக்பாலை அரவணைத்து சரியாக பயன்படுத்த ஆரம்பித்துக் கொண்டனர்.


- Thala - 07-30-2005

இந்த ஆய்வாளர்களால் மாவீரனாய் சிங்களவரை காக்க வாந்ததவனாய் வருணிக்கப்பட்ட கருணா தலவரை நீங்கள்தான் என் கடவுள் உங்களுக்கு கீழ்மட்டும் தான் பணி செய்வேன் பொட்டம்மான், தமிழேந்தி க்கு கட்டுப்பட்டு இருக்கமுடியாது எண்டு (புலிகளின் நிதிப்பொருபாளரினாலும், புலனாய்வு பொறுப்பாளரினாலும் நிதிமோசடிகண்டு பிடிக்கப்பட்ட பின்) பிரிந்து விடுவதாய் அறிவித்ததும் கருணாவிக்கான காலக்கெடு விதிக்கப்பட்டது..இது எல்லாரும் அறிந்த விடயம்.

இதில் எனக்கு நிறைய சந்தேகங்கள். கிட்டத்தட்ட 7000 பேர் கருணாவின் அணியில் இருந்தனர்.(அவர்களும் புலிகள்தான்) அவர்களின் ஆற்றலை குறைத்து மதிப்பிட முடியாது. (மனதளவில் குழம்பி இருந்தனர் உண்மைதான்) ஆனால் ஆற்றல் மிக்க தளபதியாய் வருணிக்கப்பட்ட கருணாவுக்கு புலிகள் கொடுத்த காலக்கெடு போதுமாக இருந்திருக்கும் அவர்களை சண்டைக்கு தயார் படுத்த.
இப்போது அரச சார் ஆய்வாளர்களின் கணிப்பின்படி அரை வாசி புலிகள் கருணா அணியில். அப்பிடியானால்
மருத்துவபுலிகள், நிதி,நீதி, புகைப்படப்பிரிவு அரசியல்துறை.. இப்பிடி எல்லாரும் போக 4000 புலிகள் சண்டைக்கு தயார்.
இதேபுலிகளின் ஒருதொகுதி வன்னிப்பிரதேசபாதுகாப்பு போக மிகுதி ஒரு தொகுதி தான் மட்டக்களப்பு அம்பாறைக்கு போய் இருக்கலாம்.

இப்போ புலிகளின் பெரும்பகுதி வளங்கள் கருணாவிடம் என்றார்கள் அப்படியானால் 7000பேரை எதிக்கும் அளவு புலிகள் திருமலை தாண்டி எப்படி மட்டு அம்பாறைக்குள் நுளைந்திருக்கமுடியும். அதுவும் மணலாற்றின் கடற்கரை ஊர் கொக்குத்தொடுவாயில் இருந்து மூதூர் வரை இராணுவ கட்டுப்பாட்டுப்பிரதேசம். புலிகளின் சிறிய ரக படகுகளின் ஒன்றில் ஆகக்கூடியது 40 பேரை தான் ஆயுதங்களுடன் ஏற்றமுடியும். அப்படியானால் புலிகள் எப்படி நகர்ந்தார்கள்? குறைந்த எண்ணிக்கையான புலிகள் எப்படி மாவீரன் கருணாவைத் துரத்தினார்கள் எண்று எந்த ராணுவ சார் ஆய்வாளரும் சொல்லமாட்டார்கள் ஏனென்றால் அவர்களின் வளமையான ஆய்வுகள் பொய்த்துவிடும்...