![]() |
|
அச்சுவேலியில் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: அச்சுவேலியில் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை (/showthread.php?tid=3804) |
அச்சுவேலியில் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை - தமிழரசன் - 07-29-2005 யாழ்ப்பாணம் அச்சுவேலியில் குடும்பஸ்தர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்த இனந் தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.30 மணியளவில் அச்சுவேலி சந்திக்கு சமீபமாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தோட்டத்தில் வேலை செய்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளை எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு இனந் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர். அச்சுவேலி சங்கானை வீதியைச் சேர்ந்த பிலிப்பையா பேர்னாட் ஜெயராஜா (வயது 56) என்பவரே கொல்லப்பட்டவராவார். குறிப்பிட்ட நபரின் சடலம் அச்சுவேலி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா பொலிசார் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர். PUTHINAM |