Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பாசத்துக்கு முன் பணம் எம்மாத்திரம்!
#1
<b>பணம் என்ன பணம்! பாசத்துக்கு முன் பணம் எம்மாத்திரம்!</b>

முதுமையடைந்த தாய், நோய்வாய்ப்பட்டு அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். இவரின் மகள்மார் வெளிநாடுகளில் நல்ல வசதியாக வாழ்கிறார்கள்.

தாய் நோயுற்றதைக் கேள்விப்பட்ட மகள்மார் ஒவ்வொருவரும் இங்குள்ள உறவினர் ஒருவருக்குப் பணம் அனுப்பி, தாய்க்கு தகுந்த சிகிச்சை அளிக்கும் படியும் அவரை நன்கு கவனிக்கும் படியும் கேட்டுக் கொண்டனர்.

பணம் வந்துகொண்டிருந்ததால் அந்த மூதாட்டிக்கு சிகிச்சையுடன் நல்ல கவனிப்பும் கிடைத்தது. ஆனாலும் அவருக்கு மனநிம்மதி என்ற ஒன்று கிடைக்கவில்லை.

மகள்மாரைப் பார்க்க வேண்டும் என்று அடிக்கடி புலம்பிக் கொண்டிருப்பார்.

இச்செய்தி மகள்மாருக்கு எட்டினாலும், அவர்கள் பணம் அனுப்பினார்களே தவிர, வந்து பார்க்கவில்லை. இந்த நிறைவேறாத அவாவுடன் அந்த மூதாட்டி இவ்வுலகத்தை விட்டே போய் விட்டார்.

பணம் என்ன பணம்! பாசத்துக்கு முன் பணம் எம்மாத்திரம்!

Thanks:Thinakural
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)