![]() |
|
இராணுவத்தினரின் வெறிச்செயல்:வவுனியாவில் குண்டு வெடிப்புகள்! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: இராணுவத்தினரின் வெறிச்செயல்:வவுனியாவில் குண்டு வெடிப்புகள்! (/showthread.php?tid=3827) |
இராணுவத்தினரின் வெறிச்செயல்:வவுனியாவில் குண்டு வெடிப்புகள்! - தமிழரசன் - 07-27-2005 தமிழர் விடுதலைப் பிரகடன மாநாடு நடைபெறும் வவுனியாவில் சிங்கள இராணுவத்தினரால் மேலும் இரு குண்டு வெடிப்புச் சம்பவங்களை நடத்தியுள்ளனர்.இன்று பிற்பகல் வவுனியா பிரகடன மாநாட்டு அண்மித்த பகுதியில் முதல் குண்டு வெடித்தது. மாலை 5.45 மணிக்கு கிளைமோர் ரகக் குண்டு அதே இடம் அருகே வெடித்தது.மீண்டும் மாலை 6.15 க்கு வவுனியா குருமன்காடு யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகம் அருகே மூன்றாவது குண்டுவெடித்தது. மூன்று குண்டுவெடிப்புகளிலும் காயமடைந்தோர் மற்றும் சேதங்கள் குறித்த விவரங்கள் தெரியவில்லை. தமிழர் மாநாட்டைச் சீர்குலைக்கும் வகையில் சிங்கள இராணுவம் நடாத்தி வரும் இந்த தாக்குதல் குண்டுவெடிப்புகள் குறித்து மாநாட்டில் பங்கேற்ற அனைத்துப் பிரதேச தமிழினப் பிரதிநிதிகளும் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர். puthinam |