Yarl Forum
வவுனியா தீர்மானம் தேசியத் தலைவரிடம் கையளிப்பு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: வவுனியா தீர்மானம் தேசியத் தலைவரிடம் கையளிப்பு (/showthread.php?tid=3824)



வவுனியா தீர்மானம் தேசியத் தலைவரிடம் கையளிப்பு - தமிழரசன் - 07-28-2005

எமது நிலத்தில், எமது பலத்தில் எமது தலை விதியை நாமே நிர்ணயித்துக்கொள்ளும் சூழ்நிலை உருவாக வேண்டும் என்றும், அந்த உன்னதமான உயரிய சுதந்திர வாழ்வை நோக்கி தமிழ் மக்கள் அணி திரண்டபடியே உள்ளோம் என்பதையும் எடுத்துக் கூறும் வவுனியா தீhமானங்கள் இன்று தமிழீத் தேசியத் தலைவர் அவர்களிடம் வழங்கப்படுவதற்காக கிளிநொச்சியில் கையளிக்கப்பட்டுள்ளது.


வவுனியாவில் நேற்று இடம்பெற்ற தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டில் எடுக்கப்பட்ட 14 தீர்மானங்களை, சகல மாவட்டங்களையும் பிரதிநிதித்தும் செய்யும் பிரதிநிதிகள் இன்று நண்பகல் கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் அரசியல்துறை நடுவப் பணியகத்தில் கையளித்தனர்.

தமிழ் மக்கள் சார்பில் திருகோணமலை தமிழ் மக்கள் பேரவைத் தலைவர் ச.விக்கினேஸ்வரன் அரசியல்துறை துணைப் பொறுப்பாளர் சோ.தங்கனிடம் அதனைக் கையளித்தார்.
<img src='http://www.battieezhanatham.com/news/07/28b.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.battieezhanatham.com/news/07/28a.jpg' border='0' alt='user posted image'>