![]() |
|
விருது விழாவை பகிஷ்கரித்த சிங்கள இயக்குனர் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: விருது விழாவை பகிஷ்கரித்த சிங்கள இயக்குனர் (/showthread.php?tid=3822) |
விருது விழாவை பகிஷ்கரித்த சிங்கள இயக்குனர் - AJeevan - 07-28-2005 <b>வெலிக்கடை படுகொலையைக் கண்டித்து விருது விழாவை பகிஷ்கரித்த சிங்கள இயக்குனர்</b> <img src='http://www.geocities.com/thisismymoon/Comments/MiddlePicture4.gif' border='0' alt='user posted image'><img src='http://www.geocities.com/thisismymoon/Director/Directoersphothgraph.gif' border='0' alt='user posted image'> <b>THIS IS MY MOON</b> <span style='color:brown'>வெலிக்கடை படுகொலையைக் கண்டித்து நேற்று முன்தினம் நடைபெற்ற திரைப்படக் கலைஞர்களுக்கான ஜனாதிபதி விருது வழங்கும் விழாவை பிரபல சிங்களத் திரைப்பட இயக்குனர் அசோகா ஹந்தகம பகிஷ்கரித்துள்ளார். அவர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கடிதம் மூலமே தனது பகிஷ்கரிப்பு அறிவித்தலை தெரியப்படுத்தியிருந்தார். இக்கடிதம் மேற்படி விருது வழங்கும் விழாவில் வாசிக்கப்பட்டது. அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது: இந்த விழாவில் எனக்கு வழங்கப்படும் விருது பணமான 150,000 ரூபாவை 1981 ஆம் ஆண்டு எரிக்கப்பட்ட யாழ். நூலகத்திற்கு அன்பளிப்பாக வழங்குகின்றேன். குட்டி மணி, தங்கத்துரை உள்ளிட்ட 53 தமிழ் இளைஞர்கள் 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27 ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலையில் வைத்து கொலை செய்யப்பட்டனர். அன்று நடந்த இந்த அநீதியைக் கண்டித்து ஜூலை 27 ஆம் திகதி நடைபெறும் இவ்விருது வழங்கும் விழாவை பகிஷ்கரிக்கின்றேன். தமிழர்களாகப் பிறந்த ஒரே காரணத்திற்காகவே அவர்கள் அன்று கொலை செய்யப்பட்டனர். அவர்கள் செய்த தவறு தமிழர்களாகப் பிறந்ததுதான்.இந்த அநீதியான சம்பவம் நடந்து 22 ஆண்டுகள் முடிந்து விட்ட நிலையில் இன்று சுனாமி கட்டமைப்பை உறுதியாக நின்று கைச்சாத்திட்ட ஜனாதிபதியைப் பாராட்டுகிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\"\"திஸ் இஸ் மை மூன்'' எனும் அவருடைய திரைப்படம் ஐந்திற்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. [quote] <img src='http://www.geocities.com/thisismymoon/Comments/MiddlePicture10.gif' border='0' alt='user posted image'> Asoka Handagama's latest film is the one, which would take the Sinhala Cinema into the New Millennium. This is a daring film, which has the honesty, and the courage to face a controversial issue straight in the face with a cool clinical objectivity laced however with a deep humanism. THIS IS MY MOON is a cruel yet beautiful film. Handagama, apart from handling a most sensitive subject with a maturity rare among the younger film makers of this country, has successfully broken away from the straightjacket of classical cinema without losing clarity and intelligibility, a price most other film makers had to pay in attempting the same. Here is a film that deserves to be given maximum exposure in the international art cinema circuit. Tissa Abeysekara Chairman National Film Corporation more about film: http://www.geocities.com/thisismymoon/Comm...untitled17.html </span> - MUGATHTHAR - 07-28-2005 Quote:அன்று நடந்த இந்த அநீதியைக் கண்டித்து ஜூலை 27 ஆம் திகதி நடைபெறும் இவ்விருது வழங்கும் விழாவை பகிஷ்கரிக்கின்றேன். இனவாதிகளும் மதவாதிகளும் நிறைந்த சிறீலங்கா நாட்டில் இப்பிடியும் ஒருவரா?? இவரையும் தமிழ் பரம்பரையில் வந்தவர் எனக்கூறி ஒதுக்கி வைத்தாலும் ஆச்சரியப்படுவதிற்கு இல்லை - வினித் - 07-28-2005 MUGATHTHAR Wrote:Quote:அன்று நடந்த இந்த அநீதியைக் கண்டித்து ஜூலை 27 ஆம் திகதி நடைபெறும் இவ்விருது வழங்கும் விழாவை பகிஷ்கரிக்கின்றேன். MUGATHTHAR ¿¢í¸û ±øÄÃÔõ ¿õÁ¾¢í¸û ±ó¾ ÒòÐÄ ±ýÉ ÀõÒ þÕ째 ¦¾Ã¢ÂÐ :evil: :evil: :evil: ¯ôÀʾý ºí¸Ã¢ «ôÒ ÅýîºÅý - அருவி - 07-29-2005 he is great - அருவி - 07-29-2005 http://www.eelampage.com/?cn=18959 - vasisutha - 07-29-2005 தகவலுக்கு நன்றி அஜீவன் அண்ணா.. - Vasampu - 07-29-2005 தகவலுக்கு நன்றி அஜீவன். அவரின் உன்னதமான செயலுக்கு என் மனமார்ந்த நன்றிகள். சிங்கள மக்கள் சிலருடன் பழகக் கூடிய வாய்ப்புக்கள் எனக்கு முன்பு தாயகத்தில் கிடைத்திருந்தது. அவர்களில் பல நல்லவர்களும் உண்டு. மாறி மாறி வரும் அரசாங்கங்கள் செய்யும் அநியாயங்களுக்காக ஓட்டுமொத்த சிங்கள மக்களையும் குறை கூற முடியாது. - hari - 07-29-2005 தகவலுக்கு நன்றி அஜீவன் அண்ணா |