| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 131 online users. » 0 Member(s) | 128 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,327
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,235
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,301
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,649
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,083
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,472
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,512
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,045
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243
|
|
|
| புரியாத உறவு |
|
Posted by: Vishnu - 10-18-2005, 08:19 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (15)
|
 |
<b>ஒரு நாளில் கவிதை எழுதுவது எப்படி என்பதை பார்த்து இந்த கழுதை எழுதிய கற்பூரம்.. சீ சீ கவிதை இது... பிழைகள் இருந்தால் பொறுப்பிர்களாக..........</b>
<img src='http://img115.imageshack.us/img115/8047/naamlooswarekleuren015hn.jpg' border='0' alt='user posted image'>
<b>
புரியாத உறவு
அன்பு செய்வதிலும்
ஆறுதல் கூறுவதிலும்....... ஏன்
அதிகார பேச்சிலும்
அன்னை போலிருந்தாள்.
கிண்டல் பண்ணுவதிலும்... பிறரை
கேலி, கொமெண்ட் அடிப்பதிலும்...
உதவி செய்வதிலும்........ அவ்வப்போது
உபத்திரம் தரும் போதிலும்...
உண்மையான நண்பனுக்கு ஈடாக இருந்தாள்.
தனது பாரங்களை, சோகங்களை
தவிப்புகளை, தாகங்களை
தடையின்றி சொன்னபோதும்...
ஆர்வங்களை, கனவுகளை
அவளது ஆசைகளை, இன்பங்களை கூறி
அறுத்த போதும்........ என்னை அவள்
ஆருயிர் தோழி போல நினைத்திருந்தாள்.
தோளில் சாய்ந்து கதைபேசி
தோழமையை வளர்த்தபோதும்...
கடற்கரையில் கைகோர்த்து
கனிவாகா கதைகள் கதைத்த போதும்...
காதலியை மிஞ்சி இருந்தாள்.
ஆனால்
சந்தித்துகொள்ளும் போதும்
பிரியும் போதும்...
மடலின் ஆரம்பத்திலும் முடிவிலும்
நண்பனே என்று அழைத்தாள்
நமது உறவை வரையறுத்துக்கொள்ளவதற்காக
எனது நண்பி</b>
|
|
|
| எதிர் வரும் 23ம் திகதிக்கு முன்னர்... |
|
Posted by: Danklas - 10-18-2005, 06:26 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (15)
|
 |
எதிர்வரும் 23 ஆம் திகதி நோன்புப் பெருநாளுக்கு முதல் உலகில் பெரிய பிரளயம் ஏற்படப் போவதாகவும், அப்பிரளயத்தில் உலக சனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கினராகிய இருநூறு கோடி மக்கள் அழிந்துவிடுவார்களெனவும் இதில் ஆதம் (அலை) அவர்கள் இறக்கப்பட்ட புண்ணிய பூமியாகிய "ஸரந்தீப்" எனும் எமது நாடும் அதனைச் சூழ்ந்துள்ள கடலால் அழிந்து போய்விடும் எனவும் தெரிவித்து துண்டுப் பிரசுரம் ஒன்று கல்முனைப் பிரதேசத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இத்துண்டுப் பிரசுரத்தினால் கல்முனை பிரதேச மக்கள் மத்தியில் பரபரப்பும், அச்சமும் ஏற்பட்டுள்ளது. கடல்வள நன்னீர் மீன்பிடி விரிவாக்கற் சேவைச் சங்கம் என்ற பெயரில் மௌலவி அப்துல் ஜஹான் என்பவரினால் அல்குர்ஆன் வசனம் ஒன்றை மேற்கோள் காட்டி பிரளயமும் இமாம் மஹ்தி (அலை) வருகையும் என வெளியிடப்பட்டுள்ள துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
உலகில் பிரமாண்டமான பிரளயம் ஏற்படுகின்றது. அந்தப் பிரளயத்தில் மேலைத் தேசத்தில் சில நாடுகளும், அரபு தேசத்தில் சில நாடுகளும் கீழைத்தேசத்தில் சில நாடுகளும் இருந்த இடம்தெரியாமல் போய்விடும். அதிலே ஆதம் (அலை) அவர்களால் இறக்கப்பட்ட புண்ணிய பூமியாகிய "ஸரந்தீப்" எனும் எமது நாடும் அதனைச் சூழ்ந்துள்ள கடலால் அழிந்து போய்விடும்.
இந்த பிரளயத்தில் உலக சனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கினராகிய இருநூறு கோடி மக்கள் அழிந்து போய்விடுவார்கள்.
நான் கடந்த 18-02-1985 இல் இருந்து இதுபற்றிய விடயங்களை காலத்துக்குக் காலம் மக்களுக்கு அறிவித்தே வந்துள்ளேன். அது என் கடமையுமாகும். இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 23.10.2005 இல் வரும் நோன்புப் பெருநாளுக்கு முதல் இந்தப் பாரிய பிரளயம் நடக்கப் போகின்றது. இதனை இறைவன் எனக்கு அறிவித்துள்ளான். இது குர்ஆன் மீது சத்தியம். இத்தகைய பிரளயம் ஒன்று ஏற்படப் போகின்றது என்ற அடையாளமே கடந்த 26.12.2004 இல் ஏற்பட்ட பிரளயமாகும். இதனை விஞ்ஞானிகள் கடல்கோள் என்றும் மெய்ஞ்ஞானிகள் பிரளயம் என்றும் குறிப்பிடுகின்றனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினக்குரல்....
அடடடடாடாடா அதுக்கிடையில சுருட்டுறதுகளை சுருட்டிக்கொண்டு ஜெயா, மாகேஸை கூட்டிக்கொண்டு ஆபிரிக்கா காட்டுக்க போயிடனும்,,,, <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo-->
|
|
|
| அப்பாவையும் பழக்குங்கள்...* |
|
Posted by: SUNDHAL - 10-18-2005, 02:35 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (22)
|
 |
குழந்தை வளர்ப்பு என்பது அம்மாக்கள் மட்டுமே சம்பந்தப்பட்ட விஷயம் என்பது பெரும்பாலான ஆண்களது கருத்து. இதெல்லாம் பொம்பிளைங்க சமாச்சாரம், ஆம்பிளைங்களுக்கு என்ன தொpயப் போகுது என்று பெண்களும் குழந்தை வளர்ப்பு தொடர்பான எல்லா விஷயங்களையும் தன் தலை மேலேயே இழுத்துப் போட்டுக் கொள்வதுண்டு. குழந்தை வளர்ப்பில் அம்மா, அப்பா இருவாpன் பங்கும் மிக முக்கியம் என்கிறhர்கள் மருத்துவர்கள். அது தான் குழந்தையின் சீரான மன வளர்ச்சிக்கும் உதவும் என்பது அவர்களது கருத்து. குழந்தை வளர்ப்பில் உங்கள் கணவரைக் கீழ்க்கண்ட விஷயங்களில் ஈடுபடுத்துங்கள்.
பிரசவத்திற்கு முன்பிலிருந்தே கர்ப்ப காலம் என்பது பெண்களை மனத் தளவிலும், உடலளவிலும் எப்படிப் பொpதும் பாதிக்கும், அவர்கள் படும் அவஸ்தைகள் என்னென்ன என்பது பற்றிய புத்தகங்களைப் படிக்கச் சொல்லுங்கள்.
பிரசவம் நெருங்கும் கடைசி நாட்களில் கூடிய வரையில் உங்கள் கணவர் உங்கள் அருகாமையில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
குழந்தை பிறந்ததும் அதன் கழுத்து நிற்கும் வரை தூக்கவே பயப்படும் ஆண்கள் பலர். அதைத் தவிர்த்து, அவர்களையும் குழந்தையைத் தூக்கிக் கொஞ்சப் பழக்குங்கள்.
உதவிக்கு வேறு ஆட்கள் இல்லாத பட்சத்தில் உங்கள் கணவாpன் உதவி உங்களுக்குப் பெருமளவில் எல்லா விஷயங்களிலும் தேவைப்படும். எனவே குழந்தையை சுத்தம் செய்வது, அதற்கு மருந்து கொடுப்பது, தூங்க வைப்பது, விளையாட்டுக் காட்டுவது என எல்லாவற்றையும் பற்றி ஆரம்பத்திலிருந்தே உங்கள் கணவருக்குப் பயிற்சி கொடுங்கள்.
தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் உங்கள் அருகாமையைக் குழந்தை இழக்கும்போது, அதை ஈடுகட்ட உங்கள் கணவருக்குத் தொpந்திருக்க வேண்டும்.
தாய்ப்பாலை நிறுத்திய பிறகு குழந்தையைக் கவனிப்பதில் அம்மா, அப்பா இருவருமே சம அளவு பங்கு எடுத்துக் கொள்ளலாம்.
சில குழந்தைகள் அம்மாவின் அரவணைப்பிலேயே வளர்ந்து பழக்கப்பட்டு விட்டால் பிறகு அப்பாவிடம் கூடப் போகத் தயங்கும். சிறிது நேரத்திற்கு மேல் இருக்க முடியாமல் அழும். இது தவிர்க்கப்பட வேண்டிய பழக்கம். அதனால் அப்பாவின் அருகாமையையும் அதற்கு ஆரம்பத்திலிருந்தே பழக்குவது நல்லது.
குழந்தைக்குக் கொடுக்க வேண்டிய சொட்டு மருந்து விவரங்கள், போடப்பட வேண்டிய தடுப் பூசிகள், சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய நாட்கள் போன்றவற்றை நினைவுப்படுத்தும் பொறுப்பை உங்கள் கணவாpடம் ஒப்படைக்கலாம்.
வேலையிலிருந்து திரும்பியதும் என்னதான் களைப்பாக இருந்தாலும் குழந்தையோடு சிறிது நேரத்தைச் செலவிடுவதை உங்கள் கணவருக்குப் பழக்கப்படுத்துங்கள். குழந்தைக்குத் தேவையானதை வாங்கித் தருவதோடு தன் கடமை முடிந்து விட்டது என்ற எண்ணம் அப்பாக்கள் மனதில் வளரக் கூடாது.
வெளியே செல்லும் போது குழந்தையை உங்கள் கணவர் தூக்கிச் செல்லவும் அனுமதியுங்கள். உங்களின் துணை இல்லாமல் குழந்தை யாhpடமும் இருக்காது என்ற பழக்கத்தை வளர விடாதீர்கள்.
Thanks:Karan............
|
|
|
| விழுதாகி வேருமாகி |
|
Posted by: கரிகாலன் - 10-18-2005, 02:09 PM - Forum: தமிழீழம்
- Replies (1)
|
 |
நாற் சுவரெ உலகமென
நம்பி நின்ற பெண்களைப்
பார் உலகை எனப்
பார்ப்பிக்கச் செய்தவளே.
பாரம் சுமக்கவல்ல
படைத்து; பெண்களை
வீரத்தரசிகளாய்
வீதியுலா வருவதற்கேயென
உரக்கச் சொன்னவளே,
மாலதி,
நீயே வரலாற்றின் முதல்வரி.
'ஈழம்' தவிர்த்தெந்த
இன்பமும் யாம்
வேண்டாமென
களத்தில் வீழ்கையில்
கடைசியாய் நீ சொன்னாய்.
பூட்டுடைத்து விடுதலைக்காய்
புறப்பட்ட மகளே - நீ
காட்டிச் சென்ற தெவ்வழி
கடைசி வரை நாமும் அவ்வழி !
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதல் பெண் மாவீரரான லெப்.மாலதி அவர்களின் நினைவாய் (10.10.1987)
நன்றி செம்பருத்தி
|
|
|
| தகட்டுப் பதக்கம் கொடுத்த இந்து கலாச்சார அமைச்சு |
|
Posted by: வன்னியன் - 10-18-2005, 01:17 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (5)
|
 |
தங்கப் பதக்கம் என தகட்டுப் பதக்கம் கொடுத்த இந்து கலாச்சார அமைச்சு
இந்து கலாச்சார அமைச்சினால் நடத்தப்பட்ட போட்டியொன்றில் வெற்றி பெற்ற மாணவர்களிற்கு தங்கப் பதங்கம் வழங்கப்படுமென அறிவித்துவிட்டு தகட்டினால் செய்யப்பட்ட பதக்கங்களே வழங்கப்பட்டுள்ளன.
ஈபிடிபி தேசவிரோதக் கும்பலின் தலைவர் டக்கிளசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்து கலாச்சார அமைச்சினால் நடத்தப்பட்ட போட்டியொன்றில் வெற்றி பெற்றவர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்து. இப் போட்டியில் பல பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டு முதலாம் இடத்தையும் பெற்றுக் கொண்டனர்.
இவர்களுக்கான பரிசளிப்பு விழா கடந்த வாரம் கொழும்பில் இந்து கலாச்சார அமைச்சினால் மிகவும் விமர்சையாகக் நடத்தப்பட்டது. இதில் யாழ்ப்பாணத்தில் இருந்தும் மற்றும் ஏனைய வடக்குக் கிழக்கு மாகாணங்களில் இருந்தும் பல மாணவர்கள் தமக்கு கிடைத்த பரிசில்களைப் பெற பல ஆயிரம் ரூபா நிதியை செலவு செய்து பலத்த சிரமத்தின் மத்தியில் கொழும்புக்கு சென்று இந்து கலாச்சார அமைச்சரிடம் பரிசில்களையும் பதக்கங்களையும் பெற்று வந்துள்ளனர்.
ஆனால் தங்கப்பதக்கம் என வழங்கப் பட்டவைகள் அனைத்தும் தகட்டில் செய்யப்பட்டு தங்க முலாம் பூசப்பட்டவையென தற்போது பரிசில்கள் பெற்றவர்கள் தெரிவிக்கின்றனர். பல ஆயிரம் ரூபாக்களைச் செலவு செய்து இதனைப் பெற்றதிலும் பார்க்க செல்லாமலே இருந்திருக்கலாம் எனவும் அவர்கள் கூறுகின்றார்கள்
சுட்டது சங்கதியிலிருந்து
|
|
|
| கல்லூரி மாணவியின் சாதனை |
|
Posted by: வினித் - 10-18-2005, 12:04 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (19)
|
 |
<b>ஓடும் பஸ்சில் 1- மணி நேரம் முத்த யுத்தம்* செல்போனை ஈரப்படுத்திய கல்லு}hp மாணவி
விளம்பரம்
AனுஏநுசுகூஐளுநுஆநுNகூ
உடன்குடி, அக். 18- உடன்குடியில் இருந்து நெல்லைக்கு சில நிறுத்த அரசு பஸ் (எல்.எஸ்.எஸ்.) புறப்பட்டது. பயணிகள் நிரம்பி வழிந்த இந்த பஸ்சில் சுமார் 18 வயதுள்ள ஒரு கல்லு}hp மாணவி செல்போனுடன் பஸ்சில் ஏறி அமர்ந்தாள். அமர்ந்ததும், அவள் வைத்திருந்த செல்போன் சிணுங்கியது... சிhpத்தாள்... உதடு குவித்தாள்... …இச்...இச்...† என்று நச்சென்று முத்தம் கொடுத்தாள் செல்போனுக்கு*... தொடர்மழை பூமியை துவம்சம் செய்வது போல்... தொடர் முத்தத்தால் செல்போனை ஈரப்படுத்தினாள். இவ்வாறு சுமார் 1- மணி நேரம் தன்னை சுற்றியிருந்த பயணிகளை அவள் கண்டு கொள்ள வில்லை. திடீரென டவர் கிடைக்காமல் கட் ஆகினால் …உச்† கொட்டுவாள்... அதற்குள் மீண்டும் மணி ஒலிக்கும்... அவள் முகம் மலரும்.. பேசுவாள் பேசிக்கொண்டே இருப்பாள்.
பாளை சமாதானபுரம் பஸ் நிறுத்தம் வந்தது... அவள் …கிஸ்† நிறுத்தமும் வந்தது* ஆம் அங்கு தான் அவள் இறங்கினாள். இறங்கும்போது காதோடுதான் ஐக்கிய மாகி இருந்தது அவளது செல்போன். இதுவரை முகம் சுளித்து பொறுமை காத்துவந்த பயணிகள் சிலர்...
……இந்த பொண்ணுக்கு என்ன பைத்தியமா? பக்கத்தில் இவ்வளவு பேர் இருக்கிறhர்களே என்று எந்தவித கூச்சமும் இல்லாமல் இப்படி போனில் முத்தம் கொடுக்குதே... காலம் கெட்டுப் போச்சுப்பா*...
போனுக்கே இவ்வளவு முத்தம்னா, ஆளை நோpல் கண்டால் அவ்வளவு தான்*... எல்லாம் பைத்தியம் பிடிச்சி அலையுதுங்க*†† என்று தங்கள் ஆத்திரத்தை கொட்டித் தீர்த்தனர்.
அந்த கல்லு}hp மங்கைக்கு உண்மையிலேயே காதல் பைத்தியம்தான்*... என்ன செய்வது கல்வியை காதலிக்கும் வயதில் காதலை காதலிப்பவர்களின் எண்ணிக்கைதான் அதிகமாகிக் கொண்டே போகிறது.</b>
http://www.dinakaran.com/
|
|
|
| பொய்முகம் |
|
Posted by: கரிகாலன் - 10-18-2005, 10:49 AM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (3)
|
 |
தனியொரு மனிதனை ஏமாற்றுவது மூடநம்பிக்கை கீழறுப்பாகும்.
தனியொரு இனத்தை ஏமாற்றுவது நம்பிக்கைக்கேடாகும்.
தனியொரு நாட்டினை ஏமாற்றுவது குமுகாயச்சிதைவாகும்.
ஒட்டுமொத்தமாக இந்த உலகத்தை ஏமாற்றுவதை என்னென்பது?
இந்தியாவின் முன்னாள் பிரதமர் திருமதி. இந்திரா தொடங்கி இன்றைய ராகுல், பிரியங்கா வரையிலாகத் தொடர்கின்றது காந்தியின் பொய்முகம். திருமதி. இந்திராவின் மூன்று தலைமுறையினர் "காந்தி"யின் போர்வைக்குள் தம்மைப் புதைத்துக் கொண்டு வாழ்கின்றனர். இந்நிலையினை தமிழர்கள் மிக இயல்பாக பசுத்தோல் போர்த்திய புலி என்பர். இது முழுக்க முழுக்க அரசியல் பேற்றினை வேண்டி அரங்கேற்றப்படும் நாடகமாகும்.
ஏமாற்றலின் மொத்த வடிவமாகத் தொடர்கின்றது காந்தியின் பொய் முகம். ஜவர்லால் நேரு (Jawahar Lal Nehru), கமலா நேரு (Kamala Nehru) இணையருக்கு மகளாகப் பிறந்தவர் இந்திரா பிரியதர்சிணி நேரு (Indira Priyadarshini Nehru). இந்திரா பிரியதர்சிணி நேருவிற்கு "காந்தி" என்னும் அடைமொழி எப்படி ஏற்பட்டது?
அவர் நேருவின் மகளாக இருக்கும் வரை இந்திரா பிரியதர்சிணி நேரு என்றிருந்தார். திருமணத்திற்குப் பின்னர் இந்திரா பிரியதர்சிணி நேரு, திருமதி. இந்திரா காந்தியானார். திருமதி. இந்திராவின் கணவர் ஃபேரோச் கான் (Feroz Khan) என்பவராவார். இவர் பெர்சிய இனத்தவர், இசுலாமிய சமயத்தவர். இந்நிலை தங்களது அரசியல் ஆளுமைக்குப் பாதிப்பு ஏற்படுமென்று ஜவர்லால் நேருவும் மோகன்தாசு கரம்சிங் காந்தியும் (அப்போதைக்கு மோகன்தாசு கரம்சிங் காந்தி "மகாத்மா"வாகவில்லை) எண்ணினர். உண்மை நிலைப்பாட்டினை மக்கள் முன் வைக்க மனவலிமை யற்றவர்களாயிருந்தனர் இருவரும்.
இந்நிலையில்தான், ஃபேரோச் கானின் தாய்மரபுவழிப் பெயரான கான்டி (Ghandy) என்னும் பெயர் ஃபேரோச் கானுக்கு இடுமாறு மோகன்தாசு கரம்சிங் காந்தி, ஜவர்லால் நேருவிற்கு அறிவுறுத்தல் செய்தார். இதன்வழி காந்தியின் அரசியல் ஆளுமைக்கு நேர்ச்சிகள் ஏதும் ஏற்படாதெனக் கருதப்பட்டது. கணவரின் பெயரில் ஒட்டி வைக்கப்பட்ட "காண்டி" என்னும் சொல் "காந்தி"யாக மாற்றப்பட்டது. இச்சொல்லின் அடிப்படையில்தான் இந்திரா பிரியதர்சிணி நேருவாக இருந்தவர் திருமதி. இந்திரா காந்தியானார். பலர் இந்திரா என்பவர் காந்தியின் மகள் என்றும் சிலர் இந்திரா, காந்தியின் உறவுக்காரர் என்றும் கருதி வாழ்கின்றனர். இற்றைநாள்வரை பலரால் திருமதி. இந்திரா காந்தி, மோகன்தாசு கரம்சிங் காந்தியின் மகளாகவே கருதப்படுகின்றார். இதனைத் தெளிவுபடுத்திக் கொள்ளும் கடப்பாடு மக்களுக்கும் ஏற்படவில்லை; தெளிவுபடுத்த வேண்டிய தேவைப்பாடு திருமதி. இந்திரா காந்திக்கும் அவரின் தலைமுறையினருக்கும் ஏற்படவில்லை. அரசியல் தளத்தில் ஆளுமை கொள்ள வேண்டும் என்னும் வெறியின் பொருட்டு இற்றைநாள்வரை நிகழ்த்தப்படும் நாடகம் இது.
அரசியல் நீரோட்டத்திற்கு ஏதுவாக திருமதி.இந்திரா காந்தியின் தலைமுறையினருக்கு மோகன்தாசு கரம்சிங் காந்தியின் முகம் போர்த்தப்பட்டுள்ளது. இந்திரா காந்தி, இராஜீவ் காந்தி, சோனியா காந்தி, இராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என்றவாறு தொடர்கின்ற காந்தியின் பொய்முகம்.
திருமதி. இந்திரா காந்தியின் மருமகளான திருமதி. சோனியா இராஜீவிற்கும், பேரப்பிள்ளைகளான இராகுல், பிரியங்கா ஆகியோருக்கும் காந்தியின் முகம் ஏன் பொருத்தப்படுகின்றது?
மய்னோ சோனியா (Maino Sonia) 1946, டிசம்பர் திங்கள் 9-இல், இத்தாலியிலுள்ள ஓசாவஞ்ஞோ (Ossanjo-Turin) என்னுமிடத்தில் பிறந்தார். 1968-இல், இராஜீவை திருமணம் செய்து கொண்டதால் மய்னோ சோனியா என்னும் பிரெஞ்சு கத்தோலிக்கப் பெண்ணான இவர் திருமதி. சோனியா மைனோ இராஜீவ் என்றாகிடல் வேண்டும்.
இராஜீவை தகப்பனாகக் கொண்டதால் இராகுல் (Rahul) என்பவர் இராகுல் இராஜீவாகவும், பிரியங்கா (Priyanka) என்பவர் பிரியங்கா இராஜீவ் என்றாகிடல் வேண்டும். இதுதான் இந்தியப்பண்பாட்டின் மரபு. இதுதான் இந்தியர்களின் வாழ்வியல் வரம்புங்கூட.
இவற்றைக்கடந்து, இராஜீவ் ரத்தன் பிரிஜேசு நேரு காந்தி ( Rajiv Rattan Brijesh Nehru Gandhi) எப்படி இராஜீவ் காந்தியானார்? இராஜீவ் ரத்தன் பிரிஜேசு நேரு காந்தி என்பதுதான் இராஜீவின் இயற்கைப்பெயராகும். திருமதி. சோனியா மைனோ இராஜீவ் (Sonia Maino Rajiv) எப்படி சோனியா காந்தியானார்? இராவுல் ரொபேர்த்தோ (Raul Robertto) எப்படி இராகுல் காந்தியானார்? இராகுல் ரொபேர்த்தோ என்பதுதான் இராகுல் காந்தியின் இயற்பெயராகும்? பியாங்கா ரொபேர்த்தோ (Bianca Robertto) எப்படி பிரியங்கா காந்தியானார்? பிரியங்கா ரொபேர்த்தோ என்பதுதான் பிரியங்கா காந்தியின் இயற்பெயராகும்?
திருமதி. சோனியா மைனோ இராஜீவின் அரசியல் தளம் காந்தியின் பொய்முகத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. காந்தியின் ஆளுமைத்தளத்தில் திருமதி. சோனியா மைனோ இராஜீ வின் அரசியல் கட்டமைப்பு, பலம், புகழ், பொருள் என எல்லாமும் உருவாக்கப் பட்டுள்ளது. திருமதி. சோனியா மையோ இராஜீ வின் தனிப்பட்ட குடும்பம் காந்தியின் பொய்முகத்தினைப் போர்த்தி வாழ்வியல் உச்சங்களை அடைந்துள்ளனர். இதனால், இழப்பு இந்திய மக்களுக்குத்தான். இந்திய மக்களின் இழப்பு தொன்மத் தொடர்ச்சியாக நீள்கின்றது. இத்தாலிய மண்ணின் மகளை தம் அன்னையாக ஏற்றுக் கொள்வதற்கு இந்திய மக்கள் கிஞ்சித்தும் வெட்கப்படவில்லை.
இந்நிலையினை உலகெங்கும் வாழ்ந்திடும் தமிழர்கள் மேல் திருப்பினால், வினையும் விளைவும் ஒன்றாகவே இருக்கின்றது. உலகெங்கிலும் வாழ்ந்திடும் தமிழர்கள் இருவேறுபட்ட பொய்முகங்களால் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். தமிழர்களைப் புதைக்கும் பொய்முகங்களாக இருப்பவை திராவிடன், இந்தியன், என்னும் இருபொய்முகங்களாகும். திராவிடன், இந்தியன் என்னும் பொய்முகங்களைப் போர்த்தி, தமிழர்களின் மீது ஆளுமை செலுத்த பிற இனத்தார் முனைந்து வெற்றியின் உச்சத்தினைக் கண்டுள்ளனர்.
திராவிட மனப்பான்மையால் தமிழர்களின் தன்மானமும் வாழ்வியல் கூறுகளும் மலையாளிகள், தெலுங்கர்கள், கன்னடர்கள் ஆகியோரால் பங்கிடப்பட்டுள்ளன. தமிழர்களுக்குத் தந்தையாகக் கன்னடத்து ஈரோட்டு வேங்கட இராமசாமி நாயக்கர் இருக்க வேண்டியுள்ளது. இற்றைநாள்வரை தமிழர்கள் தம்மினத்தாரின் தந்தை என்பவர் ஓதந்தை பெரியார்ஔ என்பவரே என மயங்கி ஏற்றுக்கொண்டு வாழ்கின்றனர். இவரே தமிழர்களுக்கான தன்மானத்தினை அடையாளங்காட்டியவராகக் கருதப்படுகின்றார். திராவிட இனம், திராவிட நிலம் என்னும் பெருவீதியில் தமிழர்களின் எண்ணிக்கையென்பது சிறுபான்மையே. அற்றைநாள் தொடங்கி இற்றைநாள் வரையிலாகத் தமிழர்களின் பெருமைகள், தமிழர்களின் வாழ்வியல் கூறுகள் யாவும் இன்னபிற திராவிட இன நலன்களுக்குள் மூழ்கித் தவிக்கின்றன. தமிழர்களின் தன்மானச் ஓசிண்டுஔ திராவிடக் கைக்குள் அடக்கமாக்கப்பட்டுள்ளது.
இன்று திராவிட மனப்பான்மையின் தொடர்ச்சியாகத் தமிழரல்லாத ஓகலைஞர்ஔ களே, தமிழர்களின் தமிழினத்தலைவர்களாக இருக்கின்றார்கள்.தமிழரல்லாத அரசியல்வாதிகளே தலைவர்களை வழிநடத்தும் கட்சிகளுக்கும் இயக்கங் களுக்கும் தலைமைப் பொறுப்பினை ஏற்றிருக்கின்றனர். தமிழரல்லாதவர்களே தமிழர்களின் பொருளியல் ஆழத்தைப் பங்கிட்டுக் கொண்டுள்ளனர். தமிழரல்லா தவர்களே திரைப்படங்களினூடாகத் தமிழர்களுக்கு வழிகாட்டிடும் பொறுப்பினை ஏற்றுக் கொண்டுள்ளனர்.
தமிழர்கள் எதிர்கொண்டிருக்கும் இன்னுமொரு பொய்முகம் "இந்தியர்
" என்னும் முகமாகும். இந்தியர் என்னும் போர்வைக்குள் பெருவாரியாக நுழைக்கப்பட்டிருப்பவர்கள் தமிழர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள், சீக்கியர்கள், கன்னடர்கள் என்றவாறு இனங்களின் எண்ணிக்கை நீள்கின்றன. தமிழர்களால் இச்சூழலை அறுத்தெறிந்து விடுபட இயலவில்லை. பெருவாரியான தமிழர்கள் விடுபடவும் விரும்பவில்லை. ஒற்றுமை, பெருமனம், விட்டுக்கொடுக்கும் போக்கு என்ற போலி வாழ்வியல் நிலைகளை முன்னிறுத்தி, தமிழர்கள் ஓஇந்தியர்ஔ என்னும் பொய்முகப் போர்வையினைப் போர்த்திக் கொண்டுள்ளனர். நமக்குள் ஏன் பிரிவினை என்பதைத் தமிழர்கள் கூறுவதுபோல் இன்னபிற இந்திய இனங்கள் கூறுவதில்லை. அவர்கள் சுயநலத்தேடலை முன்னிட்டே தங்களை இந்தியர் என விளிக்கின்றனர். அதனைக் கடந்து, அவர்கள் எங்கும் எக்காலத்தும் தங்களை இந்தியரென அடையாளங் காட்டிக்கொள்வதில்லை.
இந்தியப் போர்வையில் அரசியல், பொருளியல், குமுகவியல் என்னும் மூன்று நிலைகளிலும் பெருவாரியாக இருக்கும் தமிழர்களின் நிலைப்பாடு பின் தள்ளப்படுகின்றது. தமிழர்களை வழிநடத்தும் பேராண்மைத் தமிழர்கள் அல்லாதார்களிடமே கொடுக்கப் பட்டுள்ளது. ஆளுமைப்பொறுப்பினை எடுத்துக் கொண்டவர்கள் தமிழ், தமிழர் நலம் காண்பதைத் தவிர்த்து தாம் சார்ந்துள்ள இனத்தவர்களுக்கே முன்னுரிமைக் கொடுக்கின்றனர். தமிழும் தமிழர்களும் மிகத் தெளிவாக ஓரங்கட்டப்படுகின்றார்கள்.
பிற இனத்தானைத் தலைவனாக ஏற்றுக்கொள்ள தமிழனும் கூசுவதில்லை, தமிழனை ஆள்வதற்கு அவனும் தயங்குவதில்லை. இது திராவிட மாயையினால் ஏற்பட்ட இழிவு. இது திராவிட மாயையின் நீள்தொடர்ச்சி. திராவிடத்தொன்ம உணர்வுகளின் தொடர்ச்சி. இவ்வகையான தலைமைப் பொறுப்புகளைப் பெறுவதற்கும் தமிழர்களை ஆள்வதற்கும், இன்னபிற இனத்தவர்களுக்கு தமிழர் முகம் தேவைப்படுகின்றது. அவர்கள் தங்களைத் தமிழரென்றும் தங்களது மூதாதையர்கள் தமிழர் கால்வழியர் என்றும் பறைசாற்றிக் கொள்கின்றனர். அதற்கு ஏதுவாக தங்கள் பெயரினைக்கூட தமிழாக்கிக் கொள்கின்றனர். தமிழ்ப் பொய்முகத்தைப் போர்த்திக் கொண்டவர்களை ஓமெய்த்தமிழர்ஔ என்று நம்பி ஏமாந்து வீழ்கின்றனர், தமிழர் கூட்டத்தினர். தமிழர்களுக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்புகளைப் பொய்முகம் போர்த்தியவர்கள் பிடுங்கிக் கொள்கின்றனர்.
தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் நடேசன் அண்ணாதுரை (சி.என். அண்ணாதுரை-Conjeepuram Nadesan Annathurai " இவரின் கால்வழியினர் பற்றிய செய்தி முறையாகக் கண்டறியப்படவில்லை!) தொடங்கி கலைஞர் கருணாநிதி (தட்சிணாமூர்த்தி) ஊடாக மருதூர் கோபாலன் இராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்.-MGR) இற்றையநாள் செல்வி. ஜெயராம் ஜெயலலிதா (Miss. J.Jayalalitha) வரையிலாக ஆண்டுக் கொண்டிருப்பது எவ்வாறு? இவர்களின் பின்புலம் என்ன? வேற்றினத்தவர்களான இவர்களுக்கு தமிழ்நாட்டினை ஆளும் பொறுப்பு எவ்வாறு வழங்கப்பட்டுள்ளது? தமிழ்ப்பொய் முகம் அவர்களுக்குக் கைகொடுத்தது, இன்னும் கைகொடுக்கின்றது.
இவற்றினைக் கடந்து, அடிப்படை வாழ்வியல் உரிமைக்காகச் செயல்படும் பிற இனத்தாரை தமிழர்கள் தோழமையுணர்வோடு வரவேற்கின்றனர். வணிகம் செய்வதற்கும் வாழ்வினை வளமாக்கிக் கொள்வதற்கும் தமிழர்கள் தம் முதுகினை வளைத்துக் கொடுத்திட தயங்குவதில்லை. அவர்கள் சார்ந்துள்ள துறையில் வளம் பெற ஏதுவான ஒத்துழைப்புகள் நல்கிடவும் முனைகின்றது தமிழர்தம் பேருள்ளம். உலகில் தமிழும் தமிழினமும் தனித்த நிலையில் செயற்படவியலாது என்னும் மெய்ம்மத்தை தமிழர்கள் உணர்கின்றனர். ஆனால், தமிழர்களின் உரிமைகளைப் பறிப்பதற்காகவும் தமிழர்களின் வளர்ச்சியினை ஒடுக்குவதற்காகவும் திட்டமிட்டுப் பொய்முகம் போர்த்திக் கொண்டு செயற்படும் கூட்டத்தாரை என்னவென்று சொல்வது?
இவ்வகையான பொய்முகத்தினை அடையாளங்கண்டு கிழித்தெறிய வேண்டியது தமிழர்களின் மரபார்ந்த கடப்பாடாகும். கணியன் பூங்குன்றனாரின் மரபார்ந்த செங்குருதி இற்றையத் தமிழர் குருதிநாளங்களிலும் விரைந்தோடுகின்றது என்பதனை உலகத்தார் அறிவர்.
ஆக்கம் : அருண்
நன்றி செம்பருத்தி
|
|
|
|