| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 128 online users. » 0 Member(s) | 125 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,327
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,235
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,301
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,649
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,083
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,472
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,512
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,045
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243
|
|
|
| காதல் மயக்கம் ஏன்? |
|
Posted by: SUNDHAL - 10-17-2005, 03:00 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (13)
|
 |
காதல் ஓர் இன்பமான உணர்வு..* காதலின் போது மகிழ்வான உணர்வுகளே தோன்றுகின்றன. காதலுக்காக எந்த வலியையும் காதலர்கள் பொறுத்துக் கொள்கிறhர்கள். இதெல்லாம் ஏன்?
இளமையில் இதெல்லாம் சகஜமப்பா..என்று சொல்லிவிட முடியாது.
இதற்கு மருத்துவ ரீதியான காரணங்களும் உள்ளன. கவனமாகக் கேளுங்கள்.
காதலர்கள் தனிமையில் சந்தித்துக் கொள்ளும் போது, நெஞ்சு படபடப்பு, கைகால்கள் வியர்த்தல், வயிற்றில் பட்டாம் பூச்சி பறப்பது போல, மயிர்க்கூச் செறிவது போல உணர்வுகள், அர்த்தமில்லாத சொற்களைப் பேசிக் கொண்டு,, மொத்தத்தில் ஏதோ நடக்கிறது, இதமாய் இருக்கிறது.. இறக்கை முளைக்கிறது... இதயம் பறக்கிறது என்பீர்கள்.
இப்படி காதல் உணர்வுகள் மூளையில் தொடர்ச்சியான ஒரு சங்கிலி உணர்வு போன்ற ரசாயன மாற்றங்களை உண்டாக்குவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது மனதளவிலும், உடலளவிலும் மாற்றங்களைக் கொண்டு வருகிறது. மூளையின் செய்தி மற்றும் தொடர்பு பரிமாற்ற வேலைகளுக்கு மட்டும் 100 பில்லியன் நியூ ரான்களுக்கு மேல் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றைத் தவிர நியூரோ பெப்டைட்ஸ் என்ற அமிலங்கள் உடல் முழு தும் உள்ளன. இவற்றின் உதவியால் உணர்வுகள் மூளை வரை எடுத்துச் செல்லப்பட்டு, விளைவு களை உண்டாக்க உறுப்புகளுக்கு கடத்தப்படுகின்றன. தற்போது உடலில் அறுபதுக் கும் மேற்பட்ட நியூரோ பெப்டைட்ஸ் அமிலங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
நமக்கு வருத்தமோ, மகிழ்வோ, காதலோ உண்டாகும்போது அந்த உணர்வுகளை இந்த அமிலங்கள் தான் எடுத்துச் செல்கின்றன. பிரான்சிஸ் கிரிக் மற்றும் அவரது சகாக்கள் ஆராய்ச்சி செய்து இந்த கண்டு பிடிப்புக்காக நோபல் பரிசு பெற்றிருக்கிறhர்கள்,
நரம்புச் செல் கூட்டத்தின் தொகுதியில் உண்டாகும் செயல்விளைவுகள்தான்; நமது எண்ணங்களின் தொகுதி என இந்த ஆய்வாளர்கள் கூறுகிறhர்கள்
காதலின்போது பெனில்எதிலமைன் என்ற ரசாயனப் பொருள் மகிழ்ச்சியைத் தூண்டுகிறது. இதுதான் இதயத்தைப் பறக்க வைக்கிறது. அந்த நேரத்தில் படபடப்பு ஏற்படுகிறதே ஏன் தெரியுமா?
அட்ரீனலின் சுரப்பி அதிகமாகச் சுரந்து விடுகிறது. இதனால் படபடக்க ஆரம்பித்து விடுகிறது.
காதலிக்கும்போது எண் டார்பின் என்ற ரசாயனப் பொருள் அதிகமாகச் சுரப்பதால் வலியை மறக்கச் செய்கிறது. இதனால் தான் காதலின்போது விதவிதமான உணர்வுகள் தோன்றுகின்றன என்கிறhர்கள். உங்களுக்கு எப்படி என்பதை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
Thanks inakaran............
|
|
|
| இலங்கையின் சட்டங்களின்படி கருணா செயற்பாடு சட்டவிரோதமானது |
|
Posted by: வினித் - 10-17-2005, 12:34 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
<span style='font-size:25pt;line-height:100%'><b>இலங்கையின் சாதாரண சட்டங்களின்படி கருணா குழுவின் செயற்பாடு சட்டவிரோதமானது</b> </span>
<b>கண்காணிப்புக் குழுவின் தலைவர் கூறுகிறார்
இலங்கையின் சாதாரண சட்டங்களின் படி கருணா குழுவின் செயற்பாடுகள் சட்ட விரோதமானவை என யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவின் தலைவர் ஹக்ரப் ஹொக்லண்ட் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
ஆயுதக் குழுவொன்று அப்பகுதிகளில் இயங்குவது சட்ட விரோதமானது. இது குறித்து எவ்வித சந்தேகமுமில்லை.
இக் குழுக்களே முழு நிலைவரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.
இக் குழுக்களில் உருவாக்கப்பட்டுள்ள பாதுகாப்பற்ற சூழ்நிலைகளிலேயே விடுதலைப் புலிகள் கிழக்கில் உள்ளூர் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை காணப்படுகிறது.
துரதிர்ஷ்டவசமாக இரு தரப்பினதும் உள்ளூர் தளபதிகள் மத்தியிலான நேரடி சந்திப்புகள் கூட இடம்பெறுவதில்லை. நாங்கள் இதற்கான முயற்சிகளை மீண்டும் மீண்டும் மேற்கொண்டுள்ளோம்.
உயர் மட்ட சந்திப்புகள் இடை நிறுத்தப்பட்ட பின்னரும் கூட உள்ளூர் தளபதிகள் நடைமுறை பிரச்சினைகள் குறித்து நேரடியாக சந்தித்து ஆராய்ந்து வந்தனர்.
கிழக்கிலேயே இவ்வாறான சந்திப்புகள் அதிகம் இடம்பெற்று வந்தன. இவ்வாறான சந்திப்பு இறுதியாக இரண்டு மாதத்திற்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
தற்போது சகல தொடர்பாடல்களும் யுத்த நிறுத்த கண்காணிப்பு குழு நோர்வே பிரதிநிதிகள் ஊடாக இடம்பெறுகின்றன.
யுத்த நிறுத்த உடன்படிக்கையை பாதிக்கும் விடயங்களுக்கு தீர்வு காண்பதற்கு உள்ளூர் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பது மிக முக்கியம்.
கிழக்கு மாகாணத்தில் காணப்படும் ஆயுதக் குழுக்களால் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவினருக்கு அச்சுறுத்தல் காணப்படுகின்றது. இதுவே உள்ளூர் பேச்சுவார்த்தைகளில் விடுதலைப் புலிகள் கலந்து கொள்வதை தடுக்கின்றது.
வட, கிழக்கில் இடம்பெறும் படுகொலைகள், முழு சமாதான முயற்சியையும் பலவீனப்படுத்துவதுடன் சகலருக்கும் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்குகின்றன.
இவ்வாறான கொலைகள் தொடர்வது விரக்தியளிக்கின்றது. இக் கொலைகள் அச்சத்தையும் விரக்தியையும் உருவாக்கியுள்ளது. இவை இடம்பெற கூடாது.
பதற்ற நிலை அதிகரித்துள்ள போதிலும் யுத்தத்திற்கான சாத்தியக் கூறுகள் இல்லை.
அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் தாம் யுத்த நிறுத்த உடன்படிக்கையில் உறுதியாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இரண்டு தரப்பும் யுத்தத்திற்காக தம்மை தயார்ப்படுத்தி வருகின்ற போதிலும் இரு தரப்பும் மோதலை முதலில் ஆரம்பிக்கப் போவதில்லை. யுத்தம் உடனடியாக சாத்தியமில்லை. இருதரப்பிற்கும் இதனை தங்களால் தாங்கிக் கொள்ள முடியாது என்பது தெரியும்.
யுத்த நிறுத்த உடன்படிக்கையில் இரு தரப்பும் மீண்டும் தம்மை உடன்பாட்டிற்கு அர்ப்பணிப்பதற்கான ஏற்பாடுகள் உள்ளன.
உள்ளூர் மட்டத்தில் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வது என்பது இதன் ஒரு பகுதி.
பொது மக்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டியதுடன், தற்போதைய சூழ்நிலையை மாற்றியமைப்பதற்காக இருதரப்பும் நம்பிக்கையை கட்டியெழுப்பும் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டுமென்றார். </b>
http://www.thinakural.com/New%20web%20site...r/17/news-2.htm
|
|
|
| 4 ஆம் கட்ட யுதத்திற்கான் இரகசிய இராணுவ கட்டுமானங்கள் |
|
Posted by: narathar - 10-17-2005, 12:09 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
அம்பலமாகும் இலங்கை அரசின் 4 ஆம் கட்ட யுதத்திற்கான் இரகசிய இராணுவப் படை கட்டுமானங்கள் .
இரகசியமாக இலங்கை அரசாங்கம் யுதத்திற்குத் தாயாராவதை இந்த இணயத்தில் உள்ள தகவல்கள் அம்பலப் படுத்துகின்றன.சர்வதேச ரீதியாக நடக்கும் இராணுவ விடயங்களை இந்த கருத்துத் தளம் தாங்கி வருகிறது.
http://www.defencetalk.com/forums/showthre...lankan+airforce
May 1, 2005
Sri Lanka is to buy several powerful warships from Britain, Serbia and Uruguay, the Sunday Times reported this week. From Britain, the SLN is keen to buy warships to support major amphibious assaults on coastal targets. The SLN is also to buy two nearly 100-metre long Russian built missile frigates from Serbia and five fast gunboats from Uruguay. “What is known quite clearly is that millions of dollars are to be spent for military procurements,” the Sunday Times’ defence correspondent, Iqbal Athas, writes. “Without the glare of publicity, behind-the-scene manoeuvres to secure some big deals are under way.”
“Besides the Navy, the Ministry of Defence has floated a tender from among local manufacturers to procure an estimated Rs 1.2 billion worth of Body Armour, Flack Jacket and Ballistic Helmets… for use by the three armed forces,” the Sunday Times reported.
The Sunday Times learnt the SLN has shown interest in procuring Logistic Landing Ships (LSL) from Britiain’s Royal Auxiliary Fleet, a civilian manned flotilla owned by the British Ministry of Defence. The Auxiliary Fleet supplies the Royal Navy at sea, with food, fuel, ammunition and spares to conduct operations away from their home ports.
“The [SLN] has shown interest in procuring at least one LSL, Sir Gallahad,” the Sunday Times said.
The SLN has also shown interest in an Off Shore Patrol Vessel from Britain, said to cost a million Sterling Pounds or over Rs 180 million.
“The Navy is also keen to purchase two nearly 100-metre long Russian built missile frigates from Serbia,” the Sunday Times said. These are fitted with Surface-to-Surface and Surface-to-Air missiles and Anti-submarine rockets, it added.
Each LSL is more than one and half the size of a football field in length. The Sir Galahad is capable of carrying 16 battle tanks or 33 eight-ton vehicles and 62 Land Rovers on one deck. It can carry 33 eight-ton vehicles and 74 Land Rovers and 40 twenty-foot containers on another deck. The warship also has provision to be able to carry another carry 27 eight ton vehicles, 59 Land Rovers and 30 twenty-foot containers.
“The principal role of the Landing Ship Logistic is to support amphibious operations by landing troops, tanks, vehicles and other heavy equipment in port or to any suitable shore,” the Sunday Times reported. “To accomplish this task the ships can discharge their cargo by a variety of methods including Helicopter, Mexiflote Pontoons and Landing Craft. It can also discharge vehicles and personnel directly to a suitable beach through the bow doors besides carrying Main Battle Tanks, Land Rovers and containers on board. They are also equipped to conduct helicopter operations.”
Chief of Defence Staff and Commander of the Navy, Vice Admiral Daya Sandagiri met with Lt. Gen. Shantha Kottegoda (Army), Air Marshal Donald Perera (Air Force) and senior officers of the three services met recently to formulate a formulate a Five Year Procurement Plan, the paper said.
During the Sri Lanka New Year season Vice Admiral Sandagiri led a high-powered Navy delegation to Britain to inspect surplus assets of the Royal Fleet Auxiliary (RFA).
Weeks earlier, an RFA team had arrived in Colombo to make a presentation and to offer Sri Lanka three LSLs which are for sale.
Late last year, a four man SLN team led by Rear Admiral Sarath Weerasekera visited the Naval Overhaul Depot "Sara Kovacevic" in Tivat, Serbia and had detailed discussions on the missile-armed frigates. The Navy is keen to puechase the vessels, though it would have to incur large amounts of money to maintain them, the Sunday Times said. The same SLN team that visited Serbia also went to Montevideo, the capital of Uruguay, to discuss the purchase of three Vigilante Class Fast Patrol Boats constructed in 1980 in France and commissioned in the Uruguay Navy in 1981.
|
|
|
| ராஜீவ் கொலையாளிகளுக்கு மன்னிப்பு அளிக்கலாம்;அப்துல்கலாம் |
|
Posted by: வினித் - 10-17-2005, 10:42 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (11)
|
 |
ராஜீவ் கொலையாளிகளுக்கு மன்னிப்பு அளிக்கலாம்: ஜனாதிபதி அப்துல்கலாம் யோசனை
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ந்தேதி சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரசார கூட்டத்துக்கு வந்தபோது மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார். ராஜீவ் கொலைக்கு விடுதலைப்புலிகளே காரணம் என்று சி.பி.ஐ. விசாரணையில் தெரிய வந்தது. பெண் விடுதலைப்புலி தணு வெடிகுண்டுடன் வந்து இந்த கொலையில் ஈடுபட்டாள்.
தணுவுடன் வந்த சிவராசன், சுபா ஆகியோர் பெங்களூரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ராஜீவ் கொலை வழக்கில் விடுதலைப்புலி முருகன் அவரது மனைவி நளினி, ஜி.பேரறிவாளன், சின்னசாந்தன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ததில் நளினியின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், பேரறிவாளன், சின்னசாந்தன் கடந்த 14 வருடங்களாக தண்டனை நிறைவேற்றப்படாமல் ஜெயிலில் இருந்து வருகிறார்கள். 3 பேரும் தங்களுக்கு மன்னிப்பு வழங்க கோரி ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பி உள்ளனர்.
இவர்களுடன் நாடு முழுவதும் மொத்தம் 50 தூக்கு தண்டனை கைதிகள் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பியுள்ளனர்.
1993-ம் ஆண்டு 21 போலீசாரை கொன்ற வழக்கில் தொடர்புடைய வீரப்பன் கூட்டாளிகள் ஞானபிரகாசம், மாதையா, பிலவேந்திரன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் மனீந்தர்சிங் பிட்டா மீது வெடிகுண்டு வீசி தாக்கிய காலிஸ்தான் விடுதலை முன்னணியைச் சேர்ந்த தேவிந்தர்சிங் புல்லார் ஆகியோரும் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி கருணை மனு அளித்துள்ளவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.
கருணை மனுக்களை பரிசீலனை செய்த ஜனாதிபதி அப்துல்கலாம் இது தொடர்பாக பல்வேறு யோசனைகளை மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளார்.
அதில் மரண தண்டனையில் இருந்து ராஜீவ் கொலையாளிகள் முருகன், பேரறிவாளன், சின்னசாந்தன் ஆகியோருக்கு மன்னிப்பு அளிக்கலாம் என்று மத்திய அரசுக்கு யோசனை தெரிவித்துள்ளார். இது போல் மற்ற மரண தண்டனை கைதிகளுக்கும் மன்னிப்பு வழங்குவது குறித்து பரிசீலனை செய்யுமாறும் கூறியுள்ளார்.
மரண தண்டனை கைதிகள் அனுப்பிய கருணை மனுக்கள் மத்திய உள்துறை அமைச்சகம் மூலம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 8 ஆண்டுகளுக்கும் மேலாக அவை ஜனாதிபதியின் பரிசீலனையில் இருந்து வந்தது.
இந்த மனுக்கள் குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு கடந்த மாதம் உள்துறை அமைச்சகத்துக்கு ஜனாதிபதி அப்துல்கலாம் பரிந்துரை செய்து இருந்தார். ஆனால் அனைத்து மனுக்கள் மீதும் பரிசீலனை முடிவுற்ற நிலையில் அரசின் முடிவில் மாற்றம் இல்லை என்றும், இந்த மனுக்கள் ஜனாதிபதியின் பொது மன்னிப்புக்கு தகுதியற்றவையாக உள்ளன என்றும் மத்திய அரசு தெரிவித்து விட்டது.
இதனால் ஜனாதிபதி அப்துல்கலாம் உள்துறை மந்திரி சிவராஜ்பட்டீலுக்கு கடிதம் எழுதினார். அதில், "கருணை மனுக்கள் அனைத்தும் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளன. மரண தண்டனை கைதிகளை கருணை அடிப்படையில் பரிசீலனை செய்து அவர்கள் வாழ்வதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். அவர்களுக்கு கவுன்சிலிங் நடத்தி ஆன்மீக வழிகாட்டு நெறிகளை போதிக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டு இருந்தார்.
மேலும், "மரண தண்டனை கைதிகளில் ஒருவருக்கு 75 வயதாகி விட்டது. அவர் விடுதலை செய்யப்பட்டால் எந்தவிதமான குற்றச் செயல்களிலும் ஈடுபடுவதற்கான வாய்ப்பு இல்லை. எனவே இது போன்ற கைதிகளை சுமையாக கருதாமல் மனித சொத்தாக பாவித்து நல்வழிப்படுத்த அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும். இவர்கள் வாழ்வின் மீதம் உள்ள நாட்களை தங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும்'' என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டு இருந்தார்.
கருணை மனுவை உள்துறை அமைச்சகம் தகுதியவற்றவை என்று கூறி ஏற்க மறுத்து விட்ட நிலையில் ஜனாதிபதி கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய அரசு இதை ஏற்று கருணை மனுவை பரிசீலிப்பது குறித்து ஆலோசித்து வருகிறது. இதில் உள்துறை அமைச்சகம் எடுக்கும் முடிவைப் பொறுத்தே தூக்கு கைதிகள் தண்டனையில் இருந்து தப்பு வார்களா? என்பது தெரிய வரும்.
thinakural.com
http://www.lankasrinews.com/sp.php
|
|
|
| அமெரிக்க (அரக்கனின்) மறுபக்கம் |
|
Posted by: adsharan - 10-17-2005, 09:33 AM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (4)
|
 |
கம்பனி நாயகமே அமெரிக்க ஜனநாயகம்
"என்னைப் போன்றவர்கள் அமெரிக்காவின் சார்பாக உலகெங்கும் பல ஆண்டுகள் நச்சுக் காற்றை விதைத்தோம். அவை இன்று ஒன்றுதிரண்டு புயலாய் வீசுகின்றன.." என்கிறார் ஜான் பெர்கின்ஸ். செப்டெம்பர் 11 நிகழ்வானது, உலக வர்த்தக கட்டிடங்களை மட்டுமல்ல; ஜான் பெர்கின்ஸ் போன்றோரின் துரோகங்களையும் குத்திக் கிழித்துவிட்டது. பலரது கோமா உறக்கங்களையும் தகர்த்துத் தரைமட்டமாக்கிவிட்டது.
இந்த ஜான் பெர்கின்ஸ் அமெரிக்க அரசால் ஊட்டி வளர்க்கப்பட்ட பொருளாதார கூலிப் படையாள். அதாவது, ஓர் அடியாள். ஆங்கிலத்தில் `எகனொமிக் ஹிட்மேன்', இ.எச்.எம்.' (உஏ–) என்கிறார்கள். இப்போது ஜான் பெர்கின்ஸ் மாறிய இதயம், நொறுங்கிய உலக வர்த்தக கழக இடிபாடுகளில் எத்தனையோ பேர் அழிந்ததைக் கண்ணால் கண்ட பெர்கின்ஸ், இப்போது உயிரோடிருக்கும் 22 வயதான தன் மகளுக்கு ஓர் எதிர்காலம் இருக்குமா, அதைத் தன்னால் உருவாக்க முடியுமா, அப்படி ஓர் எதிர்காலத்தை முழுதாக உருவாக்கிக் கொடுப்பதற்குப் பதிலாக அதில் ஒரு பகுதி அழிவதற்குத் தானே காரணமாக இருந்து விட்டோமே என்று சுய விசாரணைக் கேள்விகளால் நிலை குலைந்து போனார். இது நாள் வரை அமெரிக்காவின் தேசங் கடந்த நிறுவனங்களுக்காக அடியாள் வேலை பார்த்தவர். அதற்கெல்லாம் கழுவாயாக திரைமறைவில் நடந்த பல அரசியல் அந்தரங்கக் கிரிமினல் குற்றங்களைத் தொகுத்து ஒரு நூலாக வெளியிட்டார். இதை எழுதி முடிப்பதற்குள் நான்கு முறை அவர் மிரட்டப்பட்டார். இது எதிர்பார்க்கக் கூடியது தான்.
2005 இன் தொடக்கத்தில் கிட்டத்தட்ட 10 வாரங்கள் - 70 நாட்களில் பல இலட்சம் பிரதிகள் விற்றுத் தீர்ந்த அந்த நூலில் (பொருளாதார அடியாள் ஒருவரின் வாக்கு மூலங்கள்) அப்படி என்னதான் எழுதியிருந்தார் ஜான் பெர்கின்ஸ்? தனது வாழ்க்கையின் இருண்ட பக்கங்களைத் திறந்து காட்டுவதற்கும் ஒரு தார்மீகத் துணிச்சல் வேண்டும். அப்படிப்பட்ட ஒப்புதல் வாக்கு மூலங்கள் நிறைந்ததே அந்த நூல்.
ஜான் பெர்கின்ஸ் வர்த்தகத் துறை சம்பந்தமாக பட்டப் படிப்புக்கும் கீழ்நிலை வரைதான் படித்தார். ஏழ்மைக் குடும்பம். முதல் மனைவியின் மாமா, தேசியப் பாதுகாப்பு முகாமைக்கு (இந்த ஏஜென்சி தான் என்.எஸ்.ஏ. எனப்படும் அமெரிக்க உளவு நிறுவனம்) இவரைச் சிபாரிசு செய்தார்.
இந்த என்.எஸ்.ஏ. 1952 இல் அதிபர் ட்ரூமனால் நிறுவப்பட்டது. இங்கிலாந்து, ஜெர்மனி என்று இரு கிளைகளோடு இயங்கும் உளவு நிறுவனம் இது. ஜேம்ஸ் பாம்ஃபோர்டு என்ற எழுத்தாளரின் வர்ணனையில் என்.எஸ்.ஏ. ஒரு புதிரான அரண்மனை; 1970 கணக்குப் படி சுமார் 70,000 அடியாட்கள் வேலை செய்த மர்ம மாளிகை அதன் தலைவர்கள் சங்கேத (இரகசிய) மொழியில் வல்லவர்கள். பிரசித்தி பெற்ற அமெரிக்க சி.ஐ.ஏ. உளவு நிறுவனத்தின் சகோதரன் தான் என்.எஸ்.ஏ.
இதற்கு ஆட்களைத் தேர்ந்தெடுப்பதே விசித்திரமான சடங்கு என்பார்கள். நன்கு படித்த பார்வைக்கு அழகான மிகக் குறுகிய காலத்தில் சம்பாதித்துப் பெரிய மனிதராக ஆக வேண்டுமென்ற பேராசையும் வெறியும் கொண்ட சிறு நகர இளைஞர் இளைஞிகளை இந்த அமைப்பு `கொக்கி' போட்டு இழுக்கும். `அதிகாரம்' செக்ஸ் `பணம்' மூன்றும் கொடுத்துக் குளிப்பாட்டுவார்கள். இதெல்லாம் சரிப்படாது, ஆளை விடுங்கப்பா" என்று யாராவது `ஜகா' வாங்கினால் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டப்படுவார்கள். தேர்ந்தெடுக்கும் போதே அவர்களின் மனச்சாட்சிகளைக் கொன்று விட்டுத்தான் களத்தில் இறங்குவார்கள். பெர்கின்ஸும் இப்படித்தான். பலிக்கடா போலத் தள்ளப்பட்டார்.
அவர் வேலையை இப்படிச் சுருக்கமாகச் சொல்லலாம். ஏழை நாடுகளுக்குப் பறந்து செல்ல வேண்டும். அங்கே எல்லாவித உள்கட்டுமான வேலைகள் செய்வதற்கும், உலக வங்கி போன்ற நிறுவனங்கள் எந்தெந்த நாடுகளுக்குக் கடன் கொடுக்கலாம் என்றும் பரிந்துரைக்க வேண்டும். நினைத்த நேரத்தில் அதிபர்கள் பிரதமர்கள், மந்திரிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், எல்லாத் துறை அதிகாரிகள், தூதரகங்கள், கலாசார மையங்களிடம் போகலாம், வரலாம், பேசலாம், விருந்துகள், பேச்சுவார்த்தைகள் நடத்தலாம்.
எத்தனையோ நாடுகளின் தலைவர்களை அணுகி, புகழ்ந்து பேசி ஏய்த்து ஆசைகாட்டி மிரட்டி வசப்படுத்தியிருக்கிறார் இந்த அடியாள் பெர்கின்ஸ். அவரது இலக்கு பல ஆயிரம் கோடி கடன் தரக்கூடிய ஏகாதிபத்திய நாடுகளின் திட்டங்களைக் கொண்டு ஏழை நாடுகளைச் சிக்க வைக்க வேண்டும். இதற்கு இலஞ்சமாக பல ஆட்களுக்குப் பலவிதமான பரிசுகள்-சூட்கேஸிலிருந்து தொடங்கி சென்ட் குப்பிவரை தள்ளிவிட வேண்டும். இதற்கு வழங்கப்படும் அசிங்கமான பெயர் இலஞ்சம். கௌரவமான பெயர் பரிசு, பரஸ்பரம் நம்பிக்கையைப் பெற உதவும் `உறவு'.
கடனைத் தருவது உலக வங்கி, ஐ.எம்.எஃப் மற்றும் அமெரிக்க நிதி நிறுவனம் போன்றவை. அந்தக் கடனை வைத்து அந்த நாடுகள் திட்டத்தை நிறைவேற்ற அமெரிக்க கம்பனிகளோடு ஒப்பந்தம் போட வேண்டும். பெர்கின்ஸ் செய்ய வேண்டிய முக்கிய வேலை இது தான். அமெரிக்க கம்பனிகள் ஆதாயம் அடைய வேண்டும். சிந்திக்காமல், சிதறாமல் - ஒப்பந்தங்களை அடைவதே அவர் இலக்கு.
உளவு பார்ப்பது, உளவு நிறுவனங்களில் வேலை பார்ப்பது புதியதல்லவே, பணம் - வியாபாரம் தோன்றிய நாள் முதல் நடந்து வருவது தானே என்று உங்களுக்குச் சந்தேகம் எழலாம். ஆனால், அடியாள் (ஹிட்மேன்) வேலை, முன்பெல்லாம் பல துறைகளில் நடந்த பல வேலைகளையும் ஒரே ஆளில் இணைப்பது. பன்னாட்டு மூலதனம் ஒரு நாட்டுக்குள் இறங்குவதற்கான எல்லா உத்தரவாதமான தயாரிப்புகளையும் செய்து முடிக்கக் கூடிய உயிருள்ள மனித கம்பியூட்டர். இந்த முள்ளு பொறுக்கிச் சாமி முன்னே போய் எல்லாத் தடைகள், தடங்கல்களையும் நீக்கிச் சுத்தப்படுத்தி விட்டால் அமெரிக்க கம்பனிகளின் மூலதனம் நேராக உள்ளே இறங்கி, ஊர்வலம் வரும்.
முன்பு இந்த வேலைகளை நேரடியாக அமெரிக்க அரசு ஊழியர்களே செய்தார்கள். போய் வேலை செய்கின்ற நாடுகளில் பிடிபட்டு விட்டால் அமெரிக்க அரசின் பெயர் கெட்டுப் போய்விடுமல்லவா, அதனால் தான், ஏதோ ஒரு தனியார் கம்பனியின் ஊழியனாக இருந்து விட்டால், அது அப்படியே போய் விடும். பிடிபட்டுத் தண்டனை அடைந்தாலும் எல்லாவற்றையும் ஏற்ற விதத்தில் கவனித்துச் சரி செய்து விடுவார்கள். இதனால், மற்ற எத்தனையோ உளவாளிகளை விட, ஹிட்மேன்களுக்கு - இவ்வகை அடியாட்களுக்கு மவுசு கூடுதல்.
உலகில் உள்ள எல்லா நாடுகளுமே இந்த அடியாட்களுக்குப் பயந்து நடுங்க வேண்டும் என்றில்லை. அந்தக் கம்பனிகளுக்குப் பணிய மறுக்கலாம். மறுத்திருக்கிறார்கள். அதற்கடுத்து, `வேட்டை நாய்கள்' அமெரிக்காவிலிருந்து வரும். அரசியல் கொலைகள் நடக்கும்; தலைவர்கள் சிக்கவில்லையானால், அவரோடு உடன் இருப்பவர்கள், கட்சிக்காரர்களுக்கும் வலைவிரிக்கப்பட்டு ஆட்சி மாற்றம் கூட நடக்கும்; தேவையானால் இரண்டும் சேர்த்தே கூட நடத்துவார்கள்.
ஈரானின் மொஸாதேக் அரசு கவிழ்க்கப்பட்டு, ஷா ஆட்சி வந்தது எதனால்? அமெரிக்காவின் ஸ்டான்டர்டு ஒயில் மற்றும் கல்ஃப் ஒயில் என்ற கம்பனிகளின் நலன்களை மொஸாதேக் காப்பாற்றவில்லை.
கௌதமாலாவில் ஆயுதப்படை எடுப்பு அத்துமீறி அமெரிக்கா நுழைந்தது ஏன்? யுனைடெட் ஃப்ரூட் பழக் கம்பனியின் நலன் காப்பாற்றப்படவில்லை. அந்தக் கம்பனி அமெரிக்காவுடையது.
கியூபாவில் அமெரிக்கத் தொழிற் கழகங்கள் பலவற்றின் சொத்துகளைத் தேசியமயமாக்க ஃபிடல் காஸ்ட்ரோ முயன்றதற்காக, அவரது ஆட்சியைக் கவிழ்க்க அதிரடி முயற்சிகள் நடந்தன..
சிலியில் அலெண்டே அரசை அசைத்துக் கவிழ்த்தது அமெரிக்க ஐ.டி.டி. கம்பனி; உதவி செய்தது அமெரிக்க உளவு நிறுவனம். அலெண்டே கொல்லப்பட்டார்.
பெர்கின்ஸோடு நன்கு பழகி அறிமுகமான பனாமா அதிபர் ஓமார் டோர்ரி ஜோஸும் ஈக்குவடோரின் அதிபர் ஜெய்மே ரோல்டோஸும் ஒரே மாதிரியான பின்னணியில் மிகக் கொடூரமான விமான விபத்துகளில், 1981 மே - ஜூலை என்று இரு மாத இடைவெளிகளில் கொல்லப்பட்டார்கள்.
மேலே சொன்ன எல்லாச் சதிகளிலும் அடியாள்கள் தான் முன் தயாரிப்பு வேலை செய்தார்கள்.
இந்தியாவில் என்ன நடந்தது என்று உங்களால் ஊகிக்க முடியும் இரகசியமாக ஒரு விஷவாயு தயாரிப்பு ஆலையாக `போபால் யூனியன் கார்பைடு' சட்டப்புறம்பாக தொடங்க, இயங்க, கசிவு விபத்துக்குப் பிறகு அதன் முதலாளி ஆண்டர்சன் அமெரிக்காவுக்குத் தப்பிக்க - உள்வேலை செய்தவர்கள் அடியாட்கள்தான். அமெரிக்க `என்ரான்' மகாரஷ்டிராவில் நுழைந்து கொள்ளையடிக்க ஏற்பாடு செய்ததும் அவர்களே.
பெர்கின்ஸ், சவுதியில் தான் செய்த வேலைகளைப் பச்சையாகவே வைத்திருக்கிறார் தன் நூலில். 1970 ஆம் ஆண்டுகளில் எண்ணெய் விலையேற்றம் உலகை உலுக்கிய போது, அமெரிக்காவின் பார்வை சவுதி மீது விழுந்தது. பல இலட்சம் கோடி பெட்ரோ டொலர் அமெரிக்காவைச் சேருவதற்கு சவுதி சரிக்கப்பட்டது. வெளியே தெரிய வராத `சாணக்கியத் தந்திரம்' பெர்கின்ஸ் போன்ற அடியாட்களுடையது தான். அமெரிக்க அரசும், உயர்மட்ட அதிகாரிகளும் சம்பந்தப்படாமல் அங்கு ஓரணுவும் அசையவில்லை என்பதை அவர் அம்பலப்படுத்துகிறார்.
இவை சட்டப்புறம்பான கிரிமினல் குற்றங்களல்லவா? ஆமாம் ஆனால், சாதாரணமானவை அல்ல. `மேட்டுக் குடி வகைக் குற்றங்கள்' பொதுவாக இவை ரத்தமின்றி நடத்தப்படும் பொருளாதார யுத்தங்கள். தேவையானால், கொஞ்சமாக இரத்தமும் சேர்ப்பார்களாம்.
***
உலகம் முழுவதும் ஜனநாயகத்தைப் பரப்புகின்ற `புனிதக் கடமை' தன் தோளில் சுமத்தப்பட்டுள்ளதாக அடிக்கடி பிதற்றும் அமெரிக்க அதிபர்களை எள்ளி நகையாடும் பெர்கின்ஸ், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு சீரழிந்த உலகப் பொருளாதார நிலைமையிலிருந்து தொடங்கி, ஐ.எம்.எஃப்., உலக வங்கி போன்ற கடன் நிறுவனங்கள் உருவாகியதிலிருந்து அவை முழுக்க முழுக்க அமெரிக்க கைகளில் அதிகார சக்தியாக உருவெடுத்தது வரை, அமெரிக்காவின் ஈராக் - ஆப்கான் போர்கள் வரை நார் நாராய்க் கிழித்தெறிகிறார். "நாடுகளின் அரசுகள் - வங்கிகள் - பன்னாட்டுக் கம்பனிகள்" ஆகிய மூன்றின் கூட்டாக உருவெடுத்துள்ள கார்ப்பொரேட்டோக்ரசி (கார்ப்பொரேட் என்றால் மிகப் பெரும் வர்த்தக இணைக்களம் என்று பொருள்) அதாவது, "கம்பனி நாயகம்" தான் உலகில் முதல் எதிரி என்கிறார் ஜான் பெர்கின்ஸ். அரசியல் ரீதியில் ஏகாதிபத்தியத்தின் மறுகாலனியாக்கம் என்பது இதுதான். அமெரிக்கா நல்ல அரசு அல்ல. உலகில் பேரரசாகத் துடிக்கின்ற சாத்தானின் பேரரசு என்கிறார் அவர். பத்து ஆண்டுகள் ஒரு பொருளாதார அடியாளாக வேலை பார்த்த பெர்கின்ஸ் தன்முகத்தின் மூலமாக அமெரிக்க மக்களின் முகங்களையும் பளிச்சென்று காட்டுகிறார். "இனிமேலும் கார்பொரேட் நாயகத்தை உலக பேரரசை விரிவாக்குவதற்கு வேலை செய்யாதீர்கள். உங்கள் முகம் அதுவல்ல. ரீ.வி. பார்ப்பதைவிட்டு வெளியே வாருங்கள். நமக்குள் பேசத் தொடங்குவோம். கம்பனி நாயகத்துக்கு எடுத்துக்காட்டு ரீ.வி.யேதான். 1980 களில் 50 கழகங்கள் ரீ.வி.யில் ஆதிக்கம்; இப்போது செய்தி ஊடகச்சந்தையில் ஒன்றையொன்று கடித்து தின்று ஆறேயாறு பகாசுர நிறுவனங்களாகிவிட்டன. உலக பேரரசாக அமெரிக்கா பிரமாண்டமாக வளர்கிறது. இது ஒரு சதவீத அமெரிக்கருக்கே சொந்தம்; உலகின் ஏழை நாடுகளிலோ, ஒவ்வொரு நாளும் 50,000 மக்கள் பசியால், வறுமைத் துன்பத்தால், நோயால் சாகிறார்கள். பேரரசுகள் நிலைக்காது. அப்படி ஒரு வரலாறும் கிடையாது. ஆனால், ஒன்று போனால் மிக மோசமான மற்றொன்று வரக் கூடும். இப்போதைக்கு நமக்குள்ள ஒரு நம்பிக்கை உலகெங்குமுள்ள ஏழை மக்கள். எந்த உலகமயம் பிரச்சினைகளை உருவாக்கியுள்ளதோ, அதுவே உலக மக்களை இணைத்துவிட்டது.
சாத்தானின் பேரரசு எங்கேயிருந்து இத்தனை கொடுங்கோன்மையைக் கற்றது? ஹிட்லரிடமிருந்து என்று சொல்கிறார்கள். ஆனால், ஹிட்லரைக் கேட்ட போது, சொன்னானாம். செவ்விந்தியர்களை அமெரிக்கா அழித்ததிலிருந்துதான் நான் கற்றுக் கொண்டேன் என்று. இது வொரு புறமிருக்கட்டும், மக்களாகிய நாம் தான், அமெரிக்கப் பேரரசின் விபரீதக் கனவு பற்றி ஆராய்ந்து அந்தச் சாத்தானின் பேரரசை வெறுத்து மாற வேண்டும். நாம் மாறினால் உலகை மாற்றலாம் என்கிறார் பெர்கின்ஸ்.
பெர்கின்ஸின் மனச்சாட்சி நம்மையும் உலுக்க வேண்டும். உலகப் பேரரசுக் கனவு காணும் கொலைகார அமெரிக்காவின் பிரம்மாண்டமான தேர்ச் சக்கரத்தில் இந்திய மக்களைப் பிணைத்து விட இந்திய ஆட்சியாளர்கள் துடிக்கிறார்கள். பெர்கின்ஸின் அனுபவத்தையும் சேர்த்துக் கொண்டு சாத்தானின் பேரரசுக் கனவுகளை நொறுக்குவதற்காக, நமது மனச்சாட்சிகளை உலுக்கிக் கொள்வோம்!
நன்றி தினக்குரல்
|
|
|
| 'முதலாம் விடிவெள்ளி' |
|
Posted by: கரிகாலன் - 10-17-2005, 01:57 AM - Forum: தமிழ் /தமிழர்
- Replies (14)
|
 |
<i>காட்சி - ஒன்று</i>
<b>இடம் :</b> தமிழீழத்துக் கடற்கரையோரம் ஒரு குடிசை
<b>பாத்திரங்கள் :</b> சிற்பி, ஒரு பெரியவர்
<b>நேரம் :</b> மதியம்
(குடிசைக்குள் "டக் டக்" என்ற ஒலி எழும்பிக்கொண்டிருக்கிறது. தூரத்தே கடலலைகளின் ஓயாத இரைச்சல் ஒலித்துக்கொண்டிருக்கிறது...
குடிசையை நோக்கி அந்தப் பெரியவர் வந்து கொண்டிருக்கிறார்)
<b>பெரியவர்:</b> அதோ! ஒரு குடிசை தெரிகிறதே! அங்கே போய் யாராவது இருந்தால் உதவி கேட்போம்! ('டக் டக்' - ஒலி ஓயவில்லை)
குடிசைக்குள் யாரய்யா? (பெரியவருக்கு கீழ்மூச்சு - மேல் மூச்சு வாங்குகிறது)
<b>சிற்பி :</b> (குடிசைக்கு வெளியே ஓடி வந்து) வாருங்களய்யா! வாருங்கள்! இப்படி உடம்பெல்லாம் நனைந்து, மூச்சு வாங்க வருகின்றீரே! நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்? என்ன நடந்தது?
<b>பெரியவர்:</b> சொல்கிறேன்! ஐயா! (தடுமாறுகிறார்)
<b>சிற்பி :</b> ஐயா! இதோ இந்தக் கல்லின் மீது அமருங்கள்! சற்று ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள் பிறகு பேசலாம்!
<b>பெரியவர்:</b> ஐயா! குடிப்பதற்குக் கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா?
<b>சிற்பி :</b> ஓ! தாராளமாக! கொஞ்சம் இருங்கள், இதோ வந்து விடுகிறேன்!
(சிற்பி, குடிசைக்கு வெளியே சென்று, அங்கிருந்த இளநீர்
இரண்டையெடுத்து, அதன் தலையைச் சீவி உள்ளே எடுத்து வருகின்றான்)
<b>சிற்பி :</b> ஐயா! இதோ இந்த இளநீரைக் குடித்து உங்கள் தாகத்தை நீக்குங்கள்! இது தமிழீழத்து இளநீர்! மிகவும் இனிப்பாக இருக்கும்!
<b>பெரியவர்:</b> உங்கள் மக்களின் இனிமைப்பேச்சை விடவா? (சிரிக்கின்றார்)
<b>சிற்பி :</b> ஓ! ஓ! (மிகவும் ஆச்சரியத்துடன்) நன்றாகச் சொன்னீர்கள்! நம் செந்தமிழ் இனிமையான மொழிதானே! அதுதான் அப்படிச் சொல்லி விட்டீர்கள்!
(இருவரும் சேர்ந்து சிரிக்கின்றனர்)
<b>பெரியவர்:</b> அப்பாடா! இப்போது கொஞ்சம் களைப்பு நீங்கிவிட்டது ஊம்; இருந்தாலும் வெயிலின் கடுமை இன்னும் குறைந்த பாடில்லையே!
<b>சிற்பி :</b> இந்த ஓலைக் குடிசை 'குளு குளு' வென்று இருக்குமே! இங்கே, வெப்பம் அவ்வளவாக இருக்காதே!
<b>பெரியவர் :</b> ஆமாம்! ஆமாம்! (தலையை ஆட்டிவிட்டு) இதென்ன? கல்லில் எதையோ செதுக்கிக் கொண்டிருக்கிறீர்கள்?
<b>சிற்பி :</b> ஆமாம்! சொல்கிறேன், கேளுங்கள்! இது ஒரு சிலை! எங்கள் தமிழீழத்தின் மாபெரும் விடுதலை வீரன், தானைத் தளபதி, வெற்றி வேங்கை பிரபாகரன் அவர்களின் உருவத்தையே சிலையாக வடித்துக்கொண்டிருக்கிறேன்.
<b>பெரியவர் :</b> (ஆச்சரியத்துடன்) பிரபாகரனுக்குச் சிலையா?
<b>சிற்பி :</b> ஆமாம்! எங்கள் தமிழீழம் சுதந்திரம் பெற்று, இரண்டு நாட்களாகிவிட்டன. கேள்விப்படவில்லையா?
<b>பெரியவர்:</b> (சற்று தாழ்வான குரலில்) சில நாள்கள் கடலில் உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்த எனக்கு, இதெல்லாம் எப்படியய்யா தெரியும்?
<b>சிற்பி :</b> அப்படியா? தமிழீழம் விரைவில் விடுதலை பெற்றுவிடும் என்பதை அறிந்து கொண்ட நான், அந்த வெற்றி வீரனுக்கு ஒரு சிலை வைப்போமே! என்ற உணர்வின் மேலீட்டால், சுமார் மூன்று மாத காலமாக, இங்கே இந்தச் சிலையைச் செதுக்கிக் கொண்டிருக்கிறேன்! அதற்கேற்றாற்போல், இரண்டு நாட்களுக்கு முன் சுதந்திர தமிழீழம் அமைந்துவிட்டது. இல்லை, இல்லை! போர் செய்து வெற்றியுடன் அடைந்துவிட்டோம்.
<b>பெரியவர்:</b> மகிழ்ச்சி! பெரிய மகிழ்ச்சி! நான் அண்டை நாடான தமிழகத்தில் தூத்துக்குடியில் வாழ்கிறேன்! மீன் பிடிப்பது என் தொழில்! எனது மீன் பிடிக்கும் மரக்கலம் கடலில் உடைந்து போனதால், அலைகளில் போக்கில் நீந்தி, நீந்தி இக்கரையை அடைந்தேன்! கடலில் இருக்கும் போது இதெல்லாம் தெரிய வாய்ப்பில்லையே!
<b>சிற்பி :</b> பாதகமில்லை! எப்படியோ உயிர் பிழைத்து வந்து சேர்ந்து விட்டீர்கள்!
<b>பெரியவர்:</b> எப்போதும் கடற்படை ரோந்து கப்பல்களால் அமளி துமளிபடும் ஈழத்துக்கடல் ஏது? இவ்வளவு அமைதியாக இருக்கின்றதே! என்று பார்த்தேன்! ஆமாம்! எதிரிகள் என்னைப் பார்த்திருந்தால் விட்டு வைப்பார்களா, என்ன?
<b>சிற்பி :</b> இனிமேல் நமது கடற்பகுதியில் எதிரிகள் வாலாட்டமுடியாது! நீங்கள் நிம்மதியாக மீன் பிடிக்கலாம்!
(இருவரும் சிரிக்கின்றனர்.)
<b>பெரியவர்:</b> தமிழனுக்கென்று ஒரு நாடில்லை! அவர்களுக்கென ஒரு நாடு, அதுதான் தமிழீழம்; எப்போது அமையுமென்று நானெல்லாம் ஏங்கியதுண்டு.
<b>சிற்பி :</b> (இடைமறித்து) நீங்கள் மட்டுமல்ல! தமிழனாய்ப்பிறந்த ஒவ்வொருவரும், அவர்கள் எங்கே வாழ்ந்து கொண்டிருந்தாலும் சரி, அவர்களுக்கும் இந்த உணர்வு அதிகம் இருந்தது என்றே சொல்லலாம்!
<b>பெரியவர்:</b> ஆமாம்! உலகின் நாடற்ற மக்களாக இந்தத் தமிழர்கள் என்னதான் செய்ய முடியும்?
<b>சிற்பி :</b> உலகத்தில் சிறிய மக்கள் தொகை கொண்ட நாடெல்லாம் சுதந்திர நாடுகளாக, மகிழ்ச்சியாகச் செயல்படுகின்றன. ஏறக்குறைய ஏழுக் கோடி மக்களைக்கொண்ட தமிழருக்கு ஒரு நாடு இல்லை; மிகவும் வேதனையாக இருந்தது.
<b>பெரியவர்:</b> (குறுக்கிட்டு) வேதனை மட்டுமல்ல; மிகவும் அவமானமாகவும் இருந்தது.
<b>சிற்பி :</b> அந்தச் சூழ்நிலை இப்போதில்லை; நாம் சுதந்தரத் தமிழீழத்தின் மக்கள்! இனிமேல் தமிழர் தலை நிமிர்ந்து வாழலாம்!
<b>பெரியவர்:</b> சரியாகச் சொன்னீர்கள்! ஒரு காலத்தில் சீரும் சிறப்புமாய் ஆண்டிருந்த தமிழினம் பலவிதக் கொடுமைகளால், அந்நியரிடம் அடிமைப்பட்டு, வாழ்ந்ததை எண்ணிப் பார்க்கும் போது மிகவும் வேதனையாகத்தான் இருக்கின்றது.
<b>சிற்பி :</b> ஆமாம்! நம் முன்னோர்கள் சிறப்பாகத் திட்டமிட்டு, செயல்படவில்லை யென்று சொல்லலாமா?
<b>பெரியவர்:</b> அதுதான் உண்மை! ஒற்றுமையின்றிச் சிதறுண்டு, ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு, எதிரியிடம் காட்டிக் கொடுத்து வாழ்ந்ததாலே, அவர்கள் நம்மை வெகு எளிதில் ஏமாற்றி ஏறி தலைமேல் உட்கார்ந்து விட்டனர்!
<b>சிற்பி :</b> (சற்று உரத்த குரலில்) இந்தக் கசப்பான உண்மைகள் தமிழ் மக்களுக்கொரு பாடம்!
அதோ! பாருங்கள்! ஒரு மாட்டுவண்டி வருகிறது! அதில் இள முல்லையென இரு பெண்கள் இருக்கிறார்கள். அவர்களிங்கே சற்றுநேரம் தங்கி இளைப்பாறித்தான் செல்வார்கள்.
அவர்களோடு உங்களை நகருக்கு அனுப்பிவைக்கிறேன். அங்கே மக்கள் சத்திரத்தில் தங்கியிருந்து, நாளை மாலை சமுதாய வீதியில் நடைபெறவிருக்கும் 'சுதந்தரத் தமிழீழத்தின்' அறிவிப்பு விழாவில் கலந்து கொள்ளுங்கள்.
<b>பெரியவர்:</b> ஆகட்டும்! நண்பரே!
<b>சிற்பி :</b> நாளை உங்களைச் சத்திரத்தில் சந்திக்கிறேன்!
இந்தப் பெண்கள் சத்திரத்தில் பொதுச்சேவை செய்பவர்கள். உங்களை நன்றாகக் கவனித்துக் கொள்வார்கள்! சரி, புறப்படுங்கள்!
("சல்-சல்"- என்ற ஒலியுடன் மாட்டுவண்டி நகர்கின்றது).
இளமுல்லை : (பாடுகின்றாள்)
"கன்னித்தமிழ் ஈழத்திலே! " மணக்கும் கவிதை கொஞ்சம் பாடுங்களேன்!
(ஆய்! உர்! வேகமாய் ஓடுங்கள் காளைகளே! - கன்னித்தமிழ் ------
|
|
|
| கொழும்பு விமான நிலையத்தில் விபத்து ஒருவர் பலி |
|
Posted by: AJeevan - 10-16-2005, 08:27 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (6)
|
 |
<b>கொழும்பு விமான நிலையத்தில் விபத்து ஒருவர் பலி</b>
2005 ஞாயிறு, 16
சிறிலங்காவின் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் இந்தோனேசிய பெண் ஒருவர் உயிரிழந்தார். 7 பேர் படுகாயமடைந்தனர்
சிங்கப்பூரிலிருந்து சிறிலங்காவுக்கு வந்த சிறீலங்கன் விமானத்திலிருந்து பயணிகள் வெளியேறிக் கொண்டிருந்தபோது விமான நிலைய ட்றக் விமானத்தின் பயனிகளை இறக்க வைத்திருந்த ஏணிப் படியில் மோதியதில் இந்த விபத்து நடந்ததாக சிறிலங்கா ஏர்லைன்ஸ் பேச்சாளர் சந்தனா டி சில்வா தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் இந்தோனேசிய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
2 அவுஸ்திரேலியர்கள், 2 இந்தியர்கள், 3 இலங்கையர்கள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிறீலங்கன் பணிப்பெண் ஒருவரும் அடங்குகிறார்.
விமான நிலைய ட்றக் ஓட்டுநரை கைது செய்திருப்பதாகவும் சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்தனர்.
- பீபீசி
|
|
|
|