Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 168 online users.
» 0 Member(s) | 165 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,327
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,235
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,301
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,649
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,083
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,472
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,512
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,045
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243

 
  சாவிற்கு முன்னரே ஆயுத்தமாகும் கல்லறை வரிகள்
Posted by: kurukaalapoovan - 10-15-2005, 09:21 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (2)

http://www.viduthalaipulikal.com/file/docs...5/10/126-03.pdf
<i>நன்றி: விடுதலைப்புலிகள் புரட்டாதி-ஜப்பசி 2005</i>

"வெளிறிப்போன, மலர்ச்சியில்லாத, வாடிப்போன அம்மையாரின் முகம் அவமானத்தால் சிவந்து கன்றிப்போன மகிந்தர் முகம், எவ்வித வாய்ப்புமின்றி இருந்த தனக்கு இப்படியொரு வாய்ப்பு வந்ததே என்கிற மகிழ்ச்சியை மறைக்கமுடியாது கள்ளச் சிரிப்புக் காட்டி போரா, சமாதானமா? எது வேண்டும் உங்களுக்கு? என சிங்களவரிடம் பேரம் பேசும் கழுவிய நீரில் நழுவிய மீனாக ரணிலின் முகம்.

இம் முகங்கள் யாவற்றினையும் எம் மக்கள் வினோதத்துடனும் மனக் கிலேசத்துடனும் காண்கின்றார்கள். அம்மையாரின் இறுதி நாட்கள் எண்ணப்படுவது அவர்கள் கண்முன்னே நடக்கின்றது. அவர் புழுப்போல துடிப்பதையும் அவர்கள் காண்கின்றார்கள்."

Print this item

  சமாதான காலமுற்றுகைக்குள் சிக்கவைக்கும் முயற்சி
Posted by: kurukaalapoovan - 10-15-2005, 09:04 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

http://www.viduthalaipulikal.com/file/docs...5/10/126-15.pdf

<i>நன்றி: விடுதலைப்புலிகள் புரட்டாதி-ஜப்பசி 2005</i>

"இன்று தொடுக்கப்பட்டிருக்கும் இச் சமாதானகால யுத்தம் இன்னும் இன்னும் சூழ்ச்சிகரமாக முன்னெடுக்கப்படுவதற் கான ஏதுநிலைகள் தோன்றியுள்ளன. இதற்குச் சர்வதேச சமூகமும் ஏதுமறியாதது போலச் சந்தர்ப்பம் வழங்க முன்வந்து விட்டதா என தமிழ்மக்கள் ஐயங் கொள்ளத் தொடங்கியுள்ளனர். எனவே தான் தமிழர்கள் எப்போதும்போலத் தீவிர விழிப்புநிலையைத் தம்மிடம் ஏற்படுத்துவதற்கான காலத்தேவை தற்போது ஏற்பட்டுள்ளது."

Print this item

  தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவ..!!
Posted by: kuruvikal - 10-15-2005, 07:43 AM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - Replies (18)

உலகில் வாழும் உயிரினங்களிலே மனிதன் உயர்ந்தவன். ஏனெனில் அவனுக்கு ஆறறிவுகளில் ஒன்றான பகுத்தறிவு என்ற மெய்யறிவு உண்டு. இதனையே தொல்காப்பியர் அவர்கள் இவ்வாறு கூறிகின்றார். " மக்கள் தாமே ஆறறிவுயிரே யாவும் மாக்களும் ஐயறிவினவே" இந்த பகுத்தறிவால்தான் மனிதனால் நல்லது எது ? கெட்டது எது? என பகுத்தறிந்து தனக்கு தேவையானவற்றை எடுத்துக்கொண்டு வாழப் பழகிக்கொள்கிறான். இத்தகைய உயர்ந்த மனிதப்பிறப்பினுள் தமிழினம் என்றும் தனித்துவமானது.அதனால்தான் போல் ஒரு அறிஞன் கூறினான் " தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அதற்கொரு பண்புண்டு" என்று. ஒளவையாரோ " அரிது அரிது மானுடராதல் அரிது" என்றார். அப்பர் சுவாமிகளோ " வாய்த்தது தமக்கு ஈதோர் பிறவி மதித்திடுமின்" என்றார்.அத்துடன் மீண்டும் "இன்னம் பாலிக்குமோ இப்பிறவியே" என்றார். திருமூலநாயனாரும் திருமந்திரத்திலே மனிதப்பிறவியின் மாண்பு பற்றி நயம்படக் கூறியுள்ளார்.

எனவே பெறுதற்கரிய பிறவியை பெற்ற நாம் எமக்கும் பிறார்க்கும் சமூகத்திற்கும் பயன்பட வாழ்ந்து எம் பண்பாட்டை பேண வேண்டும். "வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுலகத்தில் தெய்வத்தில் வைக்கப்படும்" என்று வள்ளுவர் பெருந்தகை கூறியுள்ளார். அறம் , பொருள் , இன்பம், வீடுபேறு இவற்றை தனது முப்பால்களில் மிக அழகாக கூறியுள்ளார். ஏனைய தமிழ் நூல்களும் இதனையே வலியுறுத்துகின்றன. திருக்குறளை யாத்த திருவள்ளுவர் அறம் , பொருள் இன்பவழி நின்று அவற்றின் துணையால் ஈற்றில் வீடுபேற்றையும் பெறலாம் என்று தனது குறள்களில் கூறியுள்ளார். அறவழி நின்று தன்னைப்பேணி மாதா, பிதா, குரு, பெரியோர், அறிவோர் என்போர்க்கு உறுதுணையாய் வாழ்வது தமிழர் பண்பாடாகும். அதுமட்டுமன்றி பொய்யாமை, கள்ளாமை, கொல்லாமை என்று சொல்லப்படுபவற்றை தவிர்த்து வாழப்பழகியமை தமிழர் பண்பாடாகும். அத்துடன் நடை உடை பாவனை என்பவற்றையும் ஒரு பண்பாடகக் கொண்டு வாழ்வது தமிழர் சமுதாயம். "யாதும் ஊரே யாவரும் கேளீர்" என்ற பரந்த மனப்பான்மையுடன் யாவரையும் கேளீர் ஆக்கிக் கொண்டு வாழ்வது தமிழர் பண்பாடு. இவ்வாறு தமிழர் பண்பாட்டைப் பற்றிக் கூறிக்கொண்டே போகலாம்.

பல்லோர் போற்றப்பண்புடன் வாழ்ந்த எமது சமுதாயம் நாட்டில் ஏற்பட்ட கொடுங்கோண்மையால் பிறந்தகத்தை விட்டுப் புலம்பெயர்ந்து பல நாடுகளிலும் சென்று வாழும் நிலை ஏற்பட்டது. இவ்வாறு மேலைத்தேசங்களுக்கு இசைய வாழும் நிலை ஏற்பட்டாலும், தமிழர் பண்பாடு மாறுபடாது அமையவேண்டும். ஒர் இனத்தின் பண்பாட்டை அந்த இனத்தின் இலக்கியங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். பண்பாடு என்பது உலக மக்களிடையே மொழி, பழக்கவழக்கம், சூழல் அடிப்படையிலே வேறுபடுகின்றது என்பதை நாம் அறிவோம். இலக்கியம் என்பது முடிந்த கொள்கைகளையும் முதிர்ந்த கொள்கைகளையும் கொண்டு திகழ்வதாகும். <b>மனிதனை மிருகத்திலிருந்து வித்தியாசப்படித்திக் காட்டுவது பண்பாடு</b>. திரை கடல் ஓடியும் திரவியம் தேடிய தமிழர் அன்றும் தம் பண்பாட்டை மறந்திலர். <b>இன்று எம்மவரிற் சிலர் புலம்பெயர்ந்த நாட்டில் தாய் மொழியாம் தமிழை மறந்து , பண்பாடான உடையைத் துறந்து, தம் ஊண் பெருக்கத்திற்கு தம் பிறிது ஊண் உண்டு கோயில் வழிபாடினின்றும் நீங்கி (கோயில் என்பதிலும்,ஆன்மீக அறிவு இன்றி...என்பதே சாலப் பொருந்தும்..!.

அறிந்த கருத்துக்களையும், உணர்ந்த உணர்வுகளையும் அளந்து உரைப்பதற்கு பயன்படும் கருவியே மொழியாகும். உலக மொழிகளிலே முதல் பத்து மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்றாக அமைந்துள்ளது. தமிழ் மிகவும் பழமை வாய்ந்த மொழி. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வரலாறு படைத்த இனம் நம் தமிழினம். ஆரியர், போர்த்துக்கேயர் எனப் பலரது ஆதிக்கத்தையும் எதிர்த்து நிலை நின்று வளர்ந்து வரும் மொழி. திருக்குறள் பல மொழிகளிலே மொழி பெயர்க்கப்பட்டது. "யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்" தான் அறிந்த மொழிகளில் தமிழ் இனிமையானது என்ற புரட்சிக்கவி பாரதியின் முழக்கம் அன்றே தமிழின் தனிச்சிறப்பு. இத்தகைய சிறப்பு பொருந்திய தமிழ்மொழியை, தமிழ் சிறார்களில் சிலர் மறந்தும், கல்லாதும் ஆங்கிலத்தையே தமது பேச்சு மொழியாக்கிக் கொண்டுள்மையும் பெரிதும் வருந்தத்தக்கது. இதற்கு அவர்களின் பெற்றோர்களும் துணைபுரிவது மிகவும் வேதனையான செயலாகும். அவர்கள் பாடசாலகளிலின்றி
வீடுகளிலும் ஆங்கிலத்தையே உரையாடுகின்றனர். அதையே
மரியாதையாகக் கருதி தமிழில் பேசத் தயங்குகிறார்கள். உதாரணத்துக்கு, நீங்கள் ஒரு பேருந்து வண்டியில் பயணம்
செய்யும் போது அவதானித்தீர்களாயின், அங்கு பலதரப்பட்ட மக்கள் பயணிப்பர். ஆனால் அவர்கள் தங்களது நண்பர்கள் உறவினர்களுடன் தமது சொந்த மொழியிலே உரையாடுவார்கள். ஆனால் எமது இனத்தவர்கள்தான் சொந்த மொழி தவிர்த்து ஏனைய மோழியில் உரையாடுவார்கள். இவ்வாறு எமது புலம் பெயர்ந்த மக்கள் எமது பண்பாடுகள் , மொழி என்பவற்றை மறந்து அந்நிய பண்பாட்டை பின்பற்றினால் எதிர்காலத்தில் தமிழினம் என்ற தகுதியையே இழந்து விடுவர்.

தொடக்கமோ முடிவோ இல்லாத இந்த தமிழ்மொழியையும் , கலாச்சாரத்தையும் இன்று நாங்கள் உதாசீனம் செய்வதன் மூலம் புலம்பெயர் நாடுகளில் என்ன நன்மையை பெறுகின்றோம். [b]எமக்குள் சமூகச் சீர்கேடு வரக்காரணம் மொழிப்பற்றின்மை, கலாச்சாரத்தை தகுந்த முறைப்படி பேணிப்பாதுகாக்காமை, வாழ்க்கைமுறை என்பனவாகும்</b>. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதை இன்று வரை புலம்பெயர் நாடுகளில் (கனடா) காணமுடியவில்லை. எங்கு பார்த்தாலும் பொய் , பித்தலாட்டம், சண்டை , பூசல்களாக இருக்கின்றது. ஒரு நாய் குரைத்தால் பல நாய் குரைக்கும் என்பது முது மொழி. ம்ம்ம்ம்... இதுவும் இங்கு சாத்தியமற்றது. ஏனெனில் நேரமின்மை. ஒரு மனிதன் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு கல்வி செல்வம் மட்டும் இருந்தால் போதாது. அவனுக்கு மொழிப்பற்றும், கலாச்சாரத்தின் மகிமையும் விளங்க வேண்டும். இல்லையெனில் மண்தோண்டி புதைக்க வேண்டும். கனடா (புலம்பெயர் - தாயகத்திலும் கூட) வாழ் ஒரு சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் ஆங்கிலத்தில் கல்வியை கற்று வருவது மட்டுமன்றி மேல்நாட்டவர்களின் பழக்க வழக்கங்களையும் கடைப்பிடிப்பதன் மூலம் பெரியவர்களாகி பெருமையோடு வாழ்வார்கள் என நினைக்கிறார்கள். அதன்மூலம் தாங்களும் பெருமைப்படுகின்றார்கள். எமது தாய் மொழியாகிய தமிழை மறந்துவிடக்கூடாதவாறு அதனைக்கற்றல் வேண்டும். எம்மவர்க்கு பெருமை சேர்ப்பது தாய்மொழியும், கலாச்சாரமும் ஆகும். அதுவே எமது தனித்தன்மையை உலகில் எடுத்தியம்ப வல்லது. 'நாம் யார், எமது அடையாளம் என்ன? எமது வரலாறு என்ன? எமது முகவி என்ன?' என்பதை ஏனைய மக்களுக்கு எடுததியம்பி எம்மையும் மரியதைக்குரிய இனமாக காட்ட உதவுவது எமது மொழியும் பண்பாடுமேயன்றி, வேறொன்றுமில்லை. இதனை அவர்கள் புரிந்து கொண்டு
பிள்ளைகளுக்கு புத்திமதியையும் நல்லொழுக்கங்களையும்
கற்பித்து அவர்களின் வாழ்க்கையை சிறப்புற வழி நடத்த வேண்டும். எத்தனையோ தமிழ் மக்கள் இன்று கனடாவில் கல்வித் துறையிலும் , கலாச்சாரம் மொழித்துறையிலும் பல முன்னேற்ற சாதனைகளை நிலைநாட்டிக்கொண்டிருக்கின்றனர்.

அடுத்து இளைஞர்களை நோக்குவோமாயின் இங்கு கூடுதலான இளைஞர்கள் தங்கள் பொன்னான நேரத்தை வீதிகளிலும் , வியாபாரநிலையங்களிலும் , சினிமாகொட்டகைகளிலும் செலவிடுகின்றனர். இவர்கள் நம் தாய் நாட்டு இன்னல்களை சற்று சிந்தித்து பார்க்க வேண்டும். எம்மைப் போன்ற இளைஞர்கள் சின்னஞ்சிறிசுகள், வயோதிபர்கள் எல்லோரும் எவ்வளவு கஷ்டத்தின் மத்தியில் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கின்றார்கள். இவர்கள் தமது பணத்தை வீணான முறையில் செலவு செய்யாது நம் நாட்டு மக்கள் நலன் கருதி நாடாத்தப்படும் கலை நிகழ்வுகளுக்கு தங்களாலன உதவிகளைச் செய்ய வேண்டும். ஏன் என்றால் தாயகத்தில் அல்லலுறுபவர்களும் எம்மவர்கள்தான். அவர்கள் எமது தாயக மண்ணிற்காக தம் உயிரையே துச்சமென மதித்து எந்நேரத்திலும் களத்திலே இறங்கி எதிரிகளை விரட்டியடிக்க முயலுகின்றனர். அத்தகைய நாட்டுபற்றாளர்களை நாம் மதித்தல் வேண்டும் தமிழெரெனக் கொண்டு வாழ்வோரை " <b>பாமரராய் விலங்குகளாய் உலகனைத்தும் இகழ்ச்சி சொல்லப்.. பான்மை கெட்டு நாமமது தமிழிரெனக் கொண்டு இங்கு வாழ்ந்துடுதல் நன்றே??</b>" எனப் பரிகசிக்கின்றனர். இந்நிலை மாற வேண்டும்.

எனவே புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் எம்மவர் நம் பண்டைய பண்பாடுகளை போற்றி, தாய் மொழியாம் கன்னித்தமிழை கண்ணெனக் கொண்டு தம் வழித்தோன்றல்களையும் அற நெறியில் (இதை இன்னும் தெளிவாக விளக்க வேண்டும்...பலருக்கு புரியுதில்லை...அதை பிற்போக்கு என்றும் சிந்திக்கின்றனர்..குறிப்பாக இளையவர்கள்..!.

சுட்டது ரசிகையின் யாழ் கள வலைப்பூவில் இருந்து..!- கட்டுரையின் பெறுமதி கருதி சில விடயங்கள் எம்மாலும் செருகப்பட்டுள்ளன..மன்னிக்கவும்..!

[b]மிக யதார்த்தபூர்வமாக விடயங்களை அலசுகிறது கட்டுரை...எல்லோரும் வாசிக்க வேண்டிய ஒன்று..!

Print this item

  மாணவிக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். : வாலிபர் கைது
Posted by: kuruvikal - 10-15-2005, 06:47 AM - Forum: செய்திகள்: உலகம் - Replies (19)

<b>மாணவிக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். : வாலிபர் கைது</b>

செல்போனில் ஒரு மாணவிக்கு 630 ஆபாச எஸ்.எம்.எஸ் அனுப்பிய வாலிபரை கைது செய்ய போலீஸ் சேலம் விரைந்துள்ளது.

புதுச்சேரி பாரதிதாசன் கல்லூரியில் படிக்கும் மாணவி வாலிபர் ஒருவர் செல்போனில் அடிக்கடி ஆபாச தகவல்களை அனுப்பினார். ஒரு வாரத்தில் மட்டும் 630 எஸ்.எம்.எஸ்களை அனுப்பியுள்ளார்.

மேலும் அந்த நபர் மாணவியை செல்போனில் தொடர்பு கொண்டு அவரை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் கூறினார்.

இப்படி அடிக்கடி தொல்லை கொடுத்ததால் அந்த மாணவியின் உறவினர் ஆனந்த்பாபு என்பவர் இது குறித்து புதுச்சேரி முத்தியால்பேட்டை போலீசில் புகார் செய்தார்.

இதை தொடர்ந்து அந்த வாலிபர் பேசிய போன் மற்றும் செல்போன் எண்களை கொண்டு விசாரணை செய்த போது அவர் சேலத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் என்பது தெரிய வந்தது.

எனவே அவரை கைது செய்வதற்காக புதுச்சேரி போலீசார் சேலம் விரைந்துள்ளனர்.


தகவல் - தற்ஸ்தமிழ்..!

Print this item

  யாழில் தொடங்கியிருக்கும் படுகொலைகள்
Posted by: cannon - 10-14-2005, 09:46 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (19)

கடந்த சில நாட்களான் யாழ் செய்திகள்.......
*சுன்னாகத்தில் முன்னால் ஈ.பி.டி.பி உறுப்பினர் சுட்டுக்கொலை
*நெல்லியடியில் இளைஞர் தூக்கிலிடப்பட்டுக் கொலை
*கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி அதிபர் சுட்டுக்கொலை
*யாழ் மத்திய கல்லூரி அதிபர் சுட்டுக்கொலை .........

தொடரும் இக்கொலைகளின் பின்னனியென்ன? இக்கொலைகளால் யார் பயனடைகிறார்கள்? என்பன போன்ற கேள்விகளுக்கு எந்த ஒரு ஈழத்தமிழ்க் மகனும் இலகுவில் பதில் புரிந்து கொள்ளக்கூடியதாகவிருக்கும். அப்படியிருக்கும்போதும் ஏனிந்த படுகொலைகள் நடைபெறுகின்றன???????....

முதலில் கொலை செய்யப்பட்டிருப்பவர்களின் பின்னனிகள் .... *சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் ஓர் முன்னால் ஈ.பி.டி.பி உறுப்பினரகவோ அல்லது ஈ.பி.டி.பி யின் ஆதரவாளர்கள், இல்லையேல் *தமிழ்த்தேசியத்தின் யாழ் நகர மிகமுக்கிய செயற்பாட்டாளர்கள்.

இவற்றை ஆராயுமுன் கொழும்பு வெள்ளவத்தை நெல்சன் பிளேஸிலுள்ள தினமுரசு பத்திரிகை காரியாலயத்துக்குக்கு முன் நடந்த குண்டுத்தாக்குதலை நோக்குவோமாயின், மிகப் பாதுகாப்புமிக்க, அவ்வீதியால் நடமாடும் தமிழரணைவரும் கைதுசெய்யும் அளவிற்கு பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டிருந்தது. அதுவும் கதிர்காமரின் கொலைக்குப் பின் எப்படி கொழும்புப் பாதுகாப்பு இருக்குமென்று யாவரும் ஊகிக்கலாம். அப்படியிருக்க ஈ.பி.டி.பியின் வாகனத்தில் குண்டு வெடித்துள்ளதாம்!! அதுவும் யாரும் இல்லாதிருக்க!! அதுவும் இலங்கை பொலிஸ்சார் கூட இக்குண்டு வெடிப்பு சம்பந்தமாக சந்தேகங்களை தெரிவிக்குமளவிற்கு குண்டு வெடிப்பு நடைபெற்றிருக்கிறது!!!!!! அப்படியாயின் இக்குண்டு வெடிப்பின் சூத்திரதாரிகள் யார்??????????????...................

புலிகளுக்கு ஐரோப்பிய அளவிற்கு பயணத்தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், சந்தர்ப்பத்தை எம்மினக்கூலிகள் மிக கச்சிதமாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளார்கள். என்பதையே இவைகள் காட்டுகின்றன. இவற்றின் தொடர்ர்ச்சியே இந்த யாழ் படுகொலைகள்!!!!

இக்கொலைகளில்யில் பலியான யாழ் மத்திய கல்லூரி அதிபர் கூட ஓர் ஈ.பி.டி.பியின் மிகத்தீவிர ஆதரவாளரே!! யாழில் கலாச்சார சீரளிவில் ஈடுபடும் ஓர் வானொலியின் ஆலோசகர் கூட!!! இவர் தேசியவாதிகளால் விமர்சிக்கப்பட்டு வந்தாலும், இவர் கொல்லப்பட்ட இடமும், கொண்றுவிட்டு எப்படி கொலையாளிகள் தப்பமுடிந்ததென்பதும் பல சந்தேகங்களை எழுப்புகின்றன. வீரசிங்கம் மண்டமத்தின் முன் கொல்லப்பட்ட இவ்வதிபரின் கொலையாளிகள் பக்கத்திலுள்ள இராணுவ காவலரனைக் கடந்து எப்படித் தப்பமுடிந்தது??????????????

ஆனால் சுன்னாகத்தில் சுட்டுக் கொல்லப்பட்டவர் யாழ் மாவட்ட இராணுவ புலனாய்வுப் பொறுப்பாளரினாலேயே கொல்லப்பட்டதாக பல மக்களே கண்டுள்ளார்கள்.

நடத்தப்பட்ட புலிகள் மேல் போடப்பட்ட இக்கொலைகளின் நிழலிலேயே மற்றைய தமிழ்த் தேசியத்திற்காதரவான செயற்பாட்டாளர்களும் கொல்லப்பட்டார்கள்.

இக்கொலைகளின் சூத்திரதாரிகள் யார்????????????

1) அண்மையில் ஆனந்தசங்கரியின் வழித்துணையுடன் யாழுக்குக் கொண்டு செல்லப்பட்டு இலங்கை இராணுவ முகாங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் இந்தியக் கூலிகளான பரந்தன் ராஜனின் தலைமையிலான ஈ.என்.டி.எல்.எப் கூலிக்கும்பல்.
2) மாற்றுக்கருத்தாளர்களின் பல தலைவர்களை வைத்திருந்த மகேஸ்வரி வேலாயுதத்தை தற்போது வத்திருக்கும் டக்லஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி கும்பல்.
3) புளொட் எனும் நாசகாரக் கும்பல்.
4) இவற்றையெல்லாம் இயக்கும் இலங்கைப் புலனாய்வுத்துறை.

இக்கொலைகளுக்கான தீர்வென்ன?????
இவ் ஆனந்தசங்கரி, பரந்தன் ராசன், டக்ளஸ், சித்தாத்தன் சம்பந்தப்பட்ட கும்பல்கள் தலைகள் முதல் வால்கள் வரை ***. !!!

*** நீக்கப்பட்டுள்ளது - மோகன்

Print this item

  நெல்லியடியில் இனந்தெரியாதோரால் பொலிஸ் சுட்டுக்கொலை!
Posted by: cannon - 10-14-2005, 07:17 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

இன்றிரவு 9.45 மணியளவில் மோட்டார்சைக்கிளில் வந்த இனந்தெரியாத ஆயுததாரிகளால் இரு பொலிஸார் சுடப்பட்டு, அதில் ஒரு பொலிஸார் யாழ் பலாலி இராணுவ வைத்தியசாலையில் பலியானதாக தமிழ்நெற் இணையத்தளம் செய்தி வெளியிட்டிருக்கிறது.

இதே நெல்லியடிப்பகுதியில்தான் சுட்டுக்கொள்ளப்பட்ட தேசப்பற்றாளர் கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி அதிபருக்கு அஞ்சலி செலுத்திய மாணவர்கள், இதே பொலிஸாரால் மோசமாக தாக்கப்பட்டார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Print this item

  16-குழந்தைகள் பெற்றெடுத்த பெண்
Posted by: Rasikai - 10-14-2005, 05:47 PM - Forum: செய்திகள்: உலகம் - Replies (24)

<b>15 குழந்தைகள் உள்ளன. இப்போது 16-வதாக பெண் குழந்தையை பெற்றெடுத்து உள்ளார். அமெரிக்க பெண்</b>

<img src='http://img410.imageshack.us/img410/2309/16child3ld.jpg' border='0' alt='user posted image'>
அமெரிக்கா அர்கான்சாஸ் நகரை சேர்ந்த மைக்கேல் துக் சார் என்ற பெண்ணுக்கு ஏற்க னவே 15 குழந்தைகள் உள்ளன. இப்போது 16-வதாக பெண் குழந்தையை பெற்றெடுத்து உள்ளார்.

மைக்கேலுக்கு தற்போது 39 வயதாகிறது. 21 வயதில் அவர் முதல் குழந்தையை பெற்றெடுத்தார். அதன் பிறகு வருடந்தோறும் குழந்தை பெற்று வருகிறார். 2 டவை இரட்டை குழந்தைகள் பிறந் தன.

இவருடைய கணவர் பெயர் ஜிம்பாப்பர் 16 குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் இருந்த அவர் "எங்கள் இருவருக்குமே குழந்தைகள் என்றால் மிகவும் பிரியம். எனவே இன் னும் எத்தனை குழந்தை பெற முடியுமோ அதுவரை முயற் சிப்போம்'' என்றார்.

குழந்தைகள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அவர் கள் வசதியாக வாழ்வதற்காக 7 ஆயிரம் சதுர அடியில் பிரமாண்டமான பங்களா ஒன்றை அவர் கட்டி வருகி றார்.

விடுப்பு : .


http://www.vaddakkachchi.com/viduppu/index...t_from=&ucat=1&

Print this item

  புதிய ஜேம்ஸ் பாண்ட்
Posted by: AJeevan - 10-14-2005, 04:31 PM - Forum: சினிமா - Replies (1)

<b>புதிய ஜேம்ஸ் பாண்ட்</b>
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40910000/jpg/_40910436_craigbond_203.jpg' border='0' alt='user posted image'>
<i>புதிய ஜேம்ஸ் பாண்ட் </i>

துப்பறியும் வீரர் ஜெம்ஸ் பாண்ட் வேடத்தில் நடிக்க இங்கிலாந்து நடிகர் டனியல் கிரேக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த அறிவிப்பு கடந்த பல மாதங்களாக் ஜெம்ஸ் பாண்ட் 007 ஆக யார் நடிப்பார்கள் என்பது குறித்து வந்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

துப்பு துலக்குவதை மையமாகக் கொண்டு தயரிக்கப்படும் ஜெம்ஸ் பாண்ட் தொடர் படங்களில் நடிக்க தேர்வாகியிருக்கும் 6 ஆவது நடிகர் டானியல் கிரேக்.

ஆனால் 37 வயதான கிரேக்கைப் பற்றி இங்கிலாந்துக்கு வெளியே பலருக்குத் தெரியாது.

புதிய ஜெம்ஸ் பாண்ட் படத்துக்கான படப்பிடிப்பு வரும் ஜனவரி மாதம் முதல் பிரேக் நகரில் துவங்கும்.

tanks: BBC

Print this item

  போலி சாமியார் தப்பி ஓட்டம்
Posted by: SUNDHAL - 10-14-2005, 02:56 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (4)

தஞ்சாவூரை சேர்ந்தவர் சங்கிலிபாபா (வயது41). இவர் அந்த பகுதியில் பலரிடம் கைவரிசை காட்டி இருக்கிறார். சென்னையிலும் இவர் நகைகளை மோசடி செய்து உள்ளார்.

இதையொட்டி இவரை தமிழக போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் போலீசுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு அவர் குடும்பத்தோடு திடீர் என்று தலைமறைவு ஆகிவிட்டார்.

இதற்கிடையில் சங்கிலி பாபா கேரளாவுக்கு குடும் பத்தோடு சென்றுவிட்டார். அங்கு தங்கி இருந்து பலரிடம் மோசடியில் ஈடுபட்டு வந்தார். இதனால் இவரால் நிரந்தரமாக ஒரே இடத்தில் குடியிருக்க முடியவில்லை,

சமீபத்தில் இவர் கேரள மாநிலம் திருச்சூர் பட்டாப்பியை சேர்ந்த முகமது எம்.எல்.ஏ.யிடம் டெலி போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது இவர்தான் மத்திய அரசு அதிகாரி என்று அறிமுகம் செய்து கொண்டார். நேரில் வந்து பார்க்க விரும்புவதாக சங்கிலிபாபா அவரிடம் கேட்டுக் கொண்டார். அதற்கு முகமது எம்.எல்.ஏ. அனுமதி கொடுத்தார்.

இதைத் தொடர்ந்து சங்கிலி பாபா தனது மனைவி சாஜிதா மற்றும் 2 மகள்களுடன் முகமது எம்.எல்.ஏ. வீட்டுக்கு சென்றார். அங்கு சங்கிலி பாபாவை அவர் உபசரித்தார். இருவரும் வெகு நேரம் தனியாக பேசிக் கொண்டு இருந்தனர்.

அப்போது சங்கிலிபாபா பணம் பெற முயற்சி செய்தார். ஆனால் முகமது எம்.எல்.ஏ. அவரிடம் பணம் ஏதும் கொடுக்க வில்லை.

அதோடு அவர் மத்திய அரசு அதிகாரியாக இருக்கவாய்ப்பு இல்லை என்றும் எம்.எல்.ஏ. தெரிந்து கொண்டார்.

இதுபற்றி முகமது எம்.எல்.ஏ. போலீசுக்கு ரகசியமாக தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் சங்கிலி பாபாவிடம் விசாரணை நடத்தினார்கள்.

அப்போது அவர் மத்திய அரசு அதிகாரி அல்ல என்பது உறுதி செய்யப்பட்டது. அவர் போலி சாமியார் என்பது வெட்ட வெளிச்சம் ஆனது இதையொட்டி அவர் கைது செய்யப்பட்டார். அதோடு அவரது மனைவி சாஜிதா மற்றும் மகள்களும் கைது செய்யப்பட்டனர்.

சங்கிலி பாபா தனக்கு உடல் நலக்குறைவு ஏற் பட்டு இருப்பதாக தெரி வித்தார். இதையொட்டி அவர் திருச்சூர் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு அவருக்கு தனி வார்டு கிடைக்கவில்லை.

எனவே அவர் அங்குள்ள பொது வார்டில் தங்க வைக்கப்பட்டு இருந்தார். மற்ற நோயாளிகளுடன் அவர் தங்கி இருந்தார். அவருக்கு உதவியாக அவரது மனைவி சாஜிதாவும் அங்கு தங்க வைக்கப்பட்டு இருந்தார்.

சங்கிலி பாபாவுக்கு மருந்து கொடுக்க நர்சு வந்தார். அப்போது அவர் படுக்கையில் இல்லை. அங்கு அவரது மனைவி சாஜிதா மட்டும் இருந்தார். சங்கிலி பாபா எங்கே என்று அந்த நர்சு கேட்டார். உடனே சாஜிதா குளியல் அறைக்கு சென்று இருப்பதாக தெரிவித்தார். அதை உண்மை என்று எண்ணி அந்த நர்சு அங்கு இருந்து சென்றுவிட்டார்.

சிறிது நேரம் கழித்து மீண்டும் அந்த நர்சு அங்கு வந்தார். அப்போதும் சங்கிலிபாபா அங்கு இல்லை எனவே நர்சுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதுபற்றி அந்த வார்டுக்கு வெளியே பாதுகாப்புக்காக நின்ற போலீசாரிடம் விவரத்தை அந்த நர்சு தெரிவித்தார் மறுவிநாடியே போலீசார் அங்குள்ள குளியல் அறைக்கு சென்று பார்த்தனர். அங்கு அவர் இல்லை எனவே சங்கிலி பாபா தப்பி ஓடிவிட்டது தெரிய வந்தது.

இதையொட்டி சங்கிலி பாபாவை தேடும் பணியில் போலீசார் மும்முரமாக ஈடுபட்டனர். பஸ் நிலையம், ரெயில் நிலையம் ஆகிய இடங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இருந்தபோதிலும் சங்கிலிபாபா பிடிபட வில்லை.

சங்கிலி பாபா ஆஸ்பத்திரி யில் சிகிச்சை பெறும் போது தப்பியதையொட்டி பாது காப்பு பணியில் ஈடுபட்ட 3 போலீசார் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

சங்கிலி பாபா தப்பியது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Thanks:Malaiamalar..........

Print this item

  ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைக்கு கவனஈர்ப்பு மனு
Posted by: iruvizhi - 10-14-2005, 11:37 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (1)

http://www.sooriyan.com/

Print this item