| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 257 online users. » 0 Member(s) | 254 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,327
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,235
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,301
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,649
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,083
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,472
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,512
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,045
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243
|
|
|
| வேறுபாடு |
|
Posted by: Birundan - 10-13-2005, 12:24 PM - Forum: உங்கள் கருத்துக்கள்
- No Replies
|
 |
எழுதப்பட்டது: வியாழன் ஐப்பசி 13, 2005 12:38 pm Post subject:
கண்கள் கலையை நோக்கட்டும் தலைப்பிலான கவிதை நிர்வாகப் பகுதிக்குள்ளிருந்து கவிதை/பாடல் பகுதிக்கு மறுபடியும் நகர்த்தப்பட்டுள்ளது. ஆனால் தலைப்பு மூடப்பட்டுள்ளது.
_________________
வலையில் கலைஞன்
வலைஞன்
எழுதப்பட்டது: வெள்ளி ஐப்பசி 07, 2005 5:23 pm Post subject:
முன்பு இன்னொரு பகுதியில் எழுதப்பட்டது.
.....................................................................................
எழுதப்பட்டது: செவ்வாய் புரட்டாதி 27, 2005 5:07 pm Post subject:
--------------------------------------------------------------------------------
பஸ்சில் பயணிக்கும்
இருள்பிரியா விடிகாலையில்
பொழியத்தொடங்கும் மழையில்
காளான்களைப்போல
வாழ்வின் அழகிய கணங்கள்
முளைக்கத் தொடங்கலாம்
மழையில் நனைந்தபடி
ஒரு பெண் பஸ்ஸில் ஏறத்தொடங்கையில் மட்டும்
அணிந்துகொள்ளத் தொடங்குகின்றீர்கள்
அவசர அவசரமாக
உங்கள் கலாச்சார முகமூடிகளை.......
http://djthamilan.blogspot.com/2005/09/blo...7846371933.html
உங்கள் பார்வைக்கு
இதை வரைந்தவர் DJ தமிழன்.
சில வரிகளை நீக்கியுள்ளேன். இணைப்பில் சென்று
முழுமையான கவிதையை படிக்கலாம். -இராவணன்
..........................................................................
_________________
அன்பில் மலர்ந்த செந்தாமரை
கள உறவுகளுக்குள் வேறுபாடு இருக்கலாம், நிர்வாகத்துக்குள் வேறுபாடு இருக்கலாமா?
அப்போ இது எதற்கு செய்யப்பட்டது. எனக்கு புரியவில்லை.
முடிந்தால் பதில் கூறுங்கள். :? :? :?
|
|
|
| ஐரோப்பாவிலும் பறவைக் காய்சல் அபாயம்..! |
|
Posted by: kuruvikal - 10-13-2005, 12:14 PM - Forum: மருத்துவம்
- Replies (8)
|
 |
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40904000/gif/_40904696_turkey_kiziksa_map203.gif' border='0' alt='user posted image'>
வருகிறது வருகிறது என்று ஐரோப்பிய மருத்துவ மற்றும் உயிரியல் ஆய்வாளர்களால் எச்சரிக்கப்பட்ட தென் கிழக்கு ஆசியாவை அச்சுறுத்திய பறவைக் காய்ச்சல் நோய்க்குரிய நுண் உயிரியை துருக்கியில் (ஐரோப்பிய நாடு... அண்மையில் தான் ஐரோப்பிய ஒன்றியத்துள் சேர்க்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன..!) பண்ணை ஒன்றில் உயிரிழந்த பறவை ஒன்றில் உயிரியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளதை அடுத்து...மனிதர்களிலும் தொற்றுக்கள் மூலம் மரணத்தைத் தரவல்ல இந்த பறவைக் காய்ச்சல் நோய் குறித்து கடும் எச்சரிகை விடுக்கப்பட்டுள்ளது..!
குறிப்பாக பறவை உணவுகளை உண்பவர்கள்...இது குறித்து அவதானமாக இருப்பதும் பறவைப் பண்ணைகளில் வேலை செய்யபவர்களும் பறவை இறைச்சி தயாரிக்கும் தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்களும் இது குறித்து அதிக கவனம் செலுத்துதல் நன்று..!
<b>Turkey bird flu 'deadly strain'
The bird flu virus found in Turkey is the H5N1 strain dangerous to humans, the EU Commission has said.
EU Health Commissioner Markos Kyprianou said the assumption was that a bird flu outbreak in Romania would also prove to be the H5N1 type. Tests are continuing.
EU states should be ready for a potential flu pandemic and stockpile anti-viral drugs, Mr Kyprianou urged. </b>
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40903000/jpg/_40903706_deadchicken-ap203i.jpg' border='0' alt='user posted image'>
News from - http://news.bbc.co.uk/1/hi/world/europe/4337918.stm
|
|
|
| ''ஆந்தையின் அலறல்களில் சில'' |
|
Posted by: வினித் - 10-13-2005, 11:49 AM - Forum: அரசியல் / பொருளாதாரம்
- Replies (6)
|
 |
<b>ஆனந்த சங்கரியின் ஆலோசனைகளுள் சில!!!!
ஆனந்த சங்கரியின் ஆலோசனைகளுள் சில!!!!</b>
Thursday, 13 October 2005
[b]--------------------------------------------------------------------------------
சந்திக்குச் சந்தி அரச படைகளை நிறுத்துக! தெருவில் தென்படும் தனியார் வாகனங்களைத் தடுத்து வைக்குக!! வன்னி வாக்காளர்கள் வீடுகளிலேயே இருப்பது நலம்!!! - இவை அனைத்தும் ஆனந்த சங்கரியின் ஆலோசனைகளுள் சில!!!!
தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவரான ஆனந்த சங்கரி தேர்தல் ஆணையாளருக்கு வரவிருக்கும் சனாதிபதித் தேர்தல் வடக்குக் கிழக்கில் எவ்வாறு ஒழுங்கமைக்கப்படவேண்டும் என்பது குறித்து கடிதம் ஒன்றின் மூலம் ஆலோசனை வழங்கியுள்ளதாகத் தெரியவருகிறது.
அக்கடிதத்தில் அவர் தெரிவித்துள்ள முக்கிய விடயங்களாவன,
! வடக்குக் கிழக்கில் சுயாதீனமானதும் நேர்மையானதுமான தேர்தல் நடத்தப்படுவதைத் தேர்தல் ஆணையாளர் உறுதிப்படுத்தவேண்டும்
! அனைத்துத் தேர்தல் உத்தியோகத்தர்களும் தமிழர்களாக இருப்பது விடுதலைப்புலிகளுக்குச் சாதகமான விடயம்
! கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வடக்குக் கிழக்கில் தேர்தல் கடமையில் ஈடுபட்ட தமிழ்ப் பொது உத்தியோகத்தர்கள் தமிழ்மக்களது உரிமையைப் பாதுகாக்கத் தவறிவிட்டார்கள்
! இதனால் இம்முறை சரி அரைவாசி அல்லது மூன்றில் ஒருபங்கு தொகையில் சிங்கள அல்லது முஸ்லிம் தேர்தல் உத்தியோகத்தர்கள் வடக்குக் கிழக்கில் சேவையில் ஈடுபடுத்தப்பட வேண்டும்
! 5000 காவல்துறை உத்தியோகத்தர்களை வடக்குக் கிழக்கிலிருந்து தெற்கிற்கு மாற்றும் உத்தரவை இரத்துச் செய்து, ஆயுதப் படையினரும் இப்பகுதிகளில் தேர்தல் கடமைகளில் ஈடுபட அதிகாரம் வழங்குங்கள்
! தேர்தல் சேவை மற்றும் பொதுப்போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்கள் தவிர ஏனைய அனைத்து வாகனங்களும் வீடுகளுக்குள் முடக்கப்படவும் மீறித் தெருவில் இறங்கும் வாகனங்களைத் தடுத்துவைக்கவும் உத்தரவிடுங்கள் (All vehicles other than those commissioned by the returning officer for election and public transport, are kept in doors with orders to arrest any vehicle seen on the road)
! படைத்துறையினரின் ரோந்து நடவடிக்கைள் அதிகரிக்கப்படவேண்டும். அனைத்துச் சந்திகளிலும் படையினர் நிறுத்தப்பட்டு அவ்வழியே செல்லும் வாகனங்கள் சோதனையிடப்படவேண்டும். மேலும் கையில் வாக்குச் சீட்டுடன் தென்படும் நபர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட நடவடிக்கை மேற்கொள்ளுங்கள். (Very frequent patrolling is also necessary and every junction should have a set of police or army officers to check vehicles and to identify persons seen with pooling cards)
! வன்னியிலுள்ள வாக்காளர் ஒருவர் தாம் யாருக்கு வாக்களிக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளாமலேயே வாக்களிக்க வருகிறார். அவ்வாறானவர்கள் வாக்களிப்பதை விட வீடுகளில் இருப்பது நல்லது (He would rather stay at home without voting)
என அரிய பல ஆலோசனைகளைச் சங்கரி வழங்கியுள்ளமை இன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது
http://sooriyan.com/index.php?option=conte...id=2401&Itemid=
|
|
|
| புத்திசாலி பெண்களும் அப்பாவி ஆண்களும் |
|
Posted by: vikadakavi - 10-13-2005, 09:50 AM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (13)
|
 |
மத்தளத்தின் இருபக்கங்கள் படும் பாடு
காதல் கொண்ட பெண்களுக்கு... என்பார்கள்..
ஆனால் உண்மை என்ன தெரியுமோ..
யார் எப்படி போனாலும் தங்கள் செயலை
கெட்டித்தனமாக முடித்துவிடுவார்கள்...
இந்த கெட்டித்தனத்தில் காதலன் பலியாகலாம்
காதல் பலியாகலாம் ஊரே பலியாகலாம்
ஆனால் அவர்கள் சுய பாதுகாப்பை தேடிக்கொள்வார்கள்
விகடகவி உஸார்டா மச்சி உஸார்டா
|
|
|
| இலங்கையில் அரசியல் |
|
Posted by: sooriyamuhi - 10-13-2005, 06:12 AM - Forum: அரசியல் / பொருளாதாரம்
- Replies (4)
|
 |
<img src='http://img447.imageshack.us/img447/2633/image0023hs.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img447.imageshack.us/img447/8605/image0032ey.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img447.imageshack.us/img447/85/image0046si.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img447.imageshack.us/img447/2601/image0065ux.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img291.imageshack.us/img291/1977/image0077or.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img291.imageshack.us/img291/9401/image0083pg.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img291.imageshack.us/img291/1448/image0099lg.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img445.imageshack.us/img445/4541/image0055qe.jpg' border='0' alt='user posted image'>
|
|
|
| புலம்பெயர் ஆரிவரோ |
|
Posted by: Birundan - 10-13-2005, 02:21 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (3)
|
 |
ஆராரோ ஆரிவரோ ஆராரோ ஆரிவரோ.
கண்ணே என் கண்மணியே கண்ணுறங்கு கண்ணுறங்கு.
நேரமோ எட்டு மணி என் மகளே கண்ணுறங்கு
கண்ணுறங்கு கண்ணுறங்கு என் மகளே கண்ணுறங்கு
காலையிலை ஆறுமணி வேலைக்கு எழும்ப வேணும்.
தொல்லையின்றி படுத்தால்தான் வேலைக்குச் சென்றிடலாம்.
பாட்டி இல்லை, பாட்டன் இல்லை பக்கத்துணை யாருமில்லை.
பாசத்திற்கு பஞ்சமிங்கு டேக்கயருக்கு போக வேணும்.
ஆராரோ ஆரிவரோ ஆராரோ ஆரிவரோ.
ஆராரோ ஆரிவரோ ஆராரோ ஆரிவரோ.
வேலைக்குப் போனால் தான் காசு பணம் சேர்த்திடலாம்.
நாளைக்கு வளர்ந்து நீயும் படித்துழைத்துஈழத்தைஉயர்த்திடலாம். நான் மடிந்து போனாலும் என்கடமை தொடர்ந்திடுவாய்
கண்ணுறங்கு கண்ணுறங்கு என் மணியே கண்ணுறங்கு.
மழலை கேட்க முடியவில்லை;அமுதூட்ட முடியவில்லை
இதயம் கனக்கிறது, விழி நீர் வழிகிறது.
என் சோகம் சொல்லி விட்டால் உன் தூக்கம் கலைந்து போகும்.
கண்ணுறங்கு கண்ணுறங்கு என் மணியே கண்ணுறங்கு .
செல்லடிச் சத்தமில்லை, பெம்பர் கிபீர் உறுமலில்லை
சத்துணவுக் குறைவுமில்லை, மரத்தின் கீழ் உறக்கமில்லை.
பஞ்சணையில் தூங்குகின்றாய், பக்கத்துணைதான்யாருமில்லை.
கண்ணுறங்கு, கண்ணுறங்கு என் மணியே கண்ணுறங்கு.
பால்தடைக்கு ஊசி போட்டும் மார்பால் பால் சுரக்கிறது.
உணவுத் தடையால் அங்கு பாலே வற்றிப்போச்சு.
வெற்று மார்புள் முகம்புதைத்தழும் பிஞ்சுகள் தான் எத்தனை.
இதயம் கனக்கிறது, நெஞ்சும் வெடிக்கிறது, விழி நீர் எரிகிறது.
என் சோகம் சொல்லிவிட்டால் உன் தூக்கம் கலைந்து போகும்.
ஆராரோ ஆரிவரோ ஆராரோ ஆரிவரோ.
கண்ணே என் கண்மணியே கண்ணுறங்கு கண்ணுறங்கு.
நேரமோ எட்டு மணி என் மகளே கண்ணுறங்கு
கண்ணுறங்கு கண்ணுறங்கு என் மகளே கண்ணுறங்கு
ஆராரோ ஆரிவரோ ஆராரோ ஆரிவரோ.
நன்றி>உயிர்கொண்டு திளைத்தல்
|
|
|
| அசாத்தியமான அரசியல் கணக்கு |
|
Posted by: inthirajith - 10-12-2005, 07:55 PM - Forum: அரசியல் / பொருளாதாரம்
- Replies (1)
|
 |
சந்திரிகாவின் அரசியல் பற்றி பலதளங்கள் பல பத்திரிகைகள் எழுதினார்கள் .ஆனால் அந்த அரசியல் நோக்கு எல்லாவறையும் தூக்கி சாப்பிடும் வகையில் சந்திரிகாவின் அரசியல் சாணக்கியம் அமையபோகிறது .எல்லா அரசியல் ஆய்வாளரும் சொல்வதுபொல் ஜே.வி.பி ஒப்பந்தம் மகிந்தவின் தனிபட்ட செயல் இல்லை அது சந்திரிகாவின் இன்னுமொரு அரசியல் காய் நகர்த்தலே. இப்போது பாருங்கள் ஒட்டுகள் செய்யபோகும் வித்தையை,
1 காலம் காலமாக சுதந்திரகட்சியின் வாக்குகள்
2.ஜே.வி.பி ஆதரவு ஓட்டுக்கள்
3கெல உறுமைய வாக்குகள்
4 தாராக்கி சிவராம் எழுதியதுபோல் கிராமபுறவேலைதிட்டங்களில் ஜே.வி.பி சேகரித்த ஓட்டுகள் கஸ்டபடாமலே சந்திரிகா வசம் போகும்
5நாடு பிரியகூடது என்று நினைக்கும் சிங்களவர் ஓட்டுகள்
6 முஸ்லிம் மக்களின் உடைந்த ஓட்டுக்கள்
அதனால் தான் சந்திரிகா ஆசிர்வாதத்துடன் மகிந்த எல்லா ஒப்பந்தங்களிலும் கைச்சாத்து போடுகிறார் .அதனால் தான் மலயகத்தில் தொண்டமானின் பேரம் கூட சந்திரிகாவால் அலட்சியபடுத்தபட்டது.76% வீதசிங்கள்வர் ஓட்டுக்கள் கிடைத்தாலே 56% பெரும்பான்மை கிடைக்கும் அதுபோதும் மகிந்த ஒரு பொம்மலாட்ட பொம்மைதான் சூத்திரகயிறு சந்திரிகாவிடம் இருக்கும் குழப்பம் செய்தால் இருக்கவே இருக்கு கையொப்பம் இட்டுகொடுத்த ராஜினாமா கடிதம்
|
|
|
| இன்று வாணிவிழா! |
|
Posted by: Nellaiyan - 10-12-2005, 07:26 PM - Forum: தமிழ் /தமிழர்
- No Replies
|
 |
இன்று வாணிவிழா! கல்வித்தெய்வமாம் சரஸ்வதிக்கு விழா எடுத்து பூஜிக்கும் நாளிது!
..... வடக்கு/கிழக்கில் .... சமய வேறுபாடுகளை மறந்து எம்பகுதிகள் எங்கும் விழாக்கோலம் பூண்டிருக்கும். கோவில்களை விடவும் பாடசாலைகள் மற்றும் கல்விநிலையங்கள் எங்கும் மாவிலை, தோரணங்களால் அலகரிக்கப்பட்டு சிறுவர்கள் முதல் முதியோர் வரை கோலாகலாகக் கொண்டாடுவோம்!.... பல வருடங்களுக்கு முன்னுள்ள என்னூருக்கு செல்கின்றேன்..... ஊரிலுள்ள பள்ளிக்கூடம் விழாக்கோலம் பூண்டிருக்கும். அதை மிச்சும் அளவிற்கு ஊரின் நடுவேயுள்ள அந்த தனியார் கல்வி நிலையத்தின் பக்கத்தினுள்ள பாரிய காணியினுள் மேடையிட்டு, அப்பகுதியென்ன ஊரே மாவிலை, தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு, தெருவெல்லாம் வண்ணமயமான மின்விளக்குகள் பிரகாசிக்க, மின்சாரக்கம்பங்களில் பாரிய ஒலிக்குழாய்கள் கட்டப்பட்டு அருகிலுள்ள ஊர்கள் எல்லாமெ அவ்விழாவைக் கேட்கக்கூடியதாக ஊரே விழக்கோலம் பூண்டிருக்கும். காலையில் சிறுவர்களின் நடனங்கள், நாடகங்கள், பாட்டுக்கச்சேரிகள் முடிபடைய, மாலையானதும் "அண்ணேரைற்" பாலச்சந்திரனும், சக்கடத்தாரும் வந்து மேடையேறி விடுவார்கள்!! பின்பு விழாவிற்கே சிகரம் வைத்ததுபோல் பட்டிமண்றம், முன்னைநாள் உடுப்பிட்டி பாராளுமன்ற உறுப்பினர் திரு இராஜலிங்கம் தலைமையில் பண்டிதர் பொன் கணேசன் ஒரு அணியிலும், சுகுணா கணவதிப்பிள்ளை மறு அணியாகவும் தமிழால் போதுவார்கள். பார்வையாளர்களும் இரு அணிகளாகப் பிரிந்து, இரு அணிகளையும் கரகோஸங்களால் உற்சாகப்படுத்துவார்கள். இவ்விழா நடுநிசியைத்தான்டி முடிபடையும். .......
ஆனால் இங்கோ...... இன்று காலையில் ரி.ரி.என் வேலைக்கு போகும்முன் பார்த்தபோது எதோ ஓரிரு பக்திப் பாடல்கள் கேட்கக்கூடியதாகவிருந்தது. வேலை முடிந்து இன்று வீடுவர இரவு எட்டு மணியாகிவிட்டது. அவ்வளவுதான் இங்கு என்னுடைய வாணிவிழா!!!
........ எல்லாவற்றையும் தொலைத்து விட்டோம்>>>>>>>>>
|
|
|
| இறுமாப்பின் இமயம் |
|
Posted by: கோமதி - 10-12-2005, 11:22 AM - Forum: தமிழீழம்
- Replies (11)
|
 |
<i>யாராலும் நினைத்துப் பார்க்க முடியாத, நெஞ்சையுருக்கும் உண்மைச் சம்பவமொன்றுதான் இது.</i>
விடுதலைப்புலிகளின் கொள்கைகள் பற்றி விமர்சனங்களும் சர்ச்சைகளும் ஆச்சரியங்களும் உண்டு. எதிரியிடம் உயிருடன் பிடிபடக்கூடாது என்ற கொள்கையை இயக்கம் தொடங்கப்பட்ட காலம் முதலே மிக இறுக்கமாகக் கடைப்பிடித்து வருபவர்கள் அவர்கள். ஒவ்வொரு போராளியின் கழுத்திலும் சயனைட் வில்லைகள் இருக்கும். இச்சம்பவமும் எதிரியிடம் பிடிபடும் சந்தர்ப்பமொன்றின்போது நடந்ததுதான்.
1997 ஆனி மாதம் மட்டக்களப்பிலிருந்து வன்னி நோக்கி இருபடகுகளில் சில போராளிகள் வருகிறார்கள். இரவுப்பயணம். கடும் சண்டைக்குரிய ஆயத்தங்களேதுமற்ற சாதாரண பயணம். எப்படியோ திருகோணமலையை நெருங்கியபோது எதிரியின் விசைப்படகின் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். படகு சேதமடைகிறது. கடலிற்குதித்து நீந்தத் தொடங்குகின்றனர். எல்லோரும் பிரிந்துவிட்டனர். அதில் ஒருவன் தான் பாலன். கடற்கரும்புலி அணியைச் சேர்ந்தவன் தான் பாலன்.
இரவிரவாக நீண்டதூரம் நீந்தி "இறக்க கண்டி" எனுமிடத்திற் கரைசேர்கிறான் பாலன். விடிந்துவிட்டது. கரையில் சோர்வினால் மயங்கிப்போன நிலையில் சிலரால் காட்டிக்கொடுக்கப்பட்டு இராணுவத்தாற் கைதாகிறான்.
இராணுவ முகாமில் கண்விழித்த பாலனுக்கு அப்போதுதான் தாம் கைதுசெய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. கழுத்தில் குப்பியில்லை.
இனி சித்திரவதை செய்யப்படப்போவது உறுதி. அதில் இரகசியங்கள் காப்பாற்றப்பட வேண்டுமே. அதுவும் பாலன் கடற்கரும்புலி அணியாதலால் நிறைய விசயங்கள் தெரிந்திருந்தான். தன்னை மாய்த்துக்கொள்ள ஏதும் கிடைக்குமா என்று முயன்றான். கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் குப்புறக் கிடத்தப்பட்டிருந்தான். இன்னும் சிறிது நேரத்தில் ‘விசாரணை’ தொடங்கப் போகிறது. எதுவும் செய்ய முடியாத நிலை. அந்த நேரத்தில் தான் அசாதாரணமான முடிவையெடுத்தான். தன் நாக்கை வெளித்தள்ளி பற்களால் இறுக கடித்தபடி தலையை உயர்த்தி தன் நாடியை ஓங்கித் தரையில் அடித்தான். நாக்குத் துண்டானது. சித்திரவதையின் போது தன்னால் உண்மைகள் வெளிவரக்கூடாதென்பதற்காகத் தன் நாக்கைத் தானே துண்டித்தான்.
மீண்டும் மயங்கிய அவன் கண்விழித்தபோது இராணுவ மருத்துவமனையிற் கிடத்தப்பட்டிருந்தான். தனக்கு சிகிச்சை அளிக்கப்படுவதை அறிந்த பாலன் அடுத்த கட்டத்தை யோசித்தான். எப்படியும் தன்னை மாய்த்துக்கொள்ள வேண்டுமென்பதிலேயே குறியாயிருந்தான். ஏனெனில் தன்னிடமிருந்து போகப்போகும் விவரங்கள் ஏற்படுத்தப்போகும் விளைவுகள் பயங்கரமானவையென்பதை நன்கு அறிந்திருந்தான். முயற்சித்து முயற்சித்து இறுதியில் அந்த முடிவையெடுத்தான். நினைத்தும் பார்க்க முடியாதது அது. தன் தலையை அந்த இரும்புக்கட்டிலில் மோதி மோதி மண்டையுடைந்து இறந்துபோனான்.
ஒரு மோதலுக்குப்பின்னும் சாகும்வரை தொடர்ந்து தன் தலையைக் கட்டிலின்மேல் மோதுமளவுக்கு அவனுக்குத் துணிவும் வைராக்கியமும் இருந்தது, ஒரு துளி நீர் கூட வாயில் வைக்காமல் 12 நாட்கள் இருந்து அணுவணுவாகச் தன்னைத்தானே சாகடித்த திலீபனைப் போல. (பாலனது இயற்பெயர்கூட திலீபன் தான்.)
கரும்புலிகள் நாளான இன்று நூற்றுக்கணக்கான சரித்தரங்களில் ஒன்றான கரும்புலி கப்டன் பாலனையும் அவனது இந்நெஞ்சையுருக்கும் சம்பவத்தையும் பகிர்ந்து கொள்கிறேன். அதேநேரம் இதுவரை வீரச்சாவடைந்த 265 கரும்புலிகளுக்கும் வெளிவராமல் உறங்கும் ஏனையவர்க்கும் இதய அஞ்சலிகள்.
<img src='http://www.tamilmaravan.com/heros/1997/Heroes_1997-6_Pic/202-325/313-Sea-Black-Cap_Balan.JPG' border='0' alt='user posted image'>
கடற்கரும்புலி கப்டன் பாலன்
சோமசுந்தரம் திலீபன்.
மட்டக்களப்பு.
பட உதவி: தமிழ்மறவன் இணையத்தளம்.
-----------------------------
மூலப்பதிவு: வசந்தன் பதிவு.
எழுதியவர்: வசந்தன்.
இணைப்பு:http://vasanthanin.blogspot.com/2005/07/bl...og-post_05.html
|
|
|
|