Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 163 online users.
» 0 Member(s) | 161 Guest(s)
Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,328
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,235
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,302
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,650
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,084
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,473
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,512
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,046
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243

 
  வடமெரிக்காவில் Dish Net தொலைக்காட்சி
Posted by: Thiyaham - 10-11-2005, 02:56 PM - Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம் - Replies (21)

வடமெரிக்காவில் Dish Net தொலைக்காட்சியை இலவசமாக பார்க்க விரும்பியவர்கள் என்னுடன் தொடர்பு கொள்ளவும். சன் Tv , K-Tv உட்பட்டதாக 600க்கும் மேற்பட்ட சனல்களை பார்க்க முடியும்.

Print this item

  ஜெ.கரிகாலனின் கவிதைகள்
Posted by: கரிகாலன் - 10-11-2005, 01:42 PM - Forum: கவிதை/பாடல் - Replies (10)

என் நண்பர் ஜெ.கரிகாலனின் கவிதைகள் இங்கே தருகிறேன்.(நான் சா.கரிகாலன்)
ரசித்து மகிழுங்கள். <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

இருண்ட வெளிகள்

கால அருவியின் சீரான இயக்கம்.
இருண்டவெளிகளுக்குள்
இரைச்சல்களில் நசியும் இசை.

ஆதி இசை அறுந்து
கூச்சல்களின் கரு அழிந்தது.
பூமியெங்கும் மனிதக் கால்களுக்குள்
மண்ணின் தொடு உணர்வு கொதித்தது.

எல்லாக் கால்களும் சேர்ந்து -
ராட்சத ரயில்பூச்சி நகர்ந்தது.
மனிதம் செத்துப் பிழைக்கிறது.

ரயில்பூச்சியின் கழிவுகளில்
நாகரிகம் நாறியது.
நாற்றம் நகரங்களில் உற்பத்தியாகி
குப்பிகளில் விற்கப்படுகிறது.

முடைநாற்ற வீதிகளில்
மூக்கைப்பொத்தி மனிதனை சபித்து
ஓடித்திரிகிறேன்.



நன்றி : ஜெ.கரிகாலன்


மேலும் தொடரும்................

Print this item

  ஒளவைளயார் காமத்தைப் பேசி தமிழ்ச் சமூகத்தைக் கெடுக்கும் பெண்க
Posted by: narathar - 10-11-2005, 01:37 PM - Forum: தமிழும் நயமும் - Replies (17)

தமிழ் நாட்டில் பொடா சட்டத்தில் கைது செய்ய வேண்டிய நிலைக்கு பெண் கவிகள் தள்ளப்பட்டிருக்கின்றனர். பிரபல பத்திரிகைகள் தொலைக்காட்சிகள் இவற்றில் இலக்கியம் பற்றிய பேச்சு வந்தால் கேட்கப்படும், காணப்படும் ஒரு செய்தி "பெண் கவிகள் பாலியல் உணர்வுகளை வெளிப்படையாக எழுதுகிறார்களே" இவர்களை என்ன செய்யலாம்.

உடலை முன் வைக்கிற கவிதைகளை பெண்கள் எழுதி வருவது குறித்து தனது கவலைகளை பிரம்மராஜன் பகிர்ந்து கொண்ட தகவல்( கவிஞர்கள் சந்திப்பு, காலச்சுவடு 51 பக்கம் 51-52) அதிர்ச்சி தருவதாக உள்ளது. இதே கருத்தைதான் வெகுசன ஊடகங்களில் சினிமா பாட்டெழுதுபவர்களும் சில வெகுசன கவியரங்கப் பிரபலங்களும் முன் வைக்கிறார்கள். இவர்களுக்கும் கவிதைக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை. என்பது சிறு பத்திரிகை வாசகர்களுக்குத் தெரியும். ஆனால் உலகக் கவிதை தெரிந்த பிரம்மராஜன் ஒரு சாதாரண பேராசிரியரைப் போல இப்படிச் சொல்வது உண்மையிலேயே பேரதிர்ச்சிதான்.

ஐயா கவிதையில் இடம்பெறும் கடல் கடலாக இல்லாதது போலவே, தேவாரத்தில் நடனமிடும் சிவன் சிவனில்லாதது போலவே, கவிதையில் இடம் பெறும் பாலியலும் பாலியல் அல்ல. அது உருவகமே. புலன்களும் உடலும் புனைவினுடாக இயங்கும் பொழுது கவிதைநிலை தோன்ற முடியாது. என்ற கட்டாயம் இல்லை. முரண்பாடுகளின் விளையாட்டு கவிதைகளில் அதிகம் தான். உள்ளுறையும் இறைச்சியும் பழகிய தமிழ்க் கவிதைக்கு உருவகம் பழகாமல் போகும் என்ற கட்டாயம் ஏதும் உண்டா? "யோனி" என்ற சொல் கவிதைக்குள் வரும்போது அது பெண்ணுடைய ஒரு உறுப்பா அல்லது கவிதைக்குள் கட்டமையும் உருவகமா? கவிதைக்குள் ஒரு சொல் அது உணர்த்தும் வெற்றுப் பொருளாகவோ, ஒரு வாக்கியம் வெற்று வாக்கியமாகவோ அமையுமா? Meta languugage, meta poetry பற்றி மீடியா பிரபலங்களுக்கு வேண்டுமென்றால் தெரியாமல் இருக்கலாம். ஆனால் பிரம்மராஜனுக்கு? குற்றாலப் பதிவுகள் அமர்வுகளில் நாள் முழவதும் பேசி மாளவில்லையா?

அப்படி என்னதான் பெண்கள் எழுதி விட்டார்கள்.? சுகிர்தாரணியின் இரண்டொரு கவிதைகள் உடல் வேட்கையைப் பேசுகின்றன. குட்டிரேவதி தனது இரண்டாவது தொகுப்புக்கு "முலைகள்" எனத் தலைப்பிட்டார். இது தவிர வேறு எந்த உயிர்கொல்லி ரசாயன ஆயதங்களும் இவர்களிடம் இல்லை. எனது கவிதைகளில் காணக்கிடப்பவை எல்லாம் இயற்கையும் தாய்மையும் இணைந்த அழகியல் தத்துவம், அறம், அதிகாரம், இவைகளின் விதவிதமான உருவக நாடகங்கள் மற்றும் சில வெளிப்படையான அரசியல் கவிதைகள். உமாமகேஸ்வரி "வெறும்பொழுது" என்ற தலைப்பில் மிகப்பெரிய தொகுதியை வெளியிட்டுள்ளார். ஒரு கவிஞர் 50 ஆண்டுகள் எழுதித் தொகுக்கும் போது கூட இவ்வளவு பெரிய தொகுப்பு வருவதில்லை.

பத்தாண்டு காலவெளியில் இவ்வளவு கவிதைகளை எழுதியுள்ளார். சல்மாவின் இரண்டு தொகுதி கவிதைகளில் ஒரே ஒரு இடத்தில் தான் "யோனி" என்ற வார்த்தை வருகிறது. அக்கவிதையில் இரண்டு உடல்களுக்கிடையிலான அரசியல் பேசப்படுகிறது. இவரும் ஆபாசக் கவியாக சித்தரிக்கப்படுகிறார். இவர்கள் எழுதியிருக்கும் மீதி 99 சதவீத கவிதைகள் எதை முன்னிறுத்திப் பேசுகின்றன. என்பது குறித்து இப்பிரபலங்களுக்கு அக்கறையில்லை இப்பெண்களிடம் பதிவாகியுள்ள பெண் இருப்புச் சார்ந்த கேள்விகளும் சமூகம் சார்ந்த கேள்விகளும் உறவுச் சிக்கல்களும் முரண்பாடுகளும் வலிகளும் இழப்புகளும் அவர்களுக்கு சமூக அக்கறையற்ற செயல்கள்.

குட்டிரேவதி தன் தொகுப்புக்கு "முலைகள்" என தலைப்பிட்டுவிட்டார் அல்லவா அதனால் தமிழ் கூறும் நல்லுகத்திற்கு மழை பொய்த்து விட்டது போலும். உலக சமூகங்களிலேயே இந்திய சினிமாவில் பெண்களை படு கேவலமாக சித்தரிக்கும் சமூகம் வேறில்லை. நம் கோடம்பாக்கத்தில் ஒரு நான்கு நிமிட பாடல் காட்சியில் சுமார் 50 ஜோடி முலைகளைக் காட்சிப்படுத்தாமல் இருக்க முடியாது. இக்காட்சிகளுக்கான பாடல்களை எழுதித்தரும் பல பாடலாசிரியர்களில் ஒருவரால் தமிழ்பெண் கவிகைளப் பார்த்து ஒழுக்கம் கெட்டவர்கள் என கூசாமல் சொல்ல முடிகிறது. இவருடைய சினிமாப் பாடல்களைப் பாடி ஈவ்டீசிங் கேஸில் கைதான இளைஞர்கள் பலர். அந்த கைதுப் பட்டியலை நான் காவல்துறையினரிடம் கோரி பெறயிருக்கிறேன். இந்த ஈவ்டீசிங் கவிஞர் பரப்பிவரும் அவதூற்றை சில மதவாத கவிஞர்களும் வழிமொழிகிறார்கள்.

பெண் எழுதினாலே அது ஒரு சமூக மீறலாக அதன் அடிப்படையிலேயே அமைந்து விடுகிறது. ஆக அவர்களுடைய சொல் ஒவ்வொன்றுமே ஒரு அரசியல் செயற்பாட்டுக்கான அசைவுகளாக அர்த்தம் பெறுகிறது. ஆக அடிப்படையிலேயே ஒரு சமூக ஜீவியாகவும் சமூகநலம் விழையும் போராளியாகவும் வெளிப்படுவது பெண்களுக்கு இயற்கையான ஒரு நிகழ்வாகிறது. இங்கு இவர்களுடைய எழுத்துக்களை ஆபாசம் என்று சொல்வதும் சமூகக்கேடானது என்று சொல்வதும் எந்த ஒரு அறிதல் முறைக்குள்ளும் அடங்காத ஆணாதிக்க பாசிசக் குரலாகும்.

உண்மையில் பெண்கள் யாரும் ஆபாசமாக எழுதுவதில்லை. பெண் எழுத்தென்பது அதன் இயல்பிலேயே அரசியல் வயப்பட்டது. அவ்வரசியல் அறம், ஆண்களை நிலைகுலையச் செய்கிறது. எனவே தான் இவர்கள் இல்லாத ஒன்றை பெண் கவிதைகளின் மேல் ஏற்றி ஆபாச வக்கிரமென அவதூறைப் பரப்புகிறார்கள். உதாரணத்துக்கு என்னுடைய எழுத்துகளுக்கு இங்கே விளக்கம் தருகிறேன்.

எனது "சங்கரபாணி" ,"நீரின்றி அமையாது உலகு", இரண்டு தொகுப்புகளையும் எடுத்துக்கொண்டால் கூப்பிடும் தூரத்தில் உனது தீவு மறைமுக அரங்கம் அகதி வெள்ளைப் பாய்மரங்களும் சங்கிலிகளும் புலி இரும்புத் தொப்பி ஞாயிற்றுக்கிழமைச் சந்தை வீடுகளால் ஆன இனம், படுகளம், மரணங்கள் உருவாக்கப்படுகின்றன." குருவி" "கடவுளைச் செய்பவள்" போன்ற கவிதைகளுக்கு இணையான அரசியல் பார்வை கொண்ட கவிதைகள் தமிழில் இதுவரை இல்லை என்று சொல்லலாம். பிறவற்றில் வெறும் அரசியல் இருக்கும். ஆனால் கவிதையிருக்காது எனது கவிதைகள் ஆத்மநாமிற்குப் பிறகு மிகச்சிறந்த உதாரணங்களாகவும் ஆத்மநாமின் மிடிஸ்கிளாஸ் பார்வை படியாமலும் எழுதப்பட்டுள்ள அரசியல் கவிதைகள். எனது கவிதைகளில் இடம் பெறும் ~யோனி| என்ற உருவகம் சாக்தேய மரபில் தெய்வமாக வழிபடப்படும் மகாசக்தியின் பிரபஞ்சத் தோற்றத்தின் மூல ஊற்று . நெருப்பாலான பிரபஞ்சத் சக்தியின் ஆதிமூலம் சங்க இலக்கியம் காட்டும் பெண் உடல்களில் இன்றும் தேங்கி இயங்கும் அணங்கு எனும் நெருப்பு உருமாறி அருட்பெரும் சோதியாகி நின்ற உருவகமே எனது கவிதைகளில் இடம்பெறும் யோனி. ஆதியும் அந்தமுமில்லா அருட்பெறும் சோதியை எனத்தொடங்கும் திருவெம்பாவையின் முதலடியில் சிவனைக்குறிக்கும் சோதியானது சிவனொடு சேர்ந்த சக்தியே தவிர வேறல்ல. இது மாணிக்க வாசகர் ஏழாம் நூற்றாண்டில் எழுதியது.

நான் சாக்தேய மரபில் வரும் ஒரு கவி. இந்த அடிப்படையில் நான் கூறுவது இது தான். பெண்களின் அறிவார்ந்த வளர்ச்சி சமூகக் குற்றம் செய்துவரும் கவி கொக்ரக்கோ கோக்களுக்கு அச்சத்தைத் தருகிறது. எதையுமே வாசிக்காமல் தமிழ் இலக்கிய மரபோ பிற இந்திய இலக்கிய மற்றும் உலக இலக்கிய மரபோ அறியாத தமிழை விற்றுப்பிழைக்கும் வியாபரிகள் "பெண்கவிகள் தரம்கெட்டுவிட்டதாகச் சொல்லி கூச்சலிடுகிறார்கள்" ஜனநாயக மறுப்போடும் பாசிச ஆணாதிக்க திமிரோடும் மத அடிப்படைவாத கவிஞர்கள் பொத்தாம் பொதுவாக பெண் கவிகைள சினிமா நடிகைகளைப் போல சித்தரிக்கிறர்கள். இவற்றை வெகுசன ஊடகங்களும் வரவேற்கின்றன. இவை கடுமையான கண்டனத்திற்கு உரியன.

(மூட்டுவென் கால் ,தாக்குவென் கால் ஓரென் யானுமோர் பெற்றி மேலிட ஆஆ ஒல்லென கூவு வென் கொல் அலமறல் அசைவளி அலைப்பவென் உயவு நோயறியாது துஞ்சும் ஊர்க்கே எனக்கூறும் ஒளவைளயார் காமத்தைப் பேசி தமிழ்ச் சமூகத்தைக் கெடுக்கும் பெண்களின் கௌன்ட்டவுனில் முதல் இடம் பிடித்திருக்கிறார்.)

குமுதம் தீராநதி இதழுக்கு "பெண்பால் அகதிகள்" என்ற தொடரை எழுதி வரும் மாலதி மைத்ரியின் தொடர் கட்டுரைகள் தொடர்ச்சியாக ஊடறுவில் வெளிவரும்.

http://udaru.blogdrive.com/archive/75.html


oct 2005










Leave a Comment:

Name

Print this item

  பல்மொழி அகராதி ?
Posted by: Netfriend - 10-11-2005, 07:04 AM - Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம் - Replies (9)

பல்மொழி அகராதி தமிமிழுடன் உள்ளதா... ?
அதைபற்றிய தகவல்கள் அறிந்தவர்கள் தகவல்தரமுடியுமா ?
சுவிஸில் 5, 6வருடங்களுக்கு முன் ஒருவர் அந்தமுயற்சியில் இறங்கினார்... அதன் நிலை இப்போ அறிய ஆவல்.. ?
கல்க்குலோற்றர் போன்ற முறையில் இயங்க கூடியது...
மொழிகளை புலத்து தமிழர்கள் கையாள இலகுவாய் இருக்கும்...
இதன் வர்சியையோ தகவல்களோ காணமுடியவில்லை தகவல்கள் தேவை சேவை அடிப்படையில்.. Idea
நன்றி.

Print this item

  நீடுழி வாழ்க
Posted by: inthirajith - 10-11-2005, 02:57 AM - Forum: கவிதை/பாடல் - Replies (2)

நட்பிலே உரிமை உண்டு என் முடிவை மாற்றிய
நண்பியும் நீ தான் மனநலம் கொடுத்து உந்துணைவன்
நட்புபாராட்டி என்னையும் நண்பனாக்கி நம் பாசம்
நகமும் சதையும் போல் ஏதோ ஒரு நட்பால்
நட்டாற்றில் விட்டபோது நான் இருப்பேன் என்று
நலம் நாடிய அருமையான் என் தோழனுக்கும்

நான் கொடுப்பது என் மனசு மட்டும் போதுமா?
நாம் சந்தித்த அந்த வேளைகள் கண்டம் விட்டு
நாம் கண்ட அந்த தருணங்கள் நினைத்தாலும்
நாம் களித்த அந்த ஆனந்தமான தாயக நினைவுகள்
நான் தனியே உன்குடும்பம் என்னை ஒருவனாக
நாடிய அந்த வேளைகள் அதில் நான் அடைந்த இன்பம்

ஆண்டுகள் ஜம்பது சென்றாலும் அழியாது என் அன்பு
ஆள்பவன் யாராக இருந்தாலும் அவன் அன்பான
ஆட்சிபோல் உன்குடும்பதலைவன் அன்பில் அனைத்தும்
ஆழியின் அமைதி போல் புரிந்த வாழ்க்கை வேண்டும்
ஆனமட்டும் அன்பால் வாழ்த்துகிறேன் வார்த்தைகள்
ஆராதனை செய்கிறது வேறு வார்த்தைகள் இன்றி

Print this item

  vcd backup
Posted by: DV THAMILAN - 10-11-2005, 01:23 AM - Forum: வீடியோ தொழில்நுட்பம் - Replies (1)

வணக்கம் எனக்கு ஒரு உதவி வேண்டும். உங்களுக்கு யாருக்காவதும் தெரியுமா எந்த மென்பொருள் vcd backup

Print this item

  நாய்படும் பாடும், நாய்படா பாடும்
Posted by: Birundan - 10-10-2005, 11:00 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - Replies (44)

<img src='http://img410.imageshack.us/img410/9871/hond20springt6ep.gif' border='0' alt='user posted image'>

நம்மை பற்றி பேச நாலு சனம் இருக்கு, நாய பற்றி பேச யார் இருக்கிறார்கள். அதனால் நாயப்பற்றி நான் பேசுகிறேன். பின்னர் யாரும் வந்து நாயின் பெயரில் பேசக்கூடாது, யாரடா உனக்கு அதிகாரம் தந்தது எம்மை பற்றி பேச என்று, அதனால் முதலிலேயே இங்குகூறிவிட்டால் தப்பித்துக்கொள்ள ஏதுவாக அமையும் அல்லவா? இது ஒருவகை பாதுகாப்புதான்.

குளக்காட்டான் போட்ட ஒழுங்கை படத்துக்கு, பூராயம் ஒழுங்கை பற்றி எழுத, அது பற்றி தொடர்ந்து உறவுகள், துரத்தும் நாய்களைப்பற்றி பேச, எழுந்ததே இக்கட்டுரை.

நாய்களில் பலவிதம் உண்டு, பணக்கார நாய்கள் அதை விட்டு விடுவோம். நான் பேசஎடுத்தது சாதாரன நாய்கள். இவையின் பாடு பெரும் பாடுதான்.

ஒரு அலுவல் கனநாட்களாக முடிக்க முடியாது இழுத்துக்கொண்டு சென்றால் சொல்வார்கள், "நாய் படாத பாடு படுறன் அலுவல்தான் முடியுது இல்லை" என்று. நாயுக்கு உன்மையிலேயே அலுவல் இருக்குதா? அதை முடிக்க அது பாடு படுதா? அது சும்மா ஒரு இடத்தில் இருக்காது எந்தநேரமும் ஓட்டமும் நடையும்தான். அதையும் சொல்வார்கள், "நாயுக்கு நிக்க நேரமும் இல்லை செய்ய வேலையும் இல்லை" என்று.

உண்மயில் இங்கத்திய நாய்களை விட எங்கள் ஊர்நாய்கள் பாவம்தான். நாய்கள் அங்க வாழுறது என்பதே பெரும்பாடுதான். ஓரளவு வசதியான ஆக்கள் வளர்க்கும் நாய்கள் பாடு பறவாய் இல்லை. வசதி குறைந்த ஆட்களும், வசதி இல்லாவிட்டாலும் நாய் வளர்க்கும் ஆசையில் வளப்பவர்கள் நாய்களும், தெரு நாய்களும் படும் பாடு பெரும்பாடு.

அவைக்கு முதல் பிரச்சனை உணவு, உணவு காணாமையால் அல்லது இல்லாமையால் அவை முதல் செய்யிற வேலை களவு. களவு என்றால் பெரிய கள்ளக்கடத்தல் அல்ல, உணவின் உரிமையாளருக்கு தெரியாமல் உணவை எடுத்து வருதல், அல்லது அங்கேயே வைத்து உண்ணுதல். இதை சமுதாயம் களவு என்கிறது. அது அதுகளுக்கு தெரியுமா? அது தெரியாமல் அடி வாங்குகின்றன. அடிவாங்கியபின்னர் தப்பித்து ஓடுகின்றன. சிலதுக்கு அடிவிழும் சிலதுக்கு அடிவிழாது, அடி விழுந்தாலும் நொண்டி நொண்டி ஓடித்தப்பும்.

நானும் ஒரு நாய் வளர்த்தேன். நான் சாப்பிடுகிறேனோ இல்லையோ நாய்க்கு மட்டும் சாப்பாடு வைத்து விடுவேன். ஆனால் ஒவ்வரு நாளும் காலையில் கரிபூசியமுகத்தோட கானப்பட்டார். இரவில் நாய்களை அவிழ்த்து விடுவது வழமை. இரவுதானே அவையளின் காவல்கடமை. கரிபூசிய மூஞ்சையை பார்த்த உடனேயே எனக்கு விழங்கிட்டுது, அண்ணாத்தை இரவில் எங்கயோ போய் அலுவல் குடுத்திட்டு வாறார் என்று. எப்படி கண்டு பிடிக்கிறது, ஒரு நாள் அவராவே மாட்டுப்பட்டார் வரும்போது ஒரு அப்ப சட்டியோட வந்தார். நீங்கள் நினைக்கக்கூடாது நான் பழக்கின விளையாட்டு என்று. எங்கள் ஊரிலேயே ஒரேஒரு அப்பக்காற ஆச்சிதான் இருக்கிறா, சில நாட்களின் பின் அவர் வீட்டுபக்கம் வாறதே இல்லை. அப்பக்காற ஆச்சி வீட்டுக்கு போனால் அங்க இருப்பார். கூப்பிட்டாலும் வர மாட்டார் கட்டி இழுத்துக்கொண்டு வருவம், திரும்பவும் போயிடுவார். அங்க ரெண்டு பெடியள் இருக்கிறாங்கள் அவங்கள்தான் எங்கட நாயுக்கு அப்பத்தை குடுத்து மயக்கி போட்டாங்கள் என்று, நானும் தம்பியும் அவங்களோட சண்டையும் போட்டு இருக்கிறம். அவங்களோட சண்டை போட்டாலும் எங்கட நாய் கேட்டால்தானே, சொன்னாலும் நாயுக்கு விளங்கவாபோகுது. பாத்தம் நாயுக்கு அப்பம்தான் விருப்பம் என்றால் அதோட ஆசையை ஏன் கெடுப்பான். அவங்களிடமே நாயை குடுத்துவிட்டோம், நாங்கள் எங்க குடுத்தம் அதுவே ஓடிப்போயிட்டுது.

வளர்த்த நாய் ஓடிப்போனாலும் நாய் வளர்க்கும் ஆசை மட்டும் எங்களை விட்டு போகவில்லை. ஊரில நாய்க்கா பஞ்சம், திரும்பவும் ஒரு நாய் அதன் முடிவு சோகமானது. லிபரேஷன் ஒப்பிறேஷன் நேரம். பொம்மறும், நேவியும் அடித்த அடியில் ஓடிவிட்டோம் கட்டி இருந்த நாயை கவனியாது. ஏழு நாட்களின் பின் வந்து பார்த்தபோது, சங்கிலியில் முறுகி செத்துக்கிடந்தது. அந்த சோகம் இன்னும் உண்டு.

அதோடசரி நாய் வளர்க்கும் ஆசை, அதன் பின் புலம்பெயர்ந்து விட்டோம். அதுகள் எங்களுடன் வாழ்ந்தகாலத்தில் அவையளின் விளையாட்டு சொல்லி மாளாது. ஒழுங்கயால் ஒரு சனமும் போய்வர ஏலாது. பிச்சைக்காரர் வந்தால் அவை துலஞ்சினம், துண்டகாணல்ல துனியகானல்ல நிலைதான்.

ஜரோப்பாவுக்கு வந்தவுடன் அவைக்கு இருக்கிற மரியாதயை பாத்து பெரிய ஆச்சரியம்தான்.
அவையை கிழவிமார் தூக்கிக்கொண்டும் போவினம். குளிர்காலத்தில் அவைக்கு குளிருடுப்பும் போட்டு விடுவினம். படுப்பதுக்கு வீட்டிக்குள் குட்டி மெத்தை சாப்பிட சாப்பிட குறையாத சாப்பாட்டு தட்டு, நேற்று வேலைக்கு போகும் போது பார்த்தேன், குழந்தைகளை வைத்து தள்ளும் வண்டிலில் வைத்து ஒரு நாயை, கிழவி ஒண்று தள்ளிக்கொண்டு போகுது. அது குஜாலா இருந்து கொண்டு போற வாற ஆக்களை பாத்துக்கொண்டு போகுது. ராஜ வாழ்க்கைதான் போங்கள்.

எங்கள் நாய்கள் பாவம் இங்கத்திய நாய்கள் கொடுத்து வைத்தவை என்று சொல்வோம் என்று பார்த்தால், இங்கத்திய சில நாய்களும், நாய் படாப்பாடு படுகினம். இங்கையும் அவை போய் சேரும் இடத்தை பொறுத்தது. "பெனா" என அழைக்கப்படும் பிச்சைகாரர்களிடம், இவர்கள் உண்மையில் பிச்சைகாரர் இல்லை, ஏனெனில் இருக்க வீடும், உண்ண உணவும், உடுக்க உடையும் இருக்கும் இவர்கள் எப்படி? பிச்சைக்காரர்கள் ஆவர், இவர்களுடன் ஒப்பிடும்போது எங்கள் ஊர் பிச்சைகாரர்கள் பாவம். இதுவேறு ஒரு தலைப்பு அதை பிறகு பார்ப்போம். இவர்கள் வளர்க்கும் நாய்கள் பாவம்தான். இத்தனைக்கும் இவ் அரசு நாய்க்கும் சாப்பாட்டுக்கு காசு கொடுக்கிறது. இவர்கள் நாயை வளர்ப்பதே இதற்க்காகத்தான். அதோடகாசுக்கும் வாங்கி குடித்து விடுவார்கள். போனால் போகுது என்று ஒரு சொற்ப உணவை போடுவார்கள். பசிவெறியில் திருப்பி தம்மை கடித்து விடக்கூடாது என்பதற்க்காக. தெளிவாக இருந்தால் ஞாயம் கேட்கும் என்றோ என்னவோ அவைக்கும் கொஞ்சம் பியர் ஊத்தி விடுவினம், தண்ணி இல்லாட்டி அதுகளும் என்ன செய்யும் குடித்து விட்டு போதையில் படுத்து விடும். அதுகளும் பெரும்பாடுதான் படுகிறது.

இவ்வளவு மிருகங்கள் உலகத்தில் இருக்க, இந்தநாய்கள் வந்து எப்படி மனிதர்களுடன் இனைந்து கொண்டன? ஆதிகாலத்தில் நாயும் காட்டு விலங்குதான், ஏன் மனிதன் கூடத்தானே. நாயால் சிங்கம், புலி போல் வேட்டையாட முடியவில்லை, சிங்கம் புலிகூட கூட்டுவைக்க முடியுமா? கடிச்சு போடுங்கள். பாத்திச்சு நாய் மனிதனுக்கு கிட்டபோய் நின்றிச்சுது. சும்மா நின்றால் தப்பா நினைப்பான் என்று, வாலை வேறை ஆட்டிச்சுது. அவனும், தான் சாப்பிட்ட மிச்சமீதியையும், எலும்புகளையும் போட்டான். சும்மா இருந்த நாய்க்கு இது போதாதா? அப்படியே சேந்திச்சு, அடிச்சு துரத்தினாலும் அதுக்கு வேற ஏது போக்கிடம் திரும்பவும் வந்து வாலை ஆட்டிக்கொண்டு நிக்கும். மனிதனும் பார்த்தான் ஆஹா நன்றி உள்ள பிராணி நாய் என்றான். தான் போட்ட உணவை மறக்காது நன்றியோடு திரும்பவும் வந்திட்டுது என்று நினைத்தான். நாயோ அடுத்த வேளை சாப்பட்டுக்காக திரும்பவும் கூட்டு சேர்ந்து கொண்டது. இப்பொது அது வீட்டு நாய்.
இங்கு அதற்கு ராஜபோக வாழ்க்கை, பிழைக்கத்தெரிந்தநாய்.

Print this item

  பின்லேடன் பலி
Posted by: வினித் - 10-10-2005, 09:14 PM - Forum: செய்திகள்: உலகம் - Replies (23)

பூகம்பம் தாக்கியதில் பின்லேடன் பலி? அமெரிக்கா தகவல்
சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடன். அமெரிக்காவின் இரட்டை கோபுர கட்டிடத்தை இவனது அல்கொய்தா இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகள் விமானத்தை மோத விட்டு தகர்த்தனர்.

பின்லேடனை அமெரிக்கா பல வருடங்களாக தேடி வருகிறது. ஆப்கானிஸ்தானில் பின்லேடன் தலைமறைவாக இருப்பதாக கருதி அந்த நாட்டின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. ஆனால் பின்லேடன் கதி என்ன என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை.

பாகிஸ்தானில் ஆப்Öகிஸ்தான் எல்லையையொட்டியுள்ள ஒரு இடத்தில் பின்லேடன் தலைமறைவாக இருப்பதாக தகவல் வெளியானது. என்றாலும் அமெரிக்கா படையிடம் அவன் பிடிபடவில்லை.

இதற்கிடையே கடந்த சனிக்கிழமை பாகிஸ்தானை பூகம்பம் தாக்கியது. இதில் பின்லேடன் மறைந்து இருப்பதாக கருதப்படும் எல்லைப் பகுதியிலும் பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது.

பூகம்பம் தாக்குதலில ஒசாமா பின்லேடன் இறந்திருக்கலாம் அல்லது காயம் அடைந்து இருக்கலாம் என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆனால் இது தொடர்பான உறுதியான தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்று அவர் கூறினார்.

மீட்புப் பணி நடைபெறும் பகுதிகளில் பின்லேடன் பற்றி தகவல் சிக்குமா? என அமெரிக்க அதிகாரிகள் ரகசியமாக கண்காணிக்கிறார்கள்

www.maalaimalar.com

Print this item

  புகைப்படக் கவிதைப் போட்டி - archuna.com
Posted by: Aaruran - 10-10-2005, 08:05 PM - Forum: கவிதை/பாடல் - Replies (1)

http://www.aruchuna.com/news/compitition/k.../ko3/index.html

<img src='http://www.aruchuna.com/news/compitition/ko3/photos/photo1.jpg' border='0' alt='user posted image'>


[b]<span style='font-size:25pt;line-height:100%'>பதினாறுமுழம் கட்டி பரிவாரம் புடை சூழ
ஒயிலான கொண்டையுடன் அழகான வண்டியிலே
நிமிராத தலையோடு நிலமூர்ந்தாள் இவள் ஆச்சி!

தொலையாத வெய்யிலிலே திறந்தாடும் வண்டியிலே
திடமான மனதோடு துப்பாக்கி கரமேந்தி
தமிழீழம் தனைக் காக்கப் புறப்பட்டாள் தமிழச்சி! </span>

Print this item

  தமிழ்ச் சமூகம் இணயத்தளம்
Posted by: kurukaalapoovan - 10-10-2005, 06:52 PM - Forum: இணையம் - Replies (3)

தமிழ்ச் சமூகம் இணயத்தளம்: http://www.tamilsociety.com/

நல்ல பல விடயங்கள் ஆழமாகவும் நிதானமாகவும் விமர்சிக்கப்படுகின்றன.

சிலர் பாடு... :mrgreen:

Print this item