Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 258 online users.
» 0 Member(s) | 255 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,327
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,235
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,301
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,649
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,083
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,472
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,512
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,045
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243

 
  ஓர் அவசரவேண்டுகோள் ...............
Posted by: Nada - 10-14-2005, 09:14 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

நண்பர்களிடம் ஓர் வேண்டுகோள் அன்னைபுூபதி பற்றிய செய்திகள் தேவைப்படுகிறது. தயவுசெய்து உதவுங்கள்.

Print this item

  விடையில்லா இடத்தில்...
Posted by: kuruvikal - 10-14-2005, 07:41 AM - Forum: கவிதை/பாடல் - Replies (10)

<img src='http://img409.imageshack.us/img409/2090/pic454kq.jpg' border='0' alt='user posted image'>

<b>ஆண்டுத் தொடக்கம்...
பள்ளியில் ஒரு பாடம்
பருவ வயதில்
மீசைக்கு அலையும் காலம்
பையன்கள் கையில்
விஞ்ஞானம் ஆண்டு 11
புத்தகமும் கையுமாய்
விழிகள் எதையோ தேடுகின்றன
இலவசம் தான்
என்றாலும் பலரும்
ஏறெடுத்தும் பார்ப்பதில்லை
அன்று....
அவசர அவசரமாய்
பக்கங்கள் புரட்டப்படுகின்றன
நானும் எட்டிப் பார்க்கிறேன்
தாக்கவீதத் தொடரும்
பொன்னர் பிலானும்
ஆவியீர்ப்பும்
குருதிச் சுற்றோட்டமும்
கடந்தே போயிற்று
புரட்டல் நிற்பதாக இல்லை...
அப்பாடா நின்றது
பாடம் இனப்பெருக்கத் தொகுதி
ஆர்வமாய் புரட்டிப்புரட்டி
எதையோ படிக்கின்றார்
காலம் சிறிதுதான்
படித்ததும் தூக்கி வீசப்படுகிறது
புத்தகம் மட்டுமல்ல
பாடம் சொன்னதுமே.....!
மீண்டும்...
மீசை முளைக்கிறது
முறுக்கியபடி
முழங்குவது
முழுத் தூசணம்
ஏனடா இது....??!
புத்தகத்தில் படிக்கிறாய்
நான் பேசுவதால் மட்டும்...???!
பதில் கேள்வி முளைக்கிறது..!
விழிகள் பிதுங்க
வாயடைக்கிறேன்..!
பேசிப் பலனில்லை
முதிர்ச்சிக்கு
அனுபவிக்கட்டும்
அவன் அவன் வழியில்...
நான் என் வழியில்...
இங்கு எது சீர்
எது திருத்தம்...??!
அங்கும் கேள்விதான் மிச்சம்...
விடையில்லா இடத்தில்
விளக்கம் வீண்...!</b>

( குறித்த படத்தில்...தெரிவதுகள் என்ன...??!)

Print this item

  பொலன்னறுவை அரிசி ஆலைகளில் பணியாற்றிய 48 தமிழர்கள் கைது
Posted by: mayooran - 10-14-2005, 04:15 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

பொலன்னறுவையில் உள்ள அரிசி ஆலைகளில் நேற்று வியாழக்கிழமை இரவு சிறிலங்கா காவல்துறையினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு தேடுதலின் போது அங்கு பணியாற்றிய 48 தமிழர்கள் கைது செய்யப்பட்டு விசாரனையின் பின்பு இன்று அதிகாலை விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையைச் சேர்ந்தவர்கள் இந்த அரிசி ஆலைகளில் பணியாற்றுவதாக கிடைத்த தகவலையடுத்து இந்த தேடுதல் மேற்கொள்ளப்பட்டது
இதேவேளை பொலன்னறுவை பிரதேசத்தில் உள்ள அரிசி ஆலைகளில் பணியாற்றும் தமிழர்கள் தொடர்பான விபரங்களை காவல்துறையினர் உரிமையாளர்களிடம் பெற்றுள்ளனர்.

Print this item

  தூதுவளையின் மருத்துவ குணங்கள்
Posted by: vasisutha - 10-13-2005, 11:18 PM - Forum: மருத்துவம் - Replies (1)

தூதுவளையின் மருத்துவ குணங்கள் மிகவும் சக்தி வாய்ந்தது. இது சயரோகம், பிரைமரி காம்ளக்ஸ், ஆஸ்துமா, டான்சிலிட் டீஸ், தைராய்டு கட்டிகள், வாயில், கன்னத்தில் ஏற்படும் கட்டிகளுக்கும் காதில் ஏற்படும் எழுச்சிக் கட்டிக்கும் பயன்படுகிறது. சளியைக் கரைக்கும் தன்மைக்கு முதலிடம் பெறுகிறது. தைராய்டு கட்டிகள் தோன்றியவுடன் தூதுவளையைப் பயன்படுத்தினால் நிரந்தரத் தீர்வு காணலாம்.

தூதுவளை இலையை சேகரித்து சுத்தம் செய்து, பதினைந்து முதல் ஐம்பது கிராம் வரை எடுத்து, ஊற வைத்த அரிசி சேர்த்து அரைத்து ரொட்டியாகத் தயாரித்து காலை உணவாக மூன்று ரொட்டிக்குக் குறையாமல் இரண்டு மாதங்கள் சாப்பிட்டால், பூரண குணம் ஏற்படும். முதல் பதினைந்து தினங்கள் முதல் தொண்டைவலி குறைய ஆரம்பிக்கும். பிறகு படிப்படியாக நோய் நிவாரணம் அடையும்.

தூதுவளை இலை 15 கிராம் அளவில் சேகரித்து 500 மில்லி தண்ணீரில் போட்டு 200 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 முதல் 40 மில்லி வரை ஒரு நாளைக்கு மூன்று வேளை இந்த கஷாயத்தைச் சாப்பிட்டு வந்தால், இருமல், இரைப்பு, சளியுடன் கூடிய காய்ச்சல், சயரோகக் காய்ச்சல் குணமாகும்.

இருபது கிராம் தூதுவளை இலையை நெய்யில் வதக்கி துவையலாகவோ, சட்னியாகவோ, பச்சடியாகவோ தயாரித்து பயன்படுத்தினால், மேற்கண்ட நோய்கள் குணமாகும். இப்படி தயாரித்த துவையலை சாப்பிடும்போது காலை, மதியம், இரவு நேர உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் நல்ல பலனை உடனே காண முடியும். இவ்வாறு வாரத்தில் இரண்டு தினங்களாவது சாப்பிட்டு வந்தால் நோய்த் தடுப்பாகவும், நோய் தீர்க்கவும் பயன்படும். இம்முறையில் பயன்படுத்தினால் நுரையீரல் நோய்கள் வராமல் நுரையீரல் பாதுகாக்கப்படும். ஆஸ்துமா, ஈசனோபீலியா நோய் வராமல் தடுப்பு மருந்தாகவும், வந்தபின் நோய் நீக்கவும் பயன்படுகிறது. தூதுவளையைப் பயன்படுத்துவதால் மூளை நரம்புகள் வலிமையடைகின்றன. இதனால் நினைவாற்றல் பெருக உதவியாக இருக்கிறது.

தூதுவிளங்காயைச் சேகரித்து மோரில் ஊற வைத்து வற்றலாகக் காயவைத்து வைத்துக் கொண்டு பனி மற்றும் மழைக்காலங்களில், எண்ணெயில் பொரித்து ஆகாரத்தில் சேர்த்துக் கொண்டால் ஆஸ்துமா நோய் தணியும். நுரையீரல் வலுவடையும்.

தூதுவளை இலையைப் பொடி செய்து வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம். இப்பொடியை உபயோகிப்பதால் சளி, இருமல் நீங்குகிறது. பசியை உண்டாக்குகிறது. ஆஸ்துமா நோயாளிகள் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளலாம். இப்பொடியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு கட்டுப்படும். இப்பொடியுடன் திப்பிலிப் பொடியை சமமாக சேர்த்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால், இருமல் உடனே நின்று விடும்.

பசும்பாலில் இப்பொடியைச் சேர்த்து சாப்பிட்டால் பித்த நோயால் ஏற்படும் மயக்கம் தீரும். இப்பொடியை எருமை மோரில் கலந்து சாப்பிட்டால் இரத்த சோகை நீங்கி இரத்த விருத்தி உண்டாகும்.

தண்ணீரில் கலந்து சாப்பிட்டால் செய்யான் கடி விஷம் தீரும்.

தூதுவளை இலையை நெய்யில் வதக்கி, துவையல் செய்து வாரத்தில் இரண்டு நாளாவது பயன்படுத்தினால் வாயுவைக் கண்டிக்கும். உடல் வலிமை ஏற்படும். மூலரோகப் பிணிகள் குறையும். தாம்பத்ய உறவு மேம்படும்.

ஆஸ்துமா நோயாளிகள், காலை வேளையில் வெறும் வயிற்றில் தூதுவளைச்சாறு 50 மில்லியளவு சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமாவினால் ஏற்படும் சளி, இருமல் கபத்தைப் போக்கும்.

தூதுவளை இலைச்சாறு 100 மில்லி, பசு நெய் 30 மில்லி, இரண்டையும் சேர்த்து தூள் செய்த கோஸ்டம் 5 கிராம் சேர்த்து பதமாய்க் காய்ச்சி வைத்துக் கொண்டு, இதில் ஒரு தேக்கரண்டியளவு, தினம் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் சாதாரண இருமல் முதல் கக்குவான் இருமல் வரை குணமாகும். குழந்தைகளுக்கும் கொடுக்கலாம், பத்தியமில்லை.

தூதுவளையை அடிக்கடி பயன்படுத்தினால் புற்று நோய் வராமல் தடுக்கலாம். தொண்டைப் புற்று, கருப்பை புற்று, வாய்ப்புற்று ஆகிய வற்றிற்கு தூதுவளை மருந்து மிக்க நல்ல பலன் கொடுத்துள்ளது. ஆய்வு மூலம் தொண்டைப்புற்று, வாய்ப்புற்றுக்கு நல்ல மருந்தென நிரூபிக்கப்பட்டுள்ளது.

புகைப்பழக்கம், மதுப்பழக்கம் போன்ற பின் விளைவுகளான புற்றுநோய் எனக் கண்டறியப்பட்டால் ஆரம்ப நிலையிலே தூதுவளை இலையைப் பயன்படுத்தி, பூரண சுகாதாரத்தைச் சில மாதங்களிலே மீண்டும் பெற்று விடலாம்.

சித்த வைத்திய முறையில் தயாரிக்கப்படும் தூதுவளை நெய் பல நோய்களுக்கு நிவாரணமளிக்கிறது. தூதுவளை நெய்யை 1 முதல் இரண்டு தேக்கரண்டியளவு சாப்பிட்டால், எலும்புருக்கி நோய்கள், ஈளை இருமல், கபநோய்கள், மேக நோய்கள், வெப்பு நோய்கள், இரைப்பு, இளைப்பு இருமல் நோய்கள், வாய்வு, குண்டல வாயு முதலியன தீரும்.

தூதுவளையை மிக எளிய முறை உபயோகத்திலேயே பல நன்மைகளை அடைய முடியும்.

இதே போல தூது விளங்காயையும் சமைத்துச் சாப்பிட்டால், கப ரோகம் தீரும். பித்தவாயு இவைகள் நிவர்த்தியாகும்.

_ கே.எஸ். ராமலிங்கம்

நன்றி: குமுதம்

Print this item

  குறும்பட மாலையும் நூல் அறிமுகமும்
Posted by: sOliyAn - 10-13-2005, 10:49 PM - Forum: குறும்படங்கள் - Replies (10)

<img src='http://img423.imageshack.us/img423/9528/shortflim1cn.gif' border='0' alt='user posted image'>

Print this item

  அறிவுமதியின் ''நீலம்'' குறும்படம்
Posted by: AJeevan - 10-13-2005, 07:12 PM - Forum: குறும்படங்கள் - Replies (21)

[size=15]
<img src='http://www.geocities.com/thuvakku/arv1.jpg' border='0' alt='user posted image'>
கடலோரத் தமிழர்களை கடல் விழுங்கிய நாள்.
சுனாமி என்னும் ஆழிப்பேரலை ஆயிரக்கணக்கான தமிழர்களை அடித்துச் சென்றது. அந்தச் சோகத்தை பலரும் அவரவர் மொழியில் பதிவு செய்துள்ளனர். கவிஞர் அறிவுமதி தம் திரைமொழியில் பதிவு செய்துள்ளார்.
நீலம் என்னும் பெயரில் 10 நிமிடக் குறும்பட மாகத் தயாரித்துள்ளார். இப்படம் அண்மையில் பிரான்சு நாட்டில் பாரீசில் நடந்த கேன்ஸ் உலகத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. நிகழ்காலப் பிரச்சினையைப் பேசிய படமாக உலக சினிமா வல்லுநர்களால் பார்க்கப்பட்டது; பாராட்டையும் பெற்றுள்ளது.

நான் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பயின்றபோது என்னுடைய நண்பன் அறிவழகனின் குடும்பத்தில் ஒருவனாக வளர்ந்தேன். கடலூர் துறைமுகம் சோனாங்குப்பத்திலுள்ள அறிவழகனின் தந்தை சோ.சி. நடராசன் தாய் பருவதத் தம்மாள் ஆகியோர் என்னை ஒரு பிள்ளை யாகவே கருதி அன்பு செலுத்தினார்கள். சோனாங் குப்பம் எனது இரண்டாவது தாயூர் ஆனது.
சோனாங்குப்பத்திற்கும் தேவனாம்பட்டினத்திற் கும் இடையில் உள்ள அந்தக் கடற்கரையின் அதிகாலைகளும் அந்திகளும் தான் என்னைக் கவிஞனாக்கியது. இந்தப்பகுதி ஆழிப்பேரலையால் தாக்கப்பட்டது அறிந்து துடித்தேன். உடனடியாக சென்னையிலிருந்து சென்று போய்ப் பார்த்தபோது உள்ளம் வலித்தது.

தமிழ்நாடு, ஈழம், அந்தமான் என தமிழர்கள் வாழும் பகுதிகளையே தேடித்தேடித் தாக்கியுள்ளதே என்ற வேதனை மனதிற்குள். இந்த வேதனையை, மனசின் வலியை கவிஞன் என்ற முறையில் 10 பாடல்களாக்கி வெளிப்படுத்தியுள்ளேன்.

நான் கற்றுக்கொண்ட திரைப்பட மொழியின் மூலம் இயக்குநர் என்ற முறையில் உலகத்திற்கு உணர்த்த வேண்டும் எனக் கருதி நீலம் என்னும் பெயரில் இப்படத்தை இயக்கியுள்ளேன். என்னுடைய இனத்தின் வலியை இப்படத்தின் வழியே உலகத் தாரின் பார்வைக்குக் கொண்டு சென்றிருக்கின்றேன்.

என்னுடைய இந்த முயற்சிக்கு ஒத்துழைப்புக் கொடுத்து முழுச் செலவையும் செந்தூரன் ஏற்றுக் கொண்டார். ஒளி ஓவியர் தங்கர்பச்சான் ஒளிப்பதிவு செய்து தந்தார். அவரது மகன் அர்விந்த் பச்சான், நான் கதையைச் சொன்னபோது நன்றாக உள் வாங்கி சிறப்பாக நடித்தான். படத்தொகுப்புப் பணி யிலிருந்து ஒதுங்கியிருக்கும் பீ. லெனின், இப் படத்தின் படத்தொகுப்பைச் செய்து கொடுத்தார். புது இளைஞர் ந. நிரு பின்னணி இசையைச் செய்தார். இவர்களும், இன்னும் அனைத்துப் பணிகளையும் மேற்கொண்ட யாரும் பணம் வாங்கிக் கொள்ளவில்லை. அனைவரும் என் நன்றிக்குரியவர்கள். இது எனக்கான பெருமையல்ல. இத்தனை பேரின் ஒத்துழைப்போடு நடந்த கூட்டு முயற்சிக்கான வெற்றி என்று நீலம் உருவான உணர்வின் பின்னணியைச் சொன்னார் கவிஞர் அறிவுமதி.


தமிழர்கள் தம் நெடும் வரலாற்றில் பதிவு செய்ததும் குறைவு; அவற்றைப் பாதுகாத்ததும் குறைவு. இழந்ததுதான் ஏராளம். வரலாற்றைச் சரியாய்ப் பதிவு செய்திருக்கும் இந்தப் படத்தில் அழுகிய பிணங்களோ, அழிந்து போன இழப்பு களோ இல்லை. இழந்து போன தமிழரின் வாழ்க்கை யும், எதிர்கால வாழ்வுக்கான போராட்டத்தையும் உணர்த்துவதாய் காட்சிகள் விரிகின்றன.
பெரியாரின் பிள்ளைகள் படமெடுக்க வந்தால் யாருக்காக எடுப்பார்கள்? எப்படி எடுப்பார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டுதான் இப்படம் என்கிறார் அறிவுமதி. தமிழர் வாழும் பகுதிகளிலெல்லாம் சென்று ஆழிப்பேரலை நிகழ்த்திய சோகத்தின் வலியை வெளிக்கொணரும் முயற்சி தான் இந்தப் படைப்பு, மொத் தமே 10 நிமிடங்கள் ஓடக்கூடிய நீலம் குறும்படத்தின் காட்சி இரைச்சலிடும் அலை கட லோடுதான் தொடங்குகிறது. தமிழரின் அடையாளமாய் ஒற் றைப் பனை மரத்தின் புலத்தில் விரிகிற கடற்கரை வெளியின் கால் சுவடுகள் நடுவில் அலைகிற சிறுவன். வாழ வைத்த கடல் வாழ்வைப் பறித்த கொடுமை மனிதனுக்கு மட்டும் நேரவில்லை. கடலையே வாழிடமாகக் கொண்ட மீனும் மடிந்து கிடப்பது இயற்கையல்ல. லட்சக்கணக்கானோர் மடிந்த சோகத்தை, உயிரற்ற மீனும் நண்டும் நமக்கு உணர்த்துகின்றன. நிகழ்ந்துவிட்ட பெருந்துயரத்தின் வலியை அவலக் காட்சிகளின்றி இப்படியும் விவரிக்க முடியுமா? இழப்பு நிரம்பிய விழிகளுடன் கடலை நோக்கும் சிறுவன் தாங்கள் விளையாடிய கடல் வேட்டையாடிச் சென்ற கோரத்தை நிகழ்த்தியது நீதானா என்னும் கேள்வியைத் தேக்கி நிற்கிறான். மீண்டும் கடலிலிருந்து வெளி வந்து தங்கள் வாழ்க்கையைத் தொடங்கி விளையாடிக் கொண்டிருக்கும் நண்டுகளைப் பார்த்தவன் அலைகளையொட்டி ஓடிச் சென்று தேடுகிறான். மணலில் நண்டைத் தேடி எடுத்து சிறுவன் கேட்கிற கேள்விகள் மொழி பேதமற்று யாவருக்கும் புரியும். நீ தினமும் கடலுக்குள்ள போய் போய் தான வர்ற உள்ள போன எங்க அம்மாவைப் பாத்தியா? சொல்லு. ஏன் பதில் சொல்ல மாட்டேங்குற. நீயும் கடல் பெத்த புள்ளைதானே. எங்கம்மாவப் பாத்து வரச் சொல்லு என்று விழிநீர் வழிய சிறுவன் கேட்கும் காட்சி உலுக்குகிறது. சொல்லு, எங்கம்மாவப் பாத்தியா? நீ சொல்ல மாட்டியா? என்று அவன் வேண்டுகோள் வைக்க பதில்சொல்லத் தெரியாமல் நழுவி விழுந்து கடலுக்குள் போகிறது நண்டு. கடல் மணலைக் குவித்துத் தாயின் மடியாய் எண்ணி படுக்கும் சிறுவனை தொடத் தயங்குகிறது கடல் அலை. தான் நிகழ்த்திய கோரத்தால் உறவின்றித் தவிக்கும் சிறுவனுக்கு ஆறுதல் சொல்ல எண்ணிவரும் அலைகள் தயங்கித் தயங்கி அவனைத் தழுவும்போது அன்னையின் தாலாட்டாய் விரிகிறது பின்னணி இசை. கடலும் அன்னை தானே. சோகத்தை சுமந்து தொடங்கும் படம் நம்பிக்கையை விதைத்துவிட்டுச் செல்கிறது.
என்ன சோகம் நிகழ்ந்தாலும் வாழ்வைத்தேடி மீண்டும் கடலுக்குள் தானே போகவேண்டும் என்று மீண்டும் தங்கள் வாழ்வைத் தொடங்கும் நண்டுகள், காற்றினூடே அலையும் வண்ணத்துப்பூச்சி, மெதுவாய் எழுந்து ஆறுதல் சொல்லும் கடலலைகள், கொடுக்கக் காத்திருக்கும் மனிதத்தைச் சொல்லும் கடற்கரை கால் தடங்கள் என்று நெஞ்சில் நம்பிக்கையை ஊன்றுகிறது படம்.
<img src='http://www.geocities.com/thuvakku/arv4team.jpg' border='0' alt='user posted image'>
படத்தின் பெரும் பலம் பின்னணி இசை. அறிமுகம் நிருவுக்கு சிறப்புப் பாராட்டு.
தங்கர்பச்சானின் ஒளிப்பதிவும், லெனினின் படத்தொகுப்புக்கு காட்சிகளை நகர்த்தவில்லை. அதன் போக்கில் தவழவிட்டிருக்கின்றன.

படத்தில் நடித்திருப்பது கடலும் சிறுவனும் மட்டும்தான். ஆனால் சிறுவன் நடிக்கவில்லை; வாழ்ந்துவிட்ட சிறுவன் இயக்குநர் தங்கர்பச்சானின் மகன் அர்விந்த் பச்சான். இவரின் நடிப்புத் திறனுக்குக் கிடைத்த மாபெரும் வாய்ப்பு இந்த கதாபாத்திரம்.

தான் கற்ற திரை மொழியை தமிழனுக்காய் வடித்திருக்கிறார் இயக்குநர் அறிவுமதி. கவித்துவமான இந்தப் படைப்பு சொல்லும் இவர் கவிஞர் அறிவுமதி என்று.

நன்றி : உண்மை
&
http://iishaq.blogspot.com/2005/07/blog-po...07.html[/color]

<b>முக்கிய குறிப்பு:</b> பின்னணி இசை அறிமுகம் <b>நிரு</b> பிரான்சிலிருந்து தமிழகம் சென்று இசைத்துறையில் தடம் பதிக்கும் ஈழத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Print this item

  இலக்கியத்துக்கான நோபல் பரிசு
Posted by: AJeevan - 10-13-2005, 06:58 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

<b>இலக்கியத்துக்கான நோபல் பரிசு</b>
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40904000/jpg/_40904910_harold_pinter203_pa.jpg' border='0' alt='user posted image'>
<i>பிண்டர் </i>

இலக்கியத்துக்கான நோபல் பரிசு இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நாடகாசிரியர் ஹரோல்ட் பிண்டருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் உலகப் போருக்கு பிந்தைய காலத்தில், பிரிட்டன் நாடகத்தின் பிரதான அடையாளமாக பின்டர் திகழ்ந்தார் என்று நோபல் பரிசை வழங்கும் ஸ்வீடிஷ் அகடமி தெரிவித்துள்ளது.

இவருடைய நாடகங்கள் அன்றாட நடவடிக்கைகளிலும், நிகழ்வுகளிலும் உள்ள ஆபத்துக்களை வெளிக்கொண்டு வருவதாக இவரை இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுக்குத் தேர்ந்தெடுத்த நடுவர்கள் கூறியுள்ளனர்.

1950 களின் ஆரம்பங்களில் இருந்து நாடகங்களை எழுதி வரும் ஹரால்ட் பின்டர் பேர்த்டே பார்ட்டி, தி கெயார் டேக்கர் உள்ளிட்ட 29 நாடகங்களை எழுதியுள்ளார்.

உடை தயாரிக்கும் யூதருக்கு பிறந்த பின்டர், தனது இளமை காலத்தில், யூதர்களுக்கு எதிரான கொடுமைகளை எதிர்கொண்டார்.

இதுதான் தன்னை ஒரு கதாசிரியராகத் தூண்டியது என்று அவர் தெரிவித்துள்ளார்.

இடதுசாரி அரசியல் நிலைப்பாட்டை கொண்ட பின்டர், அமெரிக்காவுடன் கூட்டு சேர்ந்து பிரிட்டன் ஈராக் நாட்டை ஆக்கிரமித்ததை கடுமையாக கண்டித்தார்.

-BBC tamil

Print this item

  கசப்பான வேம்பில் இனிப்பான பால்
Posted by: RaMa - 10-13-2005, 05:33 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

கசப்பான வேம்பில் இனிப்பான பால்



வாழைச்சேனையில் கசப்பான வேம்பில் இனிப்பான பால் பொங்கி வழிகின்றது.
கசப்பான வேம்பில் இனிப்பான பால் பொங்கி வழிகின்றது. ஹயராத்வீதி - 04 வாழைச்சேனையில் அமைந்துள்ள முஸ்த்தபாலெவ்வை நாகூர்முகைதீன் என்பவரின் வீட்டிலுள்ள வேம்பு மரம் ஒன்றில் நேற்று காலை 6.00 மணிமுதல் பால் நிறத்தில் தண்ணீர் வடிந்த வண்ணமே உள்ளது. இது தொடர்பாக வீட்டு உரிமையாளர் தெரிவிக்கையில:-

எனது காணியினை சுத்தம் செய்து கொண்டிருந்த போது அயல் வீட்டார்கள் வந்து கதைத்துக் கொண்டு இருந்த போது வேம்பு மரத்தில் பால் வருவதாக என்னிடம் தெரிவித்தார்கள். அப்போது பார்த்தேன் பொங்கி பொங்கி பால் நிறத்தில் நீர் வருவதனை கண்டேன். இத்தண்ணீரை சுவைத்துப் பார்த்தேன் இனிப்பாகவுள்ளது எனத் தெரிவித்தார்

நன்றி:லாங்காசிறி

Print this item

  வணக்கம் நான் கவிப்பிரியன்
Posted by: kpriyan - 10-13-2005, 05:10 PM - Forum: அறிமுகம் - Replies (18)

வணக்கம் நான் கவிப்பிரியன் என்னை களத்திற்கு வரவேற்பீர்களா? நன்றி.. அழகான கவிதைகள் சிலவற்றை பகரலாம் என்னும் எண்ணம்..

Print this item

  கண்கள் இலையை நோக்கட்டும்!
Posted by: இவோன் - 10-13-2005, 03:21 PM - Forum: கவிதை/பாடல் - Replies (8)

சோற்றுக்கு வேண்டும் உலை
சாப்பாட்டுக்கு வேண்டும் இலை

உணவுண்பது ஒரு கலை
காத்திருக்கிறது உனக்காக இலை

இலையில்
இருக்கின்றன
இன்சுவைப்பதார்த்தங்கள்

உலகினில்
உயிர் வாழ
உணவு முக்கயம்
உணவு வேண்டுமெனும்
உணர்வு முக்கியம்
உணர்வென்பது
உருவமற்றது
உணவென்பது
உருவமுள்ளது
உருவமற்ற
உணர்வின் தூண்டலால்
உருவமுள்ள
உணவையுண்டு
உலகத்தில்
உயிர் வாழ்வோழ்ம்


இந்தக் கவிதைக்கு பாராட்டுக்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழரின் பண்பாட்டுக்கு எந்த ஊறும் விளைவிக்காத இந்தக் கவிதையை நீங்கள் தாராளமா உங்கடை மனிசிமார் பொம்பிளைப்பிள்ளையள் எல்லாருக்கும் காட்டலாம்.நடுவீட்டில போஸ்ரல் அடிச்சும் ஒட்டலாம்.

Print this item