10-13-2005, 06:58 PM
<b>இலக்கியத்துக்கான நோபல் பரிசு</b>
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40904000/jpg/_40904910_harold_pinter203_pa.jpg' border='0' alt='user posted image'>
<i>பிண்டர் </i>
இலக்கியத்துக்கான நோபல் பரிசு இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நாடகாசிரியர் ஹரோல்ட் பிண்டருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் உலகப் போருக்கு பிந்தைய காலத்தில், பிரிட்டன் நாடகத்தின் பிரதான அடையாளமாக பின்டர் திகழ்ந்தார் என்று நோபல் பரிசை வழங்கும் ஸ்வீடிஷ் அகடமி தெரிவித்துள்ளது.
இவருடைய நாடகங்கள் அன்றாட நடவடிக்கைகளிலும், நிகழ்வுகளிலும் உள்ள ஆபத்துக்களை வெளிக்கொண்டு வருவதாக இவரை இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுக்குத் தேர்ந்தெடுத்த நடுவர்கள் கூறியுள்ளனர்.
1950 களின் ஆரம்பங்களில் இருந்து நாடகங்களை எழுதி வரும் ஹரால்ட் பின்டர் பேர்த்டே பார்ட்டி, தி கெயார் டேக்கர் உள்ளிட்ட 29 நாடகங்களை எழுதியுள்ளார்.
உடை தயாரிக்கும் யூதருக்கு பிறந்த பின்டர், தனது இளமை காலத்தில், யூதர்களுக்கு எதிரான கொடுமைகளை எதிர்கொண்டார்.
இதுதான் தன்னை ஒரு கதாசிரியராகத் தூண்டியது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இடதுசாரி அரசியல் நிலைப்பாட்டை கொண்ட பின்டர், அமெரிக்காவுடன் கூட்டு சேர்ந்து பிரிட்டன் ஈராக் நாட்டை ஆக்கிரமித்ததை கடுமையாக கண்டித்தார்.
-BBC tamil