![]() |
|
விடையில்லா இடத்தில்... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: விடையில்லா இடத்தில்... (/showthread.php?tid=2903) |
விடையில்லா இடத்தில்... - kuruvikal - 10-14-2005 <img src='http://img409.imageshack.us/img409/2090/pic454kq.jpg' border='0' alt='user posted image'> <b>ஆண்டுத் தொடக்கம்... பள்ளியில் ஒரு பாடம் பருவ வயதில் மீசைக்கு அலையும் காலம் பையன்கள் கையில் விஞ்ஞானம் ஆண்டு 11 புத்தகமும் கையுமாய் விழிகள் எதையோ தேடுகின்றன இலவசம் தான் என்றாலும் பலரும் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை அன்று.... அவசர அவசரமாய் பக்கங்கள் புரட்டப்படுகின்றன நானும் எட்டிப் பார்க்கிறேன் தாக்கவீதத் தொடரும் பொன்னர் பிலானும் ஆவியீர்ப்பும் குருதிச் சுற்றோட்டமும் கடந்தே போயிற்று புரட்டல் நிற்பதாக இல்லை... அப்பாடா நின்றது பாடம் இனப்பெருக்கத் தொகுதி ஆர்வமாய் புரட்டிப்புரட்டி எதையோ படிக்கின்றார் காலம் சிறிதுதான் படித்ததும் தூக்கி வீசப்படுகிறது புத்தகம் மட்டுமல்ல பாடம் சொன்னதுமே.....! மீண்டும்... மீசை முளைக்கிறது முறுக்கியபடி முழங்குவது முழுத் தூசணம் ஏனடா இது....??! புத்தகத்தில் படிக்கிறாய் நான் பேசுவதால் மட்டும்...???! பதில் கேள்வி முளைக்கிறது..! விழிகள் பிதுங்க வாயடைக்கிறேன்..! பேசிப் பலனில்லை முதிர்ச்சிக்கு அனுபவிக்கட்டும் அவன் அவன் வழியில்... நான் என் வழியில்... இங்கு எது சீர் எது திருத்தம்...??! அங்கும் கேள்விதான் மிச்சம்... விடையில்லா இடத்தில் விளக்கம் வீண்...!</b> ( குறித்த படத்தில்...தெரிவதுகள் என்ன...??!) - Birundan - 10-14-2005 வாழ்த்துக்கள். - Birundan - 10-14-2005 :wink: - inthirajith - 10-14-2005 மனிதபரிமாணங்களின் கூர்ப்பு அப்படிதான் டார்வின் விதி சொல்வதும் அது தான் கவிதை நன்று தொடருங்கள் - RaMa - 10-15-2005 கவிதைகள் நல்லாயிருக்கு குருவிகள் - Vasampu - 10-15-2005 கதை கவிதைகளில் நேயர்களின் பாசம் வேண்டுமா தாராளமாக புகுத்து ஆபாசத்தை அள்ளிவிடு விரசத்தை ஆபாசம் விரசமென பிதற்றுவோரெல்லாம் வயசிற்குவராதோர் இங்கு போய் உமது சங்கநாதம் ஒலிப்பது வீண் - கீதா - 10-17-2005 கவிதைக்கு நன்றி குருவிஅண்ணா - kurukaalapoovan - 10-17-2005 பறவைக்காச்சல் வேற உலாவுது. எல்லாம் ஓரே குளப்பாமா இருக்குது. :roll: குருவிகள் ஆயு ஓல்றைர்? - kuruvikal - 10-17-2005 நேர்மையோடு...கருத்துக்கள் பகிர்த்த கள உறவுகளுக்கு நன்றிகள்..! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 10-17-2005 kurukaalapoovan Wrote:பறவைக்காச்சல் வேற உலாவுது. எல்லாம் ஓரே குளப்பாமா இருக்குது. :roll: குருவிகள் ஆயு ஓல்றைர்? நீங்கள் ஏன் குழம்புறேள்... காய்ச்சல் குருவிக்கு வராது.. உங்களுக்கு வராம பாத்தோண்டாச் சரி..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Re: விடையில்லா இடத்தில்... - sWEEtmICHe - 10-25-2005 kuruvikal Wrote:இலவசம் தான்மிக அருமையான வரிகள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
|