| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 168 online users. » 0 Member(s) | 165 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,327
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,235
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,301
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,649
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,083
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,472
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,512
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,045
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243
|
|
|
| உலகமனிதமே நீ அறியாததா !? |
|
Posted by: Netfriend - 10-16-2005, 05:04 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (3)
|
 |
எண்பத்து மூன்று ஜூலை..
ஈழத்தமிழர் தம்
இதயங்களில்
உணர்வுகளைத் தட்டி
உசுப்பேற்றி விட்ட
உன்னத மாதம்.....
ஏலவே எரிந்த
இனவாத நெருப்பால்
காலத்துக்குக் காலம்
கருகிக் கொண்டிருந்தவர்கள்
காணும் காணும் எனக்கூறிக்
கண்விழிப்பதற்குக்
காரணமாயிருந்தது
எண்பத்து முன்று.....
உயிர்வாழ விரும்பினால் - நீ
உனக்கென ஒருதேசம்
சமைத்திடு என்று
உறைப்பாக உணர்த்தியது
எண்பத்து முன்று......
அதுவரை காலமும்
தந்ததையெல்லாம் வாங்கித்
தலைகுனிந்து கொண்டிருந்தான்
தமிழன்..
பொறுத்துப் பொறுத்து
அவனது பொறுமைக் குணம்
மீள்தன்மை மட்டை
மீறத் தொடங்கியது..
அதன்பின் தான் அவன்
நியுூட்டனின்
முன்றாம் விதியைச்
சரிபார்க்கத் தொடங்கினான்.....
எண்பத்து முன்று ஜூலை
என்னதான் செய்தது?
அன்று..
சிறைச் சாலைகள்
மரணச் சாலைகளாயின......
தன் தேசத்தின் விடிவுகாணத்
துடித்த கண்கள்
காடைக் கரடிகளால்
துருவியெடுக்கப் பட்டன.....
தலைநகர வீதிகளில்
தமிழர் தலைகள்
தட்டுப்பாடின்றித்
தாராளமாய்க் கிடந்தன.....
கொல்லாமை போதிக்கும்
புத்தன் புூமி
ரத்த வெறிகொண்டு
முட்டிய வேள்வியில்
தமிழர்தம் மெய்கள்
நெய்யாகிச் சொரிந்தன.....
வானொலியில் உத்தமர்
வடிவாகச் செப்பினார்
ஏன் உமது பாதுகாப்பை
நீவிரே உறுதி செய்வீர்
இன்று
தனது பாதுகாப்பைத்
தானே உறுதி செய்ய
முடியாது தவிக்கிறது
தலைநகர்......
பத்தடிக்கொரு
பாதுகாப்பு அரண்..
நட்ட நடுநிசியில்
நாய்களின் ஓலத்தை
நயமாகக் கேட்டபடி
வீட்டுக்கு வீடு
சுற்றிவளைப்பு, சோதனை.....
நிம்மதியான நித்திரை
நித்தமும் குலைவது
தமிழருக்கு மட்டுமல்ல..
இன்று
தலைநகரில்
தங்கியிருக்கும்
சகலருக்குமே..
என்ன காரணம்?
யாரிந்தப் பெரு நெருப்பை
எரியுூட்டி வளர்த்தவர்கள்?
தன்வினை தன்னைச் சுடும்
ஓட்டப்பம் வீட்டைச் சுடும்..
நீவிர்
மூட்டிய பெருநெருப்பு
நித்தமும்
உம்மைச் சுடும்.....
மீண்டிட வழி வேண்டின்
ஆண்டிட உரிமை கொடும்..
முண்ட பெரு நெருப்பை
முழுதாய் அணைத்திடலாம்....
நன்றி: நிதர்சனம்.
நான்ரசித்த கவிதை...
|
|
|
| பண்பாடு கெட்டது யாரால்? |
|
Posted by: இவோன் - 10-16-2005, 02:13 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (1)
|
 |
பண்பாடு கெட்டது யாரால்?
இங்கிலாந்தின் சார்ட்டிஸ்ட் மூவ்மென்டுக்கும் (சாசன இயக்கம்), பிரான்சின் இலக்கியப் புரட்சிக்கும், சீனத்தின் அபினி யுத்தத்துக்கும் வரலாற்றில் அழியாத இடம் உண்டு. மத நம்பிக்கைகளாலும், பிரபுத்துவப் பழமை வாதத்தாலும் சீரழிந்து கொண்டிருந்த சமூக அமைப்பை மாற்றிக்காட்டுவதில் கண்டிப்பும் கருணையும் மிகுந்த ஒரு பேராசிரியரைப் போல் இவை செயல்பட்டன.
ஆசாரக் கள்ளர்களின் பொய் முகங்களைக் கிழித்தெறிந்து ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வுகளையும் நியாயங்களையும் பகிரங்கமாகப் பிரகடனம் செய்தன. கூடுதலாக சார்ட்டிஸ்ட்டுகள்தான் ஆங்கில என்சைக்ளோபீடியா கலைக்களஞ்சியம் என்னும் தொகுப்பை வழங்கினார்கள். பிரான்சின் இலக்கியப் படைப்புகள்தான் பல நாடுகளின் புரட்சிக்கு வித்திட்டன. சீனத்தின் அபினி யுத்தம்தான் போதையிலும் அடிமைத்தனத்திலும் வீழ்ந்து கிடந்த மக்களுக்கு விடுதலையின் அவசியத்தைப் புரிய வைத்தது.
தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் என்கிற அமைப்பின் தோற்றம் சாசன இயக்கத்தைப் போல், பிரஞ்சு இலக்கியப் புரட்சியைப் போல், அபினி யுத்தத்தைப் போல் தமிழகத்தில் சிந்தனை மாற்றத்துக்கும், பண்பாட்டு வளர்ச்சிக்கும், புதிய சமூகக் கட்டமைப்புக்கும் வித்திடக்கூடும் என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
ஆனால் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின் "கலாச்சாரப் புரட்சி' தங்கர் பச்சான் என்கிற திரைப்பட இயக்குநரை மன்னிப்புக் கேட்க வைத்ததற்குப் பழி தீர்க்கும் நோக்கில் நடிகை குஷ்புவுக்கு எதிரான போராட்டமாக மாறியிருப்பது ஆரோக்கியமான நடவடிக்கையாகத் தெரியவில்லை.
"பண்பாட்டு எழுச்சி'யைப் பாமரத்தனமான சினிமா ரசிகர்களின் தரத்துக்குச் சிறுமைபடுத்திவிடக் கூடாது.
பண்பாடு என்பதைத் தங்கர் பச்சானுக்கும் குஷ்புவுக்குமான தனிப்பட்ட பிரச்சினையாகப் பார்க்காமல் ஒரு சமூகப் பிரச்சினை என்கிற முறையில் பண்பாடு என்பது குறித்துத் தீவிரமாகச் சிந்திப்போமே!
தங்கர் பச்சான் இயக்கித் தயாரித்த முதல் திரைப்படம் "அழகி'.
பள்ளிப் பருவம் முதலே தன்னுடன் பயிலும் மாணவி ஒருத்தி மீது கதாநாயகனுக்கு ஒருவித மயக்கம். நகரத்துக்குச் சென்று படித்துவிட்டு ஊர் திரும்பியவனுக்கு ஏமாற்றம். தனது பிரியத்துக்குரிய அழகியின் குடும்பம் எங்கோ போய்விட்டதால், அவளைச் சந்திக்க முடியவில்லை. வெகு இயல்பாய் மறந்துவிடுகிறான். பிறகு வசதியான வாழ்க்கை, அழகிய மனைவி என்று புதிய வாழ்க்கையில் மூழ்கிவிடுகிறான். ஒருநாள்...
தனது பழைய அழகி கல்யாணமாகி, கணவனை இழந்து, ஒரு சிறுவனுடன் "சித்தாள்' வேலை செய்து வறுமையில் வாடுவதை அறிந்து அவளுக்கு உதவுகிறான். பிறகு வீட்டுக்கே அழைத்து வருகிறான். புதிய அழகி வெளியே சென்றிருந்த நேரம் பார்த்துப் பழைய அழகியைப் படுக்கை அறைக்கு அழைத்துச் செல்கிறான். படுக்கையறைக் காட்சியைப் பார்த்துவிட்ட புதிய அழகி அதிர்ச்சியடைகிறாள். பழைய அழகி விலகிச் சென்று விடுகிறாள்.
இந்த நாயகன் ஒரு நல்ல காதலனும் அல்ல; நல்ல கணவனும் அல்ல. அழகி என்றால் சுகிப்பதற்குரியவள். இதற்கு மேல் அவன் சிந்திப்பதில்லை. ஆனால் அவன் சந்திக்கும் அந்த இரு அழகிகளுமே அவனை வெறுப்பதில்லை. ஆண் அப்படித்தான் இருப்பான். பெண்கள்தான் இம்மாதிரியானவர்களிடம் அன்பு கொண்டு, பக்தி செலுத்தி, தனது பூசனைகளால் அவர்களைத் தெய்வங்களாய் உயர்த்த வேண்டும் என்பதுதான் தங்கரின் "அழகி' தரும் பொழிப்புரை. ஒரே வரியில் சொல்வதானால் அழகி என்றால் அடிமை.தனது படங்களில் அவர் வலியுறுத்தும் பாடம், படிப்பினை குறித்துத் தங்கரின் சுயவிமர்சனமும் இதையே வரைகிறது.
ஒரு படைப்பாளி என்கிற முறையிலும் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின் தீவிர ஆதரவாளன் என்கிற முறையிலும் "பண்பாடு' குறித்து இயக்குநர் தங்கர் என்ன சொல்கிறார்?
""<b>ஓர் ஆண் வேண்டுமானால் எப்படியும் வாழ முடியும். ஆனால், ஒரு பெண் இப்படித்தான் வாழ வேண்டும் என்பதை என் திரைப்படங்கள் மூலம் பதிவு செய்து காட்டியிருக்கிறேன்.குறிப்பாக எனது "தென்றல்' படத்தில் தாலி இல்லாமல்கூட இந்தச் சமூகம் புரிந்து கொள்ளாத சூழ்நிலையிலும், தன் மனதைப் பறிகொடுத்தவன் நினைவிலேயே வாழ்ந்த பெண்ணைச் சுட்டிக் காட்டியிருக்கிறேன்.
இப்போது வெளியாகியிருக்கும் "சிதம்பரத்தில் ஓர் அப்பாசாமி' படத்தின் ஹீரோயின் கூடப் பல சூழல்களிலும் தடம்புரளாமல் கற்பு நெறியோடு வாழ்வதைத்தான் எடுத்துக் காட்டியிருக்கிறேன்.
இவைகளை நான் ஏன் சுட்டிக் காட்டுகிறேன் என்றால், நம் தமிழர்களின் கலாசாரத்தை தமிழ்ப் பெண்களின் ஒழுக்க நெறியை மட்டுமே நான் பதிவு செய்து வந்திருக்கிறேன்'' </b>
என்கிறார் தங்கர்.
ஆண், சுதந்திரனாகப் படைக்கப்பட்டவன். பெண் அவனுடைய சுகத்துக்காகப் படைக்கப்பட்டவள். கற்பு என்பதும் ஒழுக்க நெறி என்பதும் பெண்ணுக்கே உரியது என்று தங்கர் வந்துதான் போதிக்கிறார்; பதிவு செய்கிறார் என்று போற்றுவதற்கும் தூற்றுவதற்கும் வெகு காலத்துக்கு முன்பே இங்கே பேசியும் பேணியும் வருகிற சாத்திர தருமமும் இதுதான்.
ஆண்கள் எப்படியும் வாழலாம் என்று போக்கிரித் தனத்துக்குப் பூரண சுதந்திரம் வழங்கி, அது இயற்கை அல்லது ஆண்டவன் விதித்த நியதி, அது ஆண்களின் கேள்வி கேட்கப்பட முடியாத உரிமை என்று தடித்த குரலில் போதிக்கும் ஒரு சமூக அமைப்பை நியாயப்படுத்துகிறார் தங்கர்.
தங்கரின் தென்றல் கற்பு நெறியை மாத்திரமல்லாது "தமிழ் உணர்வின்' தரம் குறித்தும் விரிவுரை செய்கிறது.
கதாநாயகன் ஒரு தமிழ் பாதுகாப்பாளன். தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்திச் சிறைக்குச் செல்கிற ஓர் "இலட்சிய' எழுத்தாளன். அவனால்தான் கதாநாயகி சீரழிக்கப்படுகிறாள். பெண் என்பவள் ஆசைக்கு அணைத்துக் கொள்ளவும், மோகத்தை தீர்த்துக் கொள்ளவும் வசதிக்கேற்ற விலைக்கு விற்கப்படும் ஒரு கவர்ச்சிப் பொருள் என்பது இந்தத் தமிழ் உணர்வில் மூழ்கிய இலட்சியவாதியின் கருத்து. தேவைப்படும் போதெல்லாம் இருக்கிற பணத்துக்கு ஏற்ப கிடைக்கிற பெண்ணுடன் படுத்துப் புரண்டு மறந்து விடுவது அவனுடைய சுபாவம்.
<b>தமிழ் உணர்வாளனை இவ்வளவு தரங்கெட்ட முறையில் யாரும் சித்திரித்ததில்லை.</b> ஆனால், இது குறித்து யாரும் பொங்கி எழவும் இல்லை.
தங்கரின் "தென்றல்' தமிழ் உணர்வையும் தமிழியக்கத்தையும் இழிவு செய்தபோதிலும், ஆண்களுக்குள்ள "தனி உரிமை'யை எந்தப் பெண்ணையும், எத்தனை பெண்களையும் அனுபவிக்கலாம் என்கிற சுதந்திரத்தை மறுக்கவில்லை என்பதால் பண்பாட்டுப் பூசாரிகள் யாரும் பதறிவிடவில்லை.
திருமணத்துக்கு முன்பும் திருமணத்துக்குப் பின்பும் ஆண்கள் எப்படியும் தங்கள் இச்சையைத் தீர்த்துக் கொள்ளலாம்; அது தப்பில்லை என்று ஒப்புக் கொள்ளும் ஒரு சமூக அமைப்பில் பெண்களின் "கற்புக்கு' என்ன உத்தரவாதம்?
ஊர்ப் பெண்களையெல்லாம் நான் அனுபவிப்பேன். ஆனால், எனக்கு மனைவியாக வருகிறவள் மாத்திரம் "உத்தம பத்தினி'யாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது அறிவெல்லை கடந்த ஆணவம் நிறைந்த ஆசையல்லவா?
ஆண்கள் யோக்கியர்களாக இல்லாத ஒரு சமூகத்தில் பெண்கள் "கறை' படாதவர்களாக இருக்க முடியாது என்கிற எதார்த்தம் எதிர்கொள்ளும்போது, அந்தோ, தனக்குள்ள "சுதந்திரமே' அச்சுறுத்தலாகவும் மாறிக் கலங்கித் தவித்து ஒவ்வொரு நிமிடமும் தனது மனைவியைக் கண்காணித்து, இத்தனை கட்டுப்பாட்டுக்குள்ளும் எப்படி இவளால் சிரித்து சிங்காரித்து வாழ முடிகிறது என்று சந்தேகித்து, அவள் அழகாய் இருப்பது வேறொருத்தனுக்காகத்தானோ என்று குமுறிக் குமைந்து நிம்மதியற்று நித்தம் நித்தம் வெந்து கொண்டிருப்பவர்கள் எத்தனை பேர்?
இம்மாதிரியான கலகத்திலும் குழப்பத்திலும் தவிப்பிலும் தகிப்பிலும் ஆண்கள் நிம்மதியற்றுப் போனதால்தான் கற்பு ஒழுக்கம், பண்பாடு என்கிற கூப்பாடு வெகுகாலமாய்க் காதைக் கிழிக்கிறது.
தன்னைப் பற்றிய குற்ற உணர்வும் பெண்ணைப் பற்றிய சந்தேக உணர்வும் ஒன்று திரண்டு ஒவ்வொரு ஆணையும் மிரட்டுகிறது. இந்த அச்சத்திலிருந்து தப்பும் மார்க்கமாக அவன் பத்தினித் தெய்வங்களையும் கற்புக்கரசிகளையும் தேடித் திரிந்து புனைந்துருவாக்கி ஆறுதலடைகிறான்.
தன்னைப் போன்ற "சாத்தான்கள்' உருவாக்கிய "தெய்வம்' தான் கற்புக்கரசி என்கிற நினைப்பு வருகிறபோது, தன் மனைவி தன் மரணத்துக்குப் பிறகும் கற்பு நெறியில் இருப்பாளா? என்கிற சந்தேகம் அவனைக் குத்திக் கிழிக்கிறது.
சஞ்சலப்படும் அவன் குரூரமான முடிவுக்கு வருகிறான். "கணவன் இறந்தால் அவனுடைய மனைவியும் அவனுடன் எரிந்து சாம்பலாக வேண்டும். "உடன்கட்டை' ஏறுதலே பெண்மைக்குப் பெருமை'' கற்பின் கனலி சீதையின் வழிவந்தவளே நீ தெய்வப் பிறவி. வா, இந்த நெருப்பில் இறங்கு, போ அந்த சொர்க்கத்தில் சுகமாக உறங்கு''என்று சதி தருமம் பேசும் கொலைகாரனாகவும் மாறுகிறான். இந்தக் கொலைவெறியை ஒரு சமூக நீதியாகவும் பாரதப் பண்பாடாகவும் இன்றும் போற்றுகிறவர்கள் இல்லையா?
கணவன் இறந்த பிறகும் வாழும் "விதவைக்கு' மனித அந்தஸ்து மறுக்கப்படுவதுடன் ஒரு பிடி சோற்றுக்குக்கூட இரக்கமுள்ளவர்களின் கருணைக்குக் காத்திருக்கும் நிலை.
ஆணாதிக்க சமூக அமைப்பு பெண்ணைச் சாகும்வரை துரத்துகிறது.
இந்த ஆணாதிக்க அக்கிரமத்துக்கு அடிப்படைக் காரணம் பெண்ணுக்குச் சொத்துரிமை இல்லாதது தான். தனிச் சொத்துரிமையின் முதல் தாக்குதல் பெண்மீதே தொடங்கியது என்று கல்வியும் பெரியார்களும் பெண்ணுக்குப் புரிய வைத்தபோது, பிடி சோற்றுக்காக அடிமையாக வாழ்வதைவிட தனது உழைப்பின் மூலம் சுதந்திரமாக வாழ முடியும் என்று தன்னம்பிக்கையோடு மத்தியதர வர்க்கத்துப் பெண்கள் வெளியே வந்தால் காஞ்சி சங்கராச்சாரி போன்ற மதகுருக்கள் "நெற்றிக்கண்' திறக்கிறார்கள்.
"வேலைக்குப் போகும் பெண்கள் எல்லாரும் ஒழுக்கக்கேடானவர்கள்'' என்று சங்கராச்சாரி உழைக்கும் பெண்களுக்கு விபச்சாரி பட்டம் சூட்டியபோது, பெண்கள் மீதான தங்கள் ஆதிபத்திய உரிமையையும் கட்டுப்படுத்தும் அதிகாரத்தையும் இழந்துவிடுவோமோ என்று கலக்கமுற்றிருந்த ஆண்களுக்கு அது வீசுதென்றலாய் வருடியது. பெண் சமூகமும் சங்கராச்சாரியின் அவதூறு குறித்து ஆத்திரம் கொண்டு துடைப்பக்கட்டை தூக்கவில்லை.
""பணத்துக்காக நடிக்கும் நடிகைகளும் விபச்சாரிகளே'' என்று தங்கர்பச்சான் எப்படிக் கூறலாம் என்று கொதித்தெழுந்த நடிகைகள் சங்கராச்சாரி உழைக்கும் பெண்கள் அனைவரையுமே விபச்சாரிகள் என்று வசைபாடியபோது, செவிடராய், ஊமையராய்ச் சலனமற்றுக் கிடந்தது ஏன்?
இன்று நடிகை குஷ்பு கூறிய கருத்துக்களால் தமிழ்ப் பெண்களின் மானமே தாக்கப்பட்டு விட்டதாகப் "புண்பட்ட நெஞ்சோடும்' போராடும் துணிவோடும் புறப்பட்டிருக்கும் மகளிர் அணிகூட சங்கராச்சாரிக்கு எதிராகக் கிளர்ந்தெழாதது ஏன்?
படுக்கையறை அந்தரங்கங்களைப் பகிரங்கமாகப் பாடித் திரிந்த ஆண்டாளையும், அவள் பாசுரங்களைப் பஜனை பாடிக்களிக்கும் அடியார் கூட்டத்தையும் போற்றித் துதிப்பது எப்படி?
பெண்களை இழிவு செய்வதிலும் அடிமைப்படுத்துவதிலும், மதகுருமார்களின் பங்கை நேர்மை உணர்ச்சியுள்ள யாராலும் மன்னித்து விட முடியாது.
இந்து (ஆரிய) மதத்தில் கடவுள்கள் கூடக் குடிகாரனாகவும், காமுகனாகவும், ஒழுக்கக் கேடானவனாகவும், ஓரினச் சேர்க்கையிலும், மிருகங்களைப் புணர்வதிலும் வெறிகொண்ட வெட்கமற்ற கழிசடையாகவுமே இருக்கிறார்கள். பண்பாட்டுப் போராளிகள் யாரும் இந்த ஆபாசங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை.
இந்து மதம் பெண்களை மாத்திரமல்ல, ஆரியரல்லாத அனைத்து மக்களையுமே இழிவு செய்கிறது. ஆரியரல்லாத மக்களை அரக்கர்களாகவும், அழிக்கப்பட வேண்டியவர்களாகவுமே சித்திரிக்கிறது.
ஆனாலும், மதமில்லாத, இறையச்சம் இல்லாத உலகத்தை நினைக்கவே நமது சமூகம் அஞ்சுகிறது. "தேசியப் பெருமிதங்கள்(!)' "தமிழ் முழக்கங்கள்' எல்லாம், வீர சைவமாய், விஷ்ணு பக்தியாய் வீழ்ந்து பணிவதிலிருந்து விடுபட முடியவில்லை.
பிரதமர் குடியரசுத் தலைவர் போன்ற உயர் பதவிகளில் இருப்பவர்களும் விஞ்ஞானிகள் என்று பசப்புகிறவர்களும் கூட மத பீடங்களுக்கு முன் மண்டியிடும்போது, யாருக்குத்தான் மத நம்பிக்கைகளிலிருந்து விடுபடவும், மதகுருமார்களை எதிர்க்கவும் துணிச்சல் வரும்?
மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அமைச்சர்கள், மக்களுக்கு உண்மையாயிருப்போம் என்று மக்கள் சக்திக்குத் தலை வணங்காமல் கடவுள் பெயரால் பதவி ஏற்கும்போது, கடவுளே அனைவர்க்கும், அனைத்துக்கும் மேலான அதிபதி என்று முட்டாள் தனத்தை வளர்க்கும்போது, பெண்ணுரிமை, மண்ணுரிமை, மொழியுரிமை, மனித உரிமை எல்லாமே மலிவான வெற்று முழக்கங்களாக மாறிவிடுகின்றன.
பக்திப் பரவசம், பரத்தையர்சேரி, பத்தினிக் கதைகள், பால்வினை நோய்கள், மாயாவாதம், மரணபயம், அகிம்சாவாதம், ஆயுதப்படைகள், சக்தி வழிபாடு, உடன்கட்டை ஏற்பாடு... இந்த இரட்டை நிலைதான், பொய்முகத்துடன் திரியும் ஆசாரக் கள்ளர்கள் போற்றிப் புகழும் "தமிழ்ப்பண்பாடு', பாரதப் பண்பாடு, வாழ்ந்து தீர்ந்து போன உலகளாவிய நிலப்பிரபுத்துவப் பண்பாடு.
பதினெட்டாம் நூற்றாண்டில் தொடங்கிய தொழில் புரட்சி, நிலப்பிரபுத்துவத்தை உலுக்கியது. புதிதாய் எழுந்த ஆலைச் சங்கொலிகள் பழைய சமூகக் கட்டமைப்பின் இறுதியை முன்னறிவித்தன.
எங்கெல்லாம் முதலாளித்துவ ஆதிக்கம் நிலை பெற்றதோ அங்கெல்லாம் அது எல்லா விதமான பிரபுத்துவ உறவுகளுக்கும் தந்தை வழிச் சமுதாய உறவுகளுக்கும் கிராமியப் பாரம்பரிய உறவுகளுக்கும் முடிவு கட்டியது.
"தெய்வீக உரிமை பெற்ற மேலோர்'க்குத் தாள் பணியுமாறு கட்டிப்போட்ட பல்வேறு விதமான பிரபுத்துவ பந்தங்களையும் ஈவிரக்கமின்றி அறுத்தெறிந்தது.
மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையே அப்பட்டமான தன்னலத்தைத் தவிர பரிவுணர்ச்சியில்லாப் "பணப் பட்டுவாடா'வைத் தவிர வேறு ஒட்டுமில்லை உறவுமில்லை என்றாக்கியது.
சமயத்துறைப் பக்திப் பரவசம், பேராண்மையின் வீராவேசம், உளநெகிழ்ச்சிப் பசப்பு ஆகிய புனிதப் பேரானந்தங்களையெல்லாம் சுயநலவேட்கையெனும் உறைபனிக் குளிர்நீரில் மூழ்கடித்துவிட்டது.
மனிதனது மாண்பினைப் பரிவர்த்தனை மதிப்பாய் மாற்றியிருக்கிறது. சாசனங்களில் பிரகடனம் செய்யப்பட்ட விலக்கவோ துறக்கவோ முடியாத எண்ணிலடங்காச் சுதந்திரங்களுக்குப் பதிலாக வெட்கங்கெட்ட வாணிபச் சுதந்திரமெனும் ஒரேயொரு சுதந்திரத்தை ஆசனத்தில் அமர்த்தி அழகு பார்க்கிறது.
சுருங்கச் சொல்வதெனில் மதப்பிரமைகளாலும், அரசியல் பிரமைகளாலும் திரையிட்டு மறைக்கப்பட்ட சுரண்டலுக்குப் பதிலாக முதலாளித்துவ வர்க்கம் வெட்க உணர்ச்சியற்ற அம்மணமான, நேரடியான, மிருகத்தனமான சுரண்டலை நிலை நாட்டியிருக்கிறது.
ஆதிக்க சக்தியாக மாறிவிட்ட முதலாளித்துவத்தின் வசீக முழக்கங்களும் சுதந்திரப் பிரகடனங்களும், வெகுகாலமாய் ஆணாதிக்கக் கொடுமையின் கீழ் அழுந்தி வதைபட்ட பெண்ணின் மனத்தில் எதிர் விளைவுகளை ஏற்படுத்துகிறது.
பின் நவீனத்துவம், கட்டுடைத்தல் என்கிற கருத்தியல், புதிய சமுதாயத்திற்கும் பெண் விடுதலைக்குமான போராயுதமாக மின்னிச் சுடர்கிறது.
பிரபுத்துவக் கட்டமைப்பில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த "அடிமைப் பெண்களை' முதலாளித்துவம் சுதந்திரமான அழகிகளாய் உலகுக்குக் காட்டுகிறது.
கணவன் விருப்பப்படியான உடலுறவுக்குப் பதில் கட்டுத் தளையற்ற காமத்துக்கு வரவேற்பளிக்கிறது. மறைவில் நடந்த கள்ள உறவுகளை அலங்கார மேடைகளில் வெளிப்படையாய் அரங்கேற்றுகிறது.
"சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட திருமணங்களை ரொக்கத்துக்கு முன் விசாரணை செய்கிறது.
சந்தைப் பொருளாதாரத்தை விரிவு செய்கிறது. ஒவ்வொரு நாட்டையும் கொள்ளையடிக்க எல்லா நாடுகளுக்கும் வாய்ப்பளிப்பதாக ஒப்பந்தம் செய்கிறது. உலகைக் கொள்ளையடிக்க விரும்பும் ஒரு சமூகம் பழைய பண்பாடுகளையும் "பாரம்பரியப் பெருமை(!)'களையும் காதல், கற்பு, திருமணம் என்னும் "புனித (!)' உறவுகளையும் கட்டிக் காத்துக் கொண்டிருக்க முடியாது.
தாகத்துக்காகக் "கிணறு' தோண்டிக் கொண்டிராதே; கிணற்றை வழிபடாதே; எதையுமே பயன்படுத்தித் தூக்கியெறி என்னும் நுகர்வுக் கலாச்சாரம் ஒன்று உருவாகிறது. இந்த நுகர்வுக் கலாச்சாரத்தில் பெண் ஒரு கவர்ச்சியான விற்பனைச் சரக்காகிறாள். கலை, இலக்கியம், பத்திரிகை, இணைய தளம் எங்கும் எதிலும் வெறியூட்டும் கவர்ச்சி, வெள்ளமாய் பெருக்கெடுக்கிறது.
"உலகமயமாக்கலின்' தவிர்க்க முடியாத தேவையாக மக்களைப் போதையிலாழ்த்தும் விபரீதங்கள் புதிது புதிதாய் மலர்கின்றன. முன்பு சபிக்கப்பட்ட அபலையாய் அழுது கொண்டிருந்த பெண், இப்போது "சுதந்திர'ப் பிறவியாய் எல்லா விளம்பரங்களிலும் சிரித்துக் கொண்டிருக்கிறாள்.
முன்பு கண்ணீரில் கரைந்து கொண்டிருந்த பெண் இப்போது புன்னகையோடு புதைந்து கொண்டிருக்கிறாள்.
முன்பு ஆணின் தனிச்சொத்தாக இருந்த பெண் இப்போது உலகமயமாக்கப்பட்டு விட்டாள்.
பிரபுத்துவ சமூக அமைப்போ தனது அழிவின் விளிம்பில் நின்று கடைசி முயற்சியாகப் "பண்பாட்டுப் பதாகை'யை உயர்த்திப் பிடித்து இன்னும் தன்னிடமிருந்து வெளியேறாத பெண்களின் காலடியில் விழுந்து மன்றாடுகிறது.
ஒருபுறம் நிலப்பிரபுத்துவப் பழமைவாதம்; மறுபுறம் முதலாளித்துவ ஏகாதிபத்தியப் புதுமை மோகம்! இருபுறத்திலும் இரு தத்துவங்களும் பெண்ணையே முன்னிறுத்துகின்றன. இந்த இருபுறத்திலும் பெண்ணுக்குச் சுதந்திரமில்லை என்பதை இரு தரப்பிலும் பெண்கள் உணரவில்லை.
அங்கே தனது விலங்கை மெச்சிக் கொள்கிறாள் பெண்.
இங்கே தனது விலையை மெச்சிக் கொள்கிறாள் பெண்.
""ஆண் வேண்டுமானால் எப்படியும் வாழலாம். ஆனால் ஒரு பெண் இப்படித்தான் வாழவேண்டும்'' என்றொரு "பண்பாடு' வலியுறுத்தப்படும்போது,
ஆண்கள் எப்படியும் வாழ உரிமை பெற்ற ஒரு சமுதாயத்தில், "அதுதான் பண்பாடு' என்று போதிக்கும் ஒரு சமூக அமைப்பில்,
"எப்படியும்' வாழும் உரிமை பெற்ற ஆண்களால் "இப்படித்தான்' வாழ வேண்டும் என்று விரும்பும் பெண்கூட ஆணின் மோக வெறிக்கு இரையாக மாட்டாளா? இங்கே பெண்ணின் "கன்னித்தன்மைக்கு' என்ன உத்தரவாதம்?
இந்தப் பின்னணியில் தான் "பெண்கள் திருமணமாகும்போது கன்னித் தன்மையோடு இருக்க வேண்டும் என்பது போன்ற எண்ணங்களிலிருந்து நமது சமுதாயம் விடுதலை பெறவேண்டும். கல்வி பெற்ற எந்த ஆண் மகனும் தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறவள் கன்னித் தன்மையோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டான். ஆனால், திருமணத்துக்கு முன்பு "செக்ஸ்' வைத்துக் கொள்ளும்போது, கர்ப்பம், பால்வினை நோய் முதலியவற்றைத் தவிர்க்க பெண்கள் பாதுகாப்போடு செயல்பட வேண்டும்'' என்று குஷ்பு கூறுகிறார்.
""தென்றல்' கதாநாயகியின் நிலை எந்தப் பெண்ணுக்கும் நேரக்கூடாது'' என்பதுதான் குஷ்புவின் கருத்து.
ஆனால், ""பாதுகாப்பான செக்ஸ் என்பது ஆணுறை விளம்பரத்துக்கே உதவும் ஆணாதிக்கத்தை ஒழிக்காது'' என்கிறார் தொல்.திருமாவளவன். அவருடைய வாதம் நியாயமானதுதான். ஆனால், தீர்வு?
""ஆண்களின் நலனுக்காக ஆண்களால் கற்பிக்கப்பட்டு, பெண்களின் மீது திணிக்கப்பட்ட வன்முறை தான் கற்பு.
ஊரறியத் திருமணம் செய்து கொண்டாலும் பிறக்கிற குழந்தை தனக்குப் பிறந்ததே என்று உறுதி செய்து கொள்வதற்காகப் பெண்களின் மீது திணிக்கப்பட்டதுதான் கற்பு.
<b>ஆண்களின் சொத்தாசை தான் கற்பு என்கிற கற்பிதத்தை உருவாக்கியுள்ளது''</b> என்று சரியாகவே கூறிய திருமாவளவன் (இந்தியா டுடே ஜனவரி 16, 2005) குஷ்புவால் தமிழ்ப் பண்பாடு கெட்டுவிட்டதாக இப்போது சொல்வது, முரண்பாட்டின் முட்டுச் சந்தில் அவர் சிக்கிக் கொண்டதையே காட்டுகிறது.
<b>திருமாவளவனின் முற்போக்குச் சிந்தனை, அவரை உயரமான இடத்துக்குக் கொண்டு வருகிறது. தனிப்பட்ட கோபதாபமோ அவரைப் பள்ளத்தாக்கில் இழுத்துத் தள்ளிவிடுகிறது.
முற்போக்குச் சிந்தனையாளர்கள்,
பெண், தலித், கறுப்பின மக்கள்
இவர்களின் குரலை அக்கறையுடன் பரிசலீக்க வேண்டும். "நாடு கடத்துவோம்; தூக்கிலிடுவோம்' என்று உணர்ச்சிமீதுறப் பேசுவது பாசிசப் போக்கே ஆகும்.
நிலப்பிரபுத்துவமோ, முதலாளித்துவமோ, ஏகாதிபத்தியமோ பெண் விடுதலையை அனுமதிக்காது. பெரியாரியமுமே மார்க்சியமுமே உண்மையான பெண் விடுதலையை உறுதி செய்யும். சோஷலிசமே சமூகக் கொடுமைகள் அனைத்துக்கும் முடிவு கட்டும் என்கிற புரிதலுடன் இயக்கம் நடத்தும் பெண்களும் இங்கே இருக்கிறார்கள்.
இவர்கள் சங்கராச்சாரிகளையும் எதிர்ப்பார்கள். சங்க இலக்கியமே ஆனாலும் தவறென்றால் எதிர்ப்பார்கள்.
தனிச் சொத்துரிமையின் அழிவிலேதான், வர்க்கப் பகைமையின் இரத்தக் கறைகள் துடைக்கப்பட்ட புதிய சமூகத்திலேதான் பெண் பெண்ணாக இருக்க முடியும். அங்கே அவள் அடிமை அல்ல; விளம்பர "அழகி' அல்ல; சுதந்திரச் சிந்தனைகள் மலர்ந்த அன்புமயமான தோழி!'
---------------------------------------
நன்றி: [b]தமிழ்ச் சான்றோர் பேரவை செய்தி மடல்.</b>
நன்றி: தெருத்தொண்டன்
http://theruththondan.blogspot.com/2005/10...og-post_16.html
|
|
|
| பயங்கர யுத்தம் ஏற்படும் சூழ்நிலை |
|
Posted by: narathar - 10-16-2005, 12:45 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (3)
|
 |
பயங்கர யுத்தம் ஏற்படும் சூழ்நிலை ' நோர்வேயின் விசேட தூதர் எச்சரிக்கை
வெளிநாட்டுப் படைகளை தருவிப்பது சமாதான நடவடிக்கைகளுக்கு குந்தகம் என்றும் அறிவுறுத்தல்
பயங்கரமான யுத்தத்துக்கு இட்டுச் செல்லும் சூழ்நிலை இலங்கையில் தற்போது ஏற்பட்டிருப்பதாக எச்சரிக்கை விடுத்திருக்கும் நோர்வேயின் விசேட தூதுவர் மேஜர் ஜெனரல் ட்ரொன்ட் பியூறுஹொவ்டே, வெளி நாட்டுப் படைகளை தருவிப்பது சமாதான நடவடிக்கைகளை மிக மோசமாகப் பாதிக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
வெளிநாட்டு நிருபர் சங்க உறுப்பினர்களை வெள்ளிக்கிழமை சந்தித்த போதே முன்னாள் போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் தலைவரும் தற்போது நோர்வேயின் விசேட தூதுவராக வருகை தந்திருப்பவருமான ஹொவ்டே இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார்.
வட, கிழக்கிலும் கொழும்பிலும் தொடர்ந்து இடம்பெற்று வரும் படுகொலைச் சம்பவங்கள் நாட்டிற்கு மிகவும் ஆபத்தானவை. ஆனால், இந்த நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காக அமைதிகாக்கும் படையினராக சர்வதேச படைகளையோ அல்லது வேறொரு நாட்டின் படையையோ தருவிப்பது சமாதான நடவடிக்கைக்கு இடையூறானதாக அமையும். யுத்த நிறுத்தத்தை கடைப்பிடிப்பதும் அமைதி பேணுவதும் சம்பந்தப்பட்ட இரு தரப்பினரதும் முக்கிய பொறுப்பாக உள்ளது. ஆனால் வெளிநாட்டுப் படைகளின் பிரசன்னம் இரு தரப்பினர் மத்தியிலும் மோதல் ஏற்பட வழிவகுத்து விடும்.
அத்துடன் வெளிநாட்டு சமாதானப் படையை தருவிப்பது சமாதான நடவடிக்கைகளிலும் தலையீடு செய்வதாக அமையுமென பியூறுஹொவ்டே கூறியுள்ளார்.
பல நாடுகளைச் சேர்ந்த படைகளையோ அல்லது குறிப்பிட்ட ஒரு நாட்டின் இராணுவத்தினரையோ மோதல் இடம்பெறும் பகுதிகளுக்கு அனுப்பி வைப்பது ஐ.நா. பாதுகாப்பு சபையின் பொதுவான பணியாக உள்ளது. ஆனால் இலங்கை விவகாரத்தைப் பொறுத்த வரையில் நோர்வே அனுசரணையாளரைத் தவிர வேறு எந்தவொரு வெளிநாடும் தீவிரமாக செயற்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
இலங்கையில் தற்போது மோசமான சூழ்நிலை காணப்படுவதை ஏற்றுக் கொண்ட பியூறு ஹொவ்டே வெளிநாட்டு தலையீட்டைக் குறைப்பதற்கான அணுகுமுறையைக் கைக்கொள்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் யுத்த நிறுத்த உடன்படிக்கை அமுலாக்கம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ஏற்பாட்டை மேற்கொள்ளும் நோக்கத்துடனேயே ஹொவ்டே தற்போது இலங்கைக்கு வருகை தந்துள்ளார். யுத்த நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படுவதற்கு முன்பு அரசும் புலிகளும் நடத்திய முழு அளவிலான யுத்த நிலைமைக்கே தற்போதைய சூழ்நிலை வழிவகுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இரு தரப்பினரும் மரபு ரீதியான யுத்தத்தை மேற்கொண்டதைப் போன்ற தொன்றே தற்போது இதர வழியில் இடம் பெறுகிறது.
எதிரெதிர் தரப்புத் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் சாதாரண பொது மக்கள், பொலிஸார், இராணுவ புலனாய்வு அதிகாரிகள் கொல்லப்படும் சம்பவங்களும் கடத்தப்படுவதும் இடம்பெறுகின்றன.
இந்த ஒவ்வொரு சம்பவமும் யுத்த நிறுத்த உடன்படிக்கையின் சரத்து 1.2 ஐ மீறும் செயற்பாடாகும். இந்த யுத்தத்தில் அதிகளவிலான சக்திகள் சம்பந்தப்பட்டுள்ளன. கருணா குழுவும் இதில் முக்கியமான தொன்றாகும் என்றும் ஹொவ்டே தெரிவித்திருக்கிறார்.
முழுமையான சமாதானத்துக்கும் முழுமையான யுத்தத்துக்கும் இடைப்பட்டதான போரானது மோதல் இடம்பெறும் பகுதிகளில் பொதுவாக இடம்பெறுவதில்லை என்று கூற முடியாது. ஆனால், சம்பந்தப்பட்ட இரு தரப்பினரும் இதனைக் கட்டுப்படுத்த முடியும். இரு தரப்பும் பேச்சுவார்த்தையை ஆரம்பித்தால் அதனை கட்டுப்படுத்த முடியும். இதனாலேயே இரு தரப்பினரும் சாத்தியமான அளவுக்கு துரிதமாக பேச்சை ஆரம்பிக்க வேண்டும் என்பதில் நோர்வே மிகவும் ஆர்வமாக உள்ளது. இரு தரப்பினருமே பேச வேண்டுமென்ற எண்ணத்தில் உள்ளனர். ஆனால், இடத்தை தேர்வு செய்வதே இங்கு முட்டுக்கட்டையாக உள்ளது. இலங்கையிலேயே பேச்சுவார்த்தை இடம்பெற வேண்டுமென அரசாங்கம் விரும்புகிறது. ஆனால், புலிகள் நடுநிலையான வெளிநாடொன்றில் பேச வேண்டுமென விரும்புகின்றனர்.
ஆனால், ஜனாதிபதித் தேர்தலை நாடு எதிர்நோக்குவதால் பேச்சுவார்த்தை தற்போது இடம்பெறுவதற்கான சாத்தியம் அருகியே காணப்படுகிறது என்றும் பியூறு ஹொவ்டே கூறியிருக்கிறார்.
யுத்த நிறுத்த மீறல் விடயங்கள் தனியான விவகாரமாக அணுகப்பட வேண்டும் என்றும் ஹொவ்டே கூறியுள்ளார். இதேவேளை, இலங்கையின் சமாதான நடவடிக்கைகளுக்கான ஐ.நா.வின் மனித உரிமைகள் விவகாரத்துக்கான ஆலோசகர் இயன் மார்ட்டின் மனித உரிமை மீறல் விவகாரங்களை கண்காணிக்க தனியான நிறுவனமொன்று ஏற்படுத்தப்பட வேண்டுமென்ற யோசனையை முன் வைத்திருக்கிறார்.
பல வருடங்களாக நீடித்திருந்த வெறுப்புணர்வு, அவநம்பிக்கை, யுத்தம் என்பவற்றால் இரு தரப்பையும் ஒன்று சேர்க்கும் நடவடிக்கையானது நீண்டதொரு செயற்பாடு என்று கூறியிருக்கும் பியூறு ஹொவ்டே அரசாங்கத்திற்கும் புலிகளுக்கும் இடையில் அரசியல் மற்றும் கலாசார ரீதியில் வேறுபாடுகள் உள்ளதாக தோன்றுவதாகவும் விபரித்திருக்கிறார்.
பரஸ்பர சகிப்புத் தன்மை, பாரபட்சம் காட்டாத கொள்கையை கடைப்பிடித்தல் மற்றும் சமத்துவத்தை ஏற்படுத்தல் என்பனவே இறுதியான சமாதானத்திற்கு அடிப்படையான விடயங்களாக அமையுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்மறையான விடயங்கள் தோல்வியான விவகாரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை பிரசுரிக்காமல் சமாதான நடவடிக்கைகளுக்கு சாதகமான விடயங்களையும் இரு தரப்பும் பொதுவான இணக்கப்பாடு காணும் விதத்தில் அவர்களை உற்சாகப்படுத்தும் தன்மை வாய்ந்த விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்குமாறும் பொறுமையை கடைப்பிடிக்குமாறும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகங்களிடம் பியூறு ஹொவ்டே வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
அதேசமயம், சமாதான நடவடிக்கைகள் பல வெற்றிகளை தேடித் தந்திருப்பதையும் ஹொவ்டே சுட்டிக்காட்டினார். புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியூடாக ஏ - 9 வீதித் திறப்பு பாரிய வெற்றியெனவும் குறிப்பிட்ட அவர், இதன் மூலம் இனரீதியாக பிளவுபட்ட பல்லாயிரக்கணக்கான இலங்கையின் இரு தரப்பினர் மத்தியிலும் உணர்வை ஏற்படுத்த முடிந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
http://www.thinakural.com/New%20web%20site...Lead%20News.htm
|
|
|
| இந்திய உளவுப்பிரிவால் இலக்கு வைக்கப்படும் தமிழ் ஊடகத்துறை! |
|
Posted by: iruvizhi - 10-16-2005, 12:04 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
சங்கதிக்காக சுவிஸிலிருந்து சத்திரியன் -
இலங்கையில் உள்ள தமிழ் ஊடகத்துறையினரை வளைத்து போடும் முயற்;சியில் இந்திய உளவுப்பிரிவு தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது. அன்பாகவும், அதட்டலாகவும் இந்த முயற்சி மேற்கொள்ளபட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
இராணுவ ஆய்வாளர் சிவராமின் படுகொலைக்கு பின்னரே இந்த விடயம் வெளித்தெரிய வந்துள்ள போதிலும் அதற்கு முன்னரே இதற்கான ஆரம்பக் கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
தமது நடவடிக்கைகளுக்கு எதிரான கருத்தினையுடைய ஊடகவியலாளர்களை மிரட்டி பணியவைப்பதற்கு தமிழ் ஆயுதக் குழு ஒன்றின் உதவி பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஊடகவியலாளர் சிவராமின் படுகொலையுடன் தொடர்படைய இந்த குழுவினருக்கு இந்திய உளவுப் பிரிவால் பெருமளவு நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிகின்றது.
இந்திய உளவுப் பிரிவு தமிழ் ஊடகத்துறையை கட்டுப்படுத்த முயல்வது ஏன் என்ற கேள்வி இயல்பாகவே எழுவது தவிர்க்க முடியாதது.
கடந்த வருடம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து கருணா வெளியேற்றப்பட்ட போது அகமகிழந்து போனது இலங்கை உளவுத்துறையல்ல இந்தியாவின் றோ தான்.
காரணம் கருணாவை கொண்டு விடுதலைப் புலிகளுக்கு எதிராக தனது நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்று றோ ஒரு கணக்கு போட்டிருந்தது.
தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பில் றோ போட்ட எல்லா கணக்குகள் போலவும் கருணாவின் கணக்கும் பிழைத்து போனது தான் சோகம்
கருணாவையும், கருணாவுடன் சென்றவர்களையும் வைத்து கிழக்கை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரலாம் என்று இந்தியா போட்ட கணக்கு வெருகலில் விழுந்த அடியுடன் காணாமல் போனது.
இலங்கை உளவுப் பிரிவுடன் கைகோர்த்து றோ நடத்திய ஒப்பரேசனிற்கு கொட்டாவவில் கிடைத்த அடி முற்றுப் புள்ளி வைத்தது. எதிர் தரப்பை தவறாக எடை போடக் கூடாது என்ற செய்தியும் கொட்டாவ சம்பவத்தில் தெளிவாக எடுத்துச் சொல்லப்பட்டது.
இதனை அடுத்து தனது நடவடிக்கைகiளில் பல மாற்றங்களை கொண்டு வந்தது இந்திய உளவு பிரிவு. கிழக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்துவதற்காக தனது நம்பிக்கைக்குரிய ஈ.என்.டி.எல் எப்பையும் கருணா குழுவிற்கு ஆதரவாக களமிறக்கியது
இதன் காரணமாக ஈ.பி.டி.பியிற்கும் கருணாவிற்கும் இடையில் இருந்து உறவு துண்டிக்கப்பட்டது. இது கூட இந்திய உளவுப் பிரிவின் ஒரு இராஜதந்திர நகர்வாகவே நோக்கப்படுகின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டுமன்றி வேறு எந்த ஒரு அமைப்பும் பலம் பெற்று விடக் கூடாது என்ற முன்னேற்பாட்டு நடவடிக்கைதான் கருணா டக்ளஸ் பிரிப்பு என்று தெரியவருகின்றது. ஆனாலும் இந்தியா எதிர்பார்த்த வெற்றிகள் கிடைக்கவில்லை
இதற்கு காரணம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை மீது தமிழ் மக்கள் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கை தான் என்பதை இந்தியா புரிந்து கொண்டது
இதனால் விடுதலைப் புலிகள் மீதான மக்களின் ஆதரவை குறைப்பதற்கு மார்க்கம் தேடியது இந்தியா. என்னதான் தனக்கு ஆதரவான தமிழ் குழுக்களின் உதவியுடன் விடுதலைப் புலிகளிற்கு எதிரான பரப்புரைகளை இலங்கையிலும் வெளிநாட்டிலும் முன்னெடுத்த போதிலும் தமிழ் மக்கள் மத்தியில் விடுதலைப் புலிகள் தொடர்பான நிலைப்பாடுகளில் எந்த மாற்றங்களும் ஏற்படாதமை இந்தியாவிற்கு கடும் விசனத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.
இதனால் தான் விடுதலைப் புலிகள் மீது மக்கள் ஆதரவு பெருக காரணமாக இருக்கும் ஊடகங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் தனது பார்வையை திருப்பியுள்ளது இந்தியா. தமிழ் ஊடகத்துறையை தம் வசப்படுத்த அல்லது விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்காத நிலை ஒன்றை ஊடகங்கள் எடுப்பதற்கு இந்தியா இரண்டு விதமான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.
ஓன்று இலங்கையில் உள்ள ஊடகங்களை கட்டுப்படுத்தவது மற்றையது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான பன்னாட்டு ஊடகங்களை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவது.
முதலில் இலங்கையில் உள்ள ஊடகங்களை தனது கட்டுப்பாட்டின் கீழ கொண்டுவர இந்தியா எடுத்துள்ள முயற்சிகளை பார்க்கலாம்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான ஊடகவியலாளர் ஒருவரை கொலை செய்வதன் மூலம் ஏனையவர்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தி விட முடியும் என்று இந்தியா கருதியது. இதில் நேரடியாக தலையிடாமல் தப்பித்துக்கொள்ள இலகுவான வழி ஒன்றை தேர்ந்தெடுத்தது
தமிழ் மக்களாலும், இலங்கை அரசாங்கத்தாலும் புறக்கணிக்கப்பட்ட நிலையில் அரசியல் அநாதைகளாக்கப்பட்ட தமிழ் அமைப்பின் உதவியை நாடியது இந்தியா.
உட்கட்சி கொலைகளுக்கு பெயர் பெற்ற அந்த கட்சி கொலைகளை கச்சிதமாக முடிக்கும் என்று இந்தியா கருதியது. இப்போது கொலை செய்யப்பட வேண்டிய ஊடகவியலாளர் யார் என்ற கேள்வி எழுந்தது. தமிழ் தேசியத்திற்கு ஆதரவான போக்கினையே இலங்கையில் உள்ள பெரும்பாலான தமிழ் ஊடகவியலாளர்கள் எடுத்துள்ள நிலையில் யாரை குறிவைப்பது என்ற குழப்பம் இந்தியாவிற்கு ஏற்பட்டது.
ஆனால் இந்த குழப்பம் அதிக காலம் நீடிக்கவில்லை இந்தியாவின் இந்த நகர்வுகளை துல்லியமாக தெரிந்து வைத்துள்ள ஊடகவியலாளராக சிவாராம் இந்திய உளவுப் பிரிவால் அடையாளம் காணப்பட்டார். சிவராமிற்கு அனைத்துலக அளவில் கிடைத்திருந்த நன்மதிப்பும் அவருடைய எழுத்தின் வன்மையும் தமிழ் தேசியத்திற்கு எதிர்காலத்தில் மேலும் பலம் சோக்கும் என்று இந்திய புலனாய்வு ஆருடங்கள் அடித்தக் கூறியிருக்க வேண்டும்
அத்துடன் சிவராமின் அடுத்தடுத்த கட்டுரைகளில் இந்தியாவின் நகர்வுகள் பல அம்பலமாகலாம் என்ற எச்சரிக்கையும் இந்திய உளவுப் பிரிவிற்கு கிடைத்திருக்கின்றது.
எனவே தான் சிவாராமை தமது முதலாவது இலக்காக மாற்ற இந்தியா முன்வந்தது. சிவராம் கடத்தபட்டு படுகொலை செய்யப்பட்டவுடன் தமிழ் ஊடகத்துறை கொஞ்சம் ஆடித்தான் போனது. பல முக்கிய ஊடகவியலாளர்களின் செல்பேசிகள் எல்லாம் மௌனித்து போயிருந்தன.
இந்தியா நினைத்தது நடக்க ஆரம்பித்தது. தமிழ் தேசியத்திற்கு ஆதரவாக உரத்து குரல் எழுப்பிய ஊடகவியலாளர்கள் பயப்பட தொடங்கினாhர்கள். ஆனாலும் இது நீண்ட காலத்திற்கு நிலைக்கவில்லை சிவராமின் படுகொலை ஏற்படுத்திய தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக விலகத் தொடங்கியது.
இப்போது தனிப்பட்ட ஊடகவியலாளர்களை விடவும் ஊடக நிறுவனங்களை இலக்கு வைத்தது இந்தியா. சுடரொளி மீதான தொடர் குண்டு வீச்சுக்கள் மற்றும் கொழும்பில் உள்ள வெக்ரோன் தொலைக்காட்சி நிலையத்தின் கலையகம் சோதனை என்ற பெயரில் இலங்கை அரச புலனாய்வு பிரிவால் துவம்சம் செய்யப்பட்டது - ஆனால் இது செய்தியாக்கப்படவில்லை அல்லது செய்தியாக்கப்படாமல் தடுக்கப்பட்டிருந்தது. இந்த தேடுதலின் போது இந்திய புலனாய்வாளர்களும் உடனிருந்திருக்கலாம் என்றும் ஊகங்கள் எழுந்துள்ளன.
இந்த தாக்குதல் அச்சுறுத்தல்கள் கொலை பயமுறுத்தல்கள் மூலம் தமிழ் ஊடகத்துறையினர் அடக்கப்பட்டு கொண்டிருக்கையில் தமக்கு நெருக்கமான ஊடகத்துறையினர் மூலம் சில முக்கிய ஊடகவியலாளர்களை வளைத்து போடும் முயற்சிகளையும் இந்தியா மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது.
கொழும்பில் அடிக்கடி இந்திய ஊடகவியலாளர்கள் மற்றும் இராஜதந்திரிகளால் விருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது. இந்த விருந்திற்கு கொழும்பில் உள்ள முக்கிய ஊடகவியலாளர்கள் அழைக்கப்பட்டு பலமாக கவனிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில் இரண்டு நன்மைகள் இந்தியாவிற்கு கிடைக்கும். ஒன்று தமது நடவடிக்கைகளை நியாயப்படுத்த அல்லது தவறு என்று கூறாமல் இருக்கக் கூடியதாக சில ஊடகவியலாளர்கள் மாற்றப்படுவார்கள்.
மற்றையது தமக்கு நெருக்கமானவர்களாக மாற்றப்படும் இத்தகைய ஊடகவியலாளர்கள் மூலமாக தமிழ் தேசியத்திற்கு ஆதரவான ஊடகவியலாளர்களின் நடவடிக்கைகள் கண்காணிப்பதற்கும் தேவைப்படும் தகவல்களை பெற்றுக் கொள்வதற்கும் வழி ஏற்படுத்தப்படும்;.
இந்தியாவின் இந்த நகர்வு குறித்து அதிகம் அக்கறைப்பட வேண்டிய தேவை எழுந்துள்ளதாக மூத்த ஊடகவியலாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளமை ஆழமாக நோக்கத்தக்கதுஃ
இதேவேளை வெளிநாடுகளில் இந்தியா மேற்கொண்டுள்ள ஊடகத்துறை மீதான அணுகுமுறை சற்று வித்தியாசமானது. பொதுவாக வெளிநாடுகளில் செயல்படும் அனைத்து ஊடகங்களும் தமிழ் தேசியத்திற்கு ஆதரவான போக்கினையே கொண்டிருந்தன.
இதனை முறியடிப்பதற்காக இந்தியா தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. மாற்று கருத்து என்ற போர்வையில் சில ஊடகங்களை ஏற்படுத்தி அவற்றின் மூலமாக தமிழ் தேசியத்திற்கு எதிரான பரப்புரைகளை இந்தியா ஆரம்பித்துள்ளது.
இதேவேளை தமிழ் தேசியத்திற்கு ஆதரவான ஊடகங்களுக்குள் ஊடுருவல்களை மேற்கொண்டு அவற்றை சிதைக்கும் முயற்சிகளையும் இந்தியா மேற்கொண்டுள்ளதாக தெரிகின்றது.
இந்திய உளவுப் பிரிவால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த யுத்தம் என்பது ஆயுதங்களால் வெற்றி; கொள்ளப்பட முடியாதது என்றாலும் மன உறுதியால் இதனை வெல்லலாம் வெல்வோமா?
http://www.sankathi.net/index.php?option=c...=2990&Itemid=44
|
|
|
| அமெரிக்கர்களின் மனச்சாட்சியை உலுக்கும் தாயின் போராட்டம் |
|
Posted by: Danklas - 10-16-2005, 09:40 AM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (29)
|
 |
எனக்கு அந்த உண்மை தெரிய வேண்டும்; ஈராக் மீது ஏன் இந்தப் போர்?" என்று தனது அன்பு மகனைப் பறிகொடுத்த வேதனையில் கேட்கிறார் அந்த அமெரிக்கத் தாய். துயரத்தை நெஞ்சிலே சுமந்து கொண்டு, பயங்கரவாத அதிபர் புஷ்ஷுக்கு எதிராகத் தன்னந்தனியாக அவர் நடத்திய உறுதியான போராட்டம். அமெரிக்க மக்களின் மனச்சாட்சியை உலுக்கி, போர் எதிர்ப்புப் போராட்டத்துக்குப் புது இரத்தம் பாய்ச்சியுள்ளது. கலிபோர்னியா மாநிலத்தின் வகாவில்லி நகரைச் சேர்ந்த அந்தத் தாயின் பெயர் சின்டி ஷீஹன்.
அவரது அன்பு மகனாகிய கேசி ஷீஹன், அமெரிக்க இராணுவத்தில் பணியாற்றிய தனித்தேர்ச்சிமிக்க இளம் சிப்பாய். கடந்த 2004 ஏப்ரல் 4 ஆம் திகதியன்று ஈராக்கில் ஆக்கிரமிப்பு எதிர்ப்புப் போராளிகளின் குண்டுவீச்சுத் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார்.
இரு மாதங்களுக்குப் பிறகு சின்டி ஷீஹன் தனது குடும்பத்தோடு அதிபர் புஷ்ஷைச் சந்திக்கச் சென்றார். ஆனால், அங்கே ஆறுதலுக்குப் பதிலாக அவமரியாதை தான் கிடைத்தது. "இன்று நாம் யாரைக் கௌரவிக்க வேண்டும்? என்று அசைபோடும் தனது வாயுடன் உதவியாளர்களிடம் கேட்டுக் கொண்டே அதிபர் புஷ் வேகமாக நடந்து சென்றார். ஆறுதலாக ஒரு வார்த்தை கூட அவர் வாயிலிருந்து வரவில்லை. எங்களை நோக்கிய அவரது கண்களில் கருணை இல்லை. எதைப்பற்றியும் கவலைப்படாதவராக அவரது தோற்றம் காட்டியது. யதார்த்தத்திற்கும் மனிதத் தன்மைக்கும் முற்றிலும் வேறுபட்ட ஒரு மனிதப்பிறவி தான் அவர். அவரது கண்கள் வெறுமையாகவும், உள்ளே ஒன்றுமில்லாத வேர்க்கடலை ஓடு போலவும் காட்சியளித்தது." என்று அந்தச் சந்திப்பை நினைவு கூருகிறார் ஷீஹன்.
ஈராக்கில் கொல்லப்பட்ட அமெரிக்க இராணுவச் சிப்பாயின் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லக்கூட அதிபர் தயாராக இல்லையெனில், ஈராக் மீதான இந்தப் போர் எதற்காக? யாருக்காக? என்னைப்போல் எத்தனையோ குடும்பங்கள் தங்கள் மகனையும் குடும்பத் தலைவனையும் உற்றாரையும் ஏன் இப்படிப் பறிகொடுக்க வேண்டும்? கூடாது; இந்தப் போர் இனியும் தொடரக்கூடாது என்று அவர் தீர்மானித்தார். "இராணுவக் குடும்பங்களின் உரத்த குரல்" (உள்ளார்ந்த எண்ணத்தை வெளிப்படையாகக் கூறும் அரங்கம்) எனும் அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டு போர் எதிர்ப்பு இயக்கத்தில் ஊக்கமாகச் செயற்பட்டு வருகிறார்.
பேரழிவுக்கான ஆயுதங்களை வைத்துக் கொண்டு பயங்கரவாதத்தை ஊட்டி வளர்ப்பதாகக் குற்றஞ்சாட்டி ஈராக் மீது போர் நடத்தப்பட்டுள்ள இந்தப் போர் காட்டுமிராண்டித்தனமாக மாறிவிட்டதை அம்பலப்படுத்தும் இவ்வியக்கத்தினர், உடனடியாக ஈராக்கிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேற வேண்டும் என்று பிரசாரம் செய்து வருகின்றார். கடந்த சில மாதங்களாக ஈராக்கில் அமெரிக்கப் படைவீரர்கள் அடுத்தடுத்து கொல்லப்பட்டு, விமானங்களில் வந்திறங்கும் சவப்பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியதும், அமெரிக்க மக்களிடம் இந்தக் கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் ஆங்காங்கே பரவத் தொடங்கியுள்ளன.
அமெரிக்க மக்களிடம் அதிருப்தி பெருகி வருவதைக் கண்டு அஞ்சும் அதிபர் புஷ், அதிலிருந்து தப்பிக்க விடுமுறையில் ஓய்வெடுக்கச் செல்வதாகக் கூறி நழுவிச் செல்வது வழக்கம். இப்படித்தான் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அவர் டெக்சாஸ் மாகாணத்தின் கிராஃபோர்டிலுள்ள தனது கால்நடைப் பண்ணையில் ஓய்வெடுக்க ஓடினார். அங்கே பொதுமக்கள் தமது கோரிக்கைகளுடன் எப்போதும் தன்னைச் சந்திக்கலாம் என்றார். புஷ் பதவிக்கு வந்து அவர் இப்படி ஓய்வெடுக்க ஓடுவது ஐந்தாவது தடவையாகும். கடந்த 36 ஆண்டுகளில் எந்த அதிபரும் தொடர்ந்து ஐந்து வாரங்களாக இப்படி ஓய்வெடுத்துக் கொண்டு முடங்கிக் கிடந்ததில்லை என்ற வரலாற்றுச் `சாதனை'யையும் அவர் படைத்துள்ளார்.
<img src='http://img366.imageshack.us/img366/4519/ar5er.jpg' border='0' alt='user posted image'>
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 4 ஆம் திகதியன்று சின்டி ஷீஹன் அதிபர் புஷ்ஷைச் சந்திக்க அவரது கால்நடைப் பண்ணைக்குச் சென்றார். ஆனால், அதிபர் புஷ் அவரைச் சந்திக்க மறுத்துவிட்டார்.
ஷீஹன் தன்னந்தனியாக இருந்தபோதிலும், அதிபரின் இந்தத் திமிர்த்தனத்திற்கும் அவமானப்படுத்தலுக்கும் எதிராக அவரது பண்ணையின் முன்பாகவே போராட்டத்தில் இறங்கினார். "ஈராக் மீது ஏன் இந்த ஆக்கிரமிப்புப் போர்? எனக்கு அந்த உண்மை தெரிய வேண்டும்" என்று எழுதப்பட்ட முழக்கத் தாளுடன் அவர் இரவு - பகலாக விடாப்பிடியாக அங்கேயே நின்றார். இதைக்கண்டு பொதுமக்கள் திரளத் தொடங்கியதும், பீதியடைந்த புஷ் தனது உதவியாளர்களை அனுப்பி அவரைச் சாந்தப்படுத்த முயற்சித்தார். ஆனால், ஷீஹன் உறுதியாகப் போராட்டத்தைத் தொடர்ந்தார்.
நன்கொடை அளிக்கும் ஒரு பெருமுதலாளியுடன் நீண்ட நேரம் அளவளாவிவிட்டு, அவரை வழியனுப்ப புஷ் வெளியே வந்தபோது, "பணக்காரர்களுக்காக நேரம் ஒதுக்க முடிந்த உங்களுக்கு, என்னுடன் பேசுவதற்கு மட்டும் நேரம் இல்லையா?" என்ற முழக்கத்தை எழுதிப் பிடித்துக் கொண்டு ஷீஹன் நிற்பதைக் கண்டு மிரண்டு உள்ளே ஓடிப்போய் பதுங்கிக் கொண்டார்.
அதிபர் புஷ்ஷுக்கு எதிராகவும், ஈராக் மீதான போருக்கு எதிராகவும் இரவு- பகலாக ஷீஹன் விடாப்பிடியாகப் போராடிய இடம், மாண்டுபோன அவரது மகன் கேசியின் பெயரால் நினைவுத்திடலாக போர் எதிர்ப்பு இயக்கத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கே அடிக்கடி போர் எதிர்ப்புக் கூட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் தொடர்கின்றன.
பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான குடும்பத்தினர், மாண்டுபோன அமெரிக்கச் சிப்பாய்களின் பெயர், புகைப்படங்களையும் வெண்சிலுவைக் குறிபொறித்த அட்டைகளையும் ஏந்தி ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றனர். "ஈராக் மீதான போரை நிறுத்து! அமெரிக்கப் படைகளை உடனே திரும்பப் பெறு!" என்ற முழக்கம் புஷ்ஷின் பண்ணையில் மோதி எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.
ஈராக்கில் அமெரிக்கச் சிப்பாய்கள் கொல்லப்படும் போதெல்லாம், அத்திடலில் பாதிக்கப்பட்ட இராணுவக் குடும்பங்கள் திரண்டு நினைவஞ்சலிக் கூட்டங்கள் நடத்துவதும் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதும் தொடர்கிறது.
ஈராக்கில் போராளிகளின் குண்டுவீச்சினால் கொல்லப்பட்ட அமெரிக்கச் சிப்பாய் எட்வர்ட் ஷெரோடர் என்ற இளைஞனது சடலத்தை அடக்கம் செய்த பிறகு, ஆகஸ்ட் 15 ஆம் திகதியன்று கேசி ஷீஹன் திடலில் போர் எதிர்ப்பு இயக்கத்தினர் ஒரு நினைவஞ்சலிக் கூட்டத்தை நடத்தினர். அதில் உரையாற்றிய எட்வர்ட் ஷேரோடரின் தந்தையான பவுல் ஷெரோடர், "நாங்கள் எங்கள் துயரத்தைப் பகிர்ந்து கொள்வதற்காக இங்கே வரவில்லை. எங்களது குமுறல்கள் அதிபர் புஷ் மீது நாங்கள் கொண்டுள்ள கோபத்தை அடிப்படையாகக் கொண்டவை. இந்தக் கோபம், உருக்குலைக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தின் நேர்மையான வெளிப்பாடு" என்று குறிப்பிட்டதோடு, "சின்டி ஷீஹன் அம்மையார், போர் எதிர்ப்பு இயக்கத்தின் ரோசா பார்க்ஸ் ஆவார்" என்று பெருமையுடன் கூறுகிறார்.
1955 இல் ரோசா பார்க்ஸ் அம்மையார், இன ஒதுக்கல் கொள்கைப்படி பிரிக்கப்பட்ட பேருந்தின் முன்பக்க இருக்கையில் அமர்ந்து கொண்டு, எழ மறுத்துப் போராடினார். ஏனெனில், அவர் ஆபிரிக்க- அமெரிக்க கலப்பினத்தவர், கறுப்பர்களுக்கும் கலப்பினத்தவருக்கும் பேருந்தின் பின்பகுதி இருக்கைகள் என இடஒதுக்கீடு செய்யப்பட்டு, அமெரிக்காவில் இனஒதுக்கல் கொள்கை பின்பற்றப்பட்ட காலம் அது.
தன்னந்தனியே ரோசாபார்க்ஸ் அன்று நடத்திய போராட்டம், வெள்ளை நிற வெறியர்களின் புதிய வகை தீண்டாமைக்கு எதிரான மனித உரிமைப் போராட்டத்துக்கு புது இரத்தம் பாய்ச்சியது. அவர் தொடக்கி வைத்த போராட்டம், அமெரிக்கா முழுவதும் காட்டுத்தீயாகப் பற்றிப் படர்ந்தது. ரோசாபார்க்ஸ், இறுதிவரை மனிதஉரிமை இயக்கத்தின் முன்னணி ஊழியராகச் செயற்பட்டார்.
ரோசாபார்க்ஸ் போலவே, சின்டி ஷீஹனும் இன்று அமெரிக்க மக்களால் போற்றப்படுகிறார். தன்னந்தனிய அவர் நடத்திய போராட்டத்தால் சட்டத்துக்குக் கீழ்ப்படியாமை, அடக்குமுறையை எதிர்க்கும் உறுதி ஆகியவற்றின் அடையாளச் சின்னமாக அவர் கருதப்படுகிறார். தன்னந்தனியே ரோசாபார்க்ஸைப் போலவே சின்டி ஷீஹன் போராடியிருந்தபோதிலும், அவர் தனியானவரல்ல. போர் எதிர்ப்பு இயக்கத்தின் பிரிக்க முடியாத அங்கம்.
வியட்நாம் போர் எதிர்ப்பு இயக்கத்தின் மூலம் பிரபலமான நாட்டுப்புறப் பாடகர் ஜோன் பெய்ஸ் அம்மையார், கடந்த ஆகஸ்ட் 21 ஆம் திகதியன்று இரவு புஷ் பண்ணையின் எதிரே பெருந்திரளான மக்கள் முன் இசை நிகழ்ச்சியை நடத்தி ஈராக் போர் எதிர்ப்பு இயக்கத்துக்கு வலுவூட்டியுள்ளார்.
தனது மகனுக்காக மட்டுமல்ல; தனது மகனையொத்த இன்னும் பல இளைஞர்கள் அமெரிக்க வல்லரசின் ஒரு பொய்க்காகக் கொல்லப்படுவதைக் கண்டு குமுறும் ஷீஹனின் கோபம் உண்மையானது; இந்தப் போர் அநீதியானது; அது தடுக்கப்பட்டாக வேண்டும் என்ற உணர்வோடு அவர் நடத்திய போராட்டமும் உண்மையானது. அது, அமெரிக்க மக்களின் உள்ளார்ந்த கோபத்தையும் விரக்தியையும் வெளிப்படுத்தி, போர் எதிர்ப்பு இயக்கத்துக்கு வலுவூட்டி வருகிறது. அமெரிக்க மக்களிடமிருந்து மட்டுமன்றி, இராணுவக் குடும்பங்களிடமிருந்தும் புஷ் கும்பல் முற்றாகத் தனிமைப்பட்டுப் போய்க் கிடக்கிறது.
அமெரிக்கா, உலக மேலாதிக்க வல்லரசாக ஆக்கிரமிப்புப் போர்களை நடத்தி ஆணவத்தோடு கொக்கரிக்கலாம். ஆனால், அமெரிக்க மக்களிடம் இன்னமும் எஞ்சியிருக்கிறது மனச்சாட்சி. ஷீஹன் மூட்டிய போராட்டச் சிறுபொறி பெருங்காட்டுத் தீயாகப் பரவவே செய்யும். அன்று வியட்நாம் ஆக்கிரமிப்புக்கு எதிராக அமெரிக்க மக்கள் போராடியதைப் போல, ஈராக் ஆக்கிரமிப்புக்கு எதிராக அமெரிக்க மக்களின் போராட்டம் உள்நாட்டிலேயே எரிமலையாக வெடித்தெழப்போவது நிச்சயம்.
நன்றி தினக்குரல்....
அடடா.... இப்படியே இங்கிலாந்து மக்களூம் கிளர்ந்து எழுந்தால் சர்வதிகாரி டொனி பிளேயரையும் அவரின் ஓய்வெடுக்கும் விடுதியில் முடங்கச்செய்யலாம்.. :evil: :evil:
|
|
|
| ஈழத்தமிழர்கள் குரங்குகளா? படைப்பாளிகள் கழகம் கண்டனம்! |
|
Posted by: preethi - 10-16-2005, 04:12 AM - Forum: தமிழ் /தமிழர்
- Replies (7)
|
 |
ஈழத்தமிழர்கள் குரங்குகளா? படைப்பாளிகள் கழகம் கண்டனம்!
(ரொரன்ரோ கனடா)
<b>காஞ்சி சங்கர மடம் வெளியிட்ட 'தமிழக அந்தணர் வரலாறு" என்ற நு}லில் தமிழர்களை, குறிப்பாக ஈழத்தமிழர்களைக் குரங்குகள் என வருணிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. </b>
விவரம் வருமாறு:
'திராவிட சமயம்" என்ற அமைப்பை நடத்தி வருபவர் பேராசிரியர், முனைவர் தெய்வநாயம் அவர்கள். அவர் தற்போது கனடாவுக்கு வருகை தந்துள்ளார். அவரை அறிமுகஞ் செய்யும் விழா ஸ்காபுரோவில் முழக்கம் சதுரங்கக் கழகப் பணிமனையில் நடைபெற்றது. முனைவர் தெய்வநாயம் அவர்கள் 'சிவஞானபோதம்" என்ற சைவசித்தாந்த நு}லுக்கு உரையும் எழுதி யிருக்கின்றார். இவர் பல்கலைக்கழகம் தழுவிய ஆய்வுகளும் பல செய்து வருகின்றார். சைவசமயமே உலக சமயங்களுக்கு எல்லாம் முதலானது (இந்து சமயம் பின்னர் திணிக்கப்பட்டது) என்றொரு செய்தியையும் முன் நிறுத்தி இயங்கி வருகின்றார்.
அவர் கூட்டத்தில் ஆற்றிய உரை வருமாறு:
'கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஜெயலலிதாவின் உதவியுடன் <b>தமிழ்நாடு பிராமணர் சங்கம் மற்றும் காஞ்சிமடம் ஆகியவை இணைந்து 'தமிழக அந்தணர் வரலாறு" என்ற ஆயிரம் பக்கங்கள் கொண்ட நு}லை வெளியிட்டனர். அந்த நு}லில் தமிழக வரலாறும் தமிழர் வரலாறும் திரித்து எழுதப்பட்டுள்ளது. அத்தோடு அந்நூலில், தமிழர்களைக் குறிப்பாக ஈழத்தமிழர்களைக் குரங்குகள் என்று சித்தரித்து எழுதப்பட்டுள்ளது. நு}லில் தமிழகத் தமிழர்களையும் ஈழத்தமிழர்களையும் சொச்சைப்படுத்தி எழுதியமைக்கு 'சங்கரமடம்" மன்னிப்புக் கோரவேண்டும் என்று நாம் போராட்டம் நடத்தினோம்.</b> அதற்குப் பலன் ஏதும் கிட்டவில்லை. அத்தோடு அந்த நு}லின் மறுபதிப்பில் அந்த நு}லுக்கு இலங்கையிலும் கனடாவிலும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது என்றும் எழுதப்பட்டுள்ளது" என்று கூறினார். அந்த நு}லினை எடுத்துக்காட்டிய முனைவர் அவர்கள், ஈழத்தமிழர்களையே இழிவுபடுத்தி உள்ள நு}லை ஈழத் தமிழர்கள் வாங்கலாமா? என்று கேட்டுப்பேசினார்.
அதற்குப் பதிலளித்துப்பேசிய படைப்பாளிகள் கழகத் தலைவர் திரு. வே. தங்கவேலு அவர்கள், இந்த நு}ல் இலங்கையிலோ அன்றி கனடாவிலோ ஒருபிரதி கூட எந்தத் தமிழ்க் கடையிலும் விற்கப்படவில்லை. ஆக அந்த நு}லின் மவுசை ஏற்றவே காஞ்சிமடக் கும்பல் இவ்வாறு தெரிவித்து இருக்கின்றது என்றார். பேராசிரியர் தெய்வநாயகம் அவர்கள் தமிழர்களுக்காக, சங்கரமடத்திற்கு எதிராகக் குரல் கொடுத்தமைக்குப் பாராட்டுத் தெரிவித்த படைப்பாளிகள் கழகத் தலைவர் திரு. தங்கவேலு அவர்கள், இந்தியாவுக்கு வெளியில் ஈழத்தமிழர்கள் வாழும் நாடுகளில் இனிமேல் சங்கர மடக்காரர்களோ அன்றி காஞ்சி சங்கராச்சாரிகளோ கால்வைத்தால், அல்லது தமிழ்த்தேசிய மறுப்பாளர்கள் கால்வைத்தால், போராட்டம் வெடிக்கும் என்ற உத்தரவாதத்தை எங்களால் தரமுடியும் என்றார். எங்களைக் குரங்குகள் என்று வருணித்துவிட்டு எங்கள் பணத்தைச்சுரண்டவும் இங்கே வர நினைத்தால் தக்க பதிலடி கொடுக்கக் கழகம் காத்திருக்கிறது என்று குறிப்பிட்டார்.
அங்கு கருத்துரை வழங்கிய முழக்கம் ஆசிரியர் திரு அவர்கள்:
<b>தமிழீழத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட இந்துக்கோயில்கள் சிங்களவர்களால் குண்டு போடப்பட்டு அழிக்கப்பட்டபோது, இந்த சங்கரமடக்காரர்கள் எதிர்ப்புக்கள் ஏதும் காட்டாதபோதே அவர்களை ஈழமக்கள் அடையாளம் கண்டுவிட்டனர் என்று குறிப்பிட்டார்.</b>
தமிழர்களுக்கு எதிராக யார் செயற்பட்டாலும் அவர்களை எதிர்கொள்ளத் தமிழர்கள் தயாராக உள்ளதாகக் கூடி இருந்த உணர்வாளர்கள், பேராசிரியருக்கு உணர்வுத்தென்பளித்து, மதங்கள் தொடர்பாக, நாம் தந்தை பெரியாரின் பாதையையே மக்கள் தெரிந்தெடுக்க வேண்டும் என்று விரும்புவர்கள் என்று தெரிவித்தனர்.
|
|
|
| டென்மார்க்கில் கவிதநூல் அறிமுகம் |
|
Posted by: இளைஞன் - 10-15-2005, 07:45 PM - Forum: நிகழ்வுகள்
- No Replies
|
 |
<b>ஈழத்தின் புகழ்பெற்ற கவிஞர்
புதுவை இரத்தினதுரையின்</b>
<span style='font-size:30pt;line-height:100%'>பூவரசம் வேலிகளும் புலினிக் குஞ்சுகளும்</span>
டென்மார்க்கில் இரு இடங்களில்
29-10-2005 சனிக்கிழமை 17.00 மணி
(Lindskolen - 7400 Herning . DK)
30-10-2005 ஞாயிற்றுக்கிழமை 17.00 மணி
(Holbereskolen - Sømosevej . 50 - 4293 Dianalund . DK)
<b>நிகழ்ச்சி ஒழுங்கமைப்பு: மாலதி தமிழ்க் கலைக்கூடம், டென்மார்க். தொடர்புகளுக்கு: www.malathy.dk</b>
<i>நன்றி: அப்பால் தமிழ்</i>
|
|
|
| உறவு முறைகள் |
|
Posted by: கோமதி - 10-15-2005, 02:09 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (7)
|
 |
வலைப்பதிவொன்றில் யாழ்ப்பாணத்தில் பேச்சுவழக்கில் கொச்சையாகப் பாவிக்கப்படும் உறவுமுறைகளைப் பற்றி எழுதப்பட்டிருந்தது. நகைச்சுவையான பதிவு. அதை இங்கே இடுகிறேன்.
--------------------------------
<b>இது எங்கட ஊரில உறவுகளைக் கூப்பிட நாங்கள் பாவிக்கிற சில சிறப்புச்சொற்கள். கொஞ்சம் கொச்சையா இருக்கலாம். ஆனா ஓர் ஆள் இல்லாத சந்தர்ப்பத்தில குறிப்பிட்ட அந்த நபரை, கேட்கப்படும் நபருக்கும் தேடப்படும் நபருக்குமிடையிலான உறவுமுறையைக் கொண்டு கதைக்கப்படும்.
* கொண்ண எங்க போயிட்டான்?
* கொக்கா இருக்கிறாளோ?
* கோத்த சமைச்சிட்டாவோ?
* கொம்மாவிட்ட இதக் குடு.
* கொப்பர் சந்தையால வந்திட்டாரே?
* கொய்யா தவறணையால வந்திட்டாரே?
மேற்கூறியவைகள் யாழ்ப்பாணத்தில் சாதாரணமாகப் பயன்பாட்டிலிருக்கும் மொழிநடை. மிக முக்கியமான விசயம், அக் குறிப்பட்ட நபர் அங்கு நிற்கக்கூடாது. இனி அந்தச் சொற்கள் எவற்றைக் குறிக்கின்றன என்பதைப் பார்ப்போம்.
* கொண்ண - அண்ணை.
*கொண்ணன் - அண்ணன்.
* கொக்கா - அக்கா.
* கோத்தை - ஆத்தை. (ஆத்தை என்ற சொல் பெருமளவு பயன்பாட்டிலில்லை. ஆனால் கோத்தை உண்டு)
* கொம்மா - அம்மா.
* கொப்பர் - அப்பர்.
* கொப்பா - அப்பா.
* கொய்யா - ஐயா.
இவையெல்லாவற்றிலும் கவனித்தால் ஒரு விசயம் தெரியும். 'கொ' அல்லது 'கோ' ஏற்றுத் திரியும் இந்தச் சொற்களனைத்தும் வயது மூத்தவர்களைக் குறிக்கும் உறவு முறைகள். இளையவர்களைக் குறிக்கும் தம்பியை 'கொம்பி' என்றோ தங்கையை '__ங்கை' என்றோ தங்கச்சியை 'கொங்கச்சி' என்றோ அழைப்பதில்லை. ஏனெண்டா நாங்கள் மூத்தாக்கள நல்லா மரியாதை செய்யிறனாங்கள் எண்டது இதிலயிருந்து நல்லா விளங்கும். தம்பி தங்கச்சியெல்லாம் சின்ன ஆக்கள் எண்ட படியா அவைக்கு 'இவ்வளவு' மரியாதை தேவயில்ல.
ஆனா ஒரு ஆராய்ச்சி முடிவு சொல்லுது:
அப்பிடி 'கொ' கரமாத் திரியிற சொல்லுகளெல்லாம் 'அ'கரம், 'ஆ'காரத்தில தொடங்கிறதுகளாம். (ஐயன்னா அ,இ என்பவற்றின் இணைவொலிதான்)</b>
-------------------------------------
http://vasanthanin.blogspot.com/2005/05/1_05.html
|
|
|
| பிரபல எழுத்தாளர் சுந்தரராமசாமி காலமானார். |
|
Posted by: இவோன் - 10-15-2005, 12:03 PM - Forum: துயர்பகிர்வு / நினைவுகூரல்
- Replies (16)
|
 |
தமிழகத்தைச் சேர்ந்த மூத்த எழுத்தாளர் சுந்தரராமசாமி அவர்கள் அமெரிக்காவில் நேற்றுக் காலமானார். அண்மைக்காலமாக இவர் நோயினால் அவதிப்பட்டு வந்தாரென்பது குறிப்பிடத்தக்கது.
தமிழின் மிகமுக்கிய எழுத்தாளரான இவர் நிறைய நாவல்கள் சிறுகதைகள் எழுதியுள்ளார்.
புளியமரத்து நிழல், ஜே.ஜே. சில குறிப்புக்கள் போன்ற நாவல்கள் தமிழில் மிகமிக முக்கிய படைப்புக்கள்.
அண்மையில் 'பிள்ளை கொடுத்தாள் விளை' என்ற கதையை எழுதி தமிழ் இலக்கியச்சூழலில் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் உண்டாக்கினார். ஏராளமான கண்டனங்கள் அவருக்கு எதிராக எழுந்தன. தமிழ் இலக்கியத்தின் மிகமிக முக்கிய படைப்பாளியொருவர் காலமாகிவிட்டார். அவருக்கு எனது சார்பிலும் யாழ்க்களத்தின் சார்பிலும் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
|
|
|
|