Yarl Forum
பிரபல எழுத்தாளர் சுந்தரராமசாமி காலமானார். - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: துயர்பகிர்வு / நினைவுகூரல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=17)
+--- Thread: பிரபல எழுத்தாளர் சுந்தரராமசாமி காலமானார். (/showthread.php?tid=2890)



பிரபல எழுத்தாளர் சுந்தரராமசாமி காலமானார். - இவோன் - 10-15-2005

தமிழகத்தைச் சேர்ந்த மூத்த எழுத்தாளர் சுந்தரராமசாமி அவர்கள் அமெரிக்காவில் நேற்றுக் காலமானார். அண்மைக்காலமாக இவர் நோயினால் அவதிப்பட்டு வந்தாரென்பது குறிப்பிடத்தக்கது.
தமிழின் மிகமுக்கிய எழுத்தாளரான இவர் நிறைய நாவல்கள் சிறுகதைகள் எழுதியுள்ளார்.
புளியமரத்து நிழல், ஜே.ஜே. சில குறிப்புக்கள் போன்ற நாவல்கள் தமிழில் மிகமிக முக்கிய படைப்புக்கள்.
அண்மையில் 'பிள்ளை கொடுத்தாள் விளை' என்ற கதையை எழுதி தமிழ் இலக்கியச்சூழலில் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் உண்டாக்கினார். ஏராளமான கண்டனங்கள் அவருக்கு எதிராக எழுந்தன. தமிழ் இலக்கியத்தின் மிகமிக முக்கிய படைப்பாளியொருவர் காலமாகிவிட்டார். அவருக்கு எனது சார்பிலும் யாழ்க்களத்தின் சார்பிலும் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


- இளைஞன் - 10-15-2005

அவன் எழுத்துக்கள் வாழும்வரை
அவ் எழுத்துகளுள் வாழ்வான்
எழுத்தாளன்.


- இவோன் - 10-15-2005

<img src='http://photos1.blogger.com/blogger/6669/319/1600/NaanEnYeluthukiren1.jpg' border='0' alt='user posted image'>

http://dhandora.blogspot.com/2005/10/blog-post.html


- kirubans - 10-15-2005

சுந்தர ராமசாமியின் இழப்பு தமிழ் இலக்கிய உலகுக்கு ஒரு பேரிழப்பாகும். அவரின் மொழி ஆற்றலையும், வீச்சையும் வாசித்து வியந்ததுண்டு.

சு.ராவின் எழுத்துக்கள் தமிழ் உள்ளவர வாழும்.


- nallavan - 10-15-2005

உண்மையில் இது ஈடுசெய்ய முடியாத இழப்புத்தான்.
ஜே.ஜே சில குறிப்புக்கள் எழுதுவதற்கு முன்பு கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கும் மேலாக எதையுமே எழுதாமல் இருந்தார் என்று கேள்விப்பட்டேன். புலி உண்மையில் பாய்வதற்குத்தான் பதுங்கியதோ. தமிழில் அந்நாவல் சந்தேகமில்லாமல் ஒரு சரித்திரம்தான்.
அன்னாருக்கு என் மனமார்ந்த அஞ்சலி.


- stalin - 10-15-2005

அன்னாரின் மறைவுக்கு ஆழ்ந்த அநுதாபங்கள்...தமிழ் இலக்கிய வராலாற்றில் தனக்கென்ற இடத்தை பிடித்தவர் . கலை கலைக்காகவா, கலை மக்களுக்காவா என்ற பிரச்சனைகளின் போது விமர்சனத்துக்குட்பட்டபொழுதும் இலக்கிய உலகில் மதிக்கப்பட்டவர்........


- shanmuhi - 10-15-2005

அன்னாரின் மறைவுக்கு ஆழ்ந்த அநுதாபங்கள்...


- RaMa - 10-15-2005

ஆழ்ந்த அனுதாபங்கள்


- Rasikai - 10-15-2005

எனது ஆழ்ந்த அனுதாபங்கள்


- KULAKADDAN - 10-15-2005

அவருடைய ஒன்றோ இரண்டு கதைகள் தான் வசித்துள்ளேன்.
எழுத்தாளரின் மறைவுக்கு அஞ்சலிகள்.


- Vasampu - 10-16-2005

இணைப்பிற்கு நன்றி இவோன்
அன்னாருக்கு எனது குடும்ப சார்பான கண்ணீர் அஞ்சலிகள்

அப்புசாமி சீதாப்பாட்டி நகைச்சுவையின் ஆசியரும் இவரா தெரிந்தவர்கள் கூறினால் நன்றி.


- nallavan - 10-16-2005

அப்புசாமி சீதாப்பாட்டி இவரில்லையென்றே நினைக்கிறேன்.
இவர் இரண்டே புதினங்கள்தான் எழுதியுள்ளாரென்று இன்று பி.பி.சியில் சொல்லப்பட்டது.

நிற்க பசுவய்யா என்ற பேரில் கவிதைகள் எழுதியதும் இவர்தானென்பது இன்று நானறிந்த முக்கிய செய்தி. தமிழில் புதுக்கவிதைப் பிதாமகன்களில் ஒருவர் பசுவய்யா. சி.சு. செல்லப்பாவுக்கு அடுத்து கவிதைகளை முன்னெடுத்தவர்களுள் இவர் ஒருவர். இதுபற்றி வல்லிக்கண்ணன் எழுதிய நூலில் சிறப்பாக எழுதியுள்ளார். ஆனால் பசுவய்யாதான் சுந்தரராமசாமி என்ற தகவல் ஆச்சரியம். அன்னார் மீது இன்னும் மதிப்புக் கூடுகிறது.

காலச்சுவடு தொடக்கியதும் இவரே தான். தமிழிலக்கியத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பென்பது திண்ணம்.


- vasisutha - 10-16-2005

<b>பிரபல எழுத்தாளர் சுந்தர ராமசாமி மரணம்</b>


<img src='http://img92.imageshack.us/img92/5841/15ramasamy9yp.jpg' border='0' alt='user posted image'>


பிரபல தமிழ் எழுத்தாளர் சுந்தர ராமசாமி இன்று அதிகாலை அமெரிக்காவில் காலமானார். அவருக்கு வயது 74.

தமிழின் முக்கிய எழுத்தாளர்களுள் ஒருவராக மதிக்கப்படும் சுந்தர ராமசாமி இன்று அதிகாலை 1 மணிக்கு அமெரிக்காவில் காலமானார். 1931 ஆம் ஆண்டு பிறந்த சுந்தர ராமசாமி, நாகர்கோவிலில் வசித்து வந்தார். 'காலச்சுவடு' என்ற இலக்கிய பத்திரிக்கையை நடத்தி வந்த அவர் 'ஒரு புளிய மரத்தின் கதை', 'ஜே.ஜே: சில குறிப்புகள்', 'குழந்தைகள், பெண்கள், ஆண்கள்' ஆகிய மூன்று நாவல்களையும், 60க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

நவீன தமிழ் எழுத்துக்கு முன்னோடியாகக் கருதப்படும் சுந்தர ராமசாமி, பல இலக்கிய விருதுகளையும் பெற்றுள்ளார். அவருக்கு கமலா என்ற மனைவியும், நான்கு மகன், மகள்களும் உள்ளனர். சிறிது காலம் நோய்வாய்ப்பட்டு, சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற சுந்தர ராமசாமி அங்கேயே காலமானார். அவரது உடல் இறுதிச்சடங்குகளுக்காக நாகர்கோவிலுக்குக் கொண்டு வரப்பட இருக்கிறது.

தகவல்:
vikatan.com


- தூயவன் - 10-16-2005

ஆழ்ந்த அனுதாபங்கள்


- Muthukumaran - 10-16-2005

தற்போதைய தமிழ் இலக்கிய உலகின் முக்கிய படைப்பாளியான திரு.சுந்தரராமசாமி அவர்களின் மறைவு இலக்கிய உலகிற்கு ஒரு மாபெரும் இழப்பே. அவரைப் பிரிந்து வாடும் அன்னாரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்....


- Mathan - 10-16-2005

இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் அப்புசாமி சீதாபிராட்டி நகைச்சுவை கதைகளை படித்திருக்கின்றேன். ஆனால் அது இவரில்லை என்று சொல்லியிருக்கின்றீர்கள், ஆக இதுவரை இவருடைய படைப்புகளை படித்ததில்லை <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> இனி சந்தர்ப்பம் கிடைக்கும் போது படிக்க முயற்சிக்கின்றேன். இவரை அறிய தந்தமைக்கு நன்றி.

அவரது குடும்பதினர்க்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.


- இவோன் - 10-16-2005

சுராவின் மறைவு ஒரு மரணத்தைபற்றிய எல்லா சம்பிராதயமான சொற்களையும் கலைத்துவிடகூடியதாக இருக்கிறது. ஒரு எழுத்தாளராகவும் ஆசானாகவும் நண்பராகவும் பத்தாண்டுகளுக்கும் மேலாக சுந்தர ராமசாமியிடம் கொண்டிருந்த ஆழமான உறவின் மீது இந்த மரணம் ஒரு கொடுங்கனவைப்போல படர்ந்துகொண்டிருக்கிறது. அவை வெறும் நினைவுகளோ ஒரு ஆளுமையைப் பற்றிய பதிவுகளோ அல்ல. சுந்தரராமசாமியின் வழியாக உருவாகிவந்த ஒரு தலைமுறைப் படைபாளிகளில் ஒருவன் என்ற முறையில் இந்த மரணத்தை எப்படி நிராகரிப்பது, ஒப்புக் கொள்ள மறுப்பது என்பதுதான் என்னுடைய பிரச்சினை.

இளம்பிராயத்தில் ஜே.ஜே சிலகுறிப்புகளைப் படித்து மனப் பிறழ்வுக்கு ஆளானவர்களில் நானும் ஒருவன். ஜே.ஜே உருவாக்கிய நிம்மதியின்மைகளும் கேள்விகளும் அன்றாட வாழ்வில் என்னுடைய சகஜமான இருப்பை நிலை குலைய வைத்தன. அந்த நிம்மதியின்மையோடு சுராவை போய்பார்த்தேன். இளைஞர்களிடம் அவர் பாராட்டிய தோழமை உணர்வு மகத்தானது. சொல்வதைக் காட்டிலும் அவர் கேட்பவராக இருந்தார். அறிவுறுத்துவதைக் காட்டிலும் புரிந்துகொள்ள விரும்புபவராக இருந்தார். எப்போதும் இது அவருடன் ஒரு இணக்கத்தையும் நம்மைப் பற்றிய பதட்டத்தையும் ஏற்படுத்துவதாக இருந்தது.

அவர் தொடங்கி இடைநிறுத்திய காலச்சுவடு இதழ் மீண்டும் தொடங்கப்பட்டபோது அதன் ஆசிரியர் குழுவில் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இது சுமார் பத்தாண்டுகாலம் சுராவுடன் தீவிரமான பரிமாற்றங்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தை அளித்தது. இந்தச் சந்தர்ப்பம் எனது மொழியை சிந்தனையை மனோபாவத்தை கடுமையாக பாதித்தது. நான் அவருடைய ஆளுமையால் தீவிரமாக ஆக்கரமிக்கப்படுபவனாகவும் எனக்குள் அதை சிலசமயம் எதிர்த்துப் போராடுபவனாகவும் இருந்திருக்கிறேன்.


சுமார் ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக சுரா ஒரு இயக்கமாக இருந்தார். தமிழ் வாழ்வில் சிறுமைகள் குறித்த கண்டங்களும் கேள்விகளும் அவரது எழுத்துக்களின் அடிப்படை நீரோட்டமாக இருந்திருக்கிறது. இந்தக் கேள்விகளை அவர் ஒருபோதும் விட்டுக் கொடுத்ததில்லை. பல எழுத்தாளர்கள் தங்கள் வாழ்வில் செய்துகொள்ள நேர்ந்த சமரசங்கள் எதையும் சுரா செய்துகொள்ள நேரவில்லை.

தமிழில் மிகவும் அதிகமாக விமர்சிக்கப்பட்ட எழுத்தளாராக சுந்தர ராமசாமியைத்தான் குறிப்பிட முடியும். இலக்கியம் சார்ந்த காரணங்களைவிட இலக்கியம் அல்லாத காரணங்களுக்காவே அவர் பெரிதும் விமர்சிக்கப்பட்டிருக்கிரார். எல்லா எழுத்தாளர்களுக்கும் ஒரு அரசியல் இருக்கிறது. ஆனால் சுரா தனது அரசியலையும் நம்பிக்கைகளையும் தெளிவாக முன்வைத்தார். அதனாலே அவரை விமர்சிப்பவர்களுக்கான ஆயுதங்களை அவரே எப்போதும் வழங்கினார். ஆனால் அவருடைய எல்லா சிந்தனைகளும் செயல்பாடுகளும் ஒரு வெட்ட வெளியில் மூட்டப்பட்ட நெருப்பைப் போல சில சமயம் புகைந்துகொண்டும் சில சமயம் எரிந்துகொண்டும் இருந்தன.

சுரா தமிழில் மூன்று தலைமுறை படைப்பாளிகளை பாதித்திருக்கிறார். அவர் இலக்கியத்தில் உருவாகிய சில மதிப்பிடுகளும் சமூகத்தைப் பற்றிய விமர்சனங்களும் பல்வேறு விவாதங்களை உருவாக்கியிருக்கலாம். ஆனால் அவரது கேள்விகள் தொடர்ந்து இருந்துகொண்டேதான் இருக்கும். இந்த கேள்விகள் சில சமயங்களில் சுராவைப் பற்றிய கேள்விகளாகவும் பல சமயங்களில் நம்மைப் பற்றிய கேளிவிகளாகவும் இருப்பது தவிர்க்க இயலாது.

சுரா ஒரு யுகத்தின் அடையாளம். அந்த யுகம் மறைந்துகொண்டிருக்கிறது. அது தன்னுடன் சுராவையும் எடுத்துசெல்கிறது என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. அவரது மரணம் சந்திப்பதற்கு கடினமானதாகவும் ஒரு உறைபனியைப்போல சருமத்தை துளைப்பதாகவும் இருக்கிறது.

சுராவின் மரணம் சட்டென ஒரு இடைவெளியை உருவாக்கிவிட்டது. அதைக் கடப்பது அவ்வளவு எளிதாக இல்லை.

<b>மனுஷ்ய புத்திரன்</b>http://uyirmmai.blogspot.com/2005/10/blog-post_16.html