![]() |
|
அமெரிக்கர்களின் மனச்சாட்சியை உலுக்கும் தாயின் போராட்டம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: அமெரிக்கர்களின் மனச்சாட்சியை உலுக்கும் தாயின் போராட்டம் (/showthread.php?tid=2886) Pages:
1
2
|
அமெரிக்கர்களின் மனச்சாட்சியை உலுக்கும் தாயின் போராட்டம் - Danklas - 10-16-2005 எனக்கு அந்த உண்மை தெரிய வேண்டும்; ஈராக் மீது ஏன் இந்தப் போர்?" என்று தனது அன்பு மகனைப் பறிகொடுத்த வேதனையில் கேட்கிறார் அந்த அமெரிக்கத் தாய். துயரத்தை நெஞ்சிலே சுமந்து கொண்டு, பயங்கரவாத அதிபர் புஷ்ஷுக்கு எதிராகத் தன்னந்தனியாக அவர் நடத்திய உறுதியான போராட்டம். அமெரிக்க மக்களின் மனச்சாட்சியை உலுக்கி, போர் எதிர்ப்புப் போராட்டத்துக்குப் புது இரத்தம் பாய்ச்சியுள்ளது. கலிபோர்னியா மாநிலத்தின் வகாவில்லி நகரைச் சேர்ந்த அந்தத் தாயின் பெயர் சின்டி ஷீஹன். அவரது அன்பு மகனாகிய கேசி ஷீஹன், அமெரிக்க இராணுவத்தில் பணியாற்றிய தனித்தேர்ச்சிமிக்க இளம் சிப்பாய். கடந்த 2004 ஏப்ரல் 4 ஆம் திகதியன்று ஈராக்கில் ஆக்கிரமிப்பு எதிர்ப்புப் போராளிகளின் குண்டுவீச்சுத் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார். இரு மாதங்களுக்குப் பிறகு சின்டி ஷீஹன் தனது குடும்பத்தோடு அதிபர் புஷ்ஷைச் சந்திக்கச் சென்றார். ஆனால், அங்கே ஆறுதலுக்குப் பதிலாக அவமரியாதை தான் கிடைத்தது. "இன்று நாம் யாரைக் கௌரவிக்க வேண்டும்? என்று அசைபோடும் தனது வாயுடன் உதவியாளர்களிடம் கேட்டுக் கொண்டே அதிபர் புஷ் வேகமாக நடந்து சென்றார். ஆறுதலாக ஒரு வார்த்தை கூட அவர் வாயிலிருந்து வரவில்லை. எங்களை நோக்கிய அவரது கண்களில் கருணை இல்லை. எதைப்பற்றியும் கவலைப்படாதவராக அவரது தோற்றம் காட்டியது. யதார்த்தத்திற்கும் மனிதத் தன்மைக்கும் முற்றிலும் வேறுபட்ட ஒரு மனிதப்பிறவி தான் அவர். அவரது கண்கள் வெறுமையாகவும், உள்ளே ஒன்றுமில்லாத வேர்க்கடலை ஓடு போலவும் காட்சியளித்தது." என்று அந்தச் சந்திப்பை நினைவு கூருகிறார் ஷீஹன். ஈராக்கில் கொல்லப்பட்ட அமெரிக்க இராணுவச் சிப்பாயின் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லக்கூட அதிபர் தயாராக இல்லையெனில், ஈராக் மீதான இந்தப் போர் எதற்காக? யாருக்காக? என்னைப்போல் எத்தனையோ குடும்பங்கள் தங்கள் மகனையும் குடும்பத் தலைவனையும் உற்றாரையும் ஏன் இப்படிப் பறிகொடுக்க வேண்டும்? கூடாது; இந்தப் போர் இனியும் தொடரக்கூடாது என்று அவர் தீர்மானித்தார். "இராணுவக் குடும்பங்களின் உரத்த குரல்" (உள்ளார்ந்த எண்ணத்தை வெளிப்படையாகக் கூறும் அரங்கம்) எனும் அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டு போர் எதிர்ப்பு இயக்கத்தில் ஊக்கமாகச் செயற்பட்டு வருகிறார். பேரழிவுக்கான ஆயுதங்களை வைத்துக் கொண்டு பயங்கரவாதத்தை ஊட்டி வளர்ப்பதாகக் குற்றஞ்சாட்டி ஈராக் மீது போர் நடத்தப்பட்டுள்ள இந்தப் போர் காட்டுமிராண்டித்தனமாக மாறிவிட்டதை அம்பலப்படுத்தும் இவ்வியக்கத்தினர், உடனடியாக ஈராக்கிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேற வேண்டும் என்று பிரசாரம் செய்து வருகின்றார். கடந்த சில மாதங்களாக ஈராக்கில் அமெரிக்கப் படைவீரர்கள் அடுத்தடுத்து கொல்லப்பட்டு, விமானங்களில் வந்திறங்கும் சவப்பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியதும், அமெரிக்க மக்களிடம் இந்தக் கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் ஆங்காங்கே பரவத் தொடங்கியுள்ளன. அமெரிக்க மக்களிடம் அதிருப்தி பெருகி வருவதைக் கண்டு அஞ்சும் அதிபர் புஷ், அதிலிருந்து தப்பிக்க விடுமுறையில் ஓய்வெடுக்கச் செல்வதாகக் கூறி நழுவிச் செல்வது வழக்கம். இப்படித்தான் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அவர் டெக்சாஸ் மாகாணத்தின் கிராஃபோர்டிலுள்ள தனது கால்நடைப் பண்ணையில் ஓய்வெடுக்க ஓடினார். அங்கே பொதுமக்கள் தமது கோரிக்கைகளுடன் எப்போதும் தன்னைச் சந்திக்கலாம் என்றார். புஷ் பதவிக்கு வந்து அவர் இப்படி ஓய்வெடுக்க ஓடுவது ஐந்தாவது தடவையாகும். கடந்த 36 ஆண்டுகளில் எந்த அதிபரும் தொடர்ந்து ஐந்து வாரங்களாக இப்படி ஓய்வெடுத்துக் கொண்டு முடங்கிக் கிடந்ததில்லை என்ற வரலாற்றுச் `சாதனை'யையும் அவர் படைத்துள்ளார். <img src='http://img366.imageshack.us/img366/4519/ar5er.jpg' border='0' alt='user posted image'> இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 4 ஆம் திகதியன்று சின்டி ஷீஹன் அதிபர் புஷ்ஷைச் சந்திக்க அவரது கால்நடைப் பண்ணைக்குச் சென்றார். ஆனால், அதிபர் புஷ் அவரைச் சந்திக்க மறுத்துவிட்டார். ஷீஹன் தன்னந்தனியாக இருந்தபோதிலும், அதிபரின் இந்தத் திமிர்த்தனத்திற்கும் அவமானப்படுத்தலுக்கும் எதிராக அவரது பண்ணையின் முன்பாகவே போராட்டத்தில் இறங்கினார். "ஈராக் மீது ஏன் இந்த ஆக்கிரமிப்புப் போர்? எனக்கு அந்த உண்மை தெரிய வேண்டும்" என்று எழுதப்பட்ட முழக்கத் தாளுடன் அவர் இரவு - பகலாக விடாப்பிடியாக அங்கேயே நின்றார். இதைக்கண்டு பொதுமக்கள் திரளத் தொடங்கியதும், பீதியடைந்த புஷ் தனது உதவியாளர்களை அனுப்பி அவரைச் சாந்தப்படுத்த முயற்சித்தார். ஆனால், ஷீஹன் உறுதியாகப் போராட்டத்தைத் தொடர்ந்தார். நன்கொடை அளிக்கும் ஒரு பெருமுதலாளியுடன் நீண்ட நேரம் அளவளாவிவிட்டு, அவரை வழியனுப்ப புஷ் வெளியே வந்தபோது, "பணக்காரர்களுக்காக நேரம் ஒதுக்க முடிந்த உங்களுக்கு, என்னுடன் பேசுவதற்கு மட்டும் நேரம் இல்லையா?" என்ற முழக்கத்தை எழுதிப் பிடித்துக் கொண்டு ஷீஹன் நிற்பதைக் கண்டு மிரண்டு உள்ளே ஓடிப்போய் பதுங்கிக் கொண்டார். அதிபர் புஷ்ஷுக்கு எதிராகவும், ஈராக் மீதான போருக்கு எதிராகவும் இரவு- பகலாக ஷீஹன் விடாப்பிடியாகப் போராடிய இடம், மாண்டுபோன அவரது மகன் கேசியின் பெயரால் நினைவுத்திடலாக போர் எதிர்ப்பு இயக்கத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கே அடிக்கடி போர் எதிர்ப்புக் கூட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் தொடர்கின்றன. பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான குடும்பத்தினர், மாண்டுபோன அமெரிக்கச் சிப்பாய்களின் பெயர், புகைப்படங்களையும் வெண்சிலுவைக் குறிபொறித்த அட்டைகளையும் ஏந்தி ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றனர். "ஈராக் மீதான போரை நிறுத்து! அமெரிக்கப் படைகளை உடனே திரும்பப் பெறு!" என்ற முழக்கம் புஷ்ஷின் பண்ணையில் மோதி எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. ஈராக்கில் அமெரிக்கச் சிப்பாய்கள் கொல்லப்படும் போதெல்லாம், அத்திடலில் பாதிக்கப்பட்ட இராணுவக் குடும்பங்கள் திரண்டு நினைவஞ்சலிக் கூட்டங்கள் நடத்துவதும் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதும் தொடர்கிறது. ஈராக்கில் போராளிகளின் குண்டுவீச்சினால் கொல்லப்பட்ட அமெரிக்கச் சிப்பாய் எட்வர்ட் ஷெரோடர் என்ற இளைஞனது சடலத்தை அடக்கம் செய்த பிறகு, ஆகஸ்ட் 15 ஆம் திகதியன்று கேசி ஷீஹன் திடலில் போர் எதிர்ப்பு இயக்கத்தினர் ஒரு நினைவஞ்சலிக் கூட்டத்தை நடத்தினர். அதில் உரையாற்றிய எட்வர்ட் ஷேரோடரின் தந்தையான பவுல் ஷெரோடர், "நாங்கள் எங்கள் துயரத்தைப் பகிர்ந்து கொள்வதற்காக இங்கே வரவில்லை. எங்களது குமுறல்கள் அதிபர் புஷ் மீது நாங்கள் கொண்டுள்ள கோபத்தை அடிப்படையாகக் கொண்டவை. இந்தக் கோபம், உருக்குலைக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தின் நேர்மையான வெளிப்பாடு" என்று குறிப்பிட்டதோடு, "சின்டி ஷீஹன் அம்மையார், போர் எதிர்ப்பு இயக்கத்தின் ரோசா பார்க்ஸ் ஆவார்" என்று பெருமையுடன் கூறுகிறார். 1955 இல் ரோசா பார்க்ஸ் அம்மையார், இன ஒதுக்கல் கொள்கைப்படி பிரிக்கப்பட்ட பேருந்தின் முன்பக்க இருக்கையில் அமர்ந்து கொண்டு, எழ மறுத்துப் போராடினார். ஏனெனில், அவர் ஆபிரிக்க- அமெரிக்க கலப்பினத்தவர், கறுப்பர்களுக்கும் கலப்பினத்தவருக்கும் பேருந்தின் பின்பகுதி இருக்கைகள் என இடஒதுக்கீடு செய்யப்பட்டு, அமெரிக்காவில் இனஒதுக்கல் கொள்கை பின்பற்றப்பட்ட காலம் அது. தன்னந்தனியே ரோசாபார்க்ஸ் அன்று நடத்திய போராட்டம், வெள்ளை நிற வெறியர்களின் புதிய வகை தீண்டாமைக்கு எதிரான மனித உரிமைப் போராட்டத்துக்கு புது இரத்தம் பாய்ச்சியது. அவர் தொடக்கி வைத்த போராட்டம், அமெரிக்கா முழுவதும் காட்டுத்தீயாகப் பற்றிப் படர்ந்தது. ரோசாபார்க்ஸ், இறுதிவரை மனிதஉரிமை இயக்கத்தின் முன்னணி ஊழியராகச் செயற்பட்டார். ரோசாபார்க்ஸ் போலவே, சின்டி ஷீஹனும் இன்று அமெரிக்க மக்களால் போற்றப்படுகிறார். தன்னந்தனிய அவர் நடத்திய போராட்டத்தால் சட்டத்துக்குக் கீழ்ப்படியாமை, அடக்குமுறையை எதிர்க்கும் உறுதி ஆகியவற்றின் அடையாளச் சின்னமாக அவர் கருதப்படுகிறார். தன்னந்தனியே ரோசாபார்க்ஸைப் போலவே சின்டி ஷீஹன் போராடியிருந்தபோதிலும், அவர் தனியானவரல்ல. போர் எதிர்ப்பு இயக்கத்தின் பிரிக்க முடியாத அங்கம். வியட்நாம் போர் எதிர்ப்பு இயக்கத்தின் மூலம் பிரபலமான நாட்டுப்புறப் பாடகர் ஜோன் பெய்ஸ் அம்மையார், கடந்த ஆகஸ்ட் 21 ஆம் திகதியன்று இரவு புஷ் பண்ணையின் எதிரே பெருந்திரளான மக்கள் முன் இசை நிகழ்ச்சியை நடத்தி ஈராக் போர் எதிர்ப்பு இயக்கத்துக்கு வலுவூட்டியுள்ளார். தனது மகனுக்காக மட்டுமல்ல; தனது மகனையொத்த இன்னும் பல இளைஞர்கள் அமெரிக்க வல்லரசின் ஒரு பொய்க்காகக் கொல்லப்படுவதைக் கண்டு குமுறும் ஷீஹனின் கோபம் உண்மையானது; இந்தப் போர் அநீதியானது; அது தடுக்கப்பட்டாக வேண்டும் என்ற உணர்வோடு அவர் நடத்திய போராட்டமும் உண்மையானது. அது, அமெரிக்க மக்களின் உள்ளார்ந்த கோபத்தையும் விரக்தியையும் வெளிப்படுத்தி, போர் எதிர்ப்பு இயக்கத்துக்கு வலுவூட்டி வருகிறது. அமெரிக்க மக்களிடமிருந்து மட்டுமன்றி, இராணுவக் குடும்பங்களிடமிருந்தும் புஷ் கும்பல் முற்றாகத் தனிமைப்பட்டுப் போய்க் கிடக்கிறது. அமெரிக்கா, உலக மேலாதிக்க வல்லரசாக ஆக்கிரமிப்புப் போர்களை நடத்தி ஆணவத்தோடு கொக்கரிக்கலாம். ஆனால், அமெரிக்க மக்களிடம் இன்னமும் எஞ்சியிருக்கிறது மனச்சாட்சி. ஷீஹன் மூட்டிய போராட்டச் சிறுபொறி பெருங்காட்டுத் தீயாகப் பரவவே செய்யும். அன்று வியட்நாம் ஆக்கிரமிப்புக்கு எதிராக அமெரிக்க மக்கள் போராடியதைப் போல, ஈராக் ஆக்கிரமிப்புக்கு எதிராக அமெரிக்க மக்களின் போராட்டம் உள்நாட்டிலேயே எரிமலையாக வெடித்தெழப்போவது நிச்சயம். நன்றி தினக்குரல்.... அடடா.... இப்படியே இங்கிலாந்து மக்களூம் கிளர்ந்து எழுந்தால் சர்வதிகாரி டொனி பிளேயரையும் அவரின் ஓய்வெடுக்கும் விடுதியில் முடங்கச்செய்யலாம்.. :evil: :evil: - kuruvikal - 10-16-2005 உண்மையில்...இவர் ஒரு புரட்சித் தாய்தான்...! துணிந்து தன் நிலைக்கு நியாயம் தேடிப் போராடும் அந்த அன்னையுடன் உலகெங்கும் உள்ள மக்களும் திரண்டால் என்ன...??! அமெரிக்க வல்லாதிக்க ஆக்கிரமிப்பின் ஜனநாயக முகத்திரை கொஞ்சம் என்றாலும் கிழியாதா...??!
- RaMa - 10-16-2005 அமெரிக்காவின் போலி முத்திரைகளை கிழிக்க அமெரிக்கானே புறப்பட்டு விட்டானா சபாஷ் - Vaanampaadi - 10-16-2005 உண்மையில் இவர் ஒரு புரட்சித்தாய்தான்.....ஏனென்றால் இவர் உலகைப்பற்றி யோசிக்காமல் தன் இறந்த மகனைப்பற்றியே யோசித்துள்ளார்..................... அத விடுங்க .............அது சர்வசாதார்ணம் ..........................அந்த ஒரு பெண்மணிக்காக இவ்வுலகையே இருட்டில் வாழ விட முடியுமா? என்ன குருவிகள் விசயம் அறிந்துதான் கதைக்குறீர்களோ? உதாரணத்திற்க்கு ஒன்று > இன்று அமெரிக்கா இல்லையெனில் இந்த ஐரொப்பாவே இல்லை எனலாம்> - Vaanampaadi - 10-16-2005 அமெரிக்காவை தவிற வேறு எந்த நாட்டால் இப்படியான சதாம் ஹுசெயின் மாதிரி பைத்தியகார கூட்டங்களை அழிக்கமுடியும்..................... இதற்க்கு அவர்கள் தான் சரி............. இன்று அமெர்க்கா இல்லை என்றால் தேர்தலில் வெற்றி பெற்ற அவுஸ்திரிய முதல்வர் கெயோர்க் ஹைடர் இன்றும் பதவியில் இருந்த்திருப்பார்............. - Vaanampaadi - 10-16-2005 அமெரிக்காவை தப்பாக எடைபோடாதீர்கள் ...........அவர்கள் எடுக்கும் எந்த முடிவும் உலகின் பாதுகாப்பிற்கே .............. வாழ்க அமெரிக்கா.............வளர்க அமெரிக்கா.................. God Bless America - kurukaalapoovan - 10-16-2005 வானம் பாடி நீங்கள் உங்கள் உயிரை ஊரின் உலகத்தின் பிரகாசமான வாழ்விற்கு தானம் செய்வீர்களா? உங்கள் நொருங்கிய உறவுகளின் உயிரிழப்பை உலகத்திற்கு ஊரிற்க்கு தானமாக ஏற்றுக் கொள்வீர்களா? சிலரால் அது முடியும் ஆனால் எல்லாரும் அப்படி தங்களை சமாதானபடுத்த இயலாது? மிதாவாதக் கொள்கைகளை எதிர்கொள்ள வேண்டிய தேவை உண்டு நிச்சயைமாக. ஆனால் அந்தப் போரில் உயிரை பயணம் வத்து ஈடுபடுபவர்களிற்கு உண்மை தெரியவேண்டும் என்ற ஒரு வாதம் உண்டு. இல்லை அவர்கள் படைவீரர்கள் என்றரீதியில் கட்டளையை ஏற்று விளக்கங்கள் கேக்காமால் செயற்படவேண்டும் என்று வாதிட்ட முடியுமா உறவுகளை இழந்தவருடன் அங்கவீனமடைந்தவர்களுடன்? - Vaanampaadi - 10-16-2005 RaMa Wrote:அமெரிக்காவின் போலி முத்திரைகளை கிழிக்க அமெரிக்கானே புறப்பட்டு விட்டானா சபாஷ் ஒரே ஒரு பெண்மணி புறப்பட்டதால் பல கோடி மக்கள் வாழும் அமெரிக்காவை இழிவு படுத்துவதா ... இது நியாயமா? - Vaanampaadi - 10-16-2005 kurukaalapoovan Wrote:வானம் பாடி நீங்கள் உங்கள் உயிரை ஊரின் உலகத்தின் பிரகாசமான வாழ்விற்கு தானம் செய்வீர்களா? உங்கள் நொருங்கிய உறவுகளின் உயிரிழப்பை உலகத்திற்கு ஊரிற்க்கு தானமாக ஏற்றுக் கொள்வீர்களா? சிலரால் அது முடியும் ஆனால் எல்லாரும் அப்படி தங்களை சமாதானபடுத்த இயலாது?வானம் பாடி நீங்கள் உங்கள் உயிரை ஊரின் உலகத்தின் பிரகாசமான வாழ்விற்கு தானம் செய்வீர்களா? பதில்> அதனால் எனக்கு என்ன நன்மை என்று முதலில் தெரிவிப்பீர்களா? உங்கள் நொருங்கிய உறவுகளின் உயிரிழப்பை உலகத்திற்கு ஊரிற்க்கு தானமாக ஏற்றுக் கொள்வீர்களா? பதில்< அப்படி ஏற்றுக்கொள்வதால் எனக்கு என்ன பயன்?????????????? - Vaanampaadi - 10-16-2005 அமெரிக்காவை உலுக்குதோ இல்லையோ இது நம்மள உளுக்குது....................... - kurukaalapoovan - 10-16-2005 தமிழ் எழுதிப் பழகுறீங்கள் போல கிடக்கு. - Vaanampaadi - 10-16-2005 Vaanampaadi Wrote:அமெரிக்கா இல்லைஎனில் எனிமேல் ....................RaMa Wrote:அமெரிக்காவின் போலி முத்திரைகளை கிழிக்க அமெரிக்கானே புறப்பட்டு விட்டானா சபாஷ் - kurukaalapoovan - 10-16-2005 இல்லாட்டி என்ன hindustan ke jintha ba இருக்கெல்லே? சந்திரனுக்கு வேறை போக போறியள். சும்மாவா :oops: - Vaanampaadi - 10-16-2005 தமிழ் எழுதாமல் பழகுகிறோம் - kuruvikal - 10-16-2005 Vaanampaadi Wrote:உண்மையில் இவர் ஒரு புரட்சித்தாய்தான்.....ஏனென்றால் இவர் உலகைப்பற்றி யோசிக்காமல் தன் இறந்த மகனைப்பற்றியே யோசித்துள்ளார்..................... அவர் தன்ர மகனைப் பற்றி மட்டுமல்ல...தன் பிள்ளை போல...இதர அமெரிக்கப் படை வீரர்களை பற்றியும் தான் கவலைப்படுகிறார்..! சதாமை அகற்ற அமெரிக்காவுக்கு ஆக்கிரமிப்புத்தான் வழியல்ல... அதை செய்வதாயின் குவைத்தை ஈராக் ஆக்கிரமித்த போதே செய்து முடிச்சிருக்கலாம்..! ஆனால் அமெரிக்க ஆக்கிரமிப்பு உங்களையும் தான் இலக்கு வைச்சிருக்கு...ஈரான் இந்தியா சீனா மற்றும் இதர தீவிர இஸ்லாமிய நாடுகளை...! அதுமட்டுமன்றி..வியட்நாம் விடுதலைக்கு உதவியதில்..அமெரிக்கப் படைவீரர்களின் உறவினர்கள் செய்த எதிர்ப்புப் போராட்டங்கள் முக்கிய பங்களித்துள்ளன..! அந்தவகையில் ஈராக்கில் நிகழும் அப்பாவிகளின் உயிர் இழப்புக்களைத் தடுக்க இப்பெண்மணியின் போராட்டம் உதவலாம்..அவரை அறியாமலே அவர் அதுக்கு உதவலாம்..! ஒரு காலத்தில் ரஷ்சிய தயவில் வாழ்ந்த இந்தியா இன்று சூழ வர எதிரிகளை தனதாக்கி வாழ்ந்து வருகிறது...அதுவும் வல்லரசுக் கனவோடு..! ஒரு கால முழு எதிரியான அமெரிக்கா...ஆப்கானிஸ்தான் வழியும் பாகிஸ்தான் வழியும் எல்லை வரை வந்து விட்டது... தெற்கே இலங்கையூடு செய்த வான் கடல்வழி ஒப்பந்தங்கள் மூலம் வந்துவிட்டது.. இன்னும் நெருங்கி வர நினைக்கிறது...! சீனாவை கவனிக்காது விட்டடிப்பது போல இருக்கும் அமெரிக்கா..இந்தியாவை வல்லரசாக அனுமதிக்காது..! அனுமதித்தால்..அது அமெரிக்க எம்பயரின் வீழ்ச்சிக்கே வழி வகுக்கும்..! அது அமெரிக்காவுக்கு நன்றே தெரியும்..! ஏற்கனவே ரஷ்சியா..சீனா இந்தியா என்று முக்கூட்டை பிரேரரித்த பின்னும் அமெரிக்கா விடுப்பு பார்த்திட்டு இருக்காது..! மீண்டும் ஒரு சோவியத் வருவதை அமெரிக்கா விரும்பாது...! இது சிம்பிள்..லொஜிக்..! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- Vaanampaadi - 10-16-2005 தப்பு....தப்பு.... தப்புசாமியோ....... சதாமை அகற்ற அமெரிக்காவுக்கு ஆக்கிரமிப்புத்தான் வழியல்ல... அதை செய்வதாயின் குவைத்தை ஈராக் ஆக்கிரமித்த போதே செய்து முடிச்சிருக்கலாம்..! - kuruvikal - 10-16-2005 Vaanampaadi Wrote:தப்பு....தப்பு.... தப்புசாமியோ....... சரி என்ன தப்பு எண்டுங்கோ... சதாமே அமெரிக்க கூட்டாளிதான்.. அதுதான் அப்ப விட்டு...இப்ப கைமாத்தினது ஈராக்கை...! அப்புறம் என்ன...! இப்ப ஈராக்கில அமெரிக்காவுக்கு அடிக்கிறது சதாமில்ல...அது தெரியுமெல்லோ...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kurukaalapoovan - 10-16-2005 சபாஸ் சரியான போட்டி. - kuruvikal - 10-16-2005 kurukaalapoovan Wrote:சபாஸ் சரியான போட்டி. விடுப்புப் பாக்கிறதுக்கு என்றே ஒரு கூட்டம் அலைஞ்சிட்டு இருக்கும்..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Vaanampaadi - 10-16-2005 குவைத்தை ஆக்ரமித்த போது பதவியில இருந்தவன் இவனோட அப்பன் புஷ் .....சரிங்களா சதாமை பதவிலைருந்து வெரட்டினபோது இருந்தவன் இவனோட மகன் புஷ் .....சரிங்களா (இதுல என்ன கன்னாமூச்சி விளையாட்டுன்னா அப்பன் செய்த அவ்வளவு ஜால்ராவும் மகனுக்கு தெரியும் ஆனா மவனோட ஜால்ராவ அப்பப்ப டிவில பார்த்துதான் அப்பனே புருஞ்சிகிட்டானாம் ) சரி அத விடுங்க, இன்றைய நிலையில் ஆப்கானிஷ்தானிலிருந்து இந்த பரதேசி தலிபான் அரசு ( முல்லர் ஓமாரும் ) ஈராக்கிலிருந்து ( சதாமும் ) அகற்றப்பட்டது உலகிற்கு எவ்வளவு மன நிம்மதியை தருகிறது தெரியுமா ...................????? இப்படிப்பட்ட பரதேசிகள் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களை அகற்றியே ஆகவேண்டும்.......எவனையும் விட்டு வைக்ககூடாது ..... இதற்க்கு அமெரிக்காவை தவிற வேறெந்த நாடும் இவ்வுலகில் இல்லை...... வாழ்க..அமெரிக்கா.....வளர்க ...அமெரிக்கா..... |