![]() |
|
உலகமனிதமே நீ அறியாததா !? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: உலகமனிதமே நீ அறியாததா !? (/showthread.php?tid=2882) |
உலகமனிதமே நீ அறியாததா !? - Netfriend - 10-16-2005 எண்பத்து மூன்று ஜூலை.. ஈழத்தமிழர் தம் இதயங்களில் உணர்வுகளைத் தட்டி உசுப்பேற்றி விட்ட உன்னத மாதம்..... ஏலவே எரிந்த இனவாத நெருப்பால் காலத்துக்குக் காலம் கருகிக் கொண்டிருந்தவர்கள் காணும் காணும் எனக்கூறிக் கண்விழிப்பதற்குக் காரணமாயிருந்தது எண்பத்து முன்று..... உயிர்வாழ விரும்பினால் - நீ உனக்கென ஒருதேசம் சமைத்திடு என்று உறைப்பாக உணர்த்தியது எண்பத்து முன்று...... அதுவரை காலமும் தந்ததையெல்லாம் வாங்கித் தலைகுனிந்து கொண்டிருந்தான் தமிழன்.. பொறுத்துப் பொறுத்து அவனது பொறுமைக் குணம் மீள்தன்மை மட்டை மீறத் தொடங்கியது.. அதன்பின் தான் அவன் நியுூட்டனின் முன்றாம் விதியைச் சரிபார்க்கத் தொடங்கினான்..... எண்பத்து முன்று ஜூலை என்னதான் செய்தது? அன்று.. சிறைச் சாலைகள் மரணச் சாலைகளாயின...... தன் தேசத்தின் விடிவுகாணத் துடித்த கண்கள் காடைக் கரடிகளால் துருவியெடுக்கப் பட்டன..... தலைநகர வீதிகளில் தமிழர் தலைகள் தட்டுப்பாடின்றித் தாராளமாய்க் கிடந்தன..... கொல்லாமை போதிக்கும் புத்தன் புூமி ரத்த வெறிகொண்டு முட்டிய வேள்வியில் தமிழர்தம் மெய்கள் நெய்யாகிச் சொரிந்தன..... வானொலியில் உத்தமர் வடிவாகச் செப்பினார் ஏன் உமது பாதுகாப்பை நீவிரே உறுதி செய்வீர் இன்று தனது பாதுகாப்பைத் தானே உறுதி செய்ய முடியாது தவிக்கிறது தலைநகர்...... பத்தடிக்கொரு பாதுகாப்பு அரண்.. நட்ட நடுநிசியில் நாய்களின் ஓலத்தை நயமாகக் கேட்டபடி வீட்டுக்கு வீடு சுற்றிவளைப்பு, சோதனை..... நிம்மதியான நித்திரை நித்தமும் குலைவது தமிழருக்கு மட்டுமல்ல.. இன்று தலைநகரில் தங்கியிருக்கும் சகலருக்குமே.. என்ன காரணம்? யாரிந்தப் பெரு நெருப்பை எரியுூட்டி வளர்த்தவர்கள்? தன்வினை தன்னைச் சுடும் ஓட்டப்பம் வீட்டைச் சுடும்.. நீவிர் மூட்டிய பெருநெருப்பு நித்தமும் உம்மைச் சுடும்..... மீண்டிட வழி வேண்டின் ஆண்டிட உரிமை கொடும்.. முண்ட பெரு நெருப்பை முழுதாய் அணைத்திடலாம்.... நன்றி: நிதர்சனம். நான்ரசித்த கவிதை... - கீதா - 10-18-2005 வாழ்த்துக்கள் - கீதா - 10-18-2005 வாழ்த்துக்கள் - shanmuhi - 10-20-2005 கவியினை பதித்தமைக்கு நன்றிகள்... |