Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அறிவுமதியின் ''நீலம்'' குறும்படம்
#1
[size=15]
<img src='http://www.geocities.com/thuvakku/arv1.jpg' border='0' alt='user posted image'>
கடலோரத் தமிழர்களை கடல் விழுங்கிய நாள்.
சுனாமி என்னும் ஆழிப்பேரலை ஆயிரக்கணக்கான தமிழர்களை அடித்துச் சென்றது. அந்தச் சோகத்தை பலரும் அவரவர் மொழியில் பதிவு செய்துள்ளனர். கவிஞர் அறிவுமதி தம் திரைமொழியில் பதிவு செய்துள்ளார்.
நீலம் என்னும் பெயரில் 10 நிமிடக் குறும்பட மாகத் தயாரித்துள்ளார். இப்படம் அண்மையில் பிரான்சு நாட்டில் பாரீசில் நடந்த கேன்ஸ் உலகத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. நிகழ்காலப் பிரச்சினையைப் பேசிய படமாக உலக சினிமா வல்லுநர்களால் பார்க்கப்பட்டது; பாராட்டையும் பெற்றுள்ளது.

நான் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பயின்றபோது என்னுடைய நண்பன் அறிவழகனின் குடும்பத்தில் ஒருவனாக வளர்ந்தேன். கடலூர் துறைமுகம் சோனாங்குப்பத்திலுள்ள அறிவழகனின் தந்தை சோ.சி. நடராசன் தாய் பருவதத் தம்மாள் ஆகியோர் என்னை ஒரு பிள்ளை யாகவே கருதி அன்பு செலுத்தினார்கள். சோனாங் குப்பம் எனது இரண்டாவது தாயூர் ஆனது.
சோனாங்குப்பத்திற்கும் தேவனாம்பட்டினத்திற் கும் இடையில் உள்ள அந்தக் கடற்கரையின் அதிகாலைகளும் அந்திகளும் தான் என்னைக் கவிஞனாக்கியது. இந்தப்பகுதி ஆழிப்பேரலையால் தாக்கப்பட்டது அறிந்து துடித்தேன். உடனடியாக சென்னையிலிருந்து சென்று போய்ப் பார்த்தபோது உள்ளம் வலித்தது.

தமிழ்நாடு, ஈழம், அந்தமான் என தமிழர்கள் வாழும் பகுதிகளையே தேடித்தேடித் தாக்கியுள்ளதே என்ற வேதனை மனதிற்குள். இந்த வேதனையை, மனசின் வலியை கவிஞன் என்ற முறையில் 10 பாடல்களாக்கி வெளிப்படுத்தியுள்ளேன்.

நான் கற்றுக்கொண்ட திரைப்பட மொழியின் மூலம் இயக்குநர் என்ற முறையில் உலகத்திற்கு உணர்த்த வேண்டும் எனக் கருதி நீலம் என்னும் பெயரில் இப்படத்தை இயக்கியுள்ளேன். என்னுடைய இனத்தின் வலியை இப்படத்தின் வழியே உலகத் தாரின் பார்வைக்குக் கொண்டு சென்றிருக்கின்றேன்.

என்னுடைய இந்த முயற்சிக்கு ஒத்துழைப்புக் கொடுத்து முழுச் செலவையும் செந்தூரன் ஏற்றுக் கொண்டார். ஒளி ஓவியர் தங்கர்பச்சான் ஒளிப்பதிவு செய்து தந்தார். அவரது மகன் அர்விந்த் பச்சான், நான் கதையைச் சொன்னபோது நன்றாக உள் வாங்கி சிறப்பாக நடித்தான். படத்தொகுப்புப் பணி யிலிருந்து ஒதுங்கியிருக்கும் பீ. லெனின், இப் படத்தின் படத்தொகுப்பைச் செய்து கொடுத்தார். புது இளைஞர் ந. நிரு பின்னணி இசையைச் செய்தார். இவர்களும், இன்னும் அனைத்துப் பணிகளையும் மேற்கொண்ட யாரும் பணம் வாங்கிக் கொள்ளவில்லை. அனைவரும் என் நன்றிக்குரியவர்கள். இது எனக்கான பெருமையல்ல. இத்தனை பேரின் ஒத்துழைப்போடு நடந்த கூட்டு முயற்சிக்கான வெற்றி என்று நீலம் உருவான உணர்வின் பின்னணியைச் சொன்னார் கவிஞர் அறிவுமதி.


தமிழர்கள் தம் நெடும் வரலாற்றில் பதிவு செய்ததும் குறைவு; அவற்றைப் பாதுகாத்ததும் குறைவு. இழந்ததுதான் ஏராளம். வரலாற்றைச் சரியாய்ப் பதிவு செய்திருக்கும் இந்தப் படத்தில் அழுகிய பிணங்களோ, அழிந்து போன இழப்பு களோ இல்லை. இழந்து போன தமிழரின் வாழ்க்கை யும், எதிர்கால வாழ்வுக்கான போராட்டத்தையும் உணர்த்துவதாய் காட்சிகள் விரிகின்றன.
பெரியாரின் பிள்ளைகள் படமெடுக்க வந்தால் யாருக்காக எடுப்பார்கள்? எப்படி எடுப்பார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டுதான் இப்படம் என்கிறார் அறிவுமதி. தமிழர் வாழும் பகுதிகளிலெல்லாம் சென்று ஆழிப்பேரலை நிகழ்த்திய சோகத்தின் வலியை வெளிக்கொணரும் முயற்சி தான் இந்தப் படைப்பு, மொத் தமே 10 நிமிடங்கள் ஓடக்கூடிய நீலம் குறும்படத்தின் காட்சி இரைச்சலிடும் அலை கட லோடுதான் தொடங்குகிறது. தமிழரின் அடையாளமாய் ஒற் றைப் பனை மரத்தின் புலத்தில் விரிகிற கடற்கரை வெளியின் கால் சுவடுகள் நடுவில் அலைகிற சிறுவன். வாழ வைத்த கடல் வாழ்வைப் பறித்த கொடுமை மனிதனுக்கு மட்டும் நேரவில்லை. கடலையே வாழிடமாகக் கொண்ட மீனும் மடிந்து கிடப்பது இயற்கையல்ல. லட்சக்கணக்கானோர் மடிந்த சோகத்தை, உயிரற்ற மீனும் நண்டும் நமக்கு உணர்த்துகின்றன. நிகழ்ந்துவிட்ட பெருந்துயரத்தின் வலியை அவலக் காட்சிகளின்றி இப்படியும் விவரிக்க முடியுமா? இழப்பு நிரம்பிய விழிகளுடன் கடலை நோக்கும் சிறுவன் தாங்கள் விளையாடிய கடல் வேட்டையாடிச் சென்ற கோரத்தை நிகழ்த்தியது நீதானா என்னும் கேள்வியைத் தேக்கி நிற்கிறான். மீண்டும் கடலிலிருந்து வெளி வந்து தங்கள் வாழ்க்கையைத் தொடங்கி விளையாடிக் கொண்டிருக்கும் நண்டுகளைப் பார்த்தவன் அலைகளையொட்டி ஓடிச் சென்று தேடுகிறான். மணலில் நண்டைத் தேடி எடுத்து சிறுவன் கேட்கிற கேள்விகள் மொழி பேதமற்று யாவருக்கும் புரியும். நீ தினமும் கடலுக்குள்ள போய் போய் தான வர்ற உள்ள போன எங்க அம்மாவைப் பாத்தியா? சொல்லு. ஏன் பதில் சொல்ல மாட்டேங்குற. நீயும் கடல் பெத்த புள்ளைதானே. எங்கம்மாவப் பாத்து வரச் சொல்லு என்று விழிநீர் வழிய சிறுவன் கேட்கும் காட்சி உலுக்குகிறது. சொல்லு, எங்கம்மாவப் பாத்தியா? நீ சொல்ல மாட்டியா? என்று அவன் வேண்டுகோள் வைக்க பதில்சொல்லத் தெரியாமல் நழுவி விழுந்து கடலுக்குள் போகிறது நண்டு. கடல் மணலைக் குவித்துத் தாயின் மடியாய் எண்ணி படுக்கும் சிறுவனை தொடத் தயங்குகிறது கடல் அலை. தான் நிகழ்த்திய கோரத்தால் உறவின்றித் தவிக்கும் சிறுவனுக்கு ஆறுதல் சொல்ல எண்ணிவரும் அலைகள் தயங்கித் தயங்கி அவனைத் தழுவும்போது அன்னையின் தாலாட்டாய் விரிகிறது பின்னணி இசை. கடலும் அன்னை தானே. சோகத்தை சுமந்து தொடங்கும் படம் நம்பிக்கையை விதைத்துவிட்டுச் செல்கிறது.
என்ன சோகம் நிகழ்ந்தாலும் வாழ்வைத்தேடி மீண்டும் கடலுக்குள் தானே போகவேண்டும் என்று மீண்டும் தங்கள் வாழ்வைத் தொடங்கும் நண்டுகள், காற்றினூடே அலையும் வண்ணத்துப்பூச்சி, மெதுவாய் எழுந்து ஆறுதல் சொல்லும் கடலலைகள், கொடுக்கக் காத்திருக்கும் மனிதத்தைச் சொல்லும் கடற்கரை கால் தடங்கள் என்று நெஞ்சில் நம்பிக்கையை ஊன்றுகிறது படம்.
<img src='http://www.geocities.com/thuvakku/arv4team.jpg' border='0' alt='user posted image'>
படத்தின் பெரும் பலம் பின்னணி இசை. அறிமுகம் நிருவுக்கு சிறப்புப் பாராட்டு.
தங்கர்பச்சானின் ஒளிப்பதிவும், லெனினின் படத்தொகுப்புக்கு காட்சிகளை நகர்த்தவில்லை. அதன் போக்கில் தவழவிட்டிருக்கின்றன.

படத்தில் நடித்திருப்பது கடலும் சிறுவனும் மட்டும்தான். ஆனால் சிறுவன் நடிக்கவில்லை; வாழ்ந்துவிட்ட சிறுவன் இயக்குநர் தங்கர்பச்சானின் மகன் அர்விந்த் பச்சான். இவரின் நடிப்புத் திறனுக்குக் கிடைத்த மாபெரும் வாய்ப்பு இந்த கதாபாத்திரம்.

தான் கற்ற திரை மொழியை தமிழனுக்காய் வடித்திருக்கிறார் இயக்குநர் அறிவுமதி. கவித்துவமான இந்தப் படைப்பு சொல்லும் இவர் கவிஞர் அறிவுமதி என்று.

நன்றி : உண்மை
&
http://iishaq.blogspot.com/2005/07/blog-po...07.html[/color]

<b>முக்கிய குறிப்பு:</b> பின்னணி இசை அறிமுகம் <b>நிரு</b> பிரான்சிலிருந்து தமிழகம் சென்று இசைத்துறையில் தடம் பதிக்கும் ஈழத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Reply
#2
ம்ம் நல்ல முயற்சி வாழ்த்துகள் & தகவலுக்கு நன்றிகள் அஜீவன் அண்ணா
<b> .. .. !!</b>
Reply
#3
தகவலுக்கு நன்றி அஜீவன் அண்ணா..
Reply
#4
தமிழன், தமிழ் மண், தொன்மம் ஆகியவற்றுக்கு கட்டுப்பட்டு இம்மியளவும் பிசகாமல் வாழுகிற சுத்தத் தமிழன் என் அறிவுமதி: பாரதிராஜா புகழாரம்
[வியாழக்கிழமை, 13 ஒக்ரொபர் 2005, 18:35 ஈழம்] [புதினம் நிருபர்]
தமிழின எழுச்சிக் கவிஞர் அறிவுமதி இயக்கிய குறும்படமான நீலம் திரைப்பட பாராட்டு விழா சென்னையில் கொட்டும் மழைக்கிடையில் நேற்று புதன்கிழமை மாலை நடைபெற்றது.


இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் தமிழ்நாடு அமைச்சர் இராசாராம் தலைமை வகித்தார்.

இயக்குநர் பாரதிராஜா பேசியதாவது:

இவன் அறிவுமதி என் நண்பன் என்று சொல்வதா என் சீடன் என்று சொல்வதா?.

இந்த உலகில் தனக்குத்தானே அழுது கொண்டு, சிரித்துக்கொண்டு தனக்காகவே வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால் பிறருக்காக வருத்தப்படுவான், தேடுவான், வாழ்வான்...இப்படி பிறருக்காக வாழ்கிறவர்கள் இந்த ஆறரை கோடி தமிழரில் நான் உட்பட எவருக்கும் தகுதி இல்லை. என் அறிவுமதிக்கு மட்டுமே அந்த முழுத் தகுதி உண்டு.

அவன் வாங்கிய அடிகளில் சுயத்தன்மையோடு சுயம்புவாக எழுந்து நிற்கிறவன். குழந்தைகால மனதில் அவன் மனதில் தமிழன் என்ற உணர்வும் தொன்ம உணர்வும் எப்படி பதிவானதோ அப்படியே இருக்கிறான் இன்னமும். அவன் சுத்தமான மனிதன். அவனுக்கு பாடல் எழுதத் தோன்றினால்தான் எழுதுவான்.

இந்த நீலம் படம் கூட அவனுக்குள் இருந்த அரிப்பின் வெளிப்பாடு. பிறரது சோகத்தைச் சொல்ல வேண்டும் என்கிற அரிப்பின் வெளிப்பாடு.

இந்தப் படத்தில் அந்தச் சிறுவன் கடல் அலை அடிக்க அடிக்க ஓடி ஓடிச் சென்று நண்டைத் தோண்டி எடுத்து பேசுகிறான்...என் அம்மாவைப் பார்த்தாயா? என்று.

அந்தச் சிறுவன் நண்டுக்காகத் தோண்டும் போது இந்த கடலுக்குள்ளே உன்னைப் போல் தான் அவர்களும் என் மக்களும் போனார்கள். நீ மட்டும் உயிரோடு உள்ளாய். என் மக்கள் இல்லையே என்று சொல்வதைப் போல் கவிதையாக்கியிருக்கிறான் அறிவுமதி.

என்னிடம் அவன் ஆசானாக பழகியதை விட தாயின் பரிவுடன்தான் இப்போதும் என்னைப் பார்க்கிறான்.

தமிழன், தமிழ் மண், தொன்மம், கலாச்சாரம் ஆகியவற்றுக்கு கட்டுப்பட்டு இம்மியளவும் பிசகாமல் வாழுகிற சுத்தத் தமிழன் என் அறிவுமதி.

நீலம் குறும்படத்தை கவிதையாய் சொல்லி இருக்கிறான். 10 தமிழர்கள் கூடி நின்று சப்தமாகத் தமிழைப் பற்றி பேசுவது கூட இங்கே பிரச்சனையாக்கப்படுகிறது.

தங்கர்பச்சான் அமைதியாகப் பேசி இருந்திருக்கலாம். உணர்ச்சிவசப்பட்டு விட்டான். அவனுக்கிருந்த கலைவெறியில் பேசியிருக்கிறான். அந்த 20 நாட்கள் நான் இங்கு இல்லை. இருந்திருந்தால் தங்கரை சட்டையைப் பிடித்து அறைந்திருப்பேன்? எங்கே போய் என்ன செய்து விட்டு வந்தாய் என்று?

யாரை எங்கே நிறுத்துகிறார்கள்? உன்னை மன்னிப்புக் கேட்க வைத்த நிகழ்ச்சி தமிழ்த் திரை உலக வரலாற்றின் கறை. அது அழியவே அழியாது. அழிக்கவும் முடியாது. துடைக்கவும் முடியாது.

மதம் என்பது போதை. பஞ்ச பூதங்களைத்தான் அனைவரும் உச்ச சக்தியாக வணங்கி வருகிறார்கள். இந்த நாட்டின் மத்திய அமைச்சர்களாகட்டும், மாநில அமைச்சர்களாகட்டும் அனைவரும் பொதுமனிதர்கள். சட்டப்பேரவை உறுப்பினர் முதல் நாடாளுமன்ற உறுப்பினர் வரை அனைவரும் ஏன் குடியரசுத் தலைவர் வரை அவர்கள் பதவி வகிக்கும் 5 ஆண்டுகாலத்தில் பொதுமனிதனாக இந்த சமூகத்தால் அவன் தரித்திருக்கிற அனைத்து அடையாளங்களையும் அவன் வின்சென்ட்டாக இருந்தாலும், அகமதாக இருந்தாலும், சின்னச்சாமியாக இருந்தாலும் அதை கழற்றிவிட்டு பொதுமனிதனாக வாழ வேண்டும். அதற்கான கட்டாய சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றார் பாரதிராஜா.

திரைப்படத் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு:

தம்பி அறிவுமதி நல்ல தமிழ் உணர்வாளன். சத்தியகீர்த்தி. எந்த காலகட்டத்திலும் அவன் சத்யகீர்த்தியாகவே வாழ்கிறான். உள்ளே அய்யா என்ற படமெடுப்பதாக சொன்னான். ஆனால் அந்தப் படம் எடுப்பதாகத் தெரியவில்லை. தனக்காக முதலீடு செய்த அற்புதம் என்ற அற்புதமான மனிதருக்காக இன்னமும் காத்திருக்கிறான். இது குறித்து கேட்டபோது, அண்ணே, இந்தப் படத்துக்கான 6 பாடல்களையும் பதிவு செய்துவிட்டேன். அதை முடித்துவிட்டு உங்களுக்குப் படம் செய்து தருகிறேன் என்றான். தொப்புள்கொடி என்ற படத்தை செய்துதருவதாக சொன்னான். படத்தின் பெயரைப் பதிவு செய்து 2ஆண்டுகாலமாகிவிட்டது. இன்னமும் அவன் செய்து தரவில்லை.

சிறைச்சாலை என்ற படத்தை உயிர்பித்த சிற்பி. எதிரியின் நரம்புகளால் கொடியேற்றுவோம் என்று எழுதியவன்.

20 கோடி ரூபாயை ஆளவந்தான் படத்தில் முதலீடு செய்து ஒரு தூரோகத்துக்குப் பால் வார்த்தேன். இந்த சத்யகீர்த்திக்கு நீர் ஊற்றிட நீ என்னிடம் விரைந்துவர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

திரைப்படத் தொகுப்பாளர் ஜெயம் மோகன்:

திரையரங்குகளில் செய்திப் படம் போடுவதைப் போல் சில நிமிடங்கள் குறும்படங்களைத் திரையிட வேண்டும். இந்தக் குறும்படங்கள் மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி குறும்படங்களின் நோக்கம் வெற்றி பெறும்.

இயக்குநர்-நடிகர் தங்கர்பச்சான்:

உயர்ந்த பண்பாளராக, நினைத்ததைப் பேசக்கூடிய சிறந்த மனிதராக, கலையாளனாக அண்ணன் அறிவுமதி இருக்கிறார். என் தமிழின உணர்வுக்கு உரமாக இருந்தவர். என் பண்புகளை மாற்றியவர். 7 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு இருந்த சிந்தனைகள் வேறு. தமிழ், தமிழர் என்று இப்போது நான் பேசிவரும் சிந்தனைகளுக்குத் தூண்டுகோலாக இருக்கிறவர் அண்ணன் அறிவுமதி.

புரஜெக்டர்கள் எனப்படுகிற படம்காட்டும் கருவி மூலம் பல பாவச்செயல்களை செய்து வரும் திரையரங்குகளில் இந்தக் குறும்படங்களும் ஒளிபரப்பப்பட வேண்டும். இதற்கு தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

தன் பொருளாதர நிலை தாழ்ந்து இருந்தாலும் உணர்வுகளில் தாழ்ந்துபோகாத இந்தக் கலைஞன் அறிவுமதி நாம் எப்படி பயன்படுத்தப் போகிறோம்?

ஏற்புரையில் இயக்குநர்-கவிஞர் அறிவுமதி:

பேராசிரியராக வேலைக்குப் போக வேண்டியவனை கெடுத்தவர் 16 வயதினிலே படம் எடுத்த என் ஆண் தாய்.

இரும்புச் சுவருக்குள் இருந்த திரை உலகத்தை எங்கிருந்து வந்தாலும் எந்த சேரியிலும் இருந்து வந்தாலும் கைப்பற்றிக் கொள்ளலாம் என்று எங்கள் கைகளை பற்றியவர்கள் பாரதிராஜாவும், இளையராஜாவும்.

அதனால்தான் பாரதிராஜா, இளையராஜா மீது ஒரு துரும்பு விழுந்தாலும் ஆவேசத்தோடு தடுக்கிற முதல் தமிழனாக நேற்று மட்டுமல்ல-இன்றும் நாளையும் இருப்பேன்.

தாமிரபரணி நதிக்கரையில் மீன்கள் கடிக்க கடிக்க என் ஆண்தாய் முதுகில் அழுக்குத் தேய்த்திருக்கிறேன். விடுடா, விடுடா எங்கம்மா நினைவு வருகிறது என்று அவர் சொல்வார்.

நான் அவர் முதுகின் அழுக்கு துடைத்தேன். அவர் தமிழ்த் திரை உலகின் அழுக்குகளைத் துடைத்தவர்.

இன்று அவரையும் பின்தள்ளுகிறார்கள். ஊடகங்கள், தொலைக்காட்சிகளில் தமிழ் அடையாளம் இல்லை. குறும்படங்கள்தான் சமூகப் பணியாற்ற வேண்டும்.

கிழக்குச் சீமையில் படத்தில் நான் பணிபுரிந்ததைப் பார்த்த சிறைச்சாலை படத்தின் உரையாடல்-பாடல் நீதான் எழுத வேண்டும்- என்ன சொல்கிறாய் என்று சொல்லிவிட்டு ஒரு புன்னகையோடு முழுப்படத்துக்கும் என்னை பொறுப்பாக்கியவர்.

இயக்குநர்கள் பாரதிராஜா, பாலுமகேந்திரா ஆகியோரிடம் கற்றுக்கொண்ட பாடத்தைக் கொண்டு இயக்குநராக உருவாக இருந்த என்னை சிறைச்சாலை படம் மூலம் பாடல்களை எழுத வைத்தவர் கலைப்புலி தாணு அண்ணன்.

ஏ.ஆர். ரகுமானிடம் அழைத்துச் சென்று இவனை பரிந்துரைக்கிறேன் என்பதற்காக வாய்ப்புக் கொடுக்காதே..மெட்டுக்குப் பாட்டெழுதட்டும். மெட்டு கொடு என்று சொன்னார்.

நான் இதுவரை 120-க்கும் மேற்பட்ட பாடல்கள் எழுதியிருக்கிறேன். எந்தத் தயாரிப்பாளரிடமும் எந்த இசையமைப்பாளரிடமும் போய் வாய்ப்புக்காக எப்போதும் நான் கேட்டதே இல்லை.

தொப்புள்கொடி திரைப்படம் குறித்து அண்ணன் தாணு கூறினார்.

அது மொரீசியசிலிருந்து தமிழ் அடையாளத்தை தேடி வரும் பெண்ணின் கதை அது.

என் ஆசான் பாரதிராஜா, தங்கர்பச்சான், தம்பி சீமான் உள்ளிட்ட பலரது கூட்டு முயற்சியில் அது விரைவில் உருவாக்கப்படும். அதை தாணு அண்ணன் மிக விரைவில் பெற்றுக்கொள்வார் என்று உறுதியளிக்கிறேன் என்றார் அறிவுமதி.

இந்த நிகழ்வில் தளிர் ஒன்று சருகானது, டிசம்பர் 6 ஆகிய இரு குறும்படங்களும் நீலம் குறும்படமும் திரையிடப்பட்டது.

குறும்படப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற தளிர் ஒன்று சருகானது பெண் சிசுக் கொலை தொடர்புடையது. டிசம்பர் 6 திரைப்படம் பாபர் மசூதி இடிப்பை மையமாகக் கொண்டது.

நிகழ்வில் மதுரா பாலன், இராசாராம் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். நீலம் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டன.

புதினம்.கொம்
Reply
#5
அறிவுமதியின் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள் அத்துடன் தகவலுக்கு நன்றிகள் அஐpவனுக்கும் வதனாக்கும்

Reply
#6
கட்டுரைக்கு மிக்க நன்றி. நீலம் குறும்படத்தைப் பார்க்க மிக்க ஆவலுடன் தான் நாங்களும் இருந்தோம். சென்ற முறை இந்தியா சென்றுவந்த முத்துக்குமரன் தமிழின எழுச்சிக் கவிஞர் அண்ணன் அறிவுமதி அவர்களை நேரில் சந்தித்து துபாய் நண்பர்களின் விருப்பத்தை வேண்டுகோளாக வைக்க விரைவிலே குறுந்தகடு அனுப்பித் தருவதாக கூறியிருக்கிறார்.

குறும்படத்தின் மூலம் படைப்பாளியாகப் புதிய பரிமாணங்களையும் உயரங்களையும் தொட்ட அண்ணன் அறிவுமதி அடுத்து புறநானூறை புதுக்கவிதையாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதன் மூலம் அவரின் சாதனைகள் புதிய எல்லைகளைத் தொடும்.

அவரின் இந்த முயற்சி வெற்றிபெற வாழ்த்துகிறோம்.


ஆர்வத்தோடு காத்திருக்கிறோம் - நீலம் குறும்படத்தின் குறுந்தகடுகளுக்கும் - புறநானூற்றின் புதுக்கவிதைக்கும்....
-----------------


-----------------




-----------------
Reply
#7
கட்டுரைக்கு மிக்க நன்றி.
Reply
#8
அஜீவன் -

நன்றி - நண்பர் இசாக்கின் பதிவுகளில் ஒன்றை இங்கு தந்தமைக்கு....

மீண்டும் உங்களை இங்கு சந்திப்பதில் மகிழ்சியாக இருக்கிறது.

நலம் தானே?
-----------------


-----------------




-----------------
Reply
#9
நீலம் குறும்படம் (அண்மையில் )பார்க்கக்கிடைத்தது (தமிழீல தேசியத்தொலைக்காட்சியில் ரீ ரீ என் ஊடக பாத்தேன்) உணர்வு பூர்வமாக இருந்தது. காட்சிகள் பேசின. சிறுவன் திறமையாக நடித்திருந்தான்.
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#10
<!--QuoteBegin-Nanban+-->QUOTE(Nanban)<!--QuoteEBegin-->அஜீவன் -

நன்றி - நண்பர் இசாக்கின் பதிவுகளில் ஒன்றை இங்கு தந்தமைக்கு....

மீண்டும் உங்களை இங்கு சந்திப்பதில் மகிழ்சியாக இருக்கிறது.  

நலம் தானே?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

நலம் நண்பனே

இக் கட்டுரை அண்ணன் இசாக்கின் வலைப்பதிவில் இருந்தது.
நல்ல விடயங்கள் எங்கு இருந்தாலும் அதை முன் வைப்பதுதானே சிறப்பு.

அறிவுமதி அண்ணனுடன் பழகியதில் அவரைப் பற்றியும்
சில மணிகள் ஒன்றாக இருந்ததில் இசையமைப்பாளர் திருவைப் பற்றியும்
ஒளி ஓவியரான ஒளிப்பதிவாளர் தங்கர் பற்றியும்
எனக்குத் தெரியும்.

எனவே நிச்சயம் நீலம்
கடல்போல் ஆழமான படைப்பாகவே இருக்கும்.
Reply
#11
அன்பு அஜீவனை சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. எப்படித் தெரியும் என்று குழப்பமாயிருக்கிறதா. தமிழ்மன்றம் இணையதளத்தில் பிரியன் என்ற பெயரில் இயகங்கிவந்த நான் யாழில் என் சொந்த பெயரிலே இயங்குகிறேன்.

இந்த முறை இந்தியா சென்றிருந்தபோது ஆகஸ்டு 5ம் திகதி அறிவுமதி அண்ணனை சந்தித்தேன். மறக்க முடியாத சந்திப்பு அது. நான் சென்றிருந்த சமயம் நீலம் குறும்படத்தை இந்தியன் பனோரமாவுக்கு அனுப்புவதற்கான பணிகளில் ஈடுபட்டிருந்தார். மிகுந்த பரபரப்பில் அவர் இயங்கிக் கொண்டிருந்ததால் நீலம் குறுந்தகடு அவரால் கொடுக்க முடியவில்லை. நாங்களும் காத்திருக்கிறோம் அவர் கவிதை மொழியை திரையில் காண.......

அப்புறம் அஜீவன் - இசாக் தங்களை விட வயதில் சிறியவரே.......


அன்புடன்
முத்துகுமரன்

.
Reply
#12
<!--QuoteBegin-Muthukumaran+-->QUOTE(Muthukumaran)<!--QuoteEBegin-->அன்பு அஜீவனை சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. எப்படித் தெரியும் என்று குழப்பமாயிருக்கிறதா. தமிழ்மன்றம் இணையதளத்தில் பிரியன் என்ற பெயரில் இயகங்கிவந்த நான் யாழில் என் சொந்த பெயரிலே இயங்குகிறேன்.

இந்த முறை இந்தியா சென்றிருந்தபோது ஆகஸ்டு 5ம் திகதி அறிவுமதி அண்ணனை சந்தித்தேன். மறக்க முடியாத சந்திப்பு அது. நான் சென்றிருந்த சமயம் நீலம் குறும்படத்தை இந்தியன் பனோரமாவுக்கு அனுப்புவதற்கான பணிகளில் ஈடுபட்டிருந்தார். மிகுந்த பரபரப்பில் அவர் இயங்கிக் கொண்டிருந்ததால் நீலம் குறுந்தகடு அவரால் கொடுக்க முடியவில்லை. நாங்களும் காத்திருக்கிறோம் அவர் கவிதை மொழியை திரையில் காண.......

அப்புறம் அஜீவன் - இசாக் தங்களை விட வயதில் சிறியவரே.......


அன்புடன்
முத்துகுமரன்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

அன்புக்கு நன்றி முத்துக்குமரன்...........
இசாக் அவர்களை பெரியவராகவே கருதினேன்.
ஒரு சகோதரராக மதிப்போம்.
இணைந்து எழுதுங்கள்............
வாழ்த்துக்கள்.
Reply
#13
பாத்து கவனம் அளவுக்கு அதிகமா புகழாதையுங்கோ
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply
#14
நன்றி தகவலுக்கு.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#15
நன்றி அஜிவன் அண்ணா.. படத்தை பார்க்க மிகவும்
ஆவலாக உள்ளது.
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#16
இப்படியான குறும்படங்களை எங்கே பெற்றுக் கொள்ளலாம்?
Reply
#17
thuyawan Wrote:இப்படியான குறும்படங்களை எங்கே பெற்றுக் கொள்ளலாம்?
கடையில் தான்

Reply
#18
RaMa Wrote:
thuyawan Wrote:இப்படியான குறும்படங்களை எங்கே பெற்றுக் கொள்ளலாம்?
கடையில் தான்

நக்கலா!! :oops: :oops:
Reply
#19
thuyawan Wrote:
RaMa Wrote:
thuyawan Wrote:இப்படியான குறும்படங்களை எங்கே பெற்றுக் கொள்ளலாம்?
கடையில் தான்

நக்கலா!! :oops: :oops:


ஐயோ உண்மையைத் தான் சொன்னேன்

Reply
#20
sathiri Wrote:பாத்து கவனம் அளவுக்கு அதிகமா புகழாதையுங்கோ

சாத்திரி எதையோ மனசில வச்சிருக்கிறீங்க.......
அன்றைக்கு சொன்னதைத்தானே?
ஒருவர் செய்யும் தவறுக்கு
மற்றொருவரைத் தண்டித்து பழக்கமில்லை.
நல்லதை புகழ்வதை என்னால் மாற்ற முடியாது.............சாத்திரி?
கோபமில்லைதானே?
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)