Yarl Forum
போலி சாமியார் தப்பி ஓட்டம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: போலி சாமியார் தப்பி ஓட்டம் (/showthread.php?tid=2900)



போலி சாமியார் தப்பி ஓட்டம் - SUNDHAL - 10-14-2005

தஞ்சாவூரை சேர்ந்தவர் சங்கிலிபாபா (வயது41). இவர் அந்த பகுதியில் பலரிடம் கைவரிசை காட்டி இருக்கிறார். சென்னையிலும் இவர் நகைகளை மோசடி செய்து உள்ளார்.

இதையொட்டி இவரை தமிழக போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் போலீசுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு அவர் குடும்பத்தோடு திடீர் என்று தலைமறைவு ஆகிவிட்டார்.

இதற்கிடையில் சங்கிலி பாபா கேரளாவுக்கு குடும் பத்தோடு சென்றுவிட்டார். அங்கு தங்கி இருந்து பலரிடம் மோசடியில் ஈடுபட்டு வந்தார். இதனால் இவரால் நிரந்தரமாக ஒரே இடத்தில் குடியிருக்க முடியவில்லை,

சமீபத்தில் இவர் கேரள மாநிலம் திருச்சூர் பட்டாப்பியை சேர்ந்த முகமது எம்.எல்.ஏ.யிடம் டெலி போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது இவர்தான் மத்திய அரசு அதிகாரி என்று அறிமுகம் செய்து கொண்டார். நேரில் வந்து பார்க்க விரும்புவதாக சங்கிலிபாபா அவரிடம் கேட்டுக் கொண்டார். அதற்கு முகமது எம்.எல்.ஏ. அனுமதி கொடுத்தார்.

இதைத் தொடர்ந்து சங்கிலி பாபா தனது மனைவி சாஜிதா மற்றும் 2 மகள்களுடன் முகமது எம்.எல்.ஏ. வீட்டுக்கு சென்றார். அங்கு சங்கிலி பாபாவை அவர் உபசரித்தார். இருவரும் வெகு நேரம் தனியாக பேசிக் கொண்டு இருந்தனர்.

அப்போது சங்கிலிபாபா பணம் பெற முயற்சி செய்தார். ஆனால் முகமது எம்.எல்.ஏ. அவரிடம் பணம் ஏதும் கொடுக்க வில்லை.

அதோடு அவர் மத்திய அரசு அதிகாரியாக இருக்கவாய்ப்பு இல்லை என்றும் எம்.எல்.ஏ. தெரிந்து கொண்டார்.

இதுபற்றி முகமது எம்.எல்.ஏ. போலீசுக்கு ரகசியமாக தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் சங்கிலி பாபாவிடம் விசாரணை நடத்தினார்கள்.

அப்போது அவர் மத்திய அரசு அதிகாரி அல்ல என்பது உறுதி செய்யப்பட்டது. அவர் போலி சாமியார் என்பது வெட்ட வெளிச்சம் ஆனது இதையொட்டி அவர் கைது செய்யப்பட்டார். அதோடு அவரது மனைவி சாஜிதா மற்றும் மகள்களும் கைது செய்யப்பட்டனர்.

சங்கிலி பாபா தனக்கு உடல் நலக்குறைவு ஏற் பட்டு இருப்பதாக தெரி வித்தார். இதையொட்டி அவர் திருச்சூர் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு அவருக்கு தனி வார்டு கிடைக்கவில்லை.

எனவே அவர் அங்குள்ள பொது வார்டில் தங்க வைக்கப்பட்டு இருந்தார். மற்ற நோயாளிகளுடன் அவர் தங்கி இருந்தார். அவருக்கு உதவியாக அவரது மனைவி சாஜிதாவும் அங்கு தங்க வைக்கப்பட்டு இருந்தார்.

சங்கிலி பாபாவுக்கு மருந்து கொடுக்க நர்சு வந்தார். அப்போது அவர் படுக்கையில் இல்லை. அங்கு அவரது மனைவி சாஜிதா மட்டும் இருந்தார். சங்கிலி பாபா எங்கே என்று அந்த நர்சு கேட்டார். உடனே சாஜிதா குளியல் அறைக்கு சென்று இருப்பதாக தெரிவித்தார். அதை உண்மை என்று எண்ணி அந்த நர்சு அங்கு இருந்து சென்றுவிட்டார்.

சிறிது நேரம் கழித்து மீண்டும் அந்த நர்சு அங்கு வந்தார். அப்போதும் சங்கிலிபாபா அங்கு இல்லை எனவே நர்சுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதுபற்றி அந்த வார்டுக்கு வெளியே பாதுகாப்புக்காக நின்ற போலீசாரிடம் விவரத்தை அந்த நர்சு தெரிவித்தார் மறுவிநாடியே போலீசார் அங்குள்ள குளியல் அறைக்கு சென்று பார்த்தனர். அங்கு அவர் இல்லை எனவே சங்கிலி பாபா தப்பி ஓடிவிட்டது தெரிய வந்தது.

இதையொட்டி சங்கிலி பாபாவை தேடும் பணியில் போலீசார் மும்முரமாக ஈடுபட்டனர். பஸ் நிலையம், ரெயில் நிலையம் ஆகிய இடங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இருந்தபோதிலும் சங்கிலிபாபா பிடிபட வில்லை.

சங்கிலி பாபா ஆஸ்பத்திரி யில் சிகிச்சை பெறும் போது தப்பியதையொட்டி பாது காப்பு பணியில் ஈடுபட்ட 3 போலீசார் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

சங்கிலி பாபா தப்பியது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Thanks:Malaiamalar..........


- vasisutha - 10-16-2005

சாதாரண சங்கிலி பாபாவைத்தான் போலிஸ் வலைவீசித்தேடும்
..
நாட்டில் உள்ள பெரிய பெரிய சங்கிலி பாபாக்களை விட்டுவிடும். :roll: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- தூயவன் - 10-16-2005

vasisutha Wrote:சாதாரண சங்கிலி பாபாவைத்தான் போலிஸ் வலைவீசித்தேடும்
..
நாட்டில் உள்ள பெரிய பெரிய சங்கிலி பாபாக்களை விட்டுவிடும். :roll: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

உங்களை விட்டு வைத்ததை சொல்கின்றீர்களா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- vasisutha - 10-16-2005

யோவ் தூயவன் என்ன லொள்ளா?
என்னையெல்லாம் புடிக்கமுடியுமா? எத்தனை ஆசிரமங்கள்
பள்ளிக்கூடங்கள் மருத்துவமனைகள் கட்டி வைச்சிருக்கிறன்..
தெரியுமா? என்னில கைவைச்சா பொதுசனம் பொங்கி
எழுந்திடும்.. :evil: :evil:


- Danklas - 10-16-2005

vasisutha Wrote:யோவ் தூயவன் என்ன லொள்ளா?
என்னையெல்லாம் புடிக்கமுடியுமா? எத்தனை ஆசிரமங்கள்
பள்ளிக்கூடங்கள் மருத்துவமனைகள் கட்டி வைச்சிருக்கிறன்..
தெரியுமா? என்னில கைவைச்சா பொதுசனம் பொங்கி
எழுந்திடும்.. :evil: :evil:

அண்ணன் வசி வாழ்க,, வருங்கல லண்டனை ஆழ வந்த எங்கள் அண்ணன் வாழ்க,, <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> (ஜோவ்வ்வ் மறக்காமல் என்னுடைய அக்கவுண்டில சொன்னபடி காசை போட்டுடுமோய் கொஞ்சம் பார்த்துபோட்டுகொடுங்க சாமி,, கோசம் போட்டதுக்குத்தான்}