Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யாழில் தொடங்கியிருக்கும் படுகொலைகள்
#1
கடந்த சில நாட்களான் யாழ் செய்திகள்.......
*சுன்னாகத்தில் முன்னால் ஈ.பி.டி.பி உறுப்பினர் சுட்டுக்கொலை
*நெல்லியடியில் இளைஞர் தூக்கிலிடப்பட்டுக் கொலை
*கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி அதிபர் சுட்டுக்கொலை
*யாழ் மத்திய கல்லூரி அதிபர் சுட்டுக்கொலை .........

தொடரும் இக்கொலைகளின் பின்னனியென்ன? இக்கொலைகளால் யார் பயனடைகிறார்கள்? என்பன போன்ற கேள்விகளுக்கு எந்த ஒரு ஈழத்தமிழ்க் மகனும் இலகுவில் பதில் புரிந்து கொள்ளக்கூடியதாகவிருக்கும். அப்படியிருக்கும்போதும் ஏனிந்த படுகொலைகள் நடைபெறுகின்றன???????....

முதலில் கொலை செய்யப்பட்டிருப்பவர்களின் பின்னனிகள் .... *சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் ஓர் முன்னால் ஈ.பி.டி.பி உறுப்பினரகவோ அல்லது ஈ.பி.டி.பி யின் ஆதரவாளர்கள், இல்லையேல் *தமிழ்த்தேசியத்தின் யாழ் நகர மிகமுக்கிய செயற்பாட்டாளர்கள்.

இவற்றை ஆராயுமுன் கொழும்பு வெள்ளவத்தை நெல்சன் பிளேஸிலுள்ள தினமுரசு பத்திரிகை காரியாலயத்துக்குக்கு முன் நடந்த குண்டுத்தாக்குதலை நோக்குவோமாயின், மிகப் பாதுகாப்புமிக்க, அவ்வீதியால் நடமாடும் தமிழரணைவரும் கைதுசெய்யும் அளவிற்கு பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டிருந்தது. அதுவும் கதிர்காமரின் கொலைக்குப் பின் எப்படி கொழும்புப் பாதுகாப்பு இருக்குமென்று யாவரும் ஊகிக்கலாம். அப்படியிருக்க ஈ.பி.டி.பியின் வாகனத்தில் குண்டு வெடித்துள்ளதாம்!! அதுவும் யாரும் இல்லாதிருக்க!! அதுவும் இலங்கை பொலிஸ்சார் கூட இக்குண்டு வெடிப்பு சம்பந்தமாக சந்தேகங்களை தெரிவிக்குமளவிற்கு குண்டு வெடிப்பு நடைபெற்றிருக்கிறது!!!!!! அப்படியாயின் இக்குண்டு வெடிப்பின் சூத்திரதாரிகள் யார்??????????????...................

புலிகளுக்கு ஐரோப்பிய அளவிற்கு பயணத்தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், சந்தர்ப்பத்தை எம்மினக்கூலிகள் மிக கச்சிதமாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளார்கள். என்பதையே இவைகள் காட்டுகின்றன. இவற்றின் தொடர்ர்ச்சியே இந்த யாழ் படுகொலைகள்!!!!

இக்கொலைகளில்யில் பலியான யாழ் மத்திய கல்லூரி அதிபர் கூட ஓர் ஈ.பி.டி.பியின் மிகத்தீவிர ஆதரவாளரே!! யாழில் கலாச்சார சீரளிவில் ஈடுபடும் ஓர் வானொலியின் ஆலோசகர் கூட!!! இவர் தேசியவாதிகளால் விமர்சிக்கப்பட்டு வந்தாலும், இவர் கொல்லப்பட்ட இடமும், கொண்றுவிட்டு எப்படி கொலையாளிகள் தப்பமுடிந்ததென்பதும் பல சந்தேகங்களை எழுப்புகின்றன. வீரசிங்கம் மண்டமத்தின் முன் கொல்லப்பட்ட இவ்வதிபரின் கொலையாளிகள் பக்கத்திலுள்ள இராணுவ காவலரனைக் கடந்து எப்படித் தப்பமுடிந்தது??????????????

ஆனால் சுன்னாகத்தில் சுட்டுக் கொல்லப்பட்டவர் யாழ் மாவட்ட இராணுவ புலனாய்வுப் பொறுப்பாளரினாலேயே கொல்லப்பட்டதாக பல மக்களே கண்டுள்ளார்கள்.

நடத்தப்பட்ட புலிகள் மேல் போடப்பட்ட இக்கொலைகளின் நிழலிலேயே மற்றைய தமிழ்த் தேசியத்திற்காதரவான செயற்பாட்டாளர்களும் கொல்லப்பட்டார்கள்.

இக்கொலைகளின் சூத்திரதாரிகள் யார்????????????

1) அண்மையில் ஆனந்தசங்கரியின் வழித்துணையுடன் யாழுக்குக் கொண்டு செல்லப்பட்டு இலங்கை இராணுவ முகாங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் இந்தியக் கூலிகளான பரந்தன் ராஜனின் தலைமையிலான ஈ.என்.டி.எல்.எப் கூலிக்கும்பல்.
2) மாற்றுக்கருத்தாளர்களின் பல தலைவர்களை வைத்திருந்த மகேஸ்வரி வேலாயுதத்தை தற்போது வத்திருக்கும் டக்லஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி கும்பல்.
3) புளொட் எனும் நாசகாரக் கும்பல்.
4) இவற்றையெல்லாம் இயக்கும் இலங்கைப் புலனாய்வுத்துறை.

இக்கொலைகளுக்கான தீர்வென்ன?????
இவ் ஆனந்தசங்கரி, பரந்தன் ராசன், டக்ளஸ், சித்தாத்தன் சம்பந்தப்பட்ட கும்பல்கள் தலைகள் முதல் வால்கள் வரை ***. !!!

*** நீக்கப்பட்டுள்ளது - மோகன்
" "
#2
இன்று கொழும்பு வெள்ளவத்தை நில்சன் பிளேசிலிள்ள எனது நன்பனுடன் தொலைபேசியில் கதைக்கும் போது, இந்த குறிப்பிட்ட தினமுரசு பத்திரிகை அலுவலக முன்பாக நடைபெற்ற குண்டு வெடிப்பானது, குண்டை வாகனத்தில் பொருத்தியவர்களே இறங்கி தினமுரசுக் காரியாலயத்துக்குள் ஓடியதை அவ்வீதியில் வாழும் பலர் கண்டுள்ளார்களென கூறினார். அதைவிட குண்டு வெடிப்பதை பலர் அலுவலக யன்னல்களினூடே பார்த்துக் கொண்டிருந்தார்களாம்!!!!
" "
#3
எது எப்படியானாலும், யார் குத்தி அரியானாலும் மாதிரி. உந்த எட்டப்ப கூட்டங்களை புலிகள் அழித்தாலென்ன, இல்லை தங்களைத்தாங்கள் அழித்தாலென்ன, இப்படியே அழிந்து போனால் எமக்குப் போதும்!!!!
" "
#4
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதோ அதோ இதோ கோணல் மீண்டும்!!!!!!!!

கிறீங்....... கிறீங்........

முஸ்: களோ!!

கருணா: வணக்கம் தூள்கிங்!!

முஸ்: வனக்கம்! வனக்கம்!! எண்ண விசயம்?

கறுணா: என்ன கன காலமாய் கானேளை?

முஸ்: இள்ளை! நாண் பிசி!!

கருணா: என்ன! கன தூள் பக்கற்றுகள் இந்தியாவிலிருந்து வந்துட்டுதோ???????

முஸ்: இள்ளை! நாண் அங்கை போயிறுந்தனாண்!

கறுணா: அங்கை???

முஸ்: இள்ளை! வேல்விக்கு!!!!!

கருணா: வேள்விக்கோ????

முஸ்: ஓமோம்!! ஆஆஆசங்கரியுடன் யாழ் வேல்விக்கு கொன்டுபோய் கட்டிப் போட்டு வந்திறுக்கிரண்!!!

கருணா: ஓ ஓமோம் ஓமோம்!! இப்ப பங்குகள் மலிவாம்!! இந்த நேரம் கடக்காள் வேள்விக்கு கொண்டுபோய் லாபம் வருமோ!!!

முஸ்: எள்ளாமே "றோ" கடவுல் சொண்ணதின்படி செய்கிரம்!! இதுகள் எள்ளாம் அன்னாநகர். வடபலனி, கொட்டிவாக்கத்தில் மேய்ந்ததுகலைத்தான் கொன்டுபோய் மாளைபோட்டு கட்டியிறுக்க்ரம்!! எள்ளாம் "றோ"வாரின் சித்தம்!!!

கருணா: எட கோதாரி! வரிசையிலை விட்டல்லா அறுக்கப் போறாங்கள்!!!!

முஸ்: எணக்கு இப்ப கதைத்துக் கொன்டிருக்க நேறமிள்ளை!! அறுபடப் போகும் கடாக்கலின் லேற்றர்ஸ் ஸ்கோர் வறப்போகுது!!!!!!! அதிளை அக்கரை காட்டவேன்டியிறுக்குது.

கருணா: என்ன! ஸ்கோருகள் வரப்போகுதோ????

முஸ்: நான் பிஸி!!! பாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்........

கௌஉணா: கோதாரி விழுவாங்கள்!! என்ன பெயரிலை போய்ச் சேரப்போகுதுகள்!!!!!!!

onionkaruna@hotmail.com

இதோ அதோ இதோ .....

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
" "
onionkaruna@hotmail.com
www.eddappar.com
#5
அரச படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங் களில் இருந்து விடுதலைப் புலிகளின் அரசியல் போராளி கள் விலகிக் கொண்டதை அடுத்து, யாழ்.குடாநாட்டில் தற் போது திடீரென அதிகரித்திருக்கும் வன்முறைகளும், கொலைகளும், அந்த வன்முறைகளைத் தனது பிரசாரத் துக்கு அரசுத் தரப்பு பயன்படுத்தும் நோக்கும் சில ஊகங் களை ஏற்படுத்துகின்றன. அரசுக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இடம்பெற்ற இரண்டு கல்லூரி அதிபர்களின் படுகொலைகளுக்குமே புலிகள் மீது குற்றம் சுமத்தியுள்ள அரசு, சிறுவர்களைப் படைக்குச் சேர்க்கும் புலிகளின் முயற் சிகளுக்கு இந்த இரு அதிபர்களும் தடையாக இருந்தார்கள் என்ற காரணத்தினாலேயே இந்த இருவரையும் புலிகளே "போட்டுத் தள்ளினார்கள்' என்று காரண காரியங்களோடு பெரும் பிரசாரத்தை சர்வதேச ரீதியில் முன்னெடுத்திருக் கின்றது.
இயல்பாகவே கல்வித்துறையின்பால் கரிசனையும், ஈடுபாடும் கொண்டவர்கள் தமிழர்கள். கல்வித்துறை மீது தமி ழர்களுக்கு உள்ள பற்றை சாதகமாகப் பயன்படுத்த எத்த னிக்கும் அரச இயந்திரம், இந்த இருகொலைகளையும் கல்வித்துறைக்கு எதிராகப் புலிகள் புரிந்த பெருஞ்செயல் எனக்காட்டி, அதன் மூலம் தமிழ் சமூகத்தை குறிப்பாகப் புலம்பெயர்ந்த நாடுகளில் வசிக்கின்ற கல்வித்துறையின் பால் மதிப்புக்கொண்ட ஈழத் தமிழ்ச் சமுதாயத்தை புலி களுக்கு எதிராகத் திருப்பிவிடும் கைங்கரியத்தை கனகச்சிதமாகச் செய்துகொண்டிருக்கின்றது.
அதிபர்கள் கொலைக்கு, சிறுவர்களை ஆட்சேர்ப்புக்கு விடாமல் அவர்களைத் தடுத்ததே காரணம் என்ற பாணி யில் "மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல' அரசுத் தரப்பு செய்யும் பொய்ப் பிர சாரத்துக்கு புலம்பெயர்ந்த மக்களும் சர்வதேச சமூகமும் எடுபட்டுவிடக்கூடாது.
ஜனாதிபதித் தேர்தலை ஒட்டி தென்னிலங்கை இரண்டு அணிகளாகப் பிரிந்து நிற்கின்றது. பௌத்த, சிங்கள மேலாண்மைவாதக் கருத்தியலில் புதைந்த பேரினவாதிகள் ஒருபுறம். தமிழர்களுக்கு நியாயம்செய்யப்பட வேண்டும், பேச்சுமூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணப்பட வேண் டும் என்றெல்லாம் சிந்திக்கும் ஒரு நடுநிலைப் போக்கு டைய மிதவாதச் சிங்களவர்கள் மறுபுறம்.
இந்த இரு தரப்பின் இழுபறிக்கு மத்தியில் மூன்றாவது தரப்பாக சிறுபான்மையினர் உள்ளனர். பெரும்பான்மைச் சிங்களவர்கள் தமக்குள் இரண்டுபட்டு நிற்பதால் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி தோல்வியைத் தீர்மானிக் கப் போகின்ற முக்கிய சக்தியாக இந்த மூன்றாவது தரப் பினரான சிறுபான்மையினரே விளங்கப்போகின்றார்கள் என்பது திண்ணம்.
இதனை நன்கு புரிந்துகொண்டுள்ள பேரினவாத சக்தி கள், தமக்கு எதிரான அணிக்கு சிறுபான்மையினரின் வாக் குகள் கிடைத்து விடாமல் தடுக்கவும், அந்த வாக்குகளைத் தங்கள் பக்கத்துக்கு அள்ளிப்போட்டுச் சுருட்டிக்கொள்ள வும் தீட்டுகின்ற சதிமுயற்சிகளின் ஆரம்பம்தான் குடா நாட்டில் திடீர் குழப்ப நிலைகளுக்கான பின்னணியோ என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது.
கிழக்கு மாகாணம் போன்று வடக்கிலும் ஒட்டுப் படை களை உள்நுழைத்து, திரைமறைவு அராஜகங்களைப் புரியவைப்பதன் மூலம் மக்கள் மத்தியில் குழப்பம், பதற் றம், அச்சம் ஆகியவற்றை ஏற்படுத்தவும்
அதனை நன்கு பயன்படுத்தி, தேர்தலில் மக்கள் ஒன்று திரண்டு வாக்களிப்பதைத் தடுத்து, தமக்கு வசமான வகை யில் அந்த வாக்குகளைச் சுருட்டிக் கொள்ளவும்
செய்யப்படும் ஆயத்தங்களின் ஆரம்பத்தையே யாழ். குடாநாடு இப்போது எதிர்கொள்ளத் தொடங்கியிருக்கின் றது போலும்.
பேரினவாத சக்திகளின் உள்நோக்கம் சதி இலக்கு துர்எண்ணம் நாசகாரத்திட்டம் இதுதான் என்றால், வரும் வாரங்களில் குடாநாட்டின் நிலைமை இன்னும் மோசமாகும். கொலைகள், அச்சுறுத்தல்கள், வன்முறைகள் என்று அடக்குமுறை தலை விரித்தாடும். மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கும். வாக்களிப்புத் தினத்தன்று வாக்குச் சாவடிக்கு மக்கள் செல்வதற்கே அஞ்சும் சூழ்நிலை உரு வாக்கப்படும்; உருவாகும். அதனைப் பயன்படுத்தி வாக்கு கள் சுருட்டப்படும்.
வன்முறைப் பீதிக்குள் மக்களை இழுத்துவிடும் இந்தத் திட்டத்தையும் அதன் சூத்திரதாரிகளையும் மக்கள் புரிந்து கொண்டு வாக்களிப்பு வாயிலாகவே அவர்களுக்கு உறைப் பான பதில் கொடுக்க முன்வரவேண்டும்.
அரசுத் தரப்பினதும் பேரினவாத சக்திகளினதும் பொய்ப் பிரசாரங்களுக்கு எடுபடாமல், உறுதியுடன் இருப்பதன் மூலம் தெளிவான முடிவு ஒன்றைத் தமது வாக்குகள் மூலம் சர்வதேச சமூகத்துக்கு சிறுபான்மை இன மக்கள் வெளிப் படுத்த முடியும். அதற்குத் தயாராக இருந்து, யாழ். குடா நாடு உட்பட இலங்கைத் தீவு முழுவதிலும் வாழும் தமிழர் களின் அபிலாஷைகளை இம்முறையும் அவர்கள் தேர் தலில் உறுதியாக வெளிப்படுத்தியாக வேண்டிய நிலைமை இப்போது மெல்ல மெல்ல ஏற்பட்டுவருகிறது.
தமது நியாயமான அபிலாஷைகளை வெளிப்படுத்தும் தீர்மானத்தை தமது வாக்குச் சீட்டுகள் மூலம் தமிழர்களால் அம்பலப்படுத்த முடியும். அதை வன்முறைகளைக் காட்டித் தடுத்து விடலாம் என அரசும், அதனோடு சேர்ந்து இயங் கும் ஒட்டுப்படைகளும் நினைத்தால் அவை ஏமாந்து போகும் என்பது நிச்சயம்.

http://www.uthayan.com/editor.html
" "
#6
வடக்கு,கிழக்கு வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் அரச புலனாய்வுத் துறையும், தமிழ் ஆயுதக் குழுக்களும்

இயன் மார்ட்டினிடம் தமிழ்க் கூட்டமைப்பு தெரிவிப்பு

வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் அண்மைய காலங்களில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் படுகொலைச் சம்பவங்களும் வன்முறைகளும் மிகவும் கவலையளிப்பதாக தெரிவித்துள்ள சர்வதேச மன்னிப்பு சபையின் முன்னாள் தலைவரும் ஐ.நா.வின் மனித உரிமை விவகாரங்களுக்கான ஆலோசகருமான இயன் மார்ட்டின், இத்தகைய சம்பவங்களின் பின்னணியில் செயற்படும் சூத்திரதாரிங்களை கண்டறிய ஐக்கிய நாடுகள் சபையின் உதவி தேவைப்படின், அது குறித்து ஆராய தாம் தயாராகவுள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இயன் மார்ட்டினுக்குமிடையிலான சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை மாலை கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பு கொள்ளுப்பிட்டி இல்லத்தில் நடைபெற்றது.

இச்சம்பவத்தில் தமிழ்க் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், ஜோசப் பரராஜசிங்கம், சுரேஷ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இச்சந்திப்பின் போது கலந்து கொண்ட இயன் மார்ட்டின் மேலும் தெரிவிக்கையில் கூறியதாவது;

மட்டக்களப்பு மற்றும் கிளிநொச்சி பிரதேசங்களுக்கு நேரடியாகச் சென்று அங்குள்ள நிலைமைகளை பார்வையிட்டேன். வட, கிழக்கில் தொடரும் வன்முறைச் சம்பவங்களும் படுகொலைகளும் மிகவும் கவலையளிப்பதாகவேயுள்ளன.

தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் இவ்வாறான வன்முறைச் சம்பவங்கள் அமைதிச் சூழலை சீரழித்து சமாதான முயற்சிகளுக்கு பெரும் பாதகமாக அமைந்துவிடலாம். எனவே இதன் சூத்திரதாரிகளை இனங்காண்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் புலனாய்வுப் பிரிவின் உதவிகள் தேவையெனில், அது குறித்து ஆராய நாம் தயாராகவுள்ளோம்.

எந்தத் தரப்பினரும் வன்முறைகளை கைவிட்டு அமைதிச் சூழலை தொடர்ந்து பேண உதவ வேண்டுமென்பதே எனது விருப்பமாகும் என்றும் இயன் மார்ட்டின் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தற்போதைய நிலைமைகள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இயன் மார்ட்டினுக்கு விளக்கமளிக்கையில் கூறியதாவது;

தமிழ் தாயகப் பிரதேசமான வடக்கு, கிழக்கில் போர் நிறுத்த உடன்படிக்கையை மீறும் வகையில் தென்னிலங்கை அரசு மறைமுகமான நிழல் யுத்தமொன்றை நடத்திக் கொண்டிருக்கிறது.

கிழக்கில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் அரச உளவுப் பிரிவினரும் அவர்களுடன் இணைந்து செயற்படும் தமிழ்க் குழுக்கள், கருணா குழுவினர் செயற்படுகின்றனர்.

இவ்வாறே வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் அண்மைய காலங்களில் இடம்பெற்றுவரும் வன்முறைச் சம்பவங்களுடன் ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.)யும் அரச புலனாய்வுத் துறையினரும் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளனர். அத்துடன், வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் கொலைச் சம்பவத்தையடுத்து மீண்டும் அமுலுக்கு கொண்டு வரப்பட்டுள்ள அவசரகாலச் சட்டம் தமிழ் மக்களை பாதுகாப்புப் படையினரின் கெடுபிடிக்கும், கைது, காணாமல் போதல் போன்ற சம்பவங்களுக்கும் வழிவகுத்துள்ளது.

கடந்த காலங்களில் அவசர காலச் சட்டம் நடைமுறையிலிருந்த வேளையிலேயே நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் வகை தொகையின்றி கைது செய்யப்பட்டு காணாமலும் போயுள்ளனர். அவசர காலச் சட்டம் மீண்டும் அமுலுக்கு கொண்டு வரப்பட்டதையடுத்து தலைநகர் கொழும்பில் தமிழ் இளைஞர்கள் பலர் கைது செய்யப்பட்டு புறநகர்ப்பகுதிகளில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.

எனவே, அரச படையினரின் துணையுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் இவ்வாறான மனித உரிமை மீறல் சம்பவங்களை கட்டுப்படுத்த சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு உடன் நடவடிக்கையெடுக்க வேண்டும்.

அத்துடன், வடக்கு, கிழக்கில் தொடரும் வன்முறைச் சம்பவங்களை உடன் கட்டுப்படுத்தி போர் நிறுத்த உடன்படிக்கையை தொடர்ந்து பேண வேண்டுமெனில் தடைப்பட்டுள்ள சமாதான முயற்சிகளை உடன் ஆரம்பிக்க வேண்டும். இதற்கு சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்றும் தமிழ்க் கூட்டமைப்பு பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

http://www.thinakural.com/New%20web%20site...Important-2.htm
" "
#7
தேர்தல் நெருங்கும் சூழ்நிலையில் உருவாக்கப்படும் அச்சநிலை!

* கிழக்கில் கருணாவின் பெயரில் தொடரும் தாக்குதல்கள்!

* வடக்கில் அச்சமூட்டும் வகையில் தொடரும் படுகொலைகள்

வடக்கு - கிழக்கில் நிலைமை மிக மோசமடைந்துள்ளது. கிழக்கில் இடம்பெற்று வந்த படுகொலைகள் தற்போது வடக்கிலும் பரவிவிட்டது. கிழக்கில் இராணுவப் புலனாய்வுப் பிரிவுடன் இணைந்து தமிழ்க் குழுக்கள் தாக்குதல்களில் ஈடுபடும் அதேநேரம், வடக்கிலும் இந்தத் தமிழ்க் குழுக்கள் ஊடுருவி விட்டனவா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அண்மைக் காலங்களில் கிழக்கில் படுகொலைகள் நடைபெற்று வந்தபோதும் ஜனாதிபதித் தேர்தல் நெருங்க நெருங்க வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. புலிகள் மீதும் பொதுமக்கள் மீதும் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இடையிடையே படைத் தரப்பு மீதும் இந்தத் தாக்குதல்கள் நடைபெறுகின்றன.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் பிரதான இரு வேட்பாளருக்கும் இடையே மிகக் கடும்போட்டி நிலவுமென்பது வெளிப்படை. இந்தத் தேர்தலின் முடிவுகளை மாற்றும் வல்லமை சிறுபான்மையின மக்களின் கைகளிலுள்ளதால் அவர்களது வாக்குகளைப் பெறுவதில் முக்கிய இரு வேட்பாளர்களுக்கும் இடையே கடும்போட்டி நிலவுகிறது. இதற்காக வடக்கு - கிழக்கில் தங்கள் அதிகாரப் பலத்தைப் பயன்படுத்தி வாக்குகளைக் கவர்ந்துவிட வேண்டுமென்பதில் இவர்கள் உறுதியாயிருக்கின்றனர்.

வடக்கு - கிழக்கைப் பொறுத்தவரை, புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் இந்தத் தேர்தலில் பெரிதும் ஆர்வம் காட்டமாட்டார்களென்பது தெரிந்ததே. அந்த வாக்குகளை இவர்களால் எவ்விதத்திலும் வலிந்துபெறவும் முடியாது. அதேநேரம், இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பல லட்சம் வாக்குகளுள்ளன. அவற்றைப் பெறுவதிலேயே இந்தப் போட்டா போட்டி நிலவுகிறது.

இந்தப் போட்டியின் அடிப்படையில், அதிகார பலமுள்ளவர்கள் வடக்கு - கிழக்கில் பெரும் குழப்பத்தையும், அச்சம் மற்றும் பீதிநிலையையும் உருவாக்கி அதற்குள் வாக்குகளை சூறையாடும் நோக்கிலும் செயற்படுவதாக கடுமையான குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இதன் ஒரு அம்சமாக, தற்போதைய அரசியல் மற்றும் இராணுவச் சூழ்நிலைகளைப் பயன்படுத்தி இப்பகுதிகளில் குழப்பங்களை ஏற்படுத்தி அவற்றின் மூலம் அச்சம் நிறைந்ததோர் சூழ்நிலையை ஏற்படுத்திவிட்டால் தேர்தல் தினத்தன்று வாக்களிக்கச் செல்வோரின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்து விடுமெனவும் இந்தச் சந்தர்ப்பத்தைத் தங்களுக்கு வாய்ப்பாகப் பயன்படுத்திவிடலாமெனவும் ஒரு தரப்பு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் கசிகின்றன.

அண்மைக் காலங்களில் நடைபெற்ற பொதுத் தேர்தலை விட ஜனாதிபதித் தேர்தல்களில் வடக்கு - கிழக்கில் ஐக்கிய தேசியக் கட்சியே செல்வாக்குச் செலுத்தி வருகிறது. இதனால் அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை விடுதலைப் புலிகளுடன் தொடர்புபடுத்தி மிகமோசமான பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுவது வழமை.

தெற்கைப் போலன்றி வேறு வேட்பாளர்களை நிறுத்தி வாக்குகளை அங்கு பிரித்துவிடவும் முடியாது. இதனால் அங்கு அச்சம் நிறைந்த குழப்பமான சூழ்நிலையொன்றை உருவாக்க வேண்டியது சிலரது வெற்றிக்கு அவசியமாகிறது.

வடக்கு- கிழக்கு மக்களின் வாக்குகள் ஐ.தே.க.வுக்குக் கிடைப்பதை எப்படியாவது தடுக்க வேண்டுமென்பதில் பலரும் மிகுந்த அக்கறை காட்டுகின்றனர். இந்தத் தேர்தலில் விடுதலைப் புலிகள் இதுவரை எவ்வித நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை. தமிழ் மக்கள் தங்கள் சுயவிருப்பின் பேரில் வாக்களிக்கலாமென அவர்கள் கூறியுள்ளபோதிலும், இறுதிநேரத்தில் அவர்களது மறைமுக சமிக்ஞை ஐ.தே.க.பக்கமிருக்குமென தென்பகுதிக் கட்சிகள் கருதுகின்றன.

இதனால், அந்த வாக்குகள் ரணில் விக்கிரமசிங்கவுக்குச் செல்வதை தடுக்க வேண்டிய கட்டாய நிலையிலிருக்கின்றனர். அங்கு சுமுக சூழ்நிலை நிலவினால் கணிசமான அளவினர் வாக்களிக்கச் செல்வர். அவர்கள் ரணிலுக்கே வாக்களிப்பரென்பதும் தெரியும். இதனால் மக்கள் வாக்களிக்கச் செல்ல முடியாதளவிற்கு அங்கு மோசமானதொரு சூழ்நிலையை உருவாக்கும் முயற்சிகள் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் அரசியல் பணிகளுக்காக வந்த விடுதலைப் புலிப் போராளிகள், நிழல் யுத்தத்தால் அங்கிருந்து முற்றாக வெளியேறிவிட்டனர். இது, இப்பகுதிகளில் குழப்பங்களை உருவாக்க முயல்வோருக்கு பெரும் வாய்ப்பாகிவிட்டது. இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் புலிகளிருந்தால் இந்தக் குழப்ப முயற்சிகளுக்கு அவர்கள் பெரும் தடையாக இருப்பரென்பதும் சம்பந்தப்பட்டோருக்கு நன்கு தெரியும்.

வடக்கு -கிழக்கில் குழப்பங்களை உருவாக்கும் அதேநேரம், அந்தக் குழப்பங்களுக்கான பழியை புலிகள் மீது சுமத்திவிடுவதும் இவர்களது நோக்கமாகும். புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் பயணத்தடையானது இவர்களுக்கு வாய்ப்பாக அமைந்துள்ள அதேநேரம், கிழக்கில் புலிகள் மீதான தாக்குதல்களுக்குக் கருணா குழுவின் பெயரைப் பயன்படுத்துவதும் வடக்கில் இடம்பெறும் கொலைகளுக்கு புலிகளின் பெயரைப் பயன்படுத்துவதும் இவர்களது நோக்கமாகும்.

கிழக்கில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் புலிகள் அரசியல் பணிகளில் ஈடுபட்டபோது, நிராயுதபாணிகளான அவர்கள்மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதல்களையடுத்து புலிகள் அங்கிருந்து விலகவே, இடையிடையே அவர்களது கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள்ளும் ஊடுருவி அவர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில், படைமுகாம்களிலிருந்தும் அவற்றுக்கு அருகிலிருந்துமே தமிழ்க் குழுக்கள் செயற்படுவதாக புலிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதனால்தான் இவர்கள் இராணுவ புலனாய்வுப் பிரிவின் வழிநடத்தலில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளினுள் தங்கள் மீது தாக்குதல்களைத் தொடுப்பதாகவும் புலிகள் கூறுகின்றனர்.

<b>ஆனாலும், புலிகளின் பகுதிகளுக்குள் ஊடுருவித் தாக்குதல்களை நடத்துவதன் மூலம், இந்தத் தமிழ்க் குழுக்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள்ளேயே இருப்பது போன்றதொரு தோற்றப்பாட்டை ஏற்படுத்த படைத்தரப்பு மேற்கொண்ட முயற்சிகளெல்லாம் அம்பலத்துக்கு வந்துவிட்டன.

இந்த நிலையில் தான் ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் வடக்கு - கிழக்குப் பகுதிகளில் பெரும் குழப்ப நிலைகளை உருவாக்கும் முயற்சிகள் துரிதமடைந்துள்ளன. இதன் மூலம் இரு நோக்கங்களை நிறைவேற்றவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கருதப்படுகிறது.</b>

அதாவது, கிழக்கில் புலிகளின் பகுதிகளுக்குள் ஊடுருவித் தாக்குவதன் மூலம் அங்கு கருணா குழுவின் கை ஓங்கிவருவதாகக் காட்ட முற்படும் அதேநேரம், வடக்கில் இடம்பெறும் படுகொலைகள் மூலம் புலிகள் மீது அபகீர்த்தியை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஒரே கல்லில் இரு மாங்காய்களை விழுத்துவதுபோல் ஒரே நேரத்தில் வடக்கில் ஒரு திட்டத்தையும், கிழக்கில் இன்னொரு திட்டத்தையும் செயற்படுத்தும் முயற்சிகள் துரிதமடைந்துள்ளன.

வடக்கைப் பொறுத்தவரை கிழக்கைப்போன்று தமிழ்க் குழுக்கள் இல்லாவிட்டாலும், அங்கு சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி புலிகள் மீது அபகீர்த்தியையும், மக்கள் மத்தியில் அச்சத்தையும் ஏற்படுத்தும் முயற்சிகளும் நடைபெறுகின்றன.

<b>சமூக விரோதச் செயல்கள், காட்டிக் கொடுப்புகள், துரோகத்தனங்களில் ஈடுபடுவோருக்குக் கடும் தண்டனை என சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட பின்னர் அங்கு அடுத்தடுத்து கொலைகளும், தாக்குதல் சம்பவங்களும் இடம்பெற்றன.

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சிலர் கொல்லப்பட, அதற்கான பழியைப் புலிகள் மீது சுமத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும், இதன் சூத்திரதாரிகள் படையினரே என, இதற்குக் காரணமான படையினரின் விபரங்களுடன் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவுக்கு புலிகளின் யாழ்.மாவட்ட அரசியல் துறைப்பொறுப்பாளர் இளம்பரிதி சுட்டிக்காட்டியுள்ளார்.</b>

<b>இதேநேரம், தமிழ்த் தேசிய வாதியும், விடுதலைப் புலிகளின் நெருங்கிய ஆதரவாளருமான கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி அதிபர் என்.சிவகடாட்சத்தை கொன்றதன் மூலம், தமிழ்த் தேசியப் போராட்டங்களில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கை விடப்பட்டதுடன், அதன் தாக்கத்தை மூடிமறைக்க மறுநாள் யாழ். மத்திய கல்லூரி அதிபர் கே.ராஜதுரையின் படுகொலை மூலம் மக்கள் மத்தியில் புலிகளுக்கெதிரான பெரும் பிரசாரத்தை முன்னெடுக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சிறுவர்களைப் படையில் சேர்ப்பதற்கு எதிராகக் குரல் கொடுத்துவந்த இரு அதிபர்களையும் புலிகளே சுட்டுக்கொன்றுவிட்டதாகக் கூறுவதன் மூலம் இந்தக் கொலைகளின் நோக்கமும், அதன் பின்னணியிலிருப்பவர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் சிறுவர்களைப் புலிகள் தங்களுடன் சேர்ப்பதாகக் குற்றச்சாட்டுகளே எழாத நிலையில் இவ்வாறானதொரு பிரசாரம் அரச ஊடகங்களிலும், சிங்கள, ஆங்கில ஊடகங்களிலும் முன்னெடுக்கப்படுகிறது. அத்துடன், சர்வதேச சமூகத்தின் முன்னால் புலிகளின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

ஒருபுறம் அதிபர் சிவகடாட்சத்தின் கொலைகளின் மூலம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தவும், மறுபுறம் அதிபர் ராஜதுரையின் கொலையின் மூலம் கல்விச் சமூகத்தின் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டு காரியங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகக் கடும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.</b>

இவ்வாறு வடக்கில் குழப்பங்கள் உருவாக்கப்படும் அதேநேரம், கிழக்கில் கருணா குழுவின் பெயரில் பல்வேறு நாடகங்கள் அரங்கேறுகின்றன. வவுணதீவில் அண்மையில் நடைபெற்ற தாக்குதலில் மட்டு. - அம்பாறை மாவட்ட சிறப்புத் தளபதி கேணல் பானு கொல்லப்பட்டுவிட்டதாகப் பெரும் பிரசாரங்கள் செய்யப்பட்டன.

அதுபொய்யெனத் தெரிந்ததும் அவர் இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்ததாகப் பிரசாரம் செய்யப்பட்டது. அதுவும் பொய்யெனத் தெரிந்ததும் புலிகளின் புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளர் கீர்த்தியே கொல்லப்பட்டதாகப் பிரசாரம் செய்யப்பட்டது. அதுவும் பொய்யெனத் தெரிந்ததும் பலர் கொல்லப்பட்டதாக இப்போது கூறப்படுகிறது.

வடக்கில் குழப்பங்களை ஏற்படுத்தித் தேர்தலில் ஒரு தரப்பின் வெற்றி வாய்ப்பை இல்லாது செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதோ அதேபோன்று கிழக்கிலும் கருணா குழுவின் பெயரில் அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன.

இதனாலேயே, கேணல் பானுபோன்ற முக்கிய தளபதிகளை இலக்கு வைத்து தாக்குமளவிற்கு கருணா குழு பலம்மிக்கதொரு சக்தியாக விளங்குவதுபோல் காட்டும் முயற்சிகள் நடைபெறுகின்றன. அதேநேரம், கருணா குழுவின் பெயரிலும் இன்னும் பல திட்டங்களை அரங்கேற்றவும் சில அரசியல்வாதிகள் திட்டமிட்டுள்ளனராம்.

தமிழ் - முஸ்லிம்களிடையே மோதலை ஏற்படுத்துவது, கருணாவின் பெயரில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளருக்கான சுவரொட்டிகளை ஒட்டுவது, முடிந்தால் கருணாவின் குரலில், பிரதேசவாதத்தைக் கிளறும் பிரசாரங்களைச் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இதில் சில அரசியல்வாதிகள் முன்னின்று செயற்படுவதாகவும் கூறப்படுகிறது.

அதேநேரம், இராணுவத்தினர் மீது தாக்குதல்களை நடத்துவதுபோல் மக்கள் மீது தாக்குதல்களை நடத்தி அதற்கான பழியை புலிகள் மீது சுமத்தும் நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன. கடந்த இரு வாரகாலங்களில் இராணுவத்தினர் மீதான தாக்குதலெனக் கூறி பொதுமக்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள் பல மட்டக்களப்பில் அரங்கேறியுள்ளன.

தற்போது திருகோணமலையில் பொங்கு தமிழ் நிகழ்வு நடைபெறவுள்ள நிலையில் திருகோணமலை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் இருவர் மீது தாக்குதல் தொடுத்து குழப்பங்களை ஏற்படுத்த பெரும் சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக அஞ்சப்படுகிறது. வெள்ளிக்கிழமையும் நேற்று சனிக்கிழமையும் இது தொடர்பான செய்திகளை அரச ஊடகங்கள், படையினரை ஆதாரங்காட்டி வெளியிட்டுள்ளன.

இவ்விருவரையும் புலிகள் படுகொலை செய்துவிட்டு அதனைப் படையினரே செய்ததாகக் கூறி திருகோணமலையில் குழப்பங்களை ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளமை மக்களைப் பெரும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

பொங்குதமிழ் நிகழ்வும் ஜனாதிபதித் தேர்தலும் அடுத்தடுத்து வரவிருக்கையில் பெரும் குழப்பங்களை ஏற்படுத்தி புலிகளுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் முயற்சிகள் தொடர்வதையே இது காட்டுவதாகக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

இவ்வாறு ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் அச்சம் நிறைந்ததொரு சூழலை ஏற்படுத்தம் முயற்சிகள் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வருவது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இதற்கு அரசு தரப்பும் துணைபோவதாகப் புலிகள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

தமிழ்க் குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட வேண்டுமெனப் பல தடவைகள் வற்புறுத்தப்பட்டும் அரச தரப்பு அதனைக் கருத்திலெடுக்கவில்லை. சர்வதேச சமூகம்கூட, உடனடியாக நிழல் யுத்தத்தை அரசு நிறுத்தவேண்டுமென வற்புறுத்தியிருந்தும் அரசு அதனை உதாசீனம் செய்துவிட்டு முழுப் பழியையும் தமிழ்த் தரப்பின் மீதே சுமத்த முற்பட்டுவருகிறது.

வடக்கு - கிழக்கில் அச்சமும் குழப்பமும் நிறைந்த சூழ்நிலையொன்று தோற்றுவிக்கப்பட்டுள்ள அதேநேரம், தென்பகுதியில் பெருமளவு தற்கொலைக் குண்டுதாரிகளைப் புலிகள் அனுப்பியுள்ளதாகவும் முழு அளவில் பிரசாரங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. தமிழ் ஊடகங்களில் வெளியாகும் ஒவ்வொரு செய்திகளுக்கும் வித்தியாசமான விளக்கங்கள் கொடுக்கப்பட்டு மோசமானதொரு நிலைமை உருவாக்கப்பட்டு வருகிறது.

போர்நிறுத்த காலத்தில் கூட வடக்கு -கிழக்கு மக்களை நிம்மதியாக இருக்கவிடாது அவர்கள் மீது நிழல் யுத்தம் தொடுக்கப்பட்டு அதன் பழியை வேறொரு தரப்பு மீது சுமத்தி குழப்பங்களை உருவாக்கும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்த நிலைமை நாட்டை மிக மோசமான நிலைக்குத் தள்ளிவிடுமென்பதில் ஐயமில்லை.

http://www.thinakural.com/New%20web%20site...16/vithuran.htm
" "
#8
செய்தி:
ஒருபுறம் அதிபர் சிவகடாட்சத்தின் கொலைகளின் மூலம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தவும்இ மறுபுறம் அதிபர் ராஜதுரையின் கொலையின் மூலம் கல்விச் சமூகத்தின் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டு காரியங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகக் கடும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.


[size=18]இது உண்மையெனின் அதிபர் சிவகடாச்சத்தின் கொலையை கண்டித்து அவரை நாட்டுப்பற்றாளராக்கியவர்கள். ஏன் அதிபர் இராசதுரையின் கொலையை கண்டிக்காமல் துரோகியாக்கினார்கள்.
#9
வசம்புவிலிருந்து....

<b>இது உண்மையெனின் அதிபர் சிவகடாச்சத்தின் கொலையை கண்டித்து அவரை நாட்டுப்பற்றாளராக்கியவர்கள். ஏன் அதிபர் இராசதுரையின் கொலையை கண்டிக்காமல் துரோகியாக்கினார்கள்.</b>

இதற்கான பதில் முன்னமே கணொனிலிருந்து.....

<b>இக்கொலைகளில்யில் பலியான யாழ் மத்திய கல்லூரி அதிபர் கூட ஓர் ஈ.பி.டி.பியின் மிகத்தீவிர ஆதரவாளரே!! யாழில் கலாச்சார சீரளிவில் ஈடுபடும் ஓர் வானொலியின் ஆலோசகர் கூட!!! இவர் தேசியவாதிகளால் விமர்சிக்கப்பட்டு வந்தாலும், இவர் கொல்லப்பட்ட இடமும், கொண்றுவிட்டு எப்படி கொலையாளிகள் தப்பமுடிந்ததென்பதும் பல சந்தேகங்களை எழுப்புகின்றன. வீரசிங்கம் மண்டமத்தின் முன் கொல்லப்பட்ட இவ்வதிபரின் கொலையாளிகள் பக்கத்திலுள்ள இராணுவ காவலரனைக் கடந்து எப்படித் தப்பமுடிந்தது?????????????? </b>

யாழில் உள்ள ஒவ்வொரு மக்களுக்கும் தெரியும் யார் இந்த யாழ் மத்திய கல்லூரி அதிபரென்று????? தங்களுக்குள்ளேயே கொல்லப்படும்/கொல்லப்படப்போகும் ஒவ்வொரு துரோகிக்கும் நாங்கள் அழுது புலம்ப வேண்டுமா????????????????
" "
#10
அது தானே! :roll:
.
#11
அப்ப அழுது புலம்புறவங்களையும் ஒட்டுமொத்தமாய் துரோகிகள் என்று போட்டு விட்டால் செலவு குறைவுதானே. இருக்கவே இருக்கிறது செம்மணி.
#12
இந்த வ(ச)ம்பு என்னத்தை சொல்ல வந்தது/வருகிறதென்பது பற்றி யாருக்காவது புரிகிறதா :?: :?: :?: :roll: :roll: :roll: :!: :!: :!: :evil: :evil: :evil:
" "
#13
அதெப்படிங்க கணொன் நீங்கள் மாத்தி மாத்தி சொல்லுறதே எங்களுக்கு புரியும்போது நான் தெளிவாய் சொல்லுறது புரியாமல் போகுமா என்ன??????

:roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
#14
விட்டால் கருணாவையும் தியாகி ஆக்குவியள் போலிருக்கே?! :twisted: ஏதோ ஒரு விதத்தில் வசம்பு புலிகளால் பாதிக்கப்பட்டிருக்கிறார் போலிருக்கு :?: Idea
.
#15
தன் கூட இருந்தவனை போட்டுத்தள்ளிவிட்டு, அடுத்தநாள் மாலையும் கையுமாக போய் கண்ணீர் சிந்தும் கபடப் புத்தி புலிகளிடம் இல்லை. துரோகி துரோகி தான். தோழன் தோழன் தான்.
#16
vasanthan Wrote:விட்டால் கருணாவையும் தியாகி ஆக்குவியள் போலிருக்கே?! :twisted: ஏதோ ஒரு விதத்தில் வசம்பு புலிகளால் பாதிக்கப்பட்டிருக்கிறார் போலிருக்கு :?: Idea

இருக்கலாம்.. பட் வசம்ஸ்.. சும்மா எல்லாம் கதைக்கமாட்டாரு.. சந்தில சிந்து பாடுறதுதான் அவருடைய பொலிசி... :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> எப்படாப்பா கனோன் வருவார்.. எப்ப கருத்துவைப்பார்,, அந்த சைக்கிள் கப்புகில்லை சிந்து பாடிடுவாரு நம்ம வசம்ஸ்... இருந்தாலும் நம்மட புலனாயிண்ட மூளை அப்படியே இருக்கப்பா வசம்புகிட்ட.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :wink: .
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
#17
சீ சீ டண் ரொம்பக் கூச்சமாயிருக்கு உப்படி என்னைப் புகழாதேங்கோ. சரியான ********** ( நன்றியில் ) உங்களுக்கு. வசந்தன் போன்ற பெரிய புலநாய்வாளர்களுக்கு முன்னால் நான் எம் மாத்திரம். பாருங்க எம்மாம் பெரிய விசயத்தையெல்லாம் புட்டுப்புட்டு வைக்குறாரு. வரும் காலத்திலே ரிஷியை மிஞ்சினாலும் மிஞ்சுவாரு.

:roll: Arrow Idea :?:


[size=10][b]******நீக்கப்பட்டுள்ளது - இராவணன்
#18
வணக்கம் வ(ச)ம்பு!

முதலில் அதிபுத்திசாலியான நீங்கள் செப்பிய கருத்திலிருந்து....

<b>இது உண்மையெனின் அதிபர் சிவகடாச்சத்தின் கொலையை கண்டித்து அவரை நாட்டுப்பற்றாளராக்கியவர்கள். ஏன் அதிபர் இராசதுரையின் கொலையை கண்டிக்காமல் துரோகியாக்கினார்கள்.</b>

அடுத்து இரண்டாவதிலிருந்து....

<b>அப்ப அழுது புலம்புறவங்களையும் ஒட்டுமொத்தமாய் துரோகிகள் என்று போட்டு விட்டால் செலவு குறைவுதானே. இருக்கவே இருக்கிறது செம்மணி.</b>

தாங்கள் கக்கிய இரண்டிற்கும் என்ன சம்பந்தம்???? "முழந்தாலுக்கும், மொட்டைத்தலைக்கும் முடிச்சா?"

______________________________________________________________

அது நிற்க "வைரவ சாமிக்கு நாய் வாச்ச மாதிரி" கணொனிற்கு களத்தில் இந்த வ(ச)ம்பு!!!!!

"xxxxxxxxxxxxxxx
எங்கே கணொன் என்று காத்திருக்கும் வ(ச)ம்பு, கணொன் ஏதாவது எழுதி விட்டால் உடனே அதுக்குள்ளை
வ(ச)ம்புவிற்கு ,xxxxxxxxxxxxxxxx

கணொனால் சொல்லக் கூடியதெல்லாம் "பாவம்"

<b>தணிக்கை செய்யப்படுகிறது</b>
" "
#19
சீ சீ கணொன் உங்களோடு என்னை ஒப்பிட்டு பார்க்காதேங்கோ. நீங்கள் என்ன உங்கள் அறிவென்ன. நானெல்லாம் உங்களுக்கு முன் சிறு துரும்புங்க..

முதல்க் கேள்வி விளக்கம் தெரியாததால் கேட்டேனுங்க. இரண்டாவது கேள்வி உங்கடை உன்னதமான விளக்கம் கிடைச்சு அப்படியே புல்லரிச்சுப் போய் உங்கள் பாணியிலேயே கேட்டுட்டேனுங்க. தப்பிருந்தால் மன்னிச்சுக்கோங்க.

ஆனால் நீங்கள் செப்பிய என்று தொடங்கி கக்கிய என்று முடிச்சது தான் புரியலை. ஓஓ நீங்கள் சில நேரங்களில் 2 காலிலிருந்து 4 காலுக்கு மாறிடுவீங்களோ.
:roll: :roll:
#20
தனிநபர் தாக்குதலாக இப்பகுதி போய்க்கொண்டிருப்பதால்
மூடப்படுகிறது. :roll:
[url=http://www.yarl.com/forum/viewtopic.php?t=21]Arrow <span style='font-size:21pt;line-height:100%'><b> </b></span>


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)