![]() |
|
தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவ..!! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவ..!! (/showthread.php?tid=2894) |
தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவ..!! - kuruvikal - 10-15-2005 உலகில் வாழும் உயிரினங்களிலே மனிதன் உயர்ந்தவன். ஏனெனில் அவனுக்கு ஆறறிவுகளில் ஒன்றான பகுத்தறிவு என்ற மெய்யறிவு உண்டு. இதனையே தொல்காப்பியர் அவர்கள் இவ்வாறு கூறிகின்றார். " மக்கள் தாமே ஆறறிவுயிரே யாவும் மாக்களும் ஐயறிவினவே" இந்த பகுத்தறிவால்தான் மனிதனால் நல்லது எது ? கெட்டது எது? என பகுத்தறிந்து தனக்கு தேவையானவற்றை எடுத்துக்கொண்டு வாழப் பழகிக்கொள்கிறான். இத்தகைய உயர்ந்த மனிதப்பிறப்பினுள் தமிழினம் என்றும் தனித்துவமானது.அதனால்தான் போல் ஒரு அறிஞன் கூறினான் " தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அதற்கொரு பண்புண்டு" என்று. ஒளவையாரோ " அரிது அரிது மானுடராதல் அரிது" என்றார். அப்பர் சுவாமிகளோ " வாய்த்தது தமக்கு ஈதோர் பிறவி மதித்திடுமின்" என்றார்.அத்துடன் மீண்டும் "இன்னம் பாலிக்குமோ இப்பிறவியே" என்றார். திருமூலநாயனாரும் திருமந்திரத்திலே மனிதப்பிறவியின் மாண்பு பற்றி நயம்படக் கூறியுள்ளார். எனவே பெறுதற்கரிய பிறவியை பெற்ற நாம் எமக்கும் பிறார்க்கும் சமூகத்திற்கும் பயன்பட வாழ்ந்து எம் பண்பாட்டை பேண வேண்டும். "வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுலகத்தில் தெய்வத்தில் வைக்கப்படும்" என்று வள்ளுவர் பெருந்தகை கூறியுள்ளார். அறம் , பொருள் , இன்பம், வீடுபேறு இவற்றை தனது முப்பால்களில் மிக அழகாக கூறியுள்ளார். ஏனைய தமிழ் நூல்களும் இதனையே வலியுறுத்துகின்றன. திருக்குறளை யாத்த திருவள்ளுவர் அறம் , பொருள் இன்பவழி நின்று அவற்றின் துணையால் ஈற்றில் வீடுபேற்றையும் பெறலாம் என்று தனது குறள்களில் கூறியுள்ளார். அறவழி நின்று தன்னைப்பேணி மாதா, பிதா, குரு, பெரியோர், அறிவோர் என்போர்க்கு உறுதுணையாய் வாழ்வது தமிழர் பண்பாடாகும். அதுமட்டுமன்றி பொய்யாமை, கள்ளாமை, கொல்லாமை என்று சொல்லப்படுபவற்றை தவிர்த்து வாழப்பழகியமை தமிழர் பண்பாடாகும். அத்துடன் நடை உடை பாவனை என்பவற்றையும் ஒரு பண்பாடகக் கொண்டு வாழ்வது தமிழர் சமுதாயம். "யாதும் ஊரே யாவரும் கேளீர்" என்ற பரந்த மனப்பான்மையுடன் யாவரையும் கேளீர் ஆக்கிக் கொண்டு வாழ்வது தமிழர் பண்பாடு. இவ்வாறு தமிழர் பண்பாட்டைப் பற்றிக் கூறிக்கொண்டே போகலாம். பல்லோர் போற்றப்பண்புடன் வாழ்ந்த எமது சமுதாயம் நாட்டில் ஏற்பட்ட கொடுங்கோண்மையால் பிறந்தகத்தை விட்டுப் புலம்பெயர்ந்து பல நாடுகளிலும் சென்று வாழும் நிலை ஏற்பட்டது. இவ்வாறு மேலைத்தேசங்களுக்கு இசைய வாழும் நிலை ஏற்பட்டாலும், தமிழர் பண்பாடு மாறுபடாது அமையவேண்டும். ஒர் இனத்தின் பண்பாட்டை அந்த இனத்தின் இலக்கியங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். பண்பாடு என்பது உலக மக்களிடையே மொழி, பழக்கவழக்கம், சூழல் அடிப்படையிலே வேறுபடுகின்றது என்பதை நாம் அறிவோம். இலக்கியம் என்பது முடிந்த கொள்கைகளையும் முதிர்ந்த கொள்கைகளையும் கொண்டு திகழ்வதாகும். <b>மனிதனை மிருகத்திலிருந்து வித்தியாசப்படித்திக் காட்டுவது பண்பாடு</b>. திரை கடல் ஓடியும் திரவியம் தேடிய தமிழர் அன்றும் தம் பண்பாட்டை மறந்திலர். <b>இன்று எம்மவரிற் சிலர் புலம்பெயர்ந்த நாட்டில் தாய் மொழியாம் தமிழை மறந்து , பண்பாடான உடையைத் துறந்து, தம் ஊண் பெருக்கத்திற்கு தம் பிறிது ஊண் உண்டு கோயில் வழிபாடினின்றும் நீங்கி (கோயில் என்பதிலும்,ஆன்மீக அறிவு இன்றி...என்பதே சாலப் பொருந்தும்..!. அறிந்த கருத்துக்களையும், உணர்ந்த உணர்வுகளையும் அளந்து உரைப்பதற்கு பயன்படும் கருவியே மொழியாகும். உலக மொழிகளிலே முதல் பத்து மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்றாக அமைந்துள்ளது. தமிழ் மிகவும் பழமை வாய்ந்த மொழி. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வரலாறு படைத்த இனம் நம் தமிழினம். ஆரியர், போர்த்துக்கேயர் எனப் பலரது ஆதிக்கத்தையும் எதிர்த்து நிலை நின்று வளர்ந்து வரும் மொழி. திருக்குறள் பல மொழிகளிலே மொழி பெயர்க்கப்பட்டது. "யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்" தான் அறிந்த மொழிகளில் தமிழ் இனிமையானது என்ற புரட்சிக்கவி பாரதியின் முழக்கம் அன்றே தமிழின் தனிச்சிறப்பு. இத்தகைய சிறப்பு பொருந்திய தமிழ்மொழியை, தமிழ் சிறார்களில் சிலர் மறந்தும், கல்லாதும் ஆங்கிலத்தையே தமது பேச்சு மொழியாக்கிக் கொண்டுள்மையும் பெரிதும் வருந்தத்தக்கது. இதற்கு அவர்களின் பெற்றோர்களும் துணைபுரிவது மிகவும் வேதனையான செயலாகும். அவர்கள் பாடசாலகளிலின்றி வீடுகளிலும் ஆங்கிலத்தையே உரையாடுகின்றனர். அதையே மரியாதையாகக் கருதி தமிழில் பேசத் தயங்குகிறார்கள். உதாரணத்துக்கு, நீங்கள் ஒரு பேருந்து வண்டியில் பயணம் செய்யும் போது அவதானித்தீர்களாயின், அங்கு பலதரப்பட்ட மக்கள் பயணிப்பர். ஆனால் அவர்கள் தங்களது நண்பர்கள் உறவினர்களுடன் தமது சொந்த மொழியிலே உரையாடுவார்கள். ஆனால் எமது இனத்தவர்கள்தான் சொந்த மொழி தவிர்த்து ஏனைய மோழியில் உரையாடுவார்கள். இவ்வாறு எமது புலம் பெயர்ந்த மக்கள் எமது பண்பாடுகள் , மொழி என்பவற்றை மறந்து அந்நிய பண்பாட்டை பின்பற்றினால் எதிர்காலத்தில் தமிழினம் என்ற தகுதியையே இழந்து விடுவர். தொடக்கமோ முடிவோ இல்லாத இந்த தமிழ்மொழியையும் , கலாச்சாரத்தையும் இன்று நாங்கள் உதாசீனம் செய்வதன் மூலம் புலம்பெயர் நாடுகளில் என்ன நன்மையை பெறுகின்றோம். [b]எமக்குள் சமூகச் சீர்கேடு வரக்காரணம் மொழிப்பற்றின்மை, கலாச்சாரத்தை தகுந்த முறைப்படி பேணிப்பாதுகாக்காமை, வாழ்க்கைமுறை என்பனவாகும்</b>. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதை இன்று வரை புலம்பெயர் நாடுகளில் (கனடா) காணமுடியவில்லை. எங்கு பார்த்தாலும் பொய் , பித்தலாட்டம், சண்டை , பூசல்களாக இருக்கின்றது. ஒரு நாய் குரைத்தால் பல நாய் குரைக்கும் என்பது முது மொழி. ம்ம்ம்ம்... இதுவும் இங்கு சாத்தியமற்றது. ஏனெனில் நேரமின்மை. ஒரு மனிதன் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு கல்வி செல்வம் மட்டும் இருந்தால் போதாது. அவனுக்கு மொழிப்பற்றும், கலாச்சாரத்தின் மகிமையும் விளங்க வேண்டும். இல்லையெனில் மண்தோண்டி புதைக்க வேண்டும். கனடா (புலம்பெயர் - தாயகத்திலும் கூட) வாழ் ஒரு சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் ஆங்கிலத்தில் கல்வியை கற்று வருவது மட்டுமன்றி மேல்நாட்டவர்களின் பழக்க வழக்கங்களையும் கடைப்பிடிப்பதன் மூலம் பெரியவர்களாகி பெருமையோடு வாழ்வார்கள் என நினைக்கிறார்கள். அதன்மூலம் தாங்களும் பெருமைப்படுகின்றார்கள். எமது தாய் மொழியாகிய தமிழை மறந்துவிடக்கூடாதவாறு அதனைக்கற்றல் வேண்டும். எம்மவர்க்கு பெருமை சேர்ப்பது தாய்மொழியும், கலாச்சாரமும் ஆகும். அதுவே எமது தனித்தன்மையை உலகில் எடுத்தியம்ப வல்லது. 'நாம் யார், எமது அடையாளம் என்ன? எமது வரலாறு என்ன? எமது முகவி என்ன?' என்பதை ஏனைய மக்களுக்கு எடுததியம்பி எம்மையும் மரியதைக்குரிய இனமாக காட்ட உதவுவது எமது மொழியும் பண்பாடுமேயன்றி, வேறொன்றுமில்லை. இதனை அவர்கள் புரிந்து கொண்டு பிள்ளைகளுக்கு புத்திமதியையும் நல்லொழுக்கங்களையும் கற்பித்து அவர்களின் வாழ்க்கையை சிறப்புற வழி நடத்த வேண்டும். எத்தனையோ தமிழ் மக்கள் இன்று கனடாவில் கல்வித் துறையிலும் , கலாச்சாரம் மொழித்துறையிலும் பல முன்னேற்ற சாதனைகளை நிலைநாட்டிக்கொண்டிருக்கின்றனர். அடுத்து இளைஞர்களை நோக்குவோமாயின் இங்கு கூடுதலான இளைஞர்கள் தங்கள் பொன்னான நேரத்தை வீதிகளிலும் , வியாபாரநிலையங்களிலும் , சினிமாகொட்டகைகளிலும் செலவிடுகின்றனர். இவர்கள் நம் தாய் நாட்டு இன்னல்களை சற்று சிந்தித்து பார்க்க வேண்டும். எம்மைப் போன்ற இளைஞர்கள் சின்னஞ்சிறிசுகள், வயோதிபர்கள் எல்லோரும் எவ்வளவு கஷ்டத்தின் மத்தியில் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கின்றார்கள். இவர்கள் தமது பணத்தை வீணான முறையில் செலவு செய்யாது நம் நாட்டு மக்கள் நலன் கருதி நாடாத்தப்படும் கலை நிகழ்வுகளுக்கு தங்களாலன உதவிகளைச் செய்ய வேண்டும். ஏன் என்றால் தாயகத்தில் அல்லலுறுபவர்களும் எம்மவர்கள்தான். அவர்கள் எமது தாயக மண்ணிற்காக தம் உயிரையே துச்சமென மதித்து எந்நேரத்திலும் களத்திலே இறங்கி எதிரிகளை விரட்டியடிக்க முயலுகின்றனர். அத்தகைய நாட்டுபற்றாளர்களை நாம் மதித்தல் வேண்டும் தமிழெரெனக் கொண்டு வாழ்வோரை " <b>பாமரராய் விலங்குகளாய் உலகனைத்தும் இகழ்ச்சி சொல்லப்.. பான்மை கெட்டு நாமமது தமிழிரெனக் கொண்டு இங்கு வாழ்ந்துடுதல் நன்றே??</b>" எனப் பரிகசிக்கின்றனர். இந்நிலை மாற வேண்டும். எனவே புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் எம்மவர் நம் பண்டைய பண்பாடுகளை போற்றி, தாய் மொழியாம் கன்னித்தமிழை கண்ணெனக் கொண்டு தம் வழித்தோன்றல்களையும் அற நெறியில் (இதை இன்னும் தெளிவாக விளக்க வேண்டும்...பலருக்கு புரியுதில்லை...அதை பிற்போக்கு என்றும் சிந்திக்கின்றனர்..குறிப்பாக இளையவர்கள்..!. சுட்டது ரசிகையின் யாழ் கள வலைப்பூவில் இருந்து..!- கட்டுரையின் பெறுமதி கருதி சில விடயங்கள் எம்மாலும் செருகப்பட்டுள்ளன..மன்னிக்கவும்..! [b]மிக யதார்த்தபூர்வமாக விடயங்களை அலசுகிறது கட்டுரை...எல்லோரும் வாசிக்க வேண்டிய ஒன்று..! Re: தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவ..!! - manimaran - 10-15-2005 <!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->எனவே புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் எம்மவர் நம் பண்டைய பண்பாடுகளை போற்றி, <!--QuoteEnd--><!--QuoteEEnd-->"நம் பண்டைய பண்பாடுகள்" என்பதிலும் நமது பண்பாடுகளில் நல்லனவற்றை என்று சொல்லியிருந்தால் சிறப்பாகவிருந்திருக்கும் என்பது என்கருத்து. ஏனெனில் எம்பாண்பாடு எல்லா அம்சத்திலும் சிறந்ததாக அமைந்திருக்கின்றது என்று சொல்வது பொருத்தமற்றதாயிருக்கும் என்று நம்புகின்றேன். - கோமதி - 10-15-2005 என் கருத்தும் இதுதான். பண்டைய பண்பாடு எல்லாத்தையும் கைக்கொள்ள வேண்டுமென்றால் இன்று மிகக் கேவலமான இனமாக நாம் அடையாளப்படுத்தப்படுவோம். மாறாக எமது பண்பாட்டின் நல்ல கூறுகளைப் பின்பற்ற வேண்டும் என்ற கருத்தே சிறந்தது. சிறந்த பத்து மொழிகளில் தமிழும் ஒன்று என்ற கூற்று குழப்பமாக இருக்கிறது. மிகப் பழைய 5 மொழிகளுக்குள் தமிழும் வருகிறதென்று அறிவேன். சிறந்த பத்து மொழிகள் என்ற பட்டியல் பற்றி அறியேன். என்ன அடிப்படையில் அந்த 'சிறந்த' தன்மை கணக்கிடப்படுகிறதென்று தெரியவில்லை. சொல்வளம் என்பது தற்காலத்தில் மிகமிக முக்கியம். அப்படிப்பார்க்கப்போனால் இன்றைய தமிழ் சொல்வளம் குன்றியதாகவே இருக்கிறது. இன்னும் இலட்சக்கணக்கான கலைச்சொற்கள் உருவாக்கப்படவேண்டிய தேவையிலிருக்கிறோம். எதையும் தனித்தமிழில் எழுதலாமென்ற நிலை இன்று இல்லை. அந்த நிலை வரக் கடுமையாக உழைக்க வேண்டும். இந்த நிலையில் அந்த 'சிறந்த' என்ற அளவுகோல் எதுவென்பது புரியவில்லை. மற்றும்படி, உச்சரிப்பு முறையில் மிகச்சிறந்ததும் இலகுவானதுமான கட்டமைப்பைத தமிழ்மொழி கொண்டுள்ளதென்பது என் ஆழமான புரிதல். ----------------------------------------- கட்டுரைக்கு நன்றி - kuruvikal - 10-15-2005 "பண்டைய பண்பாடு" "நவீன பண்பாடு" "நல்ல பண்பாடு" இவற்றை உதாரணங்களோடு பகுத்து விளக்கினால்... பண்பாடு என்பது பற்றிய குழப்பத்தில் இருப்பவர்களுக்கு உதவியா இருக்கும்..! எங்களுக்கும் தான்...குழப்பமா இருக்கு...மற்றவையட்ட கடனெடுக்கிறதுகள் எங்கள் நவீன பண்பாடா என்பது...அதுகளையும் சரியா அடையாளம் காட்டினால் குழப்பம் இருக்காது...! கட்டுரையாளரின் முயற்சிக்கு உதவியாகவும் இருக்கும்..! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- இளைஞன் - 10-15-2005 ஆறாம்திணை இணையசஞ்சிகையிலிருந்து பெறப்பட்ட ஆக்கம் - இதை இரசிகை வாசிப்பது அவருக்கு மேலும் உதவியாக இருக்கும்: <b>தொழில்நுட்பமயமாகி வரும் பண்பாடு...!</b> இரசிகை ஏற்கனவே இந்த ஆக்கத்தை எனக்கு அனுப்பியிருந்ததால் அவருக்கு நான் கட்டுரை பற்றி கூறிய கருத்தையும் இங்கு இணைப்பது பொருத்தமாக இருக்கும். கட்டுரையில் அடிக்கடி பண்பாடு பண்பாடு என்று உச்சரிக்கப்பட்டபோதும், எது பண்பாடு என்கிற தெளிவின்மையே தெரிகிறது. அதுதவிர கட்டுரை "சாம்பாறு" போன்று இருக்கிறது. வள்ளுவர் சொன்னார், அவ்வையார் சொன்னார், பாரதி சொன்னார் என்று அவர்களது வாசகங்களையும் போட்டு பழமொழிகளையும் போட்டு - பண்பாடு, தமிழ், தமிழர், தமிழீழம் என்பவற்றையும் போட்டு கலக்கியிருக்கிறார். ஒன்றைத் தொடங்கி அதை முடிக்காமல் அடுத்ததுக்கு தாவியிருக்கிறார். <span style='font-size:16pt;line-height:100%'>--> இவை இரசிகைக்கு ஏற்கனவே கூறிய கருத்துக்கள் தான்.</span> பண்டைய பண்பாடு என்று குறிப்பிடும் பொழுது இன்றை பண்பாடு என்று ஒன்று இருப்பதை ஏற்றுக்கொள்கிறார் கட்டுரையாளர். பண்டைய பண்பாட்டுக்கும் இன்றைய பண்பாட்டுக்கும் இடையிலான மாற்றம் எப்படி நிகழ்ந்தது என்பதை இரசிகை சிந்திக்கவேண்டும். பண்டைய பண்பாடு என்று இரசிகை குறிப்பிடுவது எதை? மொழித் தோற்றத்திற்கு முற்பட்டதையா? நிலம் பிரிந்து கண்டங்கள் உருவாவதற்கு முற்பட்டதையா? ஆரியர் வருகைக்கு முற்பட்டதையா? ஐரோப்பியர் வருகைக்கு முற்பட்டதையா? பண்பாடு மொழி சார்ந்ததா? இனம் சார்ந்ததா? மதம் சார்ந்ததா? எது சார்ந்தது? உடையா? உணவா? நடையா? பாவனையா? எது பண்பாடு? இப்படி பலகேள்விகளுக்கும் இரசிகை விளக்கமாக பதில் கூறியிருந்தால் கட்டுரை நிறைவாயிருந்திருக்கும். - kurukaalapoovan - 10-15-2005 ஒரு குறித்த தொகுதி (மொழியால், இனத்தால், மதத்தால் அல்லது பூகோளரீதியில்) மக்களினால் நடமுறையில் ஏற்றுக்கொள்ளப்பட்டு நீண்ட காலமாக பின்பற்றப் பட்டு வந்த அவர்களுடைய வாழ்வு முறைக்கு ஒத்த, சாதகமான, தேவையான பழக்கவழக்கங்கள் அவர்களுடைய பண்பாடாக கலாச்சாரத்தின் அம்சங்களாக காலப்போக்கில் வேரூண்றுகின்றன். கால நீரோட்டத்தில் வாழ்வு முறைகளில் மாற்றங்கள் விழிப்புணர்வுகள் புலப்பெயர்வுகள் என வரும் போது அந்த மக்களின் நடமுறைவாழ்வில் அவர்களது மூதாதையரின் வாழ்கை முறையில் அர்த்தமுள்ளதாக பார்க்கப்பட்ட சில அம்சங்கள் அர்த்தமற்றவையாக ஆரோக்கியமற்றதாக, தடைக்கற்களாக மாறுவதை தவிர்க்கமுடியாது. இந்த நிலையில் கலாச்சாரம் பண்பாடு என்பவற்றின் எந்தொவொரு அம்சங்களும் அதனை பின்பற்றி அர்த்தம் கொடுத்து போற்றி கொண்டாடி பொருமைப்படும் மக்களின் ஆதரவின்றி நிலைத்து நிக்காது. கால நீரோட்டத்தில் இவ்வகை மாற்றங்களை தவிர்க்க முடியாது. இவற்றிற்கு காலங்களிற்கு அப்பாற்பட்ட நிரந்தர வரைவிலக்கணங்கள் தேடுவது அர்த்தமற்றது. - RaMa - 10-15-2005 கட்டுரை நல்லாயிருக்கு ரசிகை.... அத்துடன் வாழ்த்துக்கள் குருவிகளுக்கும் நன்றிகள் - narathar - 10-15-2005 வணக்கம் ரசிகை நீங்கள் கேட்ட விடயங்கள் இப்போது இங்கே களத்தில் இடப் பட்டுள்ளதால் நான் தேடியவை சில வற்றையும் எனது சில கருத்துக்களயும் இங்கே இடுகிறேன் . நீங்களே இதில் தேவயானவற்றை எடுத்து கட்டுரையய் சீர் செய்யவும். முதலில் தலைப்பு. நீங்கள் எழுதிய விடயங்கள் 'தமிழோசை உலகமெல்லம் பரவட்டும் ' என்பதை மட்டும் நோக்காகக் கொண்டதாக இருக்கவில்லை என்றே நினைக்கிறேன்.மொழி .பண்பாடு,கலாச்சாரம் என்பன ஒன்றோடு ஒன்று தொடர்பானவை ஆகினும் ,மொழி மட்டுமே உங்களின் கட்டுரையின் விடயமாக இல்லாததால்.வேறு ஒரு தலைப் பிடுவது நலம்.இக் கட்டுரை உலகத் தமிழர்களை குறிப்பாக இழன்ச்சர்களை நோக்கி விழித்து எழுதப் பட்டுள்ளதால் தலைப்பை 'உலகத் தமிழ் இழன்சரே விழிமின்' என்று போட்டால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். மேலும் முன்னர் சொன்னது போல் நீங்கள் சொல்ல வருகிற விடயங்களை கொன்ச்சம் வரைபு செய்துகொண்டு சொன்னால் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதில் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் தெளிவு இருக்கும்.அல்லது அது வெறும் தமிழ் வார்த்தைகளின் கூட்டாக அர்த்தமற்றதாக இருக்கும். இதை நோக்கக் கொன்டு விக்கிமிடியாவில் இடப் பட்டிருந்த சில வரைபுகளை கிழே இடுகிறேன்.இதில் நீங்கள் கூற வருபதில் கிட்டியதாக உள்ளதைப் பாவித்து உங்கள் கட்டுரையின் ஆரம்பத்தை அமைத்துக் கொள்ளுங்கள். - narathar - 10-15-2005 பண்பாடு கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து. பண்பாடு என்பது மிகவும் பரந்த பொருளுடன் பயன்படுத்தப்படும் ஒரு சொல்லாக இருக்கிறது. ஆங்கிலத்தில் culture (கல்ச்சர்) என்னும் சொல்லுக்கு இணையான பொருளில் இச் சொல் தமிழில் பயன்படுத்தப்படுகிறது எனலாம். பொதுவாக இது மனிதரின் நடவடிக்கைகளைக் குறிக்கிறது எனலாம். பண்பாட்டின் வெவ்வேறு வரைவிலக்கணங்கள், மனிதச் செயல்பாடுகளை விளங்கிக்கொள்வதற்கான அல்லது அவற்றை மதிப்பிடுவதற்குரிய அளபுருக்களுக்கான வெவ்வேறு கோட்பாடுகளைப் பிரதிபலிக்கின்றனவெனலாம். 1952ல் அல்பிரட் எல். குறோபெர் என்பாரும் கிளைட் குளுக்ஹோனும் பண்பாடு என்பதற்குக் கூறப்படும் 200க்கு மேற்பட்ட வரைவிலக்கணங்களைத் தாங்கள் எழுதிய பண்பாடு: எண்ணக்கருக்களும் வரைவிலக்கணங்களும், ஒரு விமர்சன மீள்பார்வை (Culture: A Critical Review of Concepts and Definitions) என்னும் நூலில் பட்டியலிட்டுள்ளார்கள். வரலாற்று ரீதியில் வரைவிலக்கணங்கள் 18ஆம் 19ஆம் நூற்றாண்டுகளின் மேலைத்தேச அறிஞர்களும், இன்றும்கூடச் சிலரும் பண்பாடு என்பதை நாகரிகம் (civilization) என்பதோடு அடையாளம்கண்டு அதை ஒரு இயற்கைக்கு எதிரான ஒன்றாகக் கருதினார்கள். "உயர் பண்பாட்டை"க் குறைவாகக் கொண்டுள்ளவர்கள் கூடுதல் இயல்பானவர்களாகக் கருதப்பட்டது. அத்துடன் உயர் பண்பாட்டின் சில அம்சங்கள் மனித இயல்புகளை அமுக்கிவிடுவதாகவும் சிலரால் விமர்சிக்கப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மனிதவியலாளர், பல் வேறுபட்ட சமூகங்களுக்கும் பயன்படுத்தத்தக்க வகையிலான, பண்பாடு என்பதன் பரந்த வரைவிலக்கணமொன்றின் தேவையை உணர்ந்தார்கள். பண்பாடு என்பது மனித இயல்பு என்றும், அது அநுபவங்களைப் பகுத்து குறீயீடாக்கி, குறியீட்டு ரீதியில் வெளிப்படுத்துவதற்கான உலகம் தழுவிய மனிதனுடைய தகுதியை மூலவேராகக் கொண்டது எனவும் அவர்கள் வாதித்தார்கள். விளைவாக ஒன்றிலிருந்து ஒன்று விலகி வாழுகின்ற மக்கள் குழுக்கள், தங்களுக்கெனத் தனித்துவமான பண்பாடுகளை உருவாக்கிக் கொள்ளுகின்றன. எனினும் வெவ்வேறு பண்பாடுகளின் அம்சங்கள் ஒரு குழுவிலிருந்து இன்னொன்றுக்கு இலகுவாகப் பரவ முடியும். எனவே வழிமுறை ரீதியாகவும், கோட்பாட்டு ரீதியாகவும் பயனுள்ள வரைவிலக்கணங்களை உருவாக்கிக்கொள்ள வேண்டிய தேவை மனிதவியலாளருக்கு ஏற்பட்டது. அவர்கள் பொருள்சார் பண்பாடு என்பதற்கும் குறியீடுசார் பண்பாடு என்பதற்குமிடையே வேறுபாடு கண்டார்கள். இவையிரண்டும் வெவ்வேறு வகையான மனித செயற்பாடுகளை வெளிப்படுத்துவது மட்டுமன்றி, இரண்டும் வெவ்வேறு வகையான வழிமுறைகள் தேவைப்படும் வெவ்வேறுவகைத் தரவுகளையும் உள்ளடக்கியுள்ள காரணத்தால் இந்தப்பகுப்புத் தேவையாக இருந்தது. பண்பாடு என்பதை விளங்கிக்கொள்ளும் இன்னொரு பொதுவான முறை மூன்று மூலகங்களை உள்ளடக்கியுள்ளது: பெறுமானம் (எண்ணங்கள்), நெறிமுறைகள் (நடத்தை), மற்றும் பொருட்கள் (அல்லது பொருள்சார் பண்பாடு). வாழ்வில் முக்கியமானது எது என்பது பற்றிய எண்ணங்களே பெறுமானங்களாகும். அவை பண்பாட்டின் ஏனைய அம்சங்களை வழிநடத்துகின்றன. நெறிமுறைகள் (Norms) என்பன, வெவ்வேறு சந்தர்ப்பங்களில் மக்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஆகும். ஒவ்வொரு பண்பாட்டுக் குழுவும் இந்த norm களை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகளைக் கொண்டுள்ளது. சமூகம் நடைமுறைப்படுத்தும் இந்த நெறிமுறைகள் சட்டங்கள் எனப் பொதுவாக வழங்கப்படுகின்றன. மூறாவது அம்சமான "பொருட்கள்" பண்பாட்டின் "பெறுமானங்கள்", நெறிமுறைகள் என்பவற்றிலிருந்து பெறப்படுகின்றது. http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%...%AE%9F%E0%AF%81 - narathar - 10-15-2005 கிழே நான் இடும் கட்டுரை நாம் ஏன் தமிழராக எம்மை புலத்தில் அடயாளம் காட்ட வேண்டும் என்பதை விளக்குகிறது.இதுவே உங்கள் கடுரையில் முக்கியமாக வர வேண்டிய விடயம் என்று நினைக்கிறேன்.அதாவது எமக்கு புலத்தில் ஏன் தமிழர் என்கின்ற அடயாளம் தேவை என்பதுவே முக்கியமாகச் சொல்லப் பட வேண்டிய செய்தி.இக் கட்டுரயை வரைந்த சந்திரலேகா (அவுஸ்த்திரேலியா ) அவர்கள் நடை முறயில் நடப்பவற்றை உதாரணமாகக் கொன்டு நன்றாக எழுதி உள்ளார் என்று நினைக்கிறேன். http://webtamilan.com/tamil/artandculture/...mil_uyirppu.htm நாம் எமது மொழியை இழப்பதால் எவ்வெவற்றை இழக்கப் போகிறோம் என்பதை சற்று நினைத்துப் பார்ப்பது பயனுள்ளது என்று நினைக்கிறேன். ஆங்கிலத்தில் இது பற்றிப் பல கட்டுரைகள் வந்துள்ளன. அவற்றை எழுதியவர்கள் தமிழர் அல்லர், ஆங்கிலேயர்கள். உங்கள் தாய் மொழியை இழந்து விடாதீர்கள் அதனால் நீங்கள் நாளடைவில் உங்கள் பண்பாட்டையே இழந்துவிடுவீர்கள் பின்னர் நீங்கள் யார் என்பதையே அறியாத நிலையில் இருண்ட வாழ்வு வாழ நேரிடும், என்று அவர்கள் இக் கட்டுரைகளில் எச்சரித்துள்ளனர். இவை தம் நாடுகளில் வாழ வந்த பல்வேறு இனத்தவர்களை மனதில் கொண்டு எழுதப்பட்ட கட்டுரைகள். அவர்கள் எதிர்பார்ப்பது வேறுபாடுகளின் மத்தியில் ஏற்படும் ஒருமைப்பாட்டையே. அதாவது அவுஸ்திரேலியாவில் வாழும் பல்வேறு இனத்தவர்கள் அவுஸ்திரேலிய பிரஜைகள் என்ற ஒருமைப்பாட்டின் கீழ் ஒவ்வொரு இனமும் ஏனையவரைப் பாதிக்காத முறையில் தத்தமது பண்பாடுகளுடன் தத்தமக்குரிய தனித்துவத்துடன் வாழவேண்டும் என்பதே. அப்போதுதான் ஒர் ஆரோக்கியமான சமுதாயம் உருவாக முடியும். தங்கள் பண்பாட்டினை இழந்து வேற்று இனத்துக்குரிய உடலுடன் தாம் வாழும் நாட்டின் வாழ்க்கை முறையைப் பின்பற்றி வாழும் தனித்துவமற்ற மனிதர்களைக் கொண்ட ஒரு சமுதாயத்தை எவரும் விரும்ப மாட்டார்கள். எனவே தமிழர்களாகிய நாம் எமது சுய அடையாளத்தை உணர்ந்து கொள்வது மிக மிக அவசியம். சுய அடையாளம் என்றால் என்ன? நான் யார்? என்ற கேள்விக்கு ஒருவர் நெஞ்சை நிமிர்த்தி திடமான பதில் சொல்ல முடியுமென்றால் அவர் யார் என்ற அடையாளம் அவருக்குப் புரிந்திருக்கிறது எனலாம். இங்கே நான் யார் என்பது ஆத்மிக ரீதியில் விடை காண்பதற்குரிய கேள்வியல்ல. சமுக அடிப்படையில் பதில் தேடுவதற்கான ஒரு வினா. நாம் யார்? இக் கேள்விக்கு நாம் இலங்கைத் தமிழர் என்று பதிலளிக்கும் போது எந்த அடிப்படையில் அவ்வாறு கூறுகிறோம். இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெற்றோருக்குப் பிறந்த ஒரே காரணத்தால் நாம் தமிழராகி விடுவோமா? அல்லது தமிழகராதி தமிழர் என்ற சொல்லுக்கு வரைவிலக்கணம் கூறுவது போல தமிழ் மொழியைப் பேசுவதால் நாம் தமிழராகிறோமா? அப்படியானால் தமிழை நன்றாகப் பேசும் ஒருவர் முற்றாக வேற்றுப் பண்பாட்டைக் கடைப்பிடிப்பாரானால் அவர் தமிழரா? அல்லது தமிழ் கலாச்சாரத்தை முற்றாகக் கடைப்பிடிக்கும் ஒருவர் தமிழ் மொழியை அறியாதிருந்தால் அவரைத் தமிழர் எனலாமா? தமிழரது அடையாளம் என்ன என்பதை நாம் புரிந்து கொண்டால்தான் வெளிநாட்டில் வாழும் எமக்கு அது எவ்வளவு முக்கியம் என்பதை விளங்கிக் கொள்ள முடியும். சொந்த நாட்டில் நாம் எமது இனத்தவரோடு கூடி வாழும் போது நான் யார்? என்ற கேள்வியை ஆத்மிக அடிப்படையில் எழுப்புவதற்குச் சந்தர்ப்பம் உள்ளதே தவிர சமுக ரீதியாகத் அதை எழுப்புவதற்கான தேவை ஏற்படுவது இல்லை. ஆனால் வேறு ஒரு நாட்டில் வேறு மொழி பேசி நமது கலாச்சாரத்திலிருந்து வேறுபட்ட கலாச்சாரம் உடையவர்களோடு கூடி வாழ நேரும்போது நாம் யார்? எமது பண்பாடு என்ன? என்று அறியவேண்டிய அவசியம் ஏற்படுகிறது. உலக நாடுகளின் வரலாற்றைப் பார்க்கும் போது ஆள்பவரால் ஆளப்படுகிற இனத்துக்கு ஆபத்து வந்த சந்தர்ப்பங்களில் எல்லாம் ஆளப்படுகிற இனத்தவர் மத்தியில் தமது மொழி, பண்பாடு, வரலாறு, மதம் பற்றிய விழிப்புணர்வும் அபிமானமும் ஏற்பட்டுள்ளதை அவதானிக்கலாம். ஆனால் ஓர் இனம் வேறு ஒரு நாட்டில் வாழ வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படும் போது இவ்வாறான விழிப்புணர்வைப் பெறுவதில்லை. இதற்குக் காரணம் அவர்கள் தமது மொழிக்கும் பண்பாட்டுக்கும் ஆபத்து வந்துவிட்டதாக உணர வேண்டிய தேவை ஏற்படாமையே. ஆயினும் பல சந்ததிகளாக ஓர் இனம் வெளிநாடுகளில் வாழும் போது ஏதோ ஒரு கட்டத்தில் இனவெறியால் பாதிக்கப்படலாம். அப்போது அவர்கள் தாம் யார் என்பதை உணராதிருப்பின் அவர்களால் அப்பாதிப்பிலிருந்து மீள முடியாது போகும். தாம் ஆங்கிலேயரைப் போல ஆங்கிலம் பேசினாலும், அவர்களைப் போலவே வாழ்ந்தாலும் அவர்கள் தமது இனத்தவராக இவர்களைக் கொள்ளவில்லை என்ற உண்மையும் அப்போதுதான் புலனாகும். அத்துடன் தாம் வேரற்ற மரங்களாக வாழ்கின்ற அவலநிலையும் புரியும். இது வெளிநாடுகளில் தமது பண்பாட்டை மறந்து வாழ்கின்ற எந்த இனத்துக்கும் நேரக் கூடிய நிலைமையாகும். எனவே எமது சந்ததியினருக்கு அந்த நிலை வராது தடுப்பதற்கான முழு முயற்சியையும் எடுக்க வேண்டியது எமது தலையாய கடமையாகும். மொழி பண்பாட்டின் ஓர் அம்சமாக விளங்குவதால் அதனை இழக்கும் போது பண்பாட்டையும் அதனால் சுய அடையாளத்தையும் இழக்க நேரிடுகிறது. இது ஒரு மனிதனுக்கு ஏற்படும் மிகப் பெரிய இழப்பு என்பதைப் பலர் இப்போது புரிந்து கொள்ள இயலாத நிலையில் இருக்கின்றனர். ஒருவர் நாற்பது வயதை அடையும் போது அவருக்குத் தனது தாய் மொழி, பண்பாடு ஆகியவற்றில் பற்று ஏற்படுகிறது என்றும் அப்போது அது பற்றிய அறிவின்றியிருப்பின் அவற்றைத் தமக்குப் புகட்டாத பெற்றோரின் மேலேயே அவர் வருத்தம் கொள்வார் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இங்கு வாழும் பிள்ளைகளுக்கு தமிழ் எதற்கு என்று கூறும் பல பெற்றோர்களை நான் சந்தித்திருக்கிறேன். படிப்பதற்கும் வேலை செய்வதற்குமே மொழி தேவை, அதற்கு தமிழ் உதவாது என்பதால் அது தேவையில்லை என்பது அவர்களது வாதம். அவர்கள் தூரநோக்கு அற்றவர்கள் என்பது சொல்லாமலே புரியும். இரண்டு மூன்று சந்ததிகளுக்குப் பின்னர் இங்கு வாழ்ப்போகிறவர்களைப் பற்றி நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். வாழ்க்கை என்பது படிப்பும் வேலையும் மட்டுமல்ல. நாம் நாமாக இருக்க வேண்டும். அது வாழ்வில் மிக முக்கியமான விஷயம். நாம் நாமாக இருப்பது நமக்கு ஆத்ம பலமளிக்கும் விஷயம். அதற்கு எமக்குத் தாய் மொழி அறிவும், தமிழர் வரலாறு பற்றிய அறிவும் அவசியமாகிறது. நாம் எப்படிப்பட்ட இனத்திலிருந்து வந்திருக்கிறோம், எமது மூதாதையர் எத்தனை சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர், எத்தகைய கஷ்டங்களை மனோபலத்துடன் கடந்து வந்துள்ளனர், எத்தகைய உயரிய பெறுமதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர் என்பன போன்ற விஷயங்கள் எமக்குப் பெருமிதமளிக்கும், எம்மை உத்வேகப்படுத்தும். நாம் இவ்வாறான வல்லமையுள்ள இனத்தில் பிறந்திருக்கிறோம் என்ற எண்ணம் எமது இருப்புக்கு அர்த்தம் வழங்கும். அத்துடன் நாம் ஒரு தொடர்ச்சியின் பகுதியாக இருக்கிறோம் என்பது எமக்கு மனோபலமும் ஆத்மதிருப்தியும் அளிக்கும். இல்லாவிடின் வேரற்றவர்களாக அநாதைகளாக நாம் உணர்வதை எம்மால் தவிர்க்க இயலாது போகும். பண்பாடு என்றால் என்ன என்று வரையறுப்பது மிகவும் கடினமானது. சுருக்கமாகக் கூறுவதானால் அது ஒரு வாழும் முறை. நாம் உண்பது, உடுப்பது, பேசுவது, நமது பெறுமதிகள், நாம் நடக்கும் முறை, எண்ணும் விதம் என்று பல்வேறு விஷயங்கள் அதனுள் அடங்கும். அவை அனைத்தும் காலத்தின் போக்கிற்கேற்பவும், நாம் வாழும் நாட்டின் பண்பாட்டிற்கேற்பவும் மாறும். அவ்வாறு மாறுவதே ஆரோக்கியமானதும் கூட. ஆனால் அதன் உயிர்நாடி அல்லது ஆத்மா ஒரு போதும் மாறாது, மாறவும் கூடாது. ஆடை மாறலாம் ஆனால் காலம் காலமாக எமது இனத்தால் பேணப்பட்டு வந்த பெறுமதிகளை நாம் மாறவிடலாகாது. நாம் இலங்கைத் தமிழர் என்று சொல்கிறோம் என்றால் அதற்கு உயிர்நாடியாக உள்ள பண்புகளை நாம் எப்போதும் கொண்டிருக்க வேண்டும். எமது உயர் பண்புகளை மற்றைய இனத்தைச் சேர்ந்தவர்கள் மதிக்கும்படியாகவும் பாராட்டும்படியாகவும் நாம் நடந்து கொள்ளுதல் மிகவும் அவசியம். அதே நேரம் எமது பண்பாட்டில் கால மாற்றத்திற்கு ஒவ்வாதன அல்லது வேண்டத்தகாதன இருப்பின் அவற்றைக் களைவதும் ஏனைய பண்பாடுகளில் உள்ள நல்லனவற்றை ஏற்பதும் ஆரோக்கிமான வளர்ச்சிக்கு உதவும். - narathar - 10-15-2005 மேலும் தமிழ் பண்பாடு என்கின்ற தொடர்ச்சியில் என்னைப் பொறுத்தவரை பின்வருபனவற்றை இன்றய நிலையில் உயர்வானதாகக் கூறலாம் எனலாம்.விருந்தினரை உபசரிப்பது,அதாவது விருந்தோம்பல்,ஆளமான அர்த்தமான உறவு முறைகள்,கடமை,கண்ணியம் ,சுய கட்டுப் பாடு.எமது வரலாற்றுத் தொடர்ச்சியில் நாம் தமிழர் என்று முன்னேற கழய வேண்டியவை என்று நான் நினைப்பவை சாதீயம்.பெண் அடிமைத் தனம்,மூட நம்பிக்கைகள் ,அர்த்தமற்ற சமயச் சார்பான நடவடிக்கைகள் நம்பிக்கைகள்,வரட்டு கொவுரவம்,இரட்டைத் தன்மயான கபடங்கள். நாம் உள் வாங்க வேண்டியவை மற்ற மனிதரை மதித்து நடத்தல்,குழந்தைகளைப் பெண்களை மனிதர்களாக நடத்துதல்,விஞ்ஞான பூர்வமான சமுதாயப் பார்வை,சமத்துவம்,சகோதரத்துவம். - இளைஞன் - 10-15-2005 <!--QuoteBegin-kurukaalapoovan+-->QUOTE(kurukaalapoovan)<!--QuoteEBegin-->ஒரு குறித்த தொகுதி (மொழியால், இனத்தால், மதத்தால் அல்லது பூகோளரீதியில்) மக்களினால் நடமுறையில் ஏற்றுக்கொள்ளப்பட்டு நீண்ட காலமாக பின்பற்றப் பட்டு வந்த அவர்களுடைய வாழ்வு முறைக்கு ஒத்த, சாதகமான, தேவையான பழக்கவழக்கங்கள் அவர்களுடைய பண்பாடாக கலாச்சாரத்தின் அம்சங்களாக காலப்போக்கில் வேரூண்றுகின்றன். கால நீரோட்டத்தில் வாழ்வு முறைகளில் மாற்றங்கள் விழிப்புணர்வுகள் புலப்பெயர்வுகள் என வரும் போது அந்த மக்களின் நடமுறைவாழ்வில் அவர்களது மூதாதையரின் வாழ்கை முறையில் அர்த்தமுள்ளதாக பார்க்கப்பட்ட சில அம்சங்கள் அர்த்தமற்றவையாக ஆரோக்கியமற்றதாக, தடைக்கற்களாக மாறுவதை தவிர்க்கமுடியாது. இந்த நிலையில் கலாச்சாரம் பண்பாடு என்பவற்றின் ஒவ்வொரு அம்சங்களும் அதனை பின்பற்றி அர்த்தம் கொடுத்து போற்றி கொண்டாடி பொருமைப்படும் மக்களின் ஆதரவின்றி நிலைத்து நிக்காது. கால நீரோட்டத்தில் இவ்வகை மாற்றங்களை தவிர்க்க முடியாது. <b>இவற்றிற்கு காலங்களிற்கு அப்பாற்பட்ட நிரந்தர வரைவிலக்கணங்கள் தேடுவது அர்த்தமற்றது.</b> <!--QuoteEnd--><!--QuoteEEnd--> நன்றி "குறுக்காலபோவான்" (பெயரை மாத்தும் ஐசே. நான் ஒண்டும் கட்டாயப்படுத்தேல - இது திணிப்பென்று சண்டைக்கு வராதயும். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> ). உம்மட அந்த கடைசி வரிதான் மகுடம். நிரந்தர வலைவிலக்கணம் அர்த்தமற்ற ஒன்றே.
- இளைஞன் - 10-15-2005 <!--QuoteBegin-narathar+-->QUOTE(narathar)<!--QuoteEBegin-->மேலும் தமிழ் பண்பாடு என்கின்ற தொடர்ச்சியில் என்னைப் பொறுத்தவரை பின்வருபனவற்றை இன்றய நிலையில் உயர்வானதாகக் கூறலாம் எனலாம்.விருந்தினரை உபசரிப்பது,அதாவது விருந்தோம்பல்,ஆளமான அர்த்தமான உறவு முறைகள்,கடமை,கண்ணியம் ,சுய கட்டுப் பாடு.எமது வரலாற்றுத் தொடர்ச்சியில் நாம் தமிழர் என்று முன்னேற கழய வேண்டியவை என்று நான் நினைப்பவை சாதீயம்.பெண் அடிமைத் தனம்,மூட நம்பிக்கைகள் ,அர்த்தமற்ற சமயச் சார்பான நடவடிக்கைகள் நம்பிக்கைகள்,வரட்டு கொவுரவம்,இரட்டைத் தன்மயான கபடங்கள். நாம் உள் வாங்க வேண்டியவை மற்ற மனிதரை மதித்து நடத்தல்,குழந்தைகளைப் பெண்களை மனிதர்களாக நடத்துதல்,விஞ்ஞான பூர்வமான சமுதாயப் பார்வை,சமத்துவம்,சகோதரத்துவம்.<!--QuoteEnd--><!--QuoteEEnd--> நாரதர், உங்கள் கருத்தின்படி நோக்கின் பண்பாடு என்பது மனித முழுமைக்கும் பொதுவான குணாம்சமாகத்தானே இருக்கிறது? உதாரணமாக: கடமை, கண்ணியம், சுயகட்டுப்பாடு இவையனைத்தும் ஒவ்வொரு மனிதனும் கொள்ளவேண்டிய ஒன்றாகத்தானே இருக்கிறது? தனியே தமிழர்க்கானதாக இல்லையே :? - narathar - 10-15-2005 <!--QuoteBegin-இளைஞன்+-->QUOTE(இளைஞன்)<!--QuoteEBegin--><!--QuoteBegin-narathar+--><div class='quotetop'>QUOTE(narathar)<!--QuoteEBegin-->மேலும் தமிழ் பண்பாடு என்கின்ற தொடர்ச்சியில் என்னைப் பொறுத்தவரை பின்வருபனவற்றை இன்றய நிலையில் உயர்வானதாகக் கூறலாம் எனலாம்.விருந்தினரை உபசரிப்பது,அதாவது விருந்தோம்பல்,ஆளமான அர்த்தமான உறவு முறைகள்,கடமை,கண்ணியம் ,சுய கட்டுப் பாடு.எமது வரலாற்றுத் தொடர்ச்சியில் நாம் தமிழர் என்று முன்னேற கழய வேண்டியவை என்று நான் நினைப்பவை சாதீயம்.பெண் அடிமைத் தனம்,மூட நம்பிக்கைகள் ,அர்த்தமற்ற சமயச் சார்பான நடவடிக்கைகள் நம்பிக்கைகள்,வரட்டு கொவுரவம்,இரட்டைத் தன்மயான கபடங்கள். நாம் உள் வாங்க வேண்டியவை மற்ற மனிதரை மதித்து நடத்தல்,குழந்தைகளைப் பெண்களை மனிதர்களாக நடத்துதல்,விஞ்ஞான பூர்வமான சமுதாயப் பார்வை,சமத்துவம்,சகோதரத்துவம்.<!--QuoteEnd--><!--QuoteEEnd--> நாரதர், உங்கள் கருத்தின்படி நோக்கின் பண்பாடு என்பது மனித முழுமைக்கும் பொதுவான குணாம்சமாகத்தானே இருக்கிறது? உதாரணமாக: கடமை, கண்ணியம், சுயகட்டுப்பாடு இவையனைத்தும் ஒவ்வொரு மனிதனும் கொள்ளவேண்டிய ஒன்றாகத்தானே இருக்கிறது? தனியே தமிழர்க்கானதாக இல்லையே :?<!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> உண்மை தான் இழஞனே தமிழரும் மனிதர் தானே? பண்பாடு என்னும் போது அது மனித்தப் பண்பாடு தானே, வரலாற்று ரீதியாக இனத்துவ ரீதியாக இருந்து வந்த பண்பாட்டு விழுமியங்கள் மறைந்து பொதுவான மனித பண்பாட்டு விழுமியங்களே உருப் பெற்றுள்ளன.இதில் ஒரு இனத்தில் இருந்து மற்றொன்று குடுத்தும் ,வாங்கியும் வந்துள்ளன.மனித வாழ்க்கையை வளம் படுத்தும் பண்பாட்டு விழுமியன்கள் தொடர்கின்றன,வளருகின்றன.ஒவ்வாதவை அழிகின்றன. - இளைஞன் - 10-15-2005 தமிழரும் மனிதர்தான் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> (வேற்றுக்கிரகத்து வாசிகளாக antiபுதுமை, antiபுரட்சி விரும்பிகள் நினைக்கலாம்). வரலாற்று ரீதியாக, இனத்துவ ரீதியாக இருந்து வந்த பண்பாட்டு விழுமியங்கள் மறைந்து பொதுவான மானுடப் பண்பாட்டு விழுமியங்கள் உருபெற்றுள்ளன என்றால் - ஒரு இனத்துக்கான தனித்துவ அடையாளம் என்பது எதன்மூலம் காக்கப்படுகிறது?
- narathar - 10-15-2005 <!--QuoteBegin-இளைஞன்+-->QUOTE(இளைஞன்)<!--QuoteEBegin-->தமிழரும் மனிதர்தான் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> (வேற்றுக்கிரகத்து வாசிகளாக antiபுதுமை, antiபுரட்சி விரும்பிகள் நினைக்கலாம்). வரலாற்று ரீதியாக, இனத்துவ ரீதியாக இருந்து வந்த பண்பாட்டு விழுமியங்கள் மறைந்து பொதுவான மானுடப் பண்பாட்டு விழுமியங்கள் உருபெற்றுள்ளன என்றால் - ஒரு இனத்துக்கான தனித்துவ அடையாளம் என்பது எதன்மூலம் காக்கப்படுகிறது?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->ஒரு இனத்துக்கான தனித்துவம் அதன் வரலாற்றுத் தொடர்ச்சியில் இருந்தும்,அதில் தற்போது மேலோங்கி இருக்கின்ற பண்பாட்டு விழுமியங்களில் இருந்தும் அடயாளப் படுத்தப் படுகிறது.அதன் மொழி,அந்த மொழியில் உள்ள இலக்கியங்கள் என்பனவையும் அவ் வினத்தை மற்றயவற்றில் இருந்து வேறு படுத்துகின்றன.எல்லா இனங்களும் தமக்கென ஒரு பாதையில் சென்று ஈற்றில் மனிதம் என்கின்ற ஒரு பொது நிலயை அடைகின்றன.இந்தப் பாதயே எமது பண்பாட்டு வரலாற்றுத் தொடர்ச்சி ஆகிறது.ஒவ் வோரு இனமும் இந்தப் பாதயில் வெவ்வேறு நிலைகளில் நிற்கிறது. இந்தப் பாதயே ஒவ்வொரு இனத்துவக் குழுக்களுக்குமான தனித்துவமான அடயாளமாகிறது. - kuruvikal - 10-15-2005 <!--QuoteBegin-இளைஞன்+-->QUOTE(இளைஞன்)<!--QuoteEBegin--><b>தமிழரும் மனிதர்தான் </b><!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> (வேற்றுக்கிரகத்து வாசிகளாக antiபுதுமை, antiபுரட்சி விரும்பிகள் நினைக்கலாம்). வரலாற்று ரீதியாக, இனத்துவ ரீதியாக இருந்து வந்த பண்பாட்டு விழுமியங்கள் மறைந்து பொதுவான மானுடப் பண்பாட்டு விழுமியங்கள் உருபெற்றுள்ளன என்றால் - ஒரு இனத்துக்கான தனித்துவ அடையாளம் என்பது எதன்மூலம் காக்கப்படுகிறது?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->அப்படியா.. அதென்ன பண்பாடு எண்டியள்...இப்போ நீங்களே எல்லோரும் அதை உச்சரிக்கிறீர்கள்..! புலம்பெயர் தேசங்களில் உங்கள் சொந்த பண்பாடு இழக்கச் சொல்லி எவனாவது கட்டாயப்படுத்திறானா..! இல்லையே..! அவனே சொல்லுறான் பல்கலாசார பல்லினத் தன்மை உள்ள நாடுகள் தமது நாடுகள் என்று...! நீங்கள் என்னடா எண்டா நாங்க காப்பிலி...இல்ல வெள்ளைக்காரன் என்றியள்...! அவனுக்கே உங்களைப் பிடிக்கல்ல...மனிசராவே மதிக்கிறானில்ல... இதுங்க நீங்க இங்க தமிழருக்க தமிழர் யார் பெரிசெண்டு துள்ளுங்கோ..! <b>*** தணிக்கை</b> :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ![]() [b]*** தணிக்கை செய்யப்பட்டுள்ளது - Rasikai - 10-15-2005 உங்கள் எல்லோரினது கருத்துக்கும் நன்றி :roll: - kuruvikal - 10-15-2005 எங்கட ஆக்களுக்கு ஒன்றில குறைவே இல்லை... கற்பனைல தங்கட ஆக்களுக்கு தாங்களே கதை அளந்து புளுகித் தள்ளுறது...! இங்க வைச்ச எல்லாக் கருத்துகளும் அவரவர் கற்பனையே அன்றி..வேறில்லை..மகா சனங்களே.! அதுசரி தமிழர்கள் உங்கள் பண்பாட்டு அடையாளங்கள் என்ன... பொது தனி மனிதப் பண்பாட்டுக் கோலங்கள் என்றால் என்ன...! இது புரியல்லையே...! சும்மா அளக்கிறேள்..! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> குறிப்பா... கலை கலாசார பண்பாட்டு விழுமியங்கள் என்றுதான் வரையறுக்கப்படுகிறது..! எனவே இந்த மூன்றுக்கும் விழுமியங்கள் என்றது இருக்கிறது...! விழுமியம் என்றால் என்ன...??! அங்க தான் சனம் புரியாம அலட்டிட்டு இருக்கு...! இப்போ அண்மையில் ஒரு புத்தக நிறுவனத்தை தமிழர்களின் பண்பாட்டு அம்சமாக பேராசிரியர் சிவத்தம்பி வரையறுத்தார்...எதன் அடிப்படையில்...அது தமிழர்களிற்கு அவர்களின் சமூகக்கட்டமைப்புக்கு கல்விக்கு என்று ஆற்றிய பங்களிப்புக்காக..! நீங்கள் மேற்கில் பொறுக்குவதெல்லாம் எங்கள் பண்பாடு என்று வரையறுக்க முடியாதுங்கோ..அது அவங்க பண்பாடு...! என்னதான் தலைகீழா நிண்டாலும் மேற்குலக பண்பாட்டுக் கோலங்கள் எமது என்றாக முடியாது...அதை உள்வாங்குவது புரட்சி புதுமை சீர்திருத்தம் அல்ல...! காரணம்..பண்பாடு என்பது ஒரு சமூகத்தின் இருப்பு இயக்கவியலுடன் பின்னிப்பிணைந்தது..எங்கள் பண்பாடு எனப்படுபவை தமிழர் சமூகத்துக்கான தனித்துவ இருப்பையும் தனித்துவ இயக்கவியல் பண்புகளையும் தன்னகத்தே கொண்டது...அதற்குள் சீர்திருத்தம் என்பது எமக்குள் இருந்து தனித்துவமாக எழ வேண்டுமே தவிர பொறுக்கி எடுத்தவைகளால் அல்ல...! காரணம் எங்கள் சமூகத்துக்கு என்ற தனித்துவம் இழக்கப்பட முடியாதது..! ரசிகை அந்தக் கட்டுரையில் சொன்னது போல..! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|