| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 105 online users. » 0 Member(s) | 102 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,327
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,235
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,301
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,649
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,083
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,472
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,512
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,045
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243
|
|
|
| பிரிட்டன் அப்பாக்களுக்கு அடித்தது "லக்' |
|
Posted by: SUNDHAL - 10-20-2005, 03:30 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (12)
|
 |
பிரிட்டனில் இனி குழந்தை பிறந்தால் அக்குழந்தைகளின் அம்மாவுக்கு மட்டுமின்றி, அப்பாவுக்கும் மூன்று மாதம் சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
பிரிட்டனில் புதிதாக பிறக்கும் குழந்தைகளின் பெற்றோருக்கு சந்தோஷம் அளிக்கும் திட்டம் ஒன்றை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. குழந்தை பிறந்தால் அதை பராமரிக்க பெண்களுக்கு பேறுகால விடுப்பு அளிப்பது போல் ஆண்களுக்கும் விடுப்பு அளிக்க பிரிட்டன் அரசு முடிவு செய்துள்ளது.
பிரிட்டன் நாட்டின் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் ஆலன் ஜான்சன் இதுகுறித்து கூறியதாவது:
தற்போது பிரிட்டனில் ஒரு குழந்தை பிறந்தால் அந்தக் குழந்தையின் தாய்க்கு ஆறுமாதம் சம்பளத்துடன் கூடிய விடுப்பும் மேலும் ஆறுமாதம் சம்பளமற்ற விடுப்பும் அளிக்கப்படுகிறது. அதேநேரத்தில் குழந்தையின் தந்தைக்கு இரண்டு வாரங்களுக்கு மட்டுமே சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்படும். தற்போதுள்ள இந்த நடைமுறை மாற்றி அமைக்கப்படுகிறது. இனிமேல் புதிதாக பிறக்கும் குழந்தைகளின் தந்தைகளுக்கும் மூன்று மாதங்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்படும். அதே போல் பெண்களுக்கு அளிக்கப்படும் சம்பளத்துடன் கூடிய விடுப்பு ஆறு மாதத்திலிருந்து ஒன்பது மாதமாக நீட்டிக்கப்படுகிறது. இதில் குழந்தை பெற்ற பெண்கள் ஆறுமாதம் கழித்து வேலைக்கு செல்ல விரும்பினால், குழந்தையின் தந்தைக்கு மேலும் விடுப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆண்கள் தங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து இருக்கவே அதிகம் விரும்புகின்றனர். இதன் காரணமாகவே இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டது. அது மட்டுமின்றி மே மாத தேர்தலுக்காக தொழிலாளர் கட்சி சார்பில் பேறு கால விடுப்பு தொடர்பாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றும் வகையிலும் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
இதுகுறித்து வர்த்தக நிறுவனங்களுடன் கலந்தாலோசனை செய்தோம். இத்திட்டத்திற்கு நிறுவன இயக்குனர்கள் மற்றும் பிரிட்டன் தொழில் துறையின் கூட்டுக் குழுவின் ஆதரவும் எங்களுக்கு உள்ளது.
இவ்வாறு ஆலன் ஜான்சன் கூறினார்.
|
|
|
| ²Äò¾¢ø ¸¡ÄÂó¾¢Ãõ |
|
Posted by: ¦ÀâÂôÒ - 10-20-2005, 01:18 AM - Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம்
- Replies (5)
|
 |
[size=18][b]¸¡ÄÂó¾¢Ãõ ²Äò¾¢üÌ...
[size=15]<img src='http://img292.imageshack.us/img292/2253/aa8cw.jpg' border='0' alt='user posted image'>
www.trademe.co.nz ±ýÈ ¿¢äº¢Ä¡óÐ þ¨½Âò¾Çò¾¢ø þó¾ ²Äõ ¿¼ì¸¢ÈÐ.
<img src='http://img292.imageshack.us/img292/2083/a13fw.jpg' border='0' alt='user posted image'>
300 ðâøÄ¢Âý ¦¼¡Ä÷ ŨÃìÌõ ²Äõ ¯Â÷óÐûÇÐ. ¬É¡ø Å¢üÀÅ÷ ±ýÉ ¿¢¨Éò¾¡§Ã¡ ¦¾Ã¢ÂÅ¢ø¨Ä. ²Äò¨¾ þÃòÐ ¦ºöРŢð¼¡÷.
<img src='http://img292.imageshack.us/img292/9290/a24ep.jpg' border='0' alt='user posted image'>
§ÁÖõ ¾¸Åø¸ÙìÌ: http://www.trademe.co.nz/structure/auction...938&permanent=0
|
|
|
| எழுத முடியாத காவியங்கள் |
|
Posted by: sri - 10-19-2005, 10:05 PM - Forum: தமிழீழம்
- No Replies
|
 |
ஒட்டி உலர்ந்து எலும்புக்கூடாகிப் போனாள் அந்தத் தாய் இந்த வாட்டமெல்லாம் அவனுடைய சாவுக்குப் பிறகு தான்
அம்மாவின் சந்தோசம், நிம்மதி, கல கலப்பு....... அனைத்துமே அவன் தான், அவன் போனதோடு எல்லாமே போய்விட்டது.
இருக்காதா என்ன.......?
வறுமையோடு போராடிய அந்தக் குடும்பத்தை வாழ வைக்க, இரும்போடு போராட அவன் கம்மாலைக்குப் போன மறக்கமுடியாத அந்த நாட்கள் - அம்மாவின் மனசை ஆக்கிரமித்துள்ளது.
அப்போது பத்தே வயதுடைய குழந்தை அவன். அம்மாவுக்கு அவன் தான் மூத்தவன். அவனுக்குப் பிறகு ஐந்து பேர் பச்சைக் குழந்தைகள். எல்லோருடைய துன்பங்களையும் தானே அனுபவித்தான். எல்லாக் கஸ்டங்களையும் தானே சுமந்தான்.
அந்தக் குடும்பத்தின் உயிராக அவந்தான் இயங்கினான். ஆனால், அவனுடைய உயிர் அம்மாவிலேதான் இருந்தது
7மைல் தொலைவில் இருந்த அந்தப் பட்டறைக்கு, பிஞ்சுக்கால்கள் கொப்பளிக்க ஒவ்வொரு நாளும் நடந்தே போய்வந்தான். அம்மாவுக்கு உயிர் துடிக்கும். இதயத்தில் இரத்தம் வடியும். பின்னேரங்களில் சோர்ந்து வருகிறபிள்ளையை ஓடிச்சென்று அள்ளி எடுத்து, கண்ணிர் கரையக் கட்டியணைப்பாள் அந்தத்தாய்.
"அவந்தான் எனக்குப் பிள்ளை" என்கிறாள் அம்மா.
ஓடி அலந்து வந்து ஓய்ந்திருக்குமொரு பொழுதிலும், அடுப்படியில் அல்லல்படும் அம்மாவுக்குத் துணையாக நெருப்போடு போர் தொடுப்பான் பிள்ளை. அம்மாவுக்கு துயரம் நெஞ்சை அடைக்கும்.
தன்னையே உருக்கி வார்த்து தங்கச்சிக்காக ஆசையோடு அவன் சங்கிலி ஒன்று செய்து வந்தபோது, அடக்க முடியாமல் அம்மா அழுதே விட்டாள். அந்த சின்ன வயதில் அவன் கஸ்டப்பட்டதைப் போல் வேறெ எவரும் பட்டிருக்கமாட்டார்களாம் - அம்மா சொல்கிறாள்.
இருள் கவிழ்ந்த அந்த வீட்டுக்கு விளக்கேற்றியவன் அவன் தான்.
இந்தியர்கள் வந்து அம்மாவையும் பிள்ளையையும் பிரித்தார்கள். அவன் இயக்கத்திற்குப் போய்விட்டான்.
இப்போது அவனொரு கரும்புலி வீரனாகி - `புலிகளை அழிக்கக் கங்கணம் கட்டி நின்ற ஒரு இலக்கை அழிக்கத் தயாராகி நின்றான் .
பகைவனின் பிரதான தெருவொன்றில் அந்த இலக்கு, சரிவந்து பொருந்திய ஒரு இளவேனில் காலையில்
-தாக்குதலின் இரகசியத்தன்மையும், அதன் தேவையும் தெளிவாகப் புரிந்துணர்ந்திருந்த அந்த விடுதலை வீரன் - கூடவே வந்து நின்று, கட்டியணைத்து வழியனுப்பி வைத்த அந்தத் தளத்தின் அதிபதியிடம் காதோடு சொல்லிவிட்டுப் போனானாம்.
" அம்மாவிடம் மட்டும் சொல்லிவிடுங்கோ............ அவா ஒருத்தருக்கும் சொல்லமாட்டா......... "
நன்றி உயிராயுதம் பாகம் 1
|
|
|
| ஆஸ்ரேலிய அமைச்சரை தாக்கிய எம்பி |
|
Posted by: Mathan - 10-19-2005, 09:02 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (7)
|
 |
ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் ரகளை: அமைச்சரைத் தாக்கிய எம்.பி. ஒரு வாரம் சஸ்பெண்ட்
சிட்னி, அக். 20: ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் அமைச்சரைத் தாக்கிய எதிர்க்கட்சி உறுப்பினர் ஒரு வாரத்துக்கு அவையிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
நியூசவுத்வேல்ûஸச் சேர்ந்த சாலைகள் துறை அமைச்சர் ஜோ திரிபோடி நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மாலை பேசிக்கொண்டிருந்தார். தன்னுடைய தொகுதிக்கு அரசு போதிய வசதிகளைச் செய்யவில்லை என்று நேஷனல் கட்சியைச் சேர்ந்த எதிர்க்கட்சி உறுப்பினர் ஆண்ட்ரூ பிரேசர் அப்போது அமைச்சர் மீது குற்றஞ்சாட்டினார்.
உறுப்பினரின் தொகுதியில் சாலை மேம்பாட்டுப்பணிகளை ஆய்வு செய்வதற்காக நேரில் கடந்த வாரம் சென்றேன், அப்போது அவர் தொகுதிக்கே வரவில்லை என்று அமைச்சர் அவருக்குப் பதிலடி கொடுத்தார். உடனே கோபமடைந்த பிரேசர் அமைச்சரை நோக்கிப் பாய்ந்தார். அவருடைய சட்டையைப் பிடித்து உலுக்கினார். ""நான் என்ன மட்டமா, என்னுடைய தொகுதிக்கு எதுவும் செய்யமாட்டீர்களா'' என்று கேட்டார்.
மேற்கொண்டு ரசாபாசம் ஆகிவிடாமல் நாடாளுமன்ற அவைக் காவலர்கள் ஓடிவந்து உறுப்பினரைப் பிடித்து இழுத்து அமைச்சரைக் காப்பாற்றினார்கள். பிறகு அமைச்சரின் அறைக்குச் சென்ற பிரேசர் அங்கும் இதே போல கத்தி கூச்சல் போட்டார். அமைச்சர் நல்ல வேளையாக டேபிளுக்கு எதிர்ப்புறத்தில் போய் பாதுகாப்பாக நின்று கொண்டார். அங்கு அவருடைய மெய்க்காவலர்கள் வந்து உறுப்பினர் நெருங்கிவிடாதபடி பார்த்துக் கொண்டனர்.
எல்லாம் முடிந்த பிறகு உறுப்பினர் ஒரு வாரத்துக்கு சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
தினமணி
|
|
|
| மிதிவெடி |
|
Posted by: தூயா - 10-19-2005, 03:30 PM - Forum: சமையல்
- Replies (36)
|
 |
வன்னியில் "மிதிவெடி" எனும் சிற்றுன்டி மிக பிரபலம். அது எப்படி செய்வது என தெரியுமா? அதன் பெயர் எப்படி வந்தது?
|
|
|
| கோயிஞ்சாமி சுயசரிதை எழுதுகிறார்... |
|
Posted by: SUNDHAL - 10-19-2005, 03:21 PM - Forum: நகைச்சுவை
- Replies (7)
|
 |
பால்கணக்கு, பலசரக்குக் கணக்கு, பசங்களுக்கு பல்லிமிட்டாய் வாங்கிய கணக்கு எழுதியே அலுத்துப் போன கோயிஞ்சாமி (வயசு-ஏழு கழுதை வயசு. ஒரு கழுதைக்கு ஏழரை வயசுன்னு வைச்சுக்கோங்களேன்.) தன் சுயசரிதையை எழுத ஆசைப்பட்டார்.
"எவன் எவனோ வாழ்க்கையில ஒண்ணுமே சாதிக்காம சுயசரிதையை மட்டும் எழுதி பவுசா வுட்டுருதான். நாமளும் இத்தன வருஷம் இந்தச் சனநாயக நாட்டுல இன்கம்டாக்ஸ் கட்டாம வாழ்ந்துட்டோம்! கழுத, நம்மளைப் பத்தி எவனும், என்னிக்கும் பிட் நியூஸ்கூட எதுலயும் எழுதப் போறதில்ல. நம்மளா எழுதிக்கிட்டாத்தான் உண்டு!' என திங்க் பண்ணியதே கோயிஞ்சாமியின் இந்த மிரட்டலான முடிவுக்குக் காரணம்! தன் சொந்த, வியாபார வேலைகளையெல்லாம் ஓரமாய் உக்கார வைத்துவிட்டு, கொடைக்கானல் கெஸ்ட்-ஹவுஸ்க்கு கிளம்பி விட்டார் கோயிஞ்சாமி சுயசரிதை எழுத! உடன் உதவியாளர் வேறு!
நான்கு நாட்கள் ஓடியது. புல்வெளி, பூங்கா, டீக்கடை, மலை உச்சி, மரநிழல் எனப் பல இடங்களில் உட்கார்ந்து ஒரு கவிஞர் ரேஞ்சில் யோசித்தார் கோயிஞ்சாமி.
ஒரு மொட்டைப் பாறையில் உட்கார்ந்திருக்கும் கோயிஞ்சாமி தன் உதவியாளரிடம்
கோயிஞ்சாமி: "எப்பா நான் சொல்லச் சொல்ல கரீக்டா எழுதணும். ச்பெல்லிங் மிச்டேக்லாம் வர்க்கூடாது. ஆங்...எழுதிக்கோ!' (தொண்டையைச் செருமியபடி) "என் இனிய தமிழ் மக்களே! இந்தப் பாசத்திற்குரிய கோயிஞ்சாமி இந்த முறை மண்ணின் மைந்தனாக உங்கள் முன் ஒய்யாரமாக நிற்கிறேன். என் கதை ஒரு கடலைக்காட்டு காவியம். பனங்காட்டு ஓவியம்!'
உதவி:அண்ணே, சூப்பர்னே பாரதிராஜா ரேஞ்சுல பேசறீங்கண்ணே!
கோயிஞ்சாமி:ஏய். ..குறுக்க, மறுக்க பேசாத...அப்புறம் எனக்கு சொல்ல வராது. எழுதிக்கோ...
"இது ஒரு கதை. செக்காரப்பட்டியை ஒற்றைக் கோவணத்தோடு சுற்றிச் சுற்றி வந்த அன்றைய கோயிஞ்சாமி என்ற சிறுவன், எப்படி இன்று சென்னையிலும் அதே கோவணத்தை மறக்காமல் மெயின்டெய்ன் பண்ணுகிறான் என்பதை விளங்க வைக்கும் கதை! இது கதையல்ல...நேசம்!
உதவி:ஃபுல்லா அரிக்குதுண்ணே! மேட்டருக்கு வாங்க!
கோயிஞ்சாமி:நான் பள்ளியில் படித்தபோது...
உதவி:லவ் பண்ணுனீங்களா?!
கோயிஞ்சாமி:டேய் ...டெஞ்சன் ஆக்காத! நான் பள்ளிக்கூடம் போக நினைத்தேன். வாத்தியாருக்கும், எங்க அய்யாவுக்கும் வாய்க்காத் தகராறு. அதனால எதிரி "ஓரொன் ஒண்ணு' சொல்லிக் கொடுக்குற பள்ளிக்கூடத்துல என் நிழல்கூட நுழையாதுன்னு வைராக்கியத்தோட நான் வாய்ப்பாடே படிக்கல!
உதவி:ஏதாவது கிளுகிளுப்பா காதல் கதை சொல்லுங்கண்ணே!
கோயிஞ்சாமி: டேய் ...நான் சினிமாக்கா கதை சொல்லுறேன்.
உதவி:அண்ணே, உங்க வாழ்க்கையில் ஏதாவது "தேவத' கிராஸ் ஆகியிருக்கும்ல. அதைச் சொல்லுங்கண்ணே!
கோயிஞ்சாமி:அது ஒரு முன்பனிக்காலம். மக்கள் காலைக் கடன்கள் முடிக்கும் நேரம்...
உதவி:பின்னீட்டிங் கண்ணே!
கோயிஞ்சாமி:நான் ஒரு பஸ்-ஸ்டாப்பில் நிற்கிறேன். எனக்கு திருமண வயது! கிளிப்பச்சை நிறத்தில் ஒரு முழுக்கால் சட்டை, பஞ்சு மிட்டாய்க் கலரில் ஒரு முழுக்கைச் சட்டை. அரைஞாண் கயிறையே பெல்ட்டாக அணிந்துகொண்டு ஒரு மன்மதன் போல் நின்று கொண்டிருந்தேன். அப்போது அந்தச் சம்பவம்...என் இதயத்தை விட்டு நீங்காத அந்தச் சம்பவம் நடந்தது...
உதவி:பரபரப்பா இருக்குதுண்ணே! மேல போங்க!
கோயிஞ்சாமி:தேவ தைபோல் வெள்ளை உடை அணிந்து வந்த அந்தப் பெண் என்னைக் கிராஸ் செய்தாள்!
உதவி:சுப்பர்ணே! அப்புறம் உங்க கண்ணும், அந்தப் பொண்ணு கண்ணும் மோதிச்சு.."தம்தன தம்தன தம்தன'ன்னு பின்னணில இளையராசா மியூசிக் கேட்டுச்சா!?'
கோயிஞ்சாமி:என் ன விஷயம்னு எனக்கு இன்னமும் புரியல.. எதைப் பார்த்து பயப்பட்டுச்சுன்னு தெரியல! ஆறேழு வயசு இருக்கும் அந்தப் பொண்ணுக்கு, என்னைப் பாத்து மிரண்டு "மம்மீ'ன்னு அலறி அடிச்சு ஓடிடுச்சு. அன்னைக்கிருந்து நான் என்னோட கிளிப்பச்சை கலர் பேன்ட்டுக்கு, பஞ்சு மிட்டாய்க் கலர் சட்டை போடுறதை வுட்டுடேன். மஞ்சச் சொக்காய்தான் போடுறேன்.
உதவி:ரொம்ப சென்டிமெண்டால இருக்கண்ணே! உங்க கலையுலக வாழ்க்கையைப் பத்திச் சொல்லுங்கண்ணே!
கோயிஞ்சாமி:அது ரொம்ப நீண்ட..சரித்திரம்! சொல்லுறேன். என்னோட அஞ்சு வயசுலேயே நாடக மேடை...
உதவி:ஏறி நடிக்க ஆரம்பிச்சுட்டீங்களா!
கோயிஞ்சாமி:இல்ல ..நாடக மேடையில எல்லாரும் நடிக்கறத ஒரு ஓரமா உக்காந்து முறுக்கு தின்னுக்கிட்டே நல்லா வேடிக்கை பாப்பேன். என்னோட 14 வயசுல முதன் முதலா சினிமா..
உதவி:சினிமாவுல நடிக்க வாய்ப்பு வந்துச்சா?
கோயிஞ்சாமி:முத ன் முதலா கொட்டாய்க்குப் போயி சினிமா பாத்தேன். குறிச்சுக்கோ "ஒüவையார்'தான் நான் பார்த்த முதல் படம். இப்படித்தான் என் கோலிவுட் வாழ்க்கை ரம்பமாச்சு.
உதவி:அற்புதமா இருக்குண்ணே! உங்களுக்கும் பல பெரிய மனுசங்களுக்கும் தொடர்பு இருந்திருக்குமே, அதைப் பத்திச் சொல்லுங்க!
கோயிஞ்சாமி:செக் காரப்பட்டியில ராமசாமின்னு ஒரு பெரிய மனுசன் இருந்தார். ஏழு அடி உயரம். அவ்ளோ பெரிய மனுசன். சோடாக் கடை வைச்சிருந்தாரு. அவர்கிட்ட நான் ஒரு நாள் பீடி பத்த வைக்க வத்திக்குச்சி கடன் வாங்கினேன். அவரும் தாராள மனசோட தந்தாரு. அப்புறம் ஒரு நாள் சந்தையில வெத்தலைக்கு சுண்ணாம்பு கேட்டாரு. நானும் பக்கத்துல இருந்த ஆயாகிட்ட கடன் வாங்கிக் கொடுத்தேன். அவ்வளவு நெருக்கமான, புனிதமான நட்பு எங்களுக்குள்ள இருந்துச்சு. அப்புறம் எம்.ஜி.ஆரும் நானும் ஒரே ரோட்டுல...
உதவி:ஒண்ணா தேர்தல் பிரச்சாரம் பண்ணினீங்களாண்ணே!
கோயிஞ்சாமி:அவரு தேர்தல் பிரச்சாரம் பண்ணிட்டுப் போன அதே ரோட்டுல நானும் ஒருவாரம் கழிச்சு டவுன்பஸ்ல போனேன். அப்புறம் ரஜினிகாந்தும் நானும் ஒரே மாசத்துல ஒரே தேதியிலதான் பொறந்தோம். அந்தப் பந்தத்துலதான் என்னோட ஒவ்வொரு பொறந்த நாளையும் தன்னோட பொறந்தநாள் மாதிரியே கொண்டாடுறாரு ரஜினி.
உதவி:அண்ணே! நீங்க லேசுப்பட்ட ஆளு இல்லண்ணே! ரொம்பப் பெரிய ஆளுண்ணே! உங்க அரசியல் வாழ்க்கையைப் பத்திச் சொல்லுங்கண்ணே!
கோயிஞ்சாமி:அது ரொம்ப விசேஷமானது. கண்டிப்பா என்னோட அரசியல் வாழ்க்கை நாட்டு மக்கள் எல்லாருக்கும் ஒரு பாடம்! ஒவ்வொரு தேர்தல் வர்றப்பவும் என் வீடு தேடி எல்லாக் கட்சிக்காரங்களும் பதறி அடிச்சி ஓடி வருவாங்க!
உதவி:ஆதரவு கேட்டாண்ணே?!
கோயிஞ்சாமி:இல்ல , எல்லாரும் வந்து என் முன்னாடி பவ்யமா நின்னு கெஞ்சுற தொனியில "அய்யா, தயவு செஞ்சு எனக்கு, எங்க கட்சிக்கு ஓட்டுப் போட்டுறாதீங்க! எதிர்க்கட்சிக்காரரு ரொம்ப நல்லவரு! அவங்களுக்கே உங்க ஓட்டைப் போடுங்க'ன்னு பணமெல்லாம் கொடுத்துவிட்டுப் போவாங்க!
உதவி:அப்படியாண் ணே! ஆச்சர்யமால்ல இருக்கு! ஏன் அப்படி?
கோயிஞ்சாமி:ஏன்னா , நான் யாருக்கு ஓட்டுப்போடுறனோ, அந்த ஆளு எவ்ளோ பெரிய்ய ஆளாயிருந்தாலும் சரி, டெபாசிட் காலியாயிரும்! அந்தப் பயம்தான்!
உதவி:செம மசாலாவா இருக்குண்ணே! வேற ஏதாவது சுவாரசியமா சொல்லுங்கண்ணே!
கோயிஞ்சாமி:நான் பொறந்ததுல இருந்து ரெட்டைக் கிளி பல்பொடியிலதான் ஒரு நாள் விட்டு ஒரு நாள் பல் தேய்க்கிறேன். குரங்கு மார்க் சீயக்காய்த் தூள் போட்டுத்தான் குளிக்கிறேன். தாத்தா சலவை சோப்பு வைச்சுத்தான் என் உள்ளாடைகளைத் துவைக்கிறேன். என் அழகின் ரகசியம் வாரம் ஒருக்கா வெளக்கெண்ணைய் தேய்ச்சுக் குளிக்கிறேன்.
உதவி:ரொம்ப அறிவுப்பூர்வமான தகவல்களா சொல்லுறீங்கண்ணே! வேற ஏதாவது...
கோயிஞ்சாமி:இது க்கு மேல வேற என்ன...சொல்ல ஒண்ணுமே இல்லீயே! இதுவரைக்கும் நான் சொன்னதை வைச்சு டெவலப் பண்ணி எழுதி ஒரு 150 பக்கத்துல கெட்டி அட்டை போட்டு, அட்டையில சிரிச்சாப்ல என் படத்தைப் போட்டு பொஸ்தகமா கொண்டு வந்துரலாமா!?
உதவி:ரொம்பத்தா ன் ஆசைப்படுறீங்கண்ணே! இதுவரைக்கும் நீங்க சொன்னதை ஒரு நாலு பக்க நோட்டீசா அடிச்சு வேணும்னா ஜனங்ககிட்ட விநியோகிக்கலாம். இல்ல, அப்படியே மொத்தமா மிக்சர் கடையில் போட்டு சீனி முட்டாய் வாங்கித் திங்கலாம்ணே! எப்படி நம்ம ஐடியா!
(கோயிஞ்சாமி கொலை வெறியோடு தன் உதவியாளரைத் துரத்த ஆரம்பிக்கிறார்.)
Thnaks dinamani....
|
|
|
| "குஷ்பு பேசியது தவறு"ஜெயலலிதா |
|
Posted by: Mathuran - 10-19-2005, 03:20 PM - Forum: சினிமா
- Replies (3)
|
 |
நேற்று இரவு, குஷ்புவுக்கு எதிராக போராடியவர்கள் நிம்மதியாக உறங்கியிருப்பார்கள். போஸ்டர் அடித்தும் போராட்டம் நடத்தியும் முழுமை பெறாமல் இருந்த விவகாரத்துக்கு நேற்று முதல்வர் ஜெயலலிதா முழுமையும் முற்றுப் புள்ளியும் வைத்தார்.
அத்தி பூத்தாற்போல் நிருபர்களை சந்திக்கும் முதல்வரிடம் நேற்று குஷ்பு விவகாரம் குறித்து கேட்கப்பட்டது. குஷ்புவுக்கு எதிராகவும் ஆதரவாகவும் அறிக்கை போர் நடந்து கொண்டிருக்கும்போதே ஜெயலலிதாவின் பெயரும் அடிபட்டது. காரணம், ஜெயா டி.வி. குஷ்புவுக்கு ஆதரவான செய்திகளை தொடர்ந்து வெளியிட்டது. அவருக்கு எதிராக வரிந்து கட்டியவர்கள் எதிர்கட்சியினர். குஷ்புவை திட்டினார் ஜெ. என்றும், கவலைப்படாதே என தேற்றினார் என்றும் இருவிதமான கற்பனை செய்திகளை மீடியாவில் உலவி வந்தன.
இந்நிலையில் நிருபர்கள் குஷ்பு விவகாரம் குறித்து கேட்டதற்கு, "தமிழ் கலாச்சாரத்திற்கும் தமிழ் பண்பாட்டுக்கும் முரணான வகையில் குஷ்பு பேசியிருக்கக்கூடாது" என ஷார்ட் மற்றும் ஷார்ப்பாக பதிலளித்தார் முதல்வர்.
இந்த இரண்டு வரியையே ஏதோ ஹைட்ரஜன் குண்டு மாதிரி குஷ்புவுக்கு எதிராக பப்ளிசிட்டி செய்து வருகிறது எதிர்தரப்பு.
ஆற்றோடு போகிறவனுக்கு அருகம்புல்லும், ஆலமரம்போல் தோன்றுமாம்!
http://tamil.cinesouth.com/masala/hotnews/...8102005-2.shtml
|
|
|
|