![]() |
|
"குஷ்பு பேசியது தவறு"ஜெயலலிதா - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: "குஷ்பு பேசியது தவறு"ஜெயலலிதா (/showthread.php?tid=2858) |
"குஷ்பு பேசியது தவறு"ஜெயலலிதா - Mathuran - 10-19-2005 நேற்று இரவு, குஷ்புவுக்கு எதிராக போராடியவர்கள் நிம்மதியாக உறங்கியிருப்பார்கள். போஸ்டர் அடித்தும் போராட்டம் நடத்தியும் முழுமை பெறாமல் இருந்த விவகாரத்துக்கு நேற்று முதல்வர் ஜெயலலிதா முழுமையும் முற்றுப் புள்ளியும் வைத்தார். அத்தி பூத்தாற்போல் நிருபர்களை சந்திக்கும் முதல்வரிடம் நேற்று குஷ்பு விவகாரம் குறித்து கேட்கப்பட்டது. குஷ்புவுக்கு எதிராகவும் ஆதரவாகவும் அறிக்கை போர் நடந்து கொண்டிருக்கும்போதே ஜெயலலிதாவின் பெயரும் அடிபட்டது. காரணம், ஜெயா டி.வி. குஷ்புவுக்கு ஆதரவான செய்திகளை தொடர்ந்து வெளியிட்டது. அவருக்கு எதிராக வரிந்து கட்டியவர்கள் எதிர்கட்சியினர். குஷ்புவை திட்டினார் ஜெ. என்றும், கவலைப்படாதே என தேற்றினார் என்றும் இருவிதமான கற்பனை செய்திகளை மீடியாவில் உலவி வந்தன. இந்நிலையில் நிருபர்கள் குஷ்பு விவகாரம் குறித்து கேட்டதற்கு, "தமிழ் கலாச்சாரத்திற்கும் தமிழ் பண்பாட்டுக்கும் முரணான வகையில் குஷ்பு பேசியிருக்கக்கூடாது" என ஷார்ட் மற்றும் ஷார்ப்பாக பதிலளித்தார் முதல்வர். இந்த இரண்டு வரியையே ஏதோ ஹைட்ரஜன் குண்டு மாதிரி குஷ்புவுக்கு எதிராக பப்ளிசிட்டி செய்து வருகிறது எதிர்தரப்பு. ஆற்றோடு போகிறவனுக்கு அருகம்புல்லும், ஆலமரம்போல் தோன்றுமாம்! http://tamil.cinesouth.com/masala/hotnews/...8102005-2.shtml - Mathuran - 10-19-2005 சுறுசுறுவென இயங்கிக்கொண்டிருக்கிறது தங்கர்பச்சான் அலுவலகம். 'சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி'யை தொடர்ந்து அடுத்தப்பட வேலையில் தங்கர் பம்பரமாக சுழலத்தொடங்கியதால்தான் இந்த பரபரப்பு. விநியோகஸ்தர்கள் பெரிதாக விருப்பம் காட்டாததால் தென்மாவட்டங்களில் அப்பாசாமியை சொந்தமாக வெளியிட்டார் தங்கர்பச்சான். அப்பாசாமி என்ற சோம்பேறியையும் அவனது அப்பாவி மனைவியையும் பெண்களுக்கு பிடித்துப்போகவே, கல்லா நிரம்பி விட்டது தங்கர்பச்சானுக்கு! இந்த உற்சாகத்தில் அடுத்தப்படத்துக்கு தயாராகிவிட்டார். புதிய படத்திற்கு 'ழ' என்ற ஓரெழுத்து தலைப்பு உள்பட பலவற்றை பரிசீலித்து 'பள்ளிக்கூடம்' என்ற பெயரை பைனல் செய்திருக்கிறார்கள். தங்கரின் பள்ளிக்கூடத்தில் தங்கர்தான் வாத்தியார். வழக்கமான தங்கர்பச்சான் படம்போல இதுவும் கிராமமும் கிராமம் சார்ந்த வாழ்வையும் சித்தரிக்கும் கதை. 'சொல்ல மறந்த கைத' போல நாவலை தழுவியதா இல்லை 'சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி' மாதிரி ரீ-மேக் படமா? தங்கரின் அலுவலகத்தை தொடர்பு கொண்டோம். "இது முழுக்க முழுக்க தங்கர்பச்சானின் கதை" என்றார்கள் அவசரமாக. பள்ளிக்கூடத்தை தங்கர்பச்சானும் புதிய தயாரிப்பாளர் ஒருவரும் இணைந்து தங்கர் திரைக்களம் சார்பில் தயாரிக்கிறார்கள். (பி.கு<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> 'சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி'யின் ஒரிஜினல் மலையாளப் படத்தின் திரைக்கதையாசிரியரான நடிகர் ஸ்ரீனிவாசன் கிராம பள்ளிக்கூடங்களின் பிரச்சனைகள், ஆங்கில பள்ளிகளின் ஆதிக்கம் இவற்றை குறித்து 'இங்கிலீஷ் மீடியம்' என்ற படத்தை எடுத்துள்ளார். தங்கரின் புதிய படமான பள்ளிக்கூடத்தில் ஸ்ரீனிவாசனின் இங்கிலீஷ் மீடியத்தின் மணம் சிறிது அடிக்கவே செய்கிறதுhttp://tamil.cinesouth.com/masala/hotnews/...8102005-3.shtml - இவோன் - 10-19-2005 சாபஷ்! ஜெயலலிதாதான் உண்மையான 'தமிழிச்சி'. - Mathuran - 10-19-2005 மன்னிககவும். ஜெயலலிதா கன்னடத்தீ |