Yarl Forum
விழுதாகி வேருமாகி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=19)
+--- Thread: விழுதாகி வேருமாகி (/showthread.php?tid=2866)



விழுதாகி வேருமாகி - கரிகாலன் - 10-18-2005

நாற் சுவரெ உலகமென
நம்பி நின்ற பெண்களைப்
பார் உலகை எனப்
பார்ப்பிக்கச் செய்தவளே.

பாரம் சுமக்கவல்ல
படைத்து; பெண்களை
வீரத்தரசிகளாய்
வீதியுலா வருவதற்கேயென
உரக்கச் சொன்னவளே,
மாலதி,
நீயே வரலாற்றின் முதல்வரி.


'ஈழம்' தவிர்த்தெந்த
இன்பமும் யாம்
வேண்டாமென
களத்தில் வீழ்கையில்
கடைசியாய் நீ சொன்னாய்.
பூட்டுடைத்து விடுதலைக்காய்
புறப்பட்ட மகளே - நீ
காட்டிச் சென்ற தெவ்வழி
கடைசி வரை நாமும் அவ்வழி !

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதல் பெண் மாவீரரான லெப்.மாலதி அவர்களின் நினைவாய் (10.10.1987)


நன்றி செம்பருத்தி


- kpriyan - 10-30-2005

மிகவும் நன்றாகவுள்ளது...........நன்றி