![]() |
|
புரியாத உறவு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: புரியாத உறவு (/showthread.php?tid=2861) |
புரியாத உறவு - Vishnu - 10-18-2005 <b>ஒரு நாளில் கவிதை எழுதுவது எப்படி என்பதை பார்த்து இந்த கழுதை எழுதிய கற்பூரம்.. சீ சீ கவிதை இது... பிழைகள் இருந்தால் பொறுப்பிர்களாக..........</b> <img src='http://img115.imageshack.us/img115/8047/naamlooswarekleuren015hn.jpg' border='0' alt='user posted image'> <b> புரியாத உறவு அன்பு செய்வதிலும் ஆறுதல் கூறுவதிலும்....... ஏன் அதிகார பேச்சிலும் அன்னை போலிருந்தாள். கிண்டல் பண்ணுவதிலும்... பிறரை கேலி, கொமெண்ட் அடிப்பதிலும்... உதவி செய்வதிலும்........ அவ்வப்போது உபத்திரம் தரும் போதிலும்... உண்மையான நண்பனுக்கு ஈடாக இருந்தாள். தனது பாரங்களை, சோகங்களை தவிப்புகளை, தாகங்களை தடையின்றி சொன்னபோதும்... ஆர்வங்களை, கனவுகளை அவளது ஆசைகளை, இன்பங்களை கூறி அறுத்த போதும்........ என்னை அவள் ஆருயிர் தோழி போல நினைத்திருந்தாள். தோளில் சாய்ந்து கதைபேசி தோழமையை வளர்த்தபோதும்... கடற்கரையில் கைகோர்த்து கனிவாகா கதைகள் கதைத்த போதும்... காதலியை மிஞ்சி இருந்தாள். ஆனால் சந்தித்துகொள்ளும் போதும் பிரியும் போதும்... மடலின் ஆரம்பத்திலும் முடிவிலும் நண்பனே என்று அழைத்தாள் நமது உறவை வரையறுத்துக்கொள்ளவதற்காக எனது நண்பி</b> - Rasikai - 10-18-2005 அடடா அப்படீங்களா? ம்ம் இங்க புரிந்த உறவோடையே காலம் தள்ள முடியலை இதுக்குள்ள புரியாத உறவா? உங்கள் கன்னி முயற்சிக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்க:ள் நீங்களும் கவிஞர் ஆகாலாம். நன்றி - இளைஞன் - 10-18-2005 Quote:ஆனால் உறவை வளப்படுத்திக்கொள்வதற்கு* நட்பு உன்னதமானது - தோழமையோடு தோள் சாய்வதற்கும் - சுதந்திரத்தோடு மடி சாய்வதற்கும் - கைகோர்த்து கதைபேசி நடப்பதற்கும் - தோழி ஒன்று கிடைத்தால் - நட்பு உன்னதமானது. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->* நட்பு உறவை வளப்படுத்துவதற்கு என்று தோழி ஒருவர் எனக்கு சொன்னதை - உங்களுக்கு எழுதினேன். - kuruvikal - 10-18-2005 கெட்டதுக்குள்ளும் நல்லதைத் தேடுபவனே சிந்தனையாளன் பகுத்தறிவாளன்..! நல்லதொரு தலைப்பு தவறாகப் பயன்படுத்தப்பட்ட போதும் அது உங்களுக்கு ஒரு ஊன்று கோலானதும் அதில் நீங்கள் எழுந்திருக்க முயன்றிருப்பதும் உங்க துணிவைக் காட்டுகிறது...! துணிவு துணை இருக்கும் வரை வெற்றிகள் உங்கள் வசமாகும்.. பெரும் கவிப் பயணத்தில்... கன்னிக் கவிதை அதன் ஆரம்ப புள்ளியாகட்டும்...! எழுத எழுதத்தான் மொழியும் கவிதையும் மெருகேறும்..! விமர்சகர்கள் இருவர்...ஒருவர் விசமத்தனமானவர்கள்...மற்றவர்கள் விபரமானவர்கள்..! அவர்களை கண்டவறிதும் எடுக்க வேண்டியதை எடுத்து எச்சங்களை வீச வேண்டியதும் உங்கள் பொறுப்பு...! :wink:
- Maruthankerny - 10-18-2005 ஆற்றம் கரையோரம் அருகருகாக அமர்ந்து நள்ளிரா வரையில்...... கதை பேசிய நம்மை நண்பர்களாகவே பார்க்கும் பாக்கியம் எத்தனை கண்களுக்கு வாய்த்திருக்கும்? - kuruvikal - 10-18-2005 Maruthankerny Wrote:ஆற்றம் கரையோரம் விஷ்ணுவின் கவிப் பொருள்... பழசுதான்... கவிதை புதிசு..! நண்பர்களை நண்பர்களாகப் பார்ப்பவர்கள் என்றும் இருக்கிறார்கள் தான்.. எங்கும்..! அவர்கள் நண்பர்களாகவே இருந்துவிட்டால்...! நட்பு என்று சொல்லி... நாடகம் ஆடுதல் தான்...தவறானது...! அதுதான் மற்றவர் கண்களையும் கருணை இழக்கச் செய்கிறது...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Nitharsan - 10-19-2005 கன்னிக்கவி படைத்த விஸ்னுவுக்கு வாழ்த்துக்கள்....தொடர்ந்து எழுதுங்கள்... - inthirajith - 10-19-2005 நட்பு என்று கடைசியில் நாமம் தான் போடுவார்கள் என்ன இறுதியில் ஒரு ஆண்கவிதை எழுதி மனதை தேற்றவேண்டியது தான் அவர்கள் தங்களுக்கான பாதுகாப்பை நட்புமட்டும் என்றால் இப்படி பழகி இருக்ககூடாது புதிதாய் பிறந்த கவியே தொடருங்கள் வாழ்த்துக்கள் - RaMa - 10-19-2005 விஷ்ணு கவிதை எழுத தொடங்கி விட்டீர்களா? வாழ்த்து - வெண்ணிலா - 10-19-2005 விஸ்ணு கவிதை அழகு. வாழ்த்துக்கள் - Vishnu - 10-19-2005 வாழ்த்துக்கள் கூறிய நண்பர்களுக்கு நன்றிகள்.. :roll: :roll: - அனிதா - 10-19-2005 ஆகா..கவிதை நல்லாயிருக்கு விஸ்ணு ...வாழ்த்துக்கள்..தொடர்ந்து எழுதுங்கள்... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- aathipan - 10-19-2005 காதல் வந்தால் கவிதை வரும் கவலை வராமல் இருக்க ஆண்டவன் அருள்புரியட்டும். - KULAKADDAN - 10-19-2005 விஷ்ணு தொடருங்க, வாழ்த்துக்கள். - ப்ரியசகி - 10-19-2005 Quote:தனது பாரங்களை, சோகங்களை விஷ்ணு அண்ணா..கவிதை அருமை....தொடர்ந்து கொழுத்துங்க கற்பூரத்தை சீ சீ...கவிதையை :wink: Re: புரியாத உறவு - Mathan - 10-19-2005 விஷ்ணு, நல்லா எழுதியிருக்கிறீங்க. இனிமேலும் தயங்காமல் தொடர்ந்து எழுதுங்கள். அடுத்த படைப்புக்களையும் உங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றேன். Vishnu Wrote:ஆனால் கவிதையில் வரும் நண்பிக்கு உங்களை ஆருயிர் தோழனாக ஏற்று கொண்டிருக்கின்றார், அவர் மனதில் இதுவரை காதல் உணர்வு ஏதும் இல்லாமையால் வீண் எதிர்பார்புக்கள் நட்பை கெடுத்துவிடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக நண்பனே என்று வரையறுக்கிறார் போலும். அது நல்லது தானே, யார் கண்டது அந்த உறவு எதிர்காலத்தில் காதலாக பரிணமிக்கலாம் அல்லது அப்படியே நட்பாக தொடரலாம். |