| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 349 online users. » 0 Member(s) | 347 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,319
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,233
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,297
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,642
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,074
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,466
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,500
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,039
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,239
|
|
|
| கிருஷ்ணன் படங்கள் |
|
Posted by: Rasikai - 11-12-2005, 03:53 PM - Forum: பொழுதுபோக்கு
- Replies (9)
|
 |
<img src='http://img262.imageshack.us/img262/915/krishna3xp.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img262.imageshack.us/img262/6268/krishna18uj.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img262.imageshack.us/img262/351/krishna24hj.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img262.imageshack.us/img262/1285/krishna38wv.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img262.imageshack.us/img262/5460/krishna53gg.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img262.imageshack.us/img262/7341/krishna79tn.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img262.imageshack.us/img262/8766/mail0dg.jpg' border='0' alt='user posted image'>
|
|
|
| சூழ்ச்சிகளுக்கு பலியாகும் அநுராவின் பரிதாப நிலை.. |
|
Posted by: thiru - 11-12-2005, 03:44 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
<b>சூழ்ச்சிகளுக்கு பலியாகும் அநுராவின் பரிதாப நிலை.. </b>
<b>-உப்புள் ஜோசப் பர்னாந்து (லங்காதீப)-
-தமிழில் வடிவேல்-</b>
1959 ஆம் ஆண்டு சிறிலங்கா சுதந்திரக்கட்சியைச் சேர்ந்த சிலர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்க அரசியலை கைவிட வேண்டும் என கோஷமெழுப்பினர். இவர்கள் வேறு யாருமல்ல பண்டார நாயக்கவின் பணத்தினால் 1956 ஆம் ஆண்டு தேர்தலுக்கு கட்டுப்பணம் செலுத்தி போட்டியிட்டவர்களும் அவரது பணத்தினாலேயே தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டி கூட்டம் நடத்தி பிரச்சாரம் செய்து பாராளுமன்றுக்குத் தெரிவானவர்களுமவர்.
அதே போன்றே இப்போதும் சனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற அநுராபண்டார நாயக்கவின் உதவி தேவையில்லை என்றும் அவருடன் ஒப்பந்தம் செய்யத் தேவையில்லை எனக்கூறும் கட்சி ஆதரவாளர்களும் உறுப்பினர்களும் கட்சிக்குள் இருக்கின்றனர்.
எனவே இதனை தகப்பனுக்கு செய்தது போன்ற துரோகம் என்று நினைக்க முடியுமா? அதனை இப்போது கூறமுடியாது. ஆனால் அநுராவை அரசியலுக்கு மட்டுமன்றி றோஸ்மீட் இல்லத்திற்கு அழைத்து வந்த அமைச்சர்களிடமும் உறுப்பினர்களிடமும் பிரதமர் பதவியை அவர் கெஞ்சிக் கேட்கவேண்டிய அவசியம் கிடையாது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியை வளர்த்தெடுக்க பண்டாரநாயக்க, அநுராவுக்குரிய சொத்துகளை விற்று பணத்தை செலவு செய்தார். அவ்வாறு இல்லையெனில் பெரும் சொத்துக்கள் அநுராவை வந்தடைந்திருக்கும். தற்போது அவருக்குரியதாகவுள்ள ஹொரகொல்ல வளவு அவரது பாட்டனார் வழங்கியதாகும்.அநுராவுக்கு பண்டாரநாயக்க கொடுத்துவிட்டுச் சென்றது மக்கள் சேவை ஒன்றே. அதற்கு உதாரணமாக அவர் அனுராவின் நினைவுப் புத்தகத்தில் ''ஒரு மனிதனின் பிரதான கடமை இன்னுமொருவனுக்கு சேவை செய்வதே'' என்ற வாசகத்தை எழுதியமையாகும்.அதற்காக அவர் கொடுத்துவிட்டுச் சென்ற சொத்து ''சிறிலங்கா சுதந்திரக்கட்சி'' என்பதாகும். அதேபோல அநுராவும் கட்சியை தனது சொத்தாகவே பேணிவருகிறார்.அதற்காக தனது வாழ்க்கையையே அர்ப்பணம் செய்கிறார். எனினும் அதே கட்சி அவருக்கு துரோகி என்ற பட்டத்தை சூட்டுகிறது. அவர் கட்சிக்காக செய்யும் தியாகம் ஒரு காசுக்குக் கூட மதிக்கப்படுவதில்லை.
1980 ஆம் ஆண்டு சிறிமாவோவின் குடியுரிமை பறிக்கப்பட்ட பின்னர் அத்தனகல்ல தொகுதிக்கு போட்டியிட வேண்டிய அவருக்கு தொம்பே என்ற தேர்தல் தொகுதியே வழங்கப்பட்டது. அதேபோன்று 1988 ஆம் ஆண்டு கிடைக்கவேண்டிய சனாதிபதி வேட்பாளர் நியமனமும் மறுக்கப்பட்டது. எனினும் அவர் கட்சிக்காகப் பாடுபட்டார். 1977 முதல் 1989 வரை எதிர்க்கட்சியில் அதாவது சுதந்திரக்கட்சியில் விரல்விட்டு எண்ணக்கூடிய உறுப்பினர்களே இருந்தனர். அப்போதைய ஆளும் கட்சி ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் ஆட்சி செய்தது. பிரேமதாசா, காமினி திசாநாயக்க, லலித் அத்துலத்முதலி ரொனிடிமெல் போன்ற பிரபலமானவர்கள் மத்தியில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மௌனிகளாக செயற்படவேண்டியேற்பட்டது. எனினும் அநுரா பயமின்றி எதிர்க்கட்சி சார்பில் குரல் எழுப்பினார். அத்துடன் மேற்கூறப்பட்ட பிரபலங்களுக்கிடையே கருத்து மோதலை உருவாக்கி மீண்டும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் செல்வாக்கை உயர்த்தினார். அப்போதும் அவர் தனக்கு சனாதிபதிப் பதவியையோ பிரதமர் பதவியையோ எதிர்பார்க்காமல் கட்சியின் வெற்றிக்குப் பாடுபட்டார். சனாதிபதி வேட்பாளரும் தனது தாயாருமான சிறிமாவுக்கு வெற்றி வேண்டி ஜே.வி.பியுடன் சமரசம் செய்ய முயன்றார். அது தோல்வியுற்று ஐ.தே.கட்சியை ஜே.வி.பி ஊழலான கட்சி என வர்ணித்தது போன்று தமது கட்சியை விமர்சித்தபோதும் அவர் அஞ்சவில்லை. அத்துடன் வடக்கு கிழக்கிற்கு சென்று தமிழர்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக தனது உயிரையும் துச்சம் என நினைத்து விடுதலைப்புலிகளிடம் சென்று பேசினார்.
அப்போதும் அவர் பதவியை எதிர் பார்க்கவில்லை. 1988 ஆம் ஆண்டு நடை பெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டம் ஒன்றில் ஆதரவாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து அவரை எதிர்கால பிரதமர் எனக் கோஷமிட்டபோதும் அவர் சுதந்திரக்கட்சி தனது குடும்பத்துக்கு மட்டும் சொந்தமல்ல. வேறு சிரேஷ்ட உறுப்பினர்களும் பிரதமராக வரலாம் என்று கூறினார.
எனினும் கட்சி தோல்வியுற்றது. அவருக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவிகூடக் கிடைக்கவில்லை. அதன்பின்னர் சிறிமாவோவின் உடல் நலக்குறைவாலும் கட்சி தோல்வியைச் சந்தித்ததாலும் கட்சித் தலைமையை பொறுப் பெடுக்குமாறு சிலர் தெரிவித்தபோது சிறிமாவோ இருக்கும் வரை தான் தலைமைப் பொறுப்பை ஏற்க முடியாது எனத் தெரிவித்தார். ஆனால் அடுத்துவரும் பொதுத் தேர்தலிலாவது வெற்றிபெற வேண்டுமெனக் கருதி கட்சியை மறுசீரமைக்குமாறு கோரினார். எனினும் சிலர் அதை ஏற்க மறுத்தனர். அத்துடன் சிறிமாவோவுக்கு எதிராக செயற்படுவதாகவும் கூறினர். அதன்மூலம் அநுராவை மௌனமாக்கி சந்திரிகாவை தலைமையேற்குமாறும் கூறினர். அப்போதும் அநுரா கட்சிக்கு எதிராக செயற்படவில்லை. இதனை வாய்ப்பாகக் கருதிய பிரேமதாசா அநுராவுக்கு பிரதமர் பதவி வழங்குவதாகவும் தனது கட்சியில் இணையுமாறும் அழைத்தார். எனினும் இதற்கும் அநுரா மயங்கிவிடவில்லை.
இவ்வளவு செய்தும் கட்சி அவரை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. 1994 ஆம் ஆண்டு அவர் சனாதிபதித் தேர்தலில் போட்டியிட விருந்த வேளை கட்சியினர் சிறிமாவோவுக்கும் தெரியாமல் சந்திரிகாவை சனாதிபதி வேட்பாளராக நியமித்தனர். இதனை அநுரா ஆட்சே பிப்பார் என்று அஞ்சிய கட்சியினர் சிறிமா வோவைக் கொண்டே அவரது கட்சி அங்கத்துவத்தை நீக்கிவிட்டனர்.
இதனால் செய்வதறியாத நிலையிலிருந்த அனுரா ஐ.தே.கட்சியில் இணைந்தார் என்று கூறுவதைவிட சுதந்திரக்கட்சியே இணைய வைத்தது என்று கூறலாம். அதன்பின்னர் 1994 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐ.தே.கட்சியின் பட்டியல் எம்.பியாக பாராளுமன்றுக்கு தெரிவானார். அப்போதும் சபாநாயகராக வர தமக்கு வாக்களிக்குமாறு சுதந்திரக்கட்சியை அநுரா கேட்டபோது கட்சி மறுத்தது.
2000 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஐ.தே.கட்சி சார்பில் பாராளுமன்றத்துக்கு தெரிவாகிய அநுராவை சபாநாயகராக நியமிக்குமாறு சுதந்திரக்கட்சி கோரியதற்கு காரணம் அதற்கு பாராளுமன்றில் பெரும்பான்மை பலம் இல்லாதிருந்தமையாகும். ஆயினும் ஐ.தே.கட்சியின் ஆதரவில் அநுரா சபாநாயகராக பதவியேற்றார். அதனைத் தொடர்ந்து 2001 ஆம் ஆண்டு ஐ.தே.கட்சி அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை சுதந்திரக்கட்சி கொண்டுவந்து அதனை விவாதத்துக்கு எடுப்பதா இல்லையா என்று சபாநாயகரான அநுராவிடம் கேட்டபோதுஇ அவர் சுதந்திரக்கட்சிக்கு சார்பாக அதாவது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை சபையில் விவாதிக்க அனுமதியளித்தார். இதன்விளைவு அநுரா ஐ.தே.கட்சியிலிருந்து நீங்கினார். 2001ஆம் ஆண்டு தேர்தலில் சுதந்திரக்கட்சி சார்பில் போட்டியிட்ட அநுரா கட்சி தோல்வியைச் சந்தித்ததால் எதிர்க்கட்சித் தலைவராக வரும் சந்தர்ப்பம் இருந்தது. எனினும் அது மகிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டது. அதனையும் அநுரா பொறுத்துக் கொண்டார். ஆயினும் அவர் இரவுபகலாக ஐ.தே.கட்சியை தோல்வி காணச் செய்யவே இப்போதும் பாடுபடுகிறார். அவர் ஜே.வி.பி யுடன் கூட்டணி அமைக்க முழுக்காரண கர்த்தாவாக இருந்தார். எனினும் 2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஆட்சிக்கு வந்த அக்கட்சி அநுராவை மறந்துவிட்டு மகிந்தவை பிரதமராக்கியது.
அதிலும் பொறுமையை கடைபிடித்த அநுரா இறுதியாக சந்திரிகா அரசியலமைப்பை மாற்ற முடியாதுவிட்டால் தனக்கு சனாதிபதி வேட்பாளர் நியமனம் கிடைக்கும் என நினைத்தார். அதுவும் மகிந்தவுக்கு வழங்கப்பட்டுவிட்டது. அவருக்கு தற்போது பிரதமர் வேட்பாளர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. எனினும் அநுரா அதற்காக கவலைப்படாது தனக்கு அடுத்தபடியாக இருக்கும் தன்னை மீண்டும் சுதந்திரக் கட்சிக்குள் கொண்டுவந்து சேர்த்த மகிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொண்டு தற்போது தேர்தல் களத்தில் குதித்துள்ளார்.
இதேவேளை தற்போது கட்சியினர் மகிந்தவுக்கு ஆதரவாக ஜே.வி.பி யை இணைத்துக்கொண்டு அநுராவுக்கு கிடைத்துள்ள பிரதமர் வேட்பாளர் நியமனத்தை பறித்து ஜே.வி.பியினருக்கு வழங்கும் சூழ்ச்சிகளில் ஈடுபடுவதாகவும் தெரியவருகிறது. அதாவது மகிந்தவுக்கும் அநுராவுக்குமிடையில் மோதலை உருவாக்கி பிளவை ஏற்படுத்துவதே அந்த சூழ்ச்சியாகப்படுகிறது.
இந்த சூழ்ச்சிகளைப் புரிந்துகொண்டு கவலையடைந்த நிலையிலேயே அநுரா வெளிநாடு பயணமானார். எனினும் தனது கவலையை மாற்றிக்கொண்டு மீண்டும் நாடு திரும்பிய அநுராவுக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது மகிந்தவுக்கு ஆதரவாக அநுரா மேடைகளில் பேசுவதாயின் அநுரா மகிந்தவிடம் தான் பிரதமராக நியமனம் பெற்றதை உறுதிப்படுத்த வேண்டும் என கேட்டுள்ளார் என்ற வதந்தி பரவியமையாகும். இது மகிந்தவிடமிருந்து அநுராவைப் பிரிக்கும் ஒரு சதியாகும். அது உண்மையானால் அநுரா தேர்தல் பிரச்சாரங்களில் கலந்துகொள்ள மாட்டார். அவ்வாறு அவர் கலந்து கொள்ளாதுவிட்டால் இரண்டு விளைவுகள் கிடைக்கும். ஒன்று மகிந்த வென்றால் அநுராவுக்கு பிரதமர் வேட்பாளர் பதவி கிடைக்காமல் போகும். இரண்டாவது மகிந்த தோல்வியுற்றால் மகிந்தவையும் அநுராவையும் துரத்திவிட்டு ஜே.வி.பி எதிர்க்கட்சித் தலைமையைப் பெற்றுக் கொள்வதாகும்.
தற்போதைய சனாதிபதித் தேர்தலில் மகிந்த தோல்வியுற்று பொதுத் தேர்தல் நடைபெறுமாயின் அதில் சந்திரிகா போட்டியிடாவிட்டால் சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட இருப்பது அநுரா மட்டுமே. ஆனால் அவரையும் கட்சியினர் முடித்துவிட்டால் கட்சிக்கு தலைவர் ஒருவர் இல்லாமல்போய்விடும்.
சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் சிலரின் இந்த நடவடிக்கைகளை தோல்வியுறச் செய்ய அநுராவுக்கு திறமையிருக்கின்றதா என்பது இப்போது கூறமுடியாது. அவ்வாறு அதில் அநுரா வெற்றி பெறுவாரெனில் அன்று பண்டாரநாயக்கவுக்கு செய்தமாதிரி அவரது புதல்வருக்குச் செய்வது முடியாத ஒன்றாகும்.
<b>நன்றி:</b> ஈழநாதம் (17 -10 - 2005)
<b>கணனித் தட்டச்சு:</b> திருமகள் (ரஷ்யா)
|
|
|
| ஈழப் பெண்களின் இன விடுதலைப் போராட்டம்: வைகோ |
|
Posted by: வினித் - 11-12-2005, 03:09 PM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
ஈழப் பெண்களின் இன விடுதலைப் போராட்டம்: வைகோ
நவம்பர் 12, 2005
சென்னை:
பெண்களை மதிக்கும் இயக்கம் மதிமுக என்று அதன் பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
சென்னையில் நடந்த கட்சியின் விழாவில் மதிமுக மகளிர் அணி தொண்டர்களுக்கு பரிசுகளை வழங்கி அவர் பேசியதாவது:
தென்னாப்பிரிக்காவிலிருந்து காந்தி இந்தியா திரும்பி காங்கிரஸ் கட்சியில் அடியெடுத்து வைத்தபோது தொண்டர் படை அணிவகுப்பு நடைபெற்றது. சீருடை அணிந்து கேப்டனாக நேதாஜி வெள்ளைக் குதிரையில் அணிவகுத்து வந்தார்.
மகளிர் தொண்டர் படையை அமைத்தார். எல்லோரும் பாராட்டினார்கள். அந்த படையில் தமிழர்கள் அதிகம் இடம் பெற்றனர்.
[size=18]அதே போல இனம் விடுதலை பெற, தங்கள் மண்ணின் மானம் காக்க, கற்பை உயிரினும் மேலாக மதிக்கக் கூடிய ஈழப் பெண்கள்
பெரியார், அண்ணா ஆகியோர் பெண்ணுரிமைக்கு முக்கியத்துவம் தந்தனர். பெண்களை மதித்தனர். திமுக ஆட்சியில் சொத்துரிமை பெண்களுக்கு கிடைத்தது. பெண்ணுரிமை கிடைக்க பாடுபட்டது திராவிட இயக்கம்.
பெண்களுக்கு உரிய மரியாதையையும் பாதுகாப்பையும், மதிப்பையும் மதிமுக அளிக்கும் மகளிரை வணங்கி போற்றுகிற இயக்கம் மதிமுக என்று கூறினார்.
http://thatstamil.indiainfo.com/news/2005/...1/12/vaiko.html
|
|
|
| இன்னும் ஏமாறுகிறார்களா அல்லது ஏமாற்றுகிறார்களா...??! |
|
Posted by: kuruvikal - 11-12-2005, 10:04 AM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
<b>எம்பிஏ மாணவியை கற்பழித்த (வல்லுறவு) சட்டக் கல்லூரி மாணவர்</b>
எம்பிஏ மாணவியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த சட்டக் கல்லூரி மாணவர், அந்தப் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சேலம் அருகே உள்ள ததுபாய்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதேவி. சேலத்தில் எம்பிஏ முதலாமாண்டு படித்து வருகிறார். இவர் மேற்கு மண்டல ஐஜி சுப்பிரமணியத்தைச் சந்தித்து கண்ணீர் மல்க தனக்கு பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்தார். அதில் ஸ்ரீதேவி கூறியுள்ளதாவது:
நானும் திருச்சி சட்டக் கல்லூரியில் படிக்கும் இன்பராஜூம் காதலித்து வந்தோம். என்னைத் திருமணம் செய்வதாக உறுதியளித்து 2003ம் ஆண்டில் அவர் என்னை கற்பழித்துவிட்டார். ஆனால், அதன் பிறகு திருமணம் செய்ய மறுத்துவிட்டார்.
காரணம் கேட்டால் நாம் இருவரும் வேறு வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்று கூறிவிட்டார். நான் ஏமாற்றப்பட்டு கற்பழிக்கப்பட்டது குறித்து சேலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தந்தேன். எப்ஐஆர் மட்டும் போட்ட போலீசார் வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந் நிலையில் மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த பாலா, திருவண்ணாமலையைச் சேர்ந்த ரமேஷ், சேலத்தைச் சேர்ந்த திலகவதி என்ற லாட்ஜ் ஆகியோர் ஆகியோர் இன்பராஜுடன் சேர்ந்து கொண்டு என்னை மிரட்டுகின்றனர்.
இவர்களால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இவ்வாறு ஸ்ரீதேவி தனது மனுவில் கூறியுள்ளார்.
மனுவைப் பெற்றுக் கொண்ட ஐஜி சுப்பிரமணியம், சேலம் கமிஷ்னரை உடனடியாக அழைத்து ஸ்ரீதேவிக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க உத்தரவிட்டார்.
மேலும் ஸ்ரீதேவியை ஏமாற்றி தகாத முறையில் நடந்து கொண்ட சட்டக் கல்லூரி மாணவன் இன்பராஜ் மற்றும் அவனுக்குத் துணையாக ஸ்ரீதேவியை மிரட்டும் திலகவதி உள்ளிட்ட 3 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யவும் உத்தரவிட்டார்.
தகவல் - தற்ஸ்தமிழ்.கொம்
|
|
|
| கிளைமோர் குண்டு தாக்குதல்: |
|
Posted by: sri - 11-12-2005, 09:01 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
மட்டக்களப்பு மாவட்டம் வாகரை பிரதேசத்திலுள்ள கயூவத்தையில் இன்று சனிக்கிழமை அதிகாலை உழவு இயந்திரமொன்று கிளேமோர் குண்டில் சிக்கியதில் 2 முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். 4 பேர் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
கொல்லப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் ஓட்டமாவடி, வாழைச்சேனை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த முஸ்லிம் மர வியாபாரிகள் என்று அறியவருகின்றது.
குறிப்பிட்ட 4 பேரும் 2 உழவு இயந்திரங்களில் காட்டில் மரங்களை வெட்டிக் கொன்டு தமது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருக்கையில், அதில் வந்த ஒரு உழவு இயந்திரமே கிளைமோர் குண்டொன்றில் சிக்கியதாகக் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் இடம்பெற்ற பிரதேசமானது கயூவத்தை சிறிலங்கா இராணுவ முகாமிற்கும் கிரிமிச்சை குளத்திற்கும் இடைப்பட்ட இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசம் என்பது குறிப்பிடத்தக்கது.
-புதினம்-
|
|
|
| மாவீரர் நாள் |
|
Posted by: Rasikai - 11-12-2005, 08:09 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (13)
|
 |
<img src='http://img377.imageshack.us/img377/8097/heroesday10px9qa.jpg' border='0' alt='user posted image'>
<b>இரு கண்கள் சிலையாய் நிற்க...
இமைகள் இரண்டும் தீ பந்தம் போல் எரிய..
இதயத்தை மட்டும் அழவிட்டு எம் உயிர் காத்தவர் எண்ணி..
உடலுக்குள் எரிமலை வெடிக்கும் ஒரு நாள்!
நெடும் பனை என நேர் நடை கொண்டவனும்...
இரட்டை ஜடை முளைத்த பட்டாம் பூச்சி என பறந்து திரிந்தவளும்...
சுகங்களை எல்லாம் மூட்டை கட்டி விட்டு சுதந்திரத்துக்காய் எரிந்து போனார்களே..
அந்த பூந்தளிர்கள் பொசுங்கி போனதை எண்ணி...
எம் தேச வானம் நெருப்பு நிறத்தில் உடை கொள்ளும் நாள்!
இங்கொரு விடுதலைக்காக...
எங்கெல்லாமோ மறைந்து போனவர்களை..
நரம்பெங்கும் தீ மூட்டி...
நாமெல்லாம் தேடும் நாள்!
எத்தனை தரம் முரட்டு சிங்களங்கள் முகத்தில் மோதி.. அவன் முகம் பெயர்த்து... நீரும் சாய்ந்தீர் ..
நீங்கள் மூச்சடங்கிப் போன இடம் எங்கும்... முல்லை பூக்கள் உயிர் கொள்ளும்
என்னால் முடிந்ததை என் தாய்க்கு செய்து முடித்தேன் என்று சிரித்து கொண்டே உறக்கமா?
எங்கள் கண்ணீரால் உங்கள் கல்லறை கழுவுவோம்!
கோடி புண்ணியம் அதில் கொண்டோம்!
உங்களின் சுவாசத்தை எங்கள் தேசத்து மலர்கள் கடன் கேட்கும்!
உங்களின் துடி துடிப்பை எங்களின் தேச பறவைகள் யாசகம் வேண்டும்..
உங்களின் மன ஆழத்தை எம் தேச கடல் தன் இரு கை ஏந்தி இரந்து நிக்கும்!
உங்களுக்கு பிறப்பு மட்டுமே உண்டு..
இறப்பு என்பது இல்லவே இல்லை!
நெடுந்தூர விடுதலைப் பயணம் கொண்டீர்....
களைத்து விழுந்த போதெல்லாம்..
எங்கள் தேச காதலை தானே உணவாய் கொண்டீர்!
வாழ்வுக்குள் சாவு கொள்பவர் பலர்..
சாவுக்குள் வாழ்வு கொண்டவர் உம்மை போல சிலர்...
தியாகம் என்ற சொல்லை பூமி இனி உங்களின் பெயர் கொண்டு உச்சரித்தால்தான் என்ன?????
மீண்டும் வாருங்கள்..
அந்த மெய் சிலிர்க்கும் நாட்களுக்காய்...
கண்ணீரை கரம் கொண்டு துடைக்காமல்
காத்துக்கொண்டிருக்கிறோம்!!!!</b>
|
|
|
| புலிகளின் தாக்குதலுக்கு அஞ்சி ஓடிய சிறிலங்கா இராணுவம்! |
|
Posted by: thiru - 11-11-2005, 08:42 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (26)
|
 |
<b>விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு அஞ்சி ஓடிய சிறிலங்கா இராணுவம்! ஒப்புக்கொள்கிறார் சரத் முனசிங்க
இராணுவத்தின் முன்னாள் மூத்த அதிகாரியான ஜெனரல் ஒருவர், சிறிலங்கா பாதுகாப்புப் படைகள் 1990 களின் பிற்பகுதியில் விடுதலைப் புலிகளுக்கெதிராக மேற்கொண்ட பாரிய இராணுவநடவடிக்கையின்போது, புலிகள் மேற்கொண்ட எதிர்த்தாக்குதலுக்கு முகங்கொடுக்கமுடியாது தப்பி ஓடியதை ஒப்புக்கொண்டிருக்கிறார்.
சிறிலங்கா இராணுவ சேவையிலிருந்து இளைப்பாறி ஓய்விலிருக்கும் இந்த முன்னாள் இராணுவப் பேச்சாளர் தற்போது ஐ.தே.கட்சியின் முக்கியஸ்தர்களில் ஒருவராக உள்ளார்.
கொழும்பில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சரத் முனசிங்க, '1999 ஆம் ஆண்டு நவம்பர் முதலாந்திகதி தமது பெறுமதிமிக்க பொருட்கள் அனைத்தையும் போட்டுவிட்டு யுத்தமுனையிலிருந்து இராணுவத்தினர் ஓடிவந்தது எனக்கு நினைவில் நிற்கிறது" என்று குறிப்பிட்டார்.
'வெற்றி நிச்சயம்' ('Jayasikurui' operation) இராணுவநடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா இராணுவத்தினர், அதற்கெதிராக விடுதலைப்புலிகள் தொடங்கிய ஓயாத அலைகள் 3 நடவடிக்கையின் முதல் மூன்று தினங்களிற்கிடையிலேயே விடுதலைப் புலிகளது தாக்குதலுக்கு ஈடுகொடுக்கமுடியாது மாங்குளம், ஒட்டுசுட்டான் ஆகிய யுத்தகளங்களிலிருந்து பின்வாங்கி ஓடியது பற்றிக் கூறும்போதே அவர் மேற்படி சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.
ஏறத்தாள 45000 படைவீர்கள் இதுவரை சிறிலங்கா இராணுவத்தை விட்டுத் தப்பியோடியிருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
[b]நன்றி</b><b>:</b>பி.பி.சியின் சிங்கள சேவை
<b>தமிழில்:</b> திருமகள் (ரஷ்யா)
|
|
|
|