![]() |
|
புலிகளின் தாக்குதலுக்கு அஞ்சி ஓடிய சிறிலங்கா இராணுவம்! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: புலிகளின் தாக்குதலுக்கு அஞ்சி ஓடிய சிறிலங்கா இராணுவம்! (/showthread.php?tid=2503) Pages:
1
2
|
புலிகளின் தாக்குதலுக்கு அஞ்சி ஓடிய சிறிலங்கா இராணுவம்! - thiru - 11-11-2005 <b>விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு அஞ்சி ஓடிய சிறிலங்கா இராணுவம்! ஒப்புக்கொள்கிறார் சரத் முனசிங்க இராணுவத்தின் முன்னாள் மூத்த அதிகாரியான ஜெனரல் ஒருவர், சிறிலங்கா பாதுகாப்புப் படைகள் 1990 களின் பிற்பகுதியில் விடுதலைப் புலிகளுக்கெதிராக மேற்கொண்ட பாரிய இராணுவநடவடிக்கையின்போது, புலிகள் மேற்கொண்ட எதிர்த்தாக்குதலுக்கு முகங்கொடுக்கமுடியாது தப்பி ஓடியதை ஒப்புக்கொண்டிருக்கிறார். சிறிலங்கா இராணுவ சேவையிலிருந்து இளைப்பாறி ஓய்விலிருக்கும் இந்த முன்னாள் இராணுவப் பேச்சாளர் தற்போது ஐ.தே.கட்சியின் முக்கியஸ்தர்களில் ஒருவராக உள்ளார். கொழும்பில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சரத் முனசிங்க, '1999 ஆம் ஆண்டு நவம்பர் முதலாந்திகதி தமது பெறுமதிமிக்க பொருட்கள் அனைத்தையும் போட்டுவிட்டு யுத்தமுனையிலிருந்து இராணுவத்தினர் ஓடிவந்தது எனக்கு நினைவில் நிற்கிறது" என்று குறிப்பிட்டார். 'வெற்றி நிச்சயம்' ('Jayasikurui' operation) இராணுவநடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா இராணுவத்தினர், அதற்கெதிராக விடுதலைப்புலிகள் தொடங்கிய ஓயாத அலைகள் 3 நடவடிக்கையின் முதல் மூன்று தினங்களிற்கிடையிலேயே விடுதலைப் புலிகளது தாக்குதலுக்கு ஈடுகொடுக்கமுடியாது மாங்குளம், ஒட்டுசுட்டான் ஆகிய யுத்தகளங்களிலிருந்து பின்வாங்கி ஓடியது பற்றிக் கூறும்போதே அவர் மேற்படி சம்பவத்தை நினைவு கூர்ந்தார். ஏறத்தாள 45000 படைவீர்கள் இதுவரை சிறிலங்கா இராணுவத்தை விட்டுத் தப்பியோடியிருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். [b]நன்றி</b><b>:</b>பி.பி.சியின் சிங்கள சேவை <b>தமிழில்:</b> திருமகள் (ரஷ்யா) - kurukaalapoovan - 11-11-2005 அவர்கள் அஞ்சி ஓடவில்லை, தற்காலிகமாக தமது நிலைகளை பின்னேக்கி தந்திரோபாயரீதியில் நகர்த்தியிருந்தார்கள். அந்த சந்தர்ப்பந்தங்களை பயன் படுத்தி புலிகள் யுத்த நிறுத்தத்தை அறிவித்து அந்தப் பிரதேசங்களை தமதாக்கிக் கொண்டனர் இன்று யுத்த நிறுத்த விதிகள் என்ற பெயரில். பச்சை மீன் தின்று கோஷ்டி வேறை அதுக்கு ஜால்றா போடுகிறது. - தூயவன் - 11-12-2005 இராணுவத் தளபதியாக இருந்தவரே துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடியதை ஒப்புக் கொள்ளும் போது நீர் ஏன் இல்லை என்று ஜல்ரா போடுகினறீர்? - kuruvikal - 11-12-2005 தூயவன்.. இவர்களின் எல்லாக் கருத்துகளுமே இப்படித்தான் இருக்கிறது...! இவர்கள் சொல்லி புலிகளுக்கு நட்டமா..ஆமிக்கு இலாபமா...நத்திங்..! புலிகளுக்கு தமிழீழம் எப்படி இருக்கனும் எண்டு அரசியல் பொருளாதாரக் கொள்கை வகுப்பே நடக்குது இங்க...நீங்கள் வேற...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Thala - 11-12-2005 kurukaalapoovan Wrote:அவர்கள் அஞ்சி ஓடவில்லை, தற்காலிகமாக தமது நிலைகளை பின்னேக்கி தந்திரோபாயரீதியில் நகர்த்தியிருந்தார்கள். அந்த சந்தர்ப்பந்தங்களை பயன் படுத்தி புலிகள் யுத்த நிறுத்தத்தை அறிவித்து அந்தப் பிரதேசங்களை தமதாக்கிக் கொண்டனர் இன்று யுத்த நிறுத்த விதிகள் என்ற பெயரில். பச்சை மீன் தின்று கோஷ்டி வேறை அதுக்கு ஜால்றா போடுகிறது. அதானே..! இப்ப சண்டைதுடங்கினாலும் யாழ்ப்பாணத்தில இருக்கிற இராணுவம் எல்லாத்தையும் தந்திரோபாயமா விலக்கி..... அவை கொழும்பைப் பாதுகாக்க அனுபுறதை எப்பிடி பயந்து ஓடுறது எண்டு சொல்லுறது.... அது யுத்த தந்திரம்... ஏலுமெண்டா யாழ்ப்பாணத்தைப் பிடிச்சுட்டு கொழும்புக்கு வாங்கோ பாப்பம்...... (நாங்க தந்திரோபாயமா இந்தியாக்குப் போவமில்ல) - வியாசன் - 11-12-2005 பதவியிலை இருக்கிறபோது என்னமா பொய் சொன்னார்கள். சண்டையிலை கொல்லபட்ட இராணுவத்தினர்களை ஓடிவிட்டதாக கூறினார்கள். இறந்தவர்களின் உடல்களை கூட வாங்க மறுத்தார்கள். இப்ப எல்லாத்தையும் கொட்டித்தீர்க்கின்றார்கள். கொல்லப்பட்ட இராணுவத்தினர்கள் வறிய கிராமத்து இளைஞர்கள்தானே - வியாசன் - 11-12-2005 ஓயாத அலைகள் - 03-ன் போது இராணுவத்தினர் ஓட்டம் பிடித்தனர்: சரத் முனசிங்கா விடுதலைப் புலிகளால் ஓயாத அலைகள் - 03 இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போது தமது பெறுமதியான ஆயுதத் தளபாடங்களையெல்லாம் கைவிட்டு இராணுவத்தினர் ஓட்டம் பிடித்தனர் என சிறிலங்கா இராணுவத்தில் முதல்தர அதிகாரியாக இருந்த மேஜர் ஜெனரல் சரத் முனசிங்கா தெரிவித்துள்ளார். இதுபற்றி மேலும் தெரிவித்த மேஜர் ஜெனரல் சரத் முனசிங்காஇ நவம்பர் முதலாம் திகதி 1999 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இராணுவ நடவடிக்கையைத் தொடங்கிய போது நடைபெற்றவை தனக்கு ஞாபகமிருப்பதாகத் தெரிவித்திருப்பதோடுஇ ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையில் கைப்பற்றப்பட்ட பிரதேசகள் அனைத்தையும் கைவிட்டு இராணுவத்தினர் மூன்று நாட்களிற்குள் முழுமையாக ஓட்டம் பிடித்தனர் என்றும்இ இதன் போது தமது பெறுமதியான ஆயுதத்தளபாடங்களைக் கூட அப்படியே விட்டுவிட்டே ஓடினர் எனவும் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு போராட்ட காலத்தில் 45இ000 படையினர் படைகளை விட்டுத் தப்பியோடியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மே 13இ 1997-ல் ஆரம்பிக்கப்பட்ட ஜெயசிக்குறு நடவடிக்கை 18 மாதங்களிற்கு மேலாக தொடர்ந்து இடம்பெற்றது என்பதோடுஇ இதில் ஆக்கிரமிக்கப்பட்ட பல நூற்றுக்கணக்கான சதுரமைல் பிரதேசத்தில் பல பாரிய இராணுவத் தளங்கள் அமைக்கப்பட்டிருந்தன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அமைக்கப்பட்ட இராணுவத் தளங்கள்இ கட்டளை மையங்கள் உள்ளிட்ட அனைத்திலும் பாரிய ஆயுத தளபாடங்கள்இ நவீன தொலைதொடர்பு சாதனங்கள்இ ராடார்கள் மற்றும் யுத்த டாங்கிகள் உள்ளிட்ட வாகனங்களைக் கூட கைவிட்டு சண்டை தொடங்கியதும் இராணுவத்தினர் பின் வாங்கி ஓடினர் என்பதும்இ மேற்படி ஜெயசிக்குறு ஆயுத தளபாடக் கையிருப்பு மற்றும் ஆனையிறவுத் தளபாடக் கையிருப்பு என்பன சிறிலங்கா இராணுவத்தின் ஒட்டுமொத்த ஆயுத வலுவில் 40 விழுக்காடு தொகையைக் கொண்டிருந்தவை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இது குறித்து அன்றைய காலகட்டத்தில் ஒரு இராணுவ ஆய்வாளர் தெரிவிக்கையில்இ சிறிலங்கா அரசாங்கம் தான் இழந்ததைத் தெரிவிக்கவில்லை. விடுதலைப் புலிகள் தாங்கள் கைப்பற்றியதைத் தெரிவிக்கமாட்டார்கள். ஆனால் சிறிலங்கா அரசு இழந்த யுத்த டாங்கிகள்இ கவச வாகனங்கள் மற்றும் நீண்டதூர ஆட்டிலறிகள் உள்ளிட்ட கனரக ஆயுதங்கள் விடுதலைப் புலிகளின் மரபுப்படையணிப் பலத்தை இரட்டிப்பாக்கியிருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை என்றும் அவற்றை விடுதலைப் புலிகள் பாவிக்க ஆரம்பிப்பார்களானால்இ வடக்கு-கிழக்கில் இராணுவத்தின் இருப்பு கேள்விக் குறியாக்கிவிடும் எனத் தெரிவித்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. - Thala - 11-12-2005 வியாசன் Wrote:மே 13இ 1997-ல் ஆரம்பிக்கப்பட்ட ஜெயசிக்குறு நடவடிக்கை 18 மாதங்களிற்கு மேலாக தொடர்ந்து இடம்பெற்றது என்பதோடுஇ இதில் ஆக்கிரமிக்கப்பட்ட பல நூற்றுக்கணக்கான சதுரமைல் பிரதேசத்தில் பல பாரிய இராணுவத் தளங்கள் அமைக்கப்பட்டிருந்தன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. அது எல்லாம் பழய ஆயுதங்கள்.... அவயளே எறிங்சுபோட்டு புதுசு வாங்க இருந்தவை... அதான் தேவையில்லை எண்டு விட்டுட்டுப் போனவை..... . (விழுந்தாலும் மீசையில மண்படாதில்ல) - தூயவன் - 11-12-2005 Thala Wrote:அதானே..! தல.. கொழும்பில இல்லையென்று யார் சொன்னது? :wink: - ஈழமகன் - 11-12-2005 உத விடுங்கோ உவயள் காலம் காலமாக ஓடுறவை தானே........ அதை இப்ப சொல்லி எங்களை மகிழ்ச்சிகடலில முழ்கவைக்க...... - kurukaalapoovan - 11-12-2005 எங்களுக்கு பழய புராணம் கதைச்சு கதைச்சு பப்பாமரத்தில ஏற நல்ல விருப்பம். அதுக்கு தெரிஞ்சோ தெரியாமலே சில ஊடகங்களும் நல்லா ஊதி உதவீனம். நீர் ஏன் அதைக் கெடுக்க நிக்குறீர்? - தூயவன் - 11-12-2005 அப்ப நாங்கள் எங்களைப் பற்றி வசை பாடித்திரிவம். அப்ப பப்பாமரத்தில ஏறமாட்டம் தானே. என்ன....... மாற்றுக்கட்சி என்று சொல்லிக் கொண்டு திரிகின்ற துரோகக் கும்பல்களுக்கு வேலையில்லாமல் போய்விடும். அது தான் கவலை. - ஈழமகன் - 11-12-2005 துயவன் ஏன் அவர்களையும் தேசியத்தின் பின்னால் அணிதிரள வைக்க முடியாது........ சற்று சிந்தித்துப் பாருங்கள்.................. தற்போதைய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை.............................. போலவே அவர்களையும் ஒன்றினைக்க முடியும்.... - தூயவன் - 11-13-2005 ஈழமகன் Wrote:துயவன் ஏன் அவர்களையும் தேசியத்தின் பின்னால் அணிதிரள வைக்க முடியாது........ எவர் முடியாது என்றது. மாதமாதம் எலும்புத்துண்டுக்கு காசு போடமுடீயும் எண்டால் எங்கள் காலையும் சுற்றிவருவினம் - இவோன் - 11-13-2005 யுத்தத்தில இடங்கள விட்டிட்டு ஓடுறது சகஜம் தான். எண்டாலும் முன்னாள் இராணுவத் தளபதியைப் பாராட்ட வேணும். இப்பவாவது தப்பியோடினதை வெளிப்படையா ஒப்புக் கொண்டதுக்கு. ஏதோ "தந்திரோபாயமாகத்தான்" இடங்கள விட்டிட்டு வந்தனாங்கள் எண்டு சொல்லாதவரைக்கும் சரி. அந்தத் "தந்திரோபாயப் பின்வாங்கல்" என்பது புலிகளால் மட்டும்தான் முடியும். புலிகள் மட்டுமே தந்திரோபாயப் பின்வாங்கலைச் செய்ய முடியும். - Birundan - 11-13-2005 இவோன் Wrote:யுத்தத்தில இடங்கள விட்டிட்டு ஓடுறது சகஜம் தான். எண்டாலும் முன்னாள் இராணுவத் தளபதியைப் பாராட்ட வேணும். இப்பவாவது தப்பியோடினதை வெளிப்படையா ஒப்புக் கொண்டதுக்கு. ஏதோ "தந்திரோபாயமாகத்தான்" இடங்கள விட்டிட்டு வந்தனாங்கள் எண்டு சொல்லாதவரைக்கும் சரி. உதுவும் தந்திரோபாயம்தான் தமது உயிரை பாதுகாப்பதுக்கான தந்திரோபாயம், என்னவித்தியாசம் என்றால் புலிகள் விட்ட இடத்தை மீண்டும்பிடிப்பினம், உவயள் ஓட்டம்மட்டும்தான்பிடிப்பினம். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Thala - 11-13-2005 இவோன் Wrote:யுத்தத்தில இடங்கள விட்டிட்டு ஓடுறது சகஜம் தான். எண்டாலும் முன்னாள் இராணுவத் தளபதியைப் பாராட்ட வேணும். இப்பவாவது தப்பியோடினதை வெளிப்படையா ஒப்புக் கொண்டதுக்கு. ஏதோ "தந்திரோபாயமாகத்தான்" இடங்கள விட்டிட்டு வந்தனாங்கள் எண்டு சொல்லாதவரைக்கும் சரி. புலிகளை விடுங்கோ அவர்கள் தாயகத்தில தான் படையணிகளாய் இருக்கிறார்கள்.... பின்வாங்கினாலும் அங்கு வாறார்கள் குத்துறார்கள் குடைகிறார்கள் எண்ட ஓலங்கள் அடங்கவில்லை அப்ப அவர்கள் முழுதாய் பின்வாங்கினாதாகாது.. அங்குதான் இருக்கிரார்கள்... எந்த அரசாங்கத்தினதும் பின்புலம் இல்லாமல் அவர்கள் செய்யிறது தீரம்........ அதையெல்லாம் விட இந்திய ஒட்டுப்படையாய் இப்ப இலங்கை ஒட்டுப்படையாய் இருந்த மக்கள் பிரதிநிதிகள் ஓடிப்போனார்கள் பாருங்கோ......... அதுவும் இந்தியன் ஆமிபோகமுன்னம் பெட்டிகட்டினவர்களின்ர தீரம்தான் ஐயா வீரம்...... <b>அவர்கள்தான் மக்களுக்காக உயிரரைக் குடுக்கிரவை.... </b>...
- Birundan - 11-13-2005 Thala Wrote:தல இது இன்னமும் சூப்பர். ஓடின ஓட்டத்தில அசாமில எல்லோ போய் நிண்டவியள்.இவோன் Wrote:யுத்தத்தில இடங்கள விட்டிட்டு ஓடுறது சகஜம் தான். எண்டாலும் முன்னாள் இராணுவத் தளபதியைப் பாராட்ட வேணும். இப்பவாவது தப்பியோடினதை வெளிப்படையா ஒப்புக் கொண்டதுக்கு. ஏதோ "தந்திரோபாயமாகத்தான்" இடங்கள விட்டிட்டு வந்தனாங்கள் எண்டு சொல்லாதவரைக்கும் சரி. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- supramani - 11-13-2005 அப்ப ஒரு பகிடி தெரியுமா? வாய்ச்சவடால் வரதர் ஒடுவதற்கு முன் எல்லா பேப்பர்காரனுக்கும் எடுத்துஇ சிங்கள அரசு எம் கேரிக்கையை ஏற்றகாவிட்டால் சுதந்திர தமிழீழம் அமைவதைத் தடுக்கமுடியாது என்று சொல்லி விட்டு மூட்டை கட்டியவர் தான். இன்று வரை இல்லை. ஒருதர் கேட்டாரம் ஏன் இப்படி பிரகடனம் செய்துவிட்டு ஓடினியள் என்று. வரதர் சொன்னாரம். " எப்படியோ பிரபாகரன் தமிழீழத்தை பெற்றுவிடுவார். ஆனால் பிரகடனம் செய்தது. நான் எண்ட பெயர் இருக்கும் தானே என்று" - தூயவன் - 11-13-2005 இவோன் Wrote:யுத்தத்தில இடங்கள விட்டிட்டு ஓடுறது சகஜம் தான். எண்டாலும் முன்னாள் இராணுவத் தளபதியைப் பாராட்ட வேணும். இப்பவாவது தப்பியோடினதை வெளிப்படையா ஒப்புக் கொண்டதுக்கு. ஏதோ "தந்திரோபாயமாகத்தான்" இடங்கள விட்டிட்டு வந்தனாங்கள் எண்டு சொல்லாதவரைக்கும் சரி. தந்திரோபாயப் பின்வாங்கல் என்பது இயலுமானவரை(90 வீத) இழப்பின்றி பின் வாங்குதலை தான் சொல்லலாம். ஆனால் எல்லாத்தையும் கைவிட்டுவிட்டு ஒடுவதை தந்திரபாயப் பின்வாங்கல் என்று சொல்ல முடியாது தானே. |