Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மாவீரர் புகழ் பாடுவோம்
#1
காலத்தால் அழியாத மாவீர்களின் நினைவுகளை நினைவு கூறும் இம் மாதத்தில் அவர்களைப் போற்றி பாடப்பட்ட பாடல்களை நினைவு கூறுவோம்.

** மாவீர் யாரோ என்றார்....

** ஓ... வீரனே.. எங்கள் மண்ணில் உன் பெயர் எழுதிவைக்கப்படும்


உங்களிடம் ஏதும் பாடல்கள் இருப்பின் இணையுங்கள்.

உங்கள் சுப்பிரமணி
Reply
#2
பாடல்களை ஒலிவடிவில் கேட்க தந்தமைக்கு நன்றி. ஓ வீரனை பாடலை நீண்ட காலத்துக்கு பின்பு கேட்டேன்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#3
**மாவீர் புகழ்பாடுவோம்...............

**கல்லறையில் விளக்கேற்றிப்பணிகின்றோம்.........

**ஒ..மரணித்தவீரனே...

**நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்....

**விண்வரு மேகங்கள் பாடும்.......
Reply
#4
ம்ம்.... நல்லாயிருக்கு பழைய பாடல்கள் கிடைத்தால் களத்தில இணையுங்கோ
[size=14] ' '
Reply
#5
பாடல்களை ஒலிவடிவில் கேட்க தந்தமைக்கு நன்றி சுப்பிரமணி
<b> .. .. !!</b>
Reply
#6
மாவீரர் பண்களை இங்கே இணைத்தமைக்கு எமது நன்றிகள். நண்பர்கள் விரும்பி கேட்கும் பாடல்கள் இவை என்பதால் மீண்டும் ஒருமுறை உங்களுக்கு நன்றிகள்.
[size=18]<b> </b>
[size=18]<b> </b>

IRUVIZHI
Reply
#7
தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய
சந்தனப் பேழைகளே! - இங்கு
கூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா?
குழியினுள் வாழ்பவரே!
உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள்
உறவினர் வந்துள்ளோம் - அன்று
செங்களம் மீதிலே உங்களோடாடிய
தோழர்கள் வந்துள்ளோம்.

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை
இங்கே திறவுங்கள்.
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள்.

நள்ளிரா வேளையில் நெய்விளக்கேற்றியே
நாமும் வணங்குகின்றோம் - உங்கள்
கல்லறை மீதலெம் கைகளை வைத்தோரு
சத்தியம் செய்கின்றோம்
சாவரும் போதிலும் தணலிடை வேகிலும்
சந்ததி தூங்காது – எங்கள்
தாயகம் வரும் வரை தாவிடும் புலிகளின்
தாகங்கள் தீராது.

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை
இங்கே திறவுங்கள்.
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள்.

ஊயிர்விடும் வேளையில் உங்களின் வாயது
உரைத்தது தமிழீழம் - அதை
நிரை நிரையாகவே நின்றினி விரைவினில்
நிச்சயம் எடுத்தாள்வோம்
தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும்
தனியர(சு) என்றிடுவோம் - எந்த
நிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின்
நினைவுடன் வென்றிடுவோம்.

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை
இங்கே திறவுங்கள்.
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள்.
" "
Reply
#8
சிறி மிகவும் அருமையான செயல்,, நன்றி நன்றி நன்றி...Idea

இங்கே என்னொமொன்றையும் குறிப்பிடவேண்டும், இனையத்தளங்களில் தமிழீழப்பாடல்களை தரவேற்றம் செய்வதில் தவறில்லை, அதை பிறர் தரவிறக்கம் செய்ய முடியாதவாறு இனைத்தால் வேண்டும். Idea
[b]

,,,,.
Reply
#9
மாவீரத் பாடல்களை நீண்ட நாட்களுக்குப்பின் கேட்க இணைத்தவர்களுக்கு நன்றி..

<b>எனக்கு அந்த ஹரிஹரன் பாடிய...
மண்ணில் விளைந்த முத்துக்களே..மரணம் ஏதடா...</b>

அந்த பாடலை தந்து உதவுவீர்களா?:roll:
நன்றி
..
....
..!
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)