![]() |
|
மாவீரர் புகழ் பாடுவோம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: மாவீரர் புகழ் பாடுவோம் (/showthread.php?tid=2502) |
மாவீரர் புகழ் பாடுவோம் - supramani - 11-12-2005 காலத்தால் அழியாத மாவீர்களின் நினைவுகளை நினைவு கூறும் இம் மாதத்தில் அவர்களைப் போற்றி பாடப்பட்ட பாடல்களை நினைவு கூறுவோம். ** மாவீர் யாரோ என்றார்.... ** ஓ... வீரனே.. எங்கள் மண்ணில் உன் பெயர் எழுதிவைக்கப்படும் உங்களிடம் ஏதும் பாடல்கள் இருப்பின் இணையுங்கள். உங்கள் சுப்பிரமணி - Mathan - 11-12-2005 பாடல்களை ஒலிவடிவில் கேட்க தந்தமைக்கு நன்றி. ஓ வீரனை பாடலை நீண்ட காலத்துக்கு பின்பு கேட்டேன். Re: மாவீரர் புகழ் பாடுவோம் - supramani - 11-12-2005 **மாவீர் புகழ்பாடுவோம்............... **கல்லறையில் விளக்கேற்றிப்பணிகின்றோம்......... **ஒ..மரணித்தவீரனே... **நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்.... **விண்வரு மேகங்கள் பாடும்....... Re: மாவீரர் புகழ் பாடுவோம் - தூயவன் - 11-12-2005 ம்ம்.... நல்லாயிருக்கு பழைய பாடல்கள் கிடைத்தால் களத்தில இணையுங்கோ - Rasikai - 11-12-2005 பாடல்களை ஒலிவடிவில் கேட்க தந்தமைக்கு நன்றி சுப்பிரமணி - iruvizhi - 11-12-2005 மாவீரர் பண்களை இங்கே இணைத்தமைக்கு எமது நன்றிகள். நண்பர்கள் விரும்பி கேட்கும் பாடல்கள் இவை என்பதால் மீண்டும் ஒருமுறை உங்களுக்கு நன்றிகள். - sri - 11-27-2005 தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே! - இங்கு கூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா? குழியினுள் வாழ்பவரே! உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம் - அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம். எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள். ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள். நள்ளிரா வேளையில் நெய்விளக்கேற்றியே நாமும் வணங்குகின்றோம் - உங்கள் கல்லறை மீதலெம் கைகளை வைத்தோரு சத்தியம் செய்கின்றோம் சாவரும் போதிலும் தணலிடை வேகிலும் சந்ததி தூங்காது – எங்கள் தாயகம் வரும் வரை தாவிடும் புலிகளின் தாகங்கள் தீராது. எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள். ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள். ஊயிர்விடும் வேளையில் உங்களின் வாயது உரைத்தது தமிழீழம் - அதை நிரை நிரையாகவே நின்றினி விரைவினில் நிச்சயம் எடுத்தாள்வோம் தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும் தனியர(சு) என்றிடுவோம் - எந்த நிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின் நினைவுடன் வென்றிடுவோம். எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள். ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள். - selvanNL - 11-27-2005 சிறி மிகவும் அருமையான செயல்,, நன்றி நன்றி நன்றி... ![]() இங்கே என்னொமொன்றையும் குறிப்பிடவேண்டும், இனையத்தளங்களில் தமிழீழப்பாடல்களை தரவேற்றம் செய்வதில் தவறில்லை, அதை பிறர் தரவிறக்கம் செய்ய முடியாதவாறு இனைத்தால் வேண்டும்.
- ப்ரியசகி - 11-27-2005 மாவீரத் பாடல்களை நீண்ட நாட்களுக்குப்பின் கேட்க இணைத்தவர்களுக்கு நன்றி.. <b>எனக்கு அந்த ஹரிஹரன் பாடிய... மண்ணில் விளைந்த முத்துக்களே..மரணம் ஏதடா...</b> அந்த பாடலை தந்து உதவுவீர்களா?:roll: நன்றி |