| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 295 online users. » 0 Member(s) | 293 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,319
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,233
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,297
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,642
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,074
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,466
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,500
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,039
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,239
|
|
|
| படுகொலை செய்யப்பட்ட பணியாளர்களினது குழுந்தைகளுக்கு உதவுவோம்! |
|
Posted by: Nellaiyan - 11-13-2005, 09:25 AM - Forum: தமிழீழம்
- No Replies
|
 |
ஈழநாதம் மட்டக்களப்பு பதிப்பின் விநியோகஸ்தர்களான இவர்கள் இருவரும் சிறிலங்கா படையினரின் புலனாய்வுத் துறையினரால் பணி நேரத்தில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
கடந்த 26.06.2005 அன்று படுகொலை செய்யப்பட்ட நாட்டுப்பற்றாளர் அரசகுமார் மூன்று குழந்தைகளின் தந்தையாவார். அதேபோன்று 30.09.2005 அன்று படுகொலை செய்யப்பட்ட நாட்டுப்பற்றாளர் ஜோக்குமாரும் மூன்று குழந்தைகளின் தந்தையாவார்.
பத்து வயதுக்கும் குறைந்த இவர்களது குழந்தைகளின் கல்விக்காக, எதிர்காலத்துக்காக புலம் பெயர்ந்து வாழும் எமது உறவுகள் அநேகரின் வேண்டுதலின் பேரில் ஈழநாதம் நம்பிக்கை நிதியம் ஒன்றை ஆரம்பித்திருக்கின்றது.
இதற்கு பங்களிக்க விரும்புபவர்கள் எமது மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொண்டு விபரங்களைப் பெற்றுக் கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.
நன்றி
ஈழநாதம்.
http://www.battieezhanatham.com/news/10/request.html
|
|
|
| நரகமாய் நாகரீக உலகம்! |
|
Posted by: kuruvikal - 11-13-2005, 09:03 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (7)
|
 |
<img src='http://img376.imageshack.us/img376/8690/human8cf.jpg' border='0' alt='user posted image'>
<b>நரகமாய் போகிறது
நாகரீக உலகம்
மெல்ல மெல்ல
கொல்கிறது உயிரை!
மாயமாய் மறைகிறது
அன்பு, பண்பு
அரவணைப்புத்தரும்
பாசக்குடும்பம்!
செத்துப்போகிறது
சுகாதாரம்
நுழைந்து கொள்கிறது
சுகவீனம்!
சமஉரிமை சமத்துவம்
சரிக்கு சரி போட்டியாய்
அன்னையும் தந்தையும்
ஆறாவது விரலாய்
'சிகரட்டை' சேர்த்திட
சிந்தனையின்றி சமத்துவமாய்
மதுக்கிண்ணத்தையும் ஏந்திட
பிஞ்சான நானும்
பயிராக என் சகோதரங்களும்.
வெதும்பிப்போகிறோம்!
கணக்கின்றி வழக்கின்றி
புகையை இழுத்துக்கொள்கிறோம்!
கக்கியும் கொள்கிறோம்.
தினம் தினம்!
மது தந்த போதையது
பெற்றோரை கனவுலகத்திற்கு
அழைத்துச்செல்கிறது!
அநாதரவாய் நாங்கள்
அநாதைகளாய்
அரவணைப்பின்றி
அழுதிடவும் முடியவில்லை
அரைத்தூக்கம் கலைந்து விடும்
அடியும் தான் விழுந்துவிடும்!
ஆண்டுகள் தான் ஓடுது
ஆளாக நானும் ஆகிவிட்டேன்.
அடுத்ததாய் ஒரு தங்கை
அழகாய் வந்துவிட்டாள்.
அவளுடலில் ஒரே நோயாம்
ஆலோசனை சொன்னார் வைத்தியர்.
மதுவும் புகையும்.
பொற்றோர்கள் பாவனையால்
நலமின்றிப்போனது
ஏதும் அறியா
என் சின்னத்தங்கையும் தானாம்.
கக்கிறார் அப்பா
இருமுறா அம்மா
வைத்தியரும் சொல்லிவிட்டார்
காலம் முழுக்க
மாத்திரையும் கையுமாம்
இது தான் அவை விதியாம்!
இப்பவும் கெஞ்சிறேன்
இப்பவாவது விட்டிடுங்கோ
இனியாவது இன்பமாய் வாழலாம்!
யார் விடுவது
அங்கும் போட்டி
மெல்ல நான் விலகிக்கொள்கிறேன்
உடன்பிறப்புக்கள் உயிரையாவது காத்திட!</b>
படைப்பு - கயல்விழி
|
|
|
| உலகின் அதிஷ்டசாலிகளில் ஒருவர் பற்றி..! |
|
Posted by: kuruvikal - 11-13-2005, 08:25 AM - Forum: மருத்துவம்
- Replies (8)
|
 |
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41013000/jpg/_41013210_stimpson2_203.jpg' border='0' alt='user posted image'>
பிரித்தானியாவைச் சேர்ந்த Andrew Stimpson, 25 என்பவர் எயிட்ஸ் வைரஸான எச் ஐ வி தொற்றில் இருந்து மருத்துவச் சிகிச்சை இன்றி மீண்டிருப்பதாக பிரித்தானிய மருத்துவ வட்டாராங்களை மேற்கோள் காட்டி செய்திகள் தெரிவிக்கின்றன..!
இவருக்கு 2002 இல் மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையின் படி எச் ஐ வி இவரது உடலில் தொற்றி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது..! எனினும் மருத்துவ சிகிச்சைகள் இன்றி மன அழுத்தத்துடன் வாழ்ந்து வந்த இவர் தற்போது எச் ஐ வி தொற்றில் இருந்து விடுபட்டிருப்பதாக மருத்துவப் பரிசோதனைகள் கூறுகின்றன..! இது தொடர்பில் இவரிடம் மேலும் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன..!
இது இந்தோய் தொடர்பில் மேலும் விளக்கங்களுக்கு உதவலாம் என்று மருத்துவ ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்..!
மேலதிக தகவல்களுக்கு... http://kuruvikal.blogspot.com/2005/11/blog...og-post_13.html , படம் பிபிசி.கொம்
|
|
|
| என் மனைவியின் டைரிக் குறிப்புகள் |
|
Posted by: இவோன் - 11-13-2005, 08:06 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (6)
|
 |
"எனக்கு திருமணமான பின்பும்
என்னை மனதில் வைத்துக்
கொண்டிருக்கும் காதலனுக்காக...
கோடி முறை யோசித்து
நீ எழுதிய எனக்கான காதல் கடிதம்
பத்திரமாக இருக்கிறது
மடித்து வைத்த
என் கூரைச் சேலை மத்தியில்
முப்பது பவுன் கொடுத்து
விலைக்கு வந்த வீட்டில்
மூன்றாம் ஜாமத்தில்
வாங்கியவன் அணைக்கையில்
ஞாபகம் வரும் உன் முதல் ஸ்பரிசம்
தலைசீவி பொட்டு வைக்கையில்
நினைத்துக் கொள்கிறேன்
நேசித்த நீயும் நூறு வருடம்
வாழ வேண்டுமென்று..."
இப்படியாக நீள்கிறது
என் மனைவியின் டைரிக் குறிப்புகள்
ஆண்டவனிடம் வேண்டுகிறேன்
அடுத்த பிறவியிலாவது அவளது
காதலனாகவும் பிறக்க வேண்டுமென்று.
--மூலம்..http://gganesh.blogspot.com/2005/11/blog-post_11.html
|
|
|
| பிரியாணி செய்வது எப்படி |
|
Posted by: விது - 11-13-2005, 07:33 AM - Forum: சமையல்
- Replies (17)
|
 |
களஉறவுகளுக்கு வணக்கம் தயவுசெய்து யாராவது மிகச்சரியான முறையில் (முஸ்லீம்-இந்திய) பிரியாணி செய்வது எப்படி பற்றி தெரிந்தால்கூறுங்களோன் மட்டன் அல்லது சிக்கள்.
|
|
|
| யாழ் கள ஞாயிறு சமையல் I - பாண் ரோஸ்ட் |
|
Posted by: தூயா - 11-13-2005, 01:40 AM - Forum: சமையல்
- Replies (17)
|
 |
யாழ் கள ஞாயிறு சமையல்
இந்நிகழ்ச்சிக்கு அனுசரணை : 1) சி*5 சீயாக்காய் தூள்
2) சாஸ்த் சத்தான சாத்துக்குடி
3) முகம்ஸ் முகம் பார்க்கும் கண்ணாடி
தொகுத்து வழங்குபவர் தூயா பபா.
வணக்கம் நண்பர்களே,
வேலை/பள்ளி விட்டு வந்தால் வீட்டில் சமைத்த உணவு இல்லையா? பசி வயிற்றை கிள்ளுகிறதா? 5 நிமிடத்தில் ஏதாவது சமைத்து சாப்பிட்டால் நல்லம் என தோணுகிறதா. இதோ உங்களுக்கான தீர்வு "பாண் ரோஸ்ட்"
தேவையான பொருட்கள்:
பாண் துண்டுகள் - நீங்கள் எவ்வளவு பசியாய் இருக்கிறீர்கள் என்பதை பொருத்து
வெங்காயம் - நீளமாக வெட்டிய துண்டுகள்
மிளகு தூள் - தேவையான அளவு
நெய் (கொழுப்பில்லாத பட்டர் பாவிக்கலாம்)
செய்முறை:
1. தோசைக்கல் ---> மெதுவான சூட்டில் இருக்கும் அடுப்பில் வைக்கவும்.
2. பாண் - இரண்டு பக்கமும் நெ போடுங்கள்
3. வெங்காய துண்டுகளை ஒரு பாணின் மேல் அடுக்கு. அதுத்த துண்டால் மூடுங்கள்.
4. தோசைக் கல்லில் போடுங்கள்.
5. பொன்னிறமானதும் அடுத்த பக்கம் திருப்புங்கள்.
6. அடுப்பை மறக்காமல் அணைக்கவும்.
7. பாத்திரங்களை கழுவாமல் அம்மாவிடமோ/மனைவியிடமோ
நன்றாக திட்டு வாங்கவும். (அப்ப தான் உண்டது செமிக்கும்)
8. நீங்க மட்டும் சாப்பிடுங்கள். (யாருக்கும் கொடுத்து, அவர்கள் உஜிரை பறிக்க வேண்டாம்.)[/color]
முக்கியமான குறிப்பு - இச் செய்முறையால் வரும் பின் விளைவுகளுக்கு நானோ, அனுசரனை வழங்கியவர்களோ அல்லது அண்ணாச்சியோ பொறுப்பல்ல.
நன்றி
வணக்கம்
இது ஒரு தூயா மூவீஸ் தயாரிப்பு[/color]
|
|
|
| முத்தம் |
|
Posted by: Rasikai - 11-12-2005, 09:00 PM - Forum: கதைகள்/நாடகங்கள்
- Replies (1)
|
 |
<img src='http://img369.imageshack.us/img369/5954/kathai1243jl.jpg' border='0' alt='user posted image'>
"மம்மி, மைடியர் மம்மி...." என்று குதித்து கொண்டே வந்த வாணியின் கைகளில் கோவை டவுண்ஹாலில் பிரபலமான ஜவுளிக்கடையின் பாலீதீன் பை. பையிலிருந்து தான் எடுத்து வந்த புது சுடிதாரை எடுக்க... பிïட்டிபுல்" என்றாள் அம்மா.
"வாணி உன் கலருக்கு மேட்ச்சாக சுடிதார் இருக்கு ஆமா என்ன விலை" அம்மா ஜான்ஸி கேட்க, ஒன் தவுசன் பைவ் கண்ட்ரடுஸ் என வாணி சொல்ல "விலைக்கேற்ற சுடிதார். நீ இத போட்டு கிட்டா தேவதை மாதிரி ஜொலிப்பே" என அம்மா சொன்னார்.
இந்த சுடிதாரை போடலைனா நான் தேவதை இல்லையா? என வாணி அம்மாவிடம் கேட்க புதுசுடிதாரை நீ போட்டு கிட்டாலும் போடாவிட்டாலும் நீ தேவதைதான் என் அம்மா சொல்ல... ஐஸ் ரொம்ப ஒவர் மம்மி? என வாணி சொல்ல... ஐஸ்ம் இல்ல.... நைஸ்ம் இல்ல... என்ற அம்மா ஆமா ராணியை எங்கே? என்று கேட்டார்..
அவள் இன்னும் வரலையாமா? காந்திபுரம் கிராஸ் கட்ல புதுசா ஒரு ஜவுளி கடை திறந்திருக்காங்கல்ல அங்கே போயி எடுத்துக்கறேனுட்டு போயிட்டா என்றாள் வாணி "ஏம்மா வாணி அக்காவும் தங்கையும் ஒண்ணா போயி ஒரே கடையில புது துணி எடுத்துட்டு ஒண்ணாகவே வரலாமில்ல... நீ ஒரு திசையில் போயி துணி எடுத்துட்டு வந்திருக்கே... அவ ஒரு திசையில போயி துணி எடுக்க போயிருக்கா.. என்னம்மா இது? என சலித்துக் கொண்டாள் ஜான்ஸி
நீ போம்மா... அவதான் என்னை வாலண்டரியா கட் பண்ணி விட்டுட்டு... புது கடை தேடி போயிருக்கா... நா ஒண்ணும் அவள கட்பண்ணி விடல... என பொய்யாய் கோபிக்க... கோபத்திலும் நீ ரொம்ப அழகா இருக்கே என அம்மா ஜான்ஸி சொல்ல மீண்டும் ஐஸா... என்ற படி புதுடிரஸ்ஸோடு வீட்டிற்குள் சென்றாள் வாணி!
வாணியும்.... ராணியும் இரட்டை பிறவிகள். வாணி அக்கா ராணி தங்கை. விடிந்தால் இருவருக்கும் பிறந்த நாள். ஆண்வாரிசு இல்லை என்பதால் வாணிக்கும், ராணிக்கும் செல்லம் கொடுத்து வளர்த்து வந்தார்கள். ஒவ்வொரு வருட பிறந்த நாளும் அமர்க்களமாய் நடக்கும்.
புது துணி இல்லாமல் பிறந்த நாள் கொண்டாடியதே இல்லை. வாணியும், ராணியும் சிறு பிள்ளைகளாக இருக்கும் பொழுது புது துணிகளை அம்மாவே தேர்வு செய்வாள் இப்பொழுது இருவரும் மேஜராகி விட்டதால்... புது டிரஸ்ஸை அவர்களே தேர்வு செய்து கொள்கிறார்கள். நவ நாகரீக உலகம் இது.
ராணி... கையில் துணி பார்சலுடன் வந்தாள் அம்மா அக்கா வந்துட்டாளா? என கேட்க... ஆமா இப்பத்தான் வந்தாள் என சொன்ன அம்மா எங்கே நீ எடுத்துட்டு வந்திருக்கிற புது டிரஸ்ஸை காட்டு பார்க்கலாம் என்க.. இப்ப பார்க்க வேண்டாம். நாளை காலையில் நான் டிரஸ் பண்ணிட்டு வரும்போது பாருமா அப்பத்தான் ரொம்ப த்ரில்லிங்கா இருக்கும் என்றபடி உள்ளே சென்றாள் ராணி!
பொழுது விடிந்தது. தூங்கி கொண்டிருந்த மகள்கள் இருவரையும் எழுப்பி... கன்னத்தில் இதழ்பதித்து இச் ஒன்று கொடுத்து ஹேப்பி பர்த்டே சொன்னார்கள் பெற்றவர்கள். இருவரும் குளித்து முடித்தார்கள் வாணி தன் புது சுடிதாரை அணிந்தபடி வந்தாள். ராணி சென்ற பிறந்த நாளுக்காக எடுத்த பழைய சுடிதாருடன் வர ஏம்மா.. ராணி... கேக் ரெடியா இருக்கு... அக்கா புது சுடிதார் போட்டுட்டு வந்துட்டா நீயும் போயி-நீ எடுத்த உன் புது சுடிதாரை என அம்மா சொல்ல...
ராணி... தயங்க.... ஏம்மா ராணி.. புது சுடிதார் போடலையா? என கேட்க...
இல்லேம்மா என ராணி சொன்னாள். ஏம்மா என அம்மா திருப்பி கேட்க...
புது சுடிதார்தான் எடுக்கலையே என ராணி சொல்ல..
எடுக்கலையா? ஏம்மா நீ எடுக்கல்ல... நேற்று நீ கொண்டு வந்த பார்சல்?
அது வெறும் துணிபைமா? அப்போ பணம்?
அந்த பணத்தை தெரெசா அனாதை இல்லத்திற்கு கொடுத்திட்டேம்மா. எங்கள் பிறந்த நாளை முன்னிட்டு எனக்கு எடுக்க விருத்த புது டிரஸ் பணத்தில அங்க இருக்கிற அனாதை குழந்தைகள் வடை-பாயாசத்தோடு அறுசுவை உணவை இன்றைக்கு சாப்பிடும். ஏம்மா ஏற்கனவே பெட்டி நிறைய துணி மணிகள் எனக்கு இருக்கு.
நம்ம போல உள்ள வசதி உள்ளவங்க கருணை காட்டினால்... அதாவது பிறந்த நாள் திருமண நாள் முதியோர்களின் நினைவு நாள் என இந்த நாட்களில் ஒரு தொகையை கருணை இல்லங்களுக்கு கொடுத்தால்... அங்குள்ள அனாதைப் பிள்ளைகள் வயிறாற உண்பார்கள்தானே..? அதுவே பெரிய ஆசீர்வாதம் தானே ? என்ற ராணி.. தொடர்ந்து... நான் செய்தது தப்பாமா? என கேட்க....
இல்லேம்மா... என அம்மாவும், அப்பாவும் சொல்ல..
அதுமட்டுமில்லைமா... என் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் எடுக்கற புது டிரஸ் பணத்தை அனாதை இல்லத்திற்கே தந்திட முடிவு செய்திருக்கேன் என ராணி சொல்ல...
தன் செல்ல மகளின் கருணை உள்ளத்தை மெச்சி அவள் கன்னத்தில் இச் ஒன்றை தர.. இதமாய் இருந்தது ராணிக்கு.
தாதன்குளம் ஜுலியட் டேனியல்,
நன்றி மாலைமலர்
|
|
|
| வவுனியாவில் இராணுவத்தினரை சுட்டுவிட்டு ஆயுதங்கள் அபகரிப்பு |
|
Posted by: வியாசன் - 11-12-2005, 06:02 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
வவுனியாவில் இராணுவச் சிப்பாய் மீது துப்பாக்கிச் சூடு-ஆயுதங்கள் பறிமுதல்!!
வவுனியாவில் சிறிலங்கா இராணுவச் சிப்பாய் மீது அடையாளம் தெரியாத நபர்கள் இன்று சனிக்கிழமை 1.30 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள் வவுனியா நகரிலிருந்து 6 கிலோ மீற்றர் வடமேற்கில் உள்ள கணேசபுரம் சோதனைச் சாவடியில் இந்தத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தாக்குதலுக்கான இராணுவ சிப்பாயிடமிருந்து ஏ.கே. 47 ரக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களையும் அடையாளம் தெரியாத நபர்கள் பறித்துச் சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக வவுனியா சிறிலங்கா காவல்துறை பொறுப்பதிகாரி ஏ.எம்.சி.அபயசிங்க பண்டார மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.
யாழ்ப்பாணத்திலை சங்கிலியன்படை செய்கின்றது. வவுனியாவிலை வன்னியன்படையா செய்கின்றது. ஆகமொத்தம் இராணுவத்தினரின் (சாகிற)ஸ்கோர் கூடப்போகிறது என்றுமட்டும் புரிகிறது.
சுட்டது புதினத்திலிருந்து.
|
|
|
| Rory Peck நிதியம் |
|
Posted by: kurukaalapoovan - 11-12-2005, 04:13 PM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
யுத்தக்கள முனை படப்படிப்பாளர் Rory Peck ஜப்பசி 03 1993 இல் மொஸ்கோவில் யெல்சினுக்கு எதிராக நடந்த புரட்சியை படம் பிடிக்கச் சென்றிருந்த பொழுது குண்டு பட்டு மரணமானார். இவருடைய ஞாபகார்த்தமாக ஆரம்பிக்கப்பட்டது தான் Rory Peck Trust (http://rorypecktrust.org/). ஆண்டு தோறும் ஆபத்தான சர்ச்சைக்குரிய இடங்களில் பணிபுரியும் சுயாதீன ஊடகவியலாளர்களுக்கு கொளரவிப்பு வழங்கப்படுகிறது. மேலும் பணியில் இறந்தவர்களின் குடும்பங்களிற்கு, அங்கவீனமுற்றவர்களிற்கும் உதவிகள் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒருவருக்கும் கருணா குழுவினால் எச்சரிக்கப்பட்டதை அடுத்து பாதுகாப்பாக இலங்கையை விட்டு வெளியேற இவர்கள் உதவியுள்ளார்கள்.
1990 ஆண்டிலிருந்து 1470 இக்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் பணியில் இறந்துள்ளார்கள்.
|
|
|
| கருணாநிதியும் குள்ளநரித்தனமும். |
|
Posted by: தூயவன் - 11-12-2005, 04:08 PM - Forum: அரசியல் / பொருளாதாரம்
- Replies (90)
|
 |
தன் அரசியல் வாழ்வுக்காக எதையும் செய்யத் துணிபவர்கள் அரசியல்வாதிகள். அதிலும் தமிழ்நாட்டு அரசியல் என்பது விசித்திரமானது. மக்களின் எண்ணங்களை நாடி பிடித்து அவர்களுக்கு எல்லாம் செய்வது போல காட்டி ஏமாற்றும் திறமையை புகழாமல் இருக்கமுடியாது.
அவ்வகை அரசியல்வாதிகளில் ஒருவர் தான் கருணாநிதி. அண்ணாத்துரை மறைவுக்கு பின் தலைவர் பதவியைக் கைப்பற்றிக் கொண்ட இவர் இன்று வரை அப்பதவியில் ஒட்டியிருக்க முடிகின்றது என்றால் அவரின் குள்ளநரித்தனமான அரசியல் தான் காரணமாக இருக்கும்.
இன்று கருணாநிதியின் கரகரத்த குரல் உங்களுக்கு பரிட்சயமாக இருக்ககூடும். ஆனால் உண்மையில் இதன் மூலகர்த்தா எவர் என்று நோக்கினால் அது அண்ணாத்துரை தான். அண்ணாத்துரை மறையும் வரைக்கும் கருணாநிதி சாதாரணகுரலில் தான் பேசிவந்தார். அண்ணாத்துரை மறைந்த பின் அவரின் திடீரென்று அண்ணாத்துரை போல குரலை மாற்றிக் கொண்டார். காரணம் என்னவென்றால் அண்ணாத்துரைக்கு இருந்த அந்த பெரும் மக்கள்ஆதரவை கைப்பற்றிக் கொள்ளுவதற்கே. இப்போது கருணாநிதியின் மகன் ஸ்ராலினின் குரல் கூட கரகரப்பாக தான் இருக்கின்றது என்பதை கவனத்தில் கொள்க.
இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்து கொண்டிருந்த காலப்பகுதியில் நடந்த சுவாரிசமான விடயம் ஒன்றைச் சொல்லுவார்கள். ரயில் மறிப்பு போராட்டம் நடந்து கொண்டிருந்தது. ரயில் வரும்போது குறுக்கே தண்டவாளத்தில் படுப்பது தான் திட்டம். அப்போது கண்ணதாசனும் திராவிடமுன்னேற்றக் கழகத்தில் தான் இருந்தார். ரயிலுக்கு முன் கண்ணதாசன் படுத்துவிட்டார். கருணாநிதி கொஞ்ச து}ரம் தள்ளித் தான் படுத்தாராம். ஏனென்றால் தற்செயலாக ரயில் கண்ணதாசனுக்கு மேல் ஏறிவிட்டால் தான் தப்பி ஓடிவிடலாம் என்று தான்.
தனது தலைவர் பதவிக்கு போட்டியாக எவர் வந்தாலும் உடனே அவர் மீது குற்றம் சாட்டி கட்சியை விட்டு நீக்கும் தந்திரபாயத்தை கைகொள்வதில் மன்னர். இருந்தாலும் எம்ஜிஆர் விடயத்தில் இவரது கணக்குப் பொய்த்து விட்டது. பணவிவகாரத்தை காட்டி கட்சியை விட்டு வெளியேற்றினார். ஆனால் அவர் கண்முன்னாகவே அதிமுக எனப்படும் அண்ணா திராவிடமுன்னேற்றக்கழகம் வளர்ந்தது. எம்ஜிஆர் மீது மக்கள் கொண்ட பற்று கருணாநிதியை முடக்கி விட்டது.
ஆனாலும் அக்குள்ளநரி விடவில்லை. எம்ஜிஆர் கெட்டப்புக்கு மாறினார். எம்ஜிஆரைப் போல கறுப்புக் கண்ணாடி, சால்வை போடவெளிக்கிட்டார். சால்லை போடுவதற்கு மருத்துவக்காரணம் சொல்லிக் கொண்டார். அப்போதைய ஈழவிடுதலைப் போராட்டத்தால் தமிழ்நாட்டு மக்களிடம் பரவிய ஆதரவை கவரும் விதமாக நடக்கமுயன்றார். இதனால் முதலில் ரெலோவிடம் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார்.
இதேவேளை எம்ஜிஆரும் இலங்கை விடயத்தில் கொண்ட அக்கறை காரணமாக தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்பைக் கொண்டார். இதனால் கருணாநிதி எல்லா இயக்கங்களையும் கூடி ஆராய்வதற்காக என்று சொல்லி எல்லா இயக்கங்களையும் தம் பக்கம் இழுக்கும் முயற்சியை மேற்கொண்டார். இதை உணர்ந்த விடுதலைப்புலிகள் எம்ஜிஆருடன் இணைந்தே நின்றனர். கருணாநிதியின் நாடகம் தோற்றுப் போனது.
எம்ஜிஆர் மருத்தவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றபோது தேர்தல் நடந்தது. எம்ஜிஆரின் ஆதரவும் தனக்கே என்று வெட்கம் கெட்ட நிலையில் சொல்லிப் போட்டியிட்டார். ஆனாலும் எம்ஜிஆர் வென்றார்.
இலங்கையிலிருந்து இந்திய இராணுவம் விரட்டப்பட்டபோது வரவேற்கப் போகமாட்டேன் என்றது கூட அரசியல் நாடகமே. அப்போது இந்திய ஆக்கரமிப்பு படைகள் அட்டூழியம் செய்கின்றனர் என்று தமிழ்நாட்டில் எழுந்த எதிர்பு ஆதரவை தம்வசம் இழுக்கும் நாடகமே.
அடுத்த தலைவராக தன் மகன் ஸ்ராலினை வரவைக்கவேண்டும் என்பதற்காக தனது மகனுக்கு போட்டியாக இருக்ககூடும் என்று கருதப்பட்ட வைகோ எனப்படும் வைகோபாலசாமியை கட்சியை விட்டு வெளியேற்றினார். ஸ்ராலினுக்கு போட்டியாக யாரையும் வரவிடாமல் பார்த்துக் கொண்டார். இவருக்கு கைகொடுத்தது இவரது குடும்ப தொலைக்காட்சியான "சன்ரீவி". அன்பழகன் முதல் பாலு வரை யாரும் ஒரு அளவுக்கு மேல் போகமல் தான் பார்த்துக் கொள்கின்றார். ஜெயலலிதா தலமைச்செயலகம் கட்டும் விடயத்தில் தடையாக இருந்ததாக பெரிதாகப் பேசப்பட்ட பாலு இப்போது அமத்தி வாசிக்கப்படுகின்றார். இப்போது கூட சன்ரீவியில் வைகோ பற்றி செய்தி வருவது என்பது அபுூர்வம்.
ஈழத்தமிழருக்கு அனுதாபம் தெரிவிக்கும் கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் தான் எம் மக்கள் அதிகமாகத் துன்புறுத்தப்பட்டனர். நடுச்சாமத்தில் சோதனை என்று வீடுமுழுவதும் கிளறிக் கொட்டினர். இதில் ஒன்று என்னவென்றால் ஜெயலலிதா இப்படி ஏதும் செய்தது இல்லை என்பது குறித்தாகவேண்டும்.
தமிழ்பற்றை பற்றி பெருமையாகப் பேசும் கருணாநிதியின் பேரக்குழந்தைகள் எம் மொழியில் படிக்கின்றனர் என்பது உலகம் அறிந்த கதை. சன்ரீவி என்ற பெயரே இவரது தமிழ்பற்றை அடையாளப்படுத்தும்.
நாஸ்தீகவாதம் பேசும் கருணாநிதியின் மனைவிகளில் ஒருவரான தயாளுஅம்மாளைப் பார்த்தீர்கள் என்றால் நேற்றியை மூடும் அளவுக்கு பொட்டுபோட்டிருப்பார். இது தான் அவரது கொள்கை. ஆனால் ஒரு விடயத்தை ஞாபகப்படுத்தல் வேண்டும். ஒரு காலத்தில் திருப்பதிக்கு போனதாகச் சொல்லி நடிகர்திலகம் சிவாஜியும் கட்சியை விட்டு நீக்கப்பட்டார்.
அரசியல்வாதிகளின் வாழ்வு என்பது என்னதான் மேடையில் பேசினாலும் கடைசியில் தங்களின் பையை நிரப்பி கொள்வதில் தான் இருக்கும். அவர்கள் பேசும்மேடைப் பேச்சை வைத்து நம்புவது போல தவறு ஏதும் இல்லை. இன்று தமிழ்நாட்டின் முக்கியமான பணக்காரர்களில் ஒருவர் கருணாநிதி.
சென்னை என்பது முன்பு இப்போதைய ஆந்திரா, கர்னடகா, கேரளாவுக்கும் தலைநகராக இருந்ததால் இன்று பல மொழி மக்கள் கூடிவாழும் பிரதேசமாக உள்ளது. அங்கே முழுமையான தமிழ்பற்றோ அல்லது இனப்பற்றோ இருக்கும் என்று கருதுவது மடைத்தனம். ஏதோ தமிழ்நாட்டின் தலைநகரம் என்றவகையில் ஓடிக்கொண்டிருக்கின்றது. எனவே அவர்கள் ஈழவிடுதலைப் போராட்டத்தில் தமிழருக்காக குரல் கொடுக்கப்போவதில்லை. தேவையும் இல்லை
இதனால் தமிழ்நாட்டுத் தமிழர்கள் எம்மீது பற்றில்லை என்று அர்த்தமில்லை. உண்மையான தமிழ்மக்கள் இன்றும் எம்மை நேசித்துக்கொண்டிருக்கின்றனர். நெடுமாறன் முதல் அடிமட்ட தமிழன் வரை எம்முடனேயே இருக்கின்றனர். அப்படியே மதுரை, திருநெல்வேலிப்பக்கம் போய் தேசியத்தலைவரையோ அல்லது ஈழத்துமக்களையோ குறை கூறிப்பாருங்கள். "எலேய்" என்று அரிவாளுடன் வெட்டவந்துவிடுவார்கள். ஏனென்றால் அங்கிருப்பது புூர்வீகத் தமிழர்கள். நம் இரத்த சொந்தங்கள். அவர்களைப் பொறுத்தவரைக்கும் தமிழ்மக்களின் தலைவனாக இருப்பது தேசியத் தலைவர் அவர்களே. அவர்களின் இப்பாச உணர்வுகள் தான் எம்மை இன்னும் வாழவைத்துக் கொண்டிருக்கின்றது. ஆனால் என்ன. அவர்கள் சென்னை போன்ற நகர்புறம் இல்லதால் அவர்களின் குரல்கள் எடுபடுவதில்லை
|
|
|
|