| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 323 online users. » 0 Member(s) | 320 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,319
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,233
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,297
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,642
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,073
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,466
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,500
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,039
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,239
|
|
|
| குழந்தைகள் தினம்? |
|
Posted by: Nilavan. - 11-14-2005, 07:31 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (19)
|
 |
<img src='http://www.webulagam.com/news/photonews/images/2005/11/14_children.jpg' border='0' alt='user posted image'>
[b][size=18]சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் மறைந்த ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினம் இன்று குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. பல்வேறு பள்ளிகளிலும், இல்லங்களிலும் குழந்தைகளுக்கு பரிசுகளும், இனிப்புகளும் வழங்கி குழந்தைகள் தினம் கொண்டாடப்படும். ஹூப்ளியில் சிறுவன் ஒருவன் பாம்பை வைத்து வித்தைக் காட்டி பிழைப்பு நடத்தி வருகிறான். இவனுக்குத் தெரியுமா இன்று குழந்தைகள் தினம் என்று?
நன்றி:வெப்உலகம்
|
|
|
| யாழ். குடா கடற்பரப்பில் மர்மக் கப்பல் |
|
Posted by: வியாசன் - 11-14-2005, 04:21 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (2)
|
 |
யாழ். குடா கடற்பரப்பில் மர்மக் கப்பல்: தாக்குதல் அச்சத்தில் சிறிலங்கா இராணுவம்!
யாழ். குடா கடற்பரப்பில் மர்மக் கப்பல் ஒன்று சென்றதாகவும் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை அது ஏற்றிச் சென்றிருக்கலாம் என்று கருதுவதாகவும் சிறிலங்காவின் முப்படைத் தளபதி தளபதி தயா சந்தகிரி தெரிவித்துள்ளார்.
அந்தக் கப்பலைத் தேடும் முயற்சியில் சிறிலங்கா கடற்படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
சிறிலங்கா அரச தலைவர் தேர்தல் நாளின் போது தம்மீதான தாக்குதலுக்கான திட்டமிடலாக இருக்கக் கூடும் என்று கூறிய தயா சந்தகிரிஇ இந்தத் தாக்குதல்களை மேற்கொள்ள வந்த விடுதலைப் புலிகள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர் என்றும் கூறினார்.
எதிர்வரும் தேர்தல் நாளன்று விசேட அதிரடிப் படையினர் பல பிரதேசங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வன்முறைகளில் ஈடுபடுவோரை கைது செய்து காவல்துறையிடம் ஒப்படைப்பார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
சுட்டது புதினத்திலிருந்து
|
|
|
| டி.சே கவிதை |
|
Posted by: இவோன் - 11-14-2005, 04:02 PM - Forum: (தீவிர) இலக்கியம்
- Replies (24)
|
 |
கறுத்த பிரேம்
கண்ணாடிக்குள்ளிலிருந்து
நதியாய் அசைகிறது
விழிகள்
ஆஸ்த்மாவில் அவதிப்படுகையில்
நெஞ்சுதடவிய
அம்மாவின் கரங்களை நினைவுபடுத்தும்
முதுகில் படரும்
விரல்கள்
கத்திகளாய் குத்திக்கொண்டிருந்த
கடந்த காலம் தூர்ந்துபோக
சிறகுகள் முளைக்கின்றன
மனவெளி முழுதும்
ஒரு பொழுது
சப்வேயில்
அழகிய காதற்காலம்
துளித்துளியாய் கரைந்து
கருஞ்சாம்பர் வானமானதையும்
அதிலிருந்து முளைத்த துர்ச்சாபத்தேவதைகள்
வருடங்கள் மீதேறி
நிழ்ல்களாய்ப் பயமுறுத்தியதும்
நீயறிவாயா பெண்ணே?
பளிச்சிடும்
உன் மூக்குத்தியைப்போல
நினைவுகளை விரும்பியபோது
அணியவும் எறியவும்
முடியுமெனில்
எவ்வளவு நன்றாகவிருக்கும்
எனும்
என் வரிகளை இடைமறிக்கும் நீ
கடந்தகாலத்தை நினைவு கொள்ள
உனக்கு கருஞ்சாம்பர் வானமெனில்
எனக்கு பிடுங்கியெறியப்பட்ட மூக்குத்தியும்
கழுத்தை இறுக்கிய கரங்களும்
என்கிறாய்
நேசிப்பை முதன்முதலாய்
அனுபவிக்கும் சிலிர்ப்பைப்போல
கடந்தகாலத்தின் வலிகளுடன்
நம்மால் இன்னொருமுறை
இதமாய் நேசிக்கமுடிவது
வியப்புத்தான்
குளிருக்கு மூட்டிய
அடுப்பில்
எறிந்த சிறுகுச்சிகளாய்
இவ்விரவில்
சரசரவென்று பற்றிக்கொள்கிறது
காமம்
உன் ஆடைகள்
களையத்தொடங்கிய மூன்றாம் சாமத்தில்
வினாவுகிறாய்
முலை தடவும் மென்விரல்கள்
நாளை என் மூக்குத்தியை
மூர்க்கமாய்ப் பிடுங்கி எறியமாட்டாதென்பதை
எப்படி நம்புவது.
|
|
|
| இரண்டாவது முதலிரவு |
|
Posted by: Birundan - 11-14-2005, 04:02 PM - Forum: கதைகள்/நாடகங்கள்
- No Replies
|
 |
யாரோ கைலிக்குள் கைவிடுவதைப் போலிருந்ததால் திடுக்கிட்டு விழித்துப்பார்த்தேன். ஷைலஜாதான் பெட்ஷீட்டுக்குள் என்னவோ தேடிக்கொண்டிருந்தாள். இதன் மூலம் காலங்காத்தாலயே மூடைக் கிளப்பிக்கொண்டிருந்தாள் என் அன்பு மனைவி, திருமணம் முடிந்து ஏறக்குறைய ஒரு வருடம் ஓடியிருக்கும். நிச்சயத்தார்தத்தின் பொழுது பார்த்ததைப் போலவே இருந்தாள். என்ன வித்தியாசம் கொஞ்சம் பூசினதைப்போலிருந்தாள்.
இந்த வாரத்து கோட்டா வேறு ஏற்கனவே முடிந்திருந்ததால் மீண்டும் கண்ணை இறுக்கமாக மூடிக்கொண்டேன். அதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. அவள் கேட்காமல், அவளுக்கு உதவுகிறேன் பேர்வழியென்று வரக்கூடாதென்று அவள் அடித்து சொல்லியிருந்தது தான் அது. இதற்கு கல்யாணம் ஆன புதிதில் நான் செய்த அட்டகாசங்கள் தான் காரணம், காபி போட்டு தரேன்னு, காய் கறி நறுக்கித் தரேன்னு, சனி ஞாயிற்றுக்கிழமைகளில் நானே சமைக்கிறேன்னு, வீடு கூட்டுறேன்னு, பிறந்தநாளுக்கு அவளை ஆச்சர்யப்படுத்த, அவளுக்கு தெரியாமல் பலஆயிரம் கொடுத்து பட்டுபுடவை வாங்கறேன்னு, இப்படி பல.
ஆனாலும் பாழாய்ப்போன மனசு கேட்கிறதா? அவள் மண்டியிட்டு கட்டிலில் தேடிக்கொண்டிருந்த வாக்கில், இடுப்பில் கைவைத்து இழுக்க, தவறி என்மேல் விழுந்தவள், ஒன்றுமே சொல்லாமல் தன்னை விலக்கிக்கொண்டாள். என்னால் நம்பவேமுடியவில்லை, வேறொரு சமயம் நான் இப்படி செய்திருந்தால் தலையில் நறுக்கென்று கொட்டியோ, இல்லை பராமரித்து வைத்திருக்கும் விரல்நகத்தால் கிள்ளியோ, எதிர்ப்பை காட்டியிருப்பாள். அதுவும் இல்லையென்றால் நிச்சயமாகத் திட்டித்தீர்த்திருப்பாள். ஆனால் இன்று எதுவும் நடக்கவில்லை.
ஒருவேளை மௌன விரதம் இருக்கிறாளோ? இருக்காதே! அவளது வீட்டில் இருக்கும் பொழுது வாரத்திற்கு ஒரு முறையோ, மாதத்திற்கு ஒருமுறையோ மௌன விரதம் இருப்பது பழக்கமேகவேயிருந்தாலும். திருமணம் முடிந்தபிறகு என்னைத் தயார்ப்படுத்தி(!) அலுவலகம் அனுப்பவேண்டுமானால் இதெல்லாம் உதவாது என வந்த சில வாரங்களிலே புரிந்து கொண்டதால், மௌன விரதமே இருப்பதில்லை என ஒரு அழகான சாயங்கால வேளையில் என்னிடம் சொல்லியிருந்தாள்.
விலகிப்போனவள், நேராய் சமையலறைக்குப் போய் காப்பி கலக்கிக் கொண்டு வந்து கொடுத்தாள், நான் உண்மையிலேயே பயந்துவிட்டேன் அவளுக்கு என்னவோ ஆகிவிட்டது என நினைத்து. எக்காரணம் கொண்டும் பல் விளக்காமல் காப்பி தரவேமாட்டாள் ஷைலு. முதலிரவு முடிந்த அடுத்தநாளே இந்தப் பழக்கத்தை ஆரம்பித்து வைத்தவள் அவள். அன்று காப்பி எடுத்துவந்த அம்மாவிடம் செல்லமாக கோபித்து, அன்றிலிருந்து நான் பல்விளக்கியதும் தான் காப்பி சாப்பிடும்படி வைத்தவள் அவள். இதற்கு சில விதிவிலக்குகள் உண்டென்றாலும், இன்றெய்க்கெப்படி என்பது தான் புரியவில்லை. பெரும்பாலும் இரவு அதிகம் வேலையிருந்து பின்னிரவில் வீட்டிற்கு வந்தால், அடுத்த நாள் காலையில் பெட்காபி கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
அதுவும் நான் அருகில் இருக்கும் சமயத்தில், எனக்கு கொடுத்துவிட்டு தான் சாப்பிடுவது என்று ஏதோ கொள்கை வைத்திருந்தாள். அது போன்ற நாட்களில் நான் பல்விளக்க அதிக நேரம் எடுத்துக்கொள்வேன் என்பது தான் முக்கியகாரணம். காப்பி கொடுத்துவிட்டு நகர்ந்தவள் நேராய் உள்ளறைக்கு போய் பீரோவை உருட்டிக்கொண்டிருந்தாள். நானே நினைத்தாலும் இன்று அவளுக்கு உதவ முடியாது, அலுவலகத்தில் ஒரு முக்கியமான மீட்டிங் இருந்தது அன்று. அதனால் ஒரே இழுப்பில் காப்பியை விழுங்கிவிட்டு, குளிக்கக்கிளம்பினேன்.
குளியலறைக்கு அருகில் சென்றிருப்பேன், உள்ளறையில் இருந்து யாரோ அழுவது போல் சத்தம் கேட்டது. என்னடா இது நம்ம வீட்டில யார் அழுவது? ஒரு வேளை ஷைலுவோ? இருக்காதே கல்யாணம் ஆனதிலிருந்து இன்று வரை அவள் அழுததேகிடையாதே? பிரம்மையாயிருக்கும்னு நினைத்தேன். ஆனால் சப்தம் விடாமல் கேட்க, எனக்குள் ஒரு பரபரப்பு வந்து என் அழகு மனைவி அழும் அழகை பார்க்க உள்ளே சென்றேன். ஷைலஜா தான் பீரோவிற்குள் தலையை விட்டுக்கொண்டு அழுதுகொண்டிருந்தாள். நான் அருகில் சென்று நிற்க, திரும்பியவள்.
என்னைக் கட்டிப் பிடித்துக்கொண்டு என் தோளை நனைக்கத் தொடங்கினாள். உடனே நான்,
"என்ன ஷைலு இது சின்னப்பிள்ளையாட்டம். என்ன ஆச்சு எதுக்கு அழுவுற?" கேட்டதும்.
"பாவா தாலியைக் காணோம்?" மெதுவாக வார்த்தை வார்த்தையாக சொல்லி முடித்தாள்.
எனக்கு புரிந்தது, ஆனாலும் அவள் பாவான்னு கூப்பிட்டதும் வந்த சிரிப்பையும் அடக்கிக்கொண்டு, கோபம் வந்தவனைப்போல், அவள் தோளைப்பிடித்து என்னெதிரில் நிறுத்தி,
"என்னது தாலியைக் காணோமா? விளையாடுறியாடி நீ, இல்லை விளையாட்டுப் பொருளா அது? தொலைச்சுட்டேன்னு அழுதுக்கிட்டு நிற்க? புதுப்பொண்டாட்டியாச்சேன்னு கொஞ்சம் விட்டுப் பிடிக்கலாம்னு பார்த்தால். இதெல்லாம் ரொம்ப ஓவர். நானெல்லாம் இந்த பெங்களூர் ரோட்ல வண்டி ஓட்டுறேன்னா, ஏதோ பெண்டாட்டி கழுத்தில கட்டியிருக்கிற தாலி மேல பாரத்தைப் போட்டுட்டுதான். இப்படி நீ தாலியை வைச்சிக்கிட்டெல்லாம் விளையாடிக்கிட்டிருந்தால் எப்படி வண்டி ஓட்டுறது? உயிரோட வீட்டிற்கு வர்றது?" நான் கேட்டு முடிக்க, அதுவரை மெதுவாக அழுது கொண்டிருந்தவள் தேம்பித்தேம்பி அழத்தொடங்கினாள்.
எனக்கு ஷைலஜாவைப்பற்றி நன்றாகத் தெரியும், இடையில் ஒருமுறை ஒரு செய்தி வாசிக்கும் பெண், தான் தூங்கும் பொழுது தாலியை கழட்டி வைத்துவிட்டுத்தான் தூங்குவேன்னு சொல்ல, நான் ஷைலஜாவிடம் "ஏண்டி நீயும் கலட்டி வைச்சிட்டு தூங்கலாம்ல ஒரே தொந்தரவா இருக்கு"ன்னு சொல்லப்போக அடுத்த நாள் முழுவதும் அவள் என்னிடம் முகம் கொடுத்து பேசவில்லை, எனக்கு இதிலெல்லாம் சுத்தமாக நம்பிக்கையில்லா விட்டாலும் அவள் வீட்டில் வளர்த்தது அப்படி. இரண்டு
நாள் அதற்கு பிறகு நல்லா டோஸ் கொடுத்துட்டுத்தான் சரியாவே பேசத்தொடங்கினாள்.
நான் விளையாட்டிற்காக அவளிடம் இப்படி பேசப்போய் அவளுடைய அழுகை அதிகமானது. ஆரம்பத்தில் முதல் முறை அவள் அழுவதைப் பார்த்த பொழுது வேடிக்கையாய் இருந்தாலும் கொஞ்ச நேரத்தில் எனக்கு மிகவும் சங்கடமாகிவிட்டது. பாலகுமாரன் நாவல்கள் படித்துவிட்டு கட்டிய மனைவி அழுதால் அது எனக்கு அவமானம் என்ற கொள்கையெல்லாம் இருந்தது என்னிடம், அதெல்லாம் எங்கே போனது என நினைத்துக்கொண்டே, நகர்ந்து பக்கத்தில் இருந்த ஹேங்கரில் கிடந்த என் பேண்ட் பாக்கெட்டுக்குள் கைவிட்டு தாலியை எடுத்து அவளிடம் கொடுத்தேன்.
அதைப் பார்த்ததும் மெதுவாய் அழுகை நின்றது,
"நீ நேத்தி நைட் நைட்டியை கழட்டும் பொழுது கீழே விழுந்திருக்கும்னு நினைக்கிறேன். நைட்டி கூடவே கிடந்துச்சு, பாத்ரூம் போக எழுந்திருச்சப்ப பார்த்தேன், சரி கால்ல படவேண்டாம்னு ஹேங்கரில் இருந்த பேண்டில் போட்டேன். காலையில எழுந்ததும் கொடுக்கலாம்னு நினைச்சேன், ஆனா எழுந்ததுமே சூழ்நிலை வேற மாதிரியா இருந்ததால மறந்திட்டேன்"னு சொல்லி அவளை பாவமேன்னு
பார்த்தேன். அதைப்பத்தி ஒன்னுமே சொல்லாம,
"சரி மாட்டி விடுங்க." சொல்லிவிட்டு திரும்பவும் என்கையில் தாலியை கொடுத்தாள். தாலியை தங்கத்தில் மாற்றி, பிறகு காசு, குண்டு இப்படி ஏகப்பட்ட விஷயங்களை சேர்த்திருந்ததால் தான் மாட்டி விடச்சொல்லி லேசாய் தலையை முன்பக்கமாய் சாய்த்திருந்தாள். நானும் கருமமே கண்ணாக மாட்டிவிட்டு நிமிர்ந்து பார்த்தேன். கழுத்தில் ஏறியதும் நிமிர்ந்து பார்த்தவள் ஒன்றுமே பேசாமல் சமையல் கட்டிற்குள் புகுந்து கொண்டாள். நானும் அவசர வேலையிருந்ததால் மேலும் ஒம்பிழுக்காமல் குளிக்கச் சென்றேன்.
குளித்துவிட்டு ஆடையெல்லாம் அணிந்துகொண்டு வந்து பார்த்தால், எப்பொழுதும் டைனிங் டேபிளில் சாப்பாடு ரெடியாக இருக்கும். இன்று ஒன்றையும் காணோம். கட்டிலில் உட்கார்ந்திருந்த அவளை பார்க்க பாவமாய் இருந்ததால் போனால் போகட்டுமென்று விட்டுவிட்டு, காலணிகளை அணிந்து புறப்பட தயாரானேன், அப்பொழுது தான் வெடித்தது அணுகுண்டு,
"இன்னிக்கு லீவு போட்டுறுங்க." எனக்குத்தான் உத்தரவு வந்தது.
"ஏன் இன்னிக்கு லீவு, அதெல்லாம் முடியாது. இன்னிக்கு ரொம்ப முக்கியமான ஒரு மீட்டிங் இருக்கு, லீவெல்லாம் போடமுடியாது. நான் போய்த்தான் ஆகணும்." சொல்லிக்கொண்டே சாக்ஸைப் போட்டேன்.
"அதெல்லாம் முடியாது, நாம இப்ப கோயிலுக்கு போகணும். அதனால லீவு போடுங்க."
"என்னம்மா இது ஒரு தடவை சொன்னா புரியாதா? முக்கியமான வேலையிருக்கு, கோயிலுக்கு போகணும்னா போய்ட்டு வா? எதுக்கு என்னைக் கூப்பிடுற. நீதான் கார் வோட்டுவல்ல, நம்ம காரை எடுத்துட்டு போய்ட்டு வா, நான் வேணும்னா ஆட்டோவில் போய்க்கிறேன்." சொல்லிவிட்டு இரண்டாம் காலில் சாக்ஸை மாட்டினேன். இதுவரை உட்கார்ந்திருந்தவள் எழுந்து நின்றாள்.
"இங்கப்பாருங்க நீங்கத்தான் சொன்னீங்க, தாலி என் கழுத்திலேர்ந்து கழண்டுட்டதால உங்களுக்கு ஆபத்து வரும்னு. எனக்கு பயமாயிருக்கு இன்னிக்கு வேலைக்கு போகவேண்டாம், சொன்னா கேளுங்க."
"அதான் திரும்ப மாட்டி விட்டாச்சுல்ல, எல்லாம் சரியா போயிரும்." இந்த நேரத்தில் இரண்டு கால்களிலும் சாக்ஸ் மாட்டிவிட்டதால் மெதுவாய் அவளை நெருங்கிவந்து, "அதுமில்லாம உனக்கே நல்லாத்தெரியும் எனக்கு இதிலெல்லாம் சுத்தமா நம்பிக்கை கிடையாது. உன்கிட்ட சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்."
"இங்கப்பாருங்க நீங்க விளையாட்டுக்காக சொன்னீங்களே இல்லை சீரியஸாய் சொன்னீங்களோ எனக்குத் தெரியாது, உங்களுக்கும் நல்லா தெரியும் எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை நிறைய உண்டு. அதுவுமில்லாம கோயிலுக்குப் போய் என் கழுத்தில் இன்னொரு தாலி கட்டுற வரைக்கும் உங்கள தனியா எங்கையும் போக நான் அனுமதிக்க முடியாது. உங்க வாய்லேர்ந்து வந்ததை நல்ல சகுனமா நினைக்கிறேன் நான். அதையும் மீறி நீங்க போய் உங்களுக்கு ஏதாச்சும் ஆய்சுன்னா. ம்†¤ம் என்னால முடியாது."
இதெல்லாம் சிறுபிள்ளைத்தனமாக தெரிந்தாலும், கண்கள் மீண்டும் காவிரியாய் திறந்துவிடும் அபாயம் தெரிந்ததால் வேறு வழி, அலுவலகத்திற்கு விடுமுறை சொல்ல செல்லிடைப்பேசியை நாடினேன். நான் இந்த முடிவுக்கு வந்ததுமே அங்கிருந்து நகர்ந்தவள். அடுத்த நிமிடத்தில் டைனிங்டேபிளை நிரப்பினாள். பசி வயிற்றைக் கிள்ளியதால் உடனே சாப்பிட உட்கார்ந்தேன். பரிமாறத் தொடங்கியவளிடம்,
"நீ சாப்பிடலை."
"இல்லை."
"ஏன்?"
"விரதம்." அதற்கு மேல் பதில் வரவில்லை அவளிடமிருந்து. சூழ்நிலையை கொஞ்சம் சரியாக்க நினைத்து, பரிமாறிக் கொண்டிருந்தவளின் இடுப்பில் கைவைத்தேன். கையைத் தட்டியும் விடாமல் வேறு உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தாமல் ஹட்பேகையே பார்த்துக் கொண்டிருந்ததால், நானாக கையை எடுத்தேன். பிறகு சாப்பிட்டு முடித்ததும் தான் தாமதம்,
"போலாமா?" யாரையோ கேட்பது போல் கேட்டாள்.
"எங்க?"
"கோயிலுக்கு."
சரி இந்தப் பிரச்சனையை சீக்கிரமே முடித்தால் தேவலையென நினைத்து,
"சரி கிளம்பு." என சொல்லிவிட்டு கார் சாவியை எடுத்துக்கொண்டு கிளம்பினேன்.
இடையில் மறித்தவள், "நாம கார்ல போகல, நடந்துதான் போறோம்." சொல்லிவிட்டு என்னையே பார்த்தாள். கஷ்டகாலம் எல்லாம் என் வாயால வந்தது, அவளிடம் விளையாட்டுக்காய் சொல்லப்போக வினையாய் முடிந்தது, இனி எவ்வளவு சொன்னாலும் மாறமாட்டாள். தொலைஞ்சு போகுது ஒருநாள்னு நினைச்சிக்கிட்டே பக்கத்தில் இருந்த மீனாட்சி அம்மன் கோயிலுக்கு கிளம்பினேன்.
வீட்டை பூட்டிவிட்டு என்னுடன் நடந்து வரும் அவளைப்பார்க்க எனக்கு வருத்தமாய் இருந்தது. விளையாட்டுக்காய் செய்யப்போய் இவ்வளவு வருத்தப்படுகிறாளேன்னு நினைத்தால் கஷ்டமாகவும் இருந்தது. இனி எப்ப சாப்பிடுவான்னு வேற தெரியலை. உடனே சின்னதா ஒரு ஐடியா வந்தது. பக்கத்தில் உள்ள ஒரு நகைக்கடைக்கு நடந்தேன். முதலில் முறைத்துப் பார்த்தவள். பின்னர் பின்தொடர்ந்து வந்தால், போன வாரம் ஏதோ நெக்லஸ் கேட்டிருந்தால் என்னிடம் அதை வாங்கிக் கொடுத்து சிறிது சமாதானம் செய்யலாம் என்றுதான் அங்கு அழைத்து வந்தேன்.
கடைக்குள் வந்தவள் வாயை திறக்காமலே இருந்தாள், ஆனால் அந்த கடையில் காரியதரசியிடம் அவள் பார்த்துவைத்திருந்த அந்த நெக்லஸைப் பற்றிக் கேட்டேன். எடுத்துக் காண்பித்தவர்.
"சார் இப்பவே வாங்கிக்கப்போறீங்களா?" கேட்க,
"ஆமாம்." என்று சொல்லி டெபிட் கார்டை கொடுத்தேன். அம்மணி வாய் பேசாமல் என்னை அதட்டி மிரட்டாமல் இருந்தது அவருக்கு ஆச்சர்யம் அளித்திருக்கவேண்டும், ஆனால் இதுபோல எத்தனை தம்பதியைப் பார்த்திருப்பார். சிரித்துக்கொண்டே நகையை அவளை அழைத்து அவள் கையில் கொடுத்தார்.
வாங்கிக்கொண்டு நேராய் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்தோம், வெளியி
லேயே அர்ச்சனைத்தட்டும் மஞ்சள் கயிரும் வாங்கியவள், அதற்கும் என்னை பணம் தரச்சொல்லிவற்புறுத்தினாள். நேராய் அம்மன் சந்நதிக்குப் போய் அய்யரிடம் கன்னடத்தில் பேசியவள் அர்ச்சனைத்தட்டைக் கொடுத்தாள். அர்சனையை முடிந்து அம்மன் காலில் வைத்த தாலியை என் கையில் கொடுத்த அய்யர் அவள் கழுத்தில் கட்டச்சொல்லி சைகை காட்டினார், நான் மெதுவாக மீண்டும் ஒருமுறை மூன்று முடிச்சு போட அவர் மந்திரம் சொல்லிக் கொண்டிருந்தார். பின்னர் அந்த நெக்லஸையும் மாட்டிவிட எல்லாம் சுபமாய் முடிந்தது.
பின்னர் பிரகாரத்தில் உட்கார்ந்து நான் தேங்காயை உடைத்து சாப்பிட்டுக் கொண்டிருக்க; பக்கத்தில் உட்கார்ந்து என்னையே பார்த்துக் கொண்டிருந்த அவள், சிறிது நேரத்தில் தோளில் சாய்ந்து கொண்டாள்.
"இனிமே விளையாட்டுக்குக் கூட அப்படி சொல்லாதீங்க பாவா." அவள் சோகமே வடிவாய்ச் சொல்லமீண்டும் அந்த பாவா என்ற சொல் எனக்கு சிரிப்பை உண்டாக்கியது.
எங்கம்மா எங்க நைனாவை பாவான்னு தான் கூப்பிடுவாங்க, ஆனா இவளும் அந்த
வகையறாதான்னாலும் அவங்க வீட்டில் அப்படி கூப்பிடுற பழக்கம் கிடையாது. அதனால் முதலிரவு முடிந்த அடுத்தநாள் இவள் என்னை பாவா, பாவான்னு கூப்பிட, எங்கம்மா என்னிடம் இதை நக்கலாய் சொல்லி சிரித்துக் கொண்டிருந்தார்கள். அதாவது சொல்வது பாவான்னாலும் கூப்பிடற போது வாவான்னு வரும், ஆனால் இவளுக்கு பழக்கமில்லாததால் பாவான்னே கூப்பிட எங்கம்மா என்னிடம் நக்கலடித்துக்கொண்டிருந்தார்கள்.
அதை நினைத்து தான் நான் காலையில் சிரித்தேன், ஆனால் இப்பொழுது தான் ஒரு பிரச்சனை முடிந்திருந்ததால், அடுத்த பிரச்சனையை ஆரம்பிக்க விரும்பாமல் அமைதியாக இருந்தேன். ஆமாம் சாமியாய் தலையாட்டிக்கொண்டு. கொஞ்ச நேரத்தில் சரியானவள் அவள் குடும்பத்தில் நடந்த இதைப் போன்ற சம்பவங்களை பற்றி சொல்லிக்கொண்டிருந்தாள். சிறிது நேரம் கழித்து கிளம்பும் வேளையில், காலணிகளை எடுக்க வந்த கடையில் அர்சனைக்காக வைத்திருந்த உதிரிப்பூவை ஒரு கூடையாக நான் கேட்டு வாங்க ஏனென்று கேட்டவளின் காதுகளில் மெதுவாய்,
"அதான் கல்யாணம் ஆய்டுச்சு, இன்னிக்கு முதல் ராத்திரிதானே அதான் வாங்கினேன்னு சொல்ல."
முகம் சிவக்க வெட்கப்பட்டவளாய் என்னை அடிக்க துரத்தினாள்.
நன்றி>செப்புப்பட்டயம்
|
|
|
| இந்த கொடுமையை எங்கே போய் சொல்வது |
|
Posted by: Vaanampaadi - 11-14-2005, 11:52 AM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
பாக்.ராணுவம் கொடூரம்: பூகம்ப பகுதிகளில் சிறுவர்களை கடத்தி சிறுநீரகம் விற்பனை
முசாபராபாத்
பாகிஸ்தானில் பூகம்ப பகுதிகளில் உள்ளவர்களை கடத்தி சிறுநீரகத்தை எடுக்கிறார்கள். பாகிஸ்தான் ராணுவமும் இதற்கு உடந்தையாக உள்ளதாக புகார் கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் கடந்த மாதம் 8-ந்தேதி பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இஸ்லாமாபாத், பெஷாவர் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள முசாபராபாத் ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட இந்த பூகம்பத்தில் 80 ஆயிரம் பேர் வரை பலியாகி விட்டனர். 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து வீடு வாசல்களை இழந்து முகாம்களில் தங்கவைக்கப் பட்டுள்ளனர்.
முசாபராபாத்தில் பூகம்பத்தில் காயம் அடைந்தும், பலியானவர்களின் உடல்களையும் அங்குள்ள சிலர் கடத்தி விற்பனை செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து சிறுநீரகம், கண், ஈரல் போன்ற உடல் பாகங்களையும் இந்த கிரிமினல்கள் எடுத்து விற்பனை செய்து இருக்கிறார்கள். சிறு வர்களையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை.
இந்த கொடுமைக்கு பாகிஸ்தான் ராணுவமும் உடந்தையாக இருந்ததாக புகார் கூறப்பட்டுள்ளது.
காஷ்மீர் விடுதலை முன்னணி தீவிரவாதிகள்தான் இந்த கடத்திலின் பின்னனியில் இருந்துள்ளனர்.
இது தவிர முகாம்களில் தங்கி இருந்த சிறுவர்கள் மற்றும் பெண்களை சிலர் கடத்தி தீவிரவாதிகளுக்கு விற்பனை செய்துள்ளனர். கடத்தப்பட்டவர்கள் அந்த இயக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மாலைமலர்
|
|
|
| திருமணப்பதிவாளர் அலுவலகத்தில் ஆண் பெண் படம் நீக்கம் |
|
Posted by: Vaanampaadi - 11-14-2005, 10:59 AM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
திருமணப்பதிவாளர் அலுவலகத்தில் ஆண் பெண் படம் நீக்கம்
இங்கிலாந்து நாட்டில் உள்ள லிவர்வூல் நகரில் உள்ள திருமணப்பதிவாளர் அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த மணமகன் மணமகள் படம் நீக்கப்பட்டது.
இந்த ஓவியம் ஓரினச் சேர்க்கையாளர்களின் மனதைப் புண்படுத்தும் என்பதால் அது நீக்கப்பட்டது.
அடுத்த மாதம் முதல் ஓரினச் சேர்க்கையாளர் திருமணம் செல்லுபடியாகும் என்று சட்டம் நடைமுறைக்கு வருவதால் இந்த படம் நீக்கப்பட்டது.
தினதந்தி
|
|
|
| ஒரு கிலோ 600 ரூபா???????? |
|
Posted by: வினித் - 11-14-2005, 08:34 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
நன்னீர் மீன் பிடி அதிகரிப்பு இறால் ஒரு கிலோ 600 ரூபா
தற்போது பெய்து வரும் மழை காரணமாக மட். மாவட்டத்தில் நன்னீர் மீன்பிடி அதிகரித்துள்ளது. இருந்த போதும் மீனவர்களுக்குரிய உபகரணங்கள் இல்லாத காரணத்தினால் அதிகப்படியான மீன்களைப் பிடிக்க முடியாமலுள்ளது என மீனவர்கள் தெரிவித்துள்ளனர். நன்னீர் மீன் பிடி அதிகரித்துள்ள போதிலும் ஒரு கிலோ இறால் 600 ரூபாவிற்கு விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
http://www.newstamilnet.com/index.php?suba...t_from=&ucat=1&
:roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll:
|
|
|
| திருடப்பட்ட கமராவை தமிழீழ காவல்துறையினர் கைப்பற்றினர் |
|
Posted by: வினித் - 11-14-2005, 08:12 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
மீசாலையில் திருடப்பட்ட கமராவை
காவல்துறையினர் கைப்பற்றினர்
மீசாலைப் பகுதியில் களவாடப்பட்ட இரண்டு லட்சம் ரூபா பெறுமதியான வீடியோக் கமராவினை தமிழீழ காவல் துறையின் யாழ். மாவட்ட பணிமனை யைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் மீட்டெடுத்து உரியவரிடம் கையளித்தனர்.
கடந்த 9ஆம் திகதி மீசாலைப் பகுதியில் உள்ள வீடொன்றில் நிறுத்தப் பட்டிருந்த வாகனமொன்றில் வைக்கப் படிருந்த வீடியோக் கமராவே களவாடப் பட்டது.
இது தொடர்பாக உரியவர்கள் பளை யில் தற்காலிகமாக இயங்கும் தமிழீழ காவல்துறையின் யாழ். மாவட்ட பணிமனையில் முறைப்பாடு பதிவு செய்தனர்.
இதனையடுத்து, காவல் பணிமனைப் பொறுப்பாளர் சண்முகநாதன் ரகு, தலை மைக்காவலர் எஸ்.சிறிதரன் ஆகியோர் உள்ளிட்ட குழுவினர் துரிதவிசாரணை கள் மேற்கொண்டனர்.
இதன்போது வீடியோக் கமராவும் மீட்கப்பட்டது. அதனைத் திருடியதாக சந்தேசிக்கப்படும் நபரை காவல்துறை யினர் கைது செய்து விளக்க மறியலில் வைத்துள்ளனர்.
இவர் இந்த வார முற்பகுதியில் தமிழீழ நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். என்று தெரிவிக்கப்பட்டது.
http://www.uthayan.com/pages/news/today/18.htm
|
|
|
| கனவில் கிருஷ்ணர் மீது "லவ்' வந்ததால், மனைவியை பிரிந்தார் |
|
Posted by: SUNDHAL - 11-14-2005, 03:34 AM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
என் கனவில் கிருஷ்ண பரமாத்மா தோன்றினார், அவரை பார்த்த மாத்திரத்தில் காதல் வயப்பட்டேன், அவருடன் ராதாவாக வாழ்ந்து வருகிறேன். அதனால், என் மனைவியுடன் விவாகரத்து வேண்டும்' என்று கோர்ட்டில் சீனியர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் பகிரங்கமாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
காக்கிச்சட்டை அணிய வேண்டிய அதிகாரி, உடலில் பட்டுப்புடவை, காதில் ஜிமிக்கி, கையில் வளையல்கள், காலில் கொலுசு, உதட்டில் லிப்ஸ்டிக், தலையில் செயற்கை முடியை பின்னி பூ அலங்காரம் வேறு... இப்படி ஒரு மிடுக்கான ஐ.ஜி., கோர்ட்டுக்கு வந்தால், எப்படியிருக்கும். அவர் காரில் வந்திறங்கிய போது, அத்தனை போலீசாரும் அப்படியே உறைந்து போய்விட்டனர்.
இப்படி ஒரு கூத்து நடந்த மாநிலம் உத்தரப்பிரதேசம். பெண்ணாக கோர்ட்டுக்கு வந்த ஐ.பி.எஸ்., அதிகாரி தேவேந்திர கிஷோர் பாண்டா. இவரது மனைவி வீணா. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இருவருமே, பெரியவர்கள். ஒரு மகன், மும்பையில் வருமானவரித்துறை அதிகாரியாக இருக்கிறார். இன்னொருவர் பெங்களூரில் சாப்ட்வேர் இன்ஜினியராக இருக்கிறார்.
ஆரம்பத்தில், பாண்டாவிடம் நடை, உடை, பாவனை எல்லாம் சரியாகத்தான் இருந்தது. நேர்மையான, பணியில் கறாராக இருக்கும் பாண்டாவுக்கு பிடித்தமானது ஆன்மீகம் தான். வேலையை அடுத்து பெரிதும் நேசிப்பது கடவுள் பக்தியை தான். அடிக்கடி, பல கோயில்களுக்கு, குறிப்பாக கிருஷ்ணர் கோயிலுக்கு போவார்.
கடந்த 1991ம் ஆண்டு வரை, ஏதோ பக்தியில் தீவிரமாக இருப்பாரே தவிர, அதனால், குடும்பத்துக்கோ, பணிக்கோ எந்த பாதிப்பும் இருக்காது. அதன் பின்னர் அவரிடம் படுமோசமான மாற்றம் ஏற்பட்டது. வீட்டில் அடிக்கடி மனைவியின் உடைகளை எடுத்து போட்டு கொண்டு, கிருஷ்ணர் படத்தின் முன்பு உட்கார்ந்து, ரசிப்பாராம். வேலைக்கு போகும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் வீட்டில் புடவையைத் தான் உடுத்தி இருப்பார்.
நாட்கள் நகர நகர, மனைவி வீணாவுக்கு, கணவன் பாண்டாவின் நடை, உடை, பாவனையில் சந்தேகம் ஏற்பட்டது. "கடவுள் பக்தி என்ற பெயரில் இந்த மனுஷனுக்கு ஏதோ மூளை மழுங்கிப் போய்விட்டது' என்று உறுதி செய்து கொண்டாள். அவரது சந்தேகத்தில் தவறில்லை. கடந்த சில ஆண்டாகவே, மனைவியிடம் நெருங்குவதில்லை. வீட்டில் ஒட்டுதல் குறைந்தது.
மனைவிக்கு இன்னொரு சந்தேகம் இருந்தது, "இந்த மனிதருக்கு ஏதோ தவறான பழக்க வழக்கங்கள் உள்ளன. அதை மறைக்கத்தான் ஆன்மீக போர்வை போர்த்தி வருகிறார். இதை உடைக்க வேண்டும்' என்றும் கருவிக் கொண்டாள். வீட்டில் அடிக்கடி சிறு சிறு மோதல் வருமே தவிர, பெரிய அளவில் வராது. ஆனாலும், கணவனின் நடத்தையால் வெறுத்துப்போய் தன் தாய் வீட்டுக்கு சென்று விட்டார் வீணா.
சில மாதங்கள் முன்பு, கோர்ட்டில் வழக்கு போட்டார் வீணா. "என் கணவனுடன் எனக்கு தாம்பத்ய வாழ்க்கை நீடிக்க வேண்டும்' என்று வழக்கு போட்டார் முதலில். இது கடந்த 2003ம் ஆண்டில் போடப்பட்டது. ஆனால், கணவனிடம் எந்த மாற்றமும் இல்லாததால், அவரிடம் இருந்து ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில், சமீபத்தில் கணவன் பாண்டாவும், கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார். "என் மனைவியிடம் இருந்து விவாகரத்து வாங்கி தர வேண்டும்' என்று கோரினார். இந்த விசாரணைக்காக, அவர், அலகாபாத் ஐகோர்ட்டுக்கு வந்தார் சமீபத்தில்.
அவர் வந்த தோற்றம், பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. பெண்கள் அணியும் பட்டுப்புடவை அணிந்து இருந்தார். கிராப் தலையில், சவுரி முடி கோர்த்து, நீண்ட தலைமுடியை சீவி, பூக்கள் வைத்திருந்தார். காதில் ஜிமிக்கி, மூக்கில் மூக்குத்தி, கையில் வளையல்கள், காலில் கொலுசு என்று எல்லாம் போட்டிருந்தார். உதட்டில் லிப்ஸ்டிக் போட்டிருந்தார்.
இதைப்பார்த்த போலீசார் பலருக்கும் பெரும் ஷாக். எல்லாரும் சல்யூட் அடித்து மவுனமாக நின்று விட்டனர். கோர்ட்டில் நீதிபதி முன் ஆஜரான அவர், "எனக்கு என் மனைவியிடம் இருந்து விவாகரத்து வேண்டும். அவளுடன் நான் இனி வாழ முடியாது. கடந்த 1991ம் ஆண்டில், ஒரு நாள் என் கனவில், கிருஷ்ண பரமாத்மா வந்தார். அவர் சிரிப்பில் என்னை மறந்தேன். காதல் கொண்டேன், அது முதல் அவர் தான் என் கணவர். நான் அவரின் மனைவி ராதை. எனக்கு விவகாரத்து தாருங்கள்' என்று கோரினார்.
நீதிபதியே ஒரு நொடி கப்சிப் ஆகி விட்டார். இதை கேட்டுக் கொண்டிருந்த மனைவி வீணா, நீதிபதியிடம், "இவர் சொல்வதை நான் நம்பவில்லை. எனக்கு இவரிடம் இருந்து விடுதலை வாங்கித் தாருங்கள், ஜீவனாம்சம் தர உத்தரவிடுங்கள்' என்று பதிலடி கொடுத்து வாதிட்டார்.
"என் கணவராக இருக்கும் இந்த அதிகாரி, மதத்தின் பேரால், தவறுகள் செய்கிறார். அவர் பல பெண்களுடன் தொடர்பு வைத்துள்ளார். இதை மறைக்கவே இப்படி நாடகமாடுகிறார்' என்று போட்டு உடைத்தார் வீணா.
பரபரப்பான இந்த வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டது.
Thanks inamalar....
|
|
|
|