![]() |
|
டி.சே கவிதை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: (தீவிர) இலக்கியம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=32) +--- Thread: டி.சே கவிதை (/showthread.php?tid=2466) Pages:
1
2
|
டி.சே கவிதை - இவோன் - 11-14-2005 கறுத்த பிரேம் கண்ணாடிக்குள்ளிலிருந்து நதியாய் அசைகிறது விழிகள் ஆஸ்த்மாவில் அவதிப்படுகையில் நெஞ்சுதடவிய அம்மாவின் கரங்களை நினைவுபடுத்தும் முதுகில் படரும் விரல்கள் கத்திகளாய் குத்திக்கொண்டிருந்த கடந்த காலம் தூர்ந்துபோக சிறகுகள் முளைக்கின்றன மனவெளி முழுதும் ஒரு பொழுது சப்வேயில் அழகிய காதற்காலம் துளித்துளியாய் கரைந்து கருஞ்சாம்பர் வானமானதையும் அதிலிருந்து முளைத்த துர்ச்சாபத்தேவதைகள் வருடங்கள் மீதேறி நிழ்ல்களாய்ப் பயமுறுத்தியதும் நீயறிவாயா பெண்ணே? பளிச்சிடும் உன் மூக்குத்தியைப்போல நினைவுகளை விரும்பியபோது அணியவும் எறியவும் முடியுமெனில் எவ்வளவு நன்றாகவிருக்கும் எனும் என் வரிகளை இடைமறிக்கும் நீ கடந்தகாலத்தை நினைவு கொள்ள உனக்கு கருஞ்சாம்பர் வானமெனில் எனக்கு பிடுங்கியெறியப்பட்ட மூக்குத்தியும் கழுத்தை இறுக்கிய கரங்களும் என்கிறாய் நேசிப்பை முதன்முதலாய் அனுபவிக்கும் சிலிர்ப்பைப்போல கடந்தகாலத்தின் வலிகளுடன் நம்மால் இன்னொருமுறை இதமாய் நேசிக்கமுடிவது வியப்புத்தான் குளிருக்கு மூட்டிய அடுப்பில் எறிந்த சிறுகுச்சிகளாய் இவ்விரவில் சரசரவென்று பற்றிக்கொள்கிறது காமம் உன் ஆடைகள் களையத்தொடங்கிய மூன்றாம் சாமத்தில் வினாவுகிறாய் முலை தடவும் மென்விரல்கள் நாளை என் மூக்குத்தியை மூர்க்கமாய்ப் பிடுங்கி எறியமாட்டாதென்பதை எப்படி நம்புவது. - poonai_kuddy - 11-15-2005 கவிதை நல்லாருக்கண்ணா.....நல்ல உவமானங்கள் கவிதையில..... ஏனண்ணா கவிதைக்கு தலைப்பு போடுறேலயா???? நினைவுகள்......நேசிப்பு....காதல்....காமம் எண்டு அழகாய் சொல்லியிருக்கிறார்..... ஆனா முலை தடவிற மென்விரல்கள் எண்டு ஏன் சொல்லுறார்??? இடை தடவிற மென்விரல்களும் நல்லாத்தானே இருக்குமண்ணா???? - இவோன் - 11-15-2005 ம்.. பூனைக் குட்டி. அவரது பழைய கவிதை போலில்லாமல்.. இந்த கவிதையில் முலை என்பது திணிக்கப்பட்டதொன்றாக தெரிகிறது. - Eelavan - 11-16-2005 இவோன் நீங்கள் இவோன் என்ற பெயர் வைத்துக்கொண்டதற்கு ஏதாவது காரணமுண்டா அந்தப் பெயரை எங்கிருந்து பெற்றுக்கொண்டீர்கள்.எனக்குத் தெரிந்து ஒரு இலக்கியப் படைப்பில் இப்பெயர் இடம்பெற்றிருக்கிறது.நீங்கள் அதனைப் படித்திருக்கிறீர்களா? - இவோன் - 11-16-2005 அது ஒரு மொழிபெயர்ப்பு இலக்கியம் என்றால் உங்கள் ஊகம் சரி! - Eelavan - 11-16-2005 ம்ம் தாஸ்தயாவ்கியின் கரமசோவ் சகோதரர்கள் நாவலில் வரும் பாத்திரம் இவோன்.நான் படித்ததில்லை அதைப்பற்றிய கட்டுரை மட்டுமே படித்திருக்கிறேன்.அது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதா என்ன? - இவோன் - 11-16-2005 ம்.. சிலர் நீங்கள ்தான் நான் என சொல்வதும் என்னிடம் சிங்கப்பூர் எப்படி இருக்கிறது என கேட்பதுவும் வெளியில் நடந்து கொண்டிருக்கும் போது.. என்னிடம் என்னைப் பற்றிக் கேட்கிறீர்கள். அப்போ... நான் நீங்கள் இல்லயா... - இளைஞன் - 11-16-2005 வணக்கம் இவோன் & ஈழநாதன்... என்ன கவிதைக்கு கருத்து சொல்லாமல் இரண்டு பேரும் கதையளந்துகொண்டு நிற்கிறீர்கள்? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->பூனைக்குட்டியும், இவோனும் சொன்னதுபோல முன்னைய கவிதையைப் போலல்லாமல் இந்தக் கவிதையில் முலை என்கிற சொல் வலிந்து கொண்டுவரப்பட்டதுபோல் தோன்றினாலும், மூக்குத்தி என்பதற்கு பொருத்தமாகவே முலை என்பதை பயன்படுத்தியிருக்கிறார் என்றும் எண்ணத் தோன்றுகிறது. பூனைக்குட்டி சொன்ன "இடை தடவும் மென்விரல்கள்" என்பதை விட "முலை தடவும் மென்விரல்கள்" அழுத்தமாக இருக்கிறது என்பது எனது கருத்து. ஈழநாதன் உங்கள் கருத்தென்ன? - இவோன் - 11-16-2005 அழுத்தம் வேண்டுமென்றால் ஆங்கிலத்தில் எழுதலாம் தானே.. ஹி ஹி ஹி - இளைஞன் - 11-16-2005 ஆகா... நல்ல காலம். எந்த அழுத்தம் என்று கேட்காத வரையில் மகிழ்ச்சி. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - அருவி - 11-16-2005 <!--QuoteBegin-இவோன்+-->QUOTE(இவோன்)<!--QuoteEBegin-->ம்.. சிலர் நீங்கள ்தான் நான் என சொல்வதும் என்னிடம் சிங்கப்பூர் எப்படி இருக்கிறது என கேட்பதுவும் வெளியில் நடந்து கொண்டிருக்கும் போது.. என்னிடம் என்னைப் பற்றிக் கேட்கிறீர்கள். அப்போ... நான் நீங்கள் இல்லயா...<!--QuoteEnd--><!--QuoteEEnd--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அப்ப நீங்கள் அவரில்லையா........... - Vasampu - 11-16-2005 <b>ஏன் இளைஞன் அதனை முகம் தடவும் என எழுதினால் அழுத்தம் குறைகின்றதா என்ன??? நோக்கம் அழுத்தத்திலா அல்லது அழுத்தப் படுவதிலா??? சில இடங்களில் வில்லங்கமாக சிலவற்றை புகுத்தும் போது அழகான படத்தின் மீது வர்ணம் தீட்டுவதாக எண்ணிக் கொண்டு சேறு புூசுவது போல் ஆகிவிடுகின்றது.</b> - Eelavan - 11-17-2005 நேசிப்பு,காதல்,காமம் என்னும் போது அழகாய்த் தெரிகிறது ஆனால் முலை தடவும் எனும்போது ஆபாசமாய்த் தெரிகிறதா அப்படியாயின் காமம் என்பது? இங்கு முலை தடவுதல் என்பது காமத்தின் குறியீடாய்ப் பயன்படுத்தப்படுகிறது.ஏற்கனவே வலிகளை அனுபவித்திருந்த இருவருக்குள்ளும் நேசிப்பு உருவாகின்ற போதும் அனுபவித்த வலியின் கசப்பு ஆழ்மனத்தில் இன்னமும் மிச்சமிருப்பதாய் சொல்ல வருகிறது கவிதை. இன்று உனது வேட்கைக்கு என்னைப் பயன்படுத்தும் நீ நாளையே ஆணாதிக்கக் காரனாய் என்மீது ஆதிக்கம் செலுத்த முனையமாட்டாயா என்பது பெண்ணின் கேள்வி முகமும் இடையும் காமத்தின் குறியீடுகளாய் அமைவதில்லை.முகம் தடவினான் எனும் போதோ,இடை தடவினான் எனும்போதோ இருவரும் உடலுறவு கொண்டார்கள் எனும் சித்திரம் உங்களுக்கு உருவாகப்போவதில்லை.இருவரும் உடலுறவு கொள்வதாய்க் குறிப்பிட கவிஞர் இதனை பயன்படுத்தியிருக்கிறார்.வேண்டுமானால் இளைஞன் சொன்னது போன்று அழுத்தத்திற்காக இருக்கலாம்(இளைஞன் எந்த அழுத்தமா உங்களுக்கு குறும்பு அதிகம்) ஓரோர் பொழுதில் இப்படித் தோன்றுகிறது உன் ஆடைகள் களையத்தொடங்கிய மூன்றாம் சாமத்தில் வினாவுகிறாய் இதே கரங்கள் நாளை என் மூக்குத்தியை மூர்க்கமாய்ப் பிடுங்கி எறியமாட்டாதென்பதை எப்படி நம்புவது. இப்படி அமைத்திருந்தால் கூட பொருத்தமாக இருந்திருக்கும். - இளைஞன் - 11-17-2005 ஓம் ஈழவன் நீங்கள் குறிப்பிடுவது போல் உடலுறவு கொண்டார்கள் என்பதை வெளிப்படுத்தவே "முலை" என்கிற சொல் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. அதேநேரத்தில் நீங்கள் எழுதியுள்ள <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> உன் ஆடைகள் களையத்தொடங்கிய மூன்றாம் சாமத்தில் வினாவுகிறாய் இதே கரங்கள் நாளை என் மூக்குத்தியை மூர்க்கமாய்ப் பிடுங்கி எறியமாட்டாதென்பதை எப்படி நம்புவது. <!--QuoteEnd--><!--QuoteEEnd--> என்கிற வரிகளும் பொருத்தமாக இருந்தாலும், எனக்கென்னவோ மூக்குத்தி என்பதற்கு, முலை என்பதே பொருத்தமாக இருக்கிறது. முலை என்கிறபோது முலைக்காம்பைக் கருத்தில்கொண்டே கவிஞர் மூக்குத்திக்கு ஏற்றதாய் கவிதையில் கையாண்டிருக்கிறார். இது எனது பார்வை மட்டுமே. - Nithya - 11-18-2005 என் அபிப்பிராயமும் கூறலாம் என்று நினைக்கிறேன்.. என்னைப் பொறுத்தவரை இந்த முலை மற்றும் மூக்குத்தி பொருத்தமாகத்தான் உள்ளது.. இது வாசகர்கள் சம்மந்தப்பட்டது..! இங்கு குறிப்பிட்ட சொல்லை கவிஞர் தேர்வு செய்திராவிடின் கவிதை.. அழம் கூடியதாக இருந்திருக்க வாய்பில்லை..! நாயகனுக்கும் நாயகிக்கும் இருக்கும் நெருக்கத்தையும்.. உரிமையுமே இது எடுத்துக்காட்டுகிறது என்பது !!! என் கருத்து..!! :oops: :oops: :oops: - அருவி - 11-18-2005 Quote:ஆஸ்த்மாவில் அவதிப்படுகையில் கவிஞர் சரியான முறையில் பயன்படுத்தியிருக்கிறார் என்பதே எனது நிலைப்பாடு. ஏற்கனவே கசப்புடன் இருந்தவர்கள் அதனை மறந்து ஒன்றான போதினிலும் கடந்த காலம் ஒரு நிழலாய் நின்று எச்சரிக்கையுடன் இவ்வாறான கேள்வியைக் கேட்க தூண்டுகிறது. இன்று காமத்தில் இவ்வாறு அன்பாக இருக்கிறாயே நாளை முன்பு போல் நீ மாறமாட்டாய் என்பதற்கு என்ன உத்தரவாதம், இதை இப்படி விளக்குவதை விட வேறு எப்படி மிக அழுத்தமாக, ஏக்கமாக விளக்க முடியும் அப்படி விளக்க முடியுமென்றால் எங்கே சிலவற்றைத் தாருங்கள் பார்க்கலாம். அதைவிட இங்கு இச்சொல் மிக நாகரிகமாக எடுத்தாளப்பட்டிருக்கின்றது என்பது என் கருத்து. இச்சொல்லானது தமிழ்மொழியின் பண்டைய இலக்கியங்களில் மிகவும் சாதாரணமாக கையாப்பட்டிருக்கின்றது. - Vasampu - 11-18-2005 <b>நித்தியா:</b> அட உங்க கருத்தைச் சொன்னீங்க. அப்புறம் ஏனுங்க முகம் சிவக்குது. ஓஓஓஓஓஓஓஓ நாணத்தாலோ??????? - lollu Thamilichee - 11-19-2005 <!--QuoteBegin-இளைஞன்+-->QUOTE(இளைஞன்)<!--QuoteEBegin-->பூனைக்குட்டி சொன்ன \"இடை தடவும் மென்விரல்கள்\" என்பதை விட \"முலை தடவும் மென்விரல்கள்\" அழுத்தமாக இருக்கிறது என்பது எனது கருத்து. <!--QuoteEnd--><!--QuoteEEnd--> வணக்கம் இளைஞன் அண்ணா அது என்னண்ணா ஆ கூ என்றால் "உராய்வு அழுத்தம் தேய்மானம்" என்று ஒரே பல்லவில நிக்குறியல்? ஊடலோ? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- nallavan - 11-19-2005 ம். சச்சரவில்லாமல், சண்டையில்லாமல் விவாதம் போகுது. சந்தோசமாத்தானிருக்கு. எனக்குச் சொல்லவேயில்லயே இப்பிடியொரு பக்கம் தொடங்கியிருக்கிறதைப்பற்றி. சரி, முலை என்ற சொல் பற்றி இளைஞனின் கருத்துத்தான் எனதும். அதிலயும் முலைக்காம்பைக் காட்டி நிறுவினரே,,,, எங்கயோ போயிட்டீர். வசம்பு, உமக்குக் குசும்பு அதிகம்தான். <b>அழுத்தமான</b> பதிவுகளைப் போடுங்கள். கருத்துக்களை <b>அழுத்தமாக</b>ச் சொல்லுங்கள். <b>சீரியஸ்</b> எண்டும் சொல்லலாம். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - இளைஞன் - 11-19-2005 <!--QuoteBegin-lollu Thamilichee+-->QUOTE(lollu Thamilichee)<!--QuoteEBegin--><!--QuoteBegin-இளைஞன்+--><div class='quotetop'>QUOTE(இளைஞன்)<!--QuoteEBegin-->பூனைக்குட்டி சொன்ன \"இடை தடவும் மென்விரல்கள்\" என்பதை விட \"முலை தடவும் மென்விரல்கள்\" அழுத்தமாக இருக்கிறது என்பது எனது கருத்து. <!--QuoteEnd--><!--QuoteEEnd--> வணக்கம் இளைஞன் அண்ணா அது என்னண்ணா ஆ கூ என்றால் "உராய்வு அழுத்தம் தேய்மானம்" என்று ஒரே பல்லவில நிக்குறியல்? ஊடலோ? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->என்ன செய்வது தமிழிச்சி. சிலபேருக்கு காதல் சிலபேருக்கு ஊடல் இளைஞனுக்கு மோதல் - உராய்வு. |