![]() |
|
கனவில் கிருஷ்ணர் மீது "லவ்' வந்ததால், மனைவியை பிரிந்தார் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: கனவில் கிருஷ்ணர் மீது "லவ்' வந்ததால், மனைவியை பிரிந்தார் (/showthread.php?tid=2473) |
கனவில் கிருஷ்ணர் மீது "லவ்' வந்ததால், மனைவியை பிரிந்தார் - SUNDHAL - 11-14-2005 என் கனவில் கிருஷ்ண பரமாத்மா தோன்றினார், அவரை பார்த்த மாத்திரத்தில் காதல் வயப்பட்டேன், அவருடன் ராதாவாக வாழ்ந்து வருகிறேன். அதனால், என் மனைவியுடன் விவாகரத்து வேண்டும்' என்று கோர்ட்டில் சீனியர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் பகிரங்கமாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். காக்கிச்சட்டை அணிய வேண்டிய அதிகாரி, உடலில் பட்டுப்புடவை, காதில் ஜிமிக்கி, கையில் வளையல்கள், காலில் கொலுசு, உதட்டில் லிப்ஸ்டிக், தலையில் செயற்கை முடியை பின்னி பூ அலங்காரம் வேறு... இப்படி ஒரு மிடுக்கான ஐ.ஜி., கோர்ட்டுக்கு வந்தால், எப்படியிருக்கும். அவர் காரில் வந்திறங்கிய போது, அத்தனை போலீசாரும் அப்படியே உறைந்து போய்விட்டனர். இப்படி ஒரு கூத்து நடந்த மாநிலம் உத்தரப்பிரதேசம். பெண்ணாக கோர்ட்டுக்கு வந்த ஐ.பி.எஸ்., அதிகாரி தேவேந்திர கிஷோர் பாண்டா. இவரது மனைவி வீணா. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இருவருமே, பெரியவர்கள். ஒரு மகன், மும்பையில் வருமானவரித்துறை அதிகாரியாக இருக்கிறார். இன்னொருவர் பெங்களூரில் சாப்ட்வேர் இன்ஜினியராக இருக்கிறார். ஆரம்பத்தில், பாண்டாவிடம் நடை, உடை, பாவனை எல்லாம் சரியாகத்தான் இருந்தது. நேர்மையான, பணியில் கறாராக இருக்கும் பாண்டாவுக்கு பிடித்தமானது ஆன்மீகம் தான். வேலையை அடுத்து பெரிதும் நேசிப்பது கடவுள் பக்தியை தான். அடிக்கடி, பல கோயில்களுக்கு, குறிப்பாக கிருஷ்ணர் கோயிலுக்கு போவார். கடந்த 1991ம் ஆண்டு வரை, ஏதோ பக்தியில் தீவிரமாக இருப்பாரே தவிர, அதனால், குடும்பத்துக்கோ, பணிக்கோ எந்த பாதிப்பும் இருக்காது. அதன் பின்னர் அவரிடம் படுமோசமான மாற்றம் ஏற்பட்டது. வீட்டில் அடிக்கடி மனைவியின் உடைகளை எடுத்து போட்டு கொண்டு, கிருஷ்ணர் படத்தின் முன்பு உட்கார்ந்து, ரசிப்பாராம். வேலைக்கு போகும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் வீட்டில் புடவையைத் தான் உடுத்தி இருப்பார். நாட்கள் நகர நகர, மனைவி வீணாவுக்கு, கணவன் பாண்டாவின் நடை, உடை, பாவனையில் சந்தேகம் ஏற்பட்டது. "கடவுள் பக்தி என்ற பெயரில் இந்த மனுஷனுக்கு ஏதோ மூளை மழுங்கிப் போய்விட்டது' என்று உறுதி செய்து கொண்டாள். அவரது சந்தேகத்தில் தவறில்லை. கடந்த சில ஆண்டாகவே, மனைவியிடம் நெருங்குவதில்லை. வீட்டில் ஒட்டுதல் குறைந்தது. மனைவிக்கு இன்னொரு சந்தேகம் இருந்தது, "இந்த மனிதருக்கு ஏதோ தவறான பழக்க வழக்கங்கள் உள்ளன. அதை மறைக்கத்தான் ஆன்மீக போர்வை போர்த்தி வருகிறார். இதை உடைக்க வேண்டும்' என்றும் கருவிக் கொண்டாள். வீட்டில் அடிக்கடி சிறு சிறு மோதல் வருமே தவிர, பெரிய அளவில் வராது. ஆனாலும், கணவனின் நடத்தையால் வெறுத்துப்போய் தன் தாய் வீட்டுக்கு சென்று விட்டார் வீணா. சில மாதங்கள் முன்பு, கோர்ட்டில் வழக்கு போட்டார் வீணா. "என் கணவனுடன் எனக்கு தாம்பத்ய வாழ்க்கை நீடிக்க வேண்டும்' என்று வழக்கு போட்டார் முதலில். இது கடந்த 2003ம் ஆண்டில் போடப்பட்டது. ஆனால், கணவனிடம் எந்த மாற்றமும் இல்லாததால், அவரிடம் இருந்து ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், சமீபத்தில் கணவன் பாண்டாவும், கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார். "என் மனைவியிடம் இருந்து விவாகரத்து வாங்கி தர வேண்டும்' என்று கோரினார். இந்த விசாரணைக்காக, அவர், அலகாபாத் ஐகோர்ட்டுக்கு வந்தார் சமீபத்தில். அவர் வந்த தோற்றம், பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. பெண்கள் அணியும் பட்டுப்புடவை அணிந்து இருந்தார். கிராப் தலையில், சவுரி முடி கோர்த்து, நீண்ட தலைமுடியை சீவி, பூக்கள் வைத்திருந்தார். காதில் ஜிமிக்கி, மூக்கில் மூக்குத்தி, கையில் வளையல்கள், காலில் கொலுசு என்று எல்லாம் போட்டிருந்தார். உதட்டில் லிப்ஸ்டிக் போட்டிருந்தார். இதைப்பார்த்த போலீசார் பலருக்கும் பெரும் ஷாக். எல்லாரும் சல்யூட் அடித்து மவுனமாக நின்று விட்டனர். கோர்ட்டில் நீதிபதி முன் ஆஜரான அவர், "எனக்கு என் மனைவியிடம் இருந்து விவாகரத்து வேண்டும். அவளுடன் நான் இனி வாழ முடியாது. கடந்த 1991ம் ஆண்டில், ஒரு நாள் என் கனவில், கிருஷ்ண பரமாத்மா வந்தார். அவர் சிரிப்பில் என்னை மறந்தேன். காதல் கொண்டேன், அது முதல் அவர் தான் என் கணவர். நான் அவரின் மனைவி ராதை. எனக்கு விவகாரத்து தாருங்கள்' என்று கோரினார். நீதிபதியே ஒரு நொடி கப்சிப் ஆகி விட்டார். இதை கேட்டுக் கொண்டிருந்த மனைவி வீணா, நீதிபதியிடம், "இவர் சொல்வதை நான் நம்பவில்லை. எனக்கு இவரிடம் இருந்து விடுதலை வாங்கித் தாருங்கள், ஜீவனாம்சம் தர உத்தரவிடுங்கள்' என்று பதிலடி கொடுத்து வாதிட்டார். "என் கணவராக இருக்கும் இந்த அதிகாரி, மதத்தின் பேரால், தவறுகள் செய்கிறார். அவர் பல பெண்களுடன் தொடர்பு வைத்துள்ளார். இதை மறைக்கவே இப்படி நாடகமாடுகிறார்' என்று போட்டு உடைத்தார் வீணா. பரபரப்பான இந்த வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டது. Thanks inamalar....
|