Yarl Forum
இந்த கொடுமையை எங்கே போய் சொல்வது - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: இந்த கொடுமையை எங்கே போய் சொல்வது (/showthread.php?tid=2468)



இந்த கொடுமையை எங்கே போய் சொல்வது - Vaanampaadi - 11-14-2005

பாக்.ராணுவம் கொடூரம்: பூகம்ப பகுதிகளில் சிறுவர்களை கடத்தி சிறுநீரகம் விற்பனை

முசாபராபாத்

பாகிஸ்தானில் பூகம்ப பகுதிகளில் உள்ளவர்களை கடத்தி சிறுநீரகத்தை எடுக்கிறார்கள். பாகிஸ்தான் ராணுவமும் இதற்கு உடந்தையாக உள்ளதாக புகார் கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் கடந்த மாதம் 8-ந்தேதி பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இஸ்லாமாபாத், பெஷாவர் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள முசாபராபாத் ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட இந்த பூகம்பத்தில் 80 ஆயிரம் பேர் வரை பலியாகி விட்டனர். 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து வீடு வாசல்களை இழந்து முகாம்களில் தங்கவைக்கப் பட்டுள்ளனர்.

முசாபராபாத்தில் பூகம்பத்தில் காயம் அடைந்தும், பலியானவர்களின் உடல்களையும் அங்குள்ள சிலர் கடத்தி விற்பனை செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து சிறுநீரகம், கண், ஈரல் போன்ற உடல் பாகங்களையும் இந்த கிரிமினல்கள் எடுத்து விற்பனை செய்து இருக்கிறார்கள். சிறு வர்களையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை.

இந்த கொடுமைக்கு பாகிஸ்தான் ராணுவமும் உடந்தையாக இருந்ததாக புகார் கூறப்பட்டுள்ளது.

காஷ்மீர் விடுதலை முன்னணி தீவிரவாதிகள்தான் இந்த கடத்திலின் பின்னனியில் இருந்துள்ளனர்.

இது தவிர முகாம்களில் தங்கி இருந்த சிறுவர்கள் மற்றும் பெண்களை சிலர் கடத்தி தீவிரவாதிகளுக்கு விற்பனை செய்துள்ளனர். கடத்தப்பட்டவர்கள் அந்த இயக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மாலைமலர்