| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 510 online users. » 0 Member(s) | 507 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,319
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,233
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,297
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,642
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,072
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,466
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,499
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,039
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,239
|
|
|
| கிழக்கில் இரு விடுதலைப்புலிகள் படுகொலை |
|
Posted by: வியாசன் - 11-15-2005, 08:51 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
அம்பாறையில் இரு அரசியற் போராளிகள் வித்துடல்களாக மீட்பு
அக்கரைப்பற்று - அம்பாறை வீதியில் உள்ள பள்ளிக்குடியிருப்புக் குளக்கட்டில் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் போராளிகள் இருவர் வித்துடல்களாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக் கின்றன. இவர்கள் இருவரும் அக்கரைப்பற்றில் முஸ்லீம் பிரதிநிதி களுடன் சந்திப்பொன்றை மேற்கொண்ட பின்னர் பொருட்களைக் கொள்வனவு செய்யச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
(படங்கள் இணைப்பு)
முஸ்லீம் பிரதிநிதிகளுடனான சந்திப்பு முடிந்த பின்னர் பொருட்கள் கொள்வனவிற்குச் செல்லும் வரை இவர்களுடனான தொடர்புகள் இருந்ததாகவும், அதன் பின்னர் தொடர்புகள் எவையும் கிடைக்கவில்லை என அம்பாறை மாவட்ட அரசியற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வாழைச்சேனையைச் சேர்ந்த சுரேஸ் (அகவை 26), மற்றும் விநாயகபுரம் திருக்கோவிலைச் சேர்ந்த வெள்ளை (அகவை 22) ஆகிய போராளிகளே வீரச்சாவைத் தழுவிக் கொண்டதாக தெரியவருகிறது.
சுட்டது சங்கதியிலிருந்து
|
|
|
| 3 வயது குழந்தையின் கொலையை மறைத்த குஷ்பு |
|
Posted by: Vaanampaadi - 11-15-2005, 08:34 AM - Forum: சினிமா
- Replies (8)
|
 |
3 வயது குழந்தையின் கொலையை மறைத்த குஷ்பு
நவம்பர் 15, 2005
சென்னை:
ஒரு குழந்தையின் கொலையை மறைத்ததாக குஷ்பு மீது விடுதலை சிறுத்தைகள் அமைப்பு புதிய வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளது.
சென்னை எழும்பூர் மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வி. சிறுத்தைகள் மாநில மாணவரணித் துணைச் செயலாளர் ரவிசந்திரன் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார்.
அதில், கடந்த 2004ம் ஆண்டு சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டல் விருந்து நிகழ்ச்சி ஒன்றில் குஷ்பு கலந்து கொண்டிருக்கிறார். இந்த விருந்து நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர் ஒருவரின் 3 வயது பெண் குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு குளியறையில் படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்துள்ளது.
இந்த கொலைச் சம்பவத்தை குழந்தையின் பெற்றோரும், ஓட்டல் நிர்வாகத்தினரும் மறைத்துவிட்டனர். போலீசில் புகார் ஏதும் கொடுக்கவில்லை. இந்த விவரம் தெரிந்த குஷ்புவும் கூட அதை போலீசுக்குச் சொல்லவில்லை.
இதைபற்றி கடந்த 2004ம் ஆண்டு பிரபல வாரப் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி கொடுத்த குஷ்பு, குழந்தையின் கொலைச் சம்பவம் பற்றி குறிப்பிட்டு அந்த சம்பவம் மனதளவில் என்னை மிகவும் பாதித்து விட்டது என்று தெரிவித்துள்ளார்.
இது பற்றி அப்போதைய போலீஸ் கமிஷனரிடம் நிருபர்கள் கேட்டபோது, குழந்தை கொலை பற்றி பெற்றோரோ, ஓட்டல் நிர்வாகத்தினரோ புகார் ஏதும் கொடுக்கவில்லை. அதனால் நடவடிக்கை எடுக்க இயலாது என்று கூறிவிட்டார்.
குழந்தை கொலை பற்றி குஷ்புவுக்கு தெரியும். இதனால் தான் அது பற்றி வாரப்பத்திரிகைக்கு பேட்டி கொடுத்துள்ளார். ஆனால் கொலை பற்றி போலீசுக்கு தகவல் கொடுக்காமல் மறைத்துள்ளார்.
குற்றவியல் விசாரணை முறைச் சட்டப்பிரிவு 39ன் படி கொலையை நேரில் பார்த்தவர் அதுபற்றி உடனே போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தகவல் தெரிவிக்காவிட்டால் அது இபிகோ 201,202,203 பிரிவுகளின்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.
எனவே இது தொடர்பாக நடிகை குஷ்புவிடம் விசாரணை நடத்தி, அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்குக்கு ஆதாரமாக வாரப் பத்திரிகைக்கு குஷ்பு அளித்த பேட்டியின் நகலும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் இன்னொரு விவகாரத்தில் குஷ்பு மாட்டியுள்ளார்.
Thatstamil
|
|
|
| ¸Õ¨½ì¦¸¡¨Ä |
|
Posted by: ¦ÀâÂôÒ - 11-15-2005, 02:58 AM - Forum: பிறமொழி ஆக்கங்கள்
- Replies (5)
|
 |
¸Õ¨½ì¦¸¡¨ÄìÌ ¬¾ÃÅ¡¸ º¢Ä Åâ¸û
<span style='font-size:25pt;line-height:100%'><b>Feeling Strongly for Euthanasia</b>
Euthanasia is the practice of killing without pain a person who is suffering from a disease that cannot be cured. The word ''Euthanasia'' is originally from Greek words meaning \"good death\" or \"happy death''.
Euthanasia, the mercy killing, is prohibited and illegal in most of the countries in this world unfortunately. But humanely In April 2002, the Netherlands became the first country in the world to legalize euthanasia. Then Belgium became the second country to legalize euthanasia in September 2002. The Netherlands and Belgium are the only jurisdictions, the authority that an official organization has to make legal decisions, on Euthanasia. Switzerland and Australia also allows Assisted Suicide and hundreds of people went to these countries to die peacefully from other countries.
In this modern world nearly all pain can be eliminated and, only some rare cases where it cannot be eliminated, it can still be reduced significantly if proper treatment is provided. But the people, who have shorter life expectancies, suffering from various sickness, cancers, terminal illnesses, extreme pain, and irreversible comas often have to suffer harsh and continuous distress. Doctors will say pains can be reduced by the repeated use of pain killer and sleeping medicines, but often at the price of weakening of the personality and other distressing side effects. Some illnesses always cannot be relieved by pain killers or sleeping pills. Diseases of the nervous system often lead to paralysis or inability to walk, to cruel headaches, to blindness and to the misery of bedsores. A stroke patient may be conscious but helpless. I have seen many people in bed who were crying inside and willing nothing to do, Even if they want to turn over in the bed they depends on others. Concern about the actual process of dying, not the fact of dying, worries people. It is the fear of being kept alive in a pitiful condition, which leads people to the conclusion that death would be preferable.
I strongly feel that no one has the rights to hold a person, who is suffering from unbearable pain and wishing to die peacefully, unless they have got the treatment to bring the patient back to normal; not to keep the person 'alive but looks death'. Neither the law nor medical technology requires that \"everything be done\" to keep a patient alive, Insistence against the patient's wishes, that death be postponed by somebody is contrary to law and practice. It would also be cruel and inhumane. So in my argument is Euthanasia must be legalized and a world organized Euthanasia comity should be created and which will decide and permit the people to get rid of their souls from whole pains peacefully.</span>
¦º¡üÀ¢¨Æ¸û, ¦À¡ÕðÀ¢¨Æ¸û, ¾Ã×ôÀ¢¨Æ¸û ²§¾Ûõ þÕôÀ¢ý ¾ÂצºöÐ «È¢Âò¾¡Õí¸û. «òмý ¯í¸û ¸Õò¨¾Ôõ Óý¨ÅÔí¸û. ¿ýÈ¢.
|
|
|
| நிற்பதுவே! நடப்பதுவே! பறப்பதுவே! |
|
Posted by: Birundan - 11-15-2005, 12:30 AM - Forum: தத்துவம் (மெய்யியல்)
- Replies (1)
|
 |
'உலகத்தை நோக்கி வினவுதல்' என்ற தலைப்பில் பாரதியார் ஒரு பாடல் பாடியுள்ளார். அது 'பாரதி' திரைப்படத்திலும் வந்து இப்போது பலரும் அறிந்த ஒரு பாடலாகி விட்டது.
மகாகவி புதுவையில் இருக்கும் போது தத்துவ விசாரணையில் மிகுதியும் ஈடுபாடு கொண்டிருந்தார். அப்போது புதுவையில் வாழ்ந்து வந்த அரவிந்தருடன் அடிக்கடி தத்துவங்களைப் பற்றி விவாதம் செய்து கொண்டிருந்தார் என்றும் அறிகிறோம்.
மாயாவாதம் எனப்படும் அத்வைதத் தத்துவம் இந்திய இறைத்தத்துவங்களிலேயே மிகப் புகழ் பெற்றது. இந்தத் தத்துவப்படி இங்கு உள்ளதெல்லாம் இறைவனைத் தவிர வேறொன்றும் இல்லை. பெயர் உருவம் உள்ளதாய்க் காண்பதெல்லாம் மாயை. ப்ரம்மம் சத்யம்; ஜகத் மித்யை - இறைவன் மட்டுமே உண்மை, இந்த உலகம் பொய் என்பது அதன் கருத்து.
பாரதியார் அந்தக் கருத்தைப் பற்றி இந்தப் பாடலில் பாடி பாடலிறுதியில் தன் கருத்தை வலியுறுத்துகிறார்.
<b>நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம்
சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே கேட்பதுவே கருதுவதே நீங்களெல்லாம்
அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?</b>
இங்கு உள்ளதெல்லாம் இறைவடிவம் என்பதில் பாரதியாருக்கு எந்த அளவும் சந்தேகம் இல்லை. ஆனால் பெயரும் உருவமும் கொண்டு தோன்றுவதெல்லாம் பொய் என்னும் கொள்கையைத் தான் அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
நிலையாய் ஓரிடத்தில் நிற்கும் மலைகள், மரங்கள் போன்றவற்றை 'நிற்பதுவே' என்றும், நடக்கும் விலங்கினங்களை 'நடப்பதுவே' என்றும், பறக்கும் பறவையினங்களை 'பறப்பதுவே' என்றும் விளித்து, உங்களை நான் எப்போதும் பார்த்துக்கொண்டு இருக்கிறேனே நீங்கள் என்ன நான் காணும் சொப்பனமா? எனக்கு வந்துள்ள அழகான கனவா? கானல் நீர் போல், இல்லாத ஒன்று இருப்பது போல் தோன்றும் தோற்ற மயக்கங்களா? என்று கேட்கிறார்.
பிறந்த நாள் முதல் எத்தனையோ விஷயங்களை கற்கிறோம். மற்றவர்கள் அனுபவங்களைக் கேட்டு அதிலும் பல பாடங்களைப் பெறுகிறோம். இப்படி கற்றும் கேட்டும் உள்ள விஷயங்களை மனதில் கருதி அசை போட்டு ஒரு நிலையான கருத்தை அடைகிறோம். இப்படி நாம் நாள்தோறும் செய்பவையெல்லாம் வெறும் அற்ப மாயைகளா? இவற்றால் எந்த பயனும்மில்லையா? கற்பதிலும் கேட்பதிலும் மனதில் கருதுவதிலும் எந்த ஆழ்ந்த பொருளும் இல்லையா? என்கிறார்.
<b>வானகமே இளவெயிலே மரச்செறிவே நீங்களெல்லாம்
கானலின் நீரோ? வெறும் காட்சிப் பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்தே போனதனால்
நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ?</b>
அதிகாலையிலும் நடுப்பகலிலும் பொன்மாலைப் பொழிதினிலும் வானம் தீட்டும் வண்ண வண்ண ஓவியங்களைக் கண்டு ஆச்சரியமும் ஆனந்தமும் எத்தனை முறை அடைந்துள்ளோம்? அதிகாலையில் வீசும் இளவெயில் உடலுக்கும் மனதிற்கும் எத்தனைப் புத்துணர்ச்சி அளிக்கிறது என்பதை அனுபவித்துள்ளோம் அல்லவா? பசுமையான மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ள கானகத்தைக் கண்டால் மனது எப்படி துள்ளிக் குதிக்கிறது. இவையெல்லாம் கானலின் நீர் போல் தானோ? ஒன்றை பிறிதொன்றாய்க் காணும் காட்சிப் பிழைதானோ? என்கிறார்.
இவ்வுலகில் எந்தனையோ மாந்தர் வாழ்ந்தனர். பெரிய பெரிய வீரர்களும் பேரரசர்களும் பேரறிஞர்களும் செயற்கரிய செய்தவர்களும் எத்தனையோ பேர் வாழ்ந்துள்ளனர். ஆனால் அவர்களெல்லாம் வெறும் கனவினைப் போல் இப்போது இல்லாமல் போனார்கள். அது போல் நானும் ஒரு கனவினைப் போல் ஒன்றும் இல்லாமல் போய்விடுவேனோ? இந்த உலகம் உண்மையிலேயே பொய்தானோ? என்கிறார்.
'தோன்றிற் புகழொடு தோன்றுக' என்னும் பொய்யாமொழிக்கேற்ப அந்த செயற்கரிய செய்தவர்களெல்லாம் இப்போது இல்லாமல் மரித்து புதைந்து அழிந்து போனாலும், அவர் செய்த செயல்களின் பலன்களை அவர்களின் பின்னால் வந்த பல தலைமுறையினர் அனுபவிப்பதும் அவர் தம் புகழுடம்பால் என்றும் வாழ்வதும் உண்மையாதலால் அவர்கள் வெறும் கனவாய்ப் போய்விடவில்லை. இந்த ஞாலமும் பொய்யில்லை என்பது இப்பாடலில் தொக்கி நிற்கும் கருத்து என நினைக்கிறேன்.
<b>காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ? அங்குக் குணங்களும் பொய்களோ?
சோலையிலே மரங்களெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால்
சோலை பொய்யாமோ? இதைச் சொல்லொடு சேர்ப்பாரோ?</b>
ஒரு நாளிலேயே காலை, பகல், மாலை, இரவு, 24 மணி நேரம், அதைவிட சிறிய நேர பாகுபாடுகள், நாள் என்பதைவிடப் பெரிய நேர பாகுபாடுகள் - வாரம், மாதம், வருடம், நூற்றாண்டு என்று காலத்தைப் பற்றி நாம் எல்லோரும் ஒரே நினைவு கொண்டுள்ளோம். அதனால் தான் உலக நிகழ்ச்சிகள் தடை இல்லாமலும் குழப்பம் இல்லாமலும் நடந்து கொண்டிருக்கின்றன. மேலும் காலம் இறைவனின் உருவம் என்றொரு கொள்கையும் உண்டு.
இப்படி பல வகையாக பிரிக்கப்பட்ட கால அளவுகளில் நாம் எத்தனையோ காட்சிகளைக் காண்கிறோம். அவை எத்தனைக் காலம் ஆனாலும் நம் நினைவில் நிற்கிறது. அப்படி நிற்கும் காலத்தைப் பற்றிய நினைவும் அதில் தோன்றும் காட்சிகளைப் பற்றிய நினைவுகளும் பொய்யா? என்கிறார். நல்லது, தீயது, சாந்தம், வேகம், அறியாமை என்று நாம் காணும் பல விதமான குணங்களும் பொய்களோ? என்கிறார்.
விதை உண்மை. அப்படியென்றால் அதிலிருந்து தோன்றும், சோலையில் உள்ள மரங்கள் எல்லாம் கூட உண்மையாகத்தானே இருக்க வேண்டும். இறைவன் உண்மை. அந்த இறைவனிடமிருந்து தோன்றிய, தோன்றும், தோன்றப்போகும் உலகும் அதில் வாழும் உயிர்களும் எப்படி பொய்யாக முடியும். உண்மையாம் இறைவனிடமிருந்து தோன்றுவதால் அவைகளும் உண்மையாகத் தானே இருக்கவேண்டும். அவை பொய் என்றால் அதனை ஒரு பேச்சாக மதிக்க முடியுமா? என்கிறார்.
<b>காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ?
வீண்படு பொய்யிலே நித்தம் விதி தொடர்ந்திடுமோ?
காண்பதுவே உறுதிகண்டோம் காண்பதல்லால் உறுதியில்லை
காண்பது சக்தியாம்; இந்தக் காட்சி நித்தியமாம்.</b>
இந்த உலகில் எதுவுமே நிலையில்லை; எல்லாம் ஒரு நாள் அல்லது ஒரு நாள் மறைந்து போகும் என்றால், அது சரி, இந்த உலகில் எதுவுமே புதிதாய் தோன்றுவதில்லை; அதனால் மறைந்து போகும் அவையெல்லாம் மீண்டும் தோன்றுமன்றோ? அதனால், நிலையில்லை என்பதால் அவற்றை பொய் எனலாகுமோ? அப்படி அது பொய் என்றால், நல்வினை தீவினை என்று நாம் செய்யும் செயலுக்கேற்ப வந்துறும் விதி எப்படி தொடர்ந்து வருகிறது. கண நேரத்தில் தோன்றி மறைபவை இக்காட்சிகள் என்றால், நாம் செய்யும் செயல்களும் கண நேரத்தில் தோன்றி மறையும் பொய்களாய்த் தானே இருக்க வேண்டும். அப்படிப் பட்ட பொய்களின் பலனை நாம் எப்படி செய்த வினைகளுக்கு ஏற்ப அனுபவிக்கிறோம்? அவ்விதம் விதி தொடர்ந்து வந்து ஊட்டுவதால், தோன்றி மறையும் இவை யாவும் நிலையில்லாதவை மட்டுமே; பொய்களல்ல, என்கிறார்.
நாம் காண்பதெல்லாம் உறுதியானவை; பொய்களில்லை. ஏனெனில் அவை யாவும் சக்தியின் உருவங்களாம். அதனால் இந்த காட்சிகளெல்லாம் அந்த ஆதி சக்தியைப் போலவே நித்தியமானவை என்று கூறி தன் கருத்தை வலியுறுத்துகிறார்.
நன்றி>பாட்டுக்கொரு புலவன் பாரதி
|
|
|
| பாலுமகேந்திரா கண்ணீர் |
|
Posted by: AJeevan - 11-15-2005, 12:30 AM - Forum: சினிமா
- Replies (1)
|
 |
<img src='http://www.frontlineonnet.com/fl2213/images/20050701003911106.jpg' border='0' alt='user posted image'>
<b>தனுஷ் படம் பார்க்க வந்த பாலுமகேந்திரா கண்ணீர் விட்டு அழுதார்.</b>
<img src='http://www.teakada.com/archives/icons/athuoru.gif' border='0' alt='user posted image'>
அது ஒரு கனாக்காலம் படம் பத்திரிகையாளர்களுக்கு பிரிவியூ தியேட்டரில் திரையிடப்பட்டது. முன்னதாக பாலுமகேந்திரா வந்து அமர்ந்திருந்தார்.
திரையில் படம் போடுவதற்கு முன் பேசினார் பாலு, …இப்படத்தை தொடங்கிய நாளிலேயே எனக்கு உடல் நிலை சரியில்லாமல் போய்விட்டது. மீண்டும் உயிர் பிழைப்பேனா?
இந்தப் படத்தை முடிப்பேனா? என்ற சந்தேகம் எனக்கு. உடல் நிலை சரியானதும் ஒரு வழியாக படத்தை கஷ்டப்பட்டு எடுத்து முடித்தேன். படத்தைப் பார்த்துவிட்டு கருத்தைச் சொல்லுங்கள்† என்று கூறியபாலு, முழுபடத்தையும் பத்திரிகையாளர்களுடன் அமர்ந்து பார்த்தார்.
படம் தொடங்குவதற்கு முன் எல்லோரும் செல்போனை …சுவிட்ச் ஆப் செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டார். படம் ஓடிக்கொண்டிருந்தபோது ஒருவருக்கு செல்போனில் அழைப்புவர அவர் சற்று சத்தமாக பதில் பேசினார். பாலுவுக்கு கோபம் வர, இருக்கையிலிருந்து எழுந்தவர் கொஞ்சம் மெதுவா பேசுங்க† என்று சத்தமாகவே கடிந்துகொண்டார்.
படம் முடிந்தபிறகு பேசுவதற்காக முன்பகுதிக்கு மீண்டும் வந்த பாலு, இப்படத்தில் எந்த இடத்தில் நான் லைட்டிங் செய்திருக்கிறேன் என்பதை யாரும் கண்டுபிடித்துவிட முடியாதபடி எடுத்திருக்கிறேன். படத்தின் உருக்கமான காட்சிகள்....என்றவர் திடீரென்று விசும்பத் தொடங்கிவிட்டார். அதற்குமேல் அவருக்கு பேச்சு வரவில்லை. கண்ணீர் பீறிட்டது.
கைத்தாங்கலாக அவரைச் சமாதானப்படுத்தி அழைத்து வந்தனர்.உடல்நலமில்லாமல் போனது, சம்பளப் பாக்கியை பெற நடத்திய போராட்டம் என வரிசையாக அவரது கண்முன் சம்பவங்கள் வந்து போய்கொண்டிருக்கும் போது பாலுவுக்கு சிரிப்பு எப்படி வரும்? என்றார் அங்கிருந்த ஒரு திரையுலக பிரமுகர்.
|
|
|
| எனக்கும் ஒரு வரம் கொடு.. |
|
Posted by: Birundan - 11-14-2005, 08:40 PM - Forum: கதைகள்/நாடகங்கள்
- Replies (1)
|
 |
<img src='http://img46.imageshack.us/img46/1923/v9ul.jpg' border='0' alt='user posted image'>
குசினி மூலையில் வருபவர்களுக்குத் தேத்தண்ணி போடும் சாக்கில் நேரத்தைக் கடத்திக்கொண்டு நின்றாள் கௌசி. நினைவு மைவிழியையே சுத்திச் சுத்தி வந்துகொண்டிருந்தது. "தலைக்கு வாருங்கோ" எண்டு அண்ணா கூப்பிட்டுவிட ஆயாசத்தோடு மனம் நிறைய தண்ணியை அள்ளி அள்ளி வார்த்தாள் கௌசி "சரி காணும்" கிண்ணியைப் பிடுங்கி அண்ணியின் அக்கா அடுத்த பொம்பிளையிடம் குடுத்தாள்.
கன்னங்கள் சிவக்க முகத்தில வடிந்த தண்ணியை சிரித்த படியே வாங்கிக் கொண்டு, மைவிழி கௌசியின் கைய வருடி விட்டாள். சிலித்த உடம்பு அடங்க முதல் அவளை கட்டிப்பிடித்து ஈரம் சீலையில் ஊறியதும் உணராமல் கொஞ்சிக் கண்கலங்கி "என்ர குஞ்சு" எண்டாள். உருண்ட முகத்தில், விரிந்த கண்களால் கௌசியைப் பாத்து வெட்கத்துடன் சிரித்தாள் மைவிழி.
மைவிழியின் ஒவ்வொரு அசைவையும் பாக்க ஆசைப்பட்டவளாய் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்த கௌசியிடம் "அண்ணி வாறாக்களுக்குப் பாத்துப் பலகாரம் குடுக்கிறீங்களே, அண்ணி வாறாக்களுக்குப் பாத்து தேத்தண்ணி குடுக்கிறீங்களே" கைக் குழந்தையோடும் பட்டோடும் வேர்க்க விறுவிறுக்கப் பறந்து கொண்டிருந்தாள் அண்ணி.
"என்ன கக்காத் துணி தோச்சனீரே" பெட்டைகள் பின்னேர நேரத்தில அரட்டையடிக்க கிணத்தடியில சந்திக்கேக்க கேக்கிற போது கையையும், சட்டையையும் மணந்து மணந்து பாப்பாள். தோள் பட்டையில எப்பவுமே ஒரு புளிச்ச மணம் நிரந்தரமாய் வீசும். கௌசி தலையச் சரிச்சுச் சரிச்சு மணந்து பாப்பாள். ஒருவித சுகம் அவளை அணைத்துக் கொள்ளும். சட்டை திட்டுத் திட்டாய் அங்குமிங்கும் விறைத்துக் கிடக்கும். பிரசவத்தின் முழு மோகனங்களுடனும் அலைந்து கொண்டிருப்பாள் அவள்.
"நல்லா பால் மண்டீட்டாள் ஒருக்கா ஏவறைக்குத் தட்டுறீரே" குழந்தையைக் குடுத்து விட்டுப் போவாள் அண்ணி. நிமித்தி தோளோட சேத்து அணைத்து முதுகை மெல்ல மெல்லத் தட்ட, நெளிந்து தலையத் தூக்கித் தூக்கி மோத,p தோளைச் சூப்பி பெரிதாகச் சத்தமாய் ஏவறை விட, தோள் ஈரமாகத் திரைஞ்ச பால் பின் சட்டையில் வடியும். வாய் துடைத்து இறுக அணைத்துக் கொஞ்ச, அவள் மார்போடு முகம் தேச்சு முலையை வாயால் கௌவ முயலும் குழந்தை "ச்சீ போடி கெட்ட பெட்டை என்னட்டைப் பால் இல்லை, அம்மாட்டக் குடிச்சது காணாதே குடிகாறப் பெட்டை" கன்னத்தில் செல்லமாய் அடிக்க, சின்னதாய் துடித்து வீடிட்டுக் கத்தும் குழந்தையை இறுக அணைத்துக் கொள்ளுவாள் கௌசி.
"கக்கா இருந்திட்டாள் போல" அண்ணி கை நீட்ட "நான் மாத்திறனே" கட்டிலில் துணி விரிச்சு குழந்தைய நிமித்திக் கிடத்த அது சிணுங்கும். "எண்ட செல்லமெல்லோ, எண்ட குஞ்செல்லோ" சொன்ன படியே முகத்தோடு முகம் தேச்சுக் கொஞ்ச குழந்தை சிரிக்கும்.
"எண்ர செல்லம் சிரிக்குதோ, ஆ.. என்ர ராசாத்தி சிரிக்குதோ" கண்ணுக்குள் பாத்துக் கேட்டபடியே உடுப்பைக் கழற்றி துணிக்குக் குத்தியிருக்கும் பின்னை ஆட்டாமல் கழற்றுவாள். "சீ கக்காப் பெட்டை, என்னடி செஞ்சு வைச்சிருக்கிறாய்?" கேட்டபடியே மூக்கைச் சுளிச்சு துணியை அகற்றி, சின்னத் துவாயை ஈரமாக்கி உடம்பைத் துடைப்பாள். கால்களை அகற்றி பௌடர் போட்டு "இப்பிடியே கிடந்து கொஞ்ச நேரம் விளையாடு காத்துப் படட்டும்" பக்கத்தில படுத்திருப்பாள்.
"சின்னப்பாப்பா எந்தன் செல்லப் பாப்பா
சொன்ன பேச்சைக் கேட்டாத்தான் நல்ல பாப்பா-
சின்னப் பாப்பா எந்தன் செல்லப் பாப்பா
தின்ன உனக்குச் சீனி மிட்டாய் வாங்கித்தரணுமா
சிலுக்குச் சட்டை சீனாப் பொம்மை பலூண் வேணுமா
கண்ணாமூச்சி ஆட்டம் உனக்குச் சொல்லித் தரணுமா
அப்போ கலகலலெண்டு சிரிச்சுக் கிட்டு
என்னைப் பாரம்மா…"
குழந்தை அவள் பாட்டை ரசிச்ச படியே "ங்க ங்க" எண்டு சேர்ந்து பாடும்.
"அண்ணி அண்ணி இஞ்ச ஓடிவாங்கோ" பதறியடிச்சு ஓடிவந்த அண்ணியிடம் மைவிழிக் குட்டி உடம்பு பிரட்டப்பாக்கிறாள்" எண்டு பரவசமாய்ச் சொல்லுவாள். "போடி அடுப்பில கறி, நீ கத்த நான் பயந்திட்டன்." அண்ணி கொஞ்ச நேரம் நிண்டு பாத்துவிட்டு போய் விடுவாள். "என்னடி குட்டி ஏமாத்தீட்டாய்.. இஞ்ச இப்பிடி இப்பிடித் திரும்பு" எண்டு குழந்தைக்குப் பக்கத்தில் கிடந்து தன் உடம்பை பிரட்டிப் பிரட்டிக் காட்டுவாள். அண்ணா அண்ணியைக் கூப்பிட்டு "இஞ்ச எங்கட கௌசிக் குட்டி உடம்பு பிரட்டுறாள் படம் எடுப்பம் கமெராவைக் கொண்டு வாரும்" முகம் சிவக்க சட்டையை இழுத்து விட்டு எழும்பி இருப்பாள்.
"நடவடி சக்கை மாதிரி இருக்கிறாய்.. உன்ர வயசில எல்லாம் ஓடித்திரியுதுகள்" மைவிழியின் கையைப் பிடித்து எழுப்பி, நிப்பாட்டி தன் கைகளோடு அவள் கைகளைப் பிணைத்து, பின்பக்கமாய் தான் நடந்து சின்னச் சின்ன அடியாய் அவளை நடக்கச் செய்வாள். "என்ர குஞ்செல்லே நடவம்மா.. ஆ.. கெட்டிக்காறி அப்பிடித்தான் அப்பிடித்தான்.." கௌசிக்கு முதுகு பிடித்துக் கொள்வதுதான் மிச்சம். முதலாவது பிறந்தநாளுக்கு மைவிழி நடக்காமல் போனது கௌசிக்கு வெக்கக் கேடாய் இருந்தது. "என்ர அக்கான்ர மகள்.. என்ர அண்ணான்ர மகன்.. பெட்டைகள் சொல்லிக் கொண்டே போவார்கள்..
"கௌசிமாமி அந்த ராஜாக்கதை.. கௌசிமாமி பொரியல் தாங்கோ.. கௌசிமாமி எனக்குக் காச்சல் நான் பள்ளிக்கூடம் போகேலை.. கௌசிமாமி..கௌசிமாமி.."
மைவிழியைக் குளிக்கவார்த்தபடியே "சின்னச் சின்னக் கை, சின்ன மூக்கு, சின்ன வாய்" கௌசி அடுக்கிக் கொண்டு போக "இதென்ன கௌசிமாமி, சின்னப் பாப்பா" தன்ர மார்பைத் தொட்டுக் கேட்டுச் சிரிப்பாள். "போடி கள்ளப் பெட்டை" கன்னத்தைத் தட்டுவாள் கௌசி. "உங்களுக்கு மாதிரி எனக்கும் பெரிசாகுமா" கண்கள் அகல கௌசியின் உடம்பைப் பார்த்த படியே கேட்பாள் மைவிழி. அவளின் உடம்பில் சவுக்காரத்தைத் தேச்ச படியே "ஓம் கொஞ்சம் கொஞ்சமாப் பெரிசாகும், அப்ப மைவிழிக் குட்டி பெரிய பொம்பிளையா வளந்து வளந்து வருவாள்.. கௌசி மாமி மைவிழிக் குட்டிக்குச் சீலை கட்டி, தலையெல்லாம் பூ வைச்சு, நகைகளெல்லாம் போட்டு வடிவா வெளிக்கிடுத்தி விடுவன், மைவிழிக் குட்டி ராசாத்தி மாதிரி இருப்பாள் என்ன?" மைவிழியின் கண்கள் கனவில் மிதக்க ஒரு கணம் எங்கோ சென்று திரும்புவாள். "கனக்க ஆக்களெல்லாம் வருவீனமே.. நிறம்ப பிரசெண்ட் எல்லாம் கிடைக்குமே", "ம்..போடி உனக்கு பிரசெண்ட்தான் முக்கியம்" அவள் துடையில் அடிப்பாள். "ஆ..ஆ" அழுவது போல் நடிக்கும் மைவிழியின் தலையில்
"ஒரு குடம் தண்ணி – நூறாண்டு
ரெண்டு குடம் தண்ணி – நூற்றிப் பத்தாண்டு
மூண்டு குடம் தண்ணி – நூறு நூறு நூறாண்டு
ஐயோ தண்ணி முடிஞ்சுதே" சோகமாக முகத்தை வைத்துக் கொள்ளுவாள்..
துவாயை உதறி தலையைத் துடைச்சு, உடம்பை சுத்தி நடுங்கும் மைவிழியைத் தன் உடலோடு அணைத்துத் தூக்கி அறைக்குள் ஓடி வந்து, உடம்பைத் தேய்த்துத் துடைத்து, பௌடர் போட்டு, தலைக்கு ஓடிக்கொலோன் பூசி, சுருங்கியிருக்கும் கைகளைத் தன் கையோடு சேர்த்துத் தேச்சுச் சூடாக்கி, பொக்கிள் மேல் வாயை வைத்து ஊதிவிட்டு, மைவிழி கூசி நெழிந்து கலகலவென்று சிரிப்பாள்..
கௌசியின் முதலிரவன்று மைவிழி நித்திரை கொள்ளவில்லை. "எனக்குக் கௌசிமாமியோட படுக்க வேணும்" குரலெடுத்துக் கத்தியவளை இரவிரவாகக் கொண்டு அலைந்ததாய் அண்ணி இப்பவும் சொல்லிச் சிரிப்பாள்.
"கௌசி மாமி ஒருக்கா வீட்டை வாறீங்களே" காலம வெள்ளணை போன் வந்தபோது பயந்து போனாள் கௌசி. "என்னம்மா என்ன நடந்தது" கேட்டவளிடம் "நீங்க இப்ப உடன இஞ்ச வாங்கோ" விசும்பினாள். "என்னடா அம்மா எங்கை? என்ன நடந்தது? சொல்லனம்மா" "அம்மாவும், அப்பாவும் நித்திரை, எனக்கு உங்களோட கதைக்க வேணும்" கௌசிக்கு கொஞ்சம் விளங்கியது, கணவனிடம் சொல்லி விட்டு மனம் குதூகலிக்க "உடன மாமி வாறன் நீங்கள் போய் அறைக்குள்ள இருங்கோ சரியே" அண்ணி எழும்பு முதல்லே மைவிழிக்கு நப்பிண் பாவிக்கச் சொல்லிக் குடுத்தாள் கௌசி.
"பதின்மூண்டு பொம்பிளைகள் வேணும் தட்டுத் தூக்க கூப்பிடுங்கோ நேரம் போகுது" அண்ணியின் அக்கா பெரிய குரலில் கத்தினாள். "இஞ்ச உதில இருந்து கொசிப்படிக்காமல் தட்டுத் தூக்க வரட்டாம் பொம்பிளைகளே போங்கோ" பட்டும், நகையுமாய் ஜொலித்த பொம்பிளைகளைக் கிண்டலாய் கூப்பிட்டு குசினிக்குள் வந்து "இஞ்ச என்ன செய்யிறாய் தட்டுக் கொண்டு வரக் கூப்பிடீனம் போ" அண்ணா சொல்லி விட்டுப் போனான். "கௌசி மைவிழி கூப்பிடுறாள், தன்னோட உங்களையும் வரட்டாம்.. அவளுக்குப் பக்கத்தில தட்டோட வாங்கோ" அழுத மகனைத் தோளில போட்டு ஆத்திய படியே அண்ணி வந்து கையைப் பிடித்து இழுத்தாள். "இல்லை அண்ணி உவனை என்னட்டத் தந்திட்டு நீங்கள் போங்கோ", "இஞ்ச நேரம் போகுது, மைவிழி உங்களத்தான் வேணுமெண்டு கேக்கிறாள் போங்கோ" பிடிச்சுத் தள்ளாத குறையாச் சொல்லிவிட்டுப் போய் விட்டாள் அண்ணி.
வரிசையாகப் போன பெண்களோடு தானும் சேர்ந்து கொண்ட கௌசியைப் பார்த்து கண்களால் சிரித்துத் தலையாட்டினான் அவள் கணவன். கௌசிக்கு வெட்கமாக இருந்தது. "இண்டைக்கு இரவைக்கு இருக்கு உங்களுக்கு" அவளும் கண்களால் சொல்லிவிட்டுப் போனாள்.
"இந்தாங்கோ பலகாரத்தட்டு, இந்தாங்கோ பழத்தட்டு, இந்தாங்கோ பூத்தட்டு.." தட்டுகளைத் தூக்கித் தூக்கிப் பெண்களிடம் குடுத்துக் கொண்டிருந்தாள் அண்ணியின் அக்காள். கௌசியில் தோள் மேலால் தட்டுகள் பின்னேறிப் போய்க் கொண்டேயிருந்தன. கௌசி மௌனமாக நின்றாள். சுவர்கள் ஒடுங்கி நீள, மூச்சு முட்டுவதுபோல் சுவாசமின்றித் தடுமாறினாள். தலையில் சடைநாகத்துடன், மூக்கு மின்னியும், நெத்திப் பொட்டும், சீலையுமாய் மைவிழி யாரை ஞாபகப்படுத்துகின்றாள். மைவிழி அவளைக் கட்டிப்பிடிச்சு மார்போடு முகம் வைத்துக் கண்கள் கலங்க கைகளை இறுக்கினாள். "நீர் இப்பவும் சின்னப்பிள்ளையில்லை தெரியுமோ? பெரியபிள்ளை மாதிரி ஃபிகேவ் பண்ணும் பாப்பம், மேக்கப்பெல்லே குழம்பீடும்" கையைப் பிடித்து மைவிழியை இழுத்து விட்டாள் லண்டனிலிருந்து வந்திருந்த அண்ணியின் அக்காள்.
தொண்டைக் குழி இறுக, தொடைகள் நடுக்கம் கண்டன. கௌசியின் கால்கள் இயங்க மறுத்தன. பெரிதாய் நாதஸ்வரம் அலறியது. சிரிப்பும் சிங்காரமுமாய் பெண்கள், ஆண்கள், குழந்தைகள், முதியவர்கள்..
எங்கோ காட்டில் தனித்து விடப்பட்டவள் போல் கௌசியின் மனம் பயம் கண்டது. கணவனை இறுக அணைத்து உடலுறவு கொள்ளவேண்டும் போல் வேகம் கொண்டது உடம்பு. உன்னை நான் இறுக அணைத்துக் கொள்கின்றேன். என் கருப்பைக்குள் உன் விந்தைக் கொடு, அது கருக்கட்டி உருப்பெற்றுக் குழந்தையாக மாறட்டும்.. என் அடிவயிறு நோக் காண கால்கள் வலிக்கட்டும். என் வயிற்றைக் காலால் சிசு எட்டி உதைக்கட்டும், என் பெருத்த வயிறுடன் உன் தோள் தாங்கி நெடுந்தூரம் நடந்து வருகின்றேன். பிரவச வலி எனக்கும் வேண்டும். என்னைத் தாங்கு உன்னுடன் பிணைத்துக் கொள்.. உலகின் எல்லா நோவும் என்னைத் தாக்கட்டும்.. என் யோனி கிழித்து உலகை குழந்தை ஒன்று எட்டிப் பார்க்கட்டும்;, என் முலையின் கட்டிப் போன பாலை அது சப்பி உறிஞ்சிக் குடிக்கட்டும்... என் உடலிலிருந்து உதிரம் வழிந்து தெருவெங்கும் ஓடட்டும்.. நானும் தாயாக எனக்கும் ஒரு வரம் கொடு.. எனக்கும் ஒரு வரம் கொடு.. எனக்கும் ஒரு வரம் கொடு..
"தட்டுத் தூக்க ஒரு ஆள் குறையுது கூப்பிடுங்கோ" அண்ணியின் அக்கா குரல் எங்கோ தொலைவில் கேட்டது.
நன்றி>கறுப்பி.
|
|
|
|