![]() |
|
நரகமாய் நாகரீக உலகம்! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: நரகமாய் நாகரீக உலகம்! (/showthread.php?tid=2485) |
நரகமாய் நாகரீக உலகம்! - kuruvikal - 11-13-2005 <img src='http://img376.imageshack.us/img376/8690/human8cf.jpg' border='0' alt='user posted image'> <b>நரகமாய் போகிறது நாகரீக உலகம் மெல்ல மெல்ல கொல்கிறது உயிரை! மாயமாய் மறைகிறது அன்பு, பண்பு அரவணைப்புத்தரும் பாசக்குடும்பம்! செத்துப்போகிறது சுகாதாரம் நுழைந்து கொள்கிறது சுகவீனம்! சமஉரிமை சமத்துவம் சரிக்கு சரி போட்டியாய் அன்னையும் தந்தையும் ஆறாவது விரலாய் 'சிகரட்டை' சேர்த்திட சிந்தனையின்றி சமத்துவமாய் மதுக்கிண்ணத்தையும் ஏந்திட பிஞ்சான நானும் பயிராக என் சகோதரங்களும். வெதும்பிப்போகிறோம்! கணக்கின்றி வழக்கின்றி புகையை இழுத்துக்கொள்கிறோம்! கக்கியும் கொள்கிறோம். தினம் தினம்! மது தந்த போதையது பெற்றோரை கனவுலகத்திற்கு அழைத்துச்செல்கிறது! அநாதரவாய் நாங்கள் அநாதைகளாய் அரவணைப்பின்றி அழுதிடவும் முடியவில்லை அரைத்தூக்கம் கலைந்து விடும் அடியும் தான் விழுந்துவிடும்! ஆண்டுகள் தான் ஓடுது ஆளாக நானும் ஆகிவிட்டேன். அடுத்ததாய் ஒரு தங்கை அழகாய் வந்துவிட்டாள். அவளுடலில் ஒரே நோயாம் ஆலோசனை சொன்னார் வைத்தியர். மதுவும் புகையும். பொற்றோர்கள் பாவனையால் நலமின்றிப்போனது ஏதும் அறியா என் சின்னத்தங்கையும் தானாம். கக்கிறார் அப்பா இருமுறா அம்மா வைத்தியரும் சொல்லிவிட்டார் காலம் முழுக்க மாத்திரையும் கையுமாம் இது தான் அவை விதியாம்! இப்பவும் கெஞ்சிறேன் இப்பவாவது விட்டிடுங்கோ இனியாவது இன்பமாய் வாழலாம்! யார் விடுவது அங்கும் போட்டி மெல்ல நான் விலகிக்கொள்கிறேன் உடன்பிறப்புக்கள் உயிரையாவது காத்திட!</b> படைப்பு - கயல்விழி - kuruvikal - 11-13-2005 <img src='http://img370.imageshack.us/img370/3597/handart103on.jpg' border='0' alt='user posted image'> <b>வான்வெளி மீதினில் ஒரு பந்து அதை வையகம் என்று கொண்டனர் மக்கள் வழி வழி அது எங்கள் வாழிடம் வாழ்ந்தும் போயின பல தலைமுறைகள் இடையினில் வந்தன புரட்சிகள் நன்மையும் தீமையும் விளைவுகளாயின..! கரியமிலயும் காடழிப்பும் காரிகை இதழ் பூச்சும் ஓசோன் படையழிவும் கூட்டுச் சேர்ந்திட வெப்பம் தாங்கிடா உருகும் பனிபோல் கண்ணீரும் பெருகுது பல நோய்கள் கண்டு..! நிம்மதி என்பதை பறிகொடுத்து நிதமும் வீழ்கிறான் மனிதன் சுவடுகளாய்...! கிண்டிக்கிண்டி பூமி பந்தும் செழிப்பது இழக்குது வளங்கள் அங்கு வறுமைக்குள் வீழ வறுகி எடுப்பவர் வல்லரசுகள் ஆகி வலிமை காட்டிட அழிவுக்கு ஆயுதங்கள் பெருக்குகிறார்...! அகதியும் அலைச்சலும் சனத்தொகை என்பதும் அபரிமிதமாக அன்றாடம் வயிற்றுக்கு வழியின்றி வறுமையில் வீழுது உயிர்கள்..! அநாகரிகம் என்பது ஆட்சிப்பீடமேற நாகரிகப் போர்வை அதுக்கு..! சமத்துவம் என்பது இடறிய நிலையில் நகரங்கள் எல்லாம் நரகங்களாகுது..! புகையும் மதுவும் புன்னகைக்குது மரணம்தனை வரவேற்க..! வேர்விட்ட தளிர்களும் வெந்து வீழ்கின்றன ஆழ ஊன்றிய ஆணி வேர்களும் அறுபட்டுப் போகின்றன..! மனங்கள் எல்லாம் அழுத்தம் தங்கிட அமைதி என்பது இழந்து போகுது..! ஆணும் பெண்ணும் அலைந்து விலங்குகளாய் உணர்ச்சிக்கு அடிமையாகிட கொடிய நோய்கள் தொற்றுக்களாகி உடல்கள் அரிக்கின்றன..! சந்ததி என்பது சரித்திரம் தொலைக்கிறது தானும் சரிந்திட தற்கொலைக்கு வித்திடுகுது..! யாரது சிந்திப்பது... எட்ட இருக்கும் செவ்வாய்ப் பந்தை ஆய்வு செய்யத் துடிக்கும் மானிடா காலடி மிதிக்கும் பூமிப் பந்தை காப்பது எப்படி சிந்திப்பாயா...??! சந்திப்பாயா சவாலை..!</b> - tamilini - 11-15-2005 சுட்டெல்லாம் போடிறீங்க..! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->Quote:யாரது சிந்திப்பது...அளமான கவிதை குருவிகள். தற்போதைய சூழ்நிலையில நமக்கு தேவையான விடயமும் கூடவே. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Rasikai - 11-16-2005 அழகான் கவியை சுட்டுப்போட்டமைக்கு நன்றிகள் Quote:யாரது சிந்திப்பது... உங்களின் கவிதை நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள். மேலும் தொடர்க - Nithya - 11-16-2005 <!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin--> யாரது சிந்திப்பது... எட்ட இருக்கும் செவ்வாய்ப் பந்தை ஆய்வு செய்யத் துடிக்கும் மானிடா காலடி மிதிக்கும் பூமிப் பந்தை காப்பது எப்படி சிந்திப்பாயா...??! சந்திப்பாயா சவாலை..![/b]<!--QuoteEnd--><!--QuoteEEnd--> பல பல விடயங்களை எடுத்துக்காட்டிய கவிதை.. வாசித்துக் கொண்டு போகும் போது கவிதைகளில் கூறபடுகிற விடயத்தை கண்முன் நிறுத்த்திப் பார்த்தேன் இந்த கடைசி பந்தி படிக்கும் வரை.. வாசித்ததும் ஒரு பெருமூச்சு மட்டும் விட்டேன்..!! சிந்திக்க வைத்த வரிகள் இந்த கடைசி வரிகள் நன்றி - kavithan - 11-17-2005 கயல்விழியின் கவிதை காலப் போக்கை காட்ட அதற்கு இன்னும் பலம் சேர்க்கும் வகையில் தன் கருத்தையும் கவிவடிவில் தந்து மிக அருமையான விடயத்தை எங்கள் எல்லோருக்கும் அழித்த குருவிக்கு நன்றிகளும். மேலும் இப்படியான சமூக விழிப்புணர்வு கவிதைகளை படைக்க என் வாழ்த்துக்களும் . - RaMa - 11-17-2005 நரகமாய் போகிறது நாகரீக உலகம் மெல்ல மெல்ல கொல்கிறது உயிரை! மாயமாய் மறைகிறது அன்புஇ பண்பு அரவணைப்புத்தரும் பாசக்குடும்பம்! நிஐவரிகள் அதாவது அனுபவத்தில் நாம் கண்டுகொண்டிருப்பதை அழகான கவியில் வடித்திருக்கின்றார் கயல்விழி. --------------- அநாகரிகம் என்பது ஆட்சிப்பீடமேற நாகரிகப் போர்வை அதுக்கு..! சமத்துவம் என்பது இடறிய நிலையில் நகரங்கள் எல்லாம் நரகங்களாகுது..! புகையும் மதுவும் புன்னகைக்குது மரணம்தனை வரவேற்க..! வேர்விட்ட தளிர்களும் வெந்து வீழ்கின்றன ஆழ ஊன்றிய ஆணி வேர்களும் அறுபட்டுப் போகின்றன..! கவிதைகள் அருமை .. இங்கு இனைத்தமைக்கு நன்றிகள் குருவிகள். - Vishnu - 11-17-2005 நிஜவாழ்வின் கதை சொல்லும் கவிதைகளை இணைத்தமைக்கு நன்றி குருவிகள் அண்ணா... |