![]() |
|
தேசியத்தலைவரை வாழ்த்துங்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=13) +--- Thread: தேசியத்தலைவரை வாழ்த்துங்கள் (/showthread.php?tid=2497) |
தேசியத்தலைவரை வாழ்த்துங்கள் - Mathuran - 11-12-2005 புலிகளின் குரல் வானொலியூடாகவும் தேசிய தலைவருக்கு உங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளலாம். <img src='http://img476.imageshack.us/img476/3411/center198yc.jpg' border='0' alt='user posted image'> <b>ஐம்பத்தி ஓராவது அகவையை எட்டும் தேசியத்தலைவரை யாழ்க்கள உறவுகளாகிய நாமும் வாழ்த்துகின்றோம்.</b> நன்றி ]http://pulikalinkural.ch/NTM-C/content/in_...ontact1.htm[/b] - iruvizhi - 11-12-2005 அன்னை மண் காக்கும் அன்புற்குரிய அண்ணனே! அகிலம் போற்றும் அறிவொளி விளக்கே ஆனையிறவினை மீட்டெடுத்த வீரனே ஆறுதல் எமக்களித்த சீலனே இன்னல் அனைத்தும் களைந்த இலட்சிய வேங்கைகளின் தந்தையே ஈழத்தாயவள் மானம் காத்து ஈனர்களை விரட்டிய இளம்புலியே உள்ளப் பெருமிதப்பில் பாடுகின்றோம் உனக்கிணை யார் இவ்வுலகில்??? ஊமைகளாய் இருந்த எம்மை ஊக்கமூட்டி உறும வைத்தாய். எட்டப்பர் கூட்டம் சில எடுப்பார் கைபிள்ளை ஆகிவிட. எதற்கு அஞ்சவேண்டும்? எல்லாளன் பேரனடா நாங்கள் என எச்சரிக்கை விடுத்து எளிமையாக நீ நடந்தாய். ஏமாத்து பேர்வளிக்கு அயல் நாடு இருக்கையிலும் ஏழைகளின் வாள்வுக்காய் அஞ்சாது நடைபோடுன்றவனே. ஐம்பத்தி ஓராவது அகவையை எட்டுகின்ற ஐயனே! உனை வாழ்த்துகின்றோம் ஒவ்வொரு தமிழனுக்கும் நீ ஒரு சின்னம் ஒரு நாள் விடியும் ஈழம் இது திண்ணம். ஓய்ந்து உறங்கவில்லை மாவீரர் கல்லறைகள் ஓங்கி ஒலிக்கின்றன ஈழமென்னும் பண் இசையை ஃது பண்ணிசையை எழுதுகின்ற பாவலனே வாழிய நீவீர் பல்லாண்டு வாழியவே. - cannon - 11-13-2005 <b>இனம் தெரியாத தவிப்பு. எப்படி பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லவதென்று... இனம் தெரிய வைத்தவனுக்கு!</b> ..................................................................... என்னைக் கவர்ந்த அறிவுமதியின் வரிகளிலிருந்து... - Mathuran - 11-13-2005 கனொன் அப்படியே உங்கள் சொந்த கவிதை ஒன்றினையும் இணைத்துவிடுங்களேன். உஙளால் முடியும் என்பது எனது எண்ணம். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Mathuran - 11-13-2005 எனக்கு பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று http://www.eelasongs.com/songs/neruppilneeraduvom/ - Birundan - 11-13-2005 <img src='http://img413.imageshack.us/img413/9441/37wz.th.jpg' border='0' alt='user posted image'> படத்தை பெரிதாகபாக்க படத்தின்மீது சொடுக்கவும். <b>பிரபாகரன் நினைத்தது நடக்கும் - அவன் புலிப்படை நெருப்பாற்றை நீந்திக் கடக்கும்.</b> பலர் உலகிலே பிறந்து தமக்கென வரலாறு இல்லாமலே மறைந்து போகின்றனர். அவர்களிலும் குறைந்த தொகையினர் வரலாற்றிலே தங்கள் சுவடுகளைப் பதித்து செல்கின்றனர். வரலாற்றை தாமே படைத்து அதன் நாயகராகவும் விளங்குவோர் மிகச் சிலரே அந்தச் சிலருள் ஒருவவே இந்த நூற்றாண்டின் இணையற்ற தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் ஆவார். வந்தேறிகளிடம் ஆயிரம் ஆண்டுகளாய் அடிமைப்பட்டுஇ மண்ணிழந்துஇ மதியிழந்து, மொழிகெட்டு, விழி கெட்டு, கடலிழந்து, கொடியிழந்து, கொற்றமிழந்து, பன்னூறு ஆண்டுகளாய் நோற்றதவமே தமிழீழ விடுதலைக்காய் களமாடுகின்ற எங்கள் தானைத் தலைவரைத் தோற்றுவித்தது போலும். அவர் என்ன தாய் நாட்டின் சொந்த வரலாறு அறியாது ஐரோப்பிய வரலாறுகளையும் மார்க்கிசத்தையும் கரைத்துக் குடித்துவிட்டு இரவுசியாவைப்பார்! சீனாவைப் பார்! என வாய்ப்பந்தலிட்டவரா? இல்லவே இல்லை. அப்படியானால் அவர் என்ன கற்றார்? எங்கு படித்தார்? யாரிடம் பயின்றார்? இயற்கை எனது நண்பன் வாழ்க்கை எனது மெய்யியல் ஆசான் வரலாறு எனது வழிகாட்டி எனக் கூறி ஒரு கைத்துப்பாக்கியுடன் 14 வயதிலேயே விடுதலைக்கு அகரம் எழுதினார். இன்று உலகின் தலைசிறந்த கெரில்லாத் தலைவர்களில் ஒருவரான சேகுராவுடன் ஒப்பிட்டு பேசப்படும் நிலைக்கு உயர்ந்துள்ளார். இதற்கெல்லாம் காரணம் களத்திலே அவர் பெற்ற வெற்றிகளே. ஒப்ரேசன் லிபரேசன, பலவேகய, ஜெகசிக்குறு, சக்ஜெய, ஓயாத அலைகள, ஆணையிறவுப் பெருஞ்சமர் என நீண்டு கொண்டே போகும் வெற்றியின் பட்டியல்கள். இந்த வெற்றிகளைக் குவித்திட அவர் நவீன உலகில் தமிழருக்கென நவீன போர்படையணிகள் தேவை என உணர்ந்தார். திருக்குறளில் குறிப்பிட்டது போல கூற்றுடன் மேல்வரினும் கூடி எதிர் நிற்கும் ஆற்றலதுவே படை அதாவது வியுகம் அமைத்து எமனே சினம் கொண்டு வந்தாலும் எதிர் நின்று வெல்லக்கூடிய ஆற்றல் உள்ள படையணியை உருவாக்கினார். வெறுமனே ஒரு கைத்துப்பாக்கியுடன் போராடப்புறப்பட்ட தேசியத்தலைவர் படிப்படியாக தீர்க்கமான அணுகுமுறையுடன் தரைப்படையை கவச எதிர்ப்புப்படை என தரைப்போர் ஆற்றல்களை விரிவுபடுத்தியதுடன் கடற்புலிகள்இ கரும்புலிகள்இ வான்புலிகள் என அறிமுகம் செய்ததுமட்டுமல்லாமல் விடுதலை சார்ந்த கலை இலக்கியப்படைப்புக்களையும் உருவாக்கி வந்தார். தமிழீழ வளர்ச்சியின் பொருட்டு அவர் தொடாததுறைகளே இல்லை எனலாம். இன்று ஆர்ப்பரித்து எழுந்து நிற்கின்றது எமது தேசம். ஆண்கள், பெண்கள,முதியோர் என ஆயுதம் தரித்து சிங்கள இராணுவத்தை எதிர்கொள்ளுகின்றது. எமது தேசத்தின் சுதந்திரப்போர் பல்லாயிரம் சிங்கள இராணுவத்துப்பாக்கிகளாலும் நவீன கடற்ப்படை விமானப்படைத் தளங்களாலும் தாக்கப்படும் போதெல்லாம் எமது சின்னஞ் சிறு தேசம் தனித்து நின்று போராடி வெற்றிகளைக் குவிக்கின்றது. இதற்கு குறைந்த ஆட்தொகையும் குறைந்த ஆயுதவளங்களையும் வைத்திருந்தபடி அவற்றின் உச்சப் பயனை பெறும் வகையில் தலைவர் பிரபாகரன் செயற்படுத்தும் போர்த்திட்டங்களே இத்தகைய வெற்றிகளுக்குக் காரணமாக அமைகின்றன். இதற்கு எடுத்துக் காட்டாக மிகக் குறைந்த போராளிகளோடு உலகின் நாலாவது பலம் பொருந்திய வல்லரசு ஒன்றின் நோக்கத்தை முடியடித்து உலகின் இணையற்ற தலைவர்களில் ஒருவரானார். இதனாலேயே விடுதலைப் புலிகளின் பரமவைரியும் தமிழீழத்தில் அமைதிப்படை என்ற பெயரில் நடத்திய கொடுரங்களுக்கு தலைமை வகித்த ஜே.என்.டிக்சித் பின்வருமாறு கூறுகின்றார். “பல குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்ட போதிலும் அந்த மனிதரிடம் ஒரு உள்ளீடான இலட்சிய நெருப்பு கொள்கை உறுதியும் உண்டு என்பதை அறிமுகம் செய்வதிலும் அவரிடம் இயற்கையாகவே இராணுவத்திறனாய்வு அதற்கேற்ப காய்நகர்த்தும் மதிநுட்பமும் உடையவர்” என்றார். எனவேதான் அவரின் மதிநுட்பமான போர்த்திறனையும் இராஜதந்திரங்களையும் கவனித்தே தமிழீழ விடுதலைப்போரை ஆதரிப்போரும் சரிஇ எதிர்ப்போரும் சரி இன்று உலகில் உள்ள கெரில்லாத் தலைவர்களுள் எமது தேசியத்தலைவர் பிரபாகரன் ஆற்றலும் செயற்பாடும் மிக்க தலைவர் என ஏற்றுக் கொண்டுள்ளனர். பசி, தாகம், நீண்ட பயணம், மரணம் என்பவற்றையே தன்னால் வழங்க முடியும் என்றும் சுகமான நல்வாழ்வுக்கு உறுதியில்லை என்றும், தாய்நாட்டின் மீது உண்மையான பற்றுடையோர் தன்னோடு சேரலாம் எனக் கூறி அவ்வாறு தன்னுடன் இணைந்த போராளிகளைக் கொண்டு போர் நிகழ்த்தி இத்தாலியை ஒற்றுமை பூணவைத்தார் கரிபால்டி. இன்று கழுத்தில் சயனற்றைக் கட்டிக்கொண்டு தம் தலைவர் ஆணையிட்டால் அதனை விழுங்கி மரணத்தை தழுவிக்கொள்ளவும் ஆயிரமாயிரம் மாவீரர்கள் அவர் பின் அணிவகுத்து நிற்பதும் அவர்களை மதிநுட்பமாக நடத்தி இன்று மாபெரும் வெற்றிகளைச் சுமந்து நிற்கும் எம் தலைவர் கரிபால்டியை விட அதிர்ஸ்ட சாலி என்றே கூறவேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக சமாதானம், பேச்சுவார்த்தை என்ற பெரும் அரசியல் இராஜதந்திர முறையை ஏற்படுத்தி இன்று சர்வதேச சமூகத்தின் மத்தியில் பிரச்சனைக்குள் உள்வாங்கச் செய்து உலக சமூகத்தின் மத்தியில் பிரச்சனையை கையளித்துள்ளார். இந்த பெரும் நுற்பமான அணுகுமுறையை கண்ட மேற்குலக இராஜதந்திர அதிகாரிகள் வன்னியை வட்டமிட்டபடியே உள்ளனர். இதுவரை காலமும் உள்நாட்டுப்போர் என்று கூறிவந்த சிங்கள அரசின் கூக்குரல் இன்று நசுக்கப்பட்டு இரு தேசிய இனங்களுக்கிடையிலான முரண்பாடு என அங்கீகாரிக்கப்பட்டுள்ளது. இது எமது தலைவரின் மிக நுட்பமான இராஜதந்திர அணுகுமுறை. இன்றைய உலகின் போக்கிற்கு தம்மை மாற்றிக் கொண்ட ஓர் நிகழ்வு. அல்லது காய்நகர்த்தல் எனக் கூறிக் கொள்ளலாம். எனவே இன்று சர்வதேச மத்தியஸ்தம் என்ற பெயரில் எமது தேசத்தின் விடுதலை இயக்கத்தின் கோரிக்கை உலக சமூகத்திடம் ஆதரவு பெறத் தொடங்கியுள்ளது. இந்த வெற்றிகளின் பின்னால் எம் தேசத்து மாவீரர்களின் கடும் உழைப்பும் தியாகமும் தலைவர் பிரபாகரனின் மதிநுற்ப வழிநடத்தலும் உள்ளது என்பது வெள்ளிடை மலை. அதுவே அவரை இந்நூற்றாண்டின் இணையற்ற தலைவர்களில் ஒருவராக்கியது. -யாரோ- - iruvizhi - 11-14-2005 தேசியத்தலைவரை வாழ்த்த சொன்னோம் ஆனால் நீங்களோ ஒரு படி மேலே சென்று அண்ணன் பற்றிய அரிய தகவல்களை கட்டுரையாக வடித்துள்ளீர்கள். பிருந்தன் உங்கள் கட்டுரை சிறப்பாகவும் நுணுக்கமாகவும் காணப்படுகின்ற்கதென எனது நண்பர்கள் கருதுகின்றார்கள் ஆகையால். உங்களுக்குள் இருக்கும் திறமைகளை இது போன்ற ஆக்கங்கள் மூலம் வெளிகொண்டு வரவேண்டும் என்பது எமது அவா. தலைவரைப் பற்றி சிறப்புக் கட்டுரை தந்தமைக்கு நன்றி. ஈழ வட்டங்கள் - tamilini - 11-14-2005 எப்படி வாழ்த்த என்று தெரியவில்லை 2 நாளா யோசிக்கிறன்.. தேசியத்தலைவர் அவர்களுக்கு எனது இனிய 51 வது பிறந்த நாள் வாழ்த்துக்கள். - Sriramanan - 11-15-2005 <b>இனம்புரியதாத தவிப்பு இனம் தெரிய வைத்தவனை வாழ்த்த!</b> <b>கவிஞர் அறிவுமதி</b> - adithadi - 11-15-2005 அப்பாவி தமிழர்களின் தன்மை கண்டு ஈழத்தாய் பெற்றெடுத்த ஈழ மக்களின் இதயக்கனி வாழ்க. - Mathuran - 11-19-2005 <!--QuoteBegin-adithadi+-->QUOTE(adithadi)<!--QuoteEBegin-->அப்பாவி தமிழர்களின் தன்மை கண்டு ஈழத்தாய் பெற்றெடுத்த ஈழ மக்களின் இதயக்கனி வாழ்க.<!--QuoteEnd--><!--QuoteEEnd--> எமக்கு ஆறுதலாய் யாருமில்லை நாங்கள் அனாதைகளுமில்லை அருந்தும் அழுதோம் அன்றொருநாள். ஆனால் இன்று? அறம் வென்றது ஆதலால் அண்ணன் என்னும் ஆதவனின் ஒளியில் அன்போடு சிரிக்கின்றோம். ஊறுதியோடு நடை போடும் தேசியத்தலைவருக்கு வாழ்த்துக்கள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- iruvizhi - 11-21-2005 [quote=iruvizhi]<b>அன்னை மண் காக்கும் அன்புற்குரிய அண்ணனே! அகிலம் போற்றும் அறிவொளி விளக்கே ஆனையிறவினை மீட்டெடுத்த வீரனே ஆறுதல் எமக்களித்த சீலனே இன்னல் அனைத்தும் களைந்த இலட்சிய வேங்கைகளின் தந்தையே ஈழத்தாயவள் மானம் காத்து ஈனர்களை விரட்டிய இளம்புலியே உள்ளப் பெருமிதப்பில் பாடுகின்றோம் உனக்கிணை யார் இவ்வுலகில்??? ஊமைகளாய் இருந்த எம்மை ஊக்கமூட்டி உறும வைத்தாய். எட்டப்பர் கூட்டம் சில எடுப்பார் கைபிள்ளை ஆகிவிட. எதற்கு அஞ்சவேண்டும்? எல்லாளன் பேரனடா நாங்கள் என எச்சரிக்கை விடுத்து எளிமையாக நீ நடந்தாய். ஏமாத்து பேர்வளிக்கு அயல் நாடு இருக்கையிலும் ஏழைகளின் வாழ்வுக்காய் அஞ்சாது நடைபோடுன்றவனே. ஐம்பத்தி ஓராவது அகவையை எட்டுகின்ற ஐயனே! உனை வாழ்த்துகின்றோம் ஒவ்வொரு தமிழனுக்கும் நீ ஒரு சின்னம் ஒரு நாள் விடியும் ஈழம் இது திண்ணம். ஓய்ந்து உறங்கவில்லை மாவீரர் கல்லறைகள் ஓங்கி ஒலிக்கின்றன ஈழமென்னும் பண் இசையை ஃது பண்ணிசையை எழுதுகின்ற பாவலனே வாழிய நீவீர் பல்லாண்டு வாழியவே</b> - inizhaytham - 11-22-2005 <b>வலியினையே வலிமையாக்கக் கற்றுத் தந்த வல்லவனே எம் தலைவ! வாழி பல்லாண்டு!!!</b> - வினித் - 11-22-2005 [b]<span style='font-size:25pt;line-height:100%'>மேகம் இடிந்து விழுந்து நாமெல்லாம் இறந்துவிடுவோமெனப் பயந்தால் வாழ்நாள் முழுவதும் நாம் அடிமைகளாக இருக்க வேண்டியதுதான். மாறாக மேகம் இடிந்து விழுந்தாலும் அதற்கு எப்படி முகங்கொடுப்பது என்பது பற்றித்தான் நாம் சிந்திக்க வேண்டும்\". </span> ±ýÚ ¦º¡ýÉ ¾¨ÄÅ¡ Å¡úòÐì¸û ¿£í¸û Å¡Øõ ¸¡Äò¾¢ø ¿¡Ûõ Å¡úž¡ø ±ÉìÌõ ¦À¡Õ¨Á «øÄÅ¡ - iruvizhi - 11-22-2005 tamilini Wrote:எப்படி வாழ்த்த என்று தெரியவில்லை 2 நாளா யோசிக்கிறன்.. நீங்கள் கவி மூலம் வாழ்த்தலாமே..... - வன்னியன் - 11-22-2005 ஜோவ் கடவுளை வாழ்தத வேணுமா? அல்லது முடியுமா? அவர் எங்களை வாழ்த்தினால் போதும் - Rasikai - 11-23-2005 [b]பூகம்பம் பிறந்த பொன்னாள் ====================== <img src='http://img506.imageshack.us/img506/8952/tnleader271103tn1ty.jpg' border='0' alt='user posted image'> வாழ்வு அழிந்தது.... எங்கள் வளம் அழிந்தது... பூரண கும்பம் போன்ற எங்கள் ஜீவிதம் ... பொட்டிழந்த பூவை என பொலிவிளந்து கிடந்தது! மாவிலை தோரணம் கொண்டலங்கரித்தது போன்ற எங்கள் முற்றம் அலரி பூக்கள் நிறைந்து அழகிழந்து போனது! பார்த்து பார்த்து நாம் வாசலில் வளர்த்த ரோஜாவை ..சிங்களம் காலில் போட்டு நசுக்கி கழுத்தறுத்த பின் எம் தாயின் காலடியில் போட்டு சென்றது! தேம்பி தேம்பி அழுது நின்றோம் தெய்வமே காப்பாற்று என்று கதறி அழுதோம்! வானம் பிளந்தது .. வந்தேன் என்று சொல்லி வல்வை மண்ணில் சிவப்பு சூரியன் என எங்கள் தேவன் வந்து பிறந்தான்! தன் இரும்பு கரங்கள் கொண்டு .. எம் தேச எல்லைகள் எங்கும் வேலிகள் போட்டான்! சோற்றுக்கும் , சுருட்டுக்கும்... ஓட்டு வீட்டுக்கும் ... ஆழமில்லா கிணற்றுக்கும்.. அதனருகே ஒரு தேசி மரத்துக்கும் மாய்ந்து மாய்ந்து உழைத்தால் போதும்.. அதுவே வாழ்வென்று மண்டிக்கிடந்த இனத்தை.. மானத்தின் தோழில் தாங்கினீரே.. மண்டியிட்டு தொழுகிறோம் உம்மை! மண்ணில் பிறந்த மனிதன் எவனும்.. தன் இனத்தின் பெயரால் அடையாளம் கொள்வான்.. இங்கு ஒரு மனிதனின் பெயரால் .. ஒரு இனமே அடையாளம் கொண்டதே.. கை கூப்பி வணங்கி நிற்கிறோம் கடவுளிலும் மேலானவரே! வெட்டியும் குத்தியும் ... கொன்று வீசியும் குதூகலித்து இருந்தவர் எல்லாம்.. இப்போ எட்டி நின்று பேசுகிறார் எம்மை கண்டால்... பயம் கலந்த மரியாதை... மரியாதை கலந்த பயம்... என்ன தவம் செய்தோம்? உம் காலமதில் நாம் கண் மூடாதிருக்க! காட்டை எரித்து குளிர் காயலாம் என்று கனவு கண்டனர்! நெருப்பை தின்று நீர் குடிக்கலாம் என்று நினைத்து இருந்தனர்! அத்தனையும் நடந்திருக்கும்.. நீர் அவதாரம் எடுக்காமல் போயிருந்தால்! கார்த்திகை - 26 உம் பிறந்த நாள் மட்டுமா? எம்மை கொன்று தின்ன வந்தவர் காலடியில் எல்லாம் பூகம்பம் பிறந்த பொன்னாள்..! வீரம் என்பது ஊர் அறிந்த மூன்றெழுத்து அல்ல! அது பிரபாகரன் என்று உலகம் அறிந்த ஆறு எழுத்திலும் அர்த்தம் கொள்ளும்! தலைவன் என்றானவன்.. எப்பிடி இருக்க கூடாது என்பதற்கு உலகில் உதாரணம் பலர் உண்டு! ஒரு தலைவன் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு .. உம்மை விட்டால் வேறு எவருண்டு? அகவை 51 ஆ உமக்கு? ஒரு போதும் இல்லை.. உலகில் அடங்கி கிடந்து அல்லலுறும் ஒவ்வொரு மனிதன் தாய் வயிற்றிலும் உமக்கு ஒவ்வொரு நாளும் ஜனனம்.! அகவை ஒன்று கூட ஒரு போதும் ஆகாது உமக்கு! வீரம் விண் முட்டும் மாமலையே உந்தன் அடி வாரத்தில் நாணல்களாய் வாழ்ந்து உம் பக்கம் தலை சாய்ந்து- பின் காய்ந்து போவதில் கரையுள் அடங்க கௌரவம் கொண்டோம்! தமிழ் ஈழம் என்பது நீர் காதல் கொண்ட தேசம்! பிரபாகரன் தேசமே இனி பிறக்கும் தமிழன் ஒவ்வொருவருக்கும் தேசம்! வாழ்த்த வயசில்லை... போற்றி வணங்குகிறோம்! - RaMa - 11-23-2005 எல்லோரும் உங்கள் கவி வரிகளால் தலைவரை வாழ்த்துக்கின்றீர்கள். நானும் நினைக்கின்றேன் ஆனால் வரிகள் வருகுதில்லை. வாழ்த்த வயசில்லை என்ற ரசிகையின் கவிபோலவே நானும் 51 வயதை காணும் எம் தலைவரை போற்றி வணங்கின்றேன் - vasisutha - 11-23-2005 <img src='http://img295.imageshack.us/img295/74/bday28lz.jpg' border='0' alt='user posted image'> _____________________________________________ - iruvizhi - 11-23-2005 <!--QuoteBegin-kakaivanniyan+-->QUOTE(kakaivanniyan)<!--QuoteEBegin-->ஜோவ் கடவுளை வாழ்தத வேணுமா? அல்லது முடியுமா? அவர் எங்களை வாழ்த்தினால் போதும்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->ம்ம் காலம் முழுவதும் எம்மை வாழ வைக்கும் தலைவனுக்கு தமிழீழம் பெற்றெடுத்த திருநாளில் வாழ்த்துப்பா பாடுவது நாம் பெற்ற பேறு. அவரின் காலத்தில் நாமும் வாழ்வதில் பெருமைப்படுகின்றோம். வாழ்துப்பாடும் குயில்களே உங்கள் குரலில் வாலிமையான வரிகொண்டு பாடுகின்றீர். பாடுங்கள் கேட்க காதிற்கு இனிமையாக இருக்கின்றது. தானைத்தலைவனை வாழ்த்துங்கள். |