Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மாவீரர் நாள்
#1
<img src='http://img377.imageshack.us/img377/8097/heroesday10px9qa.jpg' border='0' alt='user posted image'>

<b>இரு கண்கள் சிலையாய் நிற்க...
இமைகள் இரண்டும் தீ பந்தம் போல் எரிய..
இதயத்தை மட்டும் அழவிட்டு எம் உயிர் காத்தவர் எண்ணி..
உடலுக்குள் எரிமலை வெடிக்கும் ஒரு நாள்!

நெடும் பனை என நேர் நடை கொண்டவனும்...
இரட்டை ஜடை முளைத்த பட்டாம் பூச்சி என பறந்து திரிந்தவளும்...
சுகங்களை எல்லாம் மூட்டை கட்டி விட்டு சுதந்திரத்துக்காய் எரிந்து போனார்களே..
அந்த பூந்தளிர்கள் பொசுங்கி போனதை எண்ணி...
எம் தேச வானம் நெருப்பு நிறத்தில் உடை கொள்ளும் நாள்!

இங்கொரு விடுதலைக்காக...
எங்கெல்லாமோ மறைந்து போனவர்களை..
நரம்பெங்கும் தீ மூட்டி...
நாமெல்லாம் தேடும் நாள்!

எத்தனை தரம் முரட்டு சிங்களங்கள் முகத்தில் மோதி.. அவன் முகம் பெயர்த்து... நீரும் சாய்ந்தீர் ..
நீங்கள் மூச்சடங்கிப் போன இடம் எங்கும்... முல்லை பூக்கள் உயிர் கொள்ளும்
என்னால் முடிந்ததை என் தாய்க்கு செய்து முடித்தேன் என்று சிரித்து கொண்டே உறக்கமா?
எங்கள் கண்ணீரால் உங்கள் கல்லறை கழுவுவோம்!
கோடி புண்ணியம் அதில் கொண்டோம்!

உங்களின் சுவாசத்தை எங்கள் தேசத்து மலர்கள் கடன் கேட்கும்!
உங்களின் துடி துடிப்பை எங்களின் தேச பறவைகள் யாசகம் வேண்டும்..
உங்களின் மன ஆழத்தை எம் தேச கடல் தன் இரு கை ஏந்தி இரந்து நிக்கும்!
உங்களுக்கு பிறப்பு மட்டுமே உண்டு..
இறப்பு என்பது இல்லவே இல்லை!

நெடுந்தூர விடுதலைப் பயணம் கொண்டீர்....
களைத்து விழுந்த போதெல்லாம்..
எங்கள் தேச காதலை தானே உணவாய் கொண்டீர்!
வாழ்வுக்குள் சாவு கொள்பவர் பலர்..
சாவுக்குள் வாழ்வு கொண்டவர் உம்மை போல சிலர்...
தியாகம் என்ற சொல்லை பூமி இனி உங்களின் பெயர் கொண்டு உச்சரித்தால்தான் என்ன?????

மீண்டும் வாருங்கள்..
அந்த மெய் சிலிர்க்கும் நாட்களுக்காய்...
கண்ணீரை கரம் கொண்டு துடைக்காமல்
காத்துக்கொண்டிருக்கிறோம்!!!!</b>
<b> .. .. !!</b>
Reply
#2
ரசிகை... புலத்தில் இப்படியான உணர்வுகள் இல்லாமல் வாழும் பலரை நான் பார்த்து இருக்கிறேன். உங்கள் கவிதைக்கு மட்டுமல்ல.... தேசத்தின் மீதும்.... தேசத்தின் வீரர்கள் உணவுக்கும் எனது பாரட்டுக்கள். மேலும் தொடரட்டும் உங்கள் கவி த்தீ
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
மாவீரர் தினத்தை நினைவூட்டும் கவிதை நன்றாக இருக்கின்றது.
வாழ்த்துக்கள் ரசிகை
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#4
மாவீரர் நினைவில் அவர்கள் தியாகம் சுமந்து வந்த வரிகள் நன்றாக இருக்கிறது ரசிகை தொடருங்கள். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#5
மாவீரர்களை நினைந்து தந்த கவி அஞ்சலிக்கு நன்றிகள்.!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#6
வாழ்த்தும் நன்றியும் சொன்ன விஷ்ணு மதன் தமிழினி , குருவிகாள். அனைவருக்கும் எனது நன்றிகள்
<b> .. .. !!</b>
Reply
#7
ரசிகை அக்கா! உங்களின் மாவீரரை நினைவு கூறும் கவிதை மிகவும் நன்றாக உள்ளது. தொடருங்கள் உங்கள் சிந்தனைகளையும் உள்ள குமுறல்களையும் கவிதைகளாக வரிக்கும் முயற்சியை. எமது நாட்டிற்காக பிறந்த எதிர்கால கவிகளில் ஒருவரை கண்ட களிப்பில்..... மருதன்கேணி
I dont hate anyland.....But Ilove my motherland
Reply
#8
ஆண்டில் மலரும் மாதங்களில்
அழகிய மாதம் மார்கழி
ஆனால் மண்ணில் புனிதமானது
அதற்கு முன்வரும் கார்த்திகை

மண்ணைக் காக்கத் தம்மைக்கொடுத்த
கண்மணிகளின் கல்லறை தொழுது
கண்ணீர்ப்புூக்களால் அர்ச்சனை செய்யும்
புண்ணிய மாதம் கார்த்திகை

தானைத் தலைவன் தம்பி
தமிழை உயிராய் கொண்டான்
மானம் உள்ள மைந்தன்
மண்ணில் மலர்ந்த கார்த்திகை

வானம் நின்று பொழியும்
வயல்கள் குளங்கள் நிரம்பும்
தானம் செய்த உடல்கள்
தண்ணீர் பட்டுக் குளிரும்

ஈகைச் சுடர்கள் ஏற்றி
இழந்த உறவை நினைப்போம்
எங்கள் வீரர் போற்றி
ஈழம் வாழ உழைப்போம்

Reply
#9
இரசிகை உங்கள் கவிதை மிகவும் அழகாக இருக்கிறது.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
#10
ஆகா என்ன ஆழமான கருக்காவி கவிவடிவில் உள்ளத்து உணர்வுகளை உரத்து சொன்னீர்கள். உண்மையை சொல்லுகின்றேன் பார் போற்றி வணங்கும் முத்தான மாவீரர் வித்துக்களை பாடிய கவிகளே! ஈழம்தான் மாவீரர் இலக்கு அதுவரை நிறுத்தாது பாடுங்கள், விடுதலைக்காய் உழையுங்கள்.

நன்றி உங்கள் கவிகள் உணர்வுபூர்வமாக உள்ளன.

ஈழம் வரும்வரை உறக்கமிழந்து அலையும் அகதி.
[size=18]<b> </b>
[size=18]<b> </b>

IRUVIZHI
Reply
#11
ரசிகை, செல்வமுத்துவின் மாவீரர் துதிபாடும் கவிதைகளுக்கு நன்றிகள். மாவீரர்களை கௌரவிக்கும் இக் கார்த்திகை மாதத்தில் அவர்களை நினைவு கூர்ந்து நீங்கள் இருவரும் வடித்த கவிதைகள் .. உங்கள் உணர்ச்சி குமுறல்கள் . இப்படியான உங்கள் குமுறல்கள் மேலும் தொடர வேண்டுகிறேன்.
[b][size=18]
Reply
#12
செல்வமுத்து உங்கள் கவி நன்றாக உள்ளது.
அப்புறம் கவிதன் மருதங்கேனி செல்வமுத்து அருவி இருவிழி உங்கள் நன்றிகளுக்கு நன்றிகள்.
<b> .. .. !!</b>
Reply
#13
மாவீரர்களின் தியாகத்தை சொல்லி வந்த கவிதை..அழகு அக்கா...ரொம்ப அருமை..தொடர்ந்து எழுதுங்கள்.
..
....
..!
Reply
#14
மாவீரர் நினைவு சுமந்து வந்த கவிதைகளை தந்த இருவருக்கும் நன்றி.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)