Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 361 online users.
» 0 Member(s) | 359 Guest(s)
Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,320
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,233
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,298
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,643
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,075
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,467
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,500
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,040
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,239

 
  **சுடேக்கு** புதிர் விளையாட்டு
Posted by: RaMa - 11-11-2005, 08:18 AM - Forum: போட்டிகள் - Replies (63)

வணக்கம் உறவுகளே!

தற்போது பல நாடுகளில் பிரபல்யமாகி வரும் விளையாட்டுத்தான் இந்த சுடோக்கு புதிர் போட்டி. இது மூளைக்கு வேலை கொடுத்து காலியாக உள்ள கட்டங்களை எண்களினால் நிரப்ப வேண்டும்.

பெரிய கட்டங்களுக்குள் 9 சிறிய கட்டங்கள் உள்ளன.
சிறிய கட்டங்களுக்குள் 9 மிகச் சிறிய கட்டங்கள் உள்ளன.

1 முதல் 9 வரையான உண்களை உபயோகப்படுத்தி சிறிய கட்டங்களை நிரப்ப வேண்டும்.
அப்படியே 9 சிறிய கட்டங்கள் நிரப்பப்பட்டதன் பின்னார் இடமிருந்து வலமாகவும் மேலிருந்து கீழாகவும் 1 முதல் 9 வரையான எல்லா எண்களும் கட்டங்களில் இடம் பெற செய்ய வேண்டும்.
ஒரே வரியில் எந்த எண்ணும் ஒரே தடவை மட்டும் தான் வரவேண்டும்.
எங்கே உங்கள் மூளைக்கு வேலை கொடுங்கள் பார்க்கலாம்....

<img src='http://img476.imageshack.us/img476/2573/uuu8ai.png' border='0' alt='user posted image'>

Print this item

  பிறமொழி ஆக்கங்கள் என்ற பக்கம் தேவையா ??????
Posted by: sinnappu - 11-11-2005, 07:55 AM - Forum: உங்கள் கருத்துக்கள் - Replies (19)

வணக்கம் ஒரு கேள்வி அடியேன் தமிழைத்தவிர எந்த மொழியும் படிக்கவில்லை
ஆணால் பிறமொழி ஆக்கம் என்று ஒரு பக்கம் திறக்கப்பட்டுள்ளது
என்போன்ற பலருக்கு அடியும் விளங்கவில்லை நுனியும் விளங்கவில்லை
மற்றப்பகுதிகளில் ஆங்கிலத்தில் எழுதினால் தமிழில் மாற்றியுள்ளோம் என்று மட்டுறுத்தினர்கள் சொல்வார்கள் ஆணால் இங்கு ???

சரி தமிழ் மொழியில் எழுதனும் இல்லை ஆங்கிலத்தில் எழுதியதை தமிழில் மாற்றம் செய்யனும்

ஏனெனில் அந்தப்பக்கத்தில கருத்து எழுதியவர்கள் 5 அல்லது 6 பேர்

சரி எல்லாரும் வயது போன நேரத்தில அப்பு வோடை கோபப்படாமல் உங்கட கருத்தை சொல்லுங்கோ

என்னைப்பொறுத்த மட்டில பிறமொழி ஆக்கம் என்ற ஒரு பக்கம் தேவையில்லை தமிழர்களுக்காக தமிழில் தமிழரால் ஆரம்பிக்கப்பட்ட பக்கம் இது (இது என் கருத்து )

ஏனெனில் ஒருவர் ஆங்கிலத்தில எழுதுவார் ( அதாவது கொப்பி பண்ணி பிறகு இங்கை ஒட்டுறது ) நான் டொச்சில எழுதுவன் சாட்றீ பிரான்சு மொழியில போடும் குறுவீ சும்மா கீச்சிடும் தமிழ் தனக்கே விளங்காமல் எழுதும் :evil:
ம் ரசிகை. துயா சொல்லவே வேண்டாம் புது மொழியே கண்டுபிடிப்பினம்
பத்தக்குறைக்கு மச்சான் சோமாலியா பாசையில தொடங்குவான் கூடவே அவனின்ட கூட்டு அண்ணாச்சி ( :evil: :evil: :evil: :evil: ) ஆப்கான் பாசை
தேவையா இது ......
:?: :?: :?: :?: :?: :?: :?: :?: :?: :?: :?:

Print this item

  மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு- ஒரு சுருக்கக் குறிப்பு
Posted by: thiru - 11-11-2005, 07:00 AM - Forum: மருத்துவம் - No Replies

<img src='http://img362.imageshack.us/img362/4084/ki9co.gif' border='0' alt='user posted image'>

இந்த வருடத்திற்குரிய (2005) உடற்கூற்றியல் (Physiology) அல்லது மருத்துவத்துறைக்குரிய (Medicine) நோபல் பரிசானது குறிப்பிடத்தக்கதும் காத்திராப்பிரகாரம் (Unexpected) மேற்கொள்ளப்பட்டதுமான ஒரு கண்டுபிடிப்பிற்கு வழங்கப்பட்டுள்ளது.

1982ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட அக் கண்டுபிடிப்பானது 'அல்சர்' எனப் பொதுவாக எமது மக்களால் அறியப்பட்ட இரைப்பை அழற்சிக்கும் (Gastritis) குடற்புண்ணிற்கும் (Peptic ulcer disease) காரணியாக 'ஹெலிக்கோபக்ரர் பைலோரி' (Helicobacter pylori) என்ற பக்ரீரியாவே விளங்குகிறது என்ற அரிய உண்மையை மருத்துவ உலகிற்கு வெளிப்படுத்தியது.

1937 ல் அவுஸ்த்திரேலியாவின் பேர்த் (Perth) என்ற இடத்தில் பிறந்தவரான றொபின் வாரென் (Robin Warren) என்ற உடல்நோயியல் நிபுணர் ( Pathologist) நோயாளிகளின் இரைப்பையின் கீழ்ப்பாகத்திலிருந்து (Antrum) எடுக்கப்பட்ட இழையமாதிரிகளில் (Biopsies) 50 வீதமானோரின் மாதிரிகளில் சிறிய வளைந்த நுண்கிருமிகள் கூட்டமாகச் சேர்ந்திருப்பதை (small curved bacteria colonizing) அவதானித்தார். அவ்வாறு நுண்கிருமிகள் காணப்பட்ட சந்தர்ப்பங்களில் அவற்றிற்கருகிலுள்ள இரைப்பையின் சீதத்தில் (Gastric mucosa) அழற்சிக்குரிய அறிகுறிகள் (Signs of inflammation) தென்பட்டதையும் அவர் கண்ணுற்றார்

1951ம் ஆண்டு அவுஸ்த்திரேலியாவில் பிறந்த இளம் வைத்திய நிபுணரான பாரி மாஷல் (Barry Marshall) வாரெனின் மேற்படி அவதானிப்புகளில் நாட்டம்கொண்டு அவருடன் இணைந்து ஆய்வுகளை மேற்கொள்ளத் தலைப்பட்டார்.

இருவருமாக 100 நோயாளிகளின் இழைய மாதிரிகளைப் பெற்று ஆய்வுசெய்தனர். பல தடவை அவர்கள் முயன்றதன் பலனாக மாஷல் அந்தக்காலத்தில் என்னவென்றே தெரியாதிருந்த (Unknown bacterial species) -பிற்காலத்தில் 'ஹெலிக்கோபக்ரர் பைலோரி' எனக் குறிப்பிடப்பட்ட- அந்த நுண்ணுயிர்களை ஆய்வுகூடத்தில் வளர்த்தெடுப்பதில் (Cultivating) வெற்றிகண்டார்.

இரைப்பை அழற்சி, இரப்பைப் புண் (Gastric ulcer) அல்லது முன்சிறுகுடற் புண் (Duodenal ulcer) என்பவற்றால் அவதியுற்றவர்களில் அனேகமாக அனைத்து நோயாளிகளினதும் இரைப்பை இழைய மாதிரிகளில் மேற்படி நுண்ணுயிர் இருப்பதை மருத்துவர்கள் இருவரும் கூட்டாக அவதானித்தனர். இந்த ஆய்வு முடிவின் பிரகாரம் இவர்கள் இருவரும் 'ஹெலிக்கோபக்ரர்' பைலோரியே இரைப்பை அழற்சிஇ இரைப்பை மற்றும் முன்சிறுகுடற் புண் என்பவற்றின் தோற்றுவாயாக (Aetiology) உள்ளது என முன்மொழிந்தனர்.

மார்ஷல் மற்றும் வாரெனின் இந்தக் முன்னோடிக் கண்டுபிடிப்பின் விளைவாக ஒரு காலத்தில் நாட்பட்ட (Chronic), மீண்டும் மீண்டும் தாக்கும் (Frequently relapsed) ஒரு நோயாகக் காணப்பட்ட குடற்புண்ணை, குறுகிய காலத்திற்கு நுண்ணுயிரெதிரிகளுடன் ( Antibiotics) அமிலச் சுரப்பினை நிரோதிக்கும் மருந்துகளையும் (Acid secretion inhibitors) சேர்த்து உட்கொள்வதன்மூலம் அனேகமாக நிரந்தரமாகவே குணமாக்கிவிடக்கூடிய நிலை இன்று உருவாகிவிட்டது.

<img src='http://img362.imageshack.us/img362/1308/helicobactertam4kh.jpg' border='0' alt='user posted image'>

1982ல் மார்ஷல் மற்றும் வாரென் ஆகியோரால் ஹெலிக்கோபக்ரர் பைலோரி கண்டுபிடிக்கப்பட்டபோது, குடற்புண்ணைத் தோற்றுவிப்பதில் மனஅழுத்தமும் (Stress) ஒருவரது வாழ்க்கை முறையும் (Life style) பெரும் பங்குவகிப்பதாகக் கருதப்பட்டது. ஆனால் தற்போது 90வீதமான முன்சிறுகுடற் புண்ணிற்கும் 80 வீதமான இரைப்பைப் புண்ணிற்கும் காரணியாக ஹெலிக்கோபக்ரர் பைலோரி உள்ளமை உறுதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

<img src='http://img362.imageshack.us/img362/4160/2005n3to.jpg' border='0' alt='user posted image'> மருத்துவர்கள் மாஷல் மற்றும் வாரென் ஆகியோர் நோபல் பரிசு கிடைத்தபிற்பாடு அதனைக் கொண்டாடும் தோற்றம்.

<img src='http://img362.imageshack.us/img362/8326/19845cq.jpg' border='0' alt='user posted image'> 1984ல் மருத்துவர்கள் இருவரும் தமது அலுவலகத்தில் இருக்கும் காட்சி


இந்த ஹெலிக்கோபக்ரர் பைலோரியானது உலக மனிதக் குடித்தொகையின் 50 வீதமானவர்களது இரைப்பையில் காணப்படுகிறது. இத்தொற்றானது வளர்ச்சியடைந்த நாடுகளில் வாழும் மக்களில் ஒப்பீட்டளவில் குறைவாகவும், வளர்முக நாடுகளில் அனேகமாக அனைவரிலும் இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.

<b>நன்றி:</b> தினக்குரல்
<b>மூலம்:</b>நோபல் பரிசுக் குழுவினது அறிக்கையின் ரஷ்யமொழி வடிவம் - நியூஸ்று இணையச் செய்திச்சேவை (www.newsru.com)
<b>தமிழில்:</b> திருமகள் (ரஷ்யா)

Print this item

  ஜோதிகாவைச் சூர்யா திருமணம் செய்கிறார்
Posted by: கீதா - 11-10-2005, 09:58 PM - Forum: சினிமா - Replies (14)

<img src='http://img328.imageshack.us/img328/4104/tnsneha7yp.jpg' border='0' alt='user posted image'>


ஜோதிகாவைச் சூர்யா திருமணம் செய்கிறார்
பத்திரிகைகளின் வாய்க்குச் சர்க்கரைதான் போடவேண்டும். சூர்யா / ஜோதிகா காதல் ஜோதிகாவைச் சூர்யா திருமணம் செய்கிறார் இது போன்ற செய்திகள் அடிக்கடி வருவதும்... அதை சூர்யாவும் ஜோதிகாவும் மறுப்பதும் நீண்ட நாட்களாகவே வாடிக்கையாக இருந்து வந்தது. அந்தச் செய்திகள், இப்போது உண்மையாகிவிட்டன.

Print this item

  காதல்
Posted by: Rasikai - 11-10-2005, 09:48 PM - Forum: கவிதை/பாடல் - Replies (14)

[b]காதல்
------------
காதல் சிரிப்பில் தொடங்கும்
அழுகையில் முடியும்!
காதல்
சிலருக்கு மட்டுமே சித்திரம் போன்ற தாஜ்மகால்
பலருக்கு????
தன்னம் தனியனாய்.......
ஒற்றைப்போர்வைக்குள் முகம் புதைத்து
ஓவென்று அழுது
உலகம் அறியாமல்... தனக்குத்தானே கல்லறை கட்டி
தன்னை அதனுள் புதைத்து
மண்ணை மூடும் சிறகொடிந்த சிட்டுக்குருவி!

:oops: :oops: :oops: :oops:

Print this item

  இன்னும் பயம் எனக்கு
Posted by: கீதா - 11-10-2005, 09:24 PM - Forum: கவிதை/பாடல் - Replies (7)

இன்னும் பயம் எனக்கு

தயவு செய்து என்னை
தனிமையில் விட்டு விடு

கசங்கிய இதயத்திலே
இன்னும்
உயிர்ப்போடு இருப்பது
எனது நினைவுகள்
மட்டுமே

வலிகளை காயாத காயங்களை
கீறல்களை பழைய நினைவுகளை
என்றும் எல்லாவற்றையும்
உரசிப்பார்க்கவே
துணைக்கழைக்கின்றேன்
தனிமையினை

எனெனில் உன்னிடம் என் கடந்த
காலங்களை சொல்வேனே ஆயின்
எனை நீ மனநல மருத்துவ மனைக்கு
அனுப்பி விடுவாயோ என்று பயம் எனக்கு

Print this item

  ஜிமெயில் குறிப்புகள்
Posted by: Birundan - 11-10-2005, 08:41 PM - Forum: கணினி - Replies (3)

1. நீங்கள் வீட்டைத்தவிர்த்து, வெளியிடங்களில் சென்று, மோஸில்லா அல்லது நெட்ஸ்கேப் உலாவியின் மூலம் ஜிமெயிலை பார்வையிட்டால், அந்தப்பக்கத்திலிருந்து வெளிவரும் போது முறையாக "Sign out" செய்துவிட்டு வாருங்கள். வெறுமனே பக்கத்தை மூடினால், அடுத்து வரும் யாரேனும் ஜிமெயில் முகவரியைத் தந்தால் அது நேராக உங்கள் மின்னஞ்சல் பகுதிக்குத்தான் கொண்டு செல்லும். அவரால் உங்களது மடல்களைப் படிக்க முடியும். எனவே கவனம் தேவை.

2. பாதுகாப்பாக ஜிமெயிலைக் காண https://gmail.google.com
முகவரியை உபயோகிக்கவும்.

3.ஒரு மடலைப்பார்த்த பின்னர் மீண்டும் மின்னஞ்சல்பெட்டிக்கு [Inbox] திரும்ப இண்டர்நெட் எக்ஸ்புளோரரில் இருக்கும் "Back" என்ற பொத்தானை அழுத்தத் தேவையில்லை. மாறாக முகப்பில் பெரியஎழுத்துக்களில் உள்ள "GMail" என்பதையோ, "Inbox" என்பதையோ, மடல்களின் மேலே உள்ள "Refresh" என்கிற பொத்தானையோ அழுத்தினால் விரைவாக மின்னஞ்சல் பெட்டியின் முகப்பு பக்கத்திற்கு செல்ல முடியும்.

4. அதிகமான மின்னஞ்சல்கள் வந்திருக்கிறது. அதில் குறிப்பிட்ட மின்னஞ்சலை மட்டும் தேடிக்கண்டுபிடிப்பது எப்படி? உதாரணமாக கீழே உள்ளது போல --- [ ] இது போன்ற சதுர அடைப்புக்குறிகளைத் தவிர்த்து--- தேடவும்.

[Subject:"Rain in Chennai" (from:Nanban OR to:Ragavan)]
இதில் "to:" என்பதற்கு பதிலாக "cc:" என்பதையோ "bcc:" என்பதையோ உபயோகிக்கவும் முடியும். மேலும் "-" கழித்தல் குறியை உபயோகிப்பதன் மூலம் தேவையில்லா மின்னஞ்சல்களை தேடுவதிலிருந்து தவிர்க்க இயலும். உதாரணமாக

[Subject:"Rain in Chennai" (from:Nanban OR (to:Ragavan -ccTongueriyan -bccTonguearansothi))] என்று தந்தால் பிரியனிடமிருந்தும், பரஞ்சோதியிடமிருந்தும் "Rain in Chennai" என்று தலைப்பிட்டு வந்த மடல்களைத் தவிர்த்து நண்பன் மற்றும் இராகவனின் மடல்கள் மட்டுமே தேடுதலின் தீர்வாக கிடைக்கும்.

5. ஜிமெயில் மின்னஞ்சல் அனுப்புபவர்களுக்கு 'To','Cc','Bcc' பகுதிகளில் [ஜிமெயில் மின்னஞ்சல் வைத்திருக்கும்] பெறுபவரின் பெயரை மட்டும் குறிப்பிட்டால் போதுமானது - @gmail.com என்று குறிப்பிடத் தேவையில்லை. உதாரணமாக
manmadan@gmail.com என்பதற்கு பதிலாக manmadan என்று குறிப்பிட்டாலே போதுமானது. (ஜிமெயிலில் பெறுபவரின் முதலெழுத்தை தட்டச்சும் போதே, கீழே மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தோன்றுகின்றன என்பதையும் கவனிக்கவும்.)

6.உங்களுக்குத்தெரியுமா..? ஜிமெயில் மின்னஞ்சல் முகவரி
முதல்பெயர்.கடைசிப்பெயர்@ஜிமெயில்.காம் என்று சிலருக்கு இருக்கும். இதில் இருக்கும் நிறுத்தற்புள்ளியை நாம் இடாவிட்டாலும் ஜிமெயில் சரியான முகவரிக்குத்தான் செல்லும்.!உதாரணமாக

subra.manian@gmail.com என்ற முகவரியை subramanian@gmail.com என்று தட்டச்சினாலும் சரியான முகவரிக்குத்தான் செல்லும்!

7.ஜிமெயிலில் "or" என்பதும் "OR" என்பதும் ஒன்றல்ல. தேடலுக்கு "OR" என்பது மட்டுமே (மேற்கோள் குறிகள் இல்லாமல்) உதவும் என்பதைக் கவனிக்கவும்.

8. ஜிமெயிலில் ஒரு சொல்லைத் தேடும் போது "adi" என்று தேடுவதும் "Adi" என்று தேடுவதும் ஒன்றே. ஆனால் அவ்விதம் தேடினால் ஜிமெயில் "Aditya" என்பதை விடையாகத் தராது! "aditya" அல்லது "Aditya" என்று தேடினால் மட்டுமே அதற்கான சரியான விடை வரும்.

ஒவ்வொருவரும் பல மின்னஞ்சல்களை - யாஹ¤, ஹாட்மெயில் போன்று - உபயோகித்து வருகின்றனர். அவை ஒவ்வொன்றிலும் பல நண்பர்களின் மின்னஞ்சல் முகவரிகள் இருக்கின்றன. அவற்றை எல்லாம் ஜிமெயில் மின்னஞ்சலுக்கு எளிதாக மாற்றிக்கொள்ள முடியும்!

உதாரணமாக யாஹ¤ மின்னஞ்சலில் உள்ள முகவரிகளை மாற்ற வேண்டுமெனில், இணையத்தில் தொடர்பு கொண்ட பின், உங்கள் யாஹ¤ மின்னஞ்சலுக்கு செல்லவும். இடதுபுறம் உள்ள "Address" பகுதியில் உள்ள உதவியைப் பயன்படுத்தி, மின்மடல் முகவரிகள் அடங்கிய கோப்பை உங்கள் கணினிக்கு பதிவிறக்கிக்கொள்ளலாம். பதிவிறக்கம் செய்யப்பட்ட கோப்பு Yahoo.csv என்ற பெயரில் சேமிக்கப்பட்டிருக்கும்.

இப்போது உங்களின் ஜிமெயிலுக்கு பயனாளர் பெயர், கடவுச்சொல்லைக் கொடுத்து முகப்பு பக்கத்திற்கு வரவும். பக்கத்தின் இடது பக்கத்தில் இருக்கும் "Contacts" என்பதை அழுத்தினால் "Contacts List" என்ற புதிய பக்கம் திறக்கும். அதில் மேலே வலது ஓரத்தில் இருக்கும் "Imports Contacts" என்பதை தேர்வு செய்யவும். வரும் திரையில் "Browse" பொத்தானை தேர்வு செய்து, உங்கள் கணினியில் எந்த இடத்தில் யாஹ¤ மின்னஞ்சல் முகவரிகள் அடங்கிய கோப்பான Yahoo.csv இருக்கிறதோ அதைத் தேர்ந்தெடுக்கவும். அதற்கு பின்னர் "Import Contacts" பொத்தானை அழுத்தவும். உங்கள் கோப்பு வெற்றிகரமாக பதிவேற்றம் செய்யப்பட்ட பின்னர் வரும் திரையில், புதிதாக சேர்க்கப்பட்ட முகவரிகள் அனைத்தும் காண்பிக்கப்படும்.

(ஜிமெயிலில் இருந்து யாருக்கேனும் மின்னஞ்சல் அனுப்பினால், அவர்களுடைய முகவரிகள் தானாகவே ஜிமெயில் முகவரிப் பட்டியலில் சேர்க்கப்பட்டு விடும் என்பதை அறியவும்.)

10. உங்களுக்கு புதிதாக ஜிமெயில் வந்திருக்கிறதா என்பதை அறிய ஒவ்வொரு முறையும் ஜிமெயில் பக்கத்திற்கு சென்று பார்க்க வேண்டியதில்லை. அதற்கு பதிலாக GMail Notifier என்ற மென்பொருளை பதிவிறக்கம் செய்து, நிறுவிக்கொண்டால் போதும். இணையத்தொடர்பு கொள்ளும் ஒவ்வொரு முறையும், புதிய ஜிமெயில் மின்னஞ்சல்கள் வந்திருந்தால் அதைப் பற்றிய விபரங்களை தானாகவே காண்பிக்கும். இந்த இலவச மென்பொருளை பதிவிறக்கம் செய்ய http://snipurl.com/gefx என்ற சுட்டியைத் தட்டுங்கள்.

11. உங்களது ஜிமெயில் முகவரிக்கு வரும் மின்னஞ்சல்களை வேறொரு மின்னஞ்சல் முகவரிக்கு தானாகவே அனுப்ப வழி இருக்கிறது! ஜிமெயிலில் உள்ள "Settings" என்பதை அழுத்துங்கள். வரும் திரையில் "Forwarding" என்பதை தேர்வு செய்து, பின்னர் "Enable" (mail forwarding) என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள். அங்கே இருக்கும் பகுதியில் எந்த மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல்கள் அனுப்பப்படவேண்டுமோ, அந்த முகவரியைத் தரவும். அதற்கு கீழ் இருக்கும் மூன்று தேர்வுகளில்
1. Keep GMail's copy in Inbox
2. Archieve GMail's copy
3. Trash GMail's copy
என்பனவற்றில் உங்கள் தேவைக்கு தகுந்தவாறு தேர்ந்தெடுத்துக்கொள்ளவும். மாற்றங்களை சேமித்துவிட்டு வெளியில் வரவும். அதற்கு பின்னர் உங்கள் ஜிமெயிலுக்கு வரும் மின்மடல்கள் அனைத்தும் நீங்கள் தந்திருக்கும் மின்னஞ்சல் முகவரிக்கு தானாகவே அனுப்பப்படும்.

12. ஒரு இணையத்தளத்தைப் பார்வையிட்டுக்கொண்டு இருக்கிறீர்கள் - அந்த தளத்திலிருந்து மின்னஞ்சல் அனுப்ப விரும்பி, "email link"-ஐ தட்டினால் அது வழக்கமாக Outlook Express-ஐ திறக்கும். அதற்கு பதிலாக ஜிமெயிலிருந்து மின்னஞ்சலை அனுப்ப விரும்புகிறீர்கள் என்றால், G-Mailto என்ற இலவச மென்பொருளை, http://snipurl.com/geg5 என்ற சுட்டியிலிருந்து பதிவிறக்கம் செய்து நிறுவிக்கொண்டால் நேரடியாக அனுப்ப முடியும். அப்போது ஒரு வேளை நீங்கள் ஜிமெயிலில் இல்லாமல் இருந்தால் ஜிமெயில் மின்னஞ்சலுக்கு செல்வதற்கான பக்கத்தை திறக்கும்.

13. ஜிமெயிலில் உள்ள Label - Filter போன்ற வழிமுறைகளைப் பயன்படுத்தி, உங்களுக்கு வரும் மின்னஞ்சல்களை தனித்தனியாக - உதாரணமாக நண்பர்களின் மின்னஞ்சல்களைத் தனியாக, குடும்பத்தினர் மின்னஞ்சல்களைத் தனியாக, அலுவல் அஞ்சல்களைத் தனியாக - இப்படி எவ்விதம் வேண்டுமென்றாலும் தனித்தனியான பகுதிகளுக்கு செல்லும்படியான வசதியை ஏற்படுத்திக்கொள்ளலாம். எப்போது வேண்டுமென்றாலும் அந்த உபயோகங்களை "Edit" செய்து தேவையான மாற்றங்களை செய்து கொள்ளலாம்.

நன்றி>தமிழ்மண்றம்

Print this item

  சின்னப்புவின் பேரன் சின்னாவின் குறும்பு
Posted by: வினித் - 11-10-2005, 08:22 PM - Forum: நகைச்சுவை - Replies (1)

<img src='http://img435.imageshack.us/img435/1853/slarmy4mp.jpg' border='0' alt='user posted image'>

சின்னப்புவின் பேரன் சின்னா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

Print this item

  திருகோணமலையில் கரையொதுங்கும் லட்சக்கணக்கான உயிரிழந்த மீன்கள்
Posted by: orutamilan - 11-10-2005, 04:22 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (1)

திருகோணமலை உட்துறைமுக வீதியிலுள்ள கரையோரப் பகுதியில் லட்சக்கணக்கான இறந்த மீன்கள் கரையயாதுங்கி வருகின்றன.இதனால் திருகோணமலை நகர்ப் பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.கடந்த இரு தினங்களாக சூடை மீன் இனத்தைச் சேர்ந்த சாளை மீன் களே இறந்த நிலையில் கரையயாதுங்கி வருவதாகக் கூறப்படுகிறது. குறித்த மீனினம் திடீரென இவ் வாறு கரையயாதுங்கி வருவது பல் வேறு தரப்பினரையும் அதிர்ச்சிக்குள் ளாக்கியுள்ளது.

குறித்த மீனினம் இறந்து கரை யயாதுங்கி வரும் உட்துறைமுக வீதி யில் கடற்படையினரின் பாரிய முகாம் அமைந்துள்ளது. இங்கு வெடி பொருள் ஏதாவது வெடிக்க வைக்கப்பட்டதால் நீரில் ஏற்பட்ட நச்சுத் தன்மை காரண மாக இந்த மீன்கள் உயிரிழந்திருக் கலாம் எனக் கூறப்படுகிறது.அண்மைக்காலமாக கடலில் ஏற் பட்டுவரும் மாற்றங்களும் இதற்குக் காரணமாக இருக்கலாமெனவும் கூறப்படுகிறது.

கரையயாதுங்கிய மீன்களை அகற் றுவதற்கு நேற்று மாலை வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் நகர்ப்பகுதியில் துர்நாற்றம் வீசுகின் றது. இதனால் மக்கள் பெரும் அசெள கரியங்களை எதிர்நோக்கிவருகின்ற னர்.இதேவேளை - கரையயாதுங்கி யுள்ள மீன்களை உடன் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி பொது அமைப்புக்கள் திருகோணமலை நகர சபையினரையும் சுகாதாரப் பிரி வினரையும் கோரியுள்ளனர். (10,04)

Print this item

  டக்ளஸ் அலுவலகம் அருகே இரு தமிழ் இளைஞர் கைது!
Posted by: orutamilan - 11-10-2005, 04:20 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

கொழும்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந் தாவின் அலுவலகத்துக்கு அண்மையில் சந் தேகத்துக்கு இடமாக நடமாடியதாகத் தெரி வித்து இரு தமிழ் இளைஞர்கள் நேற்றுமுன்தி னம் இரவு படையினர் கைதுசெய் தனர். நேற்றுமுன்தினம் இரவு 8.30 மணியள வில் ரோந்து நடவடிக்கையில் ஈடு பட்டிருந்த படையினர் மட்டக்களப் பைச் சேர்ந்த சுப்பிரமணியம் சுரேஷ் குமார், கந்தையா தாளையர் ஆகிய இரு இளைஞர்களைக் கைதுசெய்த னர். இவர்கள் மேலதிக விசாரணை களுக்காக நாரஹேன்பிட்டி பொலி ஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Print this item