Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இன்னும் ஏமாறுகிறார்களா அல்லது ஏமாற்றுகிறார்களா...??!
#1
<b>எம்பிஏ மாணவியை கற்பழித்த (வல்லுறவு) சட்டக் கல்லூரி மாணவர்</b>

எம்பிஏ மாணவியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த சட்டக் கல்லூரி மாணவர், அந்தப் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சேலம் அருகே உள்ள ததுபாய்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதேவி. சேலத்தில் எம்பிஏ முதலாமாண்டு படித்து வருகிறார். இவர் மேற்கு மண்டல ஐஜி சுப்பிரமணியத்தைச் சந்தித்து கண்ணீர் மல்க தனக்கு பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்தார். அதில் ஸ்ரீதேவி கூறியுள்ளதாவது:

நானும் திருச்சி சட்டக் கல்லூரியில் படிக்கும் இன்பராஜூம் காதலித்து வந்தோம். என்னைத் திருமணம் செய்வதாக உறுதியளித்து 2003ம் ஆண்டில் அவர் என்னை கற்பழித்துவிட்டார். ஆனால், அதன் பிறகு திருமணம் செய்ய மறுத்துவிட்டார்.

காரணம் கேட்டால் நாம் இருவரும் வேறு வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்று கூறிவிட்டார். நான் ஏமாற்றப்பட்டு கற்பழிக்கப்பட்டது குறித்து சேலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தந்தேன். எப்ஐஆர் மட்டும் போட்ட போலீசார் வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந் நிலையில் மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த பாலா, திருவண்ணாமலையைச் சேர்ந்த ரமேஷ், சேலத்தைச் சேர்ந்த திலகவதி என்ற லாட்ஜ் ஆகியோர் ஆகியோர் இன்பராஜுடன் சேர்ந்து கொண்டு என்னை மிரட்டுகின்றனர்.

இவர்களால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இவ்வாறு ஸ்ரீதேவி தனது மனுவில் கூறியுள்ளார்.

மனுவைப் பெற்றுக் கொண்ட ஐஜி சுப்பிரமணியம், சேலம் கமிஷ்னரை உடனடியாக அழைத்து ஸ்ரீதேவிக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க உத்தரவிட்டார்.

மேலும் ஸ்ரீதேவியை ஏமாற்றி தகாத முறையில் நடந்து கொண்ட சட்டக் கல்லூரி மாணவன் இன்பராஜ் மற்றும் அவனுக்குத் துணையாக ஸ்ரீதேவியை மிரட்டும் திலகவதி உள்ளிட்ட 3 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யவும் உத்தரவிட்டார்.

தகவல் - தற்ஸ்தமிழ்.கொம்
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)