| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,243
Full Statistics
|
| Online Users |
There are currently 424 online users. » 0 Member(s) | 421 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,064
|
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: SMPXrArgum
10-23-2025, 05:42 AM
» Replies: 27
» Views: 10,077
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,547
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,259
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,540
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 30,881
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,287
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 37,894
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 7,940
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,205
|
|
|
| சப்பாத்துடன் வீட்டுக்குள் |
|
Posted by: நேசன் - 04-13-2006, 10:39 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- No Replies
|
 |
இலண்டன் வாழ் பெரும்பான்மை தமிழ் மக்களிடம் வெளியில் போட்டுத்திரிகின்ற ஊத்தைச்சப்பாத்துடன் அப்படியே வீட்டுக்குள் செல்வது வழக்கமாக இருக்கின்றது. தங்கள் வீட்டுக்குள் மாத்திரம் அல்ல விருந்தினராக செல்கின்ற வீடுகளுக்கும் அதையே செய்கின்றார்கள்.
சுகாதாரத்திற்கு கூடாத ஓர் பண்பற்ற செயல்தானே...
வீடு கோயில் போன்றது என்பதை சிலவேளை மறந்து விட்டார்களோ.
|
|
|
| லண்டன் ஈழ்பதீஸ்வத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டம்! |
|
Posted by: ஜெயதேவன் - 04-13-2006, 08:59 PM - Forum: நிகழ்வுகள்
- Replies (25)
|
 |
<b>அன்புக்குரிய ஈழபதீஸ்வரர் அடியார்களே!</b>
உங்கள் வழிபாட்டுக்கு நாங்கள் ஒருபோதும் தடையாக நிற்கப்போவதில்லை! இந்த ஆலயம் தொடர்பாக சில முக்கிய விடயங்களை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.... சிந்திக்க தெரிந்த நீங்களே முடிவெடுங்கள்!
வெம்பிளி, அல்பேட்டன், மற்றும் மேற்கு லண்டன் பகுதிகளில் பெருமளவில் வாழும் சைவமக்களுக்கு ஆலயம் இல்லா குறையினை போக்க முழுக்க முழுக்க பொதுமக்களின் பணத்தில் சிவராசா, மன்மதன், ஜெயதேவன், நேமிநாதன், பரமலிங்கம், சௌந்தரராஜன் ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்டதுதான் ஈழபதீஸ்வரர் சிவன் கோவில்.
இங்கு லாபமாக ஈட்டப்படும் பணம் தாயகத்தில் போரினால் பெற்றோரை இழந்து ஆதரவற்று அகதிகளாய் வாழும் குழந்தைகளுக்கு உதவுவதற்கு உங்களின் சம்மத்துடன் ஆரம்பித்தவர்களால் தீர்மானிக்கப்பட்டது.
<b>ஆனால் நீங்கள் ஆண்டவனின் பெயரில் வழங்கும் பணத்திற்கு இப்போ என்ன நடைபெறுகிறது?</b>
இந்த ஆலயம் வரும் இலாபத்தை சிங்கள அரசாங்கத்தின் கைக்கூலியாகிய ஜெயதேவனும் குடும்பமும் தம்மிடையே பங்கீட்டு கொள்ளும்வகையில் தனியார் வர்த்தக நிறுவனமாக Company House இல் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆடியார்களே உங்களின் சம்மதத்துடனேயா இந்த ஏற்பாடு நடைபெற்றுள்ளது?
தாயகத்தில் அல்லலுறும் மக்களுக்கு உதவுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆலயம் இன்று ஜெயதேவன் குடும்;பத்தின் தனிப்பட்ட சொத்தாக மாற்றப்பட்டுள்ளது!
நீங்கள் உண்டியலில் காணிக்கையாக இடும் பணம் ஜெயதேவனின் தனிப்பட்ட நலனுக்கும், லண்டனில் 3 வீடும் கொழும்பில் சில வீடுகள் வாங்குவதற்கும் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதற்குமே பாவிக்கப்படுகிறது.
<b>கோவில் உண்டியல் ஜெயதேவன் வீட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறது. </b>
தாயகத்தில் மக்கள் அல்லல்படும்போது இங்குள்ள அரசியல்கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவது ஜெயதேவனின் சுத்து மாத்துக்களை மறைப்பதற்காகவா?
<b>பிரித்தானியா வாழ் சைவ மக்களான நாங்கள் வேண்டுவதெல்லாம் இதுவே: </b>
கோவில் ஆரம்பித்த காலத்திலிருந்தான கடந்த 8 வருடங்களுக்கான கணக்கினை பங்கிரங்கப்படுத்த வேண்டும்!
கோவில் பொதுமக்கள் உறுப்பினராக சேர்ந்து கொள்ளக்கூடிய வகையில் பொது நிறுவனமாக மாற்றப்பட வேண்டும்!
சைவக்கோவில் ஒன்றை தனியார் வர்த்;தக நிறுவனமாக பதிந்து மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் ஜெயதேவன் குடும்பத்தினர்; உலக சைவ மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும்!
இத்தனைக்கும் காரணகர்த்தாவாக இருக்கும் ஜெயதேவன் பொதுமக்களிடம் கோவிலை கையளித்து விட்டு விலக வேண்டும்!
[size=18]<b>ஆலயத்தின் வருடாந்த வருமானம் கிட்டத்தட்ட £450,000 பணம்.</b>
இப்பணம் எங்கே போகிறது என்பதை சற்றேனும் சிந்தித்துப் பார்த்தீர்களா?
ஈழபதீஸ்வரர் ஆலய அடியார்கள் சபை!
ஆகவே 14-04-2006 ஆலயத்திற்குமுன்னால் நாளையதினம் மாபெரும் துண்டுபிரசுரவினயோகம் ஆகவே அனைத்து மக்களும் கோவிலுக்குள் செல்வதை தவிருங்கள். கோவிலுக்கு வருவோர் துண்டு பிரசுரத்தை வாங்கிவிட்டு திரும்பி செல்லுங்கள். வன்முறைகள் பாரிய அளவில் கோவிலுக்குள் நடக்கும் என்று அஞ்சுவதால் ஒருவரும் நாளையும் நாளை மறுதினமும் கோவிலுக்கு செல்லாதீர்கள். உண்டியலுக்குள் பணம் போடுவதை நிறுத்துங்கள.; தமிழ் ஆர்வலர்கள் நாளைய துண்டுபிரசுரவினயோகத்தில் கட்டாயம் கலந்துகொள்ளுங்கள். கோயிலை மக்களிடம் ஒப்படைக்குமாறு ஜெயதேவனை கேழுங்கள்.
|
|
|
| வணக்கம் |
|
Posted by: angali - 04-13-2006, 08:09 PM - Forum: அறிமுகம்
- Replies (17)
|
 |
வணக்கம் நான் யாழின் நீண்ட நாள் பாக்கிறன்இப்போ இணைய வந்திருக்கிறேன்
|
|
|
| ஈழம் குறித்து ஜெயலலிதா.. |
|
Posted by: sayanthan - 04-13-2006, 04:37 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (38)
|
 |
சற்று முன்னர் ஜெயா தொலைக்காட்சியில் செல்வி ஜெயலலிதாவின் செவ்வியில் ரவி பெர்ணாட் வைகோ திருமா ஆகியோரின் தமிழ் உணர்வுகள் குறித்து குறிப்பிட்டு ஈழப்பிரச்சனையில் ஜெயலலிதாவின் நிலை குறித்துக் கேட்டார். அதற்கான ஜெயாவின் முழுமையான பதில் கீழே..
ஈழம் என்று நீங்கள் குறிப்பிட்டீர்கள். ஈழம் என்பது ஒரு concept, ஒரு லட்சியம், ஒரு கனவு, ஒரு குறிக்கோள். ஒரு லட்சியத்தை அடைய வேண்டும் என்று ஒரு கனவு காண்கிறார்கள். அவர்களைத்தான் நீங்கள் ஈழத்தமிழர்கள் என்று குறிப்பிடுகிறீர்கள். அதையே நான் இலங்கைத் தமிழர்கள் என்று சொல்கின்றேன். அவ்வளவுதான் வேறுபாடு. ஆனால் நான் இலங்கைத்தமிழர்கள் என்று சொல்வதற்கு இன்னொரு காரணமும் உண்டு. ஈழத்தை அடைய வேண்டும் என்று ஒரு தொகுதியில் இருக்கின்றவர்களைத்தான் இன்று ஈழத்தமிழர்கள் என்று சொல்கின்றோம். ஆனால் வேறு பகுதிகளிலும் தோட்டத்தொழிலாளர்களாக பணி புரியும் மலையக பகுதிகளில் வாழ்கின்ற தமிழர்களும் இருக்கின்றார்கள். அவர்களையும் இணைத்து தான் நான் சொல்கின்றேன். ஆகவே நான் ஒட்டு மொத்தமாக இலங்கைத்தமிழர்கள் என்று சொல்கின்றேன். என்னுடைய கொள்கையில் ஆரம்பத்திலிருந்து இன்று வரை எந்த மாறுபாடும் இல்லை. இலங்கைத்தமிழர்கள் மதிப்போடும் மரியாதையோடும் பாதுகாப்போடும் அங்கே வாழ்க்கையை நடாத்த வேண்டும். அதற்கான ஒரு உகந்த சூழ்நிலையை இலங்கை அரசு ஏற்படுத்த வேண்டும். இலங்கைத்தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். இதில் இரண்டாம் கருத்துக்கே இடமில்லை. இது தான் என்னுடைய கொள்கை.
|
|
|
| விடிவு தோன்றுமா? |
|
Posted by: சந்தியா - 04-13-2006, 07:57 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (2)
|
 |
[size=24] விடிவு தோன்றுமா?
சண்டைகள் சாய்ந்து சச்சர வோய்ந்து
சமத்துவம் என்றுவரும் - வெடிக்
குண்டுகள் ஓசை, கொலை வெறிப் பேச்சு
கேளா நாள்வருமா?
சிரிப்பினை மறந்து இருந்திடும் சனங்கள்
சிரித்திட வழிவருமா - உடல்
தெருநடு வீதி தனில்விழும் அந்த
ஓருநிலை மாறிடுமா?
மக்களை மக்கள் மதித்திடும் நிலைதான்
மண்ணில் வந்திடுமா? - மொழிச்
சிக்கல்கள் ஓய்ந்து செம்மைகள் காணச்
செகத்தில் நாள் வருமா?
அடக்கு முறையும் அசுரத் தனமும்
அடியோடு ஓடிடுமா? - இனி
நடக்கும் காலம் தனிலே தானும்
நன்மை கூடிடுமா?
அடிமை விலங்கு அனைத்தும் தகர்ந்து
அகிம்சை நிலை பெறுமா? - புவி
விடிவு என்று புலரும் பொழுதை
விரைவில் ஏற்றிடுமா?
|
|
|
| வாகனேரியில் ஒட்டுப்படை-சிறிலங்கா படையினர் -பதுங்கித்தாக்குதல |
|
Posted by: yarlmohan - 04-13-2006, 04:56 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (3)
|
 |
வாகனேரியில் ஒட்டுப்படை-சிறிலங்கா படையினர் இணைந்து பதுங்கித்தாக்குதல்
இன்று காலை 8.45 மணியளவில் மட்டக்களப்பு வாகனேரி பகுதியில் விடுதலைப் புலிகள் மீது பதுங்கித்தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தாக்குதலைத் தொடர்ந்து சிறிலங்கா படைமுகாம்களிலிருந்து மோட்டார் எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கிக்கப்படுகிறது.
இத் தாக்குதலின் போது ஒரு போராளி வீரச்சாவடைந்துள்ளதாகவும் அறியமுடிகினறது.
வீரச்சாவடைந்தவர் இதயவேந்தன் என்ற போராளியாவார்.
இத் தாக்குதலானது அப்பட்டமான போர் நிறுத்த மீறல் எனக் குறிப்பிட்ட மாவட்ட அரசியல் துறையினர் இச் சம்பவம் தொடர்பாக போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவினருக்கு அறிவித்துள்ளனர். அத்துடன் பதுங்கித் தாக்குதல் நடத்தப்பட்ட பிரதேசத்தை உடனடியாகப் பார்வையிடுமாறும் குறிப்பிட்;டுள்ளனர்.
நன்றி : மட்டக்களப்பு ஈழநாதம்
|
|
|
| தொடரும் படுகொலைகள்!!! |
|
Posted by: தூயவன் - 04-13-2006, 03:49 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (18)
|
 |
<b>ஊர்காவற்துறையில் இளைஞரின் சடலம் மீட்பு </b>
யாழ் ஊர்காவல்துறை பருத்தியடைப்பு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது.
வெட்டுக் காயங்களுடன் இந்த இளைஞர் சடலம் மீட்க்கப்பட்டு யாழ் போதனா மருத்துவ மனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இச்சடலம் பருத்திடைப்பு ஊர்காவற்றுறையைச் சேர்ந்த 24 அகவையுடைய தம்பு கோகுலன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
தகவல்:சங்கதி
|
|
|
|