| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,243
Full Statistics
|
| Online Users |
There are currently 326 online users. » 0 Member(s) | 323 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,059
|
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: SMPXrArgum
10-23-2025, 05:42 AM
» Replies: 27
» Views: 10,073
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,525
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,258
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,535
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 30,814
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,268
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 37,892
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 7,939
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,205
|
|
|
| ரஜினிக்கும் ஜெயலலிதாக்கும் ஒரு பேட்டி ! |
|
Posted by: ஜித்தன் - 04-15-2006, 08:22 AM - Forum: நகைச்சுவை
- Replies (11)
|
 |
<b>ரஜினிக்கும் ஜெயலலிதவுக்கும் ஒரு போட்டி.</b>
ரஜினி : "என்னை அறியாதவர்கள் இந்த உலகத்திலே இல்லை..எனக்கு தெரியாதவர்கள் என்றும் எவரும் இல்லை!
ஜெய: "அப்படியென்றால் உங்களை அமெரிக்க நடிகர் சேன் கனறிக்கு தெரியுமா?"
ரஜினி :"என்னெ கேள்வி இது? நான் அமெரிக்கா சென்றால், அவருடன் சேர்ந்து உணவு உண்ணுவது வழக்கம்..இல்லவிடில் என்னை விடவே மாட்டர்..அப்பெடி ஒரு நட்பு எஙளுக்குள்!"
இருவரும் அமெரிக்கா சென்றனர்..இது உண்மை என நிரூபிற்க..அங்கு சென்றால் ஜெயலலிதாவுக்கு ஆச்சரியம். நடிகர் சேன் கனறி ரஜினியை அனைத்துத் தழுவி "தலைவா..என்ன கன நாள் உன்னை இங்க காணோம்?என்னை மறந்துவிட்டாயா?" என ரஜனியை செல்லமாக கோபித்தார்..ஜெயலலிதாவுக்கு ஒரெ ஆச்சரிஜம்..
ஜெய: "ஓ .கே. ரஜினி..இவருக்கு உங்களை தெரியும் என நம்புகின்றேன்.. ஆனல் ஜோர்ஜ் புஷ்க்கு உங்களை தெரியுமா?"
ரஜினி : "என்னெ விழையாட்டு இது..சின்ன புள்ள தனமா இருக்கு? நான் அமெரிக்கா சென்றால் அவரின் வெள்ளை மாளிகையில்தான் தங்குவேன்..அல்லது அவர் என்மீது கோபப்படுவார் !"
இதயும் நிரூபிக்க இருவரும் வெள்ளை மாளிகை சென்றார்கள்..
புஷ் ரஜினியை கண்டதும் :"கலோ ரஜினி..எப்படி நலம்? இப்பொளுதுதானா இங்கு வர வழி தெரிந்தது?"என்று அவரும் ரஜினியிடம் செல்லமாய் தழுவுவதை கண்டதும் ஜயாவுக்கு இம்சையாக இருந்தது..
உடனே அவருக்கு ஒரு யோசினை தோன்றியது :"ரஜினி..உங்களை போப் ஆண்டவர் அறிவாரா?"என்றார்,சின்ன புன்னகையுடன்..
அதற்க்கு
ரஜினி : "என்ன மறுபடியும் விளையாட்டு? நான் வளர்ந்ததே அவரின் மடியில் தான் !"என்றார் ரஜினி !
இருவரும் போப் ஆன்டவரை சந்திக்க சென்றனர்.. போப் ஆன்டவரை கான வந்த சனங்கள் அலையாக மோதினர்..ரஜினியோ விடு விடுவென பல்கனியில் ஏறி போப் ஆன்டவரின் அருகில் நின்று, அவரை அனைத்தபடி, கீழே நிற்கும் ஜெயலலிதாவுக்கு "ஹாய்" சொன்னார்கள்..இதனை கண்ட ஜெயா மயக்கம் போட்டு கீழெ விழுந்தார்..
மருத்துவ மனையில் ஜெயாவை பார்த்து ரஜனி
ரஜினி : " நான் அப்பொழுதே சொண்னேன் அல்லவா.. நீங்கள் இதை எல்லாம் தாங்க மாட்டீர்கள் என்று"
அதற்கு ஜெயா : "ரஜினி, நீங்கள் பல்கனியில் போப் ஆன்டவருடன் நிற்கும்பொழுது எனக்கு ஒன்றும் ஆகவில்லை..ஆனால் எனக்கு அருகினில் நின்ற ஒருவர் ஒரு கேழ்வி கேட்டார்..அதை கேட்டதும் எனக்கு மயக்கம் வந்துவிட்டது !" என்றார் ஜெயா..
ரஜினி :"அப்படி உங்கள் அருகில் நின்றவர் என்னதான் உங்களை கேட்டார்?"
ஜெயா :"..ரஜினிக்கு அருகில் நிற்க்கும் கிழவன் யார்?என்று கேட்டுவிட்டான்!" என்றார் மயக்கத்துடன்!
|
|
|
| rebels pull out of Switzerland talks |
|
Posted by: மின்னல் - 04-15-2006, 08:00 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
BATTICALOA, Sri Lanka (Reuters) - Sri Lanka's Tamil Tiger rebels said on Saturday they would pull out of talks with the government in Switzerland due to a dispute over the transport of eastern rebel commanders to their northern base.
The head of the Tiger peace secretariat, S. Puleedevan, said the Tigers were concerned about Sri Lankan navy plans to monitor a civilian sea transport escorting unarmed Nordic truce monitors that was to have taken the rebel commanders on Saturday.
"It is very important we meet our commanders," Puleedevan told Reuters by telephone. "We have cancelled the transport. If we cannot meet them, Geneva is off."
|
|
|
| உடாங் சம்பல் |
|
Posted by: தூயா - 04-15-2006, 06:27 AM - Forum: சமையல்
- Replies (46)
|
 |
உடாங் சம்பல்
<img src='http://img212.imageshack.us/img212/2153/dscn29627gh.th.jpg' border='0' alt='user posted image'>
உடாங் என்றால் மலே மொழியில் "இறால்" என்று பொருள்படும்.இந்த சம்பலை செய்ய பலமுறைகள் உள்ளன.இது மிக சுலபமான ஒரு முறை. உறைப்பு அதிகம் பிடிக்காதவர்கள் செத்தல் மிளகாயை குறைத்து போடுங்கள்.
தேவையான பொருட்கள்:
300 இறால் (பெரியது)
3 - 4 மேசைகரண்டி தேங்காய் எண்ணெய்
அரைக்க:
5 செத்தல் மிளகாய் (நீரில் 5 நிமிடங்களுக்கு ஊறவையுங்க)
2 சிகப்பு மிளகாய்
4 வெங்காய தடல்
2 உள்ளி பல்லு
2 கான்டில் நட் (இருந்தா போடுங்க, இல்லை என்றால் அவசியமில்லை)
1/2 தேசிக்காய்
தூவ:
1/2 மேசைகரண்டி சீனி
உப்பு தேவைக்கு ஏற்ப போடுங்க
1/4 மேசைகரண்டி சிக்கின் ஸ்டொக் தூள்
செய்முறை:
1. ஒரு சட்டியில் எண்ணெய் விட்டு சிறிது சூடாக்கவும்.
2. அரைத்த பொருட்களை போடு நன்றாக பச்சை மணம் போகும் வரை வறுக்கவும்.
3. இறாலை போட்டு 4 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
4. தேசிக்காய் சாறையும் , சீனி, உப்பு & சிக்கின் ஸ்டொக் தூளையும் போட்டு கிளறவும்.
5. 1 நிமிடத்தில் அடுப்பை விட்டு இறக்கவும்.
<img src='http://www.murachin.com/mura-image/indonesia/in0028.jpg' border='0' alt='user posted image'>
|
|
|
| விடுதலைப் புலிகளின் கடற்பயணத்தில் இழுபறி, பயணம் ரத்து |
|
Posted by: kavithaa - 04-15-2006, 05:22 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (7)
|
 |
விடுதலைப்இன்று காலை முல்லைத்தீவிலிருந்து கிழக்கு நோக்கி பயணத்தை மேற்கொள்வதற்காக முல்லைத்தீவு கடற்பரப்பிற்கு சென்ற விடுதலைப் புலிகளின் பயணக் குழு அங்கு ஏற்பட்ட இழுபறி நிலை காரணமாக பயணத்தை ரத்துச் செய்து திரும்பியுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதே போன்று மட்டக்களப்பிலிருந்து வாகரை நோக்கிய பயணத்திலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
புலிகளின் கடற்பயணத்தில் இழுபறி, பயணம் ரத்து
|
|
|
| ஈழம் பற்றி பரி. வேதாகமத்தில்.... |
|
Posted by: alika - 04-14-2006, 07:58 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (67)
|
 |
ஏலாம் என்று இங்கே குறிப்பிட்டுள்ளது, ஆங்கிலத்தில் Elam என்றிருப்பதை அப்படியே மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.
http://www.tamil-bible.com/lookup.php?Book...hapter=49&Kjv=1
34. யூதா ராஜாவாகிய சிதேக்கியாவினுடைய ராஜ்யபாரத்தின் துவக்கத்திலே, <b>ஏலாமு</b>க்கு விரோதமாக எரேமியா என்னும் தீர்க்கதரிசிக்கு உண்டான கர்த்தருடைய வசனம்:
35. சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் <b>ஏலாமி</b>ன் வில்லென்னும் அவர்களுடைய பிரதான வல்லமையை முறித்துப்போட்டு,
36. வானத்தின் நாலு திசைகளிலுமிருந்து நாலு காற்றுகளை <b>ஏலாமி</b>ன் மேல் வரப்பண்ணி, அவர்களை இந்த எல்லாத் திசைகளிலும் சிதறடிப்பேன்; ஏலாம் தேசத்திலிருந்து துரத்துண்டவர்கள் சகல ஜாதிகளிலும் சிதறப்படுவார்கள்.
37. நான் <b>ஏலாமி</b>யரை அவர்கள் சத்துருக்களுக்கு முன்பாகவும், அவர்கள் பிராணனை வாங்கத் தேடுகிறவர்களுக்கு முன்பாகவும் கலங்கப்பண்ணி, என் கோபத்தின் உக்கிரமாகிய தீங்கை அவர்கள்மேல் வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் அவர்களை நிர்மூலமாக்குமட்டும் பட்டயத்தை அவர்களுக்குப் பின்னாக அனுப்பி,
38. என் சிங்காசனத்தை <b>ஏலாமி</b>லே வைத்து, அங்கேயிருந்து ராஜாவையும் பிரபுக்களையும் அழித்துப்போடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
39. ஆனாலும் கடைசிநாட்களிலே நான் <b>ஏலாமி</b>ன் சிறையிருப்பைத் திருப்புவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
இந்த ஈழம், தற்போதைய ஈரானின் தென்கிழக்கில், இருந்தது.
David McAlpin's Elamo-Dravidian hypothesis postulates a <b>genetic relation between Elamite and Dravidian languages</b>, which then would have been carried <b>from Elam to India by eastward migration</b>
http://en.wikipedia.org/wiki/Elamite_langu...Elamite_scripts
இந்து நதி பள்ளத்தாக்கு அகழ்வுகள் (ஹரப்பா, மொஹென்சதாரோ) நாம், ஈழத்தவர், கி.மு. 5000 வருடங்களுக்கு முன்பே இடம் பெயர்ந்ததிற்கு உதாரணம். ஆரியப்படையெடுப்புகளினால் தெற்கு நோக்கி புலம் பெயர்ந்து, மலைஈழ (தற்போதைய கேரளம்) மூலமாக இன்றைய ஈழத்திற்கு இடம் பெயர்ந்தோம். திராவிட (இச்சொல் தமிழ் அல்ல என நான் எண்ணுகிறேன்) குடும்பத்தில் ஈழத்தவர் ஒரு தனித்துவத்தை கொண்டவர்கள் என்பது என் கருத்து.
|
|
|
| 10ஆண்டுகளுக்கு முன்பு நின்று போன சிறுமியின் இருதயம் மீண்டும் |
|
Posted by: விது - 04-14-2006, 06:31 PM - Forum: மருத்துவம்
- No Replies
|
 |
இங்கிலாந்தின் சவுத்வேல்ஸ் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஹென்னாகிளார்க். 10 ஆண்டுகளுக்குமுன்பு இவர் சிறுமியாக இருந்த போது இருதய நோயால் அவதிப்பட்டு வந்தார். ஹென்னா கிளார்க்கின் இருதயம் இயங்க மறுத்ததால் அவருக்கு டாக்டர்கள் ஆபரேஷன் செய்தனர். இயக்கம் நின்று போன இருதயத்தின் அருகிலேயே தானமாக கொடுத்த இன் னொரு இருதயத்தை பொருத் தினார்கள்.
10ஆண்டுகளாக அந்த புதிய இருதயம் செயல்பட்டு வந்தது. ஆனால் திடீர் என்று அந்த இருதயத்தை அவரது உடல் ஏற்றுக்கொள்ளவில்லை. மருந்து மாத்திரைகளும் அவரது உடலுக்கு ஏற்றுக் கொள்ளவில்லை.
இதுபற்றி டாக்டர்கள் சோதனை செய்து பார்த்த போது 10 ஆண்டுகளுக்கு முன்பு நின்று போன அந்த சிறுமியின் இருதயம் மீண்டும். இயங்க ஆரம்பித்ததே இந்த மாற்றத்துக்கும் கோளா றுகளுக்கும் காரணம் என்பதை கண்டு பிடித்தனர்.
இதை அடுத்து டாக்டர்கள் ஹென்னாவுக்கு மீண்டும் ஒரு ஆபரேஷன் நடத்தினார்கள். தானம் கிடைத்த அந்த இருதயத்தை ஆபரேஷன் மூலம் அகற்றி விட்டனர். ஏற்கனவே இருந்த பழைய இருதயம் இப்போது நன்றாக செயல்படுகிறது.
நின்று போன இருதயம் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இயங்க ஆரம்பித்து இருப்பினும் செயற்கையாக பொருத்தப்பட்ட இருதயத்தை டாக்டர்கள் அகற்றி இருப்பதும் மருத்துவ உலகில் இதுவே முதல் தடவை.
இணைப்பு : : newstamilnet.com
|
|
|
| தமிழ்ப்புத்தாண்டு |
|
Posted by: Thulasi_ca - 04-14-2006, 05:10 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (2)
|
 |
<img src='http://img.123greetings.com/eventsnew/eapr_tamilnewyear/7562-001-10-1052.gif' border='0' alt='user posted image'>
<b>புத்தொளி வீசும் தமிழ்ப்புத்தாண்டு
சித்திரை மாதத் தமிழ்ப்புத்தாண்டு
சிந்தைக்கு இனிய தமிழ்ப்புத்தாண்டு
பழையன மறந்து மன்னித்து
மகிழ ஒரு தமிழ்ப்புத்தாண்டு
இனிய இப்புத்தாண்டில்
புதிய நற்கனவுகளுடன்
புதிய நற்கொள்கையுடன்
பிறக்கும் இத்தமிழ் ஆண்டாவது
இனிய தமிழ் உள்ளங்களுக்கும்
எமது தேச உறவுகளுக்கும்
நற் செய்தி கிடைக்கும் என்ற
நம்பிக்கையுடன் ........
இனிய தமிழ்ப்புத்தாண்டு
வாழ்த்தைத் தெரிவிக்கிறேன். </b>
|
|
|
| இனியவனே! |
|
Posted by: தாரணி - 04-14-2006, 03:01 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (7)
|
 |
இனியவனே!
சிரிப்பை
சிக்கனப்படுத்தாதே!
நீ இதழ்களால்
சிரிக்கும் போது
நான் இதயத்தால்
சிரிக்கிறேன்!
நீ சிரிக்காத நாள்
எனக்கு துக்க நாள்!
அன்றைக்கெல்லாம்
என் இதயம்
கறுப்பு சட்டை அணிந்து
கண்ணீரில் மிதக்கிறது.
|
|
|
| நினைவுகள் |
|
Posted by: தாரணி - 04-14-2006, 02:51 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (8)
|
 |
கனவுகள் காவியமாகலாம்
காவியங்கள் கனவுகள் ஆகலாம்
நினைவுகள் கனவுகள் ஆகலாம்
கனவுகள் நினைவுகள் ஆகலாம்
நினைவுகள் நிஜங்கள் ஆகலாம்-ஆனால்
நிஜங்கள் நினைவுகள் ஆவதில்லையே!
நன்றி
|
|
|
|