Yarl Forum
வாகனேரியில் ஒட்டுப்படை-சிறிலங்கா படையினர் -பதுங்கித்தாக்குதல - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: வாகனேரியில் ஒட்டுப்படை-சிறிலங்கா படையினர் -பதுங்கித்தாக்குதல (/showthread.php?tid=237)



வாகனேரியில் ஒட்டுப்படை-சிறிலங்கா படையினர் -பதுங்கித்தாக்குதல - yarlmohan - 04-13-2006

வாகனேரியில் ஒட்டுப்படை-சிறிலங்கா படையினர் இணைந்து பதுங்கித்தாக்குதல்

இன்று காலை 8.45 மணியளவில் மட்டக்களப்பு வாகனேரி பகுதியில் விடுதலைப் புலிகள் மீது பதுங்கித்தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தாக்குதலைத் தொடர்ந்து சிறிலங்கா படைமுகாம்களிலிருந்து மோட்டார் எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கிக்கப்படுகிறது.

இத் தாக்குதலின் போது ஒரு போராளி வீரச்சாவடைந்துள்ளதாகவும் அறியமுடிகினறது.

வீரச்சாவடைந்தவர் இதயவேந்தன் என்ற போராளியாவார்.

இத் தாக்குதலானது அப்பட்டமான போர் நிறுத்த மீறல் எனக் குறிப்பிட்ட மாவட்ட அரசியல் துறையினர் இச் சம்பவம் தொடர்பாக போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவினருக்கு அறிவித்துள்ளனர். அத்துடன் பதுங்கித் தாக்குதல் நடத்தப்பட்ட பிரதேசத்தை உடனடியாகப் பார்வையிடுமாறும் குறிப்பிட்;டுள்ளனர்.

நன்றி : மட்டக்களப்பு ஈழநாதம்


Re: வாகனேரியில் ஒட்டுப்படை-சிறிலங்கா படையினர் -பதுங்கித்தாக்குதல - தூயவன் - 04-13-2006

தொடர்ச்சியான இப்படித்தாக்குதல்கள் சிங்கள தேசம் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாகவே உணர்த்துகின்றன.

வீரச்சாவடைந்த மாவீரனுக்கு வீரவணக்கங்கள்!!!


- கந்தப்பு - 04-13-2006

வீரச்சாவடைந்த போராளிக்கு வீரவணக்கங்கள்.

அமெரிக்கா, இப்ப பேசாமல் இருக்கும். இனி இராணுவம் அல்லது எட்டப்பர்கள் இறந்தால் அறிக்கைவிடும்.


- Vaanampaadi - 04-13-2006

<b>LTTE auxiliary cadre killed in Claymore attack in Vavuniya North</b>

[TamilNet, April 13, 2006 05:03 GMT]
An auxiliary cadre of the Liberation Tigers was killed and another auxiliary cadre wounded in a Claymore attack allegedly carried out by a Sri Lanka Army deep penetration group. The attack took place Thursday at 8:15 a.m. inside the LTTE controlled Semamadu village in Nedunkerni, Vavuniya North, LTTE sources in Kilnochchi said.
The auxiliary cadres were transporting breakfirst supplies to the LTTE sentry points, when their vehicle was targetted by the attackers, LTTE sources said.