Yarl Forum
விடிவு தோன்றுமா? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: விடிவு தோன்றுமா? (/showthread.php?tid=236)



விடிவு தோன்றுமா? - சந்தியா - 04-13-2006

[size=24] விடிவு தோன்றுமா?

சண்டைகள் சாய்ந்து சச்சர வோய்ந்து
சமத்துவம் என்றுவரும் - வெடிக்
குண்டுகள் ஓசை, கொலை வெறிப் பேச்சு
கேளா நாள்வருமா?

சிரிப்பினை மறந்து இருந்திடும் சனங்கள்
சிரித்திட வழிவருமா - உடல்
தெருநடு வீதி தனில்விழும் அந்த
ஓருநிலை மாறிடுமா?

மக்களை மக்கள் மதித்திடும் நிலைதான்
மண்ணில் வந்திடுமா? - மொழிச்
சிக்கல்கள் ஓய்ந்து செம்மைகள் காணச்
செகத்தில் நாள் வருமா?

அடக்கு முறையும் அசுரத் தனமும்
அடியோடு ஓடிடுமா? - இனி
நடக்கும் காலம் தனிலே தானும்
நன்மை கூடிடுமா?

அடிமை விலங்கு அனைத்தும் தகர்ந்து
அகிம்சை நிலை பெறுமா? - புவி
விடிவு என்று புலரும் பொழுதை
விரைவில் ஏற்றிடுமா?


Re: விடிவு தோன்றுமா? - சந்தியா - 04-13-2006

இக் கவிதை போராளி ஒருவர் எழுதியுள்ளார்

நன்றி
tamil canadian.com


- Thulasi_ca - 04-26-2006

Quote:சண்டைகள் சாய்ந்து சச்சர வோய்ந்து
சமத்துவம் என்றுவரும் - வெடிக்
குண்டுகள் ஓசை, கொலை வெறிப் பேச்சு
கேளா நாள்வருமா?
Cry Cry Cry