| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,243
Full Statistics
|
| Online Users |
There are currently 592 online users. » 0 Member(s) | 588 Guest(s) Applebot, Baidu, Bing, Google
|
| Latest Threads |
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,066
|
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: SMPXrArgum
10-23-2025, 05:42 AM
» Replies: 27
» Views: 10,078
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,551
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,260
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,543
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 30,897
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,289
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 37,894
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 7,941
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,207
|
|
|
| என் மனக் கவிகள்......... |
|
Posted by: jcdinesh - 04-12-2006, 02:03 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (10)
|
 |
ஊமையாய்.....
அன்பே உன்
காந்தக் கதிர்கள்
வீசும் கண்களால்
தள்ளாடும் என்
எண்ணங்கள் நித்தம்
ஒரு புதிதாய்
இன்ப சஞ்சாரங்கள்
காட்டிய உன்
கனவுகளால் நித்தம்
வலம் வரும் இரவுகளில்
சுகமான தொல்லை
உன் நினைவு எனும்
ஊற்று எந்நேரமும்
புூத்த மலர்
நறுமணமாய் என்னில்
என் இதயத்தில்
இன்றும் என்றும்
மறக்காது உன் முகம்
தினம் சொல்லுது
என் யுகம்
உன்னை தினம் நினைத்து
நசசரிக்கும் என்
எண்ணங்களால் எச்சரிக்கின்றேன்
உன் மௌனத்தை
தினம் ஊமையாய்
<img src='http://img205.imageshack.us/img205/9118/untitled1copy5ld.jpg' border='0' alt='user posted image'>
|
|
|
| நாற்பது கோடியான் |
|
Posted by: Luckyluke - 04-12-2006, 12:58 PM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
<img src='http://epaper.tamilmurasu.in/2006/Apr/12/7_2.jpg' border='0' alt='user posted image'>
சமீபமாக வைகோவை தொண்டர்கள் நாற்பது கோடி வாங்கி விட்டீர்களாமே என்று எங்கு போனாலும் தொல்லை கொடுக்கிறார்கள்... அது குறித்து தமிழ் முரசு வெளியிட்ட கார்ட்டூன் செம கலக்கல்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
|
|
|
| நாளைக்கு முக்கிய முடிவு அறிவிக்கப்படும்:புலிகள் |
|
Posted by: I.V.Sasi - 04-12-2006, 11:22 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
[b][size=24]நாளை அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அவர்களுடன் இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு தலைவர் உல்ப்ஹென் றிக்சன் பௌயர் சந்தித்து பேசவுள்ளார். அதனைத் தொடர்ந்து விடுதலைப்புலிகள் முக்கியத்துவம் வாய்ந்த பத்திரிகையாளர் மாநாட்டை நடாத்தவுள்ளனர்.
இன்று காலை சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் அவர்களுடன் சந்திப்பை நடத்திவிட்டு கொழும்பு சென்றிருக்கும் அவர், சிறிலங்கா அரச தரப்பினருடன் பேச்சுக்களை நடத்துவார் என நம்பப்படுகின்றது.
இந்நிலையில் நாளை மீண்டும் காலை 11 மணிக்கு புலிகள் தரப்பில் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனுடன் பேசவிருக்கின்றார் உல்ப்ஹென் றிக்சன் பௌயர்.
போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினருடனான சந்திப்பை முடித்துக் கொண்டு அரசியல்துறைப் பொறுப்பாளர் கிளிநொச்சியில் முக்கியத்துவம் வாய்ந்த பத்திரிகையாளர் சந்திப்பை நடாத்தவிருக்கின்றார். விடுதலைப்புலிகளின் நிலைப்பாடு தொடர்பான முக்கிய முடிவு இதில் அறிவிக்கப்படும் என்று தெரிகின்றது.
நாளைக்கு முக்கிய முடிவு அறிவிக்கப்படும்
|
|
|
| திருமலையில் இனக்கலவரம்: தமிழர்களின் கடைகள் தீவைத்து எரிப்பு! |
|
Posted by: yarlmohan - 04-12-2006, 10:54 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (63)
|
 |
திருமலையில் சிங்களப் பேரினவாதிகள் இனக்கலவரம் ஒன்றைத் தோற்றுவிக்கும் முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றனர். நண்பகல் திருகோணமலை சந்தைப்பகுதியில் கைக்குண்டு ஒன்று வீசப்பட்டிருக்கின்றது. இதில் அகப்பட்டு ஐந்து பொதுமக்கள் காயமடைந்திருக்கின்றனர். அதனைத் தொடர்ந்து தமிழர்களின் கடைகள் படையினரின் உதவியுடன் சிங்களக் காடையர்களால் தீவைத்து எரிக்கப்பட்டன.
தொடர்ந்து பிற்பகல் 3:45 மணிக்கு மேலும் ஒரு கைக்குண்டு நகர்ப்பகுதியில் வீசப்பட்டிருக்கின்றது. இதனையடுத்து சிறிலங்கா படையினர்ää பொலிசார் நிற்கும் நகர்ப்பகுதியில் தமிழர்களின் கடைகள் தீ வைக்கப்படுகின்றன@ தீ வைக்கப்பட்டவை தொடர்ந்து எரிந்துகொண்டிருக்கின்றன என்று அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழ் மக்கள் பாதுகாப்புத் தேடி நகர்ப்பகுதியை விட்டு ஓடிக்கொண்டிருக்கின்றனர்.
இதேவேளை சற்றுமுன்னதாக சிறிலங்கா இராணுவ ட்ரக் வண்டி ஒன்றும் கைக்குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகியிருக்கின்றது.
நன்றி: மட்டக்களப்பு ஈழநாதம்
|
|
|
| பேச்சுக்கு இடவசதி கனடிய அரசு தயார் |
|
Posted by: I.V.Sasi - 04-12-2006, 08:26 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (11)
|
 |
[b][size=18]பேச்சுக்கு இடவசதி கனடிய அரசு தயார்
[12 - April - 2006] [Font Size - A - A - A]
சமாதான நடவடிக்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதே விருப்பமென அறிவிப்பு
விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் கனடா இணைத்திருக்கின்றபோதும் சமாதான நடவடிக்கை
களில் முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென்ற பெருவிருப்பின் பேரிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக அந்த நாட்டு அர சாங்கம் தெரிவித்திருக்கும் அதேசமயம், பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இடவசதியை அளிப்பதற்கு தயாரெனவும் அறிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமையிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் இணைத்துள்ளதாக திங்களன்று வெளியிட்ட அறிக்கையில் கனடிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஸ்ரொக்வெல் டே தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளை பட்டியலில் இணைக்கும் முடிவு நீண்டகாலமாக இருந்துவந்தது. பயங்கரவாதத்திற்கு எதிராக கனடியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்பதில் எங்கள் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. அத்துடன், இதன்மூலம் தமிழ்ச் சமூகம் உட்பட நாடு முழுவதற்கும் அரசாங்கம் பயங்கரவாதத்தையோ அல்லது பயங்கரவாத நடவடிக்கைகளையோ சகித்துக் கொள்ளாது என்ற சமிக்ஞையை வெளிப்படுத்துவதாகவும் உள்ளது என்று அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
பயங்கரவாதப் பட்டியலின் அர்த்தம் என்னவென்றால், கனடாவில் எவராவது புலிகளின் நடவடிக்கைகளில் பங்குகொள்வதோ அல்லது ஆதரவளிப்பதோ சட்டவிரோதம் என்பதாகும். பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு வங்கி முறைகளை பயன்படுத்துவதைத் தடுக்கும் தனது சர்வதேச ரீதியிலான கடப்பாடுகளையும் கனடா திருப்திப்படுத்துவதாக இது அமைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
ஜெனீவாவில் நோர்வே அனுசரணையுடனான சமாதானப் பேச்சுகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்தத் தீர்மானமானது. கனடாவில் ரொரொன்ரோவை சூழ புவியியல் ரீதியில் செறிவாக உள்ள தமிழ்ச் சமூகத்தினர் மத்தியில் கடுமையான விவாதத்தைத் தோற்றுவிக்கும் சாத்தியமுள்ளது. இது நாங்கள் ஒரு பக்கச்சார்பாக நடந்து கொள்வதென்பதல்ல. சமாதான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்கான ஆர்வத்தை வெளிப்படுத்தும் ஒன்றாகவே இது உள்ளது என்று கனடிய வெளிவிவகார அமைச்சர் பீற்றர் மக்கே தெரிவித்தார்.
திங்களன்று நோர்வே வெளிவிவகார அமைச்சருடன் தான் பேசியதாகவும் விரும்பினால் கனடாவில் சமாதானப் பேச்சுகளை நடத்த இடமளிப்பது உட்பட முழுமையான கனடாவின் உதவியை வழங்குவதற்கு உறுதியளித்ததாகவும் அவர் தெரிவித்தார்
www.thinakkural.com
|
|
|
| திருமலையில் தாக்குதல்: 2 சிறிலங்கா காவல்துறையினர் பலி |
|
Posted by: adsharan - 04-12-2006, 07:34 AM - Forum: தமிழீழம்
- No Replies
|
 |
திருமலையில் தாக்குதல்: 2 சிறிலங்கா காவல்துறையினர் பலி
திருகோணமலையில் சிறிலங்கா ஆக்கிரமிப்புப் பகுதியில் இன்று புதன்கிழமை காலை 8.45 மணியளவில் கிளைமோர்த் தாக்குதலில் இரண்டு சிறிலங்கா காவல்துறையினர் கொல்லப்பட்டுள்ளனர்.
திருகோணமலை-புல்மோட்டை வீதியில் கும்புறுப்பிட்டி அருகே 15 ஆம் மைல் கட்டை அருகே மரம் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த கிளைமோர் கண்ணிவெடியில் காவல்துறையின் வாகனம் சிக்கியது.
குச்சவெளியிலிருந்து கும்புறுப்பிட்டி நோக்கி காவல்துறையின் வாகனம் சென்று கொண்டிருந்த போது இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதில் இரு சிறிலங்கா காவல்துறையினர் கொல்லப்பட்டுள்ளனர். இருவர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த இருவரும் திருகோணமலை பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
சார்ஜன்ட் லியனகே மற்றும் கான்ஸ்டபிள் அபேயசிறி ஆகியோர் கொல்லப்பட்டவர்கள் என்றும் கான்ஸ்டபிள்களான கமலசிறீ மற்றும் வசந்த ஆகியோர் படுகாயமடைந்தவர்கள் என்றும் சிறிலங்கா காவல்துறை அறிவித்துள்ளது.
திருகோணமலை நகரிலிருந்து 30 கிலோ மீற்றர் வடக்குப் பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது.
கும்புறுப்பிட்டி-விபுலானந்தா கிராமங்களை அண்மித்த பேர்கர் சந்தியில் பாரிய வெடிச்சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இத்தாக்குதல் குறித்து ரொய்ட்டர் செய்தி நிறுவனத்துக்கு திருகோணமலை மூத்த காவல்துறை அதிகாரி நிஹால் சமரக்கோன் கூறுகையில்,
காவல்துறையின் வாகனம் மீது இன்று கிளைமோர்த் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இருவர் கொல்லப்பட்டுள்ளனர். இருவர் படுகாயமடைந்துள்ளனர். இத்தாக்குதலை விடுதலைப் புலிகளே நடத்தினர் என்று கூறினார்.
"ஓ.. கடவுளே...இது மிகவும் மோசமானது.. இதைத் தவிர என்ன சொல்வது என்று சொல்லத் தெரியவில்லை. நிலைமை கட்டுப்பாட்டையும மீறிச் செல்கின்றது" என்று மேற்கத்தைய இராஜதந்திரி ஒருவர் இன்றைய தாக்குதல் சம்பவம் குறித்து ரொய்ட்டர் செய்தி நிறுவனத்திடம் கருத்துத் தெரிவித்துள்ளார்
http://www.puthinam.com/
|
|
|
| வை - கோ வை வசை பாடுபவர்களிடம் பகிரங்க கேள்விகள்! |
|
Posted by: வர்ணன் - 04-12-2006, 02:32 AM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (17)
|
 |
வை - கோ வை வசை பாடுபவர்களிடம் பகிரங்க கேள்விகள்!
எம்மீது அடுக்கடுக்காக தொடரப்பட்ட படுகொலைகள் - பாலியல் வல்லுறவுகள் - காட்டுமிராண்டித்தனமான ஒடுக்குமுறைகள் எல்லாம் சிங்களவன் தொடர்ந்த போது -
கண்மூடி எல்லரும் இருந்த போது - இன்று இந்த மனிதனுக்கு எதிராய் உரத்து குரல் எழுப்புகிறவர்கள் - அன்று எந்த அளவில் இவைக்கு எதிராய் - உங்கள் பங்களீப்பை செலுத்தினீர்கள்?
அவை உலக அரங்கில் எவ்ளோ தூரம் எடுபட்டுது?
கலைஞருக்கு காவடி தூக்குபவர்களிடம் -
இன்று வை-கோ -பச்சை துரோகி என்பவர்களே -
ஏறக்குறைய -
ஒன்றரை தசாப்தங்களுக்கு முன்னர் - ஒரு மாபெரும் இயக்கத்தின் - அதுதான் தி .மு.க -வின் - பிரச்சார பீரங்கி என்று வர்ணிக்கப்பட்ட மனிதன் - ஒரே இரவில் - என்னை - புலிகள் துணையுடன் அழிக்க பார்க்கிறார்கள் - என்று குற்றம் சுமத்தப்பட்டது -அவமானபடுத்தப்பட்டு - வெளியேற்றப்பட்டதை - என்ன பெயர் சொல்லி அழைக்கலாம்?
எப்பிடி ஆச்சு - அது? ஸ்டாலின் க்கு முடிசூட்ட செய்யப்பட்ட - குள்ள நரித்தனம் என்று நான் நினைக்கவில்லை - நீங்கள் - என்ன இதைப்பற்றி நினைக்கிறீர்கள்?
வைகோ - வின் அரசியல் நேர்மையை - ஜெ உடன் கூட்டு சேர்ந்ததால் - கண்மூடித்தனமாக விமர்சிப்பவர்கிளிடம் -
*பாம்புகளூம் - தேள்களும் நிறைந்த அரசியல் சதுரங்கத்தில்- கால சூழ்நிலைகளூக்கு ஏற்ப - ஒரு கட்சிக்கு தலைமை தாங்கும் ஒரு மனிதன் - அதனை கட்டிக்காக்க சில அரசியல் நகர்வுகள் செய்வது பச்சை -துரோகம் ஆகுமா?
அப்பிடி ஆயின் ஒரு துணை கண்டமான - இந்தியாவை அடிமை கொண்டு - அந்த மண்ணின் மக்களையே சிறையில் அடைத்து - ஜூலியன் வாலா படுகொலைகள் வரை செய்து - சொந்தமண்ணின் மக்களையே அந்நியனுக்கு - வரி - கப்பம் செலுத்த வைத்து -
நார் நாராய் உங்களை அவலப்படுத்திய இங்கிலாந்திடம் - இன்று போர் விமானம் கொள்வனவு செய்யும் ஒப்பந்தம் - பயிற்சி-
என்று வழியுறீர்களே - இது மட்டும் என்ன?
ஏன் இங்கிலாந்தை ஒரு பயங்கரவாத நாடாக - அறிவிக்கவில்லை? - கலைஞருக்கு கொடி பிடிப்பவர்கள்?
மேடை - வித்தியாசபட்டதாயினும் - நடந்த நாடகங்கள் - ஒன்றுதான் இல்லையா?
தற்போதைக்கு - முடிக்கிறேன் -
அயல்நாட்டு நண்பர்களே - யாரையும் விமர்சிக்கும் - உரிமை உங்க நாட்டில் இருக்கு என்று நான் நம்புறேன் - அதுதான் நீங்க இப்பிடி பேசுறீங்களா?
எங்க 'நாட்டில?' அதெல்லாம் இல்ல
அடிக்கதேடா என்று சொல்லவும் வேணாம் - ஒதுங்கி பேசாமல் இருந்தாலும் - பெண்ணென்றும் பார்க்காமல் - பிறப்புறுப்பில் குண்டு வைத்து கொல்லுவாங்க - கோணேஸ்வரி!
அஜீதுக்கும் - விஜக்கும் சண்டை பிடிக்கும் உஙகளூக்கு - இப்பிடி ஒரு நிலமை வந்தால் என்ன செய்வீர்கள்?
மூடிய - இரும்பு திரைக்குள் நாங்கள் இருந்த போது- இவற்றை வெளி உலகத்துக்கு சுட்டிக்காட்டிய ஒரு மனிதன் - விமர்சனப்பொருளாய் ஆக்க படலாமா?
அதை நாங்கள் சகித்துகொண்டே ஆகவேண்டுமா?
நாம் பட்ட அவலத்தை எங்கோ இருந்தும் உலக அரங்குக்கு கொண்டு சென்று - உதவி செய்த்த மனிதனை - சீண்டிப்பார்க்க - எங்கள் இடத்தில் நீங்கள் இருந்தால் - அனுமதிப்பீர்களா?
வைக்கோ ஒட்டுப்படையா?
அப்போ - திராவிட இயக்கம் - மூட நம்பிக்கைகளை எதிர்க்கும் இயக்கம் - எப்பிடி - மத பித்து பிடித்து அலையும் பாரதீய ஜனதா கூட - கூட்டணி வைச்சிசு - ஒரு காலம்?
அதன் அர்த்தம் என்ன - எதுக்காக?
|
|
|
| சன் டிவி-யால் தோற்கப்போகும் திமுக! |
|
Posted by: Birundan - 04-12-2006, 12:36 AM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (19)
|
 |
இந்த வாரம் திண்னையில் வெளிவந்துள்ள ஒருவரின் கருத்து.
கடந்த அ.இ.அ.தி.மு.க ஆட்சியில் சன் டிவி தி.மு.விற்கு பெரிய பலமாக இருந்தது. ஆனால், இப்போதைய அ.இ.அ.தி.மு.க ஆட்சியில் சன் டிவியே தி.மு.கவின் வீழ்ச்சிக்கு காரணமாக இருக்கிறது. கடந்த ஜெயலலிதா ஆட்சியில் வளர்ப்பு மகன் திருமணத்தின் ஆடம்பரத்தை மக்கள் மத்தியில் அம்பலப் படுத்திய பெருமை சன் டிவியையே சேரும். ஜெயலலிதாவின் வீழ்ச்சிக்கு 70% க்கு மேல் இது மட்டுமே காரணம். ஆனால், தற்போது சன் டிவியின் வியபார ஒழுங்கிண்மையால், தி.மு.கவிற்கே சரிவு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
1. சன் டிவி, தன்னிடம் நாடகம் ஒளிபரப்பும் நிறுவனங்களிடம் போடும் கட்டுப்பாடுகள் அனைத்தும் ஒருதலைப் பட்சமானது. அயோக்கியத் தனமானது. மோசடித் தனமானது.
2. சன் டிவி குழுமம் நடத்திய சுமங்கலி கேபிள் நெட்வொர்க் மக்கள் வெறுக்கும் வண்ணம் நடந்து கொண்டு வாடிக்கையாளர்களுக்கு பல இன்னல்களைக் கொடுத்தது. பிற சேணல்களைப் பார்க்க விடாமல் செய்தது. அதிக கட்டணம் வசூலித்து வாடிக்கையாளர்களைச் சுரண்டியது.
தாங்கள் மட்டுமே இத்துறையில் ஆதிக்கம் செய்ய வேண்டும். பிற யாரும் தலையெடுக்கக் கூடாது என்ற மனப்பான்மையில் செயல்பட்டது. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பில்கேட்ஸை விட மோசமாக செயல் பட்டார் கலாநிதி மாறன். இதற்கு இவரது தம்பி, மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் அனைத்து உதவிகளும் செய்தார்.
3. செய்திகளில் 'முஸ்லிம் தீவிரவாதிகள்' என்ற சொல்லை நீண்ட காலமாகப் பயன்படுத்தினர். தற்போது தான் நிறுத்தி உள்ளனர். சன் டிவிக்கு எதிராக தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய போராட்டம் பாராட்டுக்கு உரியது.
4. தமிழ் நாட்டின் உயிராதாரமான பிரச்சினைகளுக்கு, பிரதமருக்கு கடிதம் மட்டுமே எழுதும் கலைஞர், ஜெயலலிதா கொண்டு வந்த கேபிள் டிவி மசோதாவுக்கு கையெழுத்துப் போட வேண்டாம் என கவர்னரிடம் தன் பேரனுடன் சென்று கேட்டார். தயாநிதி மாறனும், தி.மு.க எம்.எல்.ஏக்களும் பிரதமரிடமும், ஜனாதிபதியிடமும் இது தொடர்பாகப் பேசுகின்றனர். ஒரு குடும்பத்தின் நலனுக்காக ஒரு கட்சியா?
5. தினகரனை, சன் டிவி வாங்கியதே ஒரு முறையற்ற வணிக நடவடிக்கை. இது போன்ற வணிக நடவடிக்கைகள் அமெரிக்காவில் தான் நடைபெறும். பல பத்தாண்டுகளாக, தினத்தந்தி தமிழ் நாட்டில் விற்பனையில் முதலிடம் பெற்று விளங்கியது. நாளிதழான 'தின மலர்' எவ்வளவு முயன்றும் கோவை மாவட்டத்தில் மட்டுமே தினத்தந்தியை தாண்ட முடிந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கூட தினமலர் நாளிதழால், தினத்தந்தியின் விற்பனையை தாண்ட முடியவில்லை. தற்போது, சன் டிவி நிறுவனத்தில் இருந்து வெளிதவரும் தினகரன், தமிழ் முரசு நாளிதழ்களில் வேலை செய்யும் செய்தியாளர்களில் நூற்றுக்கணக்கானவர்கள் தினமலரில் இருந்து ஒரே நேரத்தில் வேலையில் இருந்து நின்று சன் டிவியின் பத்திரிக்கைகளில் வேலைக்கு சேர்ந்தவர்கள். இவர்கள் எப்படி இருப்பார்கள் என்று சொல்லத் தேவையில்லை. அடக்க விலையை விட குறைத்து விற்பது, இலவசப் பொருட்கள் என விற்று பிற நாளிதழ்களை பாதிக்கும் சன் டிவி நிறுவனத்தின் இதழ்களை நாம் புறக்கணிக்க வேண்டும்.
6. மத்திய அரசின் செய்திகளை வௌதயிடும் போது, தயாநிதி மாறனின் செய்திகளை மட்டுமே வெளியிடுவது, பிற அமைச்சர்களின் செய்திகளை வெளியிடாமல் இருப்பது, மாநில அரசின் நலத்திட்டங்களை வௌதயிடாமல் இருப்பது, மாநில அரசைப் பற்றிய விமர்சனங்களை மட்டுமே வௌதயிடுவது, திமுகவிலேயே தயாநிதி மாறன், ஸ்டாலின் ஆகியோரை மட்டுமே காட்டுவது, அன்பழகன், துரைமுகன் - போன்ற தலைவர்களை செய்திகளில் காட்டாமல் இருப்பது, கூட்டணிக் கட்சிகளின் செய்திகளைப் புறக்கணிப்பது என பட்டியலிட்டு மாளாது சன் டிவியின் அழிம்புகள்.
நன்றி>http://jeyakumar777.blogspot.com/2006/04/blog-post.html
|
|
|
|