04-12-2006, 07:34 AM
திருமலையில் தாக்குதல்: 2 சிறிலங்கா காவல்துறையினர் பலி
திருகோணமலையில் சிறிலங்கா ஆக்கிரமிப்புப் பகுதியில் இன்று புதன்கிழமை காலை 8.45 மணியளவில் கிளைமோர்த் தாக்குதலில் இரண்டு சிறிலங்கா காவல்துறையினர் கொல்லப்பட்டுள்ளனர்.
திருகோணமலை-புல்மோட்டை வீதியில் கும்புறுப்பிட்டி அருகே 15 ஆம் மைல் கட்டை அருகே மரம் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த கிளைமோர் கண்ணிவெடியில் காவல்துறையின் வாகனம் சிக்கியது.
குச்சவெளியிலிருந்து கும்புறுப்பிட்டி நோக்கி காவல்துறையின் வாகனம் சென்று கொண்டிருந்த போது இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதில் இரு சிறிலங்கா காவல்துறையினர் கொல்லப்பட்டுள்ளனர். இருவர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த இருவரும் திருகோணமலை பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
சார்ஜன்ட் லியனகே மற்றும் கான்ஸ்டபிள் அபேயசிறி ஆகியோர் கொல்லப்பட்டவர்கள் என்றும் கான்ஸ்டபிள்களான கமலசிறீ மற்றும் வசந்த ஆகியோர் படுகாயமடைந்தவர்கள் என்றும் சிறிலங்கா காவல்துறை அறிவித்துள்ளது.
திருகோணமலை நகரிலிருந்து 30 கிலோ மீற்றர் வடக்குப் பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது.
கும்புறுப்பிட்டி-விபுலானந்தா கிராமங்களை அண்மித்த பேர்கர் சந்தியில் பாரிய வெடிச்சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இத்தாக்குதல் குறித்து ரொய்ட்டர் செய்தி நிறுவனத்துக்கு திருகோணமலை மூத்த காவல்துறை அதிகாரி நிஹால் சமரக்கோன் கூறுகையில்,
காவல்துறையின் வாகனம் மீது இன்று கிளைமோர்த் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இருவர் கொல்லப்பட்டுள்ளனர். இருவர் படுகாயமடைந்துள்ளனர். இத்தாக்குதலை விடுதலைப் புலிகளே நடத்தினர் என்று கூறினார்.
"ஓ.. கடவுளே...இது மிகவும் மோசமானது.. இதைத் தவிர என்ன சொல்வது என்று சொல்லத் தெரியவில்லை. நிலைமை கட்டுப்பாட்டையும மீறிச் செல்கின்றது" என்று மேற்கத்தைய இராஜதந்திரி ஒருவர் இன்றைய தாக்குதல் சம்பவம் குறித்து ரொய்ட்டர் செய்தி நிறுவனத்திடம் கருத்துத் தெரிவித்துள்ளார்
http://www.puthinam.com/