![]() |
|
பேச்சுக்கு இடவசதி கனடிய அரசு தயார் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: பேச்சுக்கு இடவசதி கனடிய அரசு தயார் (/showthread.php?tid=254) |
பேச்சுக்கு இடவசதி கனடிய அரசு தயார் - I.V.Sasi - 04-12-2006 [b][size=18]பேச்சுக்கு இடவசதி கனடிய அரசு தயார் [12 - April - 2006] [Font Size - A - A - A] சமாதான நடவடிக்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதே விருப்பமென அறிவிப்பு விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் கனடா இணைத்திருக்கின்றபோதும் சமாதான நடவடிக்கை களில் முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென்ற பெருவிருப்பின் பேரிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக அந்த நாட்டு அர சாங்கம் தெரிவித்திருக்கும் அதேசமயம், பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இடவசதியை அளிப்பதற்கு தயாரெனவும் அறிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமையிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் இணைத்துள்ளதாக திங்களன்று வெளியிட்ட அறிக்கையில் கனடிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஸ்ரொக்வெல் டே தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளை பட்டியலில் இணைக்கும் முடிவு நீண்டகாலமாக இருந்துவந்தது. பயங்கரவாதத்திற்கு எதிராக கனடியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்பதில் எங்கள் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. அத்துடன், இதன்மூலம் தமிழ்ச் சமூகம் உட்பட நாடு முழுவதற்கும் அரசாங்கம் பயங்கரவாதத்தையோ அல்லது பயங்கரவாத நடவடிக்கைகளையோ சகித்துக் கொள்ளாது என்ற சமிக்ஞையை வெளிப்படுத்துவதாகவும் உள்ளது என்று அமைச்சர் தெரிவித்திருக்கிறார். பயங்கரவாதப் பட்டியலின் அர்த்தம் என்னவென்றால், கனடாவில் எவராவது புலிகளின் நடவடிக்கைகளில் பங்குகொள்வதோ அல்லது ஆதரவளிப்பதோ சட்டவிரோதம் என்பதாகும். பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு வங்கி முறைகளை பயன்படுத்துவதைத் தடுக்கும் தனது சர்வதேச ரீதியிலான கடப்பாடுகளையும் கனடா திருப்திப்படுத்துவதாக இது அமைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். ஜெனீவாவில் நோர்வே அனுசரணையுடனான சமாதானப் பேச்சுகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்தத் தீர்மானமானது. கனடாவில் ரொரொன்ரோவை சூழ புவியியல் ரீதியில் செறிவாக உள்ள தமிழ்ச் சமூகத்தினர் மத்தியில் கடுமையான விவாதத்தைத் தோற்றுவிக்கும் சாத்தியமுள்ளது. இது நாங்கள் ஒரு பக்கச்சார்பாக நடந்து கொள்வதென்பதல்ல. சமாதான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்கான ஆர்வத்தை வெளிப்படுத்தும் ஒன்றாகவே இது உள்ளது என்று கனடிய வெளிவிவகார அமைச்சர் பீற்றர் மக்கே தெரிவித்தார். திங்களன்று நோர்வே வெளிவிவகார அமைச்சருடன் தான் பேசியதாகவும் விரும்பினால் கனடாவில் சமாதானப் பேச்சுகளை நடத்த இடமளிப்பது உட்பட முழுமையான கனடாவின் உதவியை வழங்குவதற்கு உறுதியளித்ததாகவும் அவர் தெரிவித்தார் www.thinakkural.com - kurukaalapoovan - 04-12-2006 3 ஆம் கட்டப் பேச்சு கனடாவிலை தான் என்றியள் அப்ப. இனவாதிகள் பாடு பெரும் திண்டாட்டமா இருக்கப் போகுது. - I.V.Sasi - 04-12-2006 எதுவும் நடக்கலாம், ஒரு பக்கம் தடை போடுகிறார்கள் மறுபக்கம் புலிகளுடன் பேசுங்கள் அதுவும் விரும்பினால் எங்கள் நாட்டில் வந்து பேசுங்கள் என்று சொல்லுகிறார்கள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Birundan - 04-12-2006 இது பாராளமண்றம் கூடி நிறைவேற்றப்பட்ட முடிவல்ல, தேவையானபோது விலக்கிக்கொள்ளலாம். தடை செய்தால் பேச்சுவார்த்தை வேகமாக நடைபெறுமா? சமாதானத்துக்கான போர் செய்த சந்திரிக்காவின் ஞாபகம் வருது. - நேசன் - 04-12-2006 எல்லாரும் சேர்ந்து தமிழன் தலையில் மிளகாய் அரைக்கிறர்கள். இளிச்சவாயர். சூடுசொரணை அற்ற தமிழர் என்பது வெள்ளை இனத்திற்கு ஆண்டு காலமாக தெரியும் - aathipan - 04-12-2006 சமாதான நடவடிக்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்த தடைசெய்வது என்ன நியாயம்? இவ்வாறான செயல் சிறுபான்மை மக்களை அடிமைகளாக்கி அடக்கி முடக்கி வைக்கும் சிங்களபேரினவாத அரசுக்கு கனடா ஆதரவு வழங்குவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும். கட்டுக்குள் வைக்கவேண்டும் என்ற எண்ணம் இருந்தால் சட்டங்களை இயற்றி கட்டுப்படுத்தி இருக்கலாம். முற்றுமுழுதாக தடைசெய்வது அங்கு இத்தனை ஆண்டுகாலம் வாழும் தமிழ்மக்களைப் பிடரியில் பிடித்து வெளியே தள்ளுவதற்கு இணையான செயல். சமாதானத்திற்கு மட்டும் இடம் கொடுக்கிறோம் என்று சொல்வது "வீட்டைக்காலிசெய் பிச்சைக்கு வேண்டுமானால் வந்துபோ" என்று சொல்வது போன்று இருக்கிறது. எது எப்படி இருந்தாலுமு; இது சிங்கள பேரினவாதிகள் முன் கொஞ்சம் வெட்கிதலைகுனிய செய்யும் சம்பவமாகிவிட்டது. - kurukaalapoovan - 04-12-2006 அவர்கள் புலிகளை பயங்கரவாதிகளாக உண்மையில் நினைத்திருந்தால், உப்படி ஒரு வெற்று அறிக்கையை விட்டுவிட்டு இருந்திருக்க மாட்டார்கள். புலிகளோடு சம்பந்தப்பட்ட அமைப்புகளையும் கூடவே தடை செய்து அவர்களது வங்கி கணக்குகளை முடக்கி முக்கிய நபர்களை விசாரணக்கு உட்படுத்தி என பல தொடர் நடவடிக்கைகளை செய்திருக்கலாம். எல்லாம் வேண்டாம் பிரித்தானியாவில் வந்த தடையை பருங்கோ? பலா அண்ணை இருக்கிறார். மாவீரர் தினம் நடக்குது. சும்மா வெளிப்பார்வைக்கு சிலரைத் திருப்திப்படுத்த ஒரு பிரமிப்பை எற்படுத்த தான் உந்த நகர்வுகள். பிரித்தானியாவே கனடாவே புலிகளை பயங்கரவாதிகள் என்று உண்மையில் நினைத்தால் இஸ்லாமிய அமைப்புகளிற்கு அதன் பிரமுகர்களிற்கு நடந்தது தான் நடந்திருக்கும். - kavithaa - 04-12-2006 பேச்சுவார்த்தைக்கு இடம் எங்கலுக்கு தெவைய்யில்லை. ஒரு கையால் அடிக்கிறது மறு கையாலு அனைக்கிறது தான் செய்வான்கள் - தூயவன் - 04-12-2006 இப்போது புலிகள் பேச்சுவார்த்தையை விட்டு விலகிவிடுவார்கள் என்ற அச்சத்தால் தான் இப்படி பேச்சுவார்த்தைக்கு இடம் கொடுக்கத் தயார் என்று எல்லாம் அறிக்கை விடுகின்றார்கள். தடை எல்லாம் சும்மா என்றால் என்னத்திற்கு தடை போட வேண்டும். தடைகள் மூலம் வெருட்டுவது நடக்கின்றது. இதனால் பயப்பீதியை ஏற்படுத்தி தனிமையாக்குவது போன்ற எண்ணத்தை ஏற்படுத்தப்படுகின்றது. ஏதோ ஒரு வழியில் விடுதலைப் போராட்டங்களை நசுக்குதல் என்பது வழமையானது தான். பாலஸ்தீனத்தில் அரபாத்தை பணிய வைத்து நசுக்கப்பட்டது. ஆனால் என்ன சோகம் என்றால் ஹாமஸ் வீறு கொண்டு எழுந்தது. அவ்வாறே ஈழப்போராட்டத்தை நசுக்குவதற்கும் ஒவ்வொரு நாடுகளும் முயலும். அதில் இருந்து தப்பிப்பது தான் எமக்கு வெற்றியைத் தரும் - karu - 04-12-2006 ஒரு நாட்டை அல்லது இயக்கத்தை அங.கீகரிக்கிறதப் போலதான் தடை செய்யிறதும். ஒண்டும் செய்யாம விடுறத்துக்கும் தடைசெய்யிறதுக்கும் கன வித்தியாசம் இருக்குது. தடைசெய்துபோட்டுக் கவனிக்காம விடுறாங்கள் எண்டத வச்சிக்கொண்டு நாங்கள் தவறான அபிப்பிராயத்துக்கு வர ஏலாது. மிச்சம் கவனமாயிரு நினைச்சா நான் உன்னை என்னவும் செய்வன் எண்ட ஒரு மிரட்டலோட கவனியாம விட்டிருக்கிறது இப்ப பிரித்தானிய அரசாங்கம். வெளிப்படையான நடவடிக்கைகள் எதிலயும் இயக்கம் ஈடுபட ஏலாது. தடைசெய்த அரசாங்கங்களெல்லாம் மக்கள் எழுச்சிக்குத் தடைபோடல்ல. அதனாலதான் மாவீரர் நாளை தேசிய ஏழுச்சி நாள் எண்ட பேரில கொண்டாட அனுமதிக்கிறாங்க. மக்களுடைய ஒருமித்த ஆதரவோட செய்யப்படுற எந்த நிகழ்ச்சியிலயும் ஒரு கொஞசமாவது பிரச்சனையள் வருமாயிருந்தால் உடனே தடை வரும். யுகே இல தமழர் உதைப்பந்தாட்ட நிகழ்ச்சிகளுக்குத் தடை, மைதானத்தைத் தரமறுப்பு எல்லாம் ஏற்பட்டதுக்குக் காரணம் அங்கே நடந்த வன் முறைகள்தான். தடை செய்யப் படாத இயக்கமாக இருக்கிறதிலும் பார்க்க தடைசெய்யப்பட்ட இயக்கமாக இருக்கிறதில ஒரு நன்மை மறைஞ்சிருக்குது. இனி அடுத்த கட்டம் தடையை நீக்கிறது அதாவது மறைமுகமா அங்கீகரிக்கிறது எண்ட செய்தி அதாவது எச்சரிக்கை சிறீலங்கா அரசாங்கத்துக்கு இதன்மூலம் சொல்லயப்படுது பாருங்கோ. எதிலயும் நல்லதையும் பார்க்கவேணும். - நேசன் - 04-12-2006 சும்மா பூசிமெழுகி பேசத்தான் வக்கத்த தமிழனுக்கு தெரியும். உங்களால் என்ன செய்ய முடியும்? - kurukaalapoovan - 04-12-2006 எனக்கு பொழுது போக்காக யாழ் களத்தில் பூசிமெழுகி எழுதத் தெரியும்... |